சமீபத்திய பதிவுகள்

எக்ஸெல் டிப்ஸ்

>> Saturday, May 7, 2011


செயல்படும் செல்லுக்குச் செல்ல
எக்ஸெல் ஒர்க் புக் ஒன்று மிகப் பெரியதாக இருந்தால், சில வேளைகளில் அதன் அடுத்த அடுத்த செல்களுக்கு, மானிட்டர் திரை அளவைத் தாண்டிச் செல்ல வேண்டிய திருக்கும். அப்போது எந்த செல்லில் நாம் கர்சரை வைத்துச் செயல்பட்டுக் கொண்டிருந் தோம் என்பது மறந்து போகும். கர்சர் அங்கு துடித்துக் கொண்டிருந்தாலும், திரை மேலும் கீழுமாகச் சென்றதால், எங்கு செயல்படும் அந்த செல் உள்ளது என்று அறியாமல், ஸ்குரோலிங் பார் அல்லது அம்புக் குறி கீகளை அழுத்தியவாறு தேடுவோம்.
இந்த பிரச்னைக்கு ஒரு சிறிய தீர்வு வழி ஒன்று உள்ளது. ஒன்றல்ல, இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழி சற்று சுற்றுவழி. உங்களுக்கு நீங்கள் இருந்த செல் அட்ரஸ் அல்லது அதன் பெயர் தெரிந்திருக்க வேண்டும். தெரிந்திருந்தால், [Ctrl]+G கீகளை அழுத்தி, பின்னர் செல் எண் அல்லது பெயர் டைப் செய்து என்டர் அழுத்த, அந்த செல் உங்களுக்குக் கிடைக்கும். ஆனால், நாம் பெரும்பாலும், செல்லின் எண் அல்லது பெயரை நினைவில் வைத்திருக்க மாட்டோம். அந்த சூழ்நிலையில், கண்ட்ரோல்+பேக் ஸ்பேஸ் அழுத்துங்கள். ஜில் என்று, நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த செல்லுக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.
இதனைச் செயல்படுத்த, நீங்கள் கர்சரை வைத்திருக்கும் செல், மானிட்டர் திரையில் இருக்கக் கூடாது. அப்போதுதான், அந்த செல் கிடைக்கும்படி, மானிட்டரில் திரைக் காட்சி மாற்றப்படும். கர்சர் இருக்கும் செல், மானிட்டர் திரையில் இருந்தால், நீங்கள் கண்ட்ரோல் மற்றும் பேக் ஸ்பேஸ் அழுத்துகையில், திரைக் காட்சி அப்படியே தான் இருக்கும். ஏனென்றால், அந்த செல் தான் உங்கள் முன் காட்டப்படுகிறதே.
எனவே இந்தக் கட்டளையினை சோதித்துப் பார்க்க விரும்பினால், செல் ஒன்றில் கர்சரை வைத்துவிட்டு, பின் ஸ்குரோல் பார் மூலம் அல்லது வேறு வழிகளில் சற்றுக் கீழாகச் செல்லுங்கள். அதன் பின் இந்தக் கட்டளை கொடுத்துப் பாருங்கள்.

எக்ஸெல் - ஆல்ட்+ஷிப்ட்
இங்கே எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைப் பார்க்கலாம்
F1 +ALT+SHIFT: புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும்.
F2 +ALT+SHIFT: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும்.
F3 +ALT+SHIFT: நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம்.
F6 +ALT+SHIFT: ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் திறக்கப்பட்டிருப் பின் தற்போதைய ஒர்க்புக்கிற்கு முந்தைய ஒர்க்புக் விண்டோ திறக்கப்படும்.
F9 +ALT+SHIFT: திறந்திருக்கும் அனைத்து ஒர்க்ஷீட்களிலும் அனைத்து ஒர்க் புக்குகளிலும் அனைத்து கால்குலேஷன் களும் செயல்படுத்தப்படும்.
F10 +ALT+SHIFT: ஸ்மார்ட் டேக்கிற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட் டேக் திறக்கப்பட்டிருந்தால் அடுத்த டேக் சென்று அதற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும்.
F11 +ALT+SHIFT: மைக்ரோசாப்ட் ஸ்கிரிப் எடிட்டர் திறக்கப்படும்.
F12 +ALT+SHIFT: பிரிண்ட் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்

source:dinamalar
--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP