சமீபத்திய பதிவுகள்

தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து முதல் இடத்தை தக்க வைத்தது இந்தியா

>> Thursday, February 18, 2010


 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 58 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் ரேங்கை தக்க வைத்தது இந்திய அணி

 


 


கோல்கட்டா: டெஸ்ட் அரங்கில் நம்பர் - 1 இடத்தில் உள்ள இந்தியா, கோல்கட்டா டெஸ்ட் போட்டியில் தென்ஆப்ரிக்காவை தோற்கடித்ததன் மூலம் இந்திய அணி இந்த மதிப்பை மீண்டும் தக்கவைத்து கொண்டது. இந்தியா- தென் ஆப்ரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. நாக்பூரில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்து 0-1 கணக்கில் பின்தங்கியது. கோல் கட்டாவில் நடந்த முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 296, இந்தியா 643/6 (டிக்ளேர்) ரன்கள் எடுத்தன. 347 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருந்தது. நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக மைதானம் சுமார் 1 மணி 30 நிமிடம் தாமதமாக ஆட்டம் துவங்கியது. இதனால் 82 ஓவர்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது. மேலும் போதிய வெளிச்சமின்மையால் 4 ம் நாள் ஆட்டம் ஆட்டம் நிறுத்தப்பட்டது. . 35 ஓவர் முடிவில் தென் ஆப்ரிக்க அணி, 3 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்திருந்தது.இன்றைய ( வியாழக்கிழமை ) கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி, தென் ஆப்ரிக்க அணியின் எஞ்சியிருந்த 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது. இதன் மூலம் 2 வது டெஸ்ட்டை இந்தியா ஒரு இன்னிங்ஸ் 58 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை தோற்கடித்தது. இந்த போட்டியில் வெற்றியை தொட்டதால் டெஸ்ட் அரங்கில் நம்பர் - 1 இடத்தை இந்தியா மீண்டும் தக்க வைத்தது.
--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP