சமீபத்திய பதிவுகள்

இரண்டு தலைகளுடன் கன்றுக் குட்டி!

>> Monday, July 5, 2010

http://www.tamilcnn.net/ 

எகிப்தில் இரண்டு தலைகளுடன் கூடிய கன்றுக்குட்டி ஒன்று கடந்த வாரம் பிறந்துள்ளது. இக்கன்றுக் குட்டிக்கு ஒவ்வொரு தலையிலும் இரண்டு கண்கள், வாய் போன்ற உறுப்புகள் முழுமையாகவே உண்டு. தலைகளின் பாரம் காரணமாக கன்றுக்குட்டி இன்னும் எழுந்து நடமாட முடியவில்லை.

ஆயினும் இது ஆரோக்கியமாகவே உள்ளது. இதற்கு புட்டியில் பால் பருக்கப்படுகின்றது. கன்றுக் குட்டியின் உரிமையாளரான விவசாயி இது ஒரு தெய்வ அதிசயம் என்று வர்ணிக்கின்றார்.



StumbleUpon.com Read more...

நக்சல்கள் அழிக்க விமானப்படை தயாராகிறது ; ரகசிய முன்னோட்ட பணிகள் துவங்கியது


ராய்ப்பூர்: நாளுக்கு நாள் பெருகி வரும் நக்சல்கள் தொல்லையை தாங்க முடியாத மத்திய அரசு விமான படையை களம் இறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னோட்டமாக நக்சல்கள் பாதிப்பு மாநில அரசுகள் நடவடிக்கையை துவங்கியுள்ளது. நக்சல் தாக்குதலில் நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 600 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், ரூ. 700 கோடி வரை நஷ்டத்தை சந்தித்திருப்பதாகவும் ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.


தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினரை குறி வைத்து நக்சல்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் மத்திய அரசு, ராணுவ நடவடிக்கையை துவக்க வேண்டும் என்ற கோரிக்கை குரல் பரவலாக எழுந்துள்ளது. அதே நேரத்தில் நக்சல்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஆதரவு குரலும் இருக்கிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கூட 27 பேரை கொடூரமாக சுட்டு கொன்றனர். மலைகள் மற்றும் மரங்கள் மீது பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து மத்திய அரசு உள்துறை அதிகாரிகள் நக்சல் பாதிப்பு மாநிலங்கள் முதல்வருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


நக்சல்கள் ஒழிக்க முதல்கட்டமாக விமானப்படையை களம் இறக்கலாம் என தெரிகிறது. விமான படையை பயன்படுத்துவது தொடர்பாக முதலில் எங்கு ஹெலிபேட் தளம் அமைக்க முடியும் என ஆராய ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநில அரசு உதவியுடன் இந்த பணிகள் துவங்கியிருக்கிறது. எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நக்சல்கள் இருக்கும் பகுதிகளை வானத்தில் பறந்தபடி நோட்டமிட்டு வருகின்றனர். இதனால் விமானப் படை விரைவில் தனது பணியை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


source:dinamalar



--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

இன்று கரும்புலி நாள்: விடுதலைப் புலிகளின் அறிக்கை வெளியாகியுள்ளது


 

தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/05/10
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
05/07/2010 

இன்று கரும்புலிகள் நாள். எமது உரிமை போராட்டத்தினை நசுக்கவும் அடக்கி ஒடுக்கவும் பெரும் எடுப்பில் வந்த பகைவர்களை எல்லாம் தனித்து நின்று தம்மையே அர்ப்பணித்து, தகர்த்து சின்னாபின்னமாக்கிய எம் தேசப்புதல்வர்களின் திருநாள். 

கரும்புலிகள் எம் மண்ணின் மீட்பிற்காக தம்மை அர்ப்பணித்த தற்கொடையாளர்கள். எமது போராட்ட இலட்சியத்தின் உறுதியினை எடுத்துக்காட்டும் குறியீடுகள். எமது மக்களின் நியாயபூர்வமான அரசியல் வேட்கையினை அடைவதற்கான தடைகளை அகற்றி முன்னே சென்ற அதிசயப் பிறவிகள்.

எமது அரசியல் இலக்கினை வென்றெடுப்பதற்கான போராட்டத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாகவும் பலவீனமான இனத்தின் பலங்களாகவும் எம் மக்களின் உறுதிக்கு உரமாகவும் விளங்கியவர்களே எம் தற்கொடைப் போராளிகள்.

1987 ஜூலை 5 ஆம் நாள் கப்டன் மில்லரினால் தொடக்கி வைக்கப்பட்ட தற்கொடைத் தாக்குதல் 23 வருடங்களாக நூற்றுக்கணக்கான தற்கொடைப் போராளிகளை உருவாக்கியும் அர்ப்பணித்தும் எமது போராட்டத்தினை நகர்த்திச் சென்றுள்ளது.

அன்பார்ந்த மக்களே,

எமது இனமும் மொழியும் நிலமும் என்றுமில்லாதவாறு ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்படும்போது எந்தச் சக்திகளும் அதனைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை. எமது இனத்தின் பலவீனங்களையும், வளப்பற்றாக்குறையினையும் பயன்படுத்தி முற்றுமுழுதாக எம்மை அழிக்க சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் முயன்ற வேளைகளிலெல்லாம் அதை எதிர்கொள்ளும் பலமான ஆயுதமாகவே கரும்புலிகள் செயற்பட்டார்கள். 

ஓர் இனத்தின் அழிவில் தமது நலன்களை நிறைவேற்ற நினைத்த சக்திகளுக்கு எதிராகவும் அந்தச் சக்திகளைப் பயன்படுத்தி எம் மக்களை முற்றாக அழித்து நில ஆக்கிரமிப்பைச் செய்யும் சிங்களப் பேரினவாதத்தை, எதிர்கொள்ளும் ஒரு தடுப்பரணாகவே எம் தற்கொடைப் போராளிகள் செயற்பட்டார்கள்.

எம் தற்கொடை போராளிகள் மனித குலத்திற்கு எதிராகவோ, இன்னோர் இனத்தினை அச்சுறுத்தவோ தம்மை அர்ப்பணிக்கவில்லை. எதிரியின் இராணுவ, பொருளாதார இலக்குகளைத் தாக்கியழிப்பதே எமது தற்கொடைப் போராளிகளின் நோக்கமாக இருந்தது. 

எமது தற்கொடைப் போராளிகள் எம் இனத்தின் மீதான படையெடுப்புக்களைத் தடுத்தார்கள். எம் மண் ஆக்கிரமிக்கப்பட்டபோது அதனைத் தடுத்து நிறுத்தினார்கள். எமது போராட்டம் பேரிடர்களை எதிர்கொண்ட நேரங்களிலெல்லாம் முன்கூட்டியே எதிரியின் இதயப்பகுதியில் இடியாக இறங்கி வரவிருந்த பேரழிவுகளைத் தடுத்தார்கள். 

எம் பலம் சிதைக்கப்படும் போது எம் மக்களும் எம் மண்ணும் எப்படி அழிக்கப்படுவார்கள் என்பதற்கு முள்ளிவாய்க்கால் பேரவலமும் அதன் பின்னரான சிங்களத்தின் திமிர்த்தனமும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும்.

கடந்த 23 ஆண்டுகளாக எம் போராட்டத்தின் பாதுகாப்பரணாக விளங்கிய எம் தற்கொடைப்போராளிகளை இன்று நாம் எம் மனதில் நிறுத்திப் பூசிக்கின்றோம். எம் மாவீர்களினதும் மக்களினதும் தியாகங்கள் இலட்சியத்தை அடையும்வரை எம்மைத் தொடர்ந்து வழிநடத்தும். எந்த அரசியல் இலட்சியத்திற்காக அவர்கள் முன்நோக்கி நகர்ந்தார்களோ அந்த இலட்சியப்பாதையில் நாம் தொடர்ந்து செல்வோம். எம் அரசியல் உரிமைப் போராட்டத்தில் வரும் தடைகளை காலச் சூழலிற்கேற்ப, உலக ஓட்டத்திற்கு அமைவாக ஒற்றுமையுடன் எதிர்கொண்டு பயணிப்போம். 

நன்றி. 

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

இராமு.சுபன்,
இணைப்பாளர், 
தலைமைச் செயலகம், 
தமிழீழ விடுதலைப் புலிகள், 
தமிழீழம்.



source:athirvu
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

கொடூர குணம் கொண்ட பத்து அடி நீளமுள்ள கருநிற ராஜநாகம்



சிவமொக்க: கொடூர குணம் கொண்ட பத்து அடி நீளமுள்ள கருநிற ராஜநாகம், கர்நாடக மாநிலத்தில் உயிருடன் பிடிபட்டது.


கர்நாடக மாநிலம் சிவமொக்கா அடுத்த பாரதி நகர் அருகில், ஐஹொரில் கிராமத்திற்கு வெளியே சாலை ஓரத்தில் மிகப் பெரிய கருநிற ராஜநாகம் பதுங்கி இருப்பதை அப்பகுதி மக்கள் கடந்த 28ம் தேதி மாலை பார்த்தனர். உடனடியாக இப்பகுதியில் பாம்புகளை பிடிப்பதில் நிபுணரான கிரண் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர், விரைந்து வந்து, கடும் விஷம் வாய்ந்த 10 அடி நீளமுள்ள கருநிற ராஜநாகத்தை உயிருடன் பிடித்தார். இதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் வந்து ஆச்சரியத்துடன் பார்த்தனர். பின், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தொடர்ந்து கருநிற ராஜநாகத்தை, கிரண் உதவியுடன் வனத்துறையினர், செட்டஹல்லி காட்டு பகுதிக்கு கொண்டு விட்டனர்.


source:dinamaalr



--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP