சமீபத்திய பதிவுகள்

வன்னியில் பெரும் மனிதாபிமான நெருக்கடி - சர்வதேச செஞ்சி்லுவைக்குழு

>> Tuesday, January 27, 2009

  
சர்வதேச செஞ்சிலுவைக்குழு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இலங்கையின் வடபகுதியில் தொடரும் மோதல்களில் இரண்டரை லட்சம் மக்கள் சிக்கியுள்ளதாகவும், அங்கு பெரும் மனிதாபிமான நெருக்கடி ஒன்று உருவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

 
விடுதலைப் புலிகளின் இறுதிப் பிரதேசமாகிய ஒரு சிறிய நிலப்பரப்பு மீது இராணுவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை காரணமாக நூற்றுக்கணக்கில் இறந்தவர்களினாலும், பெரும் எண்ணிக்கையில் காயமடைந்தவர்களினாலும் வன்னிப்பிரதேசத்தி்ன் வைத்திய நிலையங்கள் யாவும் நிறைந்து வழிகின்றன என்றும் சர்வதேச செஞ்சிலுவைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.

 
சர்வதேச செஞ்சிலுவைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விபரம் வருமாறு:- இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே வன்னியில் மூண்டுள்ள கடும் சண்டைகளையடுத்து, நூற்றுக்கணக்கானவர்கள் இறந்துள்ளார்கள். வசதிகள் குறைந்த, ஆளணி பற்றாக்குறையுள்ள வைத்திய நிலையங்கள் பெரும் எண்ணிக்கையில் காயமடைந்தவர்களினால் நிறைந்து வழிகின்றன.

 
மக்கள் மோதல்களில் சிக்கியிருக்கின்றார்கள். வைத்தியசாலைகளும், அம்புலன்ஸ் வண்டிகளும் எறிகணை தாக்குதல்களுக்கு இலக்காகியிருக்கின்றன. காயமடைந்த சிவிலியன்களை மீட்க முயன்ற உதவிப் பணியாளர்கள் பலரும் காயமடைந்திருக்கின்றார்கள்.சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினரின் பணிகள், அங்கு நிலவுகின்ற வன்முறைச் சூழலினால் தடைபட்டிருக்கின்றன என ஜெனீவாவில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் ஆசிய பிராந்திய நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக உள்ள ஜேக் மே டயோ தெரிவித்துள்ளார்.

 
பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ள பொதுமக்களுக்கு பாதுகாப்பு, வைத்திய கவனிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தேவையாக உள்ளது. பெரும் மோதல்கள் இடம்பெறுகின்ற 250 சதுர கிலோ மீற்றர் பரப்பளவான இடத்தில் இரண்டரை லட்சம் பேர் சிக்கியிருக்கின்றார்கள். அவர்களுக்கு ஒதுங்கியிருப்பதற்குப் பாதுகாப்பான இடமில்லை. அங்கிருந்து தப்பியோடவும் முடியாதவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள்.

 
எல்லா சந்தர்ப்பங்களிலும் சர்வதேச மனிதாபிமான சட்டம் மதிக்கப்பட்டு சிவிலியன்கள் பாதுகாக்கப்படாவிட்டால், எல்லாம் ஓயும்போது எண்ணற்றவர்கள் பாதிக்கப்பட்டு, மோசமான ஒரு மனிதாபிமான நிலைமை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. நேரம் ஓடிக்கொண்டிருக்கின்றது. மேலும் இரத்தம் சிந்துவதைத் தடுத்து நிறுத்துவதற்காக உறுதியான முடிவெடுக்க வேண்டிய நேரமாக இருக்கின்றது என்றும் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் ஆசிய பிராந்திய நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக உள்ள ஜேக் மே டயோ தெரிவித்துள்ளார்.

 
மோதல் பிரதேசத்தில் இருந்து பொதுமக்கள் சுயமாக வெளியேறுவதற்கு அனுமதிப்பதுடன் அதற்கான வசதிகளையும் செய்ய வேண்டும் என மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்பினரையும் சர்வதேச செஞ்சிலுவைக்குழு கேட்டுக்கொள்கின்றது. முடிந்த அளவு காலத்தி்ற்கு சர்வதேச செஞ்சிலுவைக்குழு வன்னியில் இருப்பதற்குத் தீர்மானித்துள்ளது. ஆனால், அதனுடைய பிரசன்னத்தையும், அதன் பணிகளையும் இரு தரப்பினரும் மதித்துச் செயற்பட வேண்டும்.

 
வன்னிப்பிரதேசத்தினுள் மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்பட வேண்டும். சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் கூறுகின்றபடி, மனிதாபிமான பணியாளர்களும், அவர்களது இடங்களும் எறிகணை வீச்சுக்கள், கொள்ளைகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். சண்டைகளிலும் மோதல்களிலும் நேரடியாகப் பங்கு கொள்ளாதவர்களின் உயிர்கள் பாதுகாக்க வேண்டும் என இரு தரப்பினரும் வலியுறுத்தப்படுகின்றார்கள்.

 
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா வைத்தியசாலைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் அவசர மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட வேண்டியிருக்கின்றது. நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைக்குழு வன்னியில் உள்ள புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்குத் தனது உதவிகளை வழங்கி வருகின்றது.

 
அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இருதரப்பினருடைய உடன்பாட்டுடன் கடந்த நான்கு மாதங்களாக வன்னியில் நிரந்தரமாக இருந்து செயற்பட்டு வருகின்ற ஒரேயொரு நிறுவனமாகிய சர்வதேச செஞ்சிலுவைக்குழுவானது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினருடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது.
 

StumbleUpon.com Read more...

BREAKING NEWS

StumbleUpon.com Read more...

makkal news



BREAKING NEWS UN 27.01.09 DEEPAM TV

StumbleUpon.com Read more...

இலங்கையில் பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்படுவதைக் கண்டித்து சென்னை பத்திரிகையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

 
 
இலங்கையில் பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்படுவதைக் கண்டித்து சென்னை பத்திரிகையாளர்கள் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதுகுறித்து பத்திரிகையாளர்கள் அமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள செய்தியில்,

 
இலங்கை உள்நாட்டுப் போரில் அப்பாவி மக்களும், குழந்தைகளும் கொல்லப்படுவதைக் கண்டித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் சுதந்திரமாக விமர்சனம் செய்த பத்திரிகையாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பகிரங்கமாக நடந்து வரும் இந்தப் படுகொலைகள் பற்றி இலங்கை அரசாங்கம் எந்த விசாரணையையும் செய்ய மறுத்து வருகிறது. இலங்கையில் பத்திரிகையாளர்கள் திடீரென கடத்தப்படுவதும், சட்ட விரோதமாக கைது செய்யப்படுவதும், ஊடக அலுவலகங்கள் தாக்கப்படுவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

தமிழர், சிங்களவர் என்ற வித்தியாசம் இல்லாமல் போரை எதிர்க்கும், அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களின் வாழ்க்கையே அங்கு கேள்விக்குறியாகி வருகிறது.

கருத்துச் சுதந்திரத்தை நசுக்கி, பத்திரிகையாளர்களை அச்சுறுத்தி நடக்கும் ஆட்சிக்கு எதிராக, சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

 

 

StumbleUpon.com Read more...

5,000-தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய டாடா முடிவு?

 
 
lankasri.comடாடா நிறுவனம் 5000-தொழிலாளர்களை பணியில் இருந்து தாற்காலிகமாக நீக்கிவைக்க முடிவெடுத்துள்ளதாக,தெரியவந்துள்ளது. இந்த தாற்காலிக பணிநீக்கம் டாடாவின் இந்திய நிறுவனங்களில் இல்லை.

பிரிட்டன் நிறுவனங்களில் ஆகும்.பிரிட்டனில் இயங்கும் கோரஸ் எஃகு உற்பத்தி நிறுவனம் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து தொழிலாளர்களை நீக்க முடிவெடித்துள்ளது.

அந்தவிதத்தில்,கோரஸ் நிறுவனத்தில் இருந்து 3,500-பேரும்,ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தில் இருந்து 1,500-பேரும் நீக்கப்படவுள்ளதாக,இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியால்...:சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்குள் டாடா நிறுவனங்களும் சிக்கித் தவிக்கின்றன.இதனால் பிற நிறுவனங்களைப் போல் ஆள் குறைப்பு செய்து நிலைமையை சமாளிக்கும் முயற்சியில் அந்நிறுவனமும் ஈடுபட்டுள்ளது.

கோரஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ஆள் குறைப்பு நடவடிக்கை குறித்து அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இதுவரை எவ்விதத் தகவலும் தெரிவிக்கவில்லை.ஆனால்,இதுகுறித்து அறிந்துள்ள தொழிலாளர்கள் தங்கள் வேலை பறிபோகப் போவதை நினைத்து கலக்கம் அடைந்துள்ளனர்.

அந்நாட்டின் தயாரிப்பு பிரிவில் இந்த அளவுக்கு பெரிய அளவில் ஆள் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறை.பத்திரிகை கூறியுள்ளதுபோல் டாடா நிறுவனம் ஆள் குறைப்பு செய்தால் அது நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நெதர்லாந்து அரசும் கருதுகிறது.

இதனால் டாடா நிறுவனத்துக்கு தேவையான உதவிகளை அளித்து ஆள் குறைப்பை தடுத்து நிறுத்துவது குறித்தும் அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.அந்நாட்டின் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் டாடா நிறுவன நடவடிக்கையை தடுத்தும் நிறுத்தும் வகையில் அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே,டாடா நிறுவனத்தின் ஆள் குறைப்பு நடவடிக்கையை தடுத்தும் நிறுத்தும் திட்டத்தை நெதர்லாந்து அரசு திடீரென கைவிட்டுள்ளதாகவும்,இதனால் 5000-தொழிலாளர்களை அந்நிறுவனம் வீட்டுக்கு அனுப்புவது உறுதி என மற்றொரு தகவல் தெரிவிப்பதாகவும் அந்த பத்திரிகை கூறியுள்ளது.

மேலும்,கோரஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனங்களில் ஆட்களை குறைத்து நிர்வாகச் சீர்திருத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது டாடா நிறுவனத்தின் நீண்டநாள் திட்டம்.இதைச் செயல்படுத்துவதில் தாமதித்து வந்தது.தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்படவும் அதை தனது திட்டத்துக்கு சாதகமாக்கிக் கொண்டது டாடா நிறுவனம் என்றும் சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1232965194&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

அரசியல் கட்சி தலைவர் கொலை;பாகிஸ்தானில் பயங்கர கலவரம்

 
 
lankasri.comபாகிஸ்தானில் ஹசாரா ஜனநாயக கட்சி தலைவராக இருந்தவர் உசேன் அலியூசப்.ஷியா முஸ்லிம் பிரிவு தலைவராகவும் இருந்தார்.இவர் குவட்டா நகரில் காரில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதன் சுட்டுக் கொலை செய்தான்.அவன் சன்னி முஸ்லிம் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவன் என்று கருதப்படுகிறது.

இதனால் குவட்டா நகரில் பயங்கர கலவரம் வெடித்தது.அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து வன்முறையில் ஈடுபட்டனர்.கடைகளுக்கும்,ஏராளமான வாகனங்களுக்கும் தீவைத்தனர். பாங்கி ஒன்றுக்கும் தீவைக்கப்பட்டது.

கலவரத்தை ஒடுக்க போலீசார் முயன்றனர்.அவர்கள் மீது கல்வீசி தாக்கினார்கள்.இதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.இதில் 12-பேர் காயம் அடைந்தனர்.இதே போல கவாத் நகரில் ஏற்பட்ட கலவரத்தில் 7-பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே வடக்கு வர்கிஸ்தான் பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் கிராம மக்கள் 2-பேரை சுட்டு கொன்றனர்.அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக கூறி இருவரையும் கொன்றுள்ளனர்.

 

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1233052035&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

இந்தோனேஷியாவில் யோகாவுக்கு எதிராக ஃபட்வா

 
 
lankasri.comஇந்தோனேஷியாவில் முஸ்லிம்கள் யோகா பயிற்சி மேற்கொள்வதற்கு உயர்நிலை மத அமைப்பு ஒன்று தடை விதித்துள்ளது. இந்தோனேஷிசியாவில் முஸ்லிம்கள் பலர் யோகா பயிற்சி செய்து வருகின்றனர். இது தொடர்பாக அந்நாட்டின் மூத்த மதகுருமார்கள் அடங்கிய உலேமாக்கள் குழு விவாதித்தது.

அதன்படி,யோகா என்பது ஹிந்து மதச் சடங்குகளை உள்ளடக்கியது எனவும்,அது இஸ்லாம் மதத்தில் தடை செய்யப்பட்டுள்ளது எனவும் முடிவுக்கு வந்தது.இதையடுத்து முஸ்லிம்கள் யோகா பயிற்சி செய்வதற்கு ஃபட்வா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும்,ஒரு உடற்பயிற்சியாக யோகா பயற்சி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.உலகிலேயே அதிக முஸ்லிம்களைக் கொண்ட நாடு இந்தியா என்பது குறிப்பிடத் தக்கது.

 

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1233070829&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

இலங்கைக்கு தமிழகம் வழியாக இந்திய இராணுவ பீரங்கி அனுப்பப்பட்டதா?: அதிர்ச்சித் தகவல்

இலங்கைக்கு தமிழகம் வழியாக இந்திய இராணுவ பீரங்கி அனுப்பப்பட்டதா?: அதிர்ச்சித் தகவல்
 
 
இலங்கை தமிழர்கள் பிரச்சனை குறித்து பேசுவதற்காக இந்திய வெளியுறுவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி திடீரென இன்று செவ்வாய்கிழமை இலங்கை சென்றுள்ளார். இந்நிலையில் இலங்கை இராணுவத்திற்கு தமிழகம் வழியாக கொச்சி துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் இந்தியா இராணுவ தளபாடங்களை அனுப்பியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
இலங்கையில் தமிழர்கள் பகுதியில் சிங்கள இராணுவம் கண்மூடித்தனமாக எறிகணை, மற்றும் வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.  திங்கட்கிழமை முல்லைத்தீவில் சிங்கள இராணுவம் நடத்திய சரமாரியான குண்டு வீச்சுத் தாக்குதலில் பெண்கள், கைக்குழந்தைகள், சிறுவர், சிறுமியர் உள்பட 300 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 1000 ற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் இலங்கை அரசுக்கு உதவுவதற்காக, மத்திய அரசு தற்போது நவீன ரக பீரங்கிகளையும், இராணுவ தளபாடங்களையும் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் இருந்து ரெயில் மூலம் தமிழகம் வழியாக கொச்சி கொண்டு செல்லப்பட்ட இந்த இராணுவ தளபாடங்கள் அங்கிருந்து திங்கட்கிழமை கப்பல் மூலம் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீரங்கியை ஏற்றிச் சென்ற ரெயிலை ஈரோட்டில் பார்த்த பொதுமக்கள் கூறியதாவது, ரெயில் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தபோது, பீரங்கி வண்டி நின்றது. விசாரித்ததில் இந்த பீரங்கி இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலார் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர், இராணுவத் தடபாளங்களும், பீரங்கிகளும் ஈரோட்டில் இருந்து கொச்சி வழியாக இலங்கைக்கு அனுப்பப்படுவதாக கூறியதோடு, செய்தித்தாள்களில் வந்த புகைப்படங்களையும் காண்பித்தனர்.

இதுகுறித்து மத்திய அரசு இதுவரை எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. இந்திய அரசின் இச்செயலை பல்வேறு தமிழ் அமைப்புகளும் கண்டித்துள்ளதோடு, இதுகுறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும் இராணுவ தளபாடங்களை அனுப்பியதை கண்டித்து போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளன.

 

 

StumbleUpon.com Read more...

வன்னி தமிழர்கள் நிலை குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை- இடம்பெயர்ந்த மக்களுக்கு 6.9 மில்லியன் டொலர் உணவு உதவி

 
 
வடபகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு 6.9 மில்லியன் டொலர்கள் பெறுமதியான உணவுப் பொருட்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.
வெல்லம்பிட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறிலங்காவுக்கான அமெரிக்கா தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் இதனை உலக உணவுத்திட்டத்தின் ஊடாக வழங்கினார்.
இந்நிகழ்வில் அவர் பேசியதாவது:
 
அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பான பிரதேசங்களை மோதல்கள் அண்மித்து வருவதனால் வன்னியில் வாழும் 2 லட்சத்து 30 ஆயிரம் மக்களின் நிலை தொடர்பாக நாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.
இரு தரப்பும் பொதுமக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் செறிவாக வாழும் பகுதிகளுக்கு அண்மையில் கனரக ஆயுதங்களை பாவிப்பதை விடுதலைப் புலிகள் தவிர்க்க வேண்டும்.
அரசும் பதில் தாக்குதல்களை பொதுமக்கள் செறிவாக வாழும் பகுதிகள் மீது நிகழ்த்துவதை தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.
அமெரிக்க அரசின் இந்த உதவி பொருட்களில் 1,344 தொன் பருப்பு, 779 தொன் மரக்கறி எண்ணை, 4,270 தொன் கோதுமை ஆகியன அடங்கியுள்ளதாக அமெரிக்கா தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

StumbleUpon.com Read more...

மீண்டும் "செம்மணி" புதைகுழிகள்?: வெளியேறிய 100-க்கும் அதிகமான இளைஞர்கள்- பெண்களை கொன்று புதைத்தது சிறிலங்கா!

 
 
சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான எறிகணை மற்றும் வான் தாக்குதல் காரணமாக வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு சென்று மகிந்த அரசாங்கம் அமைத்த நலன்புரி நிலையங்களில் அடைக்கலம் புகுந்த பொதுமக்களில் இளைஞர்களும் பெண்களும் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் பற்றைக்காடுகளிலும் மயானங்களிலும் புதைக்கப்படுவதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.
பெண்கள் பலர் விசாரணைக்காக இரகசிய முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும் அவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் பலர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அனுராதபுரம், பொலநறுவையில் உள்ள மயானங்கள், காட்டுப் பிரதேசங்கள் மற்றும் வவுனியாவில் உள்ள மக்கள் நடமாட்டமற்ற பற்றை பகுதிகள் போன்ற இடங்களிலேயே கொல்லப்படும் இளைஞர்களின் உடலங்கள் புதைக்கப்பட்டுவதாகவும் பெண்களின் உடலங்கள் எரிக்கப்படுகின்றது என்றும் நேரில் கண்ட சிங்கள தொழிலாளர்கள் அனுராதபுரத்தில் உள்ள பிரதேச ஊடகவியலாளர்கள் சிலரிடம் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களில் மட்டும் 25 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும்
27 பெண்கள் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளனர் என்றும் அனுராதபுரம் பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.
காணாமல் போன அல்லது விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமது உறவுகள் குறித்து வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் கூட முறையிட முடியாது உள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.
அப்படி இருந்தும் சில முறைப்பாடுகள் வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் ஆணைக்குழு அதிகாரிகளுடன் ஊடகவியலாளர்கள் சிலர் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் கருத்துக்கூற மறுப்பு தெரிவித்துள்ளனர். 
வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் உள்ள மக்கள் வவுனியா நகருக்கு வெளியே செல்ல முடியாதவாறு படையினர் தடை விதித்துள்ளதாக வவுனியா தகவல்கள் கூறுகின்றன.
வவுனியாவில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் நலன்புரி நிலையங்களுக்கு சென்று அவர்களை பார்வையிட முடியாது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்ட பின்னர் 600-க்கும் அதிகமான இளைஞர்கள், பெண்கள் சிறிலங்கா படையினரால் கொல்லப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு ஒன்று சிறிலங்காவின் உயர் நீதிமன்றத்தில் பதியப்பட்டுள்ளது. தற்போது அந்த வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தற்போதைய சிறிலங்கா படைத் தளபதி சரத் பொன்சேகா அப்போது யாழ். மாட்ட கட்டளை அதிகாரியாக கடமையாற்றி இருந்தார் என்பதே அதற்கு காரணமாகும்.
யாழ். சுண்டிக்குழி மகளிர் கல்லூரி மாணவி கிருசாந்தி குமராசாமி அரியாலை சந்தியில் உள்ள படையினரின் சோதனைச் சாவடியில் கைதாகி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போதே செம்மணி புதைகுழி விவகாரம் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.puthinam.com/full.php?2b1VoKe0dIcYU0ecKA443b4C6Dr4d2f1e3cc2AmS3d434OO2a030Mt3e

StumbleUpon.com Read more...

முல்லைத்தீவின் பல பகுதிகளில் மோதல்; இரு தரப்புக்கும் சேதம்: இராணுவ தலைமையகம்

 
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் முக்கிய தளமாகிய முல்லைத்தீவு நகரப்பகுதியைக் கைப்பற்றியதன் பின்னர் விடுதலைப் புலிகளின் வசம் எஞ்சியுள்ள கரையோரப்பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான முன்னேற்ற நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

முள்ளியவளை, புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவின் புறநகர்ப்பகுதிகளில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் மோதல்களில் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் கூறியுள்ள இராணுவ தலைமையகம், இந்த சண்டைகளின்போது விடுதலைப்புலிகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றது.

கிளிநொச்சிக்கு கிழக்கேயும் இடையிடையே சண்டைகள் நடைபெற்றதாகவும், உடையார்கட்டு, விசுவமடு, போன்ற பிரதேசங்களிலும் மோதல்கள் இடம்பெற்றதாகவும் இராணுவம் கூறியிருக்கின்றது.

http://www.tamilwin.com/view.php?2a46QVb4b3bF9ES34d2IWnJ3b02N7GQe4d24YpDce0ddZLuIce0dg2hr2cc0Fj0K3e

StumbleUpon.com Read more...

பாதுகாப்பு வலயத்தினுள் அடைக்கலம் தேடிய பொதுமக்களைக் கொன்றது கொழும்பு அரசாங்கத்தின் திட்டமிட்ட போர்க்குற்றம்: பா. நடேசன்.

 
 ]
பொதுமக்களையும் அவர்களின் உடமைகளையும், அவர்களுக்கு உதவியளித்து வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தையும் கூரைகளோ அல்லது எதுவித கட்டிடங்களோ அற்ற பாதுகாப்பு வலயம் ஒன்றிற்குள் போகச் சொல்லியபின் அவர்கள் மீது சிறிதும் மனிதாபிமானமற்ற தொடர் எறிகணைத் தாக்குதலை நடத்தியிருப்பதன் மூலம் கொழும்பிலுள்ள இன அழிப்பு அரசு.....
முன்னூற்றுக்கும் அதிகமான மக்களை ஒரே நாளில் கொன்றிருப்பதோடு இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காயப்படுத்தியுமிருக்கிறது" என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் திரு நடேசன் அவர்கள் இன்று தமிழ்நெட் செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இதுபற்றி மேலும் தெரிவித்திருப்பதாவது:-
புலிகள் மக்களை கேடயங்களாகப் பாவிப்பதாக வரும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுதலித்த திரு நடேசன் அவர்கள், தாம் ஒருபோதுமே மக்களை போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கு தடைகளையோ கட்டுப்பாடுகளையோ விதிக்கவில்லை என்று மேலும் கூறினார்.
ஆனால் பொதுமக்கள் தாமாகவே புலிகள் பின்னால் பாதுகாப்புத் தேடிச் செல்வதாகக் கூறிய அவர், இன அழிப்பு ஆவேசத்துடன் ஆக்கிரமித்துக்கொண்டே வரும் ஒரு இராணுவத்திடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள புலிகளின் பின்னால் வரும் பொதுமக்களை தாம் எப்பாடு பட்டாவது காப்பாற்றப் போராடுவோம் என்றும் தெரிவித்தார்.

ஐநாவும், சர்வதேச சமூகமும், இன அழிப்புப் போர் ஒன்றை எதிர்கொண்டு நிற்கும் சமூகத்திற்கு நடக்கும் அக்கிரமங்களை பார்க்கவோ அல்லது தேடிச் சென்று உதவிகளைச் செய்யும் கடமையிலிருந்தும் தவறி விட்டன என்றும் கூறினார்.

அரசின் "பாதுகாப்புப் பிரதேசங்கள் மீது நம்பிக்கை கொள்ளாத ஐநா அமைப்புகளும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் கூட இந்த அகோர தொடர் எறிகணைத் தாக்குதலில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அடைக்கலம் தேடிக்கொண்டன" என்று அவர் மேலும் தெரிவித்ததோடு, செஞ்சிலுவைச் சங்க ஊழியர் ஒருவர் இத்தாக்குதலில் காயப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

"போர் நடக்கும் பகுதிகளில் இருந்து இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த சிவிலியன்கள் மீது நடைபெறும் அவமானப்படுத்தல்களும், துன்புறுத்தல்களும் எமக்கு அறியக் கிடைத்தன. சிங்கள இராணுவத்தின் கைகளில் அகப்பட்ட மக்களுக்கு தமது உயிர் மீதான உத்தரவாதமோ அல்லது எந்தவித மனித கெளரவமோ கிடைக்கப் பெறவில்லை என்பது நாம் அறிந்ததுதான். இது இன்று நேற்றல்ல, காலம் காலமாக இந்த நாட்டின் இன ஒடுக்குமுறையின் அங்கமாக இவை நடைபெற்று வருகின்றன" என்றும் அவர் கூறினார்.

"வன்னியில் உள்ள அரச உத்தியோகத்தர்களும், ஏனைய பொதுச் சேவையாளர்களும் இந்தக் குறுகிய பாதுகாப்பு வலயத்தினுள் போகும்படி கொழும்பு அரசினால் வற்புறுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு அரசாங்கம் வற்புறுத்தியுள்ளதால் புதுக்குடியிருப்பு மருத்துவமனை முற்று முழுதான இயங்காநிலையை அடைந்திருக்கிறது.

உடனடியாக வன்னியில் நடைபெறும் இந்த இன அழிப்புப் போரை நிறுத்துமாறு சர்வதேச சமூகத்தையும், ஐநாவையும் கேட்டுக்கொண்டுள்ள நடேசன், இதன்மூலம் இங்கு நடந்தேறியுள்ள கோரத்தின் முழு அளவையும் உணர்துகொள்ள முடியுமெனவும்,அழிக்கப்பட்டு வரும் மக்கள் கூட்டத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதோடு அவர்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் உதவிகளையும் உடனடியாக ஆரம்பிக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

 

http://www.tamilwin.com/view.php?2aIWnJe0dFj0A0ecQG7V3b4F9EM4d2g2h3cc2DpY3d436QV3b02ZLu3e

StumbleUpon.com Read more...

ஆப்பிரிக்கா போல் தென்னாசியாவில் பாரிய மனித அவலம்; இலங்கையில் 3 லட்சம் தமிழர்கள் பட்டினியில் வாடும் கொடுமை!

 
 
பட்டினிச் சாவுகள் நிகழும் ஆப்பிரிக்காவைப் போல் தென்னாசியாவிலும் சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தரவால் 3 லட்சம் தமிழ் மக்கள் பட்டினியால் வாடும் கொடுமை அரங்கேறியுள்ளது.
சிறிலங்கா அரசாங்கமே அறிவித்துக் கொண்ட "மக்கள் பாதுகாப்பு வல"யங்களிலிருந்து ஐ.நா மற்றும் உலக உணவுத் திட்ட அமைப்பின் பிரதிநிதிகள் வெளியேற சிறிலங்கா அரசாங்கமே உத்தரவிட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் அடைக்கலமாகியிருக்கும் 3 லட்சம் தமிழர்களின் நாளாந்த வாழ்க்கை கேள்விக்குறியாகி பட்டினிச்சாவுக்கு முகம் கொடுக்கும் அவலத்தில் உள்ளது.
ஆப்பிரிக்காவின் கொங்கோ போல் தென்னாசியாவிலும் அவலம் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக வன்னி தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் கைகளில் தமிழ் மக்கள் சிக்கியாக வேண்டும் என்ற சதித்திட்டத்துடன் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது என்றும் வன்னி செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.puthinam.com/full.php?2b0VrPe0dDk230ecOD8c3a4IdAF4d2iYh2cc2GuU3d43cUX3b037Qr3e

 

StumbleUpon.com Read more...

மௌனம் கலைத்து கண்டனம் தெரிவித்தது நோர்வே

(
 
இலங்கையில் சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழர்கள் இனப்படுகொலைக்குள்ளாவதை நோர்வே வன்மையாக கண்டித்துள்ளது.
இலங்கையில் பொதுமக்களுக்கு பேரவலத்தை ஏற்படுத்தும் போரினை நோர்வே வன்மையாக கண்டிப்பதாக, நோர்வே வெளியுறவு அமைச்சகத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வெளியுறவு அமைச்சர் யூணாஸ் கார் ஸ்தோர மற்றும் நோர்வேயின் அனைத்துலக விவகாரங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான சிறப்பு சமாதானத் தூதுவருமான எரிக் சொல்கெய்ம் ஆகியோர் மேற்கண்ட கண்டனத்தினை தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையில் எரிக் சொல்கெய்ம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையின் வடபகுதியில் மோதல் நடைபெறும் பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலைமை குறித்து நாம் ஆழ்ந்த கவலை கொள்கின்றோம்.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் உடனே நிறுத்த வேண்டும்.
இருதரப்பு மோதல்களால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக எமக்குத் தகவல்கள் கிடைத்து வருகின்றன.
இது மிகவும் பாரிய கவலைக்குரியதாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்புக்குரியவர்கள். மேலதிகமாக பொதுமக்கள் உயிரிழப்பதை இரு தரப்பும் தவிர்க்க வேண்டும்.
மோதலில் சிக்கியுள்ள மக்கள் அனைவரும் சுதந்திரமாக நடமாடுவதை இருதரப்பும் மதிக்க வேண்டும். அப்படி வெளியேறும் மக்களை ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளின் படியும் அனைத்துலக நடைமுறைகளின் படியும் கண்ணியமாக நடத்த வேண்டும்.
பொதுமக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட மனிதாபிமான பொருட்கள் சென்றடைவதை இருதரப்பும் உறுதிப்படுத்த வேண்டும். படுகாயமடைந்துள்ள பொதுமக்கள்- மருத்துவ சிகிச்சைகள் பெறுவதற்கான நோயாளர் காவு வாகனங்கள் உள்ளிட்டவைகளை அனுமதிக்க வேண்டும் என்று அதில் எரிக் சொல்கெய்ம் வலியுறுத்தியுள்ளார்.

 

http://www.puthinam.com/full.php?2b3PrKe0dFj030ecQF424b4G8FP4d2l1d2cc2Iu03d436VX3b034Lq3e

StumbleUpon.com Read more...

"விதியே விதியே தமிழ்ச்சாதியை என்செய நினைத்தாய்?

"விதியே விதியே தமிழ்ச்சாதியை என்செய நினைத்தாய்?
இந்தியா கொடுத்த குறைந்த தொலைவு ஏவுகணைகளைக் கொண்டே ஈழத் தமிழர்களை சிறிலங்கா இராணுவம் காவு கொள்கின்றது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

"விதியே விதியே தமிழ்ச்சாதியை என்செய நினைத்தாய்? என்ற கவிஞன் பாரதியின் வேதனைக்குரல், நம் இதயச்சுவர்களில் மோதும் வகையில், அடுக்கடுக்கான துன்பச் செய்திகள் தாக்குகின்றன.

தன்னுடைய குடிமக்கள் மீது வானூர்திகளில் வந்து குண்டு வீசித் தாக்கும் மாபாதகத்தை, அடாஃல்ப் ஹிட்லருக்குப் பின்னர் உலகில் எந்த ஒரு நாடும் செய்யத் துணியாத கொடூரத்தை, இலங்கையில் சிங்கள அரசு தமிழ் மக்கள் மீது ஏவி கொன்று குவிக்கிறது. இதைச் சொன்னதற்காகத்தான், சிறிலங்காவின் 'சண்டே லீடர்' ஆங்கிலச் செய்தித்தாளின் ஆசிரியரும், சிங்களவருமான லசந்த விக்கிரமதுங்க, ராஜபக்ச ஆட்களால் சில நாட்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார்.

கடந்த ஒரு வார காலமாக முல்லைத்தீவு பகுதியில் சிங்கள வான்படையும், இராணுவமும் நடத்தும் தாக்குதலில், அப்பாவித் தமிழ் மக்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள்.

இத்தனை லட்சம் மக்கள் அவதிப்படும் முல்லைத்தீவில், இந்திய அரசு கொடுத்துள்ள குறைந்த தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளைத்தான் சிறிலங்கா இராணுவம் பயன்படுத்தி, இடைவிடாது எறிகணைகளை வீசுகிறது.

நேற்று, வல்லிபுனம் கோவிலுக்கும், மூங்கிலாறு பகுதிக்கும் இடையில், உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதிகளிலும், சிங்கள இராணுவம் நடத்திய கோரத் தாக்குதலில், அப்பாவித் தமிழ் மக்கள் 500 பேர் தாய்மார்கள், குழந்தைகள் கொல்லப்பட்டு உள்ளனர்.




இதில் கொடுமை என்னவென்றால், 'இங்கு தாக்குதல் நடக்காது; பாதுகாப்பான பகுதி' என்று இராணுவம் அறிவித்து விட்டு, அங்கு மக்கள் வந்தபின்னர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயமுற்ற 2,000-க்கும் அதிகமான மக்கள், முதலுதவி கூடப் பெற முடியாமல், மருந்துகள் இன்றி, சிறுகச்சிறுகச் செத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஐ.நா. மன்றத்தின் இலங்கைக்கான அலுவலரும் இந்தத் தாக்குதலைக் கண்டித்து உள்ளார்.

எனவே, தமிழ் இனத்தை அழிக்க முற்படும் சிறிலங்கா அரசுக்கு, இந்திய அரசு உதவுகின்ற துரோகத்தை மூடி மறைக்க பிரணாப் முகர்ஜி கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

கடந்த மூன்று மாத காலமாக போர் நிறுத்தம் என்று ஒப்புக்குக்கூட மத்திய அரசு சொல்லவில்லை. அதைவிட, 'அது எங்கள் வேலை அல்ல என்று ஆணவத்தோடு சொன்ன பிரணாப் முகர்ஜி, இன்று திடீரென்று கொழும்பு செல்ல வேண்டிய மர்மம் என்ன?

உலகெங்கும் உள்ள தமிழர்கள் நடுங்கும் நெஞ்சோடு, கண்ணீர் விட்டுக் கதறும், துயரம் சூழ்ந்து உள்ள இந்த நேரத்தில், திடீரென்று விடுதலைப் புலிகளுக்கு பிரணாப் முகர்ஜி கண்டனம் தெரிவிப்பதன் மர்மம் என்ன?

தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படை 900 தடவைகளுக்கு மேல் துப்பாக்கியால் சுட்டு, 500-க்கும் அதிகமான தமிழக மீனவர்களைப் படுகொலை செய்ததற்கு இந்திய அரசோ, பிரணாப் முகர்ஜியோ ஒரு வார்த்தையாவது கண்டனம் தெரிவித்தது உண்டா?

தமிழக மக்களையும், உலக நாடுகளையும் ஏமாற்றுவதற்காக, அப்பாவித் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று, புதிதாக ஏதோ ஞானோதயம் ஏற்பட்டதைப் போல் பிரணாப் முகர்ஜி, கொழும்பு செல்லும் முன் கூறுகிறார்.

ஐந்தரை லட்சம் ஈழத் தமிழர்கள் இருக்கும் முல்லைத்தீவில், இடைவிடாத தாக்குதலும், வான் குண்டுவீச்சையும் சிங்கள அரசு நடத்துகையில், அப்பாவித் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்படும் பேரழிவு ஏற்படும் என்பது, பிரணாப் முகர்ஜிக்குத் தெரியாதா?

விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, தமிழ் இனத்தையே கரு அறுக்கத்தானே ராஜபக்ச இந்தத் தாக்குதலை நடத்துகிறான்? அதனால்தான், அகங்காரத்தோடு, புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டுச் சரண் அடைய வேண்டும்' என்று கொக்கரிக்கிறான்.

இப்பிரச்சினையின் பின்னணியை, உண்மை நிலையைத் தமிழக மக்கள், உணர வேண்டும் என்பதற்காக,சில சம்பவங்களை இதோ பட்டியல் இடுகிறேன்:

இலங்கையில் தமிழ் இனத்தையே பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு, இராணுவத் தாக்குதல் நடத்தும் சிங்கள அரசுக்கு, இந்திய அரசு நான்கு ஆண்டுக்காலமாக, ஒரு கொடிய உள்நோக்கத்தோடு, இராணுவ உதவிகளைச் செய்து வந்து உள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பொறுப்பு ஏற்ற உடன், முதல் வேலையாக சிறிலங்காவுடன் இராணுவ ஒப்பந்தம் போட முனைந்ததும், அதைத் தடுப்பதற்குப் பல வழிகளிலும் நாம் போராடியதன் விளைவாக, அந்த ஒப்பந்தம் போடாவிட்டாலும், அந்த ஒப்பந்தத்தின் பிரிவுகளை இந்தியா நிறைவேற்றும் என்று, அந்தச் சமயத்திலேயே இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் நட்வர்சிங் சொன்னதை, தொடக்கத்தில் மறைமுகமாகவும், பின்னர் வெளிப்படையாகவும் இந்திய அரசு செயற்படுத்தி வந்து உள்ளது.

சிறிலங்கா வான்படைக்கு கதுவீகளைக் கொடுத்து, சிங்கள வானோடிகளுக்கு இந்தியாவில் பயிற்சி தந்து, இந்திய வான்படையின் தொழில்நுட்பப் பிரிவினரை இலங்கைக்கே அனுப்பிவைத்ததோடு, பலாலி வானூர்தி தளத்தை இந்திய அரசின் செலவிலேயே பழுது பார்த்தும் கொடுத்தது.

சிறிலங்கா கடற்படையுடன் இந்தியக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்துகொண்டதோடு, சிங்களக் கடற்படையினருடன் இணைந்தே கடற்புலிகளின் படகுகள் மீதான தாக்குதலிலும் உதவி, புலிகளுக்குப் பொருட்கள் கொண்டுவந்த கப்பல்கள் மீது தாக்குதலும் நடத்தி, புலிகளின் மரக்கலங்களைக் கடலில் மூழ்கடித்தது.

குறைந்த தொலைவு தாக்கும் ஏவுகணைகளையும், இராணுவத் தளவாடங்களையும் சிங்களத் தரைப்படைக்கும் வழங்கியது.

வட்டி இல்லாக் கடனாக ஆயிரம் கோடி ரூபாயும் கொடுத்து, சிங்கள அரசு பாகிஸ்தான், சீனா, இஸ்ரேலிடம் கப்பல் கப்பலாக ஆயுதங்களும், போர் வானூர்திகளும் வாங்குவதற்கும் வழிசெய்து, சிங்கள இராணுவத்தினருக்கும், வான் படையினருக்கும் பயிற்சியும் கொடுத்தது.

1987 தொடங்கி 89 வரை, இந்திய இராணுவத்தை அனுப்பி, ஈழத் தமிழர்களின் உரிமைப் படை அணியான விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியதோடு மட்டும் அன்றி, அப்பாவித் தமிழர்கள் பலர் சாவுக்கும் காரணமான இராணுவத் தாக்குதல் நடத்திய துரோகத்தை விடக் கொடுரமான முறையில், வஞ்சகமாக இந்திய அரசு இலங்கைத் தீவில் தமிழர் இன அழிப்பு போரில் பங்காளியாகச் சேர்ந்து, இப்போது, படு நாசத்தையும் ஏற்படுத்தி விட்டது.

அதனால்தான், கடந்த மூன்று ஆண்டு காலமாக ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவின் மத்திய அரசு துரோகம் செய்கிறது என்பதையும், அங்கு விழுகின்ற ஒவ்வொரு தமிழனின் பிணத்துக்கும், அவன் சிந்துகிற ஒவ்வொரு சொட்டு இரத்தத்துக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், அதில் பங்கேற்று உள்ள கட்சிகளில் முக்கியமாக இன்று தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க.வும்தான் பொறுப்பாளி ஆவார்கள் என்று குற்றம் சாட்டி வந்து உள்ளேன்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தமிழகச் சட்டமன்றத்தின் ஒருமனதான தீர்மானத்தை, இந்திய அரசு அவமதித்து உதாசீனப்படுத்தியது.

இலங்கையில் சிங்கள இராணுவம் தமிழர்களின் காவல் அரணான விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க, சிங்கள அரசோடு சதித்திட்டம் வகுத்து இந்திய அரசு செயற்பட்டதும், தமிழ் இனத்துக்குச் செய்த துரோகம் மட்டும் அல்ல, இந்தியாவின் பூகோள அரசியல் நலன்களைக் காவு கொடுக்கின்ற வடிகட்டிய முட்டாள்தனமும் ஆகும்.

சிங்கள மண்ணில், பாகிஸ்தானும் சீனாவும் கால் பதித்து விட்டன. இந்தியாவின் தென்முனையில், இந்தியாவுக்குப் பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஈழத்தமிழர்களை, அடிமை இருளிலே தள்ளுவதால், இயல்பாக ஏற்படும் தற்காப்பு அரணையும் உடைத்துவிட்டு, எதிர்காலத்தில் தென்முனையிலும் பகை நாடுகளின் ஆபத்தை வலியத் தேடி இந்திய அரசு உருவாக்குகிறது.

துரோகத்தின் உச்சகட்டமாக, இந்திய அரசு, சிங்கள இராணுவத் தாக்குதலுக்கு உதவ, இந்திய இராணுவ டாங்கிகளையும், 3,000 இராணுவ வீரர்களையும் கேரளத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கும் ஏற்பாட்டை மிக வேகமாகச் செய்து முடித்து உள்ளதாகத் தகவல் வந்து உள்ளது.

இது உண்மையாக இருக்கக்கூடாது என்று உள்ளம் பதறினாலும்கூட, இரண்டு நாட்களுக்கு முன்பு, ஏராளமான இராணுவ டாங்கிகள், தமிழகத்தில் ஈரோடு வழியாகக் கேரளாவுக்கு அனுப்பப்பட்டபோது எடுத்த படம், நேற்றைய (26.1.2009) தினத்தந்தி ஏட்டின் ஈரோடு பதிப்பில் வெளியாகி உள்ள நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய அரசு செய்து வந்து உள்ள துரோகங்களையும் நினைக்கையில், இந்தக் கொடிய துரோகத்தை இந்தியா செய்து இருக்கவும் கூடும் என்ற எண்ணமே வலுக்கிறது.

மொத்தத்தில் ராஜபக்ச அரசு நடத்துகின்ற இன அழிப்பு போரை பின்னால் இருந்து இயக்கி வந்து உள்ள இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஒரு கொடூரமான குறிக்கோளுடன், தீங்கான நோக்கத்துடன், ஆலகால விடம் நிறைந்த வஞ்சக சதித்திட்டத்தைத் தீட்டி, அதனைச் செயல்படுத்துகிறது என்ற உண்மை ஒருநாள் வெளிச்சத்துக்கு வந்தே தீரும்.

ஏழு கோடித் தமிழர்களின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்யும் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்னிப்பே கிடையாது. இந்தத் துரோகத்தைத் தமிழ் மக்களும், எங்கள் வருங்காலத் தலைமுறையினரும் மன்னிக்கவே மாட்டார்கள் என எச்சரிக்கிறேன்."

 

http://www.swisstamilweb.com/cutenews/show_news.php?subaction=showfull&id=1233064398&archive=&start_from=&ucat=&

StumbleUpon.com Read more...

ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்....

ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்....
தமிழன் எக்ஸ்பிரஸ் வார ஏடு நவம்பர் 19, 1997-ல் யாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்.... என்று சுதாங்கன் எழுப்பிய கேள்விகளுக்கு 2009 வரை விடை கிடைக்கவில்லை. நாடு முழுவதும் இன்று ஜெயின் கமிஷன் மீதே கவனம் செலுத்துகிறது. அதே சமயம் பூந்தமல்லியில் ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைகள் முடிந்து விட்டன. இந்த நீதிமன்றத்தின் நீதிபதி, 'வழக்கின் தீர்ப்பு 1998 ம் ஆண்டு ஜனவரி 28 அன்று வழங்கப்படும்' என்று அறிவித்திருக்கிறார்.


ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 26 பேரும், தேசத்தின் குடிமக்களும் இந்தத் தீர்ப்பை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் குற்றவாளிகளின் சார்பில் எதிர்தரப்பு வாதம், 50 நாட்கள் நடைபெற்றது. இரகசியமாக நடந்த இந்த வாதங்களின் பல முக்கியப் பகுதிகள் தமிழன் எக்ஸ்பிரஸுக்குக் கிடைத்தன. சொல்லப்படாத பல பின்னணிக் கதைகளை வாசகர்கள் முன் கொண்டு வருகிறோம்.

குற்றம் சுமத்தப்பட்டவர்கள், ராஜீவ் கொலையை விசாரித்த விசேஷ புலனாய்வுத் துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள் ஆகியோர் முன்னிலையில் தமிழக போலீஸின் பாதுகாப்புடன் எதிர்தரப்பு வாதம் நடந்தது.

1993 ம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கு, 50 மாதங்கள் நடந்தது. 288 சாட்சியங்கள், 3000 அரசுத்தரப்பு ஆவணங்கள், 1000 எதிர்தரப்பு ஆதாரங்கள் ஆகிய அனைத்தும் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டன. எதிர்தரப்பு வாதத்தில் எழுந்த பல கேள்விகளுக்கு விடையில்லை. சிறப்பு புலனாய்வுத் துறையின் இந்த விசாரணைகள், அதிகாரத்திலுள்ளவர்களின் அன்பைப் பெறும் வகையில் தான் நடந்தது என்று சந்தேகப்பட வைக்கிறது.

ராஜீவ் கொலை ஒரு வி.ஐ.பி.யின் மரணம் மட்டும் அல்ல; தேசத்தை சிதறச் செய்யும் மிகப் பெரிய சதி. பல அந்நிய சக்திகள் இந்தப் பரந்த தேசத்தைக் கட்டியாள நினைக்கும் தந்திரம். அதனாலேயே இந்த வழக்கிலுள்ள பல திடுக்கிடும் சம்பவங்கள், விசாரணையின் ஓட்டைகள் ஆகியன நமக்குத் தெரிய வேண்டியது மிக முக்கியம்.

இந்த விசாரணையில் எதிர்தரப்பு வாதங்களைத் தொடக்கி வைத்தவர் மூத்த வழக்கறிஞரான துரைசாமி. ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்த அந்த நீதிமன்ற அறையில் விசேஷ புலனாய்வுத் துறையின் 'முன் ஜோடிப்பு கதைகளை' போட்டு உடைத்தாராம் துரைசாமி. அதேபோல் எதிர்தரப்பு வழக்கறிஞர் ராமதாஸும் தன் 11 நாட்கள் வாதத்தில் குற்றப் பத்திரிகையில் புனையப்பட்டுள்ள பல கற்பனைக் கதைகளை சாட்சியங்களோடு வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.

இந்த எதிர்தரப்பு வாதங்களின் க்ளைமாக்ஸாக அமைந்தது வழக்கறிஞர் சந்திரசேகரின் கடும்வாதம். ஆதார பூர்வமாகவும், உணர்ச்சிகரமாகவும் பேசிய சந்திரசேகர், விசேஷ புலனாய்வுத்துறை ஏற்கனவே முடிவு செய்து தங்கள் முடிவுகளுக்கு ஏற்ப வழக்கை ஜோடித்ததாக கடுமையாகக் குற்றம் சாட்டினார். 'நான் கேட்கிற சாட்சியங்களை புலனாய்வுத்துறை காட்டிவிட்டால் என் கட்சிக்காரர்கள் தாங்கள் குற்றம் செய்ததாக தாங்களே முன்வந்து ஒப்புக் கொள்வார்கள்' என்று கூட சவால் விட்டார்.

இப்படி ஐம்பது நாட்கள் நடந்த எதிர்தரப்பு வாதங்கள் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. இதோ அந்த விடை கிடைக்காத கேள்விகள்:

1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் எப்படி ஒப்புக் கொண்டார்?

2. ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா?

3. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்?

4. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ்காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள். அவர்களுடைய வேலை, ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அப்படியானால் அவர்கள் உடன் வந்த காரணம் என்ன?

5. ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்திலிருந்து சர்க்யூட் ஹவுஸுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்?

6. சென்னையில் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா?

7. ராஜீவ் மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன் ராமாவரம் தோட்டம் அருகே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவர் காரில் ஏறினார்கள். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்குள்ளானதா? இன்றுவரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?

8. யார் அந்த பல்கேரியர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?

9. யார் அந்த இரண்டு அயல்நாட்டு பெண் பத்திரிகையாளர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?

10. அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் ராஜீவை பேட்டி கண்டார்கள். ஆனால் த. பாண்டியனும், மரகதம் சந்திரசேகரும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என்றார்கள். இவர்கள் எதை மறைக்க முயலுகிறார்கள்? ஏன்?

11. தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா?

12. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார்.

13. உள்துறை அமைச்சர் அப்படி சொல்லக்காரணம் என்ன என்பதை விசேஷ புலனாய்வுத்துறை ஏன் விசாரிக்கவில்லை?

14. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?

15. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அராபத், 'ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது' என்று அன்றைய பிரதமர் சந்திரசேகரிடம் தெரிவித்தார். 'அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல்?' என்பதை ஏன் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை?

16. மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தால் மட்டுமே அரபாத்திற்கு இந்தப் பின்னணி தெரிய வாய்ப்புண்டு.

17. மரகதம் சந்திரசேகர் ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் லதா பிரியகுமார் தன் கணவருடனும் வழக்கறிஞர் மகேந்திரனுடனும் அரக்கோணத்திலிருந்து வந்தார். அவரது மகன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்கவேயில்லை. வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை? சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் அவர்களை ஏன் விசாரிக்கவில்லை?

18. சிவராசனின் தாயாரும், வினோதினியின் தந்தையும் சிங்களவர்கள் தான். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாஸாவுக்கு ராஜீவ் மீது கோபம் உண்டு. அந்தக் கோணத்தில் ஏன் விசாரணை செய்யப்படவில்லை?

19. விடுதலைப் புலிகள், இலங்கை அரசு இரண்டுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இந்திய அமைதிப் படை இலங்கையில் நுழையக் காரணமாக இருந்த ராஜீவ் மீது இரு தரப்பினருக்கும் கோபமுண்டு. இந்த விஷயத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் விசேஷப் புலனாய்வுத் துறைக்கு ஒரு சவால் விட்டார். 'வினோதினியின் பூர்வீகம் என்ன? அவரும், அவர் குடும்பத்தினரும் அப்பாவிகள் என்பதை நிரூபித்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தானாகவே தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள் என்றார். இறுதிவரை அவர் சவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை.

20. காமினி திசநாயகா, அத்துலத்முதலி, விக்கிரமசிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?

21. சிவராசன், தனு, சுபா ஆகியோர் ஒரு அந்நிய சக்தியின் தூண்டுதலால் ஏன் இந்தக் கொலையை செய்திருக்கக் கூடாது? அந்த மூவரும் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்பதால் மட்டுமே அவர்களைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி விசாரணையை முடித்துவிட்டார்களா?

22. புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்த என்ன பலத்த ஆதாரம் புலனாய்வுத் துறையிடம் உள்ளது?

23. பிரபாகனும், சிவராசனும் ரேடியோ மூலம் பேசியதை விசேஷப் புலனாய்வுத் துறை கேட்டதாகச் சொல்லப்படுவது ஏன் ஒரு கற்பனையான ஆதாரமாக இருக்கக்கூடாது?

24. 'விசேஷ' இலட்சியமுள்ள அரசியல்வாதிகள், ஏன் அவரது காங்கிரஸ் தோழர்களே கூட தங்கள் வளர்ச்சிக்கு ராஜீவ் தடையாக இருக்கிறார் என்பதால் கூலிப்படையினரை ஏவிவிட்டு ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?

25. பல்வேறு நாட்டு ஆயுத வியாபாரிகள், பிரதமர் என்கிற முறையில் ராஜீவுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். கூலிப்படைகள் மூலமாக அவர்கள் ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?

26. மறுபடியும் அமைதிப்படை தங்கள் நாட்டில் நுழையலாம் என்கிற எண்ணத்தில் இந்தியாவுக்கு வலுவான தலைவர் இருக்கக்கூடாது என்று இலங்கை அரசு ஏன் நினைத்திருக்கக்கூடாது?

27. மூன்றாவது உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்துவதில் சி.ஐ.ஏ. வுக்கு அதிக அக்கறை உண்டு. அந்த எண்ணம் ராஜீவ் விஷயத்தில் இருந்ததா?

28. புலிகளின் 'இந்துத்துவா' அபிமானம், இலங்கைத் தமிழர்களுக்கு உண்டான இந்து வெறி இரண்டையும் பயன்படுத்தி ஆர். எஸ்.எஸ். பிஜேபி இலங்கைத் தமிழர்கள் மூலமாக ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது? அவர்கள் ஆட்சியைப் பிடிக்க தடையாக இருக்கும் ஒரே தலைவர் ராஜீவ் தான். மகாத்மாவைக் கொன்றவர்கள் ஏன் ராஜீவைக் கொன்றிருக்கக்கூடாது?

29. வாழப்பாடி ஏற்றுக் கொள்ளவில்லை. மூப்பனார் அக்கறை காட்டவில்லை. ஆனால் மரகதம் சந்திரசேகர் மட்டும் டெல்லி சென்று ஏன் ஸ்ரீபெரும்புதூருக்கு வரவேண்டும் என்று ராஜீவை வற்புறுத்தினார்? தன்னை அறியாமல் சிக்கி ராஜீவ் மரணப்படுக்கையில் விழக் காரணமாகி விட்டாரா?

30. யார் இந்த பொட்டு அம்மான்? இப்படி ஒரு நபர் இருக்கிறாரா? அம்மான் ஒரு மூத்த தலைவர். ஒரு போரில் இறந்துவிட்டார். பொட்டு மட்டுமே உள்ளார் என்கிறது எல்.டி.டி.ஈ. வட்டாரம். உயிருடன் இல்லாத ஒரு நபரை எப்படி இரண்டாவது குற்றவாளியாக புலனாய்வுத்துறை முத்திரை குத்தியது?

31. பத்மநாபா கொலை வழக்கையும், இந்த வழக்கையும் ஒப்பிட்டால் பல உண்மைகள் வெளிவருகின்றன. தமிழ்நாடு காவல்துறையின் 'க்யூ' பிராஞ்ச், பத்மநாபா வழக்கை விசாரித்தது. விசேஷப் புலனாய்வுத்துறை, ராஜீவ் கொலை வழக்கை விசாரணை செய்தது. இரண்டு விசாரணை அமைப்புகளும் சதி நடந்த இடம் யாழ்ப்பாணம் என்கின்றன. பத்மநாபா வழக்கில் குற்றவாளிகளில் சிவராசன். ராஜீவ் வழக்கில் அவர் முக்கிய குற்றவாளி. அப்படியானால் ராஜீவ் கொலையில் குற்றவாளியாகக் கருதப்பட்ட பிரபாகரன் பத்மநாபா வழக்கில் ஏன் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை? ஆகவே பிரபாகரன் பெயரை நுழைப்பது அரசியல் முடிவே தவிர விசாரணையினால் கிடைத்த தெளிவே அல்ல. கடும் உள்நோக்கத்துடன் வழக்கிற்கு உயிர்கொடுக்க புலனாய்வுத்துறை செய்த முயற்சி இது.

32. விமான நிலையத்தில் ராஜீவை சந்தித்தார் கவிஞர் காசி. ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டு வந்த தகவல் என்ன? 'ஈழ விடுதலைக்கு ராஜீவின் உதவி தேவை' என்று பிரபாகரன் காசி ஆனந்தன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தால் ஏன் அவரை பிரபாகரன் கொலை செய்ய வேண்டும்?

33. இந்தியா மற்றும் தமிழகத்தில் தான் தனக்கு அனுதாபமும், ஆதரவும் கிடைக்கும் என்பது பிரபாகரனுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இந்த மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிற தவறைச் செய்து, நாட்டைவிட்டே துரத்தப்பட்டு தடை செய்யப்படுகிற அளவுக்கான முட்டாள் தனத்தையா பிரபாகரன் செய்தார்?

34. லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனிதகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை? லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? காங்கிரஸ் மற்றும் அதன் தொண்டர்களின் மீது புலனாய்வுத் துறைக்கு ஏன் இத்தனை பரிவு?

35. ஸ்ரீபெம்புதூருக்கு செல்லும் முன் இரண்டு தெருமுனைக் கூட்டங்களில் பேசினார் ராஜீவ். அந்தக் கூட்டங்களில் மேடை வரை உடன் வந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. ஸ்ரீபெரும்புதூரில் மட்டும் ஏன் தொலை தூரம் தள்ளிப்போனார்?

36. அப்பாவிப் பொதுமக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் பலர் ராஜீவுடன் உயிரிழந்தார்கள். ஆனால் காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கும் இலேசான காயம் கூட இல்லையே. அது ஏன்?

37. தனு, சுபா, சிவராசன் மூவரையும் ஸ்ரீபெரும்புதூருக்கு அழைத்து வந்தவர் லதா பிரியகுமார் என்று கருதப்படுகிறது. குறிப்பாக பெண்கள் பகுதிக்கு அழைத்து வந்து லதா கண்ணனிடம் அவர்களுக்கு உதவும்படி சொன்னார். அவர் மீது ஏன் குற்றம் சுமத்தப்பட வில்லை?

38. பிரபாகரன், சிவராசன் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய படத்தை வைத்துக் கொண்டு பிரபாகரனுக்கு இதில் தொடர்பு உண்டு என்று எப்படிச் சொல்லலாம்?

39. தனு, சுபா, சிவராசன் மூவரும் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, மேற்கத்திய, ஐரோப்பா, இந்தியா கூலிப்படையின் கையாட்களாக ஏன் ஆகியிருக்கக்கூடாது?

40. மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?

41. சந்திரா சுவாமி, சுப்பிரமணிய சுவாமி, சந்திரசேகர், ஆயுத விற்பனையாளர் கசோகி மூவருக்கும் இந்த வழக்கில் ஏதாவது தொடர்பு உண்டா என்கிற கோணத்தில் விசாரணை நடந்ததா?

42. புலிகள் இந்தக் கொலையை செய்ததின் மூலம் அவர்களுக்குக் கிடைத்த ஆதாயம் என்ன? அமெரிக்கா போன்ற மிகப் பெரிய வல்லரசுகள், சி.ஐ.ஏ. மூலமாக, ஏராளமான ஆயுத உதவிகளும் செய்து இந்தக் காரியத்தை செய்ய வைத்தார்களா?

43. யாரோ சிலரைப் பிடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.யும், விசேஷ புலனாய்வுத் துறையும் எதற்கு?

தீர்ப்பு விரைவில் வெளிவரப் போகிறது. குறிப்பாக ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையைத் தொடர்ந்து சட்ட வல்லுநர்கள் இந்தத் தீர்ப்பை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படி பல கேள்விகள் சிறப்பு புலனாய்வுத் துறையின் விசாரணையைப் பற்றி எழுந்திருக்கிறது.

கேள்விகள் எல்லாம் உண்மைகள் ஆகிவிடாது. ஆனால் பல சந்தேகங்கள் களையப்படாவிட்டால் உண்மைக் குற்றவாளிகள் பலம் வாய்ந்த சக்திகளுக்குப் பின்னால் ஒழிந்து கொண்டு விடுவார்கள். மறைந்து நிற்கும் அவர்களால் பலம் வாய்ந்த இந்திய தலைவக்களுக்குத் தான் ஆபத்து.

'விசேஷப் புலனாய்வுத் துறை விசாரித்ததா, அல்லது வெறும் விசாரணை அறிக்கை தயார் செய்ததா?' என்கிற பில்லியன் டாலர் கேள்விக்கான விடை நிச்சயம் ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரியவேண்டும்
 

 

http://www.swisstamilweb.com/cutenews/show_news.php?subaction=showfull&id=1233064866&archive=&start_from=&ucat=&

StumbleUpon.com Read more...

வன்னியில் உள்ள 450,000 தமிழர்களையும் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானிய அரசுக்கு அவசர வேண்டுகோள்

 
   



ஸ்ரீலங்காவில் இடம்பெறும் இனப்படுகொலையை நிறுத்தி வன்னியில் உள்ள 450,000 தமிழர்களையும் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானிய அரசுக்கு அவசர வேண்டுகோள்..

வன்னியில் எழுந்திருக்கும் மனிதாபிமான பிரச்சனைகளை வெளிக்கொணருவதற்காக பிரித்தானிய தமிழ் மருத்துவ துறைசார் நிபுணர்களாகிய நாம் இன்று இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகின்றோம். இதேவேளை ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மீது நடத்தப்படும் மனவலியையும் கவலையையும் ஏற்படுத்தக் கூடியதான இனப்படுகொலை யுத்தம் தொடர்பாக பிரித்தானிய அரசினதும் எமது பிரித்தானிய பொது மக்களதும் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகின்றோம். ஸ்ரீலங்காத் தீவில் கடந்த அறுபது வருடங்களாக அந்த நாட்டின் சம பிரஜைகளாக வாழ்வதற்கான சமத்துவ உரிமைகளும், அடிப்படை உரிமைகளும், மறுக்கப்பட்ட நிலையில் அரசியல் உரிமைகள் இன்றி தரப்படுத்தல், மற்றும் பாரபட்சமான நடத்துகைக்குட்பட்ட மக்கள் அத்தடுத்து வந்த சிங்கள அரசாங்கங்களின் மிலேச்சத்தனமான  அடக்குமுறைகளுக்கு உட்பட்டுள்ளனர். இந்தக் காலப்பகுதியில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களில் மெதுவான தமிழனப் படுபொலை அரங்கேற்றப்பட்டது.


அண்மையில் தீவிரமடைந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் என கூறி 'பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்' என்ற போர்வையில் தமிழின அழிப்பை தீவிரமாக்கியுள்ளது. வன்னிப் பிரதேசத்தில் பாதுகாப்புப் பிரதேசம் என அறிவிக்கப்பட்ட மிகக் குறுகிய இடத்தில் செறிந்துள்ள 450,000 இற்கு மேற்பட்ட தமிழர்கள் தஞ்சமடைந்துள்ள பிரதேசத்தின் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் எறிகணை மற்றும் விமானத் தாக்குதல்கள் இதனை தெளிவுபடுத்துகின்றன. இந்த பிரதேசம் 50,000 படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு பொது மக்கள் மீது கடுமையான குண்டு வீச்சுக்கள், பல்குழல் எறிகணைத் தாக்குதல்கள் என்பன மிகக் கடுமையாக தரையிலிருந்தும் கடலில் இருந்தும் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 72 மணி நேரத்தில் மாத்திரம் நூற்றுக்கணக்கான பொது மக்கள் இத்தகைய தாக்குதல்களினால் கொல்லப்பட்டும் பல நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தும் உள்ளனர். காயமடைந்தவர்களுக்கான அவசிய மருத்துவ சிகிச்சைகள் கூட மறுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளின் மீதும் தற்காலிக மருத்துவ முகாம்களின் மீதும் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது காஸாவில் உள்ளதை போன்று மிகக் கொடூரமானதாக இருந்த போதிலும் பிரித்தானியாவில் உள்ள எந்த தொலைக்காட்சி அலைவரிசையும் இதனை ஒளிப்பரப்பவில்லை.


கடந்த செப்பரம்பர் மாதம் 8 ஆம் திகதியில் இருந்து சர்வசே தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்களுக்கான பயண அனுமதியை மறுத்த ஸ்ரீலங்கா அரசு வன்னியில் பணியாற்றிய தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்களையும் வெளியேற்றியதோடு, வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லுவதற்கான தடையையும் விதித்தது. 


தற்போது போதிய உணவு, மருந்து, தங்குமிடம், எரிபொருள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அற்ற நிலை தோன்றியிருப்பதோடு மிக சிறிய எண்ணிக்கையான மருத்துவ துறைசார்ந்தவர்களே அங்குள்ள மக்களின் தேவைகளை கவனிக்க மிகக் குறைந்த வசதிகளோடு உள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசபடைகளால் மேற்கொள்ளப்படும் கண்மூடித்தனமான இராணுவ நடவடிக்கைகளினால் தற்போது அங்கு பாரிய மனிதாபிமானப் பிரச்சனைகள் தோன்றியுள்ளன. அந்த அவலக்குரல்கள் என்றுமில்லாதவாறு உரத்துக் கேட்பதோடு புலம்பெயர்ந்த தமிழர்களை கோபமும் விரக்தியும் கொள்ள வைத்திருக்கின்றது. 


இவை தொடர்பான குற்றச்சாட்டுக்களை உறுதிப்பபடுத்த எத்தகைய சர்வதேச நிறுவனங்களும் அங்கு இல்வை என்ற நிலையில் ஸ்ரீலங்கா அரசு அத்தகைய குற்றச்சாட்டுக்களை நிராகரித்து வருகின்றது. இரண்டாவதாக சர்வதேச சமூகம் மௌனமாக இருக்கும் வரை ஸ்ரீலங்கா அரசு தனது திட்டமிட்ட தமிழின படுகொலையை தொடர்ந்து மேற்கொள்ளும். 


ஆகையினால் பிரித்தானிய பிரதமரிடம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.


மேலும் உயிரழிகள் இடம்பெறுவதை தடுக்க யுத்தத்தில் சம்பந்தப்பட இரண்டு தரப்பையும் உடனடி யுத்த நிறுத்தம் செய்ய அழுத்தம் கொடுக்குமாறும்,
யுத்த பிரதேசத்தல் சிக்குண்டுள்ள மக்களை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபையின் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும்,
பாதுகாப்புப் பிரதேசத்தை அமைத்து அங்கு ஸ்ரீலங்கா ஆயுத படைகளின் விமானங்கள் பறப்பதற்கான தடையை விதிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறும்
உடனடி மருத்துவ உதவிகளை வழங்கி மக்கள் தமது இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப உதவுமாறும் கோருகின்றோம்.

http://83.170.108.27/athirvu/

StumbleUpon.com Read more...

சர்வதேச சமூகத்துக்கு மனித கெளரவம் என்றால் என்னவென்று தெரியுமா: வன்னி வைத்தியர்கள் விசனம்

 
 
சர்வதேச சமூகம் நவீன உலகில் உதவிகள் எதுவுமேயற்ற ஒரு இனக்குழுமீது நடக்கும் திட்டமிட்ட இனக்கொலையை மெளன சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த மக்கள் எங்கு போவதென்று அறியாமலிருப்பதைத் தவிர எந்தக் குற்றத்தையுமே செய்யவில்லை.
கொழும்பு அரசாங்கத்தின் இனப்படுகொலை இராணுவம் தனது கொலை வெறித் தாண்டவத்தை வன்னியில் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் போது, கவலை அளிக்கும் விதமாக இந்தியாவும், சர்வதேச சமூகமும் அம்மக்களை தம்மைக் கொன்று குவிப்பவர்களிடமே வந்து சரணடையுங்கள் என்று கேட்கின்றன.
எந்த விதத்தில் பார்த்தாலும் இவர்கள் எல்லோரும் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் அம்மக்கள் அழிய வேண்டும் என்பதைத்தான்" என்று உடையார்கட்டு மருத்துவமனையில் காயப்பட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்களை கவனித்துக்கொண்டே அந்த வைத்தியர் கேட்டார்.

"புலிகள் மக்களை கேடயங்களாகப் பாவிக்கிறார்கள் என்று சொல்லும் சாட்டு ஒரு விசமப் பிரச்சாரம்" என்றார் அவர்.

"95 வீதமான போர் முடிந்து விட்டது என்று அரசும், இராணுவமும் சொல்வதிலிருந்து தற்போதைய யுத்தம் புலிகளுக்கெதிரானது அல்ல, மாறாக இவ்வளவு காலமும் தமது போராளிகள் மேல் நம்பிக்கை வைத்து அவர்களுடன் நின்ற மக்கள் கூட்டத்துக்கு வழங்கப்படும் கூட்டுத் தண்டனை தான் இது"

"முதலைக் கண்ணீர் விட்டுவரும் அந்தச் சர்வதேச சமூகம் உண்மையாகவே அழிக்கப்பட்டுவரும் எமது மக்களுக்கு உதவ முடியும். கொழும்பின் காட்டேறி இராணுவத்தைத் தவிர அவர்களை யாருமே இதைச் செய்வதிலிருந்து தடுக்கப்போவதில்லை" என்று அவர் கூறினார்.
சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம், எல்லைகளற்ற மருத்துவர்கள் போன்ற அமைப்புகளிடம் இம்மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருத்துவ உதவிகளைச் செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

"எங்களுக்கு காயப்பட்டவர்களை கொண்டுசெல்ல உடனடி போக்குவரத்து வசதிகள் வேண்டும். இரத்தம் எங்களுக்கு அதி முக்கியமான தேவையாக உள்ளது. எங்களுக்கு மருந்துப் பொருட்களும், மருத்துவர்களும் தேவை" என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த வைத்தியர் கேட்டுக் கொண்டார்.

 

http://www.tamilwin.com/view.php?2aIWnJe0dvj0A0ecQG7V3b4F9EO4d2g2h2cc2DpY3d436QV3b02ZLu3e

StumbleUpon.com Read more...

உறவுகளே விரைந்து இந்த செய்தியை உங்கள் மினஞ்சல் மூலம் அனுப்பு

உறவுகளே விரைந்து இந்த செய்தியை உங்கள் மினஞ்சல் மூலம் அனுப்புங்கள்
உங்களின் மினஞ்சல் மூலம் நண்பர்களுக்கும் தெரிய படுத்துங்கள்.

எங்கள் உறவுகளை காத்திட இன்றே அனுப்புங்கள்.
என்னால் முடிந்ததை நான் செய்துள்ளேன்..

உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி..
----------------------------------------------------------------
fbc@yle.fi; info@institut-fuer-menschenrechte.de; support@ekstrabladet.dk; skynewsinternational@bskyb.com; heveye@hrw.org; c4home@itn.co.uk; news.london@ukmetro.co.uk; shahu@hrw.org; sct@amnesty.org.uk; faktum@svt.se; tsh@dr.dk; nyheder@dr.dk; elsa.zagreb@gmail.com; porteot@hrw.org; ulpo@dr.dk; irn@itn.co.uk; nyhetstips@tv2.no; radio@itn.co.uk; center@humanrights.dk; newseditor@independent.co.uk; jp@jp.dk; foreign.news@thetimes.co.uk; charlotte.dixon@bskyb.com; itvplanning@itn.co.uk; akij@dr.dk; lgra@dr.dk; philippa.stephens@bskyb.com; oml@dr.dk; foreigneditor@independent.co.uk; tva@dr.dk/
---------------------------------------------------------------------

Dear Sir/Madam...

Please try to investigate these serious issues instead of avoiding

Srilanaka's Genocide.


find more information on
www.tamilnet.com

Urgent medical appeal as scores are killed
To view the entire article,click here
Visit
http://www.dailymirror.lk/ for updated local and world news

Watch these videos..


) Video made while shells were falling. Shows the search for the injured & scenes at the displaced/makeshift hospital where doctors work with almost no medical supplies:
http://www.youtube.com/watch?v=eyfXwUlOCn0

2) Interview with woman from Children's Home for the Vision, Hearing & Learning Impaired that was shelled by the Govt of SL on 22 Jan 2009:
http://www.youtube.com/watch?v=8FCFs5_Mzl8

3) Interview with woman whose 2 children were killed in a Sri Lanka Army shelling:
http://www.youtube.com/watch?v=xAxeJUuLfUM

4) Interview with displaced woman (Tamil with English subtitles)
http://www.youtube.com/watch?v=p8qG04rscB8

5) Interviews with civilians injured by shelling & doctor who treated them
http://www.youtube.com/watch?v=OBA3VQqdfBk

6) Injured & their relatives at the hospital after a Sri Lanka Army shelling:
http://www.youtube.com/watch?v=JjPhq2Fbmzk

TRO YouTube Channel - for more videos:
http://www.youtube.com/user/TROKilinochchi


http://www.eurotvlive.com/script/viewVideo.asp?videoid=60265487164-0912595113064113555852879760719158361449820917555625103449727483244072293408401621323992873295956478017620


////
 

StumbleUpon.com Read more...

பிரணாப்முகர்ஜி இலங்கை விரைவு...!

 
இந்தியா அரசின் விசேட துாதுவராக
Affairs Minister Pranab Mukherjee
இன்று இலங்கைக்கு விஜயம்
செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது விஜயம் தமிழருக்கு விடிவையும்
சமாதானததையும் உருவாக்கி தருமா என
தெரியவரவில்லை.

எறிகணைகளால் படுகொலை செய்யப்பட்டும்
படுகாயமடைந்த மக்களிற்கு அவசர மருத்துவ
உதவிகளை
வழங்க உடனடி அமைதி ஒன்று உருவாகலாம்
என எதிர் பார்க்கப்
படுகிறது....


இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு
செல்லும் இவர் இலங்கை அதிபர் மகிந்த ராயபக்சே மற்றும்
வௌிவிவகார அமைச்சர் போகலகமவையும்
கலந்து தற்போதைய அரசியில் நிலமை தொடர்பாக
கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி மற்றும் ஏணைய தமிழ் அரசியல்
கட்சிகளின் ஒன்றினைந்த அழுத்தம் காரணமாக
இவரது பயணம் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. !
////
 
 

StumbleUpon.com Read more...

நடனமாடிய பெண்களுக்கு அடி, உதை

நடனமாடிய பெண்களுக்கு அடி, உதை: இந்து அமைப்பு   

மங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூரில், ஸ்ரீராம் சேனா என்ற இந்து அமைப்பு நேற்று நடத்திய வெறித் தாக்குதலில் பெண்கள் காயமடைந்தனர். ஹோட்டலில் நடனம் ஆடிய பெண்களைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடந்தது.

மங்களூர் பல்மட்டா சாலையில் தனியார் ஹோட்டல் உள்ளது. இங்கு இரவு நேரங்களில் இளம் பெண்கள் கவர்ச்சி நடனம் ஆடுவது வழக்கம். அரை குறை ஆடைகளுடன், போதையில் நடனம் ஆடும் இந்த நிகழ்ச்சி குறித்து அறிந்த ஸ்ரீராம் சேனா என்ற இந்து அமைப்பினர் நேற்று அங்கு விரைந்தனர்.

20க்கும் மேற்பட்டோர் அடங்கிய அந்தக் கும்பல், ஹோட்டலுக்குள் கோஷமிட்டபடி புகுந்தனர். அங்கு நடனமாட வந்த பெண்கள், நடனமாடிக் கொண்டிருந்த பெண்கள் என சகலரையும் கண்மூடித்தனமாக தாக்கினர்.

இதைப் பார்த்து அலறி அடித்தபடி பெண்கள் ஓட ஆரம்பித்தனர். ஆனாலும் விடாமல் துரத்தி துரத்தி அடித்ததில் சில பெண்கள் கீழே விழுந்து காயமடைந்தனர்.


மூலம்.த.தமிழ்//
 

StumbleUpon.com Read more...

உலகப்புகழ் பெற்ற அலி சினா அவர்களின் புத்தகம் இப்பொழுது தமிழில்




Understanding Muhammad: A Psychobiography (Tamil Edition) (Paperback)by Ali Sina (Author), Mona Malik Mustafa (Translator)
No customer reviews yet. Be the first.
List Price:
$21.95
Price:
$17.12 & eligible for FREE Super Saver Shipping on orders over $25. Details
You Save:
$4.83 (22%)
In Stock.Ships from and sold by Amazon.com. Gift-wrap available.
Only 4 left in stock--order soon (more on the way).
Want it delivered Wednesday, January 28?
0)
{
FT_hours = (FT_days * 24) + FT_hours;
}
window.setTimeout("FT_getTime()", 1000);
var ftCountdown = getTimeRemainingString( FT_hours, FT_mins );
for ( var i = 0; i =1)
{
FT_showEntireMessageElement(true);
}
FT_givenSeconds = countDownSeconds + FT_actualSeconds;
}
FT_displayCountdown();
}
FT_getCountdown();
-->

Order it in the next 14 hours and 13 minutes, and choose One-Day Shipping at checkout. Details


var timerDiv=document.getElementById("ftMessageTimer");
if (timerDiv && timerDiv.style)
timerDiv.style.display='inline';

14 new from $15.42 3 used from $15.60

http://www.amazon.com/Understanding-Muhammad-Psychobiography-Ali-Sina/dp/0980994837

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP