சமீபத்திய பதிவுகள்

புலம்பெயர் தமிழர்மீது விரிக்கப்படும் சிங்களச் சதி வலைகள்’

>> Tuesday, December 1, 2009

 

pulamதமிழீழ மக்கள் வரலாறு காணாத சோகத்தைச் சுமந்து, அழுவதற்கும் விதி அற்றவர்களாக, அடிமைப்படுத்தப்பட்டு, அடக்கப்பட்டுள்ளார்கள். அந்த சோகத்தைப் புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பான்மையினர் இதயத்தில் சுமந்து வகை தேடி அலைகின்றார்கள்.

ஒன்றிணைந்து போராடுகின்றார்கள். தமிழீழ விடுதலைப் போரின் இன்றைய பின்னணிக்கு எதிரிகள் மட்டும் காரணமல்ல. சிங்கள இனவாத அரச படைகளை தமிழர் தரப்பில் விடுதலைப் புலிகள் தனித்து நின்று எதிர்க்க, சிங்கள தேசத்திற்குப் பின்னால், இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், ஈரான் உட்பட 21 நாடுகள் அணிவகுத்து ஆயுதங்களும், யுத்த தளபாடங்களும் வழங்கியதுடன் உளவுத் தகவல்களையும் பரிமாறிக் கொண்டன. ஆனாலும் தமிழர் படை வீராவேசத்தோடு களத்தில் நின்று போராடின. எதிரிகளை அழிக்க முனைந்த விடுதலைப் புலிகளைத் துரோகிகள் அதே கள முனைகளில் நின்று காட்டிக் கொடுத்த கொடுமைகளும் அரங்கேறியது.

தமிழினத் துரோகியாக மாறி, மகிந்தவின் கைப்பிள்ளையாக அவர் மடியில் வீற்றிருந்த கருணா புலிகளின் போர் யுக்திகளை தான் பெற்ற அனுபவங்களிலிருந்து சொல்லிக் கொடுத்தது மட்டுமல்ல, விடுதலைப் புலிகளின் அணிகள் எந்தெந்த திசைகளில் நகரும், அந்தப் பகுதிகளின் நில அமைப்புக்கள், பாதைகள் என்பவற்றை எல்லாம் படம் போட்டுக் காட்டிக் கொடுத்து ராஜபக்ஷ சகோதரர்களிடமிருந்து பதவிகளையும் சன்மானங்களையும் பெற்றுக்கொண்டார். சமாதான காலத்தில் விடுதலைப் புலிகள் அணியினுள் பல துரோகிகளும் கருணாவால் களம் இறக்கப்பட்டது. விடுதலைப் போராளிகளுடன் போராளிகளாகக் கலந்துகொண்ட இந்தத் துரோகிகளை விடுதலைப் புலிகள் இனம் காணத் தவறிவிட்டார்கள்.

அவர்கள் உள்ளேயிருந்தே தகவல்கள் சொல்லி இலக்குத் தவறாத தாக்குதல்களுக்கு வழி செய்து கொடுத்தார்கள். தமிழீழ மண் அந்த மக்களின் இரத்தத்தால் சிவந்த போதும், தமிழ்த் துரோகிகளின் நெஞ்சத்தில் கருணை சுரக்கவில்லை. மனிதாபிமானம் மிக்க சர்வதேச நாடுகள் யுத்தத்தை நிறுத்திப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க விடுத்த வேண்டுகோள்களெல்லாம் நிராகரிக்கப்பட்டு, உலக அமைப்புக்களால் தடை செய்யப்பட்ட அத்தனை ஆயுதங்களும் பாவித்து தமிழின அழிப்பைத் தீவிரப்படுத்தியது சிங்கள அரசு. மனிதப் பேரவலங்களைத் தடுக்க விடுதலைப் புலிகளால் முடியவில்லை. முள்ளிவாய்க்காலில் சிங்களப் படைகளிடம் சரணடைந்தாவது அந்த அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றும் முடிவினை எடுத்து, சரணடையவும் முன் வந்தார்கள்.

வெள்ளைக் கெடி ஏந்தி நிராயுத பாணிகளாக வந்த தமிழீழ அரசியல் துறைப் பணிப்பாளர் நடேசன், தமிழீழ சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் உட்பட பலர் சிங்களப் படைகளால் யுத்த தர்மங்களையும் மீறிச் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தனை அவலங்களும் இடம் பெற்ற பின்னரும் யுத்தம் நிறுத்தப்படவில்லை. முள்ளிவாய்க்கால் முனையில் வைத்தே பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வயது, பால் வேறுபாடுகளின்றிக் கொன்று குவிக்கப்பட்டனர். கற்பிணிப் பெண்களது வயிறு கிழிந்து சிசுக்களின் உடல் பாகங்கள் வெளியே வந்த கொடூரக் காட்சிகள் கூட அந்த ஈனத் தமிழர்களின் கோர இதயங்களில் இரக்கத்தை உருவாக்கவில்லை.

சிங்கள இனவாதிகளின் கோர தாண்டவத்திற்கு அத்தனை கூலிக் குழுக்களும் தாளம் போட்டன. நடந்து முடிந்த மனிதப் பேரவலங்கள் கருணாவுக்கும், டக்ளசுக்கும், ஆனந்தசங்கரிக்கும் எந்தக் குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. சிங்களத்தின் வெற்றிச் சிரிப்பில் இந்த வெட்கம் கெட்ட மனிதர்களும் இணைந்து கொண்டார்கள். தமிழினம் அதற்காகவும் வெட்கித் தலை குனிந்தது. முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலங்களில் தப்பிய தமிழர்கள் முள்வேலி முகாமுக்குள் வைத்து வதை பட்டார்கள். சந்தேகத்திற்கிடமான தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுப் புதைகுழிக்கு அனுப்பப்பட்டார்கள். சிங்களப் படைகளின் பாலியல் வெறிக்குப் பல யுவதிகளும், சிறுமிகளும் பலியானார்கள்.

ஆனாலும் எம் இனத்தை சிங்கள இனவாத அரசும், அதன் கூலிக் குழுக்களும் நிம்மதியாக வாழ விடுவதாக இல்லை. ஈழத் தமிழர்களின் அத்தனை இன்னல்களையும் போராடித் தீர்க்கவேண்டிய பெரும் பொறுப்புக்கள் புலம் பெயர் தமிழர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் சிங்கள தேசத்தின் கோரக் கரம் புலம்பெயர் தேசங்களிலும் நீண்டு வருகின்றது. புலம்பெயர் தமிழர்களின் பலத்தைச் சிதைப்பதற்கான பல சதித் திட்டங்கள் அரங்கேறுவதற்கு ஆயத்த நிலையில் துரோகத் தமிழர்கள் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களின் துரோக அரங்கேற்றத்தில் ஒன்றே மாவீரர் நாளன்று வெளியிடப்பட்ட கோத்தபாயாவால் தயாரிக்கப்பட்டு, தமிழாக்கம் செய்யப்பட்டு, தளபதி ராம் என்ற பெயரில் வெளிவந்த துண்டுப் பிரசுரமும், சீடியும் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

புலம்பெயர் தமிழீழ மக்களே! எம்மையெல்லாம் முட்டாள்களாக்கி இவர்கள் அரங்கேற்றத் துடிக்கும் துரோகங்களை இனம் கண்டு கொள்ளுங்கள். அத்தனை துரோகங்களையும் துணிவோடு எதிர் கொள்ளுங்கள். "இத்தனை காலம் எங்கிருந்தாய்? என்பது எமக்குத் தேவையற்றது. இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறாய்? என்பதே எமக்குத் தேவையாக உள்ளது" என்ற இறுக்கமான கேள்வியுடன் அவர்களை எதிர்கொள்ளுங்கள். "எதிரிகளிலும் பார்க்க, துரோகிகளே ஆபத்தானவர்கள்" – தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்.

-சி. பாலச்சந்திரன்

நன்றி:ஈழநாடு


source:tamilspy


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பழைய செய்திகள், புதிய உண்மைகள்








source:periyarpinju

StumbleUpon.com Read more...

இடம்பெயர்ந்த மக்கள்: உலகப் பிரமுகர்கள் கவலை

 
பேராயர் டெஸ்மண்ட் டூட்டூ
பேராயர் டெஸ்மண்ட் டூட்டூ
ஆப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவினால் அமைக்கப்பட்ட தி எல்டர்ஸ் என்ற உலகின் முன்னணித் தலைவர்களைக் கொண்ட குழு, இலங்கையில் யுத்தம் காரணமாக இடம்பெயர நேர்ந்த சிவிலியன்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

தி எல்டர்ஸ் அமைப்பின் தற்போதைய தலைவரான தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சிமுறையை எதிர்த்துப் போராடியவர்களில் ஒருவரும் அமைதிக்கான நொபெல் பரிசை வென்றவரும் ஆன பேராயர் டெஸ்மண்ட் டூட்டூ அவர்களின் கையொப்பத்துடன் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

முன்னாள் ஐ.நா. தலைமைச் செயலர் கோஃபி அன்னான், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பின்லாந்தின் முன்னாள் அதிபர் மார்தி அஹ்திஸாரி, நோபெல் பரிசு வென்ற அமெரிக்க அதிபரான் ஜிம்மி கார்ட்டர், இந்தியாவில் சேவா உள்ளிட்ட பல பெண்ணுரிமை அமைப்புகளின் தோற்றுநரான இலா பட், நொபெல் பரிசு வென்ற பர்மாவின் ஜனநாயக ஆதரவு தலைவி ஆங் சான் சூசி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களைக் கொண்டது இந்த எல்டர்ஸ் அமைப்பு.

இலங்கை ஜனாதிபதிக்கு தாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை குறித்து எல்டர்ஸ் அமைப்பின் தற்போதையத் தலைவர் பேராயர் டெஸ்மண்ட் டூட்டூ தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை நேயர்கள் கேட்கலாம்.



source:www.bbc.co.uk


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கேளுங்கள்: செயின்ட் ஹெலினா வானொலியில் ஒலித்த தமி ழ்!

 

 
ஒலிபரப்பு கூடம்
""தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்...' என்றர் மகாகவி பாரதி. இந்த வரிகளை நனவாக்கும் வகையில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள செயின்ட் ஹெலினா தீவின் சிற்றலை வானொலியில் முதன் முறையாக தமிழில் அறிவிப்புகள் ஒலிபரப்பாகின. இப்படி ஒரு தீவு இருப்பதே நம்மில் பலருக்கும் தெரியாத நிலையில் நமது தாய்மொழியில் அங்கு அறிவிப்புகள் ஒலிபரப்பான விதத்தை தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்...

உலக வரைபடத்தில் ஆப்பிரிக்காவுக்கும் - தென் அமெரிக்காவுக்கும் நடுவில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்படும் புள்ளிகளில் ஒன்றாக செயின்ட் ஹெலினா தீவு அடையாளம் காணப்படுகிறது. பூகோள ரீதியாக பார்த்தால் நிலநடு கோட்டுக்கு 15 டிகிரி தெற்கில் ஆப்பிரிக்க நாடான

அங்கோலாவுக்கு மேற்கில் அமைந்துள்ளது இந்தத்தீவு. தெற்கு அட்லாண்டிக் கடலில் இருந்த எரிமலை ஒன்றில் இருந்து வெளியான லாவா உள்ளிட்ட

பொருள்களால் உருவான தீவுகளில் ஒன்றாக பூர்வீகத்தைக் கொண்டது செயின்ட் ஹெலினா தீவு.

ஐரோப்பிய நாடுகளின் நிலபரப்பில் இருந்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதால் நீண்ட தூர கப்பல் பயணம் மேற்கொள்பவர்களுக்கு வழிகாட்டியாகவும், இளைப்பாறும் இடமாகவும் இத்தீவு முக்கியத்துவம் பெற்றது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த பிரிட்டிஷார் கி.பி. 1,500-ம் ஆண்டுகளிலேயே இதனை தங்களது காலனி நாடாக்கிக் கொண்டனர். ஆனால் மற்ற காலனி நாடுகளைவிட இது இங்கிலாந்து அரசுக்கு செல்லப்பிள்ளையாகவே இருந்து வந்தது.

சில ஆயிரம் மக்களே வசிக்கும் இந்தத் தீவு உலகின் இப்போதைய வளர்ச்சியுடன் ஒப்பிட்டு பார்க்கையில் சுமார் 50 ஆண்டுகள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது என்றால் அது மிகையல்ல. வெளிஉலகத் தொடர்புக்கு கப்பல் போக்குவரத்தை மட்டுமே இத்தீவு மக்கள் நம்பியுள்ளனர். குறிப்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டால் அது இந்தத் தீவை சென்றடைய 6 மாதம் ஆகும் என்பதே இவர்களின் தகவல் தொடர்பின் தற்போதைய நிலை.

வளர்ந்த பல நாடுகள் விண்வெளிக்கு செல்ல முயற்சித்துக் கொண்டிருக்கும் சூழலில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கான பூர்வாங்கப்  பணிகளே இப்போதுதான் செயின்ட் ஹெலினா தீவில் தொடங்கியுள்ளது என்பதன் மூலம் இதன் வளர்ச்சி வேகத்தை நாம் உணர முடியும். உலக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற ஆட்சியாளர்களில் ஒருவரான நெப்போலியன் போனபார்ட் இங்கிலாந்து அரசால் 1815-ம் ஆண்டு கைது செய்யப்பட்டபோது, அவர் இங்கு தான் சிறை வைக்கப்பட்டார். 1821 மே மாதம் 5-ம் தேதி இந்தத் தீவிலேயே அவர் உயிரிழந்தார்.

இதனை குறிக்கும் விதத்தில் அவரது நினைவிடமும் இங்கு அமைந்துள்ளது. இதன் காரணமாக உலக வரலாற்றில் தன க்குறிய முக்கியத்துவத்தை பெறுகிறது செயின்ட் ஹெலினா தீவு. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை கடந்து 1967-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளில் இங்கு வானொலி  லிபரப்பு தொடங்கப்பட்டது. 1548 கிலோஹெட்ஸ், 194 மீட்டர் மத்திய அலை ஒலிபரப்பாக இந்த வானொலி நிலையம் தொடக்கம்முதல் செயல்படுகிறது.  இருப்பினும், 11092.5 கிலோஹெட்ஸில் 100 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மட்டும் கேட்கும் வகையில் சிற்றலை ஒலிபரப்பும் செயின் ஹெலினா வானொலியில் தொடங்கப்பட்-டது.

இங்கிலாந்து அரசு மத்திய அலை ஒலிபரப்புக்கு மட்டுமே நிதி உதவி அளித்ததால், எப்போதாவது சில சமயங்களில் மட்டுமே நடைபெற்று வந்த சிற்றலை வானொலி ஒலிபரப்பு 80-ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும், இங்கு ஒலிபரப்பு பணியில் இருந்த சிலர் உலகின் மற்ற பகுதிகளை சேர்ந்த சிற்றலை வானெôலி நேயர்களின் உதவியுடன் ஒலிபரப்பை மீண்டும் தொடங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர். 1993-ம் ஆண்டு முதல் தொடங்கிய இந்த முயற்சிகளின் பலனாக, 2000-ம் ஆண்டு முதல் செயின்ட் ஹெலினா வானெ ôலியின் சிற்றலை ஒலிபரப்பு மீண்டும் தொடங்கியது.

சிற்றலை வானொலி நேயர் குழுக்களின் நிதி உதவியை பெற்று மிகக்குறைந்த அளவான ஒரு கிலோவாட் திறனில் இதன் ஒலிபரப்பு தொடங்கியது. இருப்பினும் நிதி நெருக்கடி காரணமாக ஆண்டு ஒரு நாள் அதாவது நவம்பர் 14 அல்லது 15-ம் தேதியில் மட்டும் கண்டத்துக்கு ஒரு மணி நேரம்  தம் 4 மணி நேரம் இதில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும்.

இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கு ஒரு மணி நேரம், ஜப்பான் மற்றும் எஞ்சிய ஆசிய நாடுகளுக்கு ஒரு மணி நேரம், ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு மணி நேரம், அமெரிக்கா, கரிபியன் நாடுகளுக்கு ஒரு மணி நேரம் என இதன் ஒலிபரப்பு அமைந்துள்ளது. இந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதி இரவு 8 மணிக்கு (இந்திய நேரப்படி 15-ம் தேதி அதிகாலை 1.30மணிக்கு) இந்த ஒலிபரப்பு நடைபெற்றது. ஒவ்வொரு முறையும் அந்தந்த பிராந்தியத்தில்

உள்ள முக்கியமான 2 மொழிகளில் நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்பு ஒலிபரப்பாகும். இந்த முறை இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான

ஒலிபரப்பில் அறிவிப்புகள் தமிழில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையை சேர்ந்த, சர்வதேச வானொலி இதழின் ஆசிரியர் தங்க. ஜெயசக்திவேல் குரலில் தமிழ் அறிவிப்புகள் ஒலிபரப்பானது. ""இது செயின்ட் ஹெலினா வானொலி. தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள செயின்ட் ஹெலினா தீவில் இருந்து நாங்கள் ஒலிபரப்பு கிறோம்...'' என அந்த அறிவிப்பை நினைவுக் கூர்கிறார் தங்க. ஜெயசக்திவேல்.

இந்த வானொலியில் முதன்முதலாக ஒலிபரப்பான தமிழ் அறிவிப்புக்கு குரல் கொடுத்த பெருமை அவருக்கு இருந்தாலும், தமிழர்கள் அனை வருக்குமே  இது பெருமை அளிக்கக் கூடியதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. தமிழின் அருமை பெருமைகளை கெüரவப்படுத்தும் விதத்தில் தமிழ் அறிவிப்பு வழி வகுத்ததில் செயின்ட் ஹெலினா வானொலி நிலையத்தின் மேலாளர் கேரிவால்டர்ஸ் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் பாராட்டுக்குரியவராகிற ôர். ஜப்பானில் உள்ள சிற்றலை வானொலி நேயர் குழுவின் நிதி உதவியின் பேரில் இந்த ஆண்டு ஒலிபரப்பு நடைபெற்றது.

சிற்றலை வானொலி ஒலிபரப்பு மட்டுமல்லாது செயின்ட் ஹெலினா தீவின் அஞ்சல் தலையை பெறுவது என்பதும் அஞ்சல் தலை சேகரிப்பாளர்களிடம் பிரபலமானதாகும்.

பல்வேறு காரணங்களால் சிற்றலை வானொலி ஒலிபரப்பின் வீச்சு குறைந்து வரும் வேளையில் சிற்ற லை நேயர்களை ஊக்குவித்து ஒருங்கிணைக்கும்

வகையில் அமைந்ததால் இதன் ஒலிபரப்பு உலகம் முழுவதும் முக்கியத்துவம் பெறுகிறது. உலக வரைப்படத்தில் ஒரு சிறிய புள்ளியாக இருந்தாலும் தனது சிற்றலை வானொலி ஒலிபரப்பு மூலம் உலகின் பார்வையை செயின் ஹெலினா தீவு தன்பக்கம் திருப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

source:dinamanikathir

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தனித் தமிழீழம் சாத்தியமே திடீரெனக் கிளம்பும் தர்மபுரி தமிழர்!

 



மிழீழத்துக்கான ஆயுதப் போராட்டம் முடிந்து, அரசியல்ரீதியான 
போராட்டங்களின் மூலமாக நாடு கடந்த தமிழீழத்தை அமைக்கிற முயற்சிகள் தீவிரமாகியிருக்கிறது! பன்னாட்டுத் ஈழத் தமிழர்கள் தங்களுக்குள் தேர்தல் நடத்தி, நாடு கடந்த தமிழீழ பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும் தொடங்கி விட்டார்கள்.

டந்த 18-ம் தேதி நார்வே நாட்டில் ஈழத் தமிழர் அவைக்கான தேர்தல் நடந்தது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய் அசோகன் என்ற மாணவர் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால், ''ஈழத் தமிழர் அவைக்கு தமிழ்நாட்டுத் தமிழன் பிரதிநிதியாக இருப்பதா? ஈழத்தில் பிறந்தவர்களுக்கு பிரதிநிதியாகும் சக்தி இல்லையா?'' என சிங்கள மீடியாக்கள் இதை வைத்து உசுப்பல் வேலை தொடங்கிவிட்டன! டெல்லியில் இலங்கையின் தூதராக இருந்த சுதிஷ்வர சேனபிரான் ஒருபடி மேலே போய், ''விடுதலைப் புலிகளின் பணத்தை நிர்வகிக்கும் ஆசையில்தான் தமிழ்நாட்டுத் தமிழன் நார்வே ஈழத் தமிழர் அவைக்கு போட்டி போட்டு வெற்றி பெற்றிருக்கிறார்'' என குற்றம்சாட்டி இருக்கிறார்!

இந்நிலையில், நாம் நார்வேயில் இருக்கும் விஜய் அசோகனை தொடர்புகொண்டு

பேசினோம். ''நான் தர்மபுரி மாவட்டம் பெண்ணகரத்தை சேர்ந்தவன். ரெண்டு வருடங்களுக்கு முன்புதான் ஆராய்ச்சிப் படிப்புக்காக நார்வே வந்தேன். ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரும் சுமக்கும் மாபெரும் வலி, ஒரு தமிழனாக என்னையும் வதைத்துக் கொண்டிருக்கிறது. ரத்தத்தை கொடுத்தும் சுதந்திரக் காற்றை ஈழத் தமிழர்களால் சுவாசிக்க முடியவில்லை. அதனால் அரசியல்ரீதியான பலத்தில்தான் ஈழத்தின் சுதந்திரத்துக்கு ஒளி கொடுக்க முடியும். ஆகவே, நார்வே ஈழத் தமிழர்கள் அவைக்கான தேர்தலில் போட்டியிட்டேன்.அவர்கள் என்னை பெருவாரியான வாக்குகள்வித்தியா சத்தில் தேசியபிரதி நிதியாக்கி இருக்கிறார் கள்...'' என்றவரிடம் அடுத்த கேள்விகளை வைத்தோம்.

''தமிழ்நாட்டு தமிழரான நீங்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதற்கு விமர்சனங்கள் எழுந்திருக்கிறதே?''

''தமிழ்நாட்டு தமிழர்களின் ரத்தத்தில் தமிழ் ரத்தம் ஓட வில்லையா? தமிழர்களிடம் துண் டாடும் வித்தைகளைவிதைத்ததே, சிங்கள இனவெறியர்கள் தான். ஈழத்தில் உக்கிரமான போர் நடந்த போது, தமிழகத்தின் உதவியையும்உறுதுணை யையும் ஈழத் தமிழர்கள் பெரிதாக எதிர்பார்த் தார்கள். அவர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து தமிழ்நாட்டில் எத்தனையோ பேர் தங்கள் உயிரையே தீக்குத் தின்னக் கொடுத் தார்கள். ஈழத் தமிழன் வீழ்ந்தாலும், வெந்தாலும் தமிழ்நாட்டுத் தமிழன்கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டும் என நினைக்கிற அரக்க சக்திகள்தான், வேண்டுமென்றே நமக்குள் துண்டாடலை நடத்திக் கொண்டிருக் கின்றன!''

''நீங்கள் புலிகளின் பணத்தை நிர்வகிக்க நினைப்பதாக இலங்கையின் முன்னாள் தூதர் குற்றம்சாட்டி இருக்கிறாரே?''

''சிறிதளவும் உண்மையோ, அடிப்படையோ இல்லாத குற்றச்சாட்டு இது. அவர் அப்படி சொல்லியதைக் கேட்டு விவரமறிந்தவர்கள் சிரிப்பார்கள்!''

''நாடு கடந்த தமீழழம் சாத்தியம்தானா?''

''ஆயுதம் தாங்கி எந்தளவுக்கு போராட முடியுமோ போராடிப் பார்த்துவிட்டார்கள். சிங்கள ராணுவத்துக்கு சம்மட்டி அடி கொடுக்கும் விதமான தாக்குதல்களை நடத்தி, தமிழ் மக்களின் வாழ்வுக்கு வழி செய்த அவர்களின் வீரியப் போராட்டத்துக்குப் பலன் கிடைக்காமல் போய்விட்டது. ஆயுதம் தாங்கிய போராட்டங்களுக்கு இனரீதியான வதைப்புகள் தான் காரணம் என்பதை உலக மனசாட்சியால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதனால் அரசியல் சார்ந்த பக்குவங்களைக் கையாண்டே தமிழீழத்தை நம்மால் உருவாக்க முடியும். எத்தனையோ நாடுகள் இந்த வகையில் சுதந்திரத்தை எட்டி இருக்கின்றன.

நார்வே ஈழத் தமிழர் அவை மூலமாக நாடு தழுவிய கட்டமைப்பொன்றை உரு வாக்குவதற்கான ஆரம்ப முன்னெடுப்புகள் 2008-ம் ஆண்டே எடுக்கப்பட்டிருக்கின்றன. நார்வேயில் உள்ள தமிழர்களிடத்தில் நடத்தப்பட்ட வாக்குக்கணிப்பில் 99 சதவிகிதத்தினர் சுதந்திரமும் இறையாண்மையும் பொருந்திய தமிழீழத் தனியரசு அமைவதையே வலியுறுத்தி இருந்தார்கள். அவை மூலமாக நார்வே அரசுக்கு அனைத்துவிதமான வலியுறுத்தல்களையும் செய்வோம். நார்வேயில் சில இடங்களில் மட்டுமே வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக தமிழர்கள் இருந்தாலும், இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு காது கொடுக்கத் தயாராக இருக்கின்றன. அதன் மூலமாகவே தமிழீழக் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம். ஒவ்வொரு திசையிலும் இத்தகைய கோரிக்கைகள் உரத்து முழங்கப்பட்டால் கண்டிப்பாக தமிழீழம் சாத்தியம்தான்!''

விலை போன புலி?

'மாவீரர் தினத்தன்று பொட்டு அம்மான் பேசுவார். பிரபாகரனே பேசுவார்'என்றெல்லாம் எதிர்பார்ப்புகள் கூடியிருக்க... இப்போது 'சிங்கள தாக்குதலில் இருந்து இறுதி யுத்தத்தில் தப்பிச் சென்ற புலிகளின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த ராம் பேசுவார்' என்று ஒரு தகவல் வெளியானதும், அந்த இயக்கத்தின் வெளியக பணிப்பிரிவு பொறுப்பாளரான கதிர்காமத்தம்பி அறிவழகன் கடுப்போடு எதிர் அறிக்கை விட்டார். 'யுத்தம் முடியும் நிமிடம் வரையில் இயக்கத்துக்கு விசுவாசமாக இருந்த ராம் மற்றும் நகலன் ஆகியோர் எப்படி திடீரென 'இன்னொரு கருணாவாக' மாறிப்போனார்கள்?' என்று அறிக்கையில் கேட்டுள்ள அறிவழகன்.. 'ஆயுத யுத்தம் முடித்து, உளவியல் போரை தொடங்கி இருக்கிறது சிங்கள அரசு. ராம் மூலமாக நம் இயக்கத்துக்குக் கேடான கருத்துகளை சாமர்த்தியமாகப் பரப்பி, எதிர்கால போராட்டத்தை முடக்கும் தந்திரம்தான் இது!' என்று அறிவழகன் சொன்னதைத் தொடர்ந்து.. 'என்னதான் நடக்கிறது? யாரைத்தான் நம்புவது?' என்று உலகெங்கிலும் உள்ள புலி விசுவாசிகள் மத்தியில் அதிர்ச்சி ப்ளஸ் குழப்பம்!

''ஆரம்பம்தொட்டே ஈழ விவகாரத்தில் சமாதானம் ஏற்படுத்துவதற்காக போராடிய நார்வே அரசு, இறுதிக்கட்ட போரின்போது அமைதியாகி விட்டது ஏன்? குறிப்பாக, மே 18-ம் தேதி நடந்த பெருந் துயரங்களுக்கு நார்வேயைச் சேர்ந்த எரிக் சோல்ஹைமும் ஒருவகையில் காரணமாகிவிட்டார் எனச் சொல்லப்படுகிறதே?''

''இந்தக் கருத்து நார்வேயிலும் நிலவுகிறது. கடைசி நேரத்தில், எரிக் செய்த சில குளறுபடிகளால்தான் புலிகள் ஏமாந்து போனார்கள் என இங்கு பிரசாரமே நடக்கிறது. அதேபோல், நார்வே அரசும் சிங்கள அரசுக்கு தொடர்ந்து சில உதவிகளை வழங்கிக் கொண்டுதான் இருந்தது. ஆதிக்க அரசுகளுக்கு தலையாட்டியதால் தமிழர்களின் துயரங்களை நார்வேயால் தடுக்க முடியவில்லை. ஈழத்தில் வீழ்த்தப்பட்ட தமிழ் மக்களின் ரத்தத் துளி நார்வே மீதும் படிந்திருப்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை!''

''பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும் கொல்லப்பட்டு விட்டதாகவும்... குழப்பம் நீடிக்கிறதே?''

''தலைவர் இருந்தாலும் மடிந்தாலும் தமீழத்தைக் கட்ட எல்லாவித போராட்டங்களையும் அவர் நடத்தினார். அவருடைய பெருங்கனவு தனித் தமிழீழம்தான். அதை நிறைவேற்ற எல்லோரும் கைகோத்தால் அதுவே அந்த தமிழ் வீரனுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்!''

- இரா.சரவணன்   
 
source:vikatan

--
www.thamilislam.co.cc



--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP