சமீபத்திய பதிவுகள்

அன்றாடம் மனித உரிமைகள் மீறல்கள் உச்சம்

>> Thursday, December 10, 2009

 

mulli_makkalஇலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரே தமிழருக்கு எதிரான அடக்குமுறை ஆட்சி!. சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று டிசம்பர் வியாழக் கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.

உயிரினங்களில் மனத்தை உடையவன் மனிதன், அத்தகைய ஆறறிவுடைய சமூகப்பிராணியான மனிதனில், விரிந்த உளவியல் செயற்பாடு இல்லாமையே மனித உரிமைகள் மீறப்படுவதற்குக் காரணம். வல்ல ஓர் சாரார் பலவகையிலும் நலிந்த இன்னோர் சாராரை அடக்கி, ஒடுக்கி வருவது எந்தவிதத்திலும் ஏற்புடையதல்ல என சர்வதேச மனித உரிமைகள் சாசனமும் சட்டமும் கூறுகின்றன. மனிதன் என்ற வகையில் பால், இன, மொழி, நிற, குல, நாடு, மதம் என்ற வேறுபாடுகள் மூலம் ஒரு மனிதனை இன்னொரு மனிதனோ, இனமோ, அரசோ எந்த வகையிலும் அடக்க முடியாது.ஆனால், இலங்கையில் தமிழ்மக்கள் கடந்த 61 வருடங்களாக அடிப்படை மனித உரிமைகளைக்கூட இழந்து அடிமைகள் போன்று வாழும் நிலை இருந்து வருகின்றது. தமிழ்மக்களின் பாரம்பரிய பிரதேசமான வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அம்மக்கள் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களினால் தொடர்ந்து சிறுபான்மையாக்கப்பட்டு வருகின்றனர்.

பயங்கரவாதம் என்ற பொய்ப் பிரசாரங்களின் மூலம் தமிழ்மக்களின் உரிமைகள் அடக்கப்பட்டு வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பிற்பாடும் அவசரகாலச் சட்டம், பயங்கரவாதச் சட்டம் என்ற அடக்குமுறைச் சட்டங்களை ஸ்ரீலங்கா சிங்கள அரசு தன் இஷ்டம்போல மாதம் மாதம் நீடித்து வருவதன் நோக்கம் தமிழ்மக்களின் மனித உரிமைகளை மீறும் செயலாகும்.

பாதுகாப்பு என்ற பொய்க் கவசத்தை அணிந்துகொண்டு தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்திற்காக இன்னும் சுற்றிவளைப்புகள், தேடுதல்கள், கைதுகள், தமிழர் வீடுகளில் முகாம்கள், காவல் நிலையங்கள், சித்திரவதைகள், காணாமற் போதல் என்பன தொடர்கின்றன.பயங்கரவாத செயற்பாடுகளினாலேயே மஹிந்த, மனித உரிமைகளை மீறும் செயல்களை மேற் கொண்டார் என்று ரஷ்ய பிரதிநிதி ஐக்கிய நாடுகள் சபையில் கூறியதாக ஸ்ரீலங்கா ஊடக அமைச்சர் கூறினார்.சர்வதேச சமூகம் ஒன்றை மட்டும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இனவாதம் என்பது 1921 ஆம் ஆண்டே மலரத் தொடங்கிவிட்டது. அதனால்தான் இலங்கை தேசிய காங்கிரஸில் இருந்து சேர். பொன். அருணாசலம் தானாகவே வெளியேறினார்.

ஆனால், 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிற்பாடுதான் தமிழ்மக்கள் மீதான சிங்கள ஆட்சி யின் அப்பட்டமான மனித உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.தமிழனாகப் பிறந்த காரணத்தி னால் சொந்த வீட்டில் கூட நிம்மதியாக வாழமுடியாத சூழ்நிலை தமிழ்மக்களுக்கு இருந்து வருகின்றது. இந்த இனம் என்ன பாவம் செய்ததோ தெரியாது. தமிழனே தமிழனுக்கு எதிரியாக இன்றுள்ளான்.இத்தகைய தமிழர் ஒரு சிலரை வைத்துக்கொண்டு இந்திய அரசையும், சர்வதேச சமூகத்தையும் பேய்க்காட்டி வருகின்றது அப்பட்டமான மனித உரிமை களை மீறும் ஸ்ரீலங்கா அரசு.தமிழ்மக்களின் மனித உரிமைகள் பயங்கரவாதம் என்ற போர்வையில் மறுக்கப்பட்டு அம்மக்கள் மீது அடக்கி ஒடுக்கப்படும் அரச பயங்கரவாதமே அரசு சார்பு தமிழ் ஆயுதக் குழுக்களின் உதவியுடன் நடைபெற்று வருகின்றது.
தமிழ்மக்களின் மனித உரிமைகளை ஜனநாயக வழிகளில் கேட்டபொழுதெல்லாம் ஏமாற்றி வந்த சிங்கள அரசு, பின் அஹிம்சை வழிப் போராட்டங்களையும், சிங்கள கூலிப்படைகளைக்கொண்டு அடக்கியது. வேறு வழிகளின்றியே தமிழ்மக்கள் மனித உரிமைக ளுக்காக ஆயுதத்தை நாடினார்கள்.
ஆனால், ஸ்ரீலங்கா பேரினவாத அரசு தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சில வயிற்றுப் பிழைப்புக்காக அரசியல் நடத்துபவர்களை வைத்துக்கொண்டு சர்வதேச சமூகத்தையும், சர்வதேச ஸ்தாபனங்களையும் ஏமாற்றி வருகிறது சிங்கள பேரினவாத அரசு.

எவ்விதமான தேர்தல்களும் தேவையில்லை. தமிழ்மக்களால் தெரிவுசெய்யப்பட்ட 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். அவர்களை நேரடியாக அழைத்து தமிழ்மக்களின் மனித உரிமைப் பிரச்சினைகளை ஒரு மாதகால தவணைக்குள் தீர்வுகாண முடியும்.
குறைந்த பட்சத் தீர்வான வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்கி தமிழ்பேசும் தமிழ், இஸ்லாமிய மக்கள் சம உரிமையுடன் வாழக் காட்டியதாக செய்யமுடியும். அதைவிடுத்து தமிழ்பேசும் மக்களை பல கூறுகளாகப் பிரித்து செயற்படுவது சர்வதேச மனித உரிமைகளை மீறும் செயற்பாடுகளாகும்.தமிழ்மக்களின் மனித உரிமைகள் என்று அவர்கள் புதிதாக ஒன்றும் கேட்கவில்லை. தாங்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த சரித்திர, ஆன்மீக, புவியியல் ரீதியிலான தொடர்புள்ள வடக்கு, கிழக்கு மாநிலத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் 1833 ஆம் ஆண் டில் இருந்த "மதசார்பற்ற சோஷலிச தமிழீழம்' என்ற நாட்டைத்தான் கேட்கின்றனர். இது அவர்களின் மனித உரிமை.

சிங்கள மக்களை வைத்தே ஆட்சி நடத்த முடியாமல் திண்டாடும் சிங்கள ஏகாதிபத்திய முதலாளித்துவ கனவான்கள், தமிழ்மக்களையும், அவர்களின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களையும் ஆக்கிரமித்து ஆட்சி நடத்தி கண்ட பலன் அப்பாவித் தமிழ்மக்களை பல வகைகளிலும் சர்வதேச மனித உரிமைகளை மீறிக்கொன்று குவித்ததுதான். இதை சர்வதேச மனித உரிமைகள் ஸ்தாபனமும், ஐ.நா. சபையும் நன்கு அறியவேண்டும்.தமிழ்மக்களை அவர்களுடைய சொந்த மண்ணில் அவர்கள் விரும்பியபடி வாழவிடுங்கள். ஏனைய ஏழு மாகாணங்களிலும் சிங்கள மக்கள் சந்தோஷமாக வாழட் டும் இதுதான் மனித உரிமை.இந்திய அரசு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசு, அது எப் பொழுதும் தன் சொந்த நலனுக்காகவே ஸ்ரீலங்கா சிங்கள பேரினவாத அரசின் தமிழ்மக்கள் மீதான மனித உரிமைகள் மீறல்களை மூடி மறைத்து சர்வதேச நாடுகளை தலையிடாமல் செய்துவருகின்றது.இதேபோல சீனா, வியட்நாம், கியூபா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு ஈழத் தமிழ்மக்களின் 61 வருடகால இனப்பிரச்சினை பற்றிய விளக்கம் போதாமல் இருக்கலாம். இல்லையேல், அவர்களுக்குத் தவறான தமிழ்மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் வழங்கப்பட்டிருக்கலாம்.சரியான சர்வதேச சோஷலிச ஸ்தாபனங்கள் ஈழத் தமிழ்மக்களின் மனித உரிமைக்கான விடு தலைப் போராட்டங்களின் வரலாற்றை விளக்கவேண்டியது தலையாய கடமையாகும்.நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும். அப்பொழுதுதான் உண்மையான ஸ்ரீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் தெரியவரும்.
நாளாந்தம் விலைவாசி உயர்வால் மக்கள் திண்டாடும்பொழுது அரசு பாதுகாப்பு செலவீனங்களுக்கென்று இருநூறு கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. இவை தமிழ்மக்களின் மனித உரிமைகளைத் தொடர்ந்தும் அடக்குவதற்கேயாகும்.
பொதுநலவாய மாநாட்டை 2007 ஆம் ஆண்டில் இலங்கையில் நடத்த அரசு எடுத்த நடவடிக்கையைக் கூட மனித உரிமைகளை ஸ்ரீலங்கா அரசு மறுத்து வருவதினால், பொது நலவாய நாடுகள் அதை இலங்கையில் நடத்த விரும்பவில்லை.

2011 ஆம் ஆண்டு நடத்த இருக்கும் இம் மாநாடு கூட அவுஸ்திரேலியாவில் தான் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதில் இருந்து ஸ்ரீலங்காவில் மனித உரிமைகள் மீறப்பட்டுவருவது தெரிகின்றது.

கடந்த 30 வருடகால ஈழத் தமிழ் மக்களின் மனித உரிமைகள் மீறல் களுக்கான யுத்தத்தில் அப்பாவித் தமிழ்மக்கள் இரண்டு லட்சம் பேர்கள் வரை ஸ்ரீலங்கா சிங்கள அரசு கொன்று குவித்துள்ளதை இந்திய அரசு சர்வதேசத்துக்கு மூடிமறைத்து வருகின்றது.

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஆட்சிப்பீடம் ஏறிய எந்த அரசும் அதன் தலைமைகளும் விரிந்த உளவியல் செயற்பாடுகளுடன் நடந்திருந்தால் என்றோ தமிழ்மக்களின் மனித உரிமைகளை வழங்கியிருக்க முடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுதான், இதுவரை கட்டுப்பாட்டுடன் தமிழ்பேசும் மக்களின் மனித உரிமைகளுக்காக நேர்மையான முறையில் செயற்பட்டு வருகின்றது.அந்தக் கூட்டமைப்பைக்கூட ஆட்சியாளர்கள் பல வகைகளிலும் உடைப்பதற்குச் சூழ்ச்சிகள் செய்து வருகின்றனர்.அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல். எவ்., ரெலோ ஆகிய நான்கு கட்சிகளும் தமிழ் பேசும் மக்களின் இனப்பிரச்சினைக் கான ஒரு சரியான தீர்வு கிடைக்கும் வரைக்கும் ஒன்றுபட்டு செயற்பட்டு வருவது கண்கூடு.உண்மை என்றும் அழியாது. அது என்றோ ஓர்நாள் வெற்றிபெறும். சத்தியம்தான் தர்மநீதி, அரசியலில் அறம் பிழைத்தால் அறமே கூற்றுவனாக வந்து ஆட்சி நடத்துவோரைக் கொல்லும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. இது உலக வரலாறு.தமிழ்மக்களுக்கு மனித உரிமைப் பிரச்சினைகள் உள்ளன. அதை நீண்டகாலத்திற்குப் பயங்கரவாதம் என்று பொய் கூறி மக்களை, சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முடியாது.காலம் ஒருநாள் மாறும். பொய்கள் ஒருநாள் அம்பலமாகும். அடக்கி ஒடுக்கப்பட்டுவரும் மக்களின் மனித உரிமைகள் சர்வதேச ரீதியில் மலரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை நிரூபிக்கும்.ஆறறிவு கொண்ட மனிதனுக்கு விரிந்த உளவியல் செயற்பாடு இல்லாமையே மனித உரிமைகள் மீறக் காரணம். அது இருந்தால் சகல உயிர்களும் உலகும் இன் புற்று வாழும்.

மார்க் அன்ரனிsource:tamilspy

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP