சமீபத்திய பதிவுகள்

வேர்ட் டேபிளில் பார்முலாக்கள்

>> Wednesday, December 16, 2009

 
 

 வேர்ட் தொகுப்பில் நாம் டேட்டாவினை பார்முலாக்கள் மூலம் இயக்கி, நமக்குத் தேவையான முடிவுகளைக் காணலாம். இந்த வேலை எக்ஸெல் தொகுப்பில் மட்டுமே உள்ளது என எண்ண வேண்டாம். வேர்டில் டேபிள் அமைத்து, அதில் தரப்படும் டேட்டாவினை எப்படி பார்முலாக்கள் மூலம் கையாளலாம் என்று இங்கு பார்க்கலாம்.


பார்முலாக்கள் டேபிள் ஒன்றின் செல்களில் அமைக்கப்படும் எண்களைக் கணக்கிடுவதற்காக அதற்கான குறியீடுகளை அமைத்து அமைக்கப்படுகின்றன. எக்ஸெல் தொகுப்பில் இந்த பார்முலாக்கள் செல்களைக் குறியிட்டு செல்களின் மீதாகவே அமைக்கப்படுகின்றன. வேர்ட் டேபிளில் கணக்கிட்டு பெற வேண்டிய செல்களில் கர்சரை அமைத்துப் பின் அதற்கான மெனுவிலிருந்து பார்முலா பிரிவைக் கிளிக் செய்து தனியே உருவாக்கப்படுகின்றன. வேர்ட் அந்த பார்முலாக்கள் அடிப்படையில் கணக்கிட்டு கர்சர் வைக்கப்பட்டுள்ள செல்களில் கணக்கீட்டின் முடிவைத் தருகிறது. 
வழக்கம்போல வேர்டிலும் பார்முலாக்களில் கூட்டல் (+) கழித்தல்(–) பெருக்கல்(*) வகுத்தல் (/) எக்ஸ்போனென்ஷியல் (^) அடையாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுடன் பயன்படுத்தக் கூடிய முக்கியமான பங்ஷன்கள் சில உண்டு. அவை 


AVERAGE() கொடுக்கப்பட்ட எண்களின் சராசரியைக் கணக்கிட்டு தரும்.MIN() எண்களின் குறைந்த மதிப்புடைய எண்ணைத் தரும் SUM() எண்களின் கூட்டுத் தொகையத் தரும். MAX() கொடுக்கப்பட்ட எண்களின் உயர்ந்த மதிப்புடைய எண்ணைத் தரும். PRODUCT()கொடுக்கப்பட்ட எண்கள் அனைத்தையும் பெருக்கி மதிப்பைத் தரும். 
டேபிள் செல்களைக் குறிப்பிடுகையில் அதற்கு லேபிள்களை டேபிளில் தர வேண்டியதில்லை. மேல் முதல் செல் Al  என அழைக்கப்படும். அதே படுக்கை வரிசையில் அடுத்த செல் Bl என அழைக்கப்படும். இப்படியே அடுத்தடுத்த செல்களைக் குறிப்பிடலாம். நெட்டுவாக்கில் அடூ க்கு அடுத்தபடியாக கீழிருக்கும் செல் அ2 என அழைக்கப்படும். பார்முலாக்களில் செல்களைக் குறிப்பிடுகையில் தனித்தனி செல்களைச் சுட்டிக் காட்டுகையில் அவற்றை கமா (,) இட்டு பிரித்துக் காட்ட வேண்டும். வரிசையாகப் பல செல்களைக் குறிப்பிடுகையில் அவற்றிற்கு இடையே கோலன் (:) பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக Al, A3, A5 எனக் குறிப்பிடுகையில் மூன்று தனித்தனி செல்கள் இங்கு காட்டப்படுகின்றன. Al:A5 எனக் குறிப்பிடுகையில் Al  முதல் A5 வரையிலான செல்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. Al முதல் A5  வரையிலான செல்களில் உள்ள எண்களின் சராசரியைக் கணக்கிட =average (Al:A5) எனத் தர வேண்டும். 
கீழ்க்கண்டவாறும் செல்களை மொத்தமாகக் குறிப்பிடலாம். LEFT என்பது கர்சர் இருக்கும் செல்லின் இடது பக்கம் உள்ள அனைத்து செல்களையும் குறிப்பிடும். இதே போல RIGHT, ABOVE, BELOWபோன்ற குறியீடுகளையும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக ஒரு செல்லின் மேலே உள்ள அனைத்துசெல்களின் கூட்டுத் தொகை வேண்டும் என்றால் SUM(ABOVE)  எனத் தர வேண்டும். இதே போல இடது பக்கம் உள்ள செல்களின் எண்களின் சராசரி வேண்டும் என்றால் = AVERAGE(LEFT) எனத் தர வேண்டும். 
டேபிள் ஒன்றில் கணக்கு ஒன்றை அமைத்திட கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும். 1. எந்த செல்லில் கணக்கின் மதிப்பு எழுதப்பட வேண்டுமோ அந்த செல்லில் கர்சரை நிறுத்தவும். 2. பின் Table  மெனுவைக் கிளிக் செய்து "Formula" என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Formula"  டயலாக் பாக்ஸ் கிடைக்கும். 3. இதில் Paste பங்ஷன் பாக்ஸில் எவ்வகையில் கணக்கிட விரும்புகிறோமோ அதற்கேற்ற பிரிவைக் கிளிக் செய்திடவும். எடுத்துக்காட்டாக எண்களைக் கூட்ட வேண்டும் என்றால் SUM என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். 4. இனி அதில் தரப்பட்டுள்ள அடைப்புக் குறிகளுக்குள் எந்த செல்களில் உள்ள எண்களைக் கணக்கிட வேண்டுமோ அவற்றைக் குறிக்கவும். எடுத்துக்காட்டாக (al, b4) எனக் குறிக்கலாம். இப்போது பார்முலா = SUM (al, b4)  என உருவாகி இருக்கும். இனி என்டர் தட்டினால் விடை கர்சர் இருந்த செல்லில் கிடைக்கும். இதே போல மற்ற வகைக் கணக்கீடுகளையும் டேபிளில் மேற்கொள்ளலாம்.டிப்ஸ்... டிப்ஸ்....


என் வசம் வருமா வேர்ட் தொகுப்பு?


வேர்ட் செயல்படும் விதம் உங்களுக்குப் பிடிக்கவில்லையா? அதன் ஸ்பெல்லிங், ஆட்டோ கரெக்ட், தோற்றம் என ஒரு சில விஷயங்கள் சிலருக்கு, சில காரணங்களால் தேவைப்படாமல் இருக்கலாம். எப்படி இந்த தொகுப்பை நம் வசப்படுத்துவது என சிந்திக்கிறீர்களா? உங்கள் விருப்பப்படி வேர்ட் தொகுப்பை வளைக்க அதனை செட் செய்திடலாம். பலவகையான செட்டிங்குகள் Tools  மெனுவில் தான் உள்ளன. Options கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் பல டேப்கள் தரப்பட்டு ஒவ்வொன்றும் ஒருவகை யான செயல்பாட்டிற்கென இருக்கும். நீங்கள் மாற்ற விரும்பும் செயல்பாடு எந்த டேபில் இருக்கிறது என்பதனைத் தேடி அறிந்து அதனை மாற்றலாம். பெரும்பாலும் அந்த செயல்பாடுகள் குறித்த சொல் தொடரும் அதன் எதிரே சிறு கட்டமும் இருக்கும். கட்டத்தில் டிக் அடை யாளத்தை ஏற்படுத்தினால் அந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும். எடுத்துவிட்டால் அந்த செயல் நடைபெறாது. Customize என்னும் கட்டளை வேர்டின் மெனுக்களையும் டூல் பார்களையும் மாற்றி அமைக்க உதவும்.Viewமெனு வேர்ட் எப்படி தோற்றமளிக்க வேண்டும் என்பதனை முடிவு செய்திடும்.கிளிப் போர்டு எங்குள்ளது? 
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் நீங்கள் எந்த டெக்ஸ்ட், படம், கிராபிக்ஸ் என எதனை காப்பி அல்லது கட் செய்தாலும் அது கிளிப் போர்டு வியூவரில் தான் சென்று அமரும். எனவே எந்த ஒரு நிலையிலும் நீங்கள் இறுதியாகக் காப்பி செய்தது என்ன என்று தெரிந்து கொள்ள கிளிப் போர்டு வியூவரைக் காணலாம். இதனை எங்கிருந்து பெறுவது? எந்த தொகுப்பிலும் டெக்ஸ்ட் ஒன்றை தேர்ந்தெடுத்து கண்ட்ரோல் + சி அழுத்துகிறீர்கள் அல்லவா? அப்போது இருமுறை சிஅழுத்துங்கள். உடனே கிளிப் போர்டு விரிவடையும். அதில் என்ன டெக்ஸ்ட் உள்ளது என்று தெரிய வரும்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP