சமீபத்திய பதிவுகள்

பெங்களூரு அணி அசத்தல் வெற்றி: கோல்கட்டா அணி பரிதாபம்

>> Saturday, April 10, 2010 

 

பெங்களூரு: கோல்கட்டா அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் டிராவிட், உத்தப்பா அரைசதமடித்து தூள் கிளப்ப, பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. பந்துவீச்சில் சோபிக்கத்தவறிய கோல்கட்டா அணி, தோல்வியடைந்து ஏமாற்றியது.
மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று, தொடரின் 43வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இதில் கும்ளே தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், கங்குலியின் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின.
மீண்டும் இஷாந்த்:
கோல்கட்டா அணியில் இக்பால் அப்துல்லா நீக்கப்பட்டு, இஷாந்த் சர்மா மீண்டும் வாய்ப்பு பெற்றார். பெங்களூரு அணியில் மனீஷ் பாண்டேவுக்கு பதிலாக ஸ்ரீதரன் ஸ்ரீராம் இடம் பிடித்தார். "டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் கும்ளே, "பீல்டிங்' தேர்வு செய்தார்.
மெக்கலம் நம்பிக்கை:
முதலில் பேட்டிங் செய்த கோல்கட்டா அணிக்கு கேப்டன் கங்குலி, கெய்ல் ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. அதிரடியாக ஆடிய கெய்ல் 15 பந்தில் 34 ரன்கள் (ஒரு சிக்சர், 6 பவுண்டரி) எடுத்து அவுட்டானார். பின்னர் இணைந்த கங்குலி, பிரண்டன் மெக்கலம் ஜோடி பொறுப்பாக ஆடியது. இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்த போது கங்குலி (33) வெளியேறினார். அடுத்து வந்த மனோஜ் திவாரி (0), மாத்யூஸ் (1) சோபிக்கவில்லை. மறுமுனையில் அபாரமாக ஆடிய மெக்கலம் (45) நம்பிக்கை அளித்தார். பின்னர் களமிறங்கிய விரிதிமன் சகா (13), புஜாரா (16) சொற்ப ரன்களில் வெளியேறினர். மற்ற வீரர்கள் ஏமாற்ற, கோல்கட்டா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி சார்பில் வினய் குமார் 3, காலிஸ் 2 விக்கெட் வீழ்த்தினர்.
டிராவிட் அபாரம்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு, காலிஸ் (8) மோசமான துவக்கம் அளித்தார். பின்னர் இணைந்த ஸ்ரீராம், டிராவிட் ஜோடி நிதானமாக ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த போது, ஸ்ரீராம் (27) அவுட்டானார். மறுமுனையில் அதிரடி காட்டிய டிராவிட், அரைசதமடித்து அசத்தினார். அபாரமாக ஆடிய இவர் 35 பந்தில் 52 ரன்கள் (2 சிக்சர், 5 பவுண்டரி) எடுத்து வெளியேறினார்.
உத்தப்பா அதிரடி:
பின்னர் ரோஸ் டெய்லருடன் இணைந்த ராபின் உத்தப்பா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசிவரை அவுட்டாகாமல் 22 பந்தில் 52 ரன்கள் (5 சிக்சர், 3 பவுண்டரி) குவித்த உத்தப்பா, ரோஸ் டெய்லர் (14) அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். பெங்களூரு அணி 17.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இத்தொடரின் 4வது லீக் போட்டியில் கோல்கட்டா அணிக்கு எதிராக கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து, அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது. ஆட்ட நாயகனாக பெங்களூரு அணியின் வினய் குமார் தேர்வு செய்யப்பட்டார்.

வினய் துல்லியம்
நேற்று, துல்லியமாக பந்துவீசிய பெங்களூரு அணியின் வினய் குமார் 3 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் இத்தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில், 2வது இடத்தை டில்லி அணியின் அமித் மிஸ்ராவுடன் பகிர்ந்து கொண்டார். இவர்கள் இருவரும் தலா 14 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். முதலிடத்தில் டெக்கான் அணியின் பிரக்யான் ஓஜா (16 விக்.,) உள்ளார்.
காலிஸ் "500'
மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் 500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் பெங்களூரு அணியின் காலிஸ். நேற்று இவர், தனது 7வது ரன்னை கடந்த போது இச்சாதனை நிகழ்த்தினார். இதுவரை 11 போட்டியில் விளையாடிய காலிஸ், 6 அரைசதம் உட்பட 501 ரன்கள் எடுத்துள்ளார்.
கங்குலி அபாரம்
நேற்று, 33 ரன்கள் எடுத்து கோல்கட்டா அணி கேப்டன் கங்குலி, இத்தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் வரிசையில் 3வது இடத்துக்கு முன்னேறினார். இதுவரை இவர் 11 போட்டியில் விளையாடி 366 ரன்கள் எடுத்துள்ளார். முதலிரண்டு இடத்தில் பெங்களூரு அணியின் காலிஸ் (501 ரன்), மும்பை அணியின் சச்சின் (423 ரன்) உள்ளனர்.
பீல்டிங் சொதப்பல்
நேற்று, கோல்கட்டா அணியின் பீல்டிங் படுமந்தமாக இருந்தது. ஆட்டத்தின் முதல் ஓவரில், காலிஸ் கொடுத்த சுலப கேட்சை, கங்குலி கோட்டைவிட்டார். ஆட்டத்தின் 3வது ஒவரில், மீண்டும் காலிஸ் கொடுத்த கேட்சை புஜாரா நழுவவிட்டார். ஆட்டத்தின் 10வது ஓவரில் ஸ்ரீராம் கொடுத்த கேட்சை, அகார்கர் கோட்டைவிட்டார்.
ஸ்கோர் போர்டு
கோல்கட்டா நைட்ரைடர்ஸ்
கங்குலி (கே)கும்ளே (ப)வினய்    33(32)
கெய்ல் (கே)டிராவிட் (ப)காலிஸ்    34(15)
மெக்கலம் (கே)வினய் (ப)கும்ளே    45(36)
திவாரி (கே)ஒயிட் (ப)காலிஸ்    0(2)
மாத்யூஸ் (கே)டெய்லர் (ப)வினய்    1(2)
சகா (கே)வினய் (ப)ஸ்டைன்    13(15)
புஜாரா -ரன் அவுட்-(உத்தப்பா/காலிஸ்)    16(8)
அகார்கர் -அவுட் இல்லை-    6(6)
டிண்டா -ரன் அவுட்-(உத்தப்பா)    0(1)
இஷாந்த் (கே)உத்தப்பா (ப)வினய்    0(2)
மெண்டிஸ் -அவுட் இல்லை-    1(1)
உதிரிகள்    11
மொத்தம் (20 ஓவரில், 9 விக்.,)    160
விக்கெட் வீழ்ச்சி: 1-52(கெய்ல்), 2-103(கங்குலி), 3-103(திவாரி), 4-105(மாத்யூஸ்), 5-134(மெக்கலம்), 6-137(சகா), 7-155(புஜாரா), 8-155(டிண்டா), 9-155(இஷாந்த்).
பந்துவீச்சு: பிரவீண் 3-0-37-0, ஸ்டைன் 4-0-27-1, காலிஸ் 4-0-31-2, கும்ளே 4-0-17-1, ஸ்ரீராம் 2-0-24-0, வினய் 3-0-23-3.
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
ஸ்ரீராம் (ப)டிண்டா    27(29)
காலிஸ் (கே)கெய்ல் (ப)டிண்டா    8(11)
டிராவிட் (கே)அகார்கர் (ப)மாத்யூஸ்    52(35)
உத்தப்பா -அவுட் இல்லை-    52(22)
டெய்லர் -அவுட் இல்லை-    14(6)
உதிரிகள்    11
மொத்தம் (17.1 ஓவரில் 3 விக்.,)    164
விக்கெட் வீழ்ச்சி: 1-11(காலிஸ்), 2-83(ஸ்ரீராம்), 3-102(டிராவிட்).
பந்துவீச்சு: டிண்டா 3.1-0-15-2, இஷாந்த் 4-0-46-0, அகார்கர் 3-0-29-0, மாத்யூஸ் 3-0-25-1, மெண்டிஸ் 4-0-46-0.
புள்ளிப்பட்டியல்
கோல்கட்டா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி கண்ட பெங்களூரு அணி, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.
அணி    போட்டி    வெற்றி    தோல்வி    புள்ளி    ரன்ரேட்
மும்பை    10    7    3    14    +0.958
பெங்களூரு    11    6    5    12    +0.453
டில்லி    10    6    4    12    +0.287
ராஜஸ்தான்    11    6    5    12    -0.139
சென்னை    11    5    6    10    +0.107
கோல்கட்டா    11    5    6    10    --0.426
டெக்கான்    11    5    6    10    -0.539
பஞ்சாப்    11    3    8    6    -0.589
* கோல்கட்டா-பெங்களூரு இடையிலான போட்டி வரை.


source:dinamalar
--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP