சமீபத்திய பதிவுகள்

ஆன்லைன் விபச்சாரம்- சொடக்கு போட்டாலே ஓடிவரும் ந்டிகைகள்

>> Wednesday, September 16, 2009


மீபத்தில் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸார் திருட்டு வண்டிகள் குறித்து விசாரிக்க வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாரதிகண்ணன் என்பவன் சிக்க, அவனிடமிருந்து விதவிதமான பெண் களின் புகைப்படங்கள் கிடைத்திருக்கின்றன. அதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில்தான் அவன் பிரபல விபசார புரோக்கர் கன்னட பிரசாத்தின் கூட்டாளி என்பது தெரியவந்தது. இதற்கிடையில்,

''சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தொடங்கி... விபசார தடுப்பு பிரிவு வரைக்கும் பல காலமா தேடிக்கிட்டு இருக்கிற ஒருத்தனை இத்தனை சுலபமா பிடிச்சிட்டீங்களேய்யா...'' என்று சிதம்பரம் போலீஸை வியந்தபடியே பாரதிகண்ணனை கொத்தோடு அள்ளிக் கொண்டு போனார்கள் சென்னை புறநகர் மத்திய குற்றப் பிரிவு போலீஸார். அவர்களின் விசாரணையில் பாரதிகண்ணன்

கக்கிய தகவல்கள் போலீஸ் வட்டாரத்தையே கவலையோடு நிமிர வைத்திருக்கிறது! 'ஆன்லைன்' விபசாரம் என்கிற விஷ விதை சென்னையிலும் விழுந்திருக்கிற விஷயம் அதன் பிறகுதான் போலீஸ் வட்டாரத்துக்குப் புரியத் தொடங்கி இருக்கிறது.

''கன்னட பிரசாத் ஜெயிலுக்கு போன உடனேயே எங்க டீமுக்கு 'அப்பு'ங்கிற அப்துல் காதர்தான் தலைவர். சாதா ரணமா விபசார தொழில் பண்ணினா... பெரிசா சம்பாதிக்க முடியாதுன்னு தொழிலையே ஹைடெக்கா மாத்தி கஸ்டமர்களை வளைச்சு வைச்சிருக்கார். சினிமா நடிகைகள் தொடங்கி... கல்லூரி மாணவிகள் வரை அவன்கிட்ட இல்லாத வெரைட்டியே கிடையாது!'' என தொழில் பராக்கிரமங்களை எடுத்துவிட்ட பாரதி கண்ணன், ''நீங்க தலைகீழா நின்னாலும் அப்புவை பிடிக்க முடியாது. அவன் ரூட்டிலேயே போய், ஆன்லைன் கான்டக்ட் மூலமாகவே மூவ் பண்ணினாலும் உங்களைக் கரெக்டா ஸ்மெல் பண்ணி, டிமிக்கி கொடுத்திடுவான்!'' என்றும் சொல்லி இருக்கிறான். அடுத்தடுத்தும் அப்புவின் ஆன்லைன் நெட்வொர்க் பற்றிய பராக்கிரமங்கள் வெளியே வர, உடனடியாக அவனை வளைக்க சென்னை புறநகர் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனரான ஜெயக்குமார் தலைமையில் டீம் அமைக்கப்பட்டது.

சென்னை போலீஸுக்கு ரொம்ப நாளாக டிமிக்கி கொடுத்த கன்னட பிரசாத்தை முன்பு சென்னை மாநகர கூடுதல் கமிஷனராக இருந்த ஜாங்கிட் மடக்கிப் பிடித்து பல மாநில போலீஸாரை மூக்கில் விரல் வைக்கச் செய்தார். இப்போது சென்னை புறநகரின் கமிஷனராக இருப்பது அதே ஜாங்கிட் என்பதால், கன்னட பிரசாத் துக்கு நெருக்கமான புள்ளிகள் மூலமாகவே அப்பு குறித்த தகவல்கள் ஆராயப்பட்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில், சென்னை மடிப்பாக்கம், சாய் கணேஷ் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அப்பு தங்கி இருப்பதாகத் தெரிய வர, அங்கே வைத்து வசமாக அவனை வளைத்திருக்கிறது போலீஸ் டீம்.

''எத்தனை லட்சங்கள் வேண்டுமானாலும் தருகிறேன்... என்னை விட்டு விடுங்கள்!'' என்றும், ''என்னோட கஸ்டமர்ஸ் யார்யார்னு தெரிஞ்சா நீங்களே என்னைய விட்டுடுவீங்க...'' என்றும் ரொம்பவே டபாய்த்திருக்கிறான் அப்பு. அவனிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

''அழகிகளை வெளி மாநிலங்களில் இருந்து வரவழைத்து, வீடுகளில் தங்க வைத்து விபசாரத் தொழில் செய்வதுதான் வழக்கமாக புரோக்கர் ஸ்டைல். இதில் பெரிதாக வருமானம் பார்க்க முடியாததாலும், போலீஸ் ரீதியான இடையூறுகள் அதிகம் இருப்பதாலும் அப்பு ஆன்லைன் மூலமாகவே விபசாரக் கடை விரித்திருக்கிறான். 'எஸ்கார்ட்ஸ்' என்ற பெயரில் வி.ஐ.பி-க்களுடன், அவர்கள் போகிற ஊர்களில் தேடிவந்து 'துணை'யாகத் தங்குவதற்கு பெண்களை ஏற்பாடு செய்யும் பிசினஸ் சென்னைக்குப் பழக்கமில்லாத ஒன்று. ஆரம்பத்தில் சில ஆன்லைன் முகவரிகள் சென்னையைக் குறி வைத்துக் கிளம்பின. நாங்கள் அந்த முகவரிகளை தொடர்பு கொண்டு துழாவியபோது, அதெல்லாம் டுபாக்கூர் என்பது தெரிய வந்தது. அதனால்தான் 'எஸ்கார்ட்ஸ் விபசாரம்' குறித்து முதலில் வந்த பல புகார்களை நாங்கள் சட்டை செய்யாமல் புறக்கணித்து வந்தோம்.

இந்த ஆன்லைன் கலாசாரம் ஒரு சில மேற்கத்திய நாடுகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறதுஎன்றாலும், இந்தியாவில் இந்த வழக்கமே இல்லாமல் தடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால், விபசார முதலைகளான அப்புவின் கும்பல் தங்களுக்கு நெருக்கமான வெளி மாநில நண்பர்களின் மூலமாக ஒவ்வொரு மாநிலத்திலும் விபசார பிசினஸை பெரிய அளவில் தொடங்கி இருக்கிறார்கள். 'சென்னை எஸ்கார்ட்ஸ்' என்ற பெயரில் ஆன்லைனில் கடை விரித்து, வெளிமாநிலங்களில் இருந்து வருகிற வி.ஐ.பி-க்களின் துணைக்கு இளம் பெண்களை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறான் அப்பு. ஆரம்பத்தில் குடும்பப் பெண்களையும் கல்லூரி மாணவி களையும் ஆன்லைன் விபசாரத்துக்கு கொண்டு வந்த அப்பு, ஒரு கட்டத்தில் சினிமா நடிகைகளையும் குறி வைத்து வீழ்த்தி இருக்கிறான். போலீஸ் ரீதியான சிக்கலோ, தாதாக்களின் பிரச்னையோ இருக்க வாய்ப்பில்லை என்பதால், பிரசித்தியான நடிகைகளும் அப்புவின் வலையில் விழுந்திருக்கிறார்கள். துணை நடிகைகளும், சின்னத்திரை நடிகைகளும் வெளி மாநிலங்களுக்குப் போய் பார்ட் டைம் வேலையாகவே விபசாரத்தில் ஈடுபட்டுப் பணம் பார்த்திருக்கிறார்கள்.

வி.ஐ.பி-க்கள் தாங்கள் குறிப்பிட்ட தேதியில் தங்க விருக்கும் நட்சத்திர ஹோட்டல் பெயரையும் ரூம் நம்பரை யும் சொல்லி விட்டால் போதும். தங்களின் நெட்வொர்க் மூலமாக அதனை உண்மையா என செக் செய்து கொள்ளும் அப்புவின் டீம்! அடுத்து, சம்பந்தப்பட்ட ஹோட்டல் அறைக்கு பெண்களை அனுப்பி வைக்கும். இதற்காக இந்தியாவின் எந்தக் கோடியிலிருந்தும் பெண் களைக் கொண்டு செல்வதற்கு ஏற்ப 'செம வெயிட்'டாகஅமவுன்ட் கொடுப்பார்கள். அந்தப் பெண் களில் பலர் பிரபலங்களாக இருப் பார்கள் என்பதால், தங்கள் சொந்த ஊர் ஹோட்டல்களில் தட்டுப் படுவதைவிட, சம்பந்தமில்லாத வெகுதூர ஊர்களின் ஹோட்டலுக்கு வருவதற்கே அதிகம் விரும்புவார்கள். மணிக் கணக்கைப் பொறுத்து பெண்களுக்கான வாடகை வசூலிக்கப்படும். வி.ஐ.பி-க்கள் விரும்பினால் வாரக் கணக்கில், மாதக் கணக்கில் வேண்டுமானாலும் அந்த பெண்கள் 'எஸ்கார்ட்'டாக இருப்பார்கள்.

இந்த பிசினஸில் அப்புவுக்கு துணையாக பாரதி கண்ணன், பல்லு சரவணன், காளிமுத்து ஆகிய புரோக்கர்கள் பெண்களை பதுக்கி வைக்கவும், போலீஸை கண்காணிக்கவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, வெளி மாநிலங்களிலும் 'எஸ்கார்ட்ஸ்' பெயரில் கன்னட பிரசாத்தின் கூட்டாளிகள் ஆன்லைன் மூலமாக விபசார வலை விரித்திருக்கிறார்கள். 17 வயது இளம்பெண் என்றால் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் ரூபாயும், சினிமா நட்சத்திரங்கள் என்றால் லட்சக்கணக்கிலுமாகப் பேசப்பட்டிருக்கிறது. கஸ்டமர்களிடம் இருந்து கிரடிட் கார்டு மூலமாக ஆரம் பத்திலேயே பணத்தைக் கறந்து விடுகிற அப்பு, பேசுகிற தொகையில் ஒரு பைசாகூட குறைக்காமல் நடிகைகளிடம் கொடுத்துவிடுவானாம். அதனால் முக்கியமான கஸ்டமர்களுக்காக அப்பு சொடக்குப் போட்டாலே நடிகைகள் பலரும் ஓடி வந்து விடுவார்களாம். இப்படி சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பல கல்லூரி மாணவிகளையும் இந்த ஆன்லைன் விபசாரத்தில் வீழ்த்தி இருக்கிறார்கள். அப்புவை இதில் அரெஸ்ட் செய்து விட்டாலும், அந்த நெட்வொர்க்கை அடியோடு வீழ்த்தினால்தான் ஆன்லைன் விபசாரத்துக்கு முடிவு கட்ட முடியும்!'' எனச் சொன்ன விசாரணை அதிகாரிகள், தமிழகப் புள்ளிகள் யாரெல்லாம் இதற்கு 'அடிமை'கள் என்றும் விவரித்தார்கள்.

''சென்னையில் உள்ள முக்கியத் தொழிலதிபர்கள் (அவர்களில் பலர் யாரென்று நீங்கள் நினைத்துக்கூட பார்க்க மாட்டீர்கள்!) சிலர் ஆன்லைன் விபசாரத்தில் ரெகுலர் கஸ்டமர்களாக இருந்திருக்கிறார்கள். விபசார தடுப்பு போலீஸாரால் பல முறை எச்சரிக்கப்பட்ட இரண்டெழுத்து நடிகை ஒருவர், இந்த கும்பலின் அழைப்புக்கிணங்க இந்தியாவின் பல்வேறு பெரிய நகரங்களுக்குப் பறந்திருக்கிறார். வெளிமாநில வி.ஐ.பி-க்களுடன் ஃபாரினுக்கும் 'எஸ்கார்ட்'டாகப் போய் பணம் பார்த்திருக்கிறார். அப்பு எங்கள் வசம் பிடிபட்டதுமே எங்களைத் தொடர்பு கொண்டு அந்த நடிகை பதற ஆரம்பித்து விட்டார். 'இப்போ குடும்பம் குடித்தனம்னு இருக்கேன். நடந்து முடிந்ததையெல்லாம் கிளறி, என்னை வம்பில் இழுத்துவிடாதீங்க!' னு கதறவே ஆரம்பித்து விட்டார்.

'போலீஸ் தொந்தரவு இருக்காது. நாங்க கொடுக்கிற பணமும், கஸ்டமர்ஸ் கொடுக்கிற பணமும் சேர்த்து ரெட்டிப்பு லாபம் கிடைக்கும். அதோட, ஜாலியா ஊர் சுத்தவும் செய்யலாம்'னு சொல்லித்தான் இது போன்ற சில நடிகைகளை ஆன்லைன் விபசாரத்தில் வீழ்த்தி இருக்கு அப்புவின் கும்பல். வெளிநாடு போவதை பெரிய ஹாபியாக நினைக்கக் கூடிய ஒரு நான்கெழுத்து நடிகையும் ,அவ்வப்போது அரசியல் வாடை வீசும் மூன்றெழுத்து நடிகையும் (நடிகையின் தனிப்பட்ட தகுதிகளைக் கேட்டால், 'இவரா இப்படி!' என்று தலைசுற்றும்!) இந்த கும்பலுடன் தொடர்ந்து ஈடுபாடு வைத்திருந்தனர். எங்காவது பார்ட்டிகளில் சந்திக்கும்போது வேறு சில சினிமா நட்சத்திரங்களையும் இதில் இழுத்துப் போட்டு, அதற்கும் தனி கமிஷன் வாங்கியிருக்கிறார்கள்.

வீட்டைவிட்டு வெகுதூரம் வந்து வெளி மாநிலத்தில் தானே படிக்கிறோம் என்ற தைரியத்தில் ஹாஸ்டலில் தங்கிய பல கல்லூரி மாணவிகள் இந்த ஆன்லைன் விபசாரத்தில் விழுந்திருக்கிறார்கள். விடுமுறை நாட் களில் அந்தந்த மாநில தலைநகரங்களுக்குப் போய் வி.ஐ.பி-க்களுடன் தங்கியிருக்கிறார்கள். சரியான நேரத்தில் அப்புவை வளைத்து, பிற மாநில போலீஸாருக்கும் இந்த கும்பல் குறித்து எச்சரித்திருக்கிறோம். இந்தக் கும்பல்கள் வெளி மாநிலத்தில் இருந்தோ, இல்லை வெளிநாட்டில் இருந்தோகூட விபசார தொழிலை நடத்த முடியும். இவர் களுக்குத் தேவையெல்லாம் ஒரு கம்ப்யூட்டரும் இணைய இணைப்பும் மட்டுமே! இவர்களின் செல்போன்கள்கூட சில சங்கேதமான மாற்றங்களோடுதான் பரஸ்பரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது...'' எனச் சொல்லி முடித் தார்கள்.

அப்புவை வளைத்த புறநகர் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளரான ஜெயக்குமாரிடம் பேசினோம். ''சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட் கொடுத்த பல தகவல்கள், மற்றும் அவரோட உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து அப்புவை வளைத்தோம். 'எஸ்கார்ட்ஸ்' என்ற பெயரில் பல பெண்களை விபசாரக் குழிக்குள் வீழ்த்தியதை விசாரணையில் ஒப்புக் கொண்டிருக்கிறான் அப்பு. அவனுடைய கூட்டாளிகளான பல்லு சரவணன், காளிமுத்து ஆகியோருக்கும் வலை விரித்திருக்கிறோம்...'' என்றார் அவர்.

அடுத்தபடியாக அப்புவை குண்டர் சட்டத்தில் அடைக்கவும் முடிவு செய்திருக்கிறது போலீஸ்.

- இரா.சரவணன்
படம்: 'ப்ரீத்தி' கார்த்திக்
  
 source:vika

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

1 கருத்துரைகள்:

sam December 17, 2009 at 2:37 AM  

hats off for ur eelam support but u r creating a unneeded thing by publishiing against islam there s a afraidness in ur stupid ansers u know tat u r wrong dont provide wrong details, muslims dont bribe money during tsunami, christianity missions r used tat bloody money instead of giving affected peoples u bloody

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP