சமீபத்திய பதிவுகள்

இஸ்ரேல் குண்டு வீச்சில் `ஹமாஸ்' இயக்க மந்திரி பலி; ஐ.நா. சபை உதவிக்குழு கட்டிடமும் தகர்ப்பு

>> Friday, January 16, 2009

 

 

பாலஸ்தீனத்தின் காசா நகரம் மீது இஸ்ரேல் விமானங்களும் பிரங்கி படையினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. 21-வது நாளாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலை நிறுத்தும்படி ஐ.நா. சபை விடுத்த கோரிக்கை களையும் இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏற்கனவே பாலஸ்தீனத்தின் காசா நகரில் இருந்த ஹமாஸ் இயக்கத்தினரின் அலுவலங்கள் தகர்க்கப்பட்டு விட்டன. 21 நாட்களாக நடந்த தாக்குதல்களில் பலியான வர்கள் எண்ணிக்கை 1000-க்கும் அதிகமாகி விட்டது.

இந்த நிலையில் பாலஸ் தீனத்தின் ஜபாலியா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தின் உள்துறை மந்திரி சயீத் சலாம் வீடு மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசியது. இதில் அந்த மந்திரி பலியானார். அவரது மகன் மற்றும் சகோதரரும் இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீச்சில் கொல்லப்பட்டனர்.

காசா பகுதியில் தாக்கு தலில் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு நிவாரண பொருள்கள், மருந்துகள், உணவுப்பொருட்கள் வழங்க ஐ.நா. சபை ஏற்பாடு செய்துள்ளது. காசா பகுதியில் உள்ள ஐ.நா. சபை கிளை அலுவலகத்தில் டன் கணக்கில் இந்த பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன.

அந்த கட்டிடம் மீதும் இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசின. இதில் 3 பேர் பலியானதுடன் டன் கணக்கில் மருந்து பொருட்கள் நாசம் அடைந்தன.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து ஐ.நா. சபை அவசரமாக கூடுகிறது.
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP