சமீபத்திய பதிவுகள்

விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்

>> Wednesday, March 14, 2012

 

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 12

கீழ்காணும் குரானின் வசனங்களை கூர்மையாக படித்துப்பாருங்கள்.

(திரும்பத்திரும்ப) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக… குரான் 86:11

……..வானங்கள் பூமி ஆகியவற்றின் எல்லைகளை கடந்து செல்ல நீங்கள் சக்தி பெருவீர்களாயின் ஆனால் அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்கமுடியாது குரான் 55:33

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகின்றானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் யாரை அவன் வழிகெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவரை போல இறுகிச்சுருங்கும் படி செய்கிறான். குரான் 6:125

இவைகளெல்லாம் விண்வெளி குறித்து குரானில் கூறப்படும் வசனங்களில் சில. மேற்கண்ட இந்த வசனங்களிலெல்லாம் மிகப்பெரிய அறிவியல் உண்மை சொல்லப்பட்டிருப்பதாக உங்களுக்கு தெரிகிறதா? ஆனால் இன்றைய அறிவியல் கண்டுபிடித்துள்ள அரிதான பல உண்மைகளை இந்த வசனங்கள் உள்ளடக்கிக் கொண்டிருப்பதாக மதவாதிகள் கூறுகிறார்கள்.

வசனம் 86:11 ஐ எடுத்துக்கொள்வோம் 'பொழியும் மழையை உடைய' என்பதில் ஒன்றுமில்லை. அதற்கு விளக்கமாக அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் திரும்பத்திரும்ப என்பதில் தான் மதவாதிகள் கண்டுபிடித்த அறிவியல் ஒழிந்துகொண்டிருக்கிறது. மழை திரும்பத்திரும்ப வருகிறது, இதில் என்ன அறிவியல் இருக்கிறது? ஆனால் பிஜே அவர்களின் மொழிபெயர்ப்பில் இது திரும்பத்தரும் வானம் என்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. வானம் எதை திரும்பத்தருகிறது? மழையை திரும்பத்தருகிறது. ஆயிரத்து நாநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது யாருக்காவது தெரியுமா? ஒருவருக்கும் தெரியாது. மழையை மட்டுமா திருப்பித்தருகிறது? தொலைபேசி தொலைகாட்சி அலைவரிசைகள் வானத்திற்கு அனுப்பப்பட்டு மீண்டு நமக்கு திரும்பக்கிடைக்கிறது. வானத்தை திருப்பித்தரும் தன்மையோடு படைத்திருப்பதால் தான் இவைகளெல்லாம் சாத்தியமாகின்றன. இந்த அறிவியல் உண்மையை குரான் அன்றே கூறிவிட்டது.

அனுப்பப்படும் அலைவரிசைகளை வானம் திருப்பி அனுப்புகிறதா அல்லது நிலைநிருத்தப்பட்டிருக்கும் செயற்கைக்கோள்கள் திருப்பி அனுப்புகின்றனவா என்பது எலோருக்கும் தெரிந்தது தான். ஆனால் வானம் திருப்பி அனுப்புவதாக கூறிக்கொண்டு அதையே மாபெரும் அறிவியல் உண்மையாக கூறுவதை என்னவென்பது. பூமியிலுள்ள நீர்நிலைகளின் நீர் தான் மேகமாகி மழையாகிறது என்பதை பத்துப்பாட்டில் வரும் முல்லைப்பாட்டின்  பாடிமிழ் பனிகடல் பருகி எனத்தொடங்கும் பாட்டு தெரிவிக்கிறது. முல்லைப்பாட்டின் காலம் கிபி இரண்டாம் நுற்றாண்டு. ஒருவேளை அல்லா முகம்மதுவுக்கு கொடுக்கும் முன்பே நப்பூதனாருக்கு கொடுத்துவிட்டாரோ.

வசனம் 55:33 ல் 'வானங்கள் பூமி ஆகியவற்றின் எல்லைகளை கடந்து செல்ல' என்று வருவதை இன்று மனிதன் விண்வெளிக்கு சென்றுவருவதோடு பொருத்தி இதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே குரான் கூறிவிட்டது என்று இன்னொரு அறிவியலை அவிழ்த்து விடுகிறார்கள். இந்த வசனத்தில் அதிகாரம் என வரும் சொல்லை 'வல்லமையும் என் அனுமதியும்' என்று விளக்குகிறார்கள். அதாவது அல்லா அனுமதிக்கும் காலத்தில் ஒரு குறிப்பிட்ட வல்லமையை பெற்றபிறகு தான் செல்லமுடியும் என்று பொருளாம். இந்த வல்லமை தான் விடுபடு வேகம் என்று கூறுகிறார்கள். பூமியின் புவியிர்ப்பு விசையை மீறி நாம் விண்ணில் செல்லவேண்டுமென்றால் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சென்றால் மட்டுமே புவியை தாண்டிச் செல்லமுடியும். அதற்கு குறைவான வேகத்தில் சென்றால் புவியின் காற்று மண்டல எல்லைக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்க வேண்டியது தான். இந்த விடுபடு வேகம் குறித்த அறிவியலைத்தான் அந்த வசனம் சொல்கிறது என்று சத்தியம் செய்கிறார்கள். இந்த வசனத்தில் வானங்கள் என்றும் வருகிறது. ஒருவேளை நம்முடைய பிரபஞ்சத்தைப்போல் இன்னும் பல பிரபஞ்சங்கள் இருந்து அவைகளுக்கும் மனிதன் போய்வருவான் என்று குரான் கூறுகிறதோ. நம்பமுடிந்தவர்கள் நம்பிக்கொள்ளலாம்.

அடுத்த வசனமான 6:125 ல் அல்லா ஐன்ஸ்டினுக்கு முன்பே சார்பியல் கோட்பாட்டை கற்றுத்தருகிறார். இந்த வசனம் ஒருவர் இஸ்லாத்தை ஏற்பதும் மறுப்பதும் என்னுடைய விருப்பமின்றி நடைபெற இயலாது என அல்லா கூறுவதாக வருகிறது. அல்லா ஒருவனின் இதயத்தை விரித்துவிட்டால் அவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வான். அவனின் இதயத்தை சுருக்கிவிட்டால் அவனால் இஸ்லாத்தை ஏற்கமுடியாது. இது தான் இந்த வசனம் கூறும் செய்தி. இதில் இதயத்தை சுருக்குவதற்கு ஒரு உவமை கூறப்படுகிறது, வானத்தில் ஏறிச் செல்பவனைப்போல என்று. இந்த உவமையில் தான் விஷயம் இருக்கிறது. ஐன்ஸ்டினின் பொது சார்பியல் கோட்பாட்டில் ஒரு விதி வருகிறது. ஒரு பொருளின் விரைவைப் பொருத்து அதன் உருவம் சுருங்கும் ஆற்றல் கூடும். உருவம் சுருங்குவடையும் ஆற்றல் கூடுவதையும் சாதாரண வேகத்தில் உணரமுடியாது. ஒளியின் வேகத்திற்கு (ஒளியின் வேகம் நொடிக்கு மூன்று லட்சம் கிமி) அருகில் விரையும்போது தான் அதை உணர முடியும். இதுதான் ஐன்ஸ்டினின் பொது சார்பியல் கோட்பாடு. இந்த அறிவியல் அந்த வசனத்தில் இருக்கிறதா? சாதாரணமாக உயரத்தில் ஏறி நின்று பார்த்தால் மனிதனுக்கு ஒரு அச்சம் வரும், இந்த அச்ச உணர்வைத்தான் இதயம் சுருங்குதல் நெஞ்சு சுருங்குவது என்று முகம்மது விவரித்திருக்கிறார். இதில் சுருங்குதல் என்ற வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு அதை சார்பியல் கோட்பாடாக்கி விட்டார்கள். ஒரு கொள்கையை ஏற்பதற்கும் மறுப்பதற்கும் நெஞ்சு அல்லது இதயத்தின் பங்களிப்பு ஒன்றுமில்லை. இதயம் ரத்தத்தை உடலெங்கும் செலுத்துவதற்கு பயன்படும் ஒரு உறுப்பு எனும் அறிவியல் தெரியாமல் இறக்கப்பட்ட வசனமல்லவா இது? ஒரு பாதியை மட்டும் எடுத்துக்கொண்டு சார்பியல் கோட்பாடாக்கி விட்டார்களே, மறு பாதியையும் எடுத்துக்கொண்டால் இஸ்லாத்தை ஏற்காவிட்டால் ஆற்றல் கூடிவிடும் என்றாகிறதே. ஒருவேளை அல்லா அப்படித்தான் கூறியிருப்பாரோ.

புதிதாக வெளிவரும் குரானின் மொழிபெயர்ப்புகள் அறிவியல் கூறுகளை உள்ளடக்கிய வசனங்களாகவே வெளிவருகின்றன. பழைய மொழிபெயர்ப்புகளைக் காட்டிலும் புதிய மொழிபெயர்ப்புகளை செய்பவர்கள் அறிவியல் இல்லாமல் வெறும் ஆன்மீக குரானை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யவியலாது என்பதை உணர்ந்திருக்கிறார்கள் என்பதே இதன் பொருள்.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்


source:senkodi

--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP