சமீபத்திய பதிவுகள்

புலிகள் பின்வாங்கும் மர்மம்...!

>> Wednesday, November 19, 2008

"புலிகளின் முக்கிய தளமான பூநகரியை புடிச்சிட்டாங்களாம். அது வழியா யாழ்ப்பாணத்துக்கான தரைவழி பாதையையும் திறந்திருக்காங்களாம். இன்னும் கொஞ்சநாளில் கிளிநொச்சியையும் பிடிச்சுடுவாங்க. அப்படியே புலித்தலைவர் பிரபாகரனையும் பிடிச்சுடப் போறாங்களாம். அப்படீன்னு இலங்கை அதிபர் ராஜபக்ஷே சொல்றாரு" என்று கூறி சிரித்த சித்தன்,


 "போனவாரம் நம்ப குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்காக அங்க இருக்குற தமிழ் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. சேனாதிராஜா ஜெயனந்த மூர்த்திகிட்ட பேசுனம். அப்பவே அவர் சொன்னார். அதாவது ராணுவம் சில இடங்களை பிடிச்சிருக்கிறதா சொல்றது உண்மைதான். ஆனா அந்த பகுதிய எல்லாம் போர்கள முனைக்கு  அவசியம் இல்லாத பகுதின்னு புலிகளே விட்டு பின்நகர்ந்து போன பகுதி. அவ்வளவு எளிதில் புலிகளை வெல்ல முடியாதுங்கிறதுதான் போர்க்கள நிலவரம்.

 இவ்வளவு இடத்தை பிடித்து விட்டோம்னு சொல்றப்போ,  புலிகள் தரப்பில் மரணம் நிறைய இருந்திருக்கணுமே. ஏன் இல்லாம இருக்கு?. அதுலதான் சூட்சுமம் இருக்கு. எந்த சூழ்நிலையிலும் புலிகள் கிளிநொச்சியை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அதை நெருங்கும் போது ராணுவப்படை பெரிய இழப்பை சந்திக்கும்னு சொன்னவரு போர் தந்திரங்களுக்காக பின்நகர்ந்து வருகிறோம். விரைவில் மிகப்பெரிய தாக்குதல் நடக்கும்னு புலித்தலைவர் தமிழ் எம்.பி.கிட்ட சொன்னதாகவும் கூறினார். அதுதான் இப்போது செய்தியா வெளிவந்து பரபரப்பாகிகிட்டு இருக்கு.

 அதுக்கேற்ற மாதிரி உலகளவில் போர் நிலவரங்களை  ஆய்வு செய்து வரும் நிபுணர்கள் எல்லாம்...

 "புலிகள் தரப்பில் உக்கிரமான போர் தொடுக்கப்படவில்லை. கரும்புலிகளின் வேகம் அதிகமிருக்கும். ஆனால் இதுவரையிலான போரில் கரும்புலிகளின் பங்களிப்பே இல்லை. அந்தப்படை நுழைந்து விட்டால் சிங்கள ராணுவத்துக்கு பெரிய இழப்பு ஏற்படும். இதுவரை அப்படி ஏதும் நடக்கவில்லை எனும் போது,  ஏதோ ஒரு திட்டத்தோடு புலிகள் அமைதி காத்து பின்நகர்கிறார்கள் என்பது உண்மைதான். அதனையடுத்து எப்படிப்பட்ட போர் நடக்கும் என்பதுதான் புரியாத புதிராக இருக்கும்னு சொல்றாங்க"

 ஆக, உச்சக்கட்டப் போர் என்பது இனிமேல்தான் நடக்கும். அதுதான் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கும்"- அன்வர்பாய்.

 "ஆமாம். அப்படித்தான் சொல்றாங்க. அந்த சமயத்துல, இலங்கை ராணுவத்தின் தாக்குதல் எல்லாம் அப்பாவி தமிழ் மக்கள் மீது மேலும் மோசமாக நடக்கும். அதனால்தான் இந்த விஷயத்தை அலட்சியப்படுத்தாம இந்திய அரசு ஐ.நா. மன்றத்துக்கு புகாரா எடுத்துக்கிட்டு போகணும்னு,  பா.ம.க தரப்புல ராமதாஸ் சொல்றாரு. இன்னைக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்துற இந்திய கம்யூனிஸ்டு கோரிக்கையும் அதுதான்.

 உலகில் எல்லா நாடுகளிலும்தான் தீவிரவாதம் இருக்கிறது. எந்த நாடும் தன் சொந்தப் பகுதியில் விமானத்தாக்குதல் நடத்துறதில்ல. இலங்கையில் அப்படி நடக்கிறது. அது ஒரு இன அழிப்பு முறை. அதனால் ஐ.நா. தலையிட நிர்ப்பந்திக்க வேண்டும்னு ம.தி.மு.க தலைவர் வைகோ, திருமாவளவன் எல்லாரும் சொல்றாங்க"



thanks:kumudam

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP