சமீபத்திய பதிவுகள்

இன்டர்நெட் கேள்வி - பதில்

>> Saturday, May 8, 2010

 
 

கேள்வி: நான் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்தி வருகிறேன். சென்ற வாரம் என் கம்ப்யூட்டரில் சின்ன பிரச்னைய சரி செய்த மெக்கானிக், பிரச்னை இல்லாமல் இன்டர்நெட் பிரவுஸ் செய்திட மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தக் கூறினார். இதனை எங்கிருந்து பெறலாம்? இலவசமாகக் கிடைக்குமா?
–டி.முத்துராமலிங்கம், உசிலம்பட்டி
பதில்
: நீங்கள் இன்னொரு பிரவுசரையும் பயன்படுத்துவது நல்லது தான். பயர்பாக்ஸ் பிரவுசரை www.mozilla.org  என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களுக்கான பிரவுசர் தொகுப்புகள் கிடைக்கின்றன. ஆனால் பயர்பாக்ஸ் பிரவுசர் முழுமையான 100% பாதுகாப்பு உள்ளது என்று உறுதி அளிக்க முடியாது. ஆனால் பிரவுசர் எதுவாக இருந்தாலும், இன்டர்நெட் இணைப்பின் மூலம் அதனை அவ்வப்போது அப்டேட் செய்திட வேண்டும். இவை தாமாகவே அப்டேட் செய்திடும் வசதி கொண்டவை. அதற்கான செட்டிங்ஸை மட்டும் சரியாக அமைத்திடுங்கள்.


கேள்வி: லேட்டஸ்ட் பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பினை இன்ஸ்டால் செய்தேன். அதில் பிரச்னைகள் பல இருப்பதாகத் தெரிகிறது. பழைய பயர்பாக்ஸ் பிரவுசரே போதும் என்ற முடிவிற்கு வந்துவிட்டேன். பழைய பதிப்பு எங்கு கிடைக்கும்?
–நா. சுந்தர மூர்த்தி, விருதுநகர்
பதில்
: பிரச்னை பற்றி எழுதவில்லை. பயர்பாக்ஸ் பிரவுசரை அதன் தளம் மூலம் அப்டேட் செய்து பார்க்கலாமே. இருப்பினும் உங்கள் கேள்விக்கு விடை சொல்கிறேன். பயர்பாக்ஸ் இல்லாமல் வேறு ஒரு பிரவுசர் மூலம் http://ftp.mozilla.org/pub/mozilla.org/firefox/releases/  என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். அங்கு பயர்பாக்ஸ் பிரவுசரின் எந்த பதிப்பு வேண்டுமோ, அதில் கிளிக் செய்து அதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடவும்.


கேள்வி: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்கப் படுகையில், சிறிது நேரம் விண்டோஸ் லோகோ காட்டப்பட்டு அப்படியே நிற்கிறது. அந்த நேரத்தில் என்ன நடைபெறுகிறது? அதனை நாம் தெரிந்து கொள்ள முடியுமா?
–ஜி.கிருஷ்ணவேணி, மதுரை
பதில்:
இதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற உங்கள் ஆவலை நான் பாராட்டுகிறேன். கம்ப்யூட்டர் பயன்பாட்டில் இப்படி ஒவ்வொன்றையும் கேள்விக் குறியோடு நோக்கினால், நிச்சயம் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். விண்டோஸ் லோகோ காட்டப்படுகையில், அதாவது கம்ப்யூட்டர் பூட் செய்யப்படுகையில், கம்ப்யூட்டரின் சாதனங்கள் இயங்கத் தேவையான டிரைவர் பைல்கள் அனைத்தும் இயங்கு தளத்திற்கு ஏற்றப்படுகின்றன. இந்த டிரைவர் பைல்கள் என்ன என்ன என்று சாதாரணமாகக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவருக்குத் தேவை இல்லை என்பதால், திரையில் விண்டோஸ் லோகோ காட்டப்படுகிறது.
லோகோ காட்டப்படுவதனை நிறுத்தி, அந்த பைல்கள் எவை என்று பார்க்க கீழே காட்டியுள்ளபடி செயல்படவும். Start  அழுத்தி Run  கட்டம் பெறவும். அதில் msconfig என டைப் செய்து என்டர் தட்டவும். உடன் Systems Configuration Utility டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் பூட் ஐ என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் Operating Systems  என்ற பிரிவில் இதற்கான என்ட்ரியைத் தேர்ந்தெடுத்த பின்னர், கீழாக உள்ள Boot Options பிரிவில் /குOகு என்ற ஸ்விட்சைக் கிளிக் செய்திடவும். இப்போது multi(0)disk(0)rdisk(0)partition(5)\WINDOWS='XPProfessional'/noexecute= option/fastdetect  என்ற என்ட்ரி multi(0)disk(0)rdisk(0 )partition(5)\WINDOWS='XPProfessional'/noexecu te=option/fastdetect /sos என மாறும்.
அடுத்து சிஸ்டம் கான்பிகரேஷன் யுடிலிட்டி பாக்ஸை ஓகே கிளிக் செய்து மூடுகையில் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடும்படி நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடுங்கள். இப்போது விண்டோஸ் லோகோ உங்கள் திரையில் தோன்றாது. அதற்குப் பதிலாக என்ன என்ன டிரைவர் பைல்கள் லோட் செய்யப்படுகின்றன என்று காட்டப்படும்.


கேள்வி: என் கம்ப்யூட்டருக்கு ஒரு பெரிய ஹார்ட் டிஸ்க் வாங்கிப் போடும்படி என் நண்பர் கூறுகிறார். அவர் என்ன கூறுகிறார் என்று அவரிடம் கேட்க தயக்கமாக இருக்கிறது. இதனைச் சற்று மிக மிக எளிதாக விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
–பெயர் அனுப்பாத வாசகர், திருப்பூர்
பதில்:
தயக்கமெல்லாம் வேண்டாம் சார்.நமக்குத் தெரியாததை, தெரிந்தவர் களிடம் கேட்டுக் கற்றுக் கொள்வதில் என்ன தவறு? எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.
ஹார்ட் டிஸ்க் டிரைவ் என்பதை ஹார்ட் டிரைவ், ஹார்ட் டிஸ்க் என அழைக்கிறோம். இதில் நாம் அமைக்கும் தகவல்கள், பைல்கள், புரோகிராம்கள் என அனைத்தும் பதியப்பட்டு நமக்குக் கிடைக்கின்றன. இது நம் கம்ப்யூட்டரில் முக்கியமான சாதனமாகும். அப்படியானால், பிளாப்பி, சிடியில் தகவல்கள், பைல்கள் இல்லையா? என நீங்கள் கேட்கலாம். அவற்றிலும் நாம் டேட்டா என்னும் தகவல்களைப் பதிகிறோம். ஆனால் ஹார்ட் டிஸ்க் என்பது நிலையான ஒரு உறுப்பாக கம்ப்யூட்டரில் இணைக்கப் பட்டுள்ளது. உங்கள் கம்ப்யூட்டர் இயக்கத்தினை நீங்கள் நிறுத்திவிட்டால், உங்களின் டேட்டா முழுவதும் ஹார்ட் டிஸ்க்கில் பத்திரமாக இருக்கும். ஒரு ஹார்ட் டிரைவ் உள்ளே வட்ட வடிவில் பல டிஸ்க்குகள், சுழலும் ஸ்பிண்டில் மீது செருகப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். எலக்ட்ரிக் மோட்டார் ஒன்றினால் இது சுழன்று, அனைத்து டிஸ்க்குகளையும் சுழலச் செய்திடும். அப்போது அதில் பதியப்பட்டுள்ள தகவல்கள், அதற்கென உள்ள ஹெட் எனப்படும் சிறிய சாதனம் மூலம் படிக்கப்பட்டு நமக்குத் தரப்படும். அல்லது தரப்படும் தகவல்கள் பதியப்படும். எவ்வளவு வேகமாக இது சுழல்கிறதோ, அவ்வளவு வேகமாகக் கம்ப்யூட்டர் இயங்கும். தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.
பெரிய ஹார்ட் டிஸ்க் என்று உங்கள் நண்பர் கூறுவது அதிகமாக டேட்டாக்களைக் கொள்ளக் கூடிய டிஸ்க்கினைத்தான். இது இயங்க முடியாமல் போனால், தகவல்கள் கிடைக்காது. கம்ப்யூட்டரும் இயங்காது. எனவே இந்த ஹார்ட் டிரைவ் நல்லதாக, நல்ல நிறுவனம் தயாரித்ததாக இருக்க வேண்டும்.


கேள்வி: கேப்சா (CAPCHA) டெஸ்ட் என்பது இன்டர்நெட்டில் நம்மை அடையாளம் காட்டும் ஒருவித சோதனை என்று முன்பு விளக்கம் தந்தீர்கள். கேப்சா என்பது ஒரு சொல்லா? அல்லது பல சொற்களின் கூட்டா?
–ஆர்.கே. ரவீந்திரன், கலசலிங்கம் பல்கலை, கிருஷ்ணன்கோவில்.
பதில்:
நல்ல கேள்வி. நாம் அனுப்பும் தகவல்கள் மனிதர்களால் தரப்படுகிறதா? அல்லது கம்ப்யூட்டரால் தானாக அமைக்கப்படுகிறதா என்று அறியவே இந்த சோதனை. இந்த பொருள் தரும் பல சொற்களின் முன்னெழுத்துச் சொல்லே இது. இதனை விரித்தால் CAPCHA Completely Automated Public Turing [test to tell] Computers and Humans Apart.  என்று கிடைக்கும்.


கேள்வி: நான் புதிதாக இரண்டாவது ஹார்ட் டிஸ்க் ஒன்றை வாங்கியுள்ளேன். என்னுடைய கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து புரோகிராம்ளையும் இதற்கு மாற்றிக் கொள்ளலாமா?
–டி. புவனா, மதுரை
பதில்:
புரோகிராம்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது எம்.எஸ். ஆபீஸ், பேஜ்மேக்கர், போட்டோஷாப் போன்றவை என்று எண்ணுகிறேன். இவற்றை முதல் ஹார்ட் டிஸ்க்கின் சி டிரைவிலேயே வைத்திருக்கவும். அதில் உருவாக்கப்படும் பைல்களை புதிய ஹார்ட் டிஸ்க்கிற்குக் கொண்டு செல்லவும். இதனால் உங்கள் டேட்டா பைல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். சி டிரைவ் உள்ள டிஸ்க் கெட்டுப்போனால், டேட்டா பைல்களைப் பாதுகாப்பாக எடுத்துக் கொள்ளலாம்.
புதிய ஹார்ட் டிஸ்க்கில் தான் புரோகிராம்கள் வைக்கப்பட வேண்டும் என எண்ணினால், அவற்றை சி டிரைவிலிருந்து அன் இன்ஸ்டால் செய்துவிட்டு, பின் புதிய டிரைவில் இன்ஸ்டால் செய்திட வேண்டும்.


கேள்வி: சமீபத்தில் விண்டோஸ் 7க்கு மாறி இருக்கிறேன். இதில் வேர்ட் போன்ற புரோகிராம்களில் வேலை செய்கையில் கர்சர் இருப்பது தெரியவில்லை. இதனை வேகமாக துடிக்கும்படி செய்திட முடியுமா?
–எஸ். ஹேமா ஷ்யாம், புதுச்சேரி
பதில்:
வழக்கமான கர்சருடன் கொஞ்சம் பழக்கப்பட்டால் சரியாகிவிடுமே. இருப்பினும் உங்கள் கேள்விக்கான தீர்வு விண்டோஸ் 7 தொகுப்பில் இருப்பதால், அந்த வழிகளைக் கூறுகிறேன். Start  அழுத்தி Search Box  சென்று 'Keyboard'  என டைப் செய்திடவும். கண்ட்ரோல் பேனல் பிரிவில்  'Keyboard' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்களுடைய கீ போர்டு ப்ராப்பர்ட்டீஸ் பாப் அப் விண்டோ கிடைக்கும். இதில் கர்சர் பிளிங்க் ரேட் (blink rate) என இருக்கும் இடத்தில், உங்களுக்கு என்ன ஸ்பீட் வேண்டுமோ அதனை அமைக்கவும்.
இது விண்டோஸ் 7 தொகுப்பில் மட்டுமின்றி அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் அமைக்கலாம். கண்ட்ரோல் பேனலில் இந்த வசதி கிடைக்கும்.


கேள்வி: பழைய கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வருகிறேன். அனைத்து சர்வீஸ் பேக்குகளையும் நிறுவி உள்ளேன். விண்டோஸ் பயர்வால் போதுமா? வேறு ஏதேனும் ஆண்ட்டி ஸ்பைவேர் பயன்படுத்தலாமா? இலவசமாகக் கிடைக்குமா?
–எஸ். பரந்தாமன், திருப்பூர்
பதில்:
AdAware அல்லது Spybot search & Destroy ஆகிய இரண்டில் ஒன்றை இலவசமாக டவுண்லோட் செய்து இயக்கவும். ஸ்பைவேர் தொகுப்புகள் அழிக்கப்படும்


source:dinamalar--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP