சமீபத்திய பதிவுகள்

தமிழகத்தில் 1,000 ரூபாய் கள்ள நோட்டு அதிகரிப்பு : அதிர்ச்சி தகவல் அம்பலம்

>> Saturday, November 28, 2009

 
 

Front page news and headlines todayதமிழகம், புதுச்சேரியில் 1,000 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளது; இதனால், மக் கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தியாவில் நிகழும் பயங் கரவாத சதிகளுக்கு ஊக்கமளிக்கும் பாகிஸ்தானின் "ஐ.எஸ்.ஐ.,' உளவு அமைப்பு, இந்திய போலி கரன்சிகளையும் அதிகளவில் அச்சடித்து இந்தியாவில் புழக்கத்தில் விடுகிறது. இதன் ஏஜன்ட்கள் மூலமாக, கடல் மற்றும் தரை வழியாக கடத்தி வரப்படும் 1,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் கள்ள நோட் டுகள், நாட்டின் பல் வேறு பகுதிக்கும் சப்ளையாகிறது. இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக் கும் இது போன்ற சதி செயல் களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் திணறுகின்றன. இதனால், கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளது.சமீபத்தில், கேரளா வழியாக கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 100 ரூபாய் கள்ள நோட்டுகள், மாநகர போலீசால் பறிமுதல் செய்யப்பட்டு, மூவர் கைது செய்யப் பட்டனர். மேலும், கோவை நகரிலுள்ள தனியார் வங்கி ஏ.டி. எம்.,மெஷினில் கள்ள நோட்டு வந்ததாக, வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து, ஏ.டி.எம்., மையத்தை முற்றுகையிட்டனர். போலீசார் வந்து சமரசம் செய்ததை தொடர்ந்து போராட் டத்தை கைவிட்டனர். இந்நிலையில் 1,000 ரூபாய் கள்ள நோட்டு தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.1,000 ரூபாய் கள்ள நோட்டு: கோவை, குனியமுத்தூரைச் சேர்ந்தவர் அபூபக்கர் (35) என்பவர், வர்த்தக கண்காட்சிக்கான அரங்குகளை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். சமீபத்தில், புதுச்சேரி சென்ற அவர், அங்கு கண்காட்சிக்கான அரங்குகளை அமைத்தார். அதற் கான தொகையை அவர் பெற்று, அங்குள்ள ஐ.சி. ஐ.சி.ஐ.,வங்கியில் செலுத்தினார். அவர் அளித்த ரூபாய் நோட்டுகளை பெற்ற வங்கி அதிகாரிகள், ஒரு 1,000 ரூபாய் நோட்டை கள்ள நோட்டு எனக்கூறி, மூன்று பாகங்களாக கிழித்து, இரு பாகங்களை அபூபக்கரிடம் கொடுத்தனர். அதிர்ச்சியடைந்த இவர், வாக்குவாதம் செய்தார்; பலனில்லை. இதே போன்று, கள்ள நோட்டுகள் சென்னை மற்றும் கோவையிலுள்ள வங்கிகளிலும் அதிகம் பிடிபட்டுள்ளன. இதனால், சில பெட்ரோல் பங்க், தனியார் பள்ளி, கல்லூரிகளில் 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை பெறுவதில்லை என்ற அறிவிப்பு வைத்துள்ளனர். மக்களின் குழப்பத்தை தீர்க்க, "கள்ள நோட்டுகள் எப்படியிருக்கும்' என்ற பட விளக்கங்களுடன் நோட்டீஸ்களை போலீசார் வினியோகித்து வருகின்றனர். எனினும், கள்ள நோட்டு அச்சம், மக்களிடம் நீடிக்கிறது.இது குறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவையில் 1,000 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் இருப்பதாக ஏற்பட்ட அச்சம் காரணமாக, கல்வி நிறுவனங்கள் வாங்க மறுப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது; எனினும், புகார் ஏதும் இல்லை. கள்ள நோட்டு புழக்கம் ஏழை மற்றும் நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கிறது. ஏதாவது ஒரு வகையில் அறியாமல் கள்ள நோட்டுகளை பெறும் மக்கள், செலுத்தும் போது உண்மையை அறிகின்றனர். கள்ள நோட்டை வங்கியில் செலுத்தும் போது, வங்கி ஊழியர்கள் கிழித்து அழித்து விடுகின்றனர். மீண்டும், அதே நோட்டு புழக்கத்துக்கு போய்விடக்கூடாது என்றே, கிழித்து அழிக்கப் படுகிறது. இதனால், ரூபாய் இழப்புக்கு உள்ளாகும் மக்கள் அதிர்ச்சி அடைகின்றனர். இது போன்ற பாதிப்பை தவிர்க்க, மக்கள் உஷாராக இருப்பது அவசியம். ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை பெறும் போது, ஒரிஜினல் நோட்டா என்பதை சோதித்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கள்ள நோட்டாக இருப்பின் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கலாம். கள்ள நோட்டு கும்பலின் "நெட்வொர்க்' மற்றும் புழக்கத்தை கண்டறிய சி.பி.சி.ஐ.டி.,யில் பிரத்யேக பிரிவு செயல்படுகிறது; அங்கு தகவல் தெரிவித்தாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.கண்டறிவது எப்படி? ஆயிரம் மற்றும் 500 ரூபாய் ஒரிஜினல் கரன்சி நோட்டுகளை உறுதி செய்வது தொடர்பான ரிசர்வ் வங்கியின் குறிப்புகள்:பாதுகாப்பு இழை: 3 மி.மீ., அகலப்பட்டை வெவ்வேறு கோணங்களில் பார்க்கையில் பச்சையாகவும், நீலமாகவும் மாறி மாறி தெரியும். இடையில் "பாரத்' என்று இந்தியிலும், கீஆஐ என்று ஆங்கிலத்திலும் நோட்டின் முன் பக்கத்தில் தெரியும். "அல்ட்ரா வயலட்' விளக்கில் மஞ்சளாக ஜொலிக் கும். வெளிச்சத்தில் தூக்கி பார்க்கையில் தொடர்ச்சியான கோடாக தெரியும்.நீர்க்குறியீடு: மகாத்மா காந்தியின் உருவப்படமும் நோட்டின் மதிப்பு எண்ணும், அதற்கு பின்னால் பல நேர்கோடுகளும், வெளிச்சத்தில் தூக்கி பார்க்கையில் துல்லியமாக தெரியும்.மறைந்திருக்கும் மதிப்பு எண்: மகாத்மா காந்தி படத்திற்கு பக்கத்திலுள்ள செவ்வகப்பட்டையில் ரூபாய் நோட்டின் மதிப்பு எண் அச்சடிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டை பக்கவாட்டில் கண்ணுக்கு நேராக சற்றே சாய்த்து பார்க்கையில் மதிப்பு எண் தெரியும்.தடவி உணரும் அச்சு: மகாத்மா காந்தியின் உருவம், ரிசர்வ் வங்கியின் பெயர், இந்திய அரசின் உத்தரவாதம், அசோகா தூண் சின்னம், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையொப் பம், அடையாள குறியீடு ஆகியன தடவி உணரும் வகையில் மேலெழுந்தவாறாக அச்சடிக்கப்பட்டிருக்கின்றன.நுண்ணிய எழுத்துக்கள்: மகாத்மா காந்தியின் உருவத்திற்கும், செவ்வகப்பட்டைக்கும் இடைப்பட்ட பகுதியில் கீஆஐ பெயரும், மதிப்பு எண்ணும் மிக நுண்ணிய எழுத்துக்களால் அச்சடிக்கப்பட்டிருக்கிறது.சரித்துப்பார்க்கையில் மாறும் நிறம்: ரூபாய் நோட்டின் முன்பக்கத்தினை மேலும் கீழும் சரித்துப் பார்க்கையில், அதன் மதிப்பு எண் பச்சை நிறத்திலிருந்து நீல நிறமாக மாறும்.சீரான பதிவு: ரூபாய் நோட்டின் முன்னும் பின்னும் பூ இதழ்போல அச்சடித்திருப்பதை, வெளிச்சத்தில் தூக்கிப் பார்த்தால் ரூபாய் நோட்டின் மதிப்பு எண் துல்லியமாகத் தெரியும். இந்த மதிப்பு எண் முன்னும் பின்னும் அச்சடிக்கப்பட்டிருந்தாலும், வெளிச்சத்தில் தூக்கிப்பார்க்கும் போது முன்னும் பின்னும் சீராகப் பதிந்து மதிப்பு எண் துல்லியமாகத் தெரியும். இந்த குறிப்புகளை கொண்டு ஒரிஜினல் கரன்சி நோட்டுகளை உறுதிப்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.source:dinamalar

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP