சமீபத்திய பதிவுகள்

பரபரப்பு தகவல்:எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் வருவது போல! 2 சார்லஸ் ஆண்டனிக்கள்?

>> Wednesday, June 3, 2009

எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் வருவது போல! பிரபாகரனின் மகன்களில் 2 சார்லஸ் ஆண்டனிக்கள்?
 
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் மகன் சார்லஸ் ஆண்டனி மரண விஷயத்தில் இப்படியும் கூட இருக்குமா? விறுஇ விறுப்பான சினிமாக்களையும் மிஞ்சும் வண்ணம் நம்மை பரபரக்க வைக்கின்றன புதிதாக வெளிவரும் தகவல்கள்.

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் மகன் சார்லஸ் ஆண்டனி மரண விஷயத்தில் இப்படியும் கூட இருக்குமா? விறு, விறுப்பான சினிமாக்களையும் மிஞ்சும் வண்ணம் நம்மை பரபரக்க வைக்கின்றன புதிதாக வெளிவரும் தகவல்கள்.

சில படங்களில் எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் வந்து நம்மை பிரமிக்க வைப்பாரே! அப்படித்தான் பிரபாகரன் மகன்களாக இரண்டு சார்லஸ் ஆண்டனிக்கள் இருக்கிறார்களாம்!

நடந்து முடிந்த சம்பவங்களின் பின்னணி தகவல்கள் நம்மை ரொம்பவே மெய்சிலிர்க்க செய்கின்றன.

கடந்த மாதம் 18-ந்தேதி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது முதல் கட்டமாக இலங்கையிலிருந்து வெளியான அந்த செய் "தீ".

"விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனியும், அந்த அமைப்பின் முக்கிய 17 தளபதிகளும் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்" என்ற செய்திதான் அது.

சார்லஸ் ஆண்டனி பிணமாக காட்சியளிக்கும் வீடியோ படங்கள், டி.வி. சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு அனைவரையும் பரபரக்க வைத்தன.

இது சாத்தியமான சம்பவம்தானா? என்று புருவங்களை உயர்த்து முன் அடுத்த கட்டமாக பிரபாகரனே கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகி உலகை அதிர வைத்தது.

பிரபாகரன் ஒரு அசாதாரணமான மனிதர் என்று வர்ணிக்கப்படுபவர். கடந்த 33 ஆண்டுகளாக அவர் நடத்தி வரும் நீண்ட, நெடிய போராட்டத்தில் யார் கண்ணிலும் அகப்படாதவர்.

திட்டங்களை தீட்டி, கன கச்சிதமாக முடிக்கும் இந்த அமைப்பு பற்றி ஆச்சர்யப்படாதவர்களே இருக்க முடியாது.

தற்போது சார்லஸ் ஆண்டனி மரணமடைந்ததாக சொல்லப்படுவதற்கும், பிரபாகரனின் "பிளாஷ் பேக்" கதைக்கும் பின்னணியில் சில "பகீர்" தகவல்கள் ஒளிந்து கிடக்கின்றன.

1986-ம் ஆண்டு சென்னை அருகே உள்ள திருப்போரூர் முருகன் கோவிலில் வைத்து தான் பிரபாகரன்-மதிவதனி திருமணம் நடந்தது. பிரபாகரன் தீவிரமான முருக பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பின் பெசன்ட் நகரில் உள்ள ஒரு வீட்டில் பிரபாகரன்- மதிவதனி தம்பதியினர் குடியிருந்தனர். இந்த தம்பதியருக்கு முதலில் பிறந்தவர்தான் சார்லஸ் ஆண்டனி.

இதே சமயத்தில் பிரபாகரனின் நெருங்கிய உறவுக்கார பெண் ஒருவருக்கும் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதில் விசேஷம் என்ன தெரியுமா? அந்த குழந்தைக்கும் சார்லஸ் ஆண்டனி என்று பெயர் சூட்டப்பட்டது தான்!

இரண்டு சார்லஸ் ஆண்டனிக்களும் ஒன்றாகவே பிரபாகரன் வீட்டில் வளர்ந்தார்கள். இது பரம ரகசியமாக பாதுகாக்கப்பட்டது.

இரண்டு சார்லஸ் ஆண்டனிக்கள் இருப்பதை எப்போதும், யாரிடமும் வெளியே சொல்லக்கூடாது என்று இரு குடும்பத்தினருக்கும் கட்டளையிட்டிருந்தார் பிரபாகரன்.

இருவருமே வளர்ந்து, வாட்ட சாட்டமான வாலிபர்களானார்கள். இருவரும் இஸ்ரேல் நாட்டுக்கு அனுப்பப்பட்டு அங்கு விசேஷமான தாக்குதல் பயிற்சிகளை கற்றனர்.

இதன் பின்னர் லண்டனில் உள்ள மிகப்பிரபலமான கல்லூரி ஒன்றில் விமானம் பற்றிய ஏரோ நாட்டிகல் என்ஜினீயரிங் படப்படிப்பு படித்துள்ளனர்.

இதையடுத்து தனது உறவினர் மகனான சார்லஸ் ஆண்டனியை பிரபாகரன் தன்னுடன் இலங்கையில் வைத்துக்கொண்டார். தனது சொந்த மகன் சார்லஸ் ஆண்டனியை அமெரிக்காவின் நேசநாடு ஒன்றில் தலைமறைவாக இருக்க செய்தார்.

இந்த நிலையில் தான் தன்னுடன் இருந்த சார்லஸ் ஆண்டனியை வான்படை தளபதியாக்கி போர்க்களத்தில் குதிக்க செய்தார்.

பலவிதமான போர் பயிற்சிகளை பெற்றிருந்த சார்லஸ் ஆண்டனி 2 முறை விமானத்தில் பறந்து சென்று கொழும்பு நகரத்தின் மீது குண்டு மழை பொழிந்து சிங்கள ராணுவத்தை மிரட்டியவர்.

அந்த சார்லஸ் ஆண்டனியைத்தான் இலங்கை ராணுவம் கடந்த மாதம் சுட்டுக்கொன்றது.

அப்படியானால் நிஜமான சார்லஸ் ஆண்டனி? அவரது புகைப்படத்தை கூட இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது. அவர் பத்திரமாக இருக்கிறார் என்கிறது புதிய தகவல்கள்.

அமெரிக்காவின் நேசநாடு ஒன்றில் பிரபாகரனும், சார்லஸ் ஆண்டனியும் மிக பாதுகாப்பாக இருக்கிறார்கள். வருகிற நவம்பர் மாதம் 27-ந்தேதி விடுதலைப்புலிகளின் வீர வணக்க நாள் அன்று அவர்கள் இருவரும் உலக டி.வி.க்களில் தோன்றுவார்கள் என்கிறார்கள்.

கிட்டத்தட்ட இன்னும் 20 ஆயிரம் விடுதலைப்புலிகள் ஆவேசத்துடன் போருக்கு காத்திருக்கிறார்கள். அவர்களின் புதிய தலைவராக தனது வாரிசு சார்லஸ் ஆண்டனியை அன்றைய தினம் பிரபாகரன் அறிவிப்பார் என்கின்றனர்.

தனக்கு வயதாகி விட்டதால் சில முக்கிய பணிகளை மட்டும் தான் மேற்கொள்ளப்போவதாக அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

உலகின் மிகப்பெரிய தலைவர் ஒருவர் அவர்களுக்கு தக்க பாதுகாப்புகளை வழங்கி வருவதாக கூறுகின்றனர்.

ஒரு நீண்ட, நெடிய விடுதலைப்போரில் என்ன வெல்லாம் நடக்கும்? எத்தகைய நெருக்கடி சூழ்நிலைகள் ஏற்படும் என்பது போன்ற விஷயங்களை பிரபாகரன் நன்றாக அறிந்தவர். எதையும் தீர்க்கமாக அறிந்து செயல்படுபவர். எனவே, அவர் விஷயத்தில் "சுட்டுக்கொலை" என்பதெல்லாம் சாதாரணமாக நடக்கிற விஷயமல்ல! அவர் இலங்கையில் இல்லாததை தெரிந்து கொண்ட சிங்கள அரசு நடத்திய நாடகம் இது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

உலகமே மிக ஆவலாக காத்திருக்க தொடங்கியிருக்கிறது, வருகிற 27-11-2009 அன்று தொலைக்காட்சிகளை காண!

ஒரு வேளை, அது மீண்டும் தமிழ் ஈழப்போர் ஏற்படும் நாளாகவும் இருக்கலாம்!

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

1 கருத்துரைகள்:

Anonymous June 4, 2009 at 8:38 PM  

he he

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP