சமீபத்திய பதிவுகள்

இந்த வார டவுண்லோட்

>> Monday, November 30, 2009

 
 

 பலரும் மவுஸ் பயன்படுத்தாமல் கீ போர்டின் மூலமே தங்கள் செயல்பாடுகளை மேற்கொள்ள எண்ணுவார்கள். இவர்களுக்கு அதிகம் உதவிடுவது ஷார்ட் கட் கீ தொகுப்புகளே. பொதுவாக இவை விண்டோஸ் மற்றும் பிற அப்ளிகேஷன் புரோகிராம்களிலேயே தரப்படுகின்றன. 


ஹாட் கீஸ் (Hotkeyz) என்னும் புரோகிராம், இந்த அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க, கண்ட்ரோல் பேனல் என்ட்ரிகளைக் கொண்டு வர, கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திட போன்ற வேலைகளுக்கான ஷார்ட் கட் கீகளை நாமே செட் செய்திட வழி தருகிறது. ஸ்கைனெர்ஜி (Skynergy)  என்ற நிறுவனம் இந்த இலவச புரோகிராமினைத் தருகிறது.http://www.skynergy.com/hotkeyz.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இதனைப் பெறலாம். இதன் மூலம் திறந்து இயங்கிக் கொண்டிருக்கின்ற விண்டோக்களை மினிமைஸ் செய்திட, ரீபூட் அல்லது ஷட் டவுண் செய்திட, ஒலியை முடக்க, மீண்டும் பெற, வெப் பிரவுசர்களை ஒரு குறிப்பிட்ட இணைய தளத்துடன் திறக்க என இது போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஷார்ட் கட் கீகளை, இந்த புரோகிராம் மூலம் அமைக்கலாம். 
ஒரு ஹாட் கீ அமைத்து அதன் மூலம் மீடியா புரோகிராம்களை இயக்கலாம், ரீசைக்கிள் பின்னிலுள்ள நீக்கப்பட்ட புரோகிராம்களை அழித்துவிடலாம். கம்ப்யூட்டரை ஹைபர்னேஷன் மூடுக்குக் கொண்டுவரலாம். இது போல பல சிஸ்டம் வேலைகளை ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கீகளில் செட் செய்துவிடலாம்.இன்டர்நெட் பயன்பாட்டில் நாம் கேட்கும் சொற்கள்
Adware: சாப்ட்வேர் பயன்பாடு ஒன்றினுள் விளம்பரம் ஒன்றினை, எடுத்துக்காட்டாக பேனர் விளம்பரச் செய்தி, இயக்கும் தொகுப்பு.
Auto Responder:  ரெடிமேடாக ஏற்படுத்தி வைத்துள்ள இமெயில் கடிதத்தினைப் பதிலாக அனுப்பும் புரோகிராம். நீங்கள் ஊருக்குப் போகிறீர்களா? இமெயில் பார்க்காமல் இருக்கப் போகிறீர்களா? நான் ஊரில் இல்லை 10 நாட்கள் கழித்துத்தான் இதற்குப் பதில் அனுப்ப முடியும் என்ற செய்தியினை கடிதமாக அனுப்பி வைத்தால் உங்கள் இமெயில் முகவரிக்கு வரும் கடிதங்களுக்குத் தானாக இதன் மூலம் பதில் அனுப்பலாம். இன்டர்நெட் சேவை தரும் நிறுவனங்களும் இமெயில் கிளையன்ட் புரோகிராம்களும் இந்த வசதியை வைத்திருக்கின்றன.
Bandwidth : ஒரு நெட்வொர்க் இணைப்பில் பரிமாறப்படும் டேட்டா எனப்படும் தகவல்கள் அளவு.Browser:  இன்டர்நெட்டில் உள்ள தகவல்களை எடுத்துத் தரும் சாப்ட்வேர் தொகுப்பு.
Buffer: தற்காலிகமாக டேட்டாவைச் சேமித்து வைக்கும் இடம்; இதனை புரோகிராம்களும் பிரிண்டர், சிடி ரைட்டர் போன்ற சாதனங்களும் பயன்படுத்தித் தங்களுக்கு வேண்டிய டேட்டாவைத் தங்க வைத்து எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளும்.
Cache:: இதுவும் தற்காலிக மெமரிதான். நீங்கள் பயன்படுத்தும் இணைய தளங்கள் சார்ந்த தகவல்களைத் தற்காலிகாமாகச் சேர்த்து வைத்துக் கொள்ளும் இடம். ஒவ்வொருமுறை நீங்கள் அதே தளத்திற்குச் செல்கையில் அல்லது ஒரே செயல்பாட்டினை மேற்கொள்கையில் இதற் கென புதியதகவல்களைப் பெற்று செயல் படாமல் தேக்கி வைக்கப்பட்டுள்ள இந்த கேஷ் மெமரியிலிருந்து பெற்று பிரவுசர் பயன்படுத்திக் கொள்ளும்.
Cookie:  வெப்சைட் உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்துக் கொள்ளும் சிறிய புரோகிராம். அந்த வெப் சைட்டைப் பொறுத்தவரை உங்கள் அணுகுமுறை மற்றும் உங்களைப் பற்றிய தகவல்கள் இதில் பதியப்படுவதால் அந்த வெப்சைட் உங்களை எளிதாக அடையாளம் கொண்டு தேவையானவற்றை எடுத்துக் கொள்ள அனுமதிக்கும். 
DNS (Domain Name System):  நாம் சொற்களில் தரும் இணைய தள முகவரியினை கம்ப்யூட்டர் புரிந்து கொள்ளும் வகையில் அதன் எண் முகவரியினைத் தரும் சிஸ்டம். ஒவ்வொரு இண்டர்நெட் சேவை நிறுவனமும் இப்படி ஒரு சிஸ்டத்துடன் தொடர்பு கொண்ட பின்பே நாம் விரும்பும் இணைய தளத்தைப் பெற்றுத் தருகிறது.
Netiquette: இணையத்தில் உலவுகையில் மற்றவர்களுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்கையில் ஆன் லைனில் தொடர்பு கொள்கையில் நாம் கடைப் பிடிக்க வேண்டிய அடிப்படைப் பண்புகளை இந்த சொல் குறிக்கிறது.
Quicktime:  ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப் பட்ட மல்ட்டி மீடியா புரோகிராம். இதன் மூலம் மல்ட்டி மீடியா (ஆடியோ மற்றும் வீடியோ) உருவாக்கவும், இயக்கிப் பார்க்கவும் எடிட் செய்திடவும் முடியும். இன்டர்நெட்டில் இந்த புரோகிராம் மட்டுமே இயக்கிப் பார்க்க முடியும் பைல்களை நீங்கள் கிளிக் செய்தால் இந்த ஆட்–ஆன் புரோகிராம் வேண்டும் என்றும் அதன் தளத்திலிருந்து இறக்கிப் பதியவா என்றும் உங்கள் பிரவுசர் கேட்கும். இந்த புரோகிராமினை ஏற்கனவே பதிந்து வைத்திருந்து அதற்குப் பின் புதியதாக அது மேம்படுத்தப்பட்டு இருந்தால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராமினை மேம்படுத்தவா என்றும் உங்கள் பிரவுசரில் செய்தி கிடைக்கும்.
Traceroute இணையத் தொடர்பில் ஒரு கம்ப்யூட்டருக்கும் இன்னொரு கம்ப்யூட்டருக்கும் உள்ள தொடர்புப் பாதையைக் கண்டுபிடிக்கும் கட்டளைச் சொல். இந்த கட்டளைச் சொல்லை எம்.எஸ். டாஸ் பிராம்ப்டில் கொடுத்து ஏதேனும் ஒரு இணைய தளத்தின் முகவரியைக் கொடுத்துப் பாருங்கள். அப்போது உங்கள் கம்ப்யூட்டர் இணைய தொடர்பில் இருக்க வேண்டும். அந்த முகவரி குறிப்பிடும் இணைய தளம் உள்ள சர்வரை எந்த வழியாக உங்கள் கம்ப்யூட்டர் சென்றடைகிறது என்ற தகவல் கிடைக்கும்.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP