சமீபத்திய பதிவுகள்

இலங்கை அரசின் முதல் பொய் மூட்டை அம்பலம்

>> Sunday, June 7, 2009

பிரபாகரனின் சடலத்தில் காணப்பட்ட சீருடை அவர் மரணமடைந்தபோது அணிந்திருந்த ஆடையல்ல - 53ஆவது படையணி தளபதி
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலத்தில் காணப்பட்ட சீருடை அவர் மரணமடைந்தபோது அணிந்திருந்த ஆடை அல்ல. அதை நாமே அணிவித்தோம் என இராணுவத்தின் 53 ஆவது டிவிசனின் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மே 19 ஆம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த வேளையிலேயே பிரபாரகன் சண்டையில் உயிரிழந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

53 ஆவது படையணியே பிரபாகரனின் சடலத்தைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சிங்கள வார இதழான லங்காதீபவுக்கு வழங்கி செவ்வியிலேயே மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது:

(19 ஆம் திகதி) 9.30 மணியளவில் ஆரம்பமான சண்டை நீண்ட நேரம் நீடித்தது. காட்டிற்குள் சென்ற எமது சிப்பாய் ஒருவர் என்னுடன் பேசினார். "சேர், பிரபாகரனின் உடல் இருக்கிறது' என அவர் கூறினார். அவர் அப்படிக் கூறும்போது அதை நம்புவதா இல்லையா என்று தெரியவில்லை. அப்போது சண்டை நடந்துகொண்டிருந்தது.

நான் அந்த உடலைக் காட்டிற்கு வெளியே கொண்டு வருமாறு கூறினேன். எனது பொடியன்கள் (சிப்பாய்கள்) அந்த உடலை எனது காலடியில் கொண்டுவந்து போட்டனர். முழு இலங்கையும் பார்க்க ஆவலாக இருந்த உடலை நான் பார்க்கும் வரை உறக்கமின்றி இருந்தேன். அந்த உடலை தண்ணீரில் இழுத்துக்கொண்டு வரும்போது சுமார் 3000 சிப்பாய்கள் அங்கு கூடிவிட்டனர்.

19ஆம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோதுதான் பிரபாகரன் சண்டையில் கொல்லப்பட்டார். பிரபாகரன் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு 2 நாட்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படுவதெல்லாம் பொய்யானது.

பிரபாகரனை கொன்றது எனது படைப்பிரிவின் சிப்பாய்களே. பிரபாகரன் பற்றி கூறப்பட்ட பல கதைகளில் ஒரு கதை உண்மையானது. அதாவது, பிரபாரகனின் சடலத்திலிருந்த சீருடை பிரபாகரன் மரணடைந்தபோது அணிந்திருந்த ஆடை அல்ல.

அது பிரபாகரன் மரணமடைந்த பின்னர் எம்மால் அணிவிக்கப்பட்ட ஆடையே. அந்தச் சீருடையை பிரபாகரனின் சடலத்திற்கு அணிவித்தவர்கள் எமது சிப்பாய்களே. அந்த சடலத்தைப் பார்த்த முதல் டிவிசன் தளபதி நானே. என்னால் மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை.

நான் இராணுவத் தளபதிக்கு அழைப்பு மேற்கொண்டு பேசினேன். பிரபாரகனின் சடலம் இருப்பதாக கூறியதும் இராணுவத் தளபதி "ஆர் யூ ஷவர்?' என்று கேட்டார். "ஷவர் சேர்' எந்த சந்தேகமுமில்லை.

பிரபாரகனின் சடலத்தை நாம் இனங்கண்டுள்ளோம் என நான் பதிலளித்தேன். பின்னர் எனது சகோதரர்கள் போல் பழகிய ஏனைய படைத்தளபதிகளுக்கும் தகவல் தெரிவித்தேன்.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

1 கருத்துரைகள்:

Anonymous June 8, 2009 at 12:43 AM  

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking starts from Today.So everyone has the same start line. Join Today.

Top Tamil Blogs

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்கள்

நன்றி.
தமிழர்ஸ் டாட் காம்.

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP