சமீபத்திய பதிவுகள்

பட்டப்படிப்பு படிக்க அமெரிக்கர்கள் இந்தியா வருகை

>> Thursday, November 19, 2009

இந்​தி​யா​வில் உயர் கல்வி படிக்க அமெ​ரிக்​கர்​கள் ஆர்​வம்

 


வாஷிங்​டன்,​ நவ.17:​ இந்​தி​யா​வில் உயர் கல்வி படிக்க வரும் அமெ​ரிக்​கர்​க​ளின் எண்​ணிக்கை ஆண்​டுக்கு ஆண்டு அதி​க​ரித்து வரு​கி​றது.

÷இ​தன் மூலம் இந்​தி​யா​வில் உயர் கல்வி படிக்​கும் ஆர்​வம் அமெ​ரிக்க மாண​வர்​கள் மத்​தி​யில் அதி​க​ரித்​துள்​ளது தெரி​ய​வந்​துள்​ளது.

÷ச​மீ​ப​கா​ல​மாக அமெ​ரிக்​கா​வில் நிர்​வா​கம்,​ விஞ்​ஞா​னம் உள்​பட அனைத்து துறை​க​ளி​லுமே இந்​தி​யர்​கள் தங்​க​ளது திற​மையை நிரூ​பித்து முக்​கி​யப் பங்​காற்​று​கின்​ற​னர். இது​போன்ற இந்​திய அறி​வு​ஜீ​வி​க​ளின் சாதனை அமெ​ரிக்​கர்​க​ளின் கவ​னத்தை இந்​தி​யா​வின் உயர் கல்வி நிறு​வ​னங்​க​ளின் பக்​கம் திருப்​பி​யுள்​ளது என்று சமீ​பத்​தில் நடத்​திய ஆய்வு ஒன்​றில் தெரி​ய​வந்​துள்​ளது.

÷2007-08 கல்வி ஆண்​டில் அமெ​ரிக்​கா​வில் இருந்து இந்​தி​யா​வுக்கு 3,150 மாண​வர்​கள் உயர் கல்வி பயில்​வ​தற்​காக வந்​துள்​ள​னர். இந்த எண்​ணிக்கை அதற்கு முந்​தைய கல்வி ஆண்​டைக் காட்​டி​லும் 20 சத​வீ​தம் அதி​க​மா​கும். அ​மெ​ரிக்​கா​வில் இருந்து வெளி​நா​டு​க​ளுக்கு படிக்​கச் செல்​லும் மாண​வர்​க​ளின் எண்​ணிக்​கை​யும் கணி​ச​மான வகை​யில் அதி​க​ரித்து வரு​கி​றது.

÷2007-08 கல்வி ஆண்​டில் மட்​டும் 2,62,416 அமெ​ரிக்​கர்​கள் பல்​வேறு நாடு​க​ளுக்கு படிக்​கச் சென்​றுள்​ள​னர்.​

பிரிட்​டன் முத​லி​டம்:​​ பிரிட்​ட​னுக்​குத்​தான் ஒவ்​வொரு ஆண்​டும் அதி​க​மான அமெ​ரிக்​கர்​கள் உயர் கல்வி பயி​லச் செல்​கின்​ற​னர். பிரிட்​ட​னில் உள்ள பல்​வேறு உயர் கல்வி நிறு​வ​னங்​க​ளில் 2008-09 கல்வி ஆண்​டில் மட்​டும் 33,333 அமெ​ரிக்​கர்​கள் சேர்ந்​துள்​ள​னர்.

இதை​ய​டுத்து இத்​தா​லிக்கு 30,670, ஸ்பெ​யி​னுக்கு 25,212, பிரான்​ஸýக்கு 17,336, சீனா​வுக்கு 13,165 அமெ​ரிக்​கர்​கள் உயர் கல்வி படிக்​கச் சென்​றுள்​ள​னர். உல​கில் அமெ​ரிக்​கர்​கள் அதி​கம் படிக்​கும் நாடு​க​ளின் பட்​டிய​லில் இந்​தியா 17-வது இடத்​தில் உள்​ளது குறிப்​பி​டத்​தக்​கது. வரும் கல்வி ஆண்​டில் இந்த இடத்​தில் இருந்து இந்​தியா முன்​னேற அதி​க​மான வாய்ப்​புள்​ள​தாக இந்​திய கல்வி நிபு​ணர்​கள் கணித்​துள்​ள​னர்.

source:dinamani

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP