சமீபத்திய பதிவுகள்

முக்கிய செய்தி:பிரணாப் முகர்ஜியின் இலங்கை பயணம் திடீர் ரத்து.

>> Tuesday, February 24, 2009

கொழும்பு பயணத்தை தவிர்த்தார் முகர்ஜி
 
 
 
பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) வெளிவிவகார அமைச்சர்களின் 31 ஆவது மாநாடு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்துகொள்ளமாட்டார்.
முகர்ஜி மாநாட்டில் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தபோதும் இறுதித்தருணத்தில் அவரின் பயணம் ரத்துசெய்யப்பட்டிருப்பதாக "எக்கனோமிக் ரைம்ஸ்' தெரிவித்தது.
பயங்கரவாதம், பொருளாதார, நிதிஒத்துழைப்பு போன்ற விவகாரங்களுக்கு சார்க் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் முன்னுரிமை கொடுத்து ஆராயப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில் பிரணாப் முகர்ஜிக்குப் பதிலாக இந்திய வெளிவிவகார இணையமைச்சர் ஈ அஹமட்டே கலந்து கொள்வாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்க் அமைப்பின் தற்போதைய தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டை ஆரம்பித்துவைத்து உரையாற்றவுள்ளார். இந்த மாநாட்டில் முகர்ஜி கலந்து கொள்ளாதமைக்கு உள்நாட்டு அரசியல் சூழ்நிலையே காரணமென கருதப்படுகிறது.
இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுவரும் நிலையில் சார்க் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாடு இடம்பெறுகிறது.
இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்திய மத்திய அரசு தூர விலகி நிற்கும் கொள்கையை கடைப்பிடிப்பதாகவும் அவர்களின் நலன்களுக்கு எதிராக செயற்படுவதாக தமிழக கட்சிகள் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் ஆர்ப்பாட்டங்களையும் தினமும் முன்னெடுத்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறார்.
இலங்கையில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துமாறு பாட்டாளி மக்கள் கட்சி, ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல கட்சிகளும் அமைப்புகளும் பல்வேறு வகையான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், குறிப்பிட்ட நடவடிக்கையை எடுக்குமாறு இறைமையுள்ள மற்றொரு நாட்டிடம் இந்திய அரசால் வலியுறுத்த முடியாது என்று பிரணாப் முகர்ஜி கடந்த வாரம் இந்தியப் பாராளுமன்றத்தில் அறிவித்திருப்பது தமிழக கட்சிகளிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் அரசியல், பொருளாதார விடயங்கள் தொடர்பாக அதிகமான வேலைப்பளுவாலேயே முகர்ஜி கொழும்புக்கு வருகை தருவது ரத்து செய்யப்பட்டிருப்பதாக டில்லிச் செய்திகள் தெரிவித்தன.
அதே சமயம் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷாமெஹ்மூட் குரேஷியும் கொழும்பு மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார்.

 

 

StumbleUpon.com Read more...

ராஜபக்சேவின் நாக்கை அறுக்க முடியாதா என்று துடித்துக்கொண்டிருக்கிறோம்

ராஜபக்சேவின் நாக்கை அறுக்க முடியாதா என்று துடித்துக்கொண்டிருக்கிறோம்:வைகோ பேச்சு


இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படக்கோரியும், சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மதுரையில் வக்கீல்கள் தொடர் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 நேற்று மதுரை மாவட்ட கோர்ட்டு முன்பாக வக்கீல்கள் உண்ணாவிரதம் இருந்தனர். வக்கீல்களை தமிழர் தேசிய பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், மதிமுக பொது செயலாளர் வைகோ, பாமக நிறுவனர்  ராமதாஸ் உட்பட பலர் வாழ்த்தி பேசினர்.

மாலை 5 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,  பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.


மதிமுக பொதுசெயலாளர் வைகோ பேசும்போது,


''தமிழீழ மக்களின் துன்பத்தை தவிர்க்க உறக்கத்தில் இருக்கும் தாய் தமிழகம் விழிக்காதா என்று நினைத்த நேரத்தில் தொப்புள்கொடி உறவினரான சகோதரர்களை பாதுகாக்க, வக்கீல்கள் போராட்டத்தில் குதித்திருப்பது பாராட்டுக்குரியது.

எந்த போராட்டம் என்றாலும் கந்தகம் என்னும் தீப்பொறி களம் பதிக்க வேண்டும். அதுபோல தீக்குளித்து இறந்த முத்துக்குமார் என்னும் கந்தகம் மூட்டிய தீயை இனி யாராலும் அணைக்க முடியாது.

 அது இன்று ஐ.நா.சபையிலும் எரிகிறது. இலங்கை தமிழர்களுக்காக 4 மாதங்களாக போராட்டம் நடக்கிறது.

தமிழகத்தில் இருந்து கொண்டு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சுப்பிரமணியசாமி மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை.

தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முட்டைகளை வீசி உள்ளனர். தேனி மாவட்டத்தில் 400 அடி பள்ளத்தில் விழுந்த சிறுவன் உயிர்பிழைக்க மாட்டானா என்று அவனது தயார் போல நாமும் எப்படி ஏங்கினோம்.

அதேபோல இலங்கையில் தாய்மார்கள், குழந்தைகள் அழிக்கப்படும் நிலையில் அவர்களுக்கு அரணாக போராடும் விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்டுவோம் என்று கூறும் ராஜபக்சேவின் நாக்கை அறுக்க முடியாதா என்று நாங்கள் துடித்துக்கொண்டு இருக்கிறோம். சென்னை ஐகோர்ட்டில் கற்களே இருக்காது.

போலீசாரே திட்டமிட்டு மூட்டை, மூட்டையாக கற்களை கொண்டு வந்து வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். தற்காப்புக்காக வக்கீல்களும் தாக்குதலில் ஈடுபட்டதில் தவறில்லை.

வக்கீல்களின் அறவழி போராட்டம் தொடர வேண்டும். அதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்.
 

StumbleUpon.com Read more...

ஆஸ்கார் கிடைத்ததற்கு அதிகம் உணர்ச்சிவசப்பட வேண்டியதில்லை:அமிதாபாச்சன் மனைவி



நன்றி:தினமலர்

StumbleUpon.com Read more...

எந்த நாட்டின் நிர்பந்தத்திற்கும் அடிபனிந்து யுத்த நிறுத்தம் அறிவிக்க முடியாதாம்-இலங்கையின் தெனாவெட்டு

எந்த நாட்டின் நிர்பந்தத்திற்கும் அடிபனிந்து யுத்த நிறுத்தம் அறிவிக்க முடியாதாம்: ரட்னஸ்ரீ விக்ரமநாயக்க.
 



 
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்தம் ஒன்றுக்குச் செல்லுமாறு பல நாடுகள் அரசாங்கத்தகை கேட்டுள்ளன என்பதனை ஏற்றுக் கொள்ளும் அதேவேளை, இலங்கை அரசாங்கமானது யுத்த நிறுத்தமொன்றுக்குத் தயாராகவில்லை என்பதனையும் இந்தச் சந்தர்ப்பத்தில் தான் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று (24.02.2009) தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.




 
 

 

 
 

StumbleUpon.com Read more...

புலிகளின் குரல் வெளீயீடு:24.02.2009 நடந்த ஏறிகணைத்தாக்குதல்

002 001
002 001
 
 
002 003
 
002 003 new
 
 new
002 002
 
 

 
00002 006 new
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

002 004
002 004 new

002 005
002 005 new


 

002 007
002 007 new

002 008
002 008 new


 

002 010
002 010 new

002 011
002 011 new


 

002 013
002 013 ne
 
 
w
 
002 009
002 014
002 014 new
 
 
 
002 012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

StumbleUpon.com Read more...

கடைசி செய்தி: சிறிலங்காவும், புலிகளும் உக்கிர சமர்: இதுவரை 1,000 படையினர் பலி

புதுக்குடியிருப்பு நகரை பிடிக்க முனையும் சிறிலங்காவும், தடுத்து தாக்கும் புலிகளும் உக்கிர சமர்: இதுவரை 1,000 படையினர் பலி
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையின் அதி சிறப்புப் படையணிகள் பலமுனைகளில் மேற்கொள்ளும் படையெடுப்பை எதிர்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் சமரில் ஈடுபட்டுள்ளனர்.
 
 
சிறிலங்கா தரைப் படையின் 53 ஆவது டிவிசன், 58 ஆவது டிவிசன், 59 ஆவது டிவிசன், சிறப்பு தாக்குதல் படைப்பிரிவு - 3 (Task Force - 3) மற்றும் சிறப்பு தாக்குதல் படைப்பிரிவு - 4 (Task Force - 4) ஆகிய அதிசிறப்பு வலிந்த தாக்குதல் படையணிகள் ஐந்து முனைகளில் இருந்து பெரும் படையெடுப்பை நிகழ்த்துகின்றன.
 
கடந்த மூன்று நாட்களாக இந்த ஐந்து முனை முன்னேற்றத்தை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் நிகழ்த்தும் உக்கிர சண்டையில் இதுவரை ஆகக்குறைந்தது 1,000 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3,000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளைப் பீட வட்டாரங்கள் புதினத்திடம் தெரிவித்தன.
 
இன்று மூன்றாவது நாளாக -
 
புதுக்குடியிருப்பை கைப்பற்றுவதற்கான கடும் ஐந்து முனை தாக்குதலில் சிறிலங்கா படையினரும், அவர்களை எதிர்கொண்டு கடும் முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் படையணிகளும் தொடர்ந்தும் கடும் சமரில் ஈடுபட்டுள்ளன.

 

 

StumbleUpon.com Read more...

தமிழின அழிப்பை விடுதலைப்புலிகளால் மட்டும் தான் தடுக்க முடியும்

தமிழின அழிப்பை விடுதலைப்புலிகளால் மட்டும் தான் தடுக்க முடியும்:ராமதாஸ்

 

இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்கும் ராணுவத்தினரை கண்டித்தும், சென்னையில் வக்கீல்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்தும், மதுரையில் மாவட்ட வக்கீல்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்று மாவட்ட கோர்ட்டு முன்பு சங்கத் தலைவர் தர்மராஜ், செயலாளர் ராமசாமி ஆகியோர் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.

உண்ணாவிரதத்தை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

இந்த உண்ணாவிரதத்தில் பேசிய பிறகு ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது,

''இலங்கையில் தற்போது தமிழ் இனம் அழிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு இந்த பிரச்சினையில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும். இருதரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என கூறி வருகிறது.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால் தமிழர்களை யாராலும் காப்பாற்ற முடியாது. இந்த பிரச்சினையில் இலங்கை அரசு என்ன சொல்கிறதோ அதை இந்திய அரசு ஏற்கக்கூடாது.

2004-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தபோது குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு சுயாட்சை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது. இதில் தி.மு.க., பா.ம.க. உட்பட 15 கட்சிகள் கையெழுத்திட்டு இருந்தோம். ஆனால் அந்த கோரிக்கை இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

இலங்கை பிரச்சனை தொடர்பாக நான் டெல்லியில் சோனியாகாந்தியை 35 நிமிடம் சந்தித்து பேசினேன். அவர் ஆர்வத்துடனும், இரக்கத்துடனும் இலங்கை தமிழர் பிரச்சினையை கேட்டறிந்தார். அதன் பிறகு வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப்முகர்ஜியை சந்திக்கும்படி கூறினார்.

ஆனால் நான் அவரை சந்திப்பதற்கு முன்பே அவர் வெளியிட்ட அறிக்கை 7 கோடி தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக அமைந்து விட்டது.

இலங்கையில் வாழும் தமிழர்கள் தங்கள் உரிமைக்காக 60 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். அதில் 30 ஆண்டுகள் சாத்வீகமாகவும், 30 ஆண்டுகள் ஆயுதம் ஏந்தியும் போராடி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள தி.மு.க., பா.ம.க. உட்பட பல கட்சிகள் இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்ப்பதில் ஆர்வமாக உள்ளது.

இலங்கையுடன் வெளியுறவு கொள்கையை வகுக்கும்போது எங்கள் கருத்துக்களை கேட்காமல் வகுக்கக்கூடாது. தமிழக முதல்வரை கலந்து பேசாமல் இலங்கை தொடர்பான வெளியுறவு கொள்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள கூடாது. ஏனென்றால் ஜனாதிபதி உரைக்கு முரண்பாடாக பிரணாப் முகர்ஜியின் அறிக்கை அடுத்த நாளே அமைந்து விட்டது.

இலங்கையில் தற்போது தினமும் 100 பேர் வரை பலியாகி வருகிறார்கள். இப்போது நடக்கும் போர் தமிழ் இன அழிப்பு போராகும். இதை விடுதலைப்புலிகளால் மட்டும் தான் தடுக்க முடியும். தமிழர்களின் உரிமைகளுக்காக போராடி வரும் அமைப்புதான் விடுதலைப்புலிகள் இயக்கம் ஆகும்.

இலங்கை தமிழர் பிரச்சினையை திசை திருப்பத்தான் போலீசார் ஐகோர்ட்டில் வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இது சம்பந்தமாக இதுவரை யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதை கண்டித்து போராட்டம் நடத்த அனுமதி கேட்டால் அனுமதி வழங்க மறுக்கப் படுகிறது. எனவே 27-ந்தேதி போராட்டம் நடத்த மீண்டும் அனுமதி கேட்டு உள்ளோம்.

இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க முதல்-அமைச்சர் கலைஞர் தலைமையில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று தான் கூறினோம். ஆனால் அவர் நாங்கள் நாடகம் ஆடுவதாக கூறுகிறார்.

இலங்கை தமிழர் பிரச்சனையை தீர்ப்பதற் காகத்தான் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கும் தேர்தல் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்று தெரிவித்தார்.

 

http://www.paristamil.com/tamilnews/?p=29519

StumbleUpon.com Read more...

புலிகள் புதுக்குடியிருப்பு நகரையும் இழந்துவிட்டார்கள்?

புதுக்குடியிருப்பு நகரினை கைப்பற்றி விட்டதாக கேகலிய தெரிவிப்பு
இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளித்த அமைச்சர் கேகலிய ரம்புக்வெல,
விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற கடுமையான மோதலின் பின்னர் புதுக்குடியிருப்பு நகர் இன்று செவ்வாய்க்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது என கூறினார்.
தற்போது புதுக்குடியிருப்பு நகரில் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அதனை அண்டிய கிராமங்களை கைப்பற்றும் முயற்சியில் படையினர் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
மோதல்கள் நடைபெற்ற பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளின் இரண்டு உடலங்களை படையினர் மீட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்

 

http://www.swisstamilweb.com/

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP