சமீபத்திய பதிவுகள்

எக்ஸெல் - சார்ட் தயாரிப்பது எப்படி ?

>> Saturday, December 11, 2010


எக்ஸெல் தொகுப்பில் பலரின் கவனத்தைக் கவர்வதற்கும், சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதற்கும் நமக்கு உதவுவது, அதில் ஏற்படுத்தக் கூடிய சார்ட் என்னும் வரைபடங்களே. இதனை அமைக்க நமக்குக் கிடைப்பது இதில் உள்ள Chart Wizard  என்னும் வசதியாகும். ஓர் ஒர்க்ஷீட்டில் அமைக் கப்படும் சார்ட் ஒன்றினை மற்ற வற்றிலும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் வசதியாகும். இதனை எப்படி தயாரிப்பது எனப் பார்க்கலாம்.
சார்ட்களை நாம்  தந்துள்ள டேட்டாக்களின் அடிப்படையில் தயாரிக்கிறோம்.  எந்த டேட்டா விற்காக சார்ட் அமைக்கப்போகிறோமோ, அவற்றை முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.   எடுத்துக் காட்டாக,  பொருட்கள், பல்வேறு கால கட்டத்தில் அவற்றின் விலை ஆகியவற்றிற்கான சார்ட் தயாரிக்கலாம்.  இவற்றைத் தேர்ந்தெடுத்துவிட்டு, பின்னர் Chart Wizard  என்பதன் மீது கிளிக் செய்திடவும். இந்த பட்டன் Standard Toolbar  இல் கிடைக்கும். இங்கு கிடைக்கும்   டயலாக் பாக்ஸில் சார்ட் டைப் மற்றும் அதில் ஒரு வகையினைத் (chart type, chart subtype)   தேர்ந்தெடுக்கவும்.  அடுத்து "Next"   பட்டனில் கிளிக் செய்தால், உங்களுக்கு ஒரு மாடல் சார்ட் காட்டப்படும். இப்போதும் இந்த சார்ட்டில் மாற்றங்கள் வேண்டும் என முடிவு செய்தால்,   மீண்டும் வகைக்குச் செல்லலாம். காட்டப்படும் வகை உங்களுக்குப் பிடித்திருந்தால் டேட்டா ரேஞ்ச் சரியாக அமைக்கப்படுகிறதா  எனப்பார்க்கவும். சரியாக இருப்பின் அடுத்த நிலைக்குச் செல்லவும்.  டேட்டாக்கள் நெட்டு வரிசையிலா அல்லது படுக்கை வரிசையிலா என்பதையும் முடிவு செய்திடலாம். இப்போது மீண்டும்  "Next"   பட்டன் கிளிக் செய்திடவும்.  சார்ட் ஆப்ஷன்ஸ் (Chart Options)  டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் நீங்கள் அமைக்கும் சார்ட்டுக்கான    தலைப்பு, எக்ஸ் ஆக்சிஸ் மற்றும் ஒய் ஆக்சிஸ் தலைப்பு, மேலாக ஏதேனும் தலைப்பு தர விரும்பினால், அந்த தலைப்பு, டேட்டாக்களுக்கான லேபிள் போன்றவற்றைத் தரவும். பின் மீண்டும் "Next" பட்டன் கிளிக் செய்திடவும். அடுத்து டயலாக் பாக்ஸில் சார்ட் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதனை நிர்ணயம் செய்திடவும்.  சார்ட்டினை ஒர்க் புக்கின் எந்த ஒர்க் ஷீட்டிலும் அமைக்கலாம். தொடக்கத்தில் ஏற்கனவே எக்ஸெல் செட் செய்தபடி எந்த ஒர்க் ஷீட்டில் டேட்டாக்களை எடுத்து அமைக்கிறீர்களோ, அந்த ஒர்க் ஷீட்டிலேயே சார்ட் அமையும். இவற்றை அமைத்துவிட்டு சார்ட் லொகேஷன் டயலாக் பாக்ஸில் "Finish"   பட்டனைத் தட்டவும். உடன் சார்ட் ரெடியாகி உங்களுக் குக் கிடைக்கும். தொடர்ந்து இன்னும் சில மாற்றங்களை ஏற்படுத்த விரும்பினால், மேலே குறிப்பிட்ட வகையில் சென்று மாற்றங்களை எப்போது வேண்டுமானாலும் ஏற்படுத்திக் கொள்ளலாம்


source:dinamalar
--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP