சமீபத்திய பதிவுகள்

''அடங்காத தமிழர்கள்- தனி ஈழமே தீர்வு'' இராசபச்சே ஒரு சிங்களத் தீவிரவாதி!

>> Friday, June 18, 2010

 


 
சிங்கப்பூர் தந்தை லீ-குவான்-யு கடும் தாக்கு!!

''இலங்கை அதிபர் மகிந்த இராசபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி-அவரைத் திருத்தவே முடியாது'' என்று சிங்கப்பூரின் முதல் பிரதமரும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யு கூறியிருக்கிறார்.

'லீ குவான் யு உடனான உரையாடல்கள்' என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள நூலில் இவ்வாறு கூறியுள்ளார். அந்த நூலில் இலங்கை இனச்சிக்கல் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் லீ குவான் யு விரிவாக விளக்கியுள்ளார்.

''இலங்கையில் சிங்களர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர். தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது'' என்று லீ குவான் யு கூறியுள்ளார்.

''இதன் மூலம் தமிழர்கள் வாழும் பகுதிகளைத் தனியாகப் பிரித்து தமிழீழம் அமைக்க வேண்டும். அதுதான் இலங்கை இனச்சிக்கலுக்குச் சிறந்த தீர்வாக இருக்கும்'' என்ற கருத்தையும் லீ குவான் யு ஆதரித்திருக்கிறார்.

இலங்கைப் போரில் விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டது பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர், ''இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடிவந்த விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டு விட்டனர். இதன் மூலம் இலங்கை இனச்சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது என்று இலங்கை அதிபர் மகிந்தா இராசபக்சே கூறிவருகிறார். இதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். ஆனால், தமிழர்கள் அடங்கிக் கிடக்க மாட்டார்கள். சிங்களர்களுக்குப் பயந்து ஓடிவிடவும் மாட்டார்கள்'' என்று கூறியுள்ளார்.

ராஜபக்சேவைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், ''இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பேச்சுகளை நான் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி, இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்றவோ, அவரைத் திருத்தவோ என்னால் முடியாது'' என்றும் தெரிவித்துள்ளார்.

87 வயதாகும் லீ குவான் யு, சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படுபவர். 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று அந்த நாட்டின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

அதற்கு முன்பு வரை மலேசியாவுடன் இணைந்து இருந்த சிங்கப்பூரைத் தனி நாடாக அறிவித்தவர் இவர் தான். 1990ஆம் ஆண்டு வரை 31 ஆண்டுகள் இவர் பிரதமராக இருந்தார். அதன் பின்னர் கோசோக் டாங்கை பிரதமராக்கிய இவர் அவரது அமைச்சரவையில் மூத்த அமைச்சராகப் பணியாற்றினார்.

2004ஆம் ஆண்டில் இவரது மகன் 'லீ சியான் லூங் பிரதமரானார். அப்போதிலிருந்து இவர் சிங்கப்பூர் அமைச்சரவையின் காப்பாளராகப் பதவி வகித்து வருகிறார். உலகம் முழுவதும் ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் இவர், ஈழத் தமிழர் நலனிலும் அக்கறை கொண்டவராவார்.


source:


--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP