சமீபத்திய பதிவுகள்

பிளாக்கரில் வீடியோ செய்தி வெளியிட்டவர்களுக்கு ஜெயில்

>> Thursday, November 12, 2009


அஜர்பைசானில் கழுதையோடு பேட்டி கண்ட ருசிகரம் ;அரசுக்கு எதிராக வீடியோ பிளாக்: 2 பேருக்கு சிறை 

Top world news stories and headlines detailபாகு: ( அஜர்பைசான்) : அரசுக்கு எதிராக கழுதையுடன் பேட்டி கண்ட வீடியோ தொகுப்பை ஆன்லைன் மூலம் பிளாக்கில் ஒளிபரப்பிய 2 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒரு கபேயில் தகராறு செய்ததாக வழக்கு பதியப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். உலக அளவில் இந்த உத்தரவுக்கு கண்டனமும் எழுந்துள்ளது. கழுதையோடு பேட்டி கண்டு கேலி செய்த இந்த பிளாக்கு உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றுள்ளது.முன்னாள் சோவியத் குடியரசில் இருந்தது அல்பைஜா ஆகும் . ஈரான், ஆர்மேனியா துருக்கி . ரஷ்யா, ஜியார்ஜியா ஆகிய நாடுகள் அருகில் இருக்கிறது. இங்கு வாழும் அட்னன் ஹசி ( 26 ), எமின் மில்லி ( 30 ). இருவரும் அடிக்கடி ஆன்லைன் மூலம் பல பிளாக்குகளை உருவாக்கி வருபவர்கள். சமீபத்தில் ஒரு வீடியோ பிளாக்கு ஒன்றை தயாரித்தனர். இந்த பிளாக்கில் அரசுக்கு எதிரான பேட்டி இடம் பெற்றிருந்தது. கழுதையிடம் பேட்டி எடுத்தது தான் இந்த வீடியோ கிளிப்பிங்கின் சிறப்பம்சம்.விமானத்தில் வந்த கழுதையார் : பேட்டி காண்பதற்காக ஒரு வி.ஜ.பி., வருகிறார். அவரிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை கேட்கலாம் என ஒருவர் அறிவிப்பார். கேள்விகள் கேட்பதற்கென பத்திரிகையாளர்கள் இரு புறமாக ஆண்களும் , பெண்களும் அமர்ந்திருப்பர். அப்போது கழுதை முகம் கொண்ட ஒருவர் கோட் சூட் போட்டு நடந்து வருவார். அனைவரும் கைத்தட்டி வரவேற்பர். உடனே ஒருவர் கேள்விகளை கேட்பார். இதற்கு அந்த கழுதை பதில் சொல்லும். விமானத்தில் வந்தபோது தனது உடமைகள் திருடு போய்விட்டன என்பது முதல் மீண்டும் அஜர்பைஜானில் கழுதையா பிறக்க விரும்புகிறேன் உள்பட பல்வேறு கேள்விகள் இடம்பெற்றுள்ளன. அரசின் தரம் எந்த அளவிற்கு தரம் தாழ்ந்துள்ளது என்பதை சித்தரிக்கும் வகையில் இந்த வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது.அரசுக்கு எதிரான கேள்விகளுக்கு பதில் சொல்வது அங்குள்ள ஆளும் அரசாங்கத்தை கடுப்பேற்றியது. இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் ஒரு கபேயில் தகராறு செய்தனர். இது கலகமூட்டும் செயல் என்ற குற்றம் செய்ததாக இந்த வீடியோவை தயாரித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.வழக்கு விசாரிக்கப்பட்டு அட்னன் ஹசிக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும், எமின்மில்லிக்கு இரண்டரை ஆண்டும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவரது சிறைத்தண்டனைக்கு எதிராக மனித உரிமை கமிஷனில் புகார் செய்யப்படும் என்றும் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் இவர்களது பெற்றோர்கள் கூறியுள்ளனர்.அமெரிக்கா கண்டனம் :  அஜர்பைசானில் பிளாக்கர்கள் தண்டிக்கப்பட்டது கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக நடந்த குற்றச்சாட்டுகள், வழக்குகள், விசாரழை ஆகியவற்றில் சந்தேகம் எழுகிறது. இது அங்குள்ள சுதந்திரத்தை பறிக்கும் செயல் என அமெரிக்க அமைச்சக செய்தி தொடர்பாளர் இயன்கெல்லி கூறியுள்ளார்.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP