சமீபத்திய பதிவுகள்

எல்லா அப்ளிகேஷனுக்கும் அப்டேட்

>> Tuesday, February 9, 2010

 
 
 


விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் செய்ய வேண்டியது, மைக்ரோசாப்ட் நிறுவனம் அளிக்கும் பேட்ச் பைல்களைக் கொண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்வதுதான். அது மட்டுமின்றி இப்போது நாம் பயன்படுத்தும் பிரவுசர்கள் மற்றும் பிற அப்ளிகேஷன் புரோகிராம் களும் அவ்வப்போது பேட்ச் பைல் மூலம் அப்டேட் செய்திட வேண்டியுள்ளது. அப்படியானால் நாம் எத்தனை பைல்களுக்கான அப்டேட் பைல்களைக் கண்காணிக்க முடியும். எம்பி3, வீடியோ, தொலைபேசி, டிவி ட்யூனர், கேமரா மற்றும் மொபைல் இணைப்பிற்கான அப்ளிகேஷன் கள் என அனைத்தையும் நாம் கண்காணித்து அப்டேட் செய்வது எளிதா என்ன? சில வேளைகளில் இது போன்ற புரோகிராம்களுக்கு அப்டேட் இருப்பதாகச் சொல்லி, நம்மை ஒரு குறிப்பிட்ட தளத்திற்கு அழைத்துச் சென்று வைரஸ்களை நம் கம்ப்யூட்டருக்குள் தள்ளிவிடும் போலி புரோகிராம்களும் நிறைய உண்டு. இதற்கெல்லாம் விடிவாக நமக்கு ஒரு புரோகிராம் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இதன் பெயர்Secunia PSI. (PSI Personal Software Inspector)  இதனை என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இந்த புரோகிராம் நம் கம்ப்யூட்டரில் உள்ள பழைய புரோகிராம்களுக்கு அவற்றின் நிறுவனங்கள் அப்டேட் தந்தாலும் தரவிட்டாலும், செகுனியா அனைத்தையும் ஸ்கேன் செய்கிறது. ஸ்கேன் செய்த பின் பாதுகாப்பற்ற அப்ளிகேஷன் புரோகிராம்கள் என ஒரு பட்டியலை நமக்கு அளிக்கிறது. எந்த புரோகிராம்களுக்கெல்லாம் அப்டேட்டட் பைல்கள் உள்ளனவோ அவற்றின் லிங்க்குகளைப் பட்டியலிட்டு தருகிறது. இந்த லிங்க்குகளில் கிளிக் செய்து நம் கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்களை அப்டேட் செய்து கொள்ளலாம். இவற்றுடன் எந்த புரோகிராம்களுக்கு அப்டேட் பைல்களை அவற்றைத் தயாரித்து அளித்த நிறுவனங்கள் தரவில்லையோ அவற்றையும் சுட்டிக் காட்டுகிறது. செகுனியா சிஸ்டம் தொடங்கும்போதே இயங்கி, கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து புரோகிராம்களையும் ஸ்கேன் செய்கிறது. புதிய புரோகிராம்கள் இருந்தால் அவற்றிற்கான அப்டேட் பைல்களை ஆய்வு செய்கிறது. புரோகிராம்களில் ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் கோட் இருந்தால் அதனையும் சுட்டிக் காட்டுகிறது. செகுனியா பி.எஸ்.ஐ. கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் அல்லது பயர்வால் புரோகிராம்களுக்குப் பதிலியாகக் கொள்ள முடியாது. ஆனால் இவை மேற்கொள்ளாத ஒரு முக்கிய வேலையை மேற்கொண்டு நம் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கிறது. இந்த அருமையான பாதுகாப்பு புரோகிராமினைhttp://secunia.com/vulnerability_scanning/personal/  என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம். சென்ற ஆகஸ்ட் மாதம் இதன் அண்மைக் காலத்திய பதிப்பு வெளியானது. பதிப்பு எண் 1.5.0.1. இதன் பைல் சைஸ் 716,320 bytes ஆகும். 18 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு நாளில் சராசரியாக இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 3,228.கொமாடோ ஃபயர்வால் 
கம்ப்யூட்டர் பாதுகாப்பிற்கு பயர்வால் ஒன்று எப்போதும் அவசியமாகும். பொதுவாக நாம் அனைவரும் விண்டோஸ் சிஸ்டம் தொகுப்புடன் வரும் பயர்வால் தொகுப்பினையே பயன்படுத்துகிறோம். ஏனென்றால் இது இலவசமாக ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே இணைத்துத் தரப்படுகிறது. இது நல்லது தான். ஆனால் குறைந்த பட்ச பாதுகாப்பினையே விண்டோஸ் பயர்வால் தருகிறது. தற்போது மற்ற பயர்வால் தொகுப்புகளில் கிடைக்கும், நவீன பாதுகாப்பு வசதிகளை இது தருவதில்லை. ஒவ்வொரு பைலையும் முழுமையாக ஸ்கேன் செய்திடும் வசதி இதில் இல்லை. மேலும் நம்பிக்கைக்குகந்த நெட்வொர்க் கம்யூனிகேஷன் செட் செய்திடும் வசதியும், மைக்ரோசாப்ட் தரும் பயர்வால் தொகுப்பில் இல்லை. இந்த கூடுதல் வசதிகளுடன் ஒரு பயர்வால் தொகுப்பு நமக்கு இணையத்தில் கிடைக்கிறது. அதுவும் இலவசமாகக் கிடைக்கிறது. இது Comodo Firewall Pro என அழைக்கப்படுகிறது. விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா மற்றும் புதிய விண்டோஸ் 7 ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் இது இணைந்து செயல்படுகிறது. 
இதனை http://www.personalfirewall.comodo. com /download_firewall.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்திடலாம்.புதிய டிஜிட்டல் மியூசிக் ப்ளேயர்
ட்ரான்ஸென்ட் நிறுவனம் அண்மையில் புதிய டிஜிட்டல் மியூசிக் பிளேயரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. MP330 என அழைக்கப்படும் இந்த பிளேயர் வழக்கமான பார்மட்களுடன் FLAC (Free Lossless Audio Codec)  என்ற புதிய பார்மட் மற்றும் ஆகிய MP3, WMA, WAV and WMADRM10 ஆகிய பார்மட்களையும் சப்போர்ட் செய்கிறது. இதில் ஏழு ஈக்குவலைசர் செட்டிங்ஸ் தரப்பட்டுள்ளன. இதன் பரிமாணம் 83 x 25.5 x 11.5  மிமீ ஆக உள்ளது. எடை 25 கிராம். இதன் உள்ளாக யு.எஸ்.பி. கனெக்டர் தரப்பட்டுள்ளது. எனவே இதனை வெகு எளிதாக ஒரு யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவ் போலவும் பயன்படுத்தலாம். மற்ற பிளேயருடன் இணைத்து இதில் பாடல்களை பதிவு செய்து கொள்ளலாம். இந்த பிளேயரில் எப்.எம். ரேடியோவும் தரப்பட்டுள்ளது. 2,4 மற்றும் 8 ஜிபி அளவுகளில் (விலை ரூ.2,500, ரூ.3,000 மற்றும் ரூ.4,000) கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கிறது. அனைத்திற்கும் 2 ஆண்டு வாரண்டி தரப்பட்டுள்ளது. ஐந்தில் ஒன்று எங்களுடையது
இந்தியாவில் வளர்ந்து வரும் நோட்புக் கம்ப்யூட்டர் மார்க்கட்டில் 20 சதவிகிதப் பங்கினைப் பெற சோனி இந்தியா நிறுவனம் முயன்று வருகிறது. 2010 ஆம் ஆண்டிற்குள் இந்த இலக்கினை அடைய பல வழிகளை மேற்கொள்கிறது. 
நவீன தொழில் நுட்பத்துடன் பல நோட்புக் கம்ப்யூட்டர்கள் வடிவமைக்கப்பட்டு வெளிவர இருக்கின்றன. அத்துடன் மார்க்கட்டிங் பிரிவிலும் பல மாற்றங்கள் ஏற்படுத்தப் படுகின்றன. இதற்கென ரூ.15 கோடி முதலீடு செய்யப்படுகிறது. தற்போது இயங்கும் 500 விற்பனை மையங்களின் எண்ணிக்கை 1000 ஆக இரு மடங்காக உயர்த்தப்பட உள்ளது. இந்தி திரைப்பட நடிகை கரீனா கபூர் விளம்பர மாடலாக நியமிக்கப்பட்டுள்ளார். வயோ நோட்புக் கம்ப்யூட்டர்களுக்கு மட்டும் என தனியாக 20 மையங்கள் இந்தியாவெங்கும் திறக்கப்பட உள்ளன. தற்போது நோட்புக் கம்ப்யூட்டர் மார்க்கட்டில் சோனி இந்தியா 15% பங்கினைக் கொண்டுள்ளது. இதனை உயர்த்த மிகவும் ஸ்லிம்மான நோட்புக் கம்ப்யூட்டர்களைத் தயாரித்து வழங்குகிறது. ஆப்பிள் மேக்புக் ஏர் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் எடை குறைவாக 655 கிராம் அளவில் சோனி நோட்புக் கம்ப்யூட்டர்கள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP