சமீபத்திய பதிவுகள்

எமது தலைவரின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனியும் மகள் துவாரகாவும் வீரச்சாவடைந்தனர்:செ.பத்மநாதன்

>> Saturday, June 27, 2009

உலகத் தமிழர் ஆதரவுடன் அரசியல் வழிகளில் இனி நாம் போராட்டத்தை முன்னெடுப்போம்: செ.பத்மநாதன்
[
தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற தமிழர்களின் அரசியல் வேட்கைகளுக்காக எமது இயக்கம் ஒரு புதிய பாதையில் இனிப் போராடும். அரசியல் வழியில் போராட்டத்தைத் தொடரும் வகையில் எமது அமைப்பில் நாம் மாற்றங்கள் செய்து வருகின்றோம். அதனடிப்படையில் - புலம்பெயர் தமிழர்களினதும் தமிழ் நாட்டு மக்களதும் ஆதரவுடன் நாம் அனைத்துலக மட்டத்தில் எமது போராட்டத்தை முன்னெடுப்போம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் அறிவித்துள்ளார்.

நேற்று முன்நாள் வியாழக்கிழமை 'இந்தியா ருடே' குழுமத்தின் 'ஹெட்லைன்ஸ் ருடே'க்கு அவர் வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள்:

பிரபாகரன் அவர்களின் மரணம் பற்றிய உண்மைகள் என்ன?

எனக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, எமது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறிலங்கா படைகளுடனான போரில் மே 17 ஆம் நாள் மாவீரர் ஆனார்.
 
இறுதி மணித்துளிகள் வரை நீங்கள் தொடர்பில் இருந்தீர்களா? அந்த இறுதி மணித்துளிகள் எப்படியாக இருந்தன?

ஆம், அவரின் தொடர்பு இணைப்புத் துண்டிக்கப்படும் கடைசி மணி நேரம் வரையில் நான் எமது தலைவருடன் தொடர்பில் இருந்தேன். எனது இறுதித் தொடர்பு கேணல் சூசையுடன் இருந்தது. அந்த நேரத்தில் அவர் சிறிலங்கா படையினருடன் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியை கடைசி மணிவரை வழி நடத்திக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் களத்தில் நடப்பதை விபரமாக அவர் எனக்கு விபரித்தார்.

கடைசி நேரத்தில் சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல் நிறையக் கோரமும் பயங்கரமும் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான எமது மக்கள் கொல்லப்பட்டும் காயப்பட்டும் இருந்தனர். அங்கே மருத்துவர்களோ, மருத்துவ வசதிகளோ, காயப்பட்டவர்களைக் கவனிப்பதற்கு இருக்கவில்லை. மருத்துவ கவனிப்பு இல்லாமல் மக்கள் இறந்து கொண்டிருந்தனர். எமது தலைவர் சிறிலங்கா இராணுவத்துடன் மோதி ஈழத் தமிழ் தேசியத்துக்காக தமது உயிரைத் தியாகம் செய்து கொண்டிருக்கிறார் எனவும் சூசை தெரிவித்தார்.

பிரபாகரனின் குடும்பத்தில் யார், யார் எஞ்சியுள்ளனர்?

எமக்கு கிடைத்த மிக நம்பகரமான தகவல்களின் படி எமது தலைவரின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனியும் மகள் துவாரகாவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணியில் இணைந்து சிறிலங்கா படையினருடனான போரில் இறுதி நேரத்தில் அவர்களும் வீரச்சாவடைந்தனர். இந்தக் கணம் வரை தலைவரின் துணைவியார் மதிவதனியும் இளைய மகன் பாலச்சந்திரனின் கதியும் என்ன என்பது பற்றிய துல்லியமான தகவல் எமக்கு கிடைக்கவில்லை.

'ஹெட்லைன்ஸ் ருடே'க்கு இன்று எரிக் சொல்ஹெய்ம் வழங்கிய பேட்டியில் கடைசிப் போரின் இறுதிக் கணங்கள் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் தம்முடன் தொடர்பில் இருந்தனர் என்று சொல்லியிருந்தார். ஏனைய உலகத் தலைவர்களுடனும் நீங்கள் தொடர்பு வைத்திருந்தீர்களா?

ஆம். நான் சில உலகத் தலைவர்களுடன் தொடர்பு வைத்திருந்தேன். ஆனால் இராஜதந்திரக் காரணங்களுக்காக அத்தகைய தொடர்புகள் பற்றிய தகவல்களை இந்தத் தருணத்தில் எம்மால் வெளியிட முடியாதுள்ளது.

இந்த முயற்சிகள் ஏன் பயன் தராமல் போயின?

போரை நிறுத்த அர்த்தமான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்க முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என அனைத்துலக சமூகம் தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்துள்ளது. ஆயுதங்களை கீழே வைக்கும் முன்பாக ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வு வைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமது தலைமை இருந்தது.

ஆயுதங்களை கீழே வைப்பதற்குப் பதிலாக நாம் ஒரு போர் நிறுத்தத்தையும் அரசியல் தீர்வையும் தேடினோம். தூரதிர்ஷ்டவசமாக எமது கோரிக்கை சிறிலங்கா அரசுக்கு ஏற்க முடியாத காரணத்தால் அனைத்துலக சமூகத்துக்கு அது ஏற்றுக்கொள்ளத்தக்கதாய் இருக்கவில்லை. எனவே போரை நிறுத்த கனதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

கடைசி நேரத்தில் சிறிலங்கா இராணுவத்தின் கடுமையான மிருகத்தனமான தாக்குதல்களின் காரணமாகவும் மருத்துவ வசதிகளும் இல்லாத காரணத்தால் பொதுமக்களினதும் எஞ்சிய வீரர்களின் உயிரைக் காக்கவும் எமது தலைமை துப்பாக்கிகளை அமைதிப்படுத்தியது.

எமது தலைமை துப்பாக்கிகளை நிறுத்தாது விட்டால் அதனை ஒரு சாட்டாக வைத்து சிறிலங்கா அரசு எமது மக்களின் அழிப்பை நியாயப்படுத்திவிடும் எனக் கவலை கொண்டிருந்தது. துப்பாக்கிகளை அமைதிப்படுத்தும் செய்தி எனக்கு 15 ஆம் நாள் மாலை தெரியப்படுத்தப்பட்டது. அது ஒரு வெள்ளிக்கிழமை. அடுத்த 48 மணி நேரமும் நாம் அனைத்துலக சமூகத்துடன் தொடர்ச்சியாகச் செயற்பட்டு உடனடிப் போர் நிறுத்தத்தை நடைமுறையாக்க முயற்சித்து அதில் எமக்குச் சாதகமான சில பதில்களும் கிடைத்திருந்தன.

மீதமான நாட்கள் வார இறுதியான சனி, ஞாயிறு நாட்களாக இருந்த போதும் அனைத்துலக சமூகத்தின் உறுப்பினர்கள் சிறிலங்கா அரசை போர் நிறுத்தம் செய்ய முயற்சித்தனர். ஆனால், சிறிலங்கா அரசின் பதில் மறுப்பாகவே இருந்தது. சிறிலங்கா அரசும் அதன் படையினரும் இறுதித் தாக்குதலிலும் தமது மிருகத்தனமான அழிப்பிலும் பிடிவாதமாக இருந்தனர்.

இந்தியாவில் உள்ள வைகோ, நெடுமாறன் உட்பட பல தமிழீழ வீடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் நீங்கள் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற அறிவித்தலை விடுத்தமைக்காக உங்களைக் கண்டித்துள்ளார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள சிலரும் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை ஏற்க மறுக்கின்றனர். இவற்றை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

நான் தமிழ் மக்களுக்கு விடுத்த செய்தி மிகவும் கெட்டதும் பெரும் துன்பம் நிறைந்ததும் ஆகும். நிச்சயமாக இச்செய்தியை ஏற்கவும் உண்மை என எடுக்கவும் எனக்குப் பல மணி நேரங்கள் பிடித்தது. சில உறுப்பினரும் பெரும் பகுதியான தமிழ் மக்களும் நான் வெளிக்கொணர்ந்த செய்தியை நம்ப முடியாதுள்ளனர். நான் அவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்கிறேன் அவர்களுக்காக மிகுந்த அனுதாபம் கொண்டுள்ளேன். அவர்களின் நடவடிக்கைகள் உணர்வுகளின் வெளிப்பாடுகளின் காரணமாக உள்ளன. ஓரு பொறுப்பு வாய்ந்த விடுதலை இயக்கமாக நாம் எமது மக்களிடம் இருந்து உண்மைகளை மறைத்து விட முடியாது. அரசியல் ரீதியாகவும் எம் மக்களிடம் இருந்து உண்மைகளை மறைப்பது தவறானதாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வன்முறை வழியை கைவிட்டமை அமைப்புக்குள் பரவலான ஆதரவைக் கொண்டுள்ளதா? இது நிரந்தரமானதா அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீளவும் பின்னால் ஆயுதத்தை எடுக்கும் உரிமையைத் தன்வசம் கொண்டுள்ளதா?

எமது துப்பாக்கிகளின் பாவனையை நிறுத்தும் முடிவு எமது தலைவரால் அவரது மறைவுக்கு முன்னர் எடுக்கப்பட்டதாகும். நாம் இப்போது ஒரு புதிய பாதையை நோக்கி முன்னேறுகிறோம். இந்நிலையானது அமைப்புக்குள்ளே பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இது தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் நிலைப்பாடு ஆகும்.

எந்த ஒரு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கொள்கைகளான, தமிழ்த் தேசியத்தின் அங்கீகாரம், வடக்கு - கிழக்கு தமிழரின் வரலாற்றுத் தாயகம் மற்றும் சுயநிர்ணய உரிமை என்பவற்றை அங்கீகரிப்பதாக அமைதல் வேண்டும்.

தமிழ் மக்களின் இந்த அரசியல் வேட்கைகளை அடையும் வரை எமது அரசியல் போராட்டம் தொடரும். நாங்கள் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக நிற்போம். நீங்கள் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தொடக்கத்தில் ஆயுதப் போராட்டம் தோற்றுவதற்கு அடக்குமுறை, ஆக்கிரமிப்பு, அரசியல் முறையான எதிர்ப்புகளையும் ஜனநாயகப் போராட்ட உரிமைகள் என்பனவற்றை அடக்கப்பட்ட மக்களுக்கு மறுத்தமையும், மூலகாரணமாக இருப்பதை இலகுவாக அவதானிக்க முடியும்.

இந்நிலை எமக்கும் ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தமிழ்த் தேசியத்துக்கு ஏற்பட்ட அநீதிகளின் வரலாற்றுப் பிரதிபலனாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் இப்போது அரசியல் வழியைத் தெரிவு செய்துள்ளனர். மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் பற்றிய கேள்வி வரலாற்றில் தமிழ் மக்களின் உரிமையாக விட்டுவிட விரும்புகிறேன்.

அமைப்புக்கு உள்ளும் வெளியிலும் உள்ள ஆதரவாளர்கள் மத்தியில் இப்போதும் ஆயுதப் போராட்டம் மட்டுமே தமிழ் ஈழம் பெறுவதற்கான ஓரே வழி என நம்பும் மக்களைப் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்ட வழியில் எமது தலைவர் பெரும் சவால்களை எதிர்நோக்கி இருந்தார். அக்காலத்தில் நிலவிய நிலைமைகளுக்குள் பெறக்கூடிய அதிகபட்ச நன்மைகளை பெற்று விட்டார். இலட்சியத்துக்காக மிகவும் பாடுபட்டு உழைத்தவர். சுயநலங்களை அச்சாகக் கொண்டு சுழலும் இந்த உலக இயக்கத்துக்கு எமது ஆயுதப் போராட்டம் அனுதாபத்தைப் பெற முடியாது போய்விட்டது.

மாறாக சிறிலங்கா அரசு இன்றைய உலக நிலைப்பாட்டினையும் பூகோள அரசியல் கட்டமைப்புகளையும் தனது பக்கம் அணிதிரட்டி விட்டதை நாம் பார்த்துள்ளோம். நாம் எமது கொள்கைகளிலும் கோரிக்கைகளிலும் உறுதியாக நின்று அடுத்தகட்டப் போராட்டத்தை அரசியல் வழியில் தொடருவதே எம்முன் இருக்கும் சிறந்த தெரிவாக உள்ளது. 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்குத்துக்குள் பிளவு என்றும் அதற்குள் ஒரு பலப்போர் நடக்கிறது என்றும் கூறப்படும் செய்தி அறிக்கைகள் பற்றி உங்கள் பதில் என்ன?

நான் அதனை மறுக்கிறேன். தலைவரின் மரணச் செய்தி அறிவித்தலால் எமக்குள் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன என்பது உண்மைதான். இந்த விடயத்தில் நாம் ஒரு ஒற்றுமையைக் காண்பதில் வெற்றிபெற முடியவில்லை. ஆனால், உரையாடல் மூலம் அதனைத் தீர்த்துவிட உழைத்து வருகிறோம்.

இனிவரும் காலத்தில் அமைப்பில் உங்களது பங்கு என்னவாக இருக்கும்?

தமிழீழ அமைப்பின் அனைத்துலக உறவுகளுக்கான பிரிவின் தலைவராக நான் எமது அரசியல் இலட்சியங்களை வென்றெடுக்கத் தேவையான அனைத்துலக உறவுகள் எதிர்பார்க்கும் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து நடத்துவேன். நாம் அமைப்பில் மறுசீரமைப்புப் பணிகள் பற்றித் திட்டம் இட்டு வருகிறோம். இது முடிவுற்றதும் தமிழ் மக்களுக்கும் உலகத்துக்கும் அறிவிப்போம்.

எதிர்வரும் காலத்தில் புதிய வன்முறைகள் அற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் எத்தகைய பங்கை வகிக்கும்?

தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற தமிழர்களின் அரசியல் வேட்கைகளுக்காகப் போராடும். நாம் ஒரு புதிய பாதையைத் தெரிவுசெய்து விட்டபடியால், நாம் எமது அமைப்பை அரசியல் வழியில் போராட்டத்தைத் தொடரும் வகையில் மாற்றம் செய்து வருகிறோம். அதன் எமது ஒரு செயற்பாடாக புலம்பெயர் தமிழர்களினதும் தமிழ் நாட்டிலும் உலகின் வேறு பகுதிகளிலும் உள்ள தமிழ் உறவுகளினதும் ஆதரவுடன் எமது அமைப்பின் மீது உள்ள அனைத்துலக தடையை நீக்குவதற்காக உழைக்க வேண்டி உள்ளது.

அனைத்துலக சமூகம் முக்கியமாக இந்தியாவும் மேற்குலக நாடுகளும் எமது புதிய வழியை வரவேற்று அதற்கு வெகுமதியாக எமது அமைப்பின் மீது உள்ள தடையை நீக்கி எமது அரசியல் செயற்பாட்டுக்கான வாசற் கதவுகளைத் திறந்து விடுவர் என நாம் நம்புகிறோம்.

நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பற்றி எமக்குக் கூற முடியுமா? ஏனைய வெளியக அரசுகள் பெருமளவு பயனளிக்காத நிலையில் இது எப்படி அவற்றில் இருந்தும் வேறுபடுகிறது?

எமது சட்ட ஆலோசகர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தலைமையில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த அரசுக்கும் வெளியக அரசுக்கும் இடையில் சில கருத்தியல் வேறுபாடுகள் உள்ளன. இதற்கான குழுவின் ஒருங்கிணைப்பாளர் உருத்திரகுமாரன் இக்கேள்விக்கான  மேலதிக பதிலை வழங்கக்கூடிய சரியான நபர் என நான் கருதுகிறேன்.

தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நேரடியாகப் பங்குபற்றுவது பற்றிச் சிந்திக்குமா? நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்பை தேடியிருக்கிறீர்கள். இந்த உறவு எப்படிச் செயற்படும்?

தேர்தலில் கலந்துகொள்வதில் எந்த நியாயமோ தேவையோ இருப்பது எமக்குத் தெரியவில்லை. அரசியல் வழியில் போரிடுவது என்பது கட்டாயமாகத் தேர்தலில் கலந்துகொள்ள வேண்டும் என்பதல்ல. தமிழர் தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற கொள்கைகளின் அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தேர்தல்களில் கலந்துகொள்ளாது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நாம் தேடவில்லை. ஆனால் நாம் புலத்திலும் தாயகத்திலும் அரசியல் நடவடிக்களின் இணக்கப்பாட்டின் முக்கியத்துவம் பற்றி உணருகிறோம். எப்படி ஒரு பொதுவான புரிந்துணர்வு உருவாகிச் செயற்படும் என்பது பற்றி கருத்து தெரிவிப்பதற்கு இது ஏற்ற தருணம் அல்ல.

அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?

சிறிலங்கா அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்து இருக்கலாம். ஆனால், அரசியலில் அல்ல. தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான காரணிகள் கவனத்தில் எடுக்கப்படாமலே உள்ளன. சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இலங்கை மக்களாட்சி பலமான சிங்கள பேரினவாத சர்வாதிகார ஆட்சியாக மாறிவிட்டுள்ளது.

தமிழ் - சிங்கள மக்களை அடக்கும் சாதனங்களாக சிறிலங்காவின் நாடாளுமன்றம் அரசு நீதி பரிபாலனம் செயற்பட்டு வருகின்றன. அண்மையில் இலங்கையில் ஒரு தேசம், ஒரு மக்கள் என்ற அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் கூற்றானது. அந்தத் தீவில் உள்ள தமிழ் - முஸ்லிம் மக்களின் தனித்துவத்தை அங்கீகரிக்காது உள்ளதோடு அங்கே எதிர்வரும் காலத்தில் இன இணக்கப்பாட்டுக்கு எதிர்வரும் காலத்தில் பாரிய பின் விளைவுகளுக்கு வழிசெய்து விடும்.

சிங்கள மேலாதிக்க செயற்பாட்டில் நாட்டை ஆண்டு வரும் நிலையில் அந்தத் தீவில் பெரும்பான்மை சிறுபான்மை இல்லை. ஆனால், தேசப்பற்றாளரும் தேசத் துரோகிகளும் மட்டுமே உள்ளனர் என்பது அபத்தமாக இருக்கிறது. இலங்கை தனது தேசியக் கட்டுமானத்தில் பரிதாபமான தோல்வியைச் சந்தித்து உள்ளதை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச விளங்கிக்கொள்ள வேண்டும்.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் தம்மை இலங்கையர் என அடையாளப்படுத்த விரும்பாது ஈழத் தமிழர்களாகவே அடையாளப்படுத்த விரும்புகின்றனர். சிறிலங்கா அரசை அந்நிய அரசாகவே தமிழர்கள் கருதுகின்றனர். 

இத்தகைய பின்னணியில் தமிழர்களின் அரசியல் வேட்கைகளான தமிழ்த் தேசியம், வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரித்து ஒரு உண்மையான இணக்கப்பாடு காண்பதே எஞ்சியிருக்கும் தனி ஒரு தெரிவாக உள்ளது.

இப்போது மகிந்த ராஜபக்ச மிகப்பலமான மக்கள் ஆதரவைக் கொண்டுள்ளார். அவர் தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளை ஏற்க முன்வரின் சிங்கள மக்களின் எதிர்ப்பு குறைவாக எதிர்நோக்கும் வாய்ப்புகள் உள்ளன. அவர் தம்மை எல்லா இன மக்களையும் சமமாக கருதும் ஒரு உண்மையான தலைவராகக் கருதினால் அவர் தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளை அங்கீகரித்து தம்மை நிரூபிக்க வேண்டிய நேரம் இது.

ஈழப் போர் - 4 என இன்று அழைக்கப்படும் போரில் இந்தியாவின் வகிபாகத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? தமிழ்ப் பொதுமக்களைக் காப்பாற்ற இந்தியாவால் அதிக அளவு செய்திருக்க முடியும் என நினைக்கிறீர்களா?

அண்மைப் போரில் இந்தியா உறுதியாக இலங்கையின் பக்கம் நின்று முழுமையான ஆதரவை வழங்கியது. இது இரகசியமானது அல்ல. சிறிலங்கா தலைவர்களும் இராணுவ அதிகாரிகளும் இந்திய அதிகாரிகளும் பகிரங்கமாக ஏற்றிருந்தனர். எனினும் நாம் இந்தியாவை வெறுக்கவில்லை.

இந்தியாவின் ஏனைய நாடுகளுடனான குறிப்பாக சீனாவுடனான பூகோள அரசியல் போரில் அதற்குத் தமிழ் மக்களின் உண்மையான நம்பகரமான நட்பு இருக்கும் என நாம் கருதுகிறோம். இதனை எதிர்வரும் காலத்தில் இந்தியா உணர்ந்து தமிழ் ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைப் போரை ஆதரிக்கும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதியும் ஏனைய அரசியல் தலைவர்களும் நவம்பர் 2008 ஆம் ஆண்டில் விடுத்த வேண்டுதலை ஏற்று இந்தியா போரை நிறுத்தத் தீர்மானித்திருந்தால் பொதுமக்களைப் பாரியளவில் காப்பாற்றியிருக்க முடியும்.

நீங்கள் இந்தியாவுடன் நேரடித் தொடர்பை மேற்கொள்வீர்களா? நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதில் இந்தியாவுக்கு ஏதும் வகிபாகம் இருக்கிறதா?

ஆம். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி இந்தியாவுடன் நேரடித் தொடர்பு மேற்கொள்ள இருக்கிறேன். தமிழீழ மக்களின் அரசியல் வேட்கைகளை ஆதரிக்கவும் கோருவேன். நாடு கடந்த அரசு அமைப்பு கருத்தியல் நிலையில் உள்ளதால் ஏனைய அரசுகளின் ஆதரவைக் கேட்பது ஒரு முன் நிபந்தனையாக இருக்காது. தேசம் கடந்த அளவில் இது ஒரு புலம்பெயர் தமிழ் மக்கள் மயமான செயற்பாடாகும்.

நிச்சயமாக நட்பு அரசுகளின் ஆதரவு நாடு கடந்த அரசுக்கும் அதன் செயற்பாட்டு நோக்கங்களுக்கும் பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. தற்காலிக நாடு கடந்த அரசமைப்புக் குழு எல்லா நாடுகளுடனும் முக்கியமாக இந்தியாவுடனும் நாடு கடந்த அரசுக்கான ஆதரவைத் தேடும்.

இலங்கையில் இன்னமும் சில விடுதலைப் புலிகப் போராளிகள் செயற்பாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் கிழக்கில் காடுகளில் செயற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கேணல் ராம் பிரபல தலைவர் எனச் சொல்லப்படுகிறது. இக்குழுவைப் பற்றிய தகவல் ஏதும் உங்களிடம் இருக்கிறதா? இக்குழுக்களிடம் இனிமேல் உங்கள் தொடர்பு என்னவாக இருக்கும்?

எமக்கு அவர்களுடன் தொடர்பு இருக்கிறது. அவர்கள் தமது துப்பாக்கிகளின் பாவனையை நிறுத்தி எமது தலைமையிலான புதிய வழிக்குத் திரும்பி எனது வழிகாட்டலில் உள்ளனர். எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய எதுவித வழிமுறையும் ஏற்படுத்திக்கொள்ள முடியாத காரணத்தால் அவர்களின் பாதுகாப்பு பற்றிய கவலை எனக்கு இருக்கிறது. இது விடயத்தில் அனைத்துலக சமூகம் இந்த விடயத்தில் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

உங்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு அனைத்துலக பிரச்சாரம் செய்து உங்களைக் கைது செய்யக் கோருகிறது. இந்த நடவடிக்கைகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் என்ன?

செய்தித் தாள்களில் இச்செய்தியைப் படித்துள்ளேன். தமிழ்த் தேசியம் தனது சட்ட ரீதியான உரிமைகளை வென்றெடுக்கும் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் நானும் பங்காளியாக உள்ளேன். அனைத்துலக சட்டங்களின்படி இப்போராட்டம் நியாயபூர்வமானது. இராணுவத் தோல்வி போராட்டத்தின் நியாயப்பாட்டை அழித்துவிட முடியாது. நான் எந்தக் குற்றமோ மனிதத்துக்கு கெடுதல் செய்யவோ இல்லை.

மேலும் நான் இப்போது எமது அமைப்பை ஒரு அரசியல் அமைப்பாக மாற்றம் செய்து வருகிறேன். இம் மாற்றத்துக்கான முடிவானது எமது தமிழர்களின் தேசிய நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அந்தத் தீவில் உள்ள சிங்கள, இஸ்லாமிய மக்களுக்கும் நன்மையளிக்கக் கூடியது.

அந்தத் தீவினதும் பிராந்தினதும் உறுதிப்பாட்டிற்கும் அமைதிக்கும் முக்கியமானது. இந்த விடயத்தில் பாத்திரம் வகிப்போர் இந்த விடயத்தை யதார்த்த நிலையில் அணுகுவார்கள் என நான் நம்புகிறேன். எது எப்படி இருப்பினும் தமிழ் மக்களுக்காக நான் எவ்வித ஆபத்தையும் உயிரையும் கூடத் தியாகம் செய்யச் சித்தமாக இருக்கிறேன்.

பொட்டு அம்மானின் உண்மை நிலை என்ன, சிறிலங்கா அரசு சொல்கிறது அவர் இறந்து விட்டார் எனவும் ஆனால் அதற்கான சான்றுகளைத் தர முடியாது உள்ளனர்?

எமக்கு கிடைத்த தகவல்களின் படி மே 17 ஆம் நாளில் 2009 இல் இடம்பெற்ற சிறிலங்கா படைகளுக்கு எதிரான போரில் அவரும் மாவீரர் ஆனார் என்றே தெரிகிறது.

StumbleUpon.com Read more...

சமர்க்களங்களின் துணை நாயகன் தீபன் அண்ணா :இந்தப் புயல் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது

தீபன் அண்ணாவும் தமிழீழ போராட்டமும் – ஒரு பார்வை

theepanannaகிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார்.

யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.

தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் – கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது.

தீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த‌ 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற‌ வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.

1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட‌ பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் "தாங்கோ பாப்பா" ஆகும்.

இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார்.

1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான‌ அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும். இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.

1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள்.

இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.

பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட‌ ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை.

1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.

தீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக‌ யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச்சமருக்குத்தலைமை தாங்கினார்.

தீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய‌ இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி‍ 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக்கொடுத்தது.

இந்த‌ இரண்டு ரி‍ 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர்.

1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா.

1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது.

1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பால்ராஜ் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.

யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல்‍ மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார்.

தீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின.

ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும் நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது.

இதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண் அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.

இன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கேணல் கருணா அம்மான் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத்தவறிவிட்டார்.

1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத அலைகள்‍ 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும்.

1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே வாரங்களில் மீளக்கைப்பற்றிக்கொண்டனர்.

ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991 ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத் தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம்.

இத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம் பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ்.

குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம் கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன்.

2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம் படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன்.

அதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18km நீளமான 'L' வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள்(2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன்.

கடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம் திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக் குண்டுத் தாக்குதலில் வீரகாவியமானார்.

25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது.

சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்க‌ப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி, பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை "என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்."

தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களின் நினைவுகள் எம்மனங்களில் நீங்காதிருக்கும் என்பதும்.

 

பால்ராஜ் அண்ணாவின் இறுதி நிகழ்வில் தீபன் அண்ணா, இதுவே தீபன் அண்ணா இறுதியாக கலந்து கொண்ட நிகழ்வு.

StumbleUpon.com Read more...

விடுதலைப்புலிகளின் அரசியல் தலைமைத்துவத்தை மேற்குலகம் ஏற்றுக்கொண்டிருந்தது

கேள்வி: விடுதலைப் புலிகளை முற்றாக முறியடித்துள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்து வருகின்றது, சிறீலங்கா அரசின் இந்த அறிவிப்பின் அர்த்தம் என்ன?

பதில்: கடந்த 2006 ஆம் ஆண்டு உக்கிரமடைந்த நான்காவது ஈழப்போரின் இறுதிச்சமரை சிறீலங்கா அரசு பாரியதொரு இனப்படுகொலையுடன் நிறைவு செய்துள்ளதே தவிர விடுதலைப் புலிகளோ அல்லது தமிழ் மக்களின் உரிமைக்கான போரோ முடிந்துவிட்டதாக அது அர்த்தமாகாது.
ஏனெனில் விடுதலைப்போர் என்பது அதன் குறிக்கோளை அடையும் வரை ஏதோ ஒரு வடிவத்தில் தொடரவே செய்யும். அது ஆயுதப் போராட்டமாகவோ, அரசியல் போராட்டமாகவே அல்லது இராஜதந்திர அணுகுமுறைகளாகவோ இருக்கும்.

நாலாம் கட்ட ஈழப்போர் ஆரம்பிப்பதற்கு முன்னரே விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் மாபெரும் சக்தியாக மாற்றம் பெற்றுவிட்டனர். எங்கெல்லாம் தமிழ் மக்கள் வாழ்கின்றனரோ அங்கெல்லாம் விடுதலைப் புலிகள் அவர்களின் உரிமைக்கான விடிவெள்ளியாக மிளிர்ந்த வண்ணம் தான் உள்ளனர். இன்று அவர்கள் உலெகெங்கும் பரந்து பாரிய விருட்சமாக கிளைபரப்பி நிற்கின்றனர்.

பாரிய படை வளம், அனைத்துலகத்தின் இராணுவ தொழில்நுட்ப உதவிகள் கொண்டு விடுதலைப் புலிகளின் மரபுவழியிலான போரிடும் ஆற்றலை வேண்டுமென்றால் குறைத்துவிட முடியும். ஆனால் அந்த அமைப்பை முற்றாக அழிப்பது என்பது இயலாத காரியம்.

விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றது. ஆனால் உண்மையில் விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் முற்றான அழிவை சந்தித்திருந்தால் அதன் ஏனைய கட்டமைப்புக்கள் சிதறிப்போயிருக்கும். ஆனால் அவ்வாறு நிகழ்ந்ததற்கான சான்றுகள் எதனையும் நாம் காணமுடியவில்லை.

மேலும் தற்போது இந்திய அரசும் சிறீலங்கா அரசும் இணைந்து அனைத்துலகிலும் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்களை சீர்குலைத்துவிட முயன்று வருகின்றன. அதில் அவர்கள் தோல்வி கண்டால் தமிழ்மக்களுக்கு எதிரான போரில் அவர்கள் தோல்வி கண்டதாவவே அர்த்தமாகும்.

ஆனால் சிறீலங்கா அரசு விடுதலைப் புலிகளை முறியடித்து விட்டதாக தொடர்ச்சியாக தெரிவித்து வருவதானது அந்த கருத்துக்குள் தமிழ் மக்களின் உரிமைக்கான போரை வஞ்சகமாக மறைத்துவிடும் முயற்சியாகும்.

கேள்வி: இந்திய அரசின் மீது ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் கோபமும் திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. அது எவ்வாறு இந்திய நலனுக்கு குந்தகமாக அமையும்?

பதில்: இந்திய மத்திய அரசு சிறீலங்கா அரசுடன் இணைந்து தமிழ் மக்களிற்கு எதிராக மிகப்பெரும் இனப்படுகொலையை நடாத்தி முடித்துள்ளது என்பது தான் உண்மையானது. இது அனைத்துலகத்தினாலும் நன்கு அறியப்பட்ட விடயம். இதனை பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் ரைம்ஸ் நாளேடு தொடக்கம் கொரியாவில் இருந்து வெளிவரும் ரைம்ஸ் நாளேடு வரைக்கும் வெளிக்கொண்டுவந்துள்ளன.

இந்தியாவை பொறுத்தவரையிலும் அது தன்னை ஒரு ஜனநாயக நாடாக வெளியுலகத்திற்கு வெளிக்காட்டி வந்த போதும் அண்டைய நாடுகளில் பயங்கரவாத நடவடிக்கைகளை அந்தந்த அரசுகளின் ஊடாக இந்தியா மேற்கொண்டே வந்துள்ளது. ஆனால் தமிழ் மக்களின் விடயத்தில் உலக அரங்கில் இந்தியாவின் ஜனநாயகத்திற்கான முகமூடி கிழிந்துள்ளது.

இரண்டாம் உலகப்போரின் பின்னர் ஒரு சிறுபான்மை இனத்தின் மீது கட்டவிழ்த்துவிட்ட மிகப்பெரும் மனிதப்பேரவலம் இதுவாகும். அதனை இந்தியா மேற்கொண்டது ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் வெறுப்புக்களையும், கோபங்களையும் இந்தியா மீது திருப்பியுள்ளது. தமிழ் இனத்திற்கு எதிரான போரை ஊக்குவித்து வந்த இந்தியாவை சேர்ந்த சில ஆய்வாளர்கள் கூட இந்த கருத்தை முன்வைத்துள்ளனர்.

சீனாவை பொறுத்தவரையில் அது தென்னிலங்கையில் வலுவாக காலுVன்றி விட்டது. ஏறத்தாள ஒரு பில்லியன் டொலர் முதலீடு. அது மட்டுமல்லாது மேலும் பல மில்லியன் டொலர்களை அது உதவியாகவும், ஆயுத தளபாடங்களை அது இலவசமாகவும் சிறீலங்காவுக்கு வழங்கியும் வந்துள்ளது.

விரைவாக வளர்ச்சிகண்டுவரும் சீனாவின் கைத்தொழில்துறை முன்னையதை விட தற்போது பலமடங்கு அதிகமான எரிபொருள் தேவையை உள்வாங்கிவருகின்றது. எனவே அதனை கொண்டுசெல்லும் தென்னாசியாவின் கடற்பாதையின் பாதுகாப்பை அது விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்பதுடன் சீனாவை வெளியேற்றுவது என்பதும் இலகுவான காரியமல்ல.

தற்போது எஞ்சியுள்ளது வடக்கும் கிழக்கும் தான். அங்கு தமிழ் மக்களின் ஆதரவு இன்றி இந்தியா காலுVன்ற முடியுமா என்றால் அது கேள்விக்குறியானதே. அதாவது சிறீலங்கா அரசு மிகவும் தந்திரமாக சீனாவை உள்வாங்குவதற்கும், இந்தியாவை வெளியேற்றுவதற்குமான காரியங்களை நகர்த்தியுள்ளது என்றே கொள்ள முடியும்.

கேள்வி: தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை தமிழக அரசும் அதன் கூட்டணி கட்சிகளும் மறைமுகமாக ஆதரித்துள்ளன என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது தொடர்பாக?

பதில்:தமிழகம் ஏறத்தாள 80 மில்லியன் தமிழ் மக்களை கொண்ட மாநிலம், கடந்த மே மாதம் வன்னிப்பகுதியில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட இறுதித்தாக்குதலை அவர்களால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். அங்கு கொல்லப்பட்ட 20,000 மேற்பட்ட மக்களின் உயிர்களை அவர்கள் காப்பாற்றியிருக்கலாம்.

அங்கு ஆட்சியில் இருந்தவர்கள் நாடகங்களை நடித்தார்களே தவிர எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ள முன்வரவில்லை. அவர்களுக்கு தமிழ் மக்களை காப்பாற்ற கிடைத்த சந்தர்ப்பங்களை கூட அவர்கள் தவறவிட்டிருந்தனர். எனினும் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக சில கட்சிகளும், தமிழின உணர்வாளர்களும் தமிழக மக்களும் ஆதரவுகளை வழங்கியிருந்தனர்.

இருந்த போதும் அவற்றை எல்லாம் ஆளும் கூட்டணி கட்சி சிறுமைப்படுத்தி விட்டது. காங்கிரஸ் ‡ திமுகா தலைமையிலான மாநில கூட்டணி அரசு ஒரு சில தமிழ் மக்களை கூட காப்பாற்ற முன்வரவில்லை.

தமிழகத்தின் அரசியல் கட்சிகளில் புலியின் ஒரு இனத்தின் பெயரை கொண்ட கட்சி ஒன்றின் தலைவர் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை தேர்தலுக்கு முன்னர் மேற்கொண்டிருந்தது நீங்கள் அறிந்ததே. ஈழத்தமிழ் மக்களுக்காக தான் உயிரை துறக்கப்போவது போன்ற பாவனைகளையும் அவர் தோற்றுவித்திருந்தார். ஆனால் தேர்தல் காலத்தில் அவர் மீண்டும் காங்கிரசுடன் இணைந்து கொண்டிருந்தார்.

ஏப்ரல் மாதமளவில் மோதல் மிகவும் உக்கிரமடைந்த போது விடுதலைப் புலிகள் மக்களை பாதுகாப்பாக அகற்றிவிட்டு வெளியேறும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர். எனினும் அவர்களுக்கு பிரச்சனையாக இருந்தது போராளிகள் மற்றும் மாவீரர்களின் குடும்ப உறுப்பினர்களே. சிறீலங்கா படையினர் குழந்தைகளையும், பெண்களையும், காயமடைந்தவர்களையும் படுகொலை செய்வார்கள் என்பது வெளிப்படையானது.

எனவே விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் குடும்பங்களில் உள்ள குழந்தைகளையும், பெண்களையும், முதிய வர்களையும் கொண்ட ஒரு ஆயிரம் பேர் கொண்ட மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க முடியுமா என விடுதலைப் புலிகளின் கேணல் தர உறுப்பினர் ஒருவர் நான் மேல் குறிப்பிட்ட அந்த தலைவரிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.

ஏப்பிரல் மாதம் 20 ஆம் நாள் அந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அந்த மக்களை தாங்களே கொண்டுவந்து விடுவதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் அதற்கு அந்த தலைவர் தான் ஆளும் கட்சியிடம் பேசிவிட்டு பதில் தருவதாக தெரிவித்திருந்தார். அதன் பின்னர் அவர் அதனை மறுத்ததுடன், விடுதலைப் புலிகளுடன் தொடர்புகொள்வதையும் அவர் தவிர்த்து விட்டார்.இன்று அந்த மக்களில் பெரும்பாலனவர்கள் உயிருடன் இல்லை. குழந்தைகளும், பெண்களும் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். ஆனால் இந்திய தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் அந்த கட்சியின் தலைவர் மீண்டும் ஈழத்தமிழ் மக்களை காப்பாற்ற போவதாக கூறிக்கொண்டு பாரிய பேரணி ஒன்றை அண்மையில் நடத்தி முடித்திருந்தார்.

அந்த பேரணியானது எமது மக்களை படுகொலை செய்துவிட்டு அந்த பிஞ்சுக்குழந்தைகளின் சாம்பல் மேட்டில் நடத்தப்பட்ட பேரணியாகவே எனக்கு தோன்றியது. தமிழகத்தின் சில கட்சிகளின் கபட நாடகங்களிற்கு இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே. இவர்கள் எல்லாம் தமது அரசியல் நலன்களை உதறிவிட்டு எப்போது இதயசுத்தியுடன் தமிழ் இனத்தை காப்பாற்ற முன்வருவார்கள் என்பது தான் ஒவ்வொரு தமிழ் குடிமகனினதும் மனதிலும் தற்போது உள்ள ஆதங்கம்.

கேள்வி: இந்தியாவுடன் மேற்குலகமும் இணைந்து தமிழ் மக்களிற்கு எதிரான போரை முன்னடுத்ததாகவே தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் மேற்குலகத்திடம்தற்போது ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது அதற்கான காரணங்கள் என்ன?

பதில்: விடுதலைப் புலிகள் போரிடும் வலு உயர்வாக இருக்கும் போது அமைதி நடவடிக்கைகளில் அவர்கள் அதிக அக்கறை காண்பிக்க மாட்டார்கள் என்ற தோற்றப்பாடு ஒன்று 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டிற்கு பின்னர் மேற்குலக சமூகத்திற்கு ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதுதவறானது.இந்த போலியான பிரச்சாரங்களை நம்பிய மேற்குலகம் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துகின்றோம் என்ற சிறீலங்கா ‡ இந்திய அரசின் கூட்டு நடவடிக்கைகளுக்கு ஆரம்பத்தில் பல ஒத்துழைப்புக்களை வழங்கி வந்திருந்தது. ஆனால் ஒரு எல்லைக்கு அப்பால் போரை துாண்டியவர்களேலேயே சிறீலங்கா ‡ இந்திய கூட்டு அரசுகளின் இந்த போரை நிறுத்த முடியாது போய்விட்டது என்பது தான் உண்மை.

அதாவது சிறீலங்கா ‡ இந்திய அரசுகளின் கூட்டு நடவடிக்கையில் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என அவர்கள் உணர்கின்றனர். விடுதலைப் புலிகள் இல்லாத நிலமை என்பது ஒரு அரசியல் வெற்றிடமாக உள்ளதாக அவர்கள் தொடாச்சியாக தெரிவித்து வரும் கருத்துக்களில் இருந்து ஒன்றை உணர்ந்துகொள்ள முடிகின்றது.

அதாவது விடுதலைப் புலிகளையே அவர்கள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டிருந்தனர் என்பதே அது. ஆயுத நடவடிக்கைகளுக்கு அப்பால் விடுதலைப் புலிகளின் அரசியல் நகர்வுகளுக்கு அவர்களை முக்கியத்துவம் வழங்கியிருந்தனர்.

தற்போதும் அவர்கள் அதனை விடுதலைப் புலிகளிடம் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் இனப்பிரச்சனை னும் அவர்களுக்கு பிரச்சனையாக இருந்தது போராளிகள் மற்றும் மாவீரர்களின் குடும்ப உறுப்பினர்களே. சிறீலங்கா படையினர் குழந்தைகளையும், பெண்களையும், காயமடைந்தவர்களையும் படுகொலை செய்வார்கள் என்பது வெளிப்படையானது.எனவே விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் குடும்பங்களில் உள்ள குழந்தைகளையும், பெண்களையும், முதியவர்களையும் கொண்ட ஒரு ஆயிரம் பேர் கொண்ட மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க முடியுமா என விடுதலைப் புலிகளின் கேணல் தர உறுப்பினர் ஒருவர் நான் மேல் குறிப்பிட்ட அந்த தலைவரிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.

ஏப்பிரல் மாதம் 20 ஆம் நாள் அந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அந்த மக்களை தாங்களே கொண்டுவந்து விடுவதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் அதற்கு அந்த தலைவர் தான் ஆளும் கட்சியிடம் பேசிவிட்டு பதில் தருவதாக தெரிவித்திருந்தார். அதன் பின்னர் அவர் அதனை மறுத்ததுடன், விடுதலைப் புலிகளுடன் தொடர்புகொள்வதையும் அவர் தவிர்த்து விட்டார்.இன்று அந்த மக்களில் பெரும்பாலனவர்கள் உயிருடன் இல்லை. குழந்தைகளும், பெண்களும் படுகொலை செய்
யப்பட்டு விட்டனர். ஆனால் இந்திய தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் அந்த கட்சியின் தலைவர் மீண்டும் ஈழத்தமிழ் மக்களை காப்பாற்ற போவதாக கூறிக்கொண்டு பாரிய பேரணி ஒன்றை அண்மையில் நடத்தி முடித்திருந்தார்.

அந்த பேரணியானது எமது மக்களை படுகொலை செய்துவிட்டு அந்த பிஞ்சுக்குழந்தைகளின் சாம்பல் மேட்டில் நடத்தப்பட்ட பேரணியாகவே எனக்கு தோன்றியது. தமிழகத்தின் சில கட்சிகளின் கபட நாடகங்களிற்கு இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே. இவர்கள் எல்லாம் தமது அரசியல் நலன்களை உதறிவிட்டு எப்போது இதயசுத்தியுடன் தமிழ் இனத்தை காப்பாற்ற முன்வருவார்கள் என்பது தான் ஒவ்வொரு தமிழ் குடிமகனினதும் மனதிலும் தற்போது உள்ள ஆதங்கம்.

கேள்வி: இந்தியாவுடன் மேற்குலகமும் இணைந்து தமிழ் மக்களிற்கு எதிரான போரை முன்னடுத்ததாகவே தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் மேற்குலகத்திடம் தற்போது ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது அதற்கான காரணங்கள் என்ன?

பதில்:விடுதலைப் புலிகள் போரிடும் வலு உயர்வாக இருக்கும் போது அமைதி நடவடிக்கைகளில் அவர்கள் அதிக அக்கறை காண்பிக்க மாட்டார்கள் என்ற தோற்றப்பாடு ஒன்று 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டிற்கு பின்னர் மேற்குலக சமூகத்திற்கு ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அது தவறானது.இந்த போலியான பிரச்சாரங்களை நம்பிய மேற்குலகம் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துகின்றோம் என்ற சிறீலங்கா ‡ இந்திய அரசின் கூட்டு நடவடிக்கைகளுக்கு ஆரம்பத்தில் பல ஒத்துழைப்புக்களை வழங்கி வந்திருந்தது. ஆனால் ஒரு எல்லைக்கு அப்பால் போரை துVண்டியவர்களேலேயே சிறீலங்கா இந்திய கூட்டு அரசுகளின் இந்த போரை நிறுத்த முடியாது போய்விட்டது என்பது தான் உண்மை.
அதாவது சிறீலங்கா ‡ இந்திய அரசுகளின் கூட்டு நடவடிக்கையில் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என அவர்கள் உணர்கின்றனர். விடுதலைப் புலிகள் இல்லாத நிலமை என்பது ஒரு அரசியல் வெற்றிடமாக உள்ளதாக அவர்கள் தொடாச்சியாக தெரிவித்து வரும் கருத்துக்களில் இருந்து ஒன்றை உணர்ந்துகொள்ள முடிகின்றது.

அதாவது விடுதலைப் புலிகளையே அவர்கள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டிருந்தனர் என்பதே அது. ஆயுத நடவடிக்கைகளுக்கு அப்பால் விடுதலைப் புலிகளின் அரசியல் நகர்வுகளுக்கு அவர்களை முக்கியத்துவம் வழங்கியிருந்தனர்.
தற்போதும் அவர்கள் அதனை விடுதலைப் புலிகளிடம் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தொடர்பாக அடுத்து மேற்கொள்ளப்போகும் நகர்வு என்ன என்பது தொடர்பாக அறிவதற்கு ஆவலாக உள்ளதாக மேற்குலகத்தின் இரஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளதுடன், மேற்குலகம் அவர்களின் நிலைப்பாட்டிற்கு பின்னால் நிற்கும் எனவும் கூறியுள்ளார்.

மேற்குலகத்தினரை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் காலுVன்ற விடாது தடுத்ததில் தென் ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் பல ஒன்றிணைந்து செயற்பட்டதும் மேற்குலகத்
திற்கு பாரிய ஏமாற்றமாகும். கடந்த மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நாவின் மனித உரிமை சபைக்கான சிறப்பு விவாதத்தில் இது தெளிவாகி விட்டநிலையில் மேற்குலகத்
திற்கு வேறு ஒரு தரப்பின் ஆதரவுகள் தேவை என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

கேள்வி: மனிதாபிமான பிரச்சனை, அரசியல் பிரச்சனை இவை இரண்டும் தற்போது தமிழ் சமூகம் எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்சனைகள் இதற்கு எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதில் ஏதும் வேறுபாடுகள் உண்டா?

பதில்:இன்று ஒட்டுமொத்த தமிழ் இனமும் இரு முக்கிய பிரச்சனைகளை எதிர்நோக்கி நிற்கின்றன. ஒன்று தமிழ் மக்களின் அறுபத்தியயாரு வருடகால உரிமை போராட்டத்தின் நோக்கமான அரசியல் தீர்வு, இரண்டாவது தற்போது உக்கிரம்பெற்றுள்ள மனிதாபிமான நெருக்கடிக்கான தீர்வு.

தற்போது ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி என்பது எமது உரிமைக்கான ஆயுதப்போராட்டத்தின் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்ட அடக்குமுறையின் விளைவாக தோற்றம் பெற்றது. அது விடுதலைப் போரின் ஒரு பகுதி. எனினும் இந்த சவால்களை நாம் முறியடிக்க வேண்டுமெனில் நாம் எமது அரசியல் உரிமைகளை பெற்றுக்கொண்டாலே அதனை நிரந்தரமாக நீக்க முடியும்.

சிறீலங்கா அரசின் மீது அதற்கான அழுத்தங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டாலும், அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளும் விரைவுபடுத்தப்பட வேண்டும். தடைமுகாம்களில் உள்ள மக்களை விடுவிப்பதாக இருந்தாலும் சரி, கைது
செய்யப்பட்டுள்ள போராளிகளை வெளியில் எடுப்பதாக இருந்தாலும் சரி, மீள்குடியேற்றம் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் சிங்களகுடியேற்றங்களை வெளியேற்றுவது என்றாலும் சரி அதனை மேற்கொள்வதற்கு நாம் எமது அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அனைத்துலகத்தின் மேற்பார்வையில் ஏற்படுத்தப்படும் ஒப்பந்தங்களும், முன்வைக்கப்படும் தீர்வுத்திட்டங்களுமே அதற்கான சிறந்த வழிகளாகும். ஏனெனில் நியாயமான தீர்வு ஒன்று முன்வைக்கப்பட்டு அது சரியாக நடைமுறைப்படுத்தப்படுமாக இருந்தால் சிறீலங்கா அரசின் படை முகாம்கள் கூட வடக்கு கிழக்கில் இருக்கமுடியாத நிலை ஒன்று தோன்றும். அதனை தான் அன்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் திரு அன்ரன் பாலசிங்கமும் தெரிவித்திருந்தார்.

கேள்வி: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிற்கு தாமே சீருடையை அணிவித்ததாக சிறீலங்காவின் 53 ஆவது படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்னா தெரிவித்துள்ளது தொடர்பாக?

பதில்: விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பாக சிறீலங்கா அரசு தெரிவித்துவரும் கருத்துக்களும், புகைப்படங்களும், நடைபெற்ற சம்பவங்களும் ஒன்றுக்கு ஒன்று பல முரண்பாடுகளை கொண்டவை. அதாவது சிறீலங்கா அரசின் பின்னைய தகவல்கள் அவர்களின் முன்னைய தகவல்களை பொய்யாக்கி வருகின்றன.

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு சீருடையை இராணுவம் அணிவித்திருந்தால் அவரின் கைத்துப்பாக்கி அங்கு எவ்வாறு வந்தது என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. மேலும் விடுதலைப் புலிகளின் தலைவரின் கைத்துப்பாக்கி என காண்பிக்கப்பட்ட துப்பாக்கியும் அவருடைய பிரத்தியோக துப்பாக்கியல்ல.

வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் புலனாய்வுத்துறை தலைவர் பொட்டு அம்மான் ஆகியோரினது கைத்துப்பாக்கிகள் தனித்துவமானவை. அவை லேசர் மூலம் வழிநடத்தப்படும் துVரங்களை கணிப்பிடும் கருவிகளை கொண்டவை. நீங்கள் முன்னைய புகைப்படங்களில் இருந்து அவற்றை ஆராய்ந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்லாது அவரின் துப்பாக்கி உறையும் உலோகத்திலானது. அதாவது பட்டனை அமுக்கியதும் துப்பாக்கியை வெளியே தள்ளும் பொறிமுறை கொண்டது. ஆனால் காண்பிக்கப்பட்டவை சாதாரண 9 மி.மீ கைத்துப்பாக்கியும், உறையும் தான். இவ்வாறு நுVறு காரணங்களை முன்வைக்க முடியும். அவற்றை இங்கு கூறுவதாக இருந்தால் அது பல பக்கங்களை நிரப்பிவிடும்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை சிறீலங்கா அரசு தனது பிரச்சாரத்திற்கு பல ஒப்பனைகளை மேற்கொண்டு வருகின்றது என்பதுடன் பல தகவலகளை மறைக்கவும் முற்படுகின்றது. ஆனால் அவற்றின் நோக்கம் ஒன்று தான், அது தமிழ் மக்களின் விடுதலைப் போரை முற்றாக மழுங்கடித்து விடுவதேயாகும்.
அடுத்த வாரம் நிறைவுபெறும்

- படைத்துறை ஆய்வாளர் அருஷ் ஈழமுரசிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில்

StumbleUpon.com Read more...

மீண்டும் பிரபாகரன் தலைமையில் போர் தொடங்கும்

மீண்டும் பிரபாகரன் தலைமையில் போர் தொடங்கும்: பழ.நெடுமாறன்
 
திருச்சியில் தமிழீழ ஆதரவாளர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பொன்னிறைவன் தலைமை தாங்கினர். சோமசுந்தரம் வரவேற்று பேசினர். கூட்டத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: 
 
உலகிலேயே தமிழர் களைத்தான் வீரமரபினர் என்று கூறுவார்கள். ஆனால் இப்போது ஈழத்தமிழர்களைத்தான் வீரமிக்கவர்கள் என்று உலகம் மதிக்கிறது. ஏனென்றால் இலங்கையில் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கு எதிராக இலங்கை ராணுவம் மட்டும் போரிடவில்லை. 
 
இந்தியா, சீனா உள்பட 20 நாடுகள் கூட்டு சேர்ந்து கொண்டு விடுதலைபுலிகளை எதிர்த்து போரிட்டது. இலங்கை ராணுவம் மட்டும் விடுதலை புலிகளை எதிர்த்து போரிட்டது என்றால் விடுதலைப்புலிகளுக்கு தோல்வி ஏற்பட்டிருக்காது.
 
எனினும் இது நிரந்தர தோல்வியில்லை இதில் இருந்து பிரபாகரனும், விடுதலைபுலிகளும் மீள்வார்கள் மீண்டும் பிரபாகரன் தலைமையில் போர் தொடங்கும்.
 
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக 6 1/2 கோடி தமிழர்களும் குரல் கொடுத்தால்தான் உலக தமிழர்களும் மீதி உள்ள ஈழத்தமிழர்களை காப்பாற்ற குரல் கொடுப்பார்கள். அப்போதுதான் உயிர் தியாகம் செய்த முத்துக்குமார், அமரேசன் உள்பட 12 பேரின் உயிர்த்தியாகத்துக்கு பலன் கிடைக்கும். என்றார்.

StumbleUpon.com Read more...

தமிழீழ மக்களவையின் இன்றைய முக்கியத்துவம் என்ன?

 

"புலத்து தமிழர்கள் குறிப்பாகப் புலத்து இளையோர் தமிழீழ மக்களவையாகச் செயற்பட்டு புதிய வடிவில் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய காலமாற்றம் ஏற்படுகிறது என்பதைத் தேசியத்தலைவர் அவர்கள் கடந்த மாவீரர் தின உரையின் முடிவில் போராட்ட வடிவம் புதிய வடிவில் மாறும் என எதிர்வு கூறியிருந்தமையை ஒரு அழைப்பாகவே கருதி இன்று புலத்து மக்கள் ஒன்றாகத் தமிழீழ மக்களவையாகச் செயற்பட வேண்டிய பொறுப்பு மிகு நேரமிது."

தமிழீழ மக்களவையின் இன்றைய முக்கியத்துவம் என்ன?

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் முதன்மைக் கவனத்திற்குரிய பிரச்சினையாகச் சிறிலங்காவின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகித் தவிக்கும் வன்னித் தமிழீழ மக்களின் பிரச்சினை விளங்குகிறது. அதீத மனிதாய தேவையில் அந்த மக்கள் உள்ள நிலை அனைவராலும் உணரப்படுகிறது.

இந்நிலையில் அம்மக்களுக்கான சர்வதேச சட்டங்களுக்குரிய உதவிகளைப் பெற்றுக்கொடுக்க சர்வதேச அரசுக்களுடனும் சர்வதேச அமைப்புக்களுடனும் தாராண்மைவாத ஜனநாயகவழிகளில் போராடும் உரிமை புலத்து தமிழர்களுக்கு உண்டு இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க மக்கள் சக்தி ஒருங்கிணைவதற்குத் தமிழீழ மக்களவை காலத்தின் தேவையாகிறது.

அடுத்து தமிழீழ மக்கள் தமக்கான அரசியல் உரிமைகளை ஜனநாயகவழிகளில் கேட்ட பொழுது சிங்கள பௌத்த பேரினவாத அரசு - அரச பயங்கரவாதத்தினால் தமிழர்களை இனஅழிப்புச் செய்து அடிமைப்படுத்தத் தொடங்கியது வரலாறாக உள்ளது. 1970 முதல் 1978 வரை சிங்களஅரசு பொலிசாரையே இராணுவமாகச் செயற்பட வைத்து தமிழர்களை அழித்தது. பின்னர் தனது இராணுவத்தைக் கொண்டு தமிழ் மக்கள் மேலான யுத்தத்தினை நடத்தி தமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்புச் செய்தது.

இதிலிருந்து தங்கள் உயிர்களையும் உடமைகளையும் தேசத்தையும் காக்கத் தமிழர்கள் தேசிய விடுதலைப்போராட்டத்தை ஆயுத எதிர்ப்பாக முன்னெடுத்து தங்களுக்கான நடைமுறை அரசை தமிழீழத் தேசியத் தலைமையைத் தோற்றுவித்தனர். இதனை தமிழர்கள் மேலான இனஅழிப்பின் மூலம் சிறிலங்கா அழித்து தமிழீழம் என்கிற தமிழர் தாயகத்தை சிங்கள பூமியின் நீட்சியெனக் காட்ட முற்பட்டுள்ளது.

தமிழீழ மக்கள் பேசமுடியாதவாறு ஆயுதமுனையில் வைக்கப்பட்டுள்ளனர். அரசியல் உரிமை கேட்ட ஒரு இனத்தின் எல்லா உரிமைகளுமே பறிக்கப்பட்டு அவர்கள் 21ம் நூற்றாண்டின் கொத்தடிமைகளாகச் சிறிலங்காவால் மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்தத் தமிழீழ மக்களின் அரசியல் குரலாகவும் அடையாளமாகவும் மனிதாயத்தேவைகளை வெளிப்படுத்தும் நிறுவனமாகவும் இலங்குவதற்கு அவர்களின் அனைத்துலக நீட்சியான புலம்பெயர் தமிழீழ மக்களுக்கு தமிழீழ மக்களவை உடனடித்தேவையாகிறது.

தூயகம் தேசியம் தன்னாட்சி என்னும் தமிழீழ மக்களின் அடிப்படை தன்மைகளைப் பேணி இதனை சிறிலங்கா ஒருநாளும் ஏற்காத நிலையில் தமிழீழத் தனியரசே அம்மக்களுக்கான பாதுகாப்பை அமைதியை அளிக்கும் அரசாக முடியும் என்பதைத் தமிழீழத் தேசியத் தலமையின் வழி உலகுக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பும் தமிழீழ மக்களவைக்கு உண்டு.

இன்று சிறிலங்கா செய்துள்ள இனஅழிப்பும் தொடர்கின்ற பகைநாட்டவரை வென்றமை போன்ற வெற்றிக்கூத்தும் தமிழீழ மக்களால் இனியும் சிறிலங்காவென்னும் அரசின் கீழ் வாழ இயலாது என்பதை உலகுக்கு தெளிவாக்கியுள்ளது. இருப்பினும் உலகநாடுகள் தமது சந்தைநலன்களுக்கும் இராணுவநலன்களுக்கும் முக்கியத்துவம் அளித்து அரசு என்னும் தகைமையைப் பெறாத நிலையில் உள்ள உலகின் தொன்மைமிகு தமிழீழ மக்களின் நலன்களைப் புறந்தள்ளி சிறிலங்காவை அதனுடைய சர்வதேசயுத்தக் குற்றச்செயல்களைக் கூட விசாரணைகள் செய்யாது ஏற்று உதவுகின்றன.

இந்நிலையில் அனைத்துலக மட்டத்தில் சர்வதேச மக்களின் துணையுடன் தராண்மைவாத ஜனநாயக வழியில் புலம்பெயர் தமிழர்கள் தமிழீழ மக்களின் நீதிக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அவர்கள் அனைவரையும் அடிமட்டத்தில் இணைக்கின்ற தமிழீழ மக்களவை அவசியமாகிறது. தமிழ்த்தேசியத் தலைமையின் இலக்குகளை நிறைவேற்றும் மக்களவையாக தமிழீழ மக்களவை திகழ வேண்டியது இதன் முக்கியத்துவமாகிறது.

இன்றைய மனிதாயத் தேவைகளை தமிழீழ மக்களவை எவ்வாறு வெளிப்படுத்தலாம்?

வன்னியில் தமிழீழ மக்கள் உணவு சுத்தமான குடிநீர் மருத்துவ வசதிகள் அவர்கள் உடல் நலத்துடன் வாழ்வதற்கான ஆகக்குறைந்த வாழ்விடவெளி மற்றும் மலசலகூட வசதிகள் ஏதுமின்றி துடிக்கின்றனர் அல்லது மிகமிகக்குறைந்த அளவில் இவற்றைப் பெற்ற நிலையில் தவிக்கின்றனர். பாலியல் வன்முறைகளும் இனங்காணக்கூடிய அச்சங்களும் பேச்சு மற்றும் நடமாடும் சுதந்திர மறுப்புகளும் மட்டுமின்றி விரும்பியவாறு சிறிலங்காப்படைகளால் விசாரணை என்ற பெயரிலும் பரிசோதனை என்ற வடிவிலும் வதைக்கப்படும் அவலமும் இந்த மக்களின் நாளாந்த வாழ்வாக உள்ளது.

ஹிட்லரால் உருவாக்கப்பட்ட வதைமுகாங்களின் 21ம் நூற்றாண்டின் மறுபிறப்பாகக் காட்சியளிக்கும் இந்த முட்கம்பி தடுப்பு வெளிகளில் சுத்தமான நீர் காற்று போதிய உணவு தேவையான மருத்துவம் என்பன திட்டமிட்டமுறையில் சிறிலங்கா அரசாங்கத்தால் தடுக்கப்படுவதால் அல்லது தாமதப்படுத்தப்படுவதால் சிறிலங்காவின் இச்செயல்கள் இனஅழிப்புக்கான நோக்கையும் போக்கையும் கொண்டதென உலக மனிதாய நிறுவனங்கள் சுட்டிக்காட்டி வருகின்றன.

இந்நிலையில் இங்கு மக்கள் பட்டினியால் செத்தால் அதற்கு ஐக்கியநாடுகளே பொறுப்பேற்க வேண்டும் என்று சிறிலங்காவின் அமைச்சரே பகிரங்கமாக அறிவித்தும் உள்ளார். இதன்வழி இந்த மக்கள் மேலான தங்கள் பொறுப்பைச் சிறிலங்கா அரசாங்கம் மறுப்பதினால் இந்த மக்கள் மேலான இறைமையையும் சிறிலங்கா தானாகவே இழந்துநிற்கிறது. இதனால் நாடற்ற தேச மக்களாக உள்ள இந்த மக்களுக்கான மனிதாயத் தேவைகளை உடன் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இந்த மக்களின் வெளியக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சர்வதேச அமைப்புக்களினதும் நாடுகளினதுமாக மாறியுள்ளது.

ஆயினும் தங்களின் இராணுவ சந்தைத் தன்னலங்களால் சர்வதேச நிறுவனங்களும் அனைத்துலக நாடுகளும் இம்மக்கள் குறித்த தங்களின் கடமையை கைவிட்டுள்ளமை இன்றைய நிலையாக உள்ளது. இந்நிலையில் புலத்துத் தமிழ் மக்களே இவர்களின் உயிருக்கும் வாழ்வுக்கும் வளத்துக்குமான பாதுகாப்பைச் சர்வதேச முறைமைகள் மூலமாக வழங்கச்செய்வதற்கான பாரிய மனிதாயக் கடமையைச் செய்ய வேண்டியவர்களாக உள்ளனர்.

அதற்கான பணித்தளமாக மக்கள் தம்முள் இணைவை செயற்பாடுகளை செய்யவென தற்பொழுது தமிழீழ மக்களவைகளை அமைக்கத் தொடங்கியுள்ளனர். வெற்றுப்பேச்சை விடுத்து செயல்வழி வாழ்வினை உருவாக்க வேண்டிய காலத்தின் தேவையே இந்த மக்கள் அவைகள்.

சர்வதேச மட்டத்தில் தமிழீழ மக்களவையின் செயற்பாட்டின் அவசியம் எந்த அளவுக்கு முக்கியமானதாகிறது?

தமிழீழ மக்களின் மேலான சிறிலங்காவின் இராணுவ ஆக்கிரமிப்பை அதன் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பேணுவதற்கான நடவடிக்கையென சர்வதேச நாடுகள் நியாயப்படுத்துவதனால் தமிழீழ மக்கள் மேல் சிறிலங்கா நடத்திய இனஅழிப்பு இனத்துடைப்பு மற்றும் யுத்தக்குற்றச் செயல்கள் என்பன குறித்த விசாரணைகளைக் கூட சர்வதேச அமைப்புக்கள் உரிய நேரத்தில் செய்யாது உள்ளன.

இதனால் தங்களுக்கு நீதி கிடைக்காதநிலையில் பாதிப்புற்ற மக்கள் புனர்வாழ்வு பெறுவதற்கான உள்ளத்தையோ உறுதியையோ அடைய முடியாது உளச்சோர்வுக்கும் மனஅழுத்தங்களுக்கும் ஆளாகி தவிக்கின்றனர். இந்நிலையில் இந்தப் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்குவதற்கான முயற்சிகளை எடுத்ததன் பின்னரே சிறிலங்காவிற்கான நிதி மற்றும் திட்ட உதவிகளைச் சர்வதேச நாடுகளும் அமைப்புக்களும் வழங்க வேண்டுமென வலியுறுத்த வேண்டியவர்களாகப் புலத்துத் தமிழர்கள் உள்ளனர்.

இதற்கான நீதியின் குரலாகப் புலத்து மக்கள் தமிழீழ மக்களவைகளை அமைத்துச் செயற்பட வேண்டிய அவசியம் இன்று உள்ளது. அத்துடன் நீதி சமத்துவம் விருப்புத்தெரிவு என்பன புறக்கணிக்கப்பட்டுத் தவிக்கும் தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அம் மக்கள் தங்களுக்கான அரசியல் எதிர்காலத்தை எவ்வாறு நிர்ணயிக்க விரும்புகிறார்கள் என்ற மக்கள் விருப்பை தெரிவிக்கும் குடியொப்பம் ஒன்று சர்வதேச அமைப்பினால் நடாத்தப்பட்டாலே இனியும் சிறிலங்கா அந்தத் தமிழீழ மக்களின் அரசாகத் தொடரும் உரிமை உண்டா இல்லையா என்பதை தெளிவுபடுத்த முடியும். இந்த சர்வதேசக் குடியொப்பத்திற்கான அழுத்தத்தை சர்வதேச மட்டத்தில் மேற்கொள்வதற்கு தமிழீழ மக்களவை மிகவும் முக்கியமான தேவையாகிறது.

பாதுகாப்பதற்கான பொறுப்பு ( Responsibility to Protect R2P) என்னும் ஐ நா வின் கடமைப்பொறுப்பை கையாளாத் தவறியமைக்கு மக்களவை என்ன செய்யலாம்?

உலகின் மற்றயை நாடுகளில் அதீத மனிதாய தேவைகளுக்கு மக்கள் உள்ளான நேரங்களில் அந்த அந்த நாட்டு அரசாங்கங்களின் இறைமைகளை மீறி அவ்வாறு பாதிப்புற்ற மக்களுக்கு நேரடியாக மனிதாய உதவிகளைச் செய்த சர்வதேச அமைப்புக்களும் அரசாங்கங்களும் இன்று உலக மனித வரலாறே காணாத மனிதாய தேவைகளுக்கு உள்ளாகி நிற்கும் வன்னித் தமிழ் மக்களுக்கு இதுவரை ஏற்புடைய நேரடி மனிதாய உதவிகள் எதனையும் சர்வதேச அமைப்புக்கள் நாடுகள் செய்யவில்லை.

மேலும், பாதுகாப்பதற்கான பொறுப்பு ( Responsibility to Protect R2P) என்னும் ஐ நா வின் கடமைப்பொறுப்பை உள் நாட்டுப் பிரச்சினை என்ற பார்வையிலும் நாடொன்று முன்னெடுக்கவில்லை என்ற தன்மையிலும் ஐ நா செயற்படுத்தாமல் விட்டதினால் பட்டினி மரணங்களுக்கும் வைத்தியாலைகள் மற்றும் மக்கள் மேலான சிறிலங்காவின் தாக்குதல்களால் ஏற்பட்ட மரணங்களுக்கும் ஐ நா வும் கூட்டுப்பொறுப்பு என்னும் வரலாறு பதிவாகி விட்டது.

இந்த ஐ நாவினதும் அனைத்துலக நாடுகளினதும் பாகுபாடான போக்கைப் பகிரங்கப்படுத்தி பாதிப்புற்றுள்ள தமிழீழ மக்களுக்கு இவ்வமைப்புகளை நாடுகளை உடன் உதவவைக்க வேண்டிய பணிகளைச் செய்யும் பணித்தளமாக இந்த மக்கள் அவைகள் செயற்பட வேண்டிய நேரமிது.

புலத்தில் மக்கள் வாழும் பகுதிகளில் மக்களவையின் செயற்பாடுகள் எவ்வாறு அமையலாம்?

நாம் வாழும் நாட்டின் ஊடகங்கள் நமது பகுதிகளில் உள்ள வர்த்தக மற்றும் சமுக நிறுவனங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நகரசபை அங்கத்தவர்கள் சமயத்தலைவர்கள் பல்தேசியநிறுவனங்கள் என்பவற்றுக்கு எமது மக்களின் நிலையையும் சிறிலங்காவின் இனஅழிப்பு அரசியலையும் தெளிவாக்க மக்கள் அவைகள் வழி நாம் அனைவரும் அணிதிரள வேண்டிய நிலை உள்ளது.

சிறிலங்கா இன்று என்னத்தைச் செய்துள்ளது? எமது மக்களை எமது தாயகத்தை இராணு ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கி இனஅழிப்பும் கட்டுமானச் சிதைப்பும் செய்கிறது. அவர்களுடைய அரசியல் பணிவை படைபலம் கொண்டு பெறுகின்றனர். இவ்வாறு மக்களின் விருப்பைப் பலவந்தமாகப் பெறும் ஒரு அரசுடைய இறைமையை அந்த அரசு தானாகவே இழக்கிறது. இத்தகைய நிலையில் ஜனநாயகத்தன்மையற்ற அரசை சர்வதேச நாடுகள் ஜனநாயக அரசாகக் கருதமுடியாது.

இத்தகைய அரசியல் மனோநிலைகொண்ட அரசால் நல்லாட்சி என்பதையோ அல்லது மனித உரிமை என்பதையோ செயற்படுத்த இயலாது என்பதை உலகிற்கு எடுத்துக்கூறும் அந்தத்தமிழ் மக்களின் குரலாக இந்த மக்கள் அவைகள் செயற்படல் அவசியம். அங்கு ஜனாநாயகத்தன்மை மறுக்கப்பட்டுள்ளதாலும் அவர்களின் விருப்பத் தெரிவு தடுக்கப்பட்டுள்ளதாலும் புலத்து மக்களவை அந்தப் பாதிப்புற்ற மக்களின் தெரிவுகளைத் தேவைகளை வெளிப்படுத்துமவதற்கான தார்மீக உரிமையைப் பெறுகிறது.

தமிழீழ மக்கள் மேல் மேற்கொள்ளப்பட்டுள்ள இராணுவ ஆக்கிரமிப்பில் தங்கள் நாளாந்த வாழ்வை இழந்து தவிக்கும் மக்களைப்பார்த்து அவர்களின் தமிழ்த்தேசியம் என்ற இனத்துவத் தன்மையைத் துறந்து சிறிலங்காத் தேசியம் என்பதற்குள் சங்கமாகும்படி சிறிலங்கா கட்டாயங்களை வற்புறுத்தல்களை மேற்கொள்கிறது.

அவர்களின் தாயகத்தின் மக்கள் தொகை அமைப்பை வரலாற்றுத்தன்மையை மாற்றிடும் சிங்களக் குடியேற்றங்களும் சிங்களப் பெயரிடுதல்களும் பௌத்தமதத் திணிப்புக்களும் நடைபெறத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் அம்மக்களின் தேசியம் தாயகம் தன்னாட்சி என்பதை தமது குரலினூடாக வெளிப்படுத்தி அம்மக்களினதும் மண்ணினதும் அடையாளத்தைப் பேணும் பொறுப்பு புலத்து தமிழீழ மக்களவைகளுடையதாகிறது.

புலத்துத் தமிழர்களின் தேசங்கடந்த தேசியத்தை (Transnationalism) வளர்ப்பதில் தமிழீழ மக்களவை எந்த அளவுக்கு ஈடுபடலாம்?

இன்று தமிழீழத் தமிழர்கள் உலகெங்கும் உள்ள முக்கிய நாடுகளில் அவற்றின் குடிமக்களாகவும் வதிவிட மக்களாகவும் அரசியல் தஞ்சம் கோரிய மக்களாகவும் வாழ்கின்றனர். இவ்வாறு பல்வேறு நாடுகளில் பரந்து வாழும் ஒரே மொழி பேசும் ஒன்றாக கூடி வாழும் விருப்புள்ளவர்களாகவும் தமிழர்கள் நாங்கள் என்ற எண்ணத்துடனும்; வாழ்கின்றனர். இதனால் இவர்கள் ஒரே தேசியஇனமாகவே திகழ்கின்றனர்.

இவ்வாறு நாட்டு எல்லைகளை கடந்து வாழும் தேசிய இனத்துவத்தை நாட்டு எல்லைகள் கடந்த தேசியம் - (Transnationalism) என்பர். தமிழர்கள் தங்களுடைய தேசங்கடந்த தேசியத்தன்மையைப் பேணுவதற்கும் மக்களவைகளைத் தோற்றுவிப்பதே நடைமுறைச் சாத்தியமானதாக உள்ளது. இவ்விடத்தில் புலம் பெயர் தமிழர்களுக்கு இறைமை இல்லாத காரணத்தால் புலம்பெயர் தமிழர்களின் பொதுத் தேசியத்தன்மையை வெறுமனே தேசங்கடந்த தேசியம் என்றே கூறுவர்.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தைத் தேசங் கடந்த தேசிய அரசாங்கம் (Transnational government) என்பர். இங்கு ஐரோப்பிய அரசுக்களின் இறைமை மூலதனநகர்வு - போக்குவரத்து - உழைப்புக்கான மக்கள் நகர்வு என்பதில் பொதுவாகப் பகிரப்படுகிறது. எனவே தேசங்கடந்த தேசியம் என்பது பல்வேறு நாடுகளில் வாழும் ஓரே தேசியத்தவர்களின் தேசியப்பொதுமையைக் குறிக்கிறது.

ஆனால் தேசங்கடந்த தேசிய அரசாங்கம் என்பது இறைமை கொண்ட அரசாங்கங்கள் பொருளாதாரநலன் கருதி இறைமையில் பகிர்வை மேற்கொள்வதைக் குறிக்கும். இன்றைய நிலைiயில் தமிழீழ மக்களின் இறைமையைச் சிறிலங்காவின் படைகள் ஆக்கிரமித்துள்ள நிலையில் தமிழீழ மக்களின் இறைமை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதை ஏதாவது ஒரு அரசாங்கம் ஏற்றுக்கொண்டால்தான் தமிழீழ மக்களின் தேசங்கடந்த அரசாங்கம் என்ற தன்மை நடைமுறைச் சாத்தியமாகும்.

அதுவரை தமிழீழ மக்களவையே புலத்து தமிழ் மக்களின் தடையில்லாப் பணிக்கு அவசியமாக உள்ளது என்பதுடன் தமிழீழ மக்களவையின் வளர்ச்சியே பின்னர் தேசங்கடந்த அரசாங்கமாக புலம்பெயர் தமிழ் மக்கள் வளர்வதற்கான தன்மையையும் கொடுக்கும். இதனால் தமிழீழ மக்களவை இதற்கான அத்திவாரக்கல்லாகவும் அமைகிறது. அத்துடன் புலத்தில் அரசாங்கம் (Government in Exile) என்னும் அரச உருவாக்க முறைமையும் உலக விடுதலைப்போராட்ட வரலாறுகளில் காணப்பட்டுள்ளது.

இந்த வகை அரச உருவாக்கம் ஒரு நாட்டின் தேசிய விடுதலைப் போராட்ட அமைப்பு ஒன்று அந்த நாட்டிலிருந்து செயற்பட முடியாத நிலை தோன்றுகின்ற பொழுது இன்னொரு நாடு அந்தத் தேசிய விடுதலைப் போராட்டத்தை அங்கீகரித்து தமது நாட்டு எல்லையில் இருந்து பாதிப்புற்ற மக்களின் அரசாக அந்த விடுதலைப்போராட்ட அமைப்பு செயற்படுவதற்கு அனுமதிக்கையில் ஏற்படும். அதாவது புலத்தில் அரசாங்கம் என்பதில் பாதிப்பை ஏற்படுத்திய அரசாங்கத்தின் இறைமை முற்றாக நிராகரிப்பட்டு தமது இறைமையை அங்கீகரிக்குமாறு விடுதலைப் போராட்ட அமைப்பால் கோரிக்கை எழுப்பப்படும்.

இந்தக் கோரிக்கையை அப்போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் இறைமை உள்ள நாடு அங்கீகரித்து மற்றைய நாடுகளையும் அவ்வாறு செய்யும் வண்ணம் தூண்டும். இவ்விதமான அரச உருவாக்கம் ஏற்படுவதற்கு தமிழீழ மக்கள் குறித்த இன்றைய சர்வதேசச் சூழ்நிலை ஏற்டபுடையதாக இல்லை. எனவே இன்றைய காலகட்டத்தில் சர்வதேச சட்டங்களுக்கு ஏற்பச் செயற்படுவதற்கு ஏற்புடைய அமைப்பாக தமிழீழ மக்களவையே விளங்குகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவதன் வெற்றியிலேயே காலப்போக்கில் எத்தகைய அரச உருவாக்க வழிகளினுடாகத் தமிழீழ மக்களுக்கான அரசினை அவர்கள் அடையலாம் என்பது தெளிவாகும்.

வேறு என்ன விடயங்களில் தமிழீழ மக்களவை முக்கியமானதென நினைக்கின்றீர்கள்?

சிங்கள பௌத்த பேரினவாதம் எவ்வாறு தமிழ் மக்களை மனிதர்கள் என்று கூட ஏறெடுத்துப்பார்க்காது இனஅழிப்பில் தமிழீழம் மீதான தன் ஆக்கிரமிப்பை நிறுவியதோ அவ்வாறே உலகின் அமைதியையோ அல்லது எதிர்கால நல்லாட்சித் தன்மையையோ பொருட்படுத்தாது இந்துமாக்கடலில் வல்லரசுக்களினதும் பிராந்திய மேலாண்மைகளினதும் நலன்களுக்குத் தமிழர் தாயகத்து கடற்பரப்பைத் தாரைவார்த்துக் கொடுத்து தன் நலனைப் பேணுகிறது.

இதனால் இன்று உலக ஒழுங்குமுறைக்கோ அல்லது சர்வதேசச் சட்டங்களுக்கோ கட்டு;ப்படாத தனிச்சர்வாதிகார ஆட்சித்தன்மையை சர்வதேசம் தன்னைத் தட்டிக் கேட்க வல்லாண்மைகள் பிராந்திய மேலாண்மைகள் அனுமதிக்கா என்ற உணர்வுடன் சிறிலங்கா அங்கு தோற்றுவித்துள்ளது. இதுவே நாளைய உலகின் பாதுகாப்புக்கான பல அச்சங்களைத் தோன்றச் செய்துள்ளது. இந்த உண்மைகளை உலக மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்; பொறுப்பும் தமிழீழ மக்களவைக்கு உண்டென்பது என் கருத்து

இறுதியாக இன்று தமிழீழப் புலம் பெயர் மக்கள் தங்கள் உறவுகளின் உதிர்வுகளாலும் இடப்பெயர்வுகளாலும் தாங்கொணாத் துன்பங்களில் தவித்துக் கொண்டுள்ளனர். இனி என்ன செய்யலாம் என்பது அவர்களின் கேள்வியாக உள்ளது. இந்நிலையில் தமிழீழ மக்கள் அவைகளாக இந்த மக்கள் மாறுவது அவர்களின் துன்பங்களிலிருந்து அவர்கள் விடுபட்டு வாழ்வின் ஒடுக்கத்தையே புதிய வாழ்வுக்கான பிறப்பாக்க வழி சமைக்கும்.

இதற்குத் துணையாக எல்லாத்தமிழ் மக்களும் அவர்களுடன் இணைந்து நிற்கிறார்கள் என்கையில் புதிய சக்தி புதிய நம்பிக்கை தோன்றும். எமக்கு இவ்வளவு துன்பங்களைத் துயரங்களை விளைத்த விளைத்துக் கொண்டிருக்கிற சிறிலங்கா எமக்கு ஜனநாயக அரசாக அமைவதற்கான தகுதியை இழந்து விட்டது என்பதை அந்த மக்கள் உலகுக்கு உரைப்பதற்கான தன்மையைப் பலத்தை அவர்களுக்கு தமிழீழ மக்கள் அவை வழங்கவேண்டும். அப்பொழுது தேசியத்தலைமை மீண்டெழும். "மரணமில்லாத மனித குலம் ஒன்று இந்த மண்ணில் தோன்ற வேண்டும்;" என்ற கவிவரியின் சாட்சியான எங்கள் மண்ணின் மனிதர்களை மகிந்தாவென்னும் மகிஸா சூரன் வதைத்தாலும் தமிழீழத் தாய் மகிசாவர்த்தினியாகி தர்மத்தை நிலைநாட்டுவாள் என்ற நம்பிக்கையுடன் தமிழீழ மக்கள் உள்ளனர்.

அந்த தமிழீழ அன்னையின் விஜயதசமி வரும் வரை தமிழர்களுக்கு எல்லாம் நவராத்திரிக் காலம் தான். தூங்காது எனவே விழிப்புடன் ஒன்றாக தமிழீழ மக்கள் அவையாகி உறுதியுடன் செயற்பட்டு தமிழீழ அன்னையின் வெற்றிக்கு உதவ வேண்டியது எமது கடமை. இவ்வாறு புலத்து தமிழர்கள் குறிப்பாகப் புலத்து இளையோர் தமிழீழ மக்களவையாகச் செயற்பட்டு புதிய வடிவில் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய காலமாற்றம் ஏற்படுகிறது என்பதைத் தேசியத்தலைவர் அவர்கள் கடந்த மாவீரர் தின உரையின் முடிவில் போராட்ட வடிவம் புதிய வடிவில் மாறும் என எதிர்வு கூறியிருந்தமையை ஒரு அழைப்பாகவே கருதி இன்று புலத்து மக்கள் ஒன்றாகத் தமிழீழ மக்களவையாகச் செயற்பட வேண்டிய பொறுப்பு மிகு நேரமிது. இதுவே இனி தமிழர்களின் வரலாற்றை நிர்ணயிக்கும் காரணியாகும்

ஆக்கம்: சூ.யோ. பற்றிமாகரன், ஆசிரியர் பத்திரிகையாளர் ஆய்வாளர், MA (Politics of Democracy)

BA, BSc, Special Diploma (Oxford)

http://www.tamilkathir.com/news/1526/58//d,full_view.aspx

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP