சமீபத்திய பதிவுகள்

யார் துரோகி ? -ஜெகத் காச்பருக்கு கேள்விகள்

>> Monday, October 26, 2009

யார் துரோகி ? - நடேசனின் கேள்வி கட்டுரை

அருட்தந்தை  ஜெகத் கஸ்பாருக்கும்  அதிர்வு தளத்திற்குமான   அறிக்கை சர்ச்சையில்,  நமக்கு கீழ் கண்ட சந்தேகங்கள் வருகின்றன . அதை இங்கே கேள்வி கட்டுரையாக எழுதுகிறேன் .


ஜெகத் காச்பருக்கு நான் வைக்கும் கேள்விகள் :

உங்களின் இந்த சர்ச்சையின் நோக்கம் நீங்கள் எழுதும் தொடருக்கான பரபரப்பை கூட்டுவதா ? எனென்றால் நீங்கள் உங்கள் பதிலை அல்லது உங்களுது எந்த விளக்கத்தையும்  தொடரில் மட்டுமே எழுதுகிறீர்கள் .


உங்களுக்கு வியாபார புத்தி அல்லது பணம் சம்பாதிப்பது நோக்கம்  இல்லையென்றால்  முள்ளிவைக்காளில் என்ன நடந்தது என்பதை ஒரே நாளில் அறிக்கையாக கொடுக்க வேண்டியதுதானே ?


உங்களிடம் நேரிடையாக பேசிய  தொழில் நுட்ப துறை  நண்பர்களிடம் (பல பெயர்கள் உள்ளது) நீங்கள்,  தமிழ் உணர்வாளர்கலால்தான் ஈழம் அழிந்தது என்று பேசினீர்கள் (முள்ளிவைகால் சம்பவத்திற்கு பின்னால் ) அதில் நீங்கள் தா பாண்டியனையும் சேர்த்து பேசினீர்கள்.  இப்போது தா பாண்டியனை விட்டு விட்டீர்கள் ஏன் ? அவர் கருணாநிதி எதிர்ப்பு அணியில் தற்போது இல்லை என்பதாலா ?


முள்ளிவைகால் சம்பவத்திற்கும்  முன்னாள் , இந்திய அரசு ஒரு தீர்வு வைத்திருப்பதாகவும்  அந்த தீர்வுக்கு ஐயா நெடுமாறனும் தா பாண்டியனும் தான் முட்டுக்கட்டை  போடுவதாகவும் சொன்னீர்கள் , அது என்ன தீர்வு ? அந்த தீர்வு - இந்திய அரசாங்கம் கொடுத்தாக சொன்னீர்கள் . இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளின் அல்லது   வெளி விவகாரம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்  சாமானியரான உங்களுக்கு எப்படி தெரிந்தது? இந்த விசயத்தில் தாபாண்டியனை இழுத்து பேசிய நீங்கள் இப்போது  ஏன் அவரை விட்டுவிட்டீர்கள். அவரது வீடு தாக்கப்பட்டது போதும் என்று  நிம்மதி கொண்டீர்களா?


கடைசி நாளில் உங்களிடம் யார் யாரோ எதோ பேசினார்கள் என்றீர்களே. அது என்ன என்று முழுவதுமாய் இப்போது சொல்லுங்கள்.


பழைய சர்ச்சைகள் எப்படி இருந்தாலும் , இப்போது  ஈழ மக்கள் கண் முன்னாலேயே  திறந்த வெளி சிறையில் உள்ளார்களே அதற்கு  "அரசாங்கத்திற்கு நான் நெருக்கம் " என்று காட்டிகொள்ளும் உங்களின் தீர்வு என்ன அல்லது அதை பற்றியே பேச கூடாதா ? அல்லது உங்களுது தொடரை படித்து கொண்டே இருந்தால்தான் எழுதுவீர்களா?


நான் செவி வழி  தெரிந்தது மற்றும் ஒரு சிலரின்  பேட்டியின் மூலம் தெரிந்தது, ஈழத்தில்  விடுதலை புலிகளின் கட்டமைப்பு என்பது, ஒருவர் பேசுவதை மற்றவர் பேசமாட்டார்கள். அதாவது ஒருவரின் நடவடிக்கை  மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கையில்  உங்களக்கு மட்டும் எப்படி இவ்வளவு விஷயங்கள் தெரிகிறது. புலிகள் அமைப்பின் அதிர்காரபூர்வ பணிகளில் ஏதாவது ஒன்றில் நீங்கள் இருந்தீர்களா? அப்படி இருந்தால் அது என்ன  மாதிரியான தொடர்பு அல்லது பதவி?


வைகோவும் நெடுமாறனும்  ஈழ விசயத்தில் நாடகம் ஆடுகிறார்கள் அல்லது ஏமாற்றி பிளைகிறார்கள் என்றால் நீங்கள் ஏன் வைகோவை வைத்து, அவரை உபயோகித்து அவரின் மூலம் மூன்று வருடங்களுக்கு முன்னாள்  இளையராஜாவை கொண்டு திருவாசகம் விழா எடுத்தீர்கள். அல்லது நேர்மையாக இருந்த வைகோ இப்போது மூன்று வருடங்களாக துரோகியாக மாறிவிட்டாரா?  நெடுமாறன்தான் புலிகளை தவறாக வழி நடத்தினார் என்று சொன்னீர்களே, எப்படி என்பதை விளக்குங்கள். என்னென்ன விடயங்களில் இவர் அவர்களை தவறாக வழி நடத்தினார்? வைகோவையும் நெடுமாறனையும் மட்டுமே நம்பித்தான் விடுதலை புலிகள் இயங்கினார்களா? 

சரி இறுதி நேரத்தில்தான் வைகோவும் நெடுமாறனும் குழப்பினார்கள் என்றால், இரண்டு வருடங்களுக்கு முன்பே  தமிழ் செல்வனை  இலங்கை அரசு ஏன் கொன்றது ?

செஞ்சோலை  மாணவிகளை இலங்கை என் கொன்றது ?

இலங்கை தன்னிச்சையாக போரை ஆரம்பித்து  தமிழர்களை கொள்ள ஆரம்பித்தது என்பதை ஏன் உணர மறுக்கிர்றீர்கள் அல்லது சொல்ல மறுக்குன்றீர்கள் .

போர் நடந்த கடைசி மாதத்தில்  விடுதலை புலிகள் பத்து முறையாவது நடேசன் மூலம் போர் நிறுத்த அறிவிப்பில் விருப்பம் காண்பித்தார்கள், புலிகளுக்கு அறிவுரை கூறிய  வைகோவும் நெடுமாறனும் தவறு செய்தவர்கள் என்றால்  இந்திய அரசாங்கத்திற்கு அறிவுரை கூறும் உங்கள் போன்ற மேதாவிகள்ஏன் அப்போதாவது இலங்கை போரை நிறுத்த வற்புறுத்தவில்லை?


அதற்கும் மேலாக, பிரணாப் முகர்ஜி இந்திய பாராளுமன்றத்தில், புலிகளோடு இருப்பவர்கள் வெறும் எழுபத்தி ஐந்தாயிரம் பேர் என்று எந்த அடிப்படையில் ஒரு மிகபெரிய பொய்யை சொன்னார் ? மீதி இருந்த மூன்று லக்ஷம்  பேரையும் கொல்லும் இலங்கையின் நோக்கதிர்க்கு எதுவாய் தானே  அப்படி சொன்னார் ? அப்படி இருக்கும் இந்திய அரசு எப்படி தமிழர்களுக்கு நல்லதை நினைத்தது?  அதுவும்  சிதம்பரம் மூலம்?


உங்கள் கூற்றுபடியே பார்த்தாலும், நீங்கள் எடுத்த முயற்சியின் படி, கடைசி நாளில், நடேசனை  மற்றும் புலித்தேவனை கொன்ற இலங்கை படையினர்  எந்த நம்பிக்கையில்  மீதம் சரண் அடையும் எல்லா தமிழர்களையும் கொள்ளாமல் இருப்பார்கள் என்று சொல்ல முடியும்?


நடேசன் உங்களிடம் என்ன பேசினார்? வைகோவும் நெடுமாறனும்தான் சரணடைய சொன்னார்கள் என்று சொன்னாரா?


எல்லாம் முடிந்து விட்டது. தமிழர்களை புல் டோசர்களை ஏற்றி கொன்றார்கள். முக்கல் முனகலோடு இருந்த  அனைத்து உயிர்களையும்  அழித்தார்கள். செத்தது பொது மக்கள்தானே  இதையாவது நீங்கள் சொல்லும் இந்திய தமிழர் நல அரசாங்கம்  காத்ததா?


மீதி இருந்த தமிழர்களை சிறையில் அடைத்தார்கள், ஐக்கியநாடுகள் சபையில்  இலங்கையை  எதிர்த்து வந்த "மனித உரிமை மீறல் நடவடிக்கை" காண வாதத்தில் வாகெடுப்பில், எதிரியாய் இருந்தாலும் பாகிஸ்தானையும் சீனாவையும் அனுசரித்து  என் இந்தியா இலங்கைக்கு உதவி செய்தது? நீங்கள் சொல்லும் இந்திய தமிழர் நல அரசாங்கம்  ஏன் அப்படி செய்தது ?


எனென்றால் இலங்கையில் போரை நடத்தியதே  இந்தியாதான். 

அதை  நிரூபித்தது  சமீபத்தில் இலங்கை சென்ற இந்திய அல்லது தமிழக நாடாளுமன்ற குழுதான்.

ஏனென்றால்?

  • ஐக்கிய நாடுகள் சபையை முகாமுக்குள் அனுமதிக்காத இலங்கை ,
  • மனித உரிமைகள் குழுவை முகாமுக்குள் அனுமதிக்காத இலங்கை,
  • தன சொந்த நாட்டின் எந்த பாராளுமன்ற உறுபினறையும் அனுமதிக்காத இலங்கை,
  • தன சொந்த நாட்டின் எந்த அமைப்புகளையும் அனுமதிக்காத இலங்கை .
  • அமெரிக்காவை அனுமதிக்காத இலங்கை,
  • கனடா உறுபினரை விமான நிலையத்திலேயே  மடக்கி திருப்பி அனுப்பிய இலங்கை,


... எப்படி  இந்திய அரசாங்கத்தின் சார்பில்லாத  ஆனால் ஆளும் கட்சியை சேர்ந்த பாராளு மன்ற உறுபினர்களை அனுமதித்தது?


ஏன் இந்தியாவிற்கு இவ்வளவு மரியாதை?  ஏனென்றால் இந்தியாதான் போரை கூலிபடையை போல் நடத்தியது. கூலிப்படைக்கு விசுவாசமாக இல்லை என்றால், குற்றவாளியும் கூலிபடையும் சேர்ந்தே மக்கள் மன்றத்தில் தண்டனை பெற வேண்டியிருக்கும்.


இந்த கூலி படைக்கு சார்பாய் பேசும் ஆட்களை நாம் எப்படி அழைத்தால் நன்றாய் இருக்கும் . வாசகர்களின்  விமர்சனத்திற்கு விடுகிறேன்.


-நடேசன், சென்னையில் இருந்து.

source:dinaithal
--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP