சமீபத்திய பதிவுகள்

தென்பகுதியில் வான்புலிகள் நடத்திய தாக்குதல்கள் அனைத்தையும் 'இந்திரா' கதூவீகள் படப்பிடிப்பு

>> Friday, July 10, 2009

 
 
நான்காவது ஈழப்போரின் போது தென்பகுதியில் உள்ள பொருளாதார மற்றும் இராணுவ இலக்குகள் மீது வான் புலிகள் நடத்திய அனைத்துத் தாக்குதல்களையும் இந்தியா வழங்கிய 'இந்திரா' கதூவீகள் படம் பிடித்திருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் வானூர்திகள் தாக்குதல்களை நடத்திவிட்டு பாதுகாப்பான முறையில் தப்பிச் சென்றமையால் - அதற்கு 'இந்திரா' கதூவீகளின் குறைபாடுகளே காரணம் என அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும் இதற்கு அந்த கதூவீகளின் குறைபாடுகள் காரணம் அல்ல எனவும் அங்கு ஏனைய குறைபாடுகளும், நெருக்கடிகளும் இருந்தமையே இதற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தியா வழங்கியிருந்த கதூவீகள் இரட்டைப் பரிமாணத்தை உடையவை. ஆனால், சிறிலங்கா முப்பரிமாண கதூவீகளையே விரும்பியதாகத் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் சீனாவிடம் இருந்து இரண்டு கதூவீகளைப் பெற்றுக்கொள்ள சிறிலங்கா அரசு முற்பட்ட போதிலும் ஒரு கதூவீ மட்டுமே சீனாவிடம் இருந்து கிடைத்திருந்தது. அது மீரிகமவில் பொருத்தப்பட்டது.

இருந்தபோதிலும் வான்புலிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டபோது இந்தியா வழங்கிய 'இந்திரா' கதூவீகளே பயன்படுத்தப்பட்டன.

தரையை அடிப்படையாகக்கொண்ட வான் பாதுகாப்புப் பிரிவு தோல்வியடைந்தமைக்கு பிரதான காரணம் கொழும்பைச் சூழவுள்ள பகுதிகளில் தென்னை மரங்கள் மிகவும் அடர்த்தியாக வளர்ந்திருந்தமையாகும். விங் கொமாண்டர் சேனக பெர்ணான்டோபுள்ளேயும் இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்த நெருக்கடி நிலையை வெற்றிகொள்வதற்கு கட்டுநாயக்காவிலும், கரவலப்பிட்டியவிலும் சிறிலங்கா வான்படை மேடைகளை அமைத்திருந்தது.

கொழும்பை சூழவர முக்கியமான பொருளாதார மற்றும் பாதுகாப்பு நிலைகள் மீது உயர்ந்த கட்டடங்களில் வானூர்தி எதிர்ப்புப் பீரங்கிகளும் பொருத்தப்பட்டிருந்தது.

சிறிலங்காவின் வான் பாதுகாப்பு முறைமைகளை ஏமாற்றுவதற்காக விடுதலைப் புலிகள் பல தொழில்நுட்ப உபாயங்களைக் கையாண்டனர்.

மரங்களுக்கு மேலாகப் பறப்பதைக் கண்டுபிடிக்க முடியாதவாறும் அதற்கு அப்பால் தமது இலக்குகளை அணுகும்போது தமது சகல மின்விளக்குகளையும் அவர்கள் சென்றதாகக் கூறப்படுகின்றது.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

2 கருத்துரைகள்:

Anonymous July 11, 2009 at 12:40 AM  

உங்கள் தளத்தில் ஏதோ பிரச்சனை உள்ளது Internet Explorer cannot open the site. Operation aborted. என்று அடிக்கடி வருகிறது தயவு செய்து சரி செய்யவும், படிக்க முடியவில்லை,

thanks
Vimal raj

தெய்வமகன் July 11, 2009 at 7:27 PM  

நண்பர் விமல்ராஜ் அவர்களே உங்கள் வருகைக்கு நன்றி.நான் எப்பொழுது பயன்படுத்தும் உலவி Internet Explorer தான்.ஆனால் என் செயல்பாட்டில் சமீபத்தில் எந்தவித பிரச்சனையும் ஏற்படவில்லை.ஏன் உங்களுக்கு இப்படி ஆகிறது என்று தெரியவில்லை.இந்த குறையை களைய கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP