சமீபத்திய பதிவுகள்

எங்கள் பணமே எங்கள் உறவுகளின் தலையில் குண்டாக வீழ்வதா?

>> Sunday, March 1, 2009

 
 
        

சிறிலங்காவிலிருந்து இறக்குமதியாகும் அனைத்து வகையாக உணவுப் பொருட்களையும் புறக்கணிப்போம். சிறிலங்கா பொருட்களுக்கு எதிரான பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைவோம் !

 
சிறிலங்கா பொருட்களுக்கு எதிரான பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைவோம் !
விடுதலையும் வாழ்வும் எங்களது இனத்தின் பல தலைமுறைகளின் கனவு. இந்தக் கனவுக்காகவே ஓர் இலட்சம் வரையான உயிர்களையும் பல தலைமுறைகளின் வாழ்வையும் கோடிக்கணக்கான சொத்துக்களையும் இதுவரை கொடுத்து விட்டோம். இன்று பிஞ்சுக் குழந்தைகளும் இந்த யுத்தத்தால் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் அடுத்தது என்ன என்ற கேள்வியே இன்று எல்லோர் மனதையும் அரிக்கின்ற ஒன்றாக இருக்கின்றது.
சிறிலங்கா என்னும் ஒரு பேரினவாத அரக்கனை யுத்தத்தின் மூலம் வீழ்த்தி விடலாம் என நம்பியிருந்த வேளையில், சர்வதேச சமூகமும் இந்தியப் பேரரசும் இந்த இனவெறி
அரக்கனுக்கு முண்டு கொடுத்துத் தூக்கிவிட்டு தமிழின அழிப்பை வேடிக்கை பார்த்து நிற்கின்ற கொடுமை நடக்கிறது. வீதிகளில் இறங்கி சர்வதேசத்தின் மௌனத்தை உடைக்கும் பணிகளை முன்னெடுத்தோம்.
சர்வதேச நிறுவனங்களின் கதவுகளை தட்டினோம். உண்ணாநோன்பிருந்தோம். தம் உடலிலே தீ மூட்டி, தீக்குளித்து தம் எதிர்ப்பினைப் புரியவைக்க முயன்றனர் எங்கள் உறவுகள். தமிழகமெங்கும் பெரும் தொடர் போராட்டங்களில் எங்கள் உறவுகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சர்வதேசத்தின் மௌனம் மெல்லக் கலைகின்ற தோற்றம் தெரிகின்றபோதும் மனச்சாட்சியின் கதவுகள் முழுதாய் திறக்கும் என்ற நம்பிக்கையோடு இன்னும் எத்தனை காலம்தான் நாம் காத்திருக்க முடியும்?
புதிய புதிய களங்களைத் திறந்து எல்லா முனைகளிலும் எதிரியைத் தோற்கடிக்க வேண்டிய ஒரு பெரும் பொறுப்பு எம்மிடமுள்ளது. இத்தகைய களங்களில் ஒன்றாகவே சிறிலங்காவிலிருந்து இறக்குமதியாகும் மற்றும் சிறிலங்கா அரசுக்குப் பொருளாதாரப் பலம் சேர்க்கும் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் எதிரான ஒரு பகிஷ்பரிப்புப் போராட்டத்தை முன்னெடுக்க உங்களை அழைக்கிறோம். தமது வளங்களை எல்லாம் போரிலே குவித்து ஓர் இறுதி யுத்தத்தை முன்னெடுத்து நிற்கும் பேரினவாதத்தின் மீது இந்தப் பகிஷ்கரிப்பு யுத்தத்தை முன்னெடுக்க வேண்டியது எங்கள் எல்லோரதும் தார்மீகப் பொறுப்பல்லவா?
புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இப் பகிஷ்கரிப்பை தீர்க்கமுடன் முன்னெடுப்பது, சிறிலங்காவை பொருளாதார முனையில் சிதைப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாகவுள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அன்பான தமிழீழ உறவுகளே, சர்வதேச முண்டுகொடுப்போடு எம் உறவுகள் மீது தினமும் குண்டுமழை பொழிந்து,
நூற்றுக்கணக்கில் எம் மக்களைத் தினமும் கொன்றொழிக்கும் சிறிலங்கா அரசின் மீது பெரும் பொருளாதார யுத்தமொன்றை முன்னெடுக்க வேண்டிய தேவையை காலம் எங்கள் கைகளில்
விட்டிருக்கிறது. நாங்கள் வாங்குகின்ற, சிறிலங்காவிலிருந்து இறக்குமதியாகும் ஒவ்வொரு பொருட்களும் அந்த அரசுக்கு பெரும் அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகிறது என்பதை அறிவீர்கள். இந்தப்
பணம் மீண்டும் மீண்டும் எங்கள் மக்கள் மீதே குண்டுகளாய் விழுகின்ற கொடுமையும் நடக்கிறது. சிறிலங்கா அரசுக்கு எதிராய் வீதிகளில் இறங்கி பெரும் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்கின்ற நாமே, எம் மக்கள் மீது வீசுகின்ற ஒவ்வொரு குண்டுக்கும் மறைமுகமாகப் பணம் கொடுத்து உதவலாமா என்பதை தயவுசெய்து சிந்தித்துப் பாருங்கள்.
அன்பான தமிழீழ மக்களே, சிறிலங்காவின் அனைத்து பொருளாதார நலன்களுக்கு எதிராகவும் ஒன்றுபட்டு போராட முன்வாருங்கள். சிறிலங்காவின் பொருளாதார நலன்களுக்கு வலுச்சேர்க்கும் அனைத்தையும் புறக்கணிப்போம் என எம்மக்களின் பெயரால் உறுதியேற்போம்.
1. சிறிலங்காவிலிருந்து இறக்குமதியாகும் அனைத்து வகையாக உணவுப் பொருட்களையும் புறக்கணிப்போம்.
2. சிறிலங்காவிலிருந்து இறக்குமதியாகும் மூலப்பொருட்களைக் கொண்டு வேறு நாடுகளில் தயாராகும் உணவுப் பொருட்களைப்( உதாரணம்: தேயிலை வகைகள்) புறக்கணிப்போம்.
3. சிறிலங்காவிலிருந்து இறக்குமதியாகும் எவ்வகையான குளிர்பான, மதுபான வகைகளையும் வாங்கமாட்டோம்.
4. சிறிலங்காவில் தயாராகும் ஆடை வகைகளை அணிய மாட்டோம்.
5. சிறிலங்காவிற்கு எக்காரணம் கொண்டும் வங்கிகள் மூலம் பணம் அனுப்ப மாட்டோம்.
6. சிறிலங்காவில் எக்காரணம் கொண்டும் எவ்வகையான முதலீடுகளையும் செய்யமாட்டோம். ஏற்கனவே செய்துள்ள முதலீடுகளையும் வங்கி இருப்புக்களையும் மீளப் பெறுவோம்.
7. சிறிலங்கா விமான சேவை (ளுசடையமெயன் யுசைடஇநௌ) மூலம் பயணம் செய்ய மாட்டோம்.
8. சிறிலங்காவிலிருந்து இறக்குமதியாகும் பத்திரிகைகளைப் புறக்கணிப்போம்.
9. சிறிலங்கா பத்திரிகைகளில் எவ்வகையான விளம்பரங்களையும் வெளியிடமாட்டோம். சிறிலங்காப் பொருட்களுக்கான விளம்பரங்கள் வெளியிடுவதை நிறுத்தும்படி வெளிநாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்களை வேண்டுவோம்.
10. இவ்வாறான புறக்கணிப்பை மேற்கொள்ளும்படி மற்றவர்களையும் தூண்டுவோம்.
கடந்த காலங்களில் எம் தாயகம் மீது பற்றுக் கொண்டு நீங்கள் பல வழிகளிலும் ஆற்றிய பங்கை நாம் அறிவோம். இதன் அடுத்த கட்டமாக நாம் முன்னெடுக்க நினைக்கின்ற பொருளாதாரப் புறக்கணிப்பிற்கும் உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறோம்.உங்களுக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களை சிறிலங்கா தவிர்ந்த வேறுநாடுகளிலிருந்து பெற்றுத் தரும்படி வர்த்தக நிறுவனங்களிடம் வற்புறுத்துங்கள்.
சகல விதமான மருந்துப் பொருட்களையும் உணவையும் தடைசெய்து பெரும் இனவழிப்புப் போரை எம் மக்கள் மீது நடத்திவரும் ஓர் அரசுக்கெதிராக ஒன்றிணைந்து இப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுப்போம். சிறிலங்காவின் பொருளாதார நலன்களுக்கு எதிரான பகிஷ்கரிப்புப் போராட்டக் குழு

 

 
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP