சமீபத்திய பதிவுகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்:புலிகள் அதிகாரப் பூர்வமாக அறிவிப்பு

>> Monday, May 18, 2009

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடனும் பாதுகாப்பாகவும் இருக்கிறார் என பத்மநாதன் சனல் 4 தொலைக்காட்சிக்கு சற்று நேரத்திற்கு முன்னர் தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக இராசரீக உறவுகளுக்கான பிரதிநிதி செல்வராஜா பத்மநாதன் பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சிக்கு இன்று மாலை 7 மணியளவில் தொலைபேசி வாயிலாக அளித்த செவ்வியில் இதனைத் தெரிவித்தார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் எங்கிருக்கின்றார் என்ற விபரத்தை வெளியிட முடியாது எனவும் பத்மநாதன் கூறினார்.

வவுனியா தடுப்பு முகாம் உண்மை நிலையை நேரடியாகச் சென்று அனைத்துலகிற்கு வெளிச்சமிட்டுக்காட்டி சனல் 4 தொலைக்காட்சின் செய்தியாளர் நிக் பற்றன் வோஸிற்கு (Nick Patton Walsh) வழங்கிய செவ்வியிலேயே பத்மநாதன் இதனைக் கூறினார்.

கடந்த சில மணித்தியாலங்களாக, இலங்கை அரசும் அதனுடன் சேர்ந்து இயங்கும் கூலிப்படைகளும் தலைவர் இறந்ததாகவும் அவர் உடல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பிரேதப்பரிசோதனை நடைபெறுவதாகவும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

1 கருத்துரைகள்:

Govind May 19, 2009 at 12:00 AM  

VAALHGA PIRABAGARAN. VEERARGALUKKU ENDRUM IRAPPU ILLAI.

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP