சமீபத்திய பதிவுகள்

நாடுகடந்த தமிழீழ அரசாங்க முதலாவது பிரதம மந்திரி தெரிவு செய்யப்பட்டார் !!!!!!!

>> Monday, October 4, 2010


நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உத்தியோகபூர்வமான அமைப்பாகியது !

 

நாடு கடந்த தமிழீழ அரசு உத்தியோகபூர்வமான அமைப்பாக ஆரம்பமாகியுள்ளதாக அதன் ஊடகப்பிரிவினர் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்துள்ளனர். திரு.விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது பிரதம மந்திரியாக பாராளுமன்றத்தினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார் என அறியப்படுகிறது. நாடு கடந்த அரசாங்கத்தின் சக்திகள் ஒரு தனி மனிதரின் கைகளில் செல்வதையிட்டு அதிர்வு இணையம் தனது கருத்துக்களை தெரிவித்திருந்தது, பல தரப்பட்ட விவாதங்களும் பின்னூட்டங்களும் கிடைக்கப்பெற்றது. சுமார் 593 மின்னஞ்சல்களும், 70 க்கும் மேற்பட்ட, நேரடிப் பின்னூட்டங்களும் இது தொடர்பாகப் பெறப்பட்டது. 

ஆரோக்கியமான கருத்துக்களும் விவாதங்களும் பலரால் அனுப்பிவைக்கப்பட்டது, அவை அனைத்தும் திரு.உருத்திரகுமாரன் அவர்களுக்கு அதிர்வு இணையத்தால் அனுப்பிவைக்கப்படும். தனி ஒரு மனிதரின் கைகளில் அதிகாரங்கள் செல்வது நல்லதல்ல என நாம் சுட்டிக்காட்டியிருந்தோம். தற்போது நாடு கடந்த அரசின் முதல் பிரதமராக திரு. உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவாகியுள்ளார். அவரை அதிர்வு இணையம் வாழ்த்துகிறது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கவும், தேசியம், தமிழரின் இறையாண்மை என்பனவற்றை நிலை நிறுத்தவும் அவர் அயராது பாடுபடுவார் என நாம் எண்ணுகின்றோம். 


நாடு கடந்த தமிழீழ அரசின் ஊடக அறிக்கை.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரதமமந்திரி தெரிவுசெய்யப்பட்டதுடன் அமைச்சரவையினை உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன! 
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் 2010 செப்ரம்பர் 29ம் நாள் தொடக்கம் ஒக்ரோபர் 1ம்நாள்வரையான மூன்றுதினங்கள் கூடி அவ்அரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்ததுடன் தமக்கான பிரதம மந்திரியினையும் தெரிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சரவையினை உருவாக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தன. 

நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள்சபைக்கு அருகாமையிலுள்ள பிளாசா ஹோட்டலில் ஒன்றுகூடியுள்ள பிரதிநிதிகளுடன் பரீஸ், இலண்டன் மாநகரங்களில் உள்ள பிரதிநிதிகளும் தொலைக்காட்சி தொடர்பாடல் தொழிநுட்பத்தினூடான இணைந்தனர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உரமாகிப்போன உயிர்களுக்கு மௌனாஞ்சலி செலுத்துவதுடன் அமர்வுகள் ஆரம்பமாகியது. 

ஐக்கிய அமெரிக்க நாட்டு முன்னைநாள் சட்டமா அதிபர் திரு.றாம்ஸி கிளார்க், மலேசிய பினாங் மாநில பிரதி முதலமைச்சர் பேராசிரியர். இராமசாமி, மனித உரிமைகள் மற்றும் முரண்பாடுகள் தீர்வு ஆகியவற்றிற்கான சர்வதேச விற்பன்னரும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றிற்கான ஆலோசகரும் கொலம்பியா பல்கலைக்கழக மனித உரிமைகளுக்கான கற்கை மையத்தின் வருகைதரும் கல்விமானுமான பேராசிரியர் எல்.பிலிப், அமெரிக்க பல்கலைக்கழகத்தின் வாசிங்டன் சட்டக்கல்லூரி UNROW மனித உரிமைகள் சார்ந்த சட்டமுறை நிவாரண நிறுவகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திரு.அலி பெய்டவுன் ஆகியோரின் உரைகளுடன் அமர்வு ஆரம்பமாகியது. 

இவ் UNROW மனித உரிமைகள் சார்ந்த சட்டமுறை நிவாரண அமைப்பு சிறீலங்காவில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையிடம் அண்மையில் அறிக்கையொன்றினைச் சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஆரம்ப அமர்வினைத் தொடர்ந்து முன்மொழியப்பட்ட மாதிரி அரசியல் யாப்பினை அங்கீகரிப்பதற்கு முன்னான விவாதம் என்ற சவால்மிக்க செயற்பாடு ஆரம்பமாகியது. இவ்விவாதத்தினைத் தொடர்ந்து மரபுசார்ந்த பாராளுமன்றக் கட்டமைப்பு இவ்அரசுக்கு உகந்ததெனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைவராக பிரதமமந்திரி செயற்படுவார் எனவும் பாராளுமன்றம் தீர்மானித்தது. அவருக்கு உதவியாக மூன்று பிரதிப் பிரதம மந்திரிப் பதவிகளும் வேறு ஏழு அமைச்சர் பதவிகளும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

நாடுகடந்த தமிழீழ அரசின் பாராளுமன்றம் இரண்டு அவைகளினைக் கொண்டதாக இருக்கும். இது தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளினைக் கொண்ட பாராளுமன்றத்தினையும், செனற் எனப்படும் நியமன அங்கத்தவர்களினைக் கொண்ட ஆலோசனைச் சபையினையும் கொண்டிருக்கும். அவசியமான வேளைகளில் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களினை மீள் அழைப்பதற்கான பொறிமுறையினை பாராளுமன்றம் கோவைப்படுத்தும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

நாடுகடந்த தமிழீழ அரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் கனடாவினைச் சேர்ந்த திரு.பொன் பால்றாஜன் அவர்களினை பாராளுமன்ற சபாநாயகராகவும் சுவிற்சலாந்து நாட்டினைச் சேர்ந்த செல்வி. சுகன்யா புத்திரசிகாமணி அவர்களை பிரதி சபாநாயகராகவும் ஏகமனதாக தெரிவு செய்தது. 

திரு.விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது பிரதம மந்திரியாக பாராளுமன்றத்தினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்


source:athirvu

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

இந்து காவியங்களை உருதுக்கு மொழிபெயர்க்கும் முஸ்லிம் பெண்


வாரணாசி : மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக முஸ்லிம் இளம்பெண் ஒருவர், இந்து காவியங்களை உருது மொழியில்  மொழி பெயர்த்து வருகிறார்.உத்திரப்பிரதேசம் லல்லாபூரா பகுதியில் வசிக்கும் முகமது சித்திக்கின் மகள் நஸ்நீன். பட்டதாரி பெண்ணான இவர், உள்ளூர் தன்னார்வ அமைப்பு ஒன்றுடன் இணைந்து முதியவர்கள், பெண்கள் மற்றும் ஏழைக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார். இவரது தந்தை நெசவு தொழிலாளி. சகோதரன் முகமது சாதிக்கும், தந்தைக்கு உதவியாக எம்ப்ராய்டரி ஓவியங்களை வரைந்து தருகிறார்.அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான தீர்ப்பு எப்படி வருமோ என, நாடே உச்சக்கட்ட பதட்டத்தில் இருந்த நேரத்தில், நஸ்நீன் அமைதியாக வேறொரு பணியில் ஈடுபட்டிருந்தார். அதாவது, இந்து கடவுள் ராமர் மற்றும் அவரைப் பற்றிய காவியங்களை உருது மொழியில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார்.ஏற்கனவே, துளசி தாசர் எழுதிய ராமபக்தன் அனுமன் பற்றிய காவியத்தையும், பெண் கடவுள் துர்கையின் காவியத்தையும் உருவில் மொழி பெயர்த்திருக்கிறார்.


இதுகுறித்து நஸ்நீன் கூறியதாவது:ராமர் இந்துக்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும் உதாரண புருஷராக திகழ்ந்தார். அவரைப் பற்றிய காவியத்தை உருதுவில் மொழி பெயர்த்து வருகிறேன். இந்த பணி ஓரிரு மாதங்களில் முடிந்துவிடும்.எனக்கு மொகலாய காலத்து எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும். மொகலாய பேரரசர் அக்பர் காலத்தில், அப்துல் காதர் படாயூன்னி என்பவர், ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் அரபி மொழியிலும், பாரசீக மொழியிலும் மொழி பெயர்த்துள்ளார். அவர்தான் எனக்கு ரோல் மாடல்.இவ்வாறு நஸ்நீன் கூறினார்.  



source:dinamalar
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

சைபர் குற்றங்கள் பாதிப்பில் இந்தியாவுக்கு இரண்டாம் இடம்


மும்பை : உலகளவில், சைபர் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருப்பது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.


சைபர் குற்றங்கள் தொடர்பான ஆய்வை, "குளோபல் இ-செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ்' என்ற நிறுவனம் அண்மையில் நடத்தியது.அதன் ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகளவில், கம்ப்யூட்டர்கள் மற்றும் இணையதளங்கள் வாயிலாக செய்யப்படும் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.இணைதளங்கள் வாயிலாக, ஆன்-லைன் கிரெடிட் கார்டு மோசடிகள், வைரஸ் தாக்குதல், பாலியல் குற்றங்கள், லாட்டரி மோசடிகள், வங்கி கணக்கு மற்றும் பாஸ்வேர்டுகளை திருடுதல், இணையதளங்களை முடக்குவது, சமூக வலைதளங்களில் இருந்து அந்தரங்க விவரங்களை திருடுதல் உள்ளிட்ட சைபர் குற்றங்கள் ஏராளமாக அரங்கேறி வருகின்றன.உலகளவில் இணையதளம் பயன்படுத்துவோரில் 65 சதவீதம் பேர் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில், சைபர் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இணையதளம் பயன்படுத்தும் இந்தியர்களில் 76 சதவீதம் பேர் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் சீனா உள்ளது.


சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டோரில் 58 சதவீதம் பேர் கோபம் கொள்கின்றனர். 51 சதவீதம் பேர் இதற்காக வருத்தப்படுகின்றனர். 46 சதவீதம் பேர் நிலைகுலைந்து போகின்றனர். 88 சதவீதம் பேர், இந்த குற்றங்கள் நடப்பதற்கு நாம் தானே இடம் கொடுத்தோம் என்று, தங்களையே நொந்து கொள்கின்றனர். 8 சதவீத இந்தியர்கள், தாங்கள் சைபர் குற்றங்களால் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.வெளிநாடுகளில் இருந்து இந்த குற்றங்களை செய்வதால், சைபர் குற்றவாளிகளை போலீசாரால் நீதியின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தர முடியவில்லை என்று, பெரும்பாலான இந்தியர்கள் நம்புகின்றனர்.சைபர் குற்றங்களால் பாதிக்கப்படும் 59 சதவீத இந்தியர்கள், பாதிப்புக்கு பின்னர், இணையதள பயன்பாட்டில், தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்கின்றனர். தங்கள் பாதிப்புக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். ஆனால், 37 சதவீதம் பேர் மட்டுமே போலீசில் புகார் தெரிவிக்கின்றனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது



source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP