சமீபத்திய பதிவுகள்

மவுஸ் பிடிக்க சில யோசனைகள்

>> Saturday, December 5, 2009

 
 

 கம்ப்யூட்டருடன் சேர்ந்து, நம் அன்றாட வாழ்வில் நம்முடன் கலந்ததாக மவுஸ் மாறிவிட்டது. நாம் அறியாமலேயே நம் கைகளில் ஏற்படும் பலவிதமான பிரச்னைகளுக்குக் காரணமாகவும் மவுஸ் அமைந்துவிட்டதாகப் பல டாக்டர்கள் கூறுகின்றனர். கைகளில், குறிப்பாக மணிக் கட்டினைச் சுற்றி ஏற்படும் வலி மற்றும் எலும்பு தேய்மானத்திற்கு மவுஸ் காரணமாய் அமைகிறது என்கிறார்கள். இதனை ஆங்கிலத்தில் musculoskeletal injury  என்று அழைக்கின்றனர். இதற்குக் காரணம் அதனைப் பிடித்துப் பயன்படுத்தும் விதத்தில் நாம் சரியாக அக்கறை காட்டாததுதான். இங்கு மவுஸைப் பிடித்துப் பயன்படுத்தும் வழிகளில் பின்பற்ற வேண்டிய சில மருத்துவ அறிவுரைகளை இங்கு காணலாம்.
1.முதலாவதாக மவுஸ் பிடித்திருக்கும் முறையில் அவ்வப்போது மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மாற்றத்தை ஏற்படுத்தினாலும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தான்,மவுஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2. மவுஸ் பிடித்திருக்கையில் அதனை இறுக்கிப் பிடிக்க வேண்டாம். மிக மெதுவாகப் பட்டும் படாமல் நம் கரத்தினை அதன் மீது வைத்து இயக்கலாம்.
3.மவுஸ் இயக்கப்படுகையில் உங்களுடைய மணிக்கட்டு தசை அதிகம் இயங்கக் கூடாது. முழங்கை தசைதான் அதனை இயக்கும் செயல்பாட்டின் மையமாக இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் மணிக்கட்டினை நேராகவும் நடுவாகவும் வைக்கவும்.
4. உங்களுடைய நாற்காலியில் நன்கு சாய்ந்து அமர்ந்து கொள்ளுங்கள். கரங்களைத் தளர்வாக வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் மவுஸ் பிடிக்கும் உங்கள் கரத்தை, பெரும்பாலும் வலது கரம், சற்றுத் தூக்குங்கள். உங்கள் கை முழங்கைக்குச் சற்று மேலாக இருக்கும் வகையில் தூக்குங்கள். மவுஸை கீ போர்டு இருக்கும் இடத்திற்கும் அருகே அதே தளத்தில் வைத்துப் பயன்படுத்த வேண்டாம். கீ போர்டுக்கு 1 அல்லது 2 அங்குலம் மேலாக இருக்கும்படி மவுஸ் இடம் பெற வேண்டும். இந்த மவுஸ் அமரும் இடம் சற்றுக் கீழாக சரிவாக இருக்கும் படியாகவும் அமைக்கலாம். 
5. நீங்கள் மணிக்கட்டின் அமைப்பைச் சற்று சிரத்தையுடன் கவனித்தால் ஒன்று புரியும். இது இயற்கையாகவே சற்று வளைந்த நிலையில் உள்ளது. தட்டையான ஒரு தளத்தில் மணிக்கட்டை வைத்துப் பாருங்கள். வளைவான மணிக்கட்டின் கீழாக ஒரு சிறிய பேனாவினை நுழைத்து எடுக்கும் அளவிற்கு, அது வளைவாக இருக்கும். இதனுடன் எந்த தள அழுத்தமும் இருக்கக் கூடாது என்ற வகையில் தான் முன் கரம் மணிக்கட்டுடன் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மவுஸ் பயன்படுத்துவதற்காக மணிக்கட்டினைத் தளத்தோடு அழுத்துவது இயற்கைக்கு முரணானது. 
6. நம்மில் பெரும் பாலானவர்களுக்கு மணிக்கட்டின் தோலுக்குச் சற்று அடியிலேயே ரத்த நாளங்கள் செல்லும். அதனால் தான் நாடித் துடிப்பினை இங்கு பார்க்கிறோம். எனவே இந்த இடத்தில் அழுத்தம் கொடுத்தால் அது ரத்த ஓட்டத்தில் சிறிதளவேனும் பாதிப்பினை ஏற்படுத்தும். இதனால் இங்கு காயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
7. ஒரு சிலர் மணிக்கட்டுப் பகுதிக்கென தனியே ஒரு சப்போர்ட் அமைத்து இயக்குவார்கள். கைக்குட்டையைக் கூட மடித்து வைத்துப் பயன்படுத்துவார்கள். இது கூடவே கூடாது. இது பிரச்னையை மேலும் பெரிதாக மாற்றி, ஏற்கனவே நாம் கம்ப்யூட்டர் மலரில் எழுதிய கார்பல் டனல் பிரச்னையை உருவாக்கும். 
8. ஒரு சிலர் கரங்களுக்கு மெதுவாக இருப்பதற்கென மென்மையான சப்போர்ட் ஒன்றை நாற்காலியின் கரங்களில் வைத்துப் பயன்படுத்துவார்கள். இவ்வாறு பயன் படுத்துகையில் கரங்களை அதிலிருந்து எடுக்க மாட்டார்கள். ஒரு வகையில் கரங்கள் கட்டிப் போட்டது போல மாறுகிறது. இதனால் மணிக்கட்டிற்கு அதிக வேலை கிடைக்கிறது. இது மிகவும் பிரச்சினையைத் தரும்.
9. ஒரு சம தளத்தில் கையை வைத்து இயக்குகையில், நம் உள்ளங்கையின் அடிப்பாகத்தில் அதனை அமர்த்தி இயக்க வேண்டும். கீ போர்டினை இயக்குகையில் இது மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் மவுஸ் பயன்பாடு கீ போர்டு பயன்பாட்டிலிருந்து மாறுபட்டது. கீ போர்டில் கரங்களை உள்ளங்கை சப்போர்ட்டில் வைத்துப் பின் விரல்களை மட்டுமோ, கரங்களையோ இயக்கிப் பின் அவ்வப்போது உள்ளங்கை அடிப்பகுதியில் வைத்து ஓய்வளிக்கலாம். ஆனால் மவுஸ் இயக்கம் அப்படிப் பட்டதல்ல. இங்கு ஒரு தளத்தின் மீது முழு மவுஸ் சாதனமும் நகர்த்தி இயக்கப் படுகிறது. மவுஸ் நகர்த்தல் முழுமையும் முழங்கையை இயக்கத்தின் நடுப்புள்ளியாக வைத்து இயக்கப்பட வேண்டும். மணிக்கட்டு நடு இயக்கப் புள்ளியாக அமையக் கூடாது. முன்கை, கை மற்றும் மவுஸ் இயங்குவதைத் தடுக்கும் வகையில் செயல்பாடு எது இருந்தாலும், அது பிரச்சினையைக் கொடுக்கும். 
10. இப்போது ஸ்டைல் என்ற பெயரில் பல வடிவங்களில், பெரும் பாலும் தேவையற்ற வளைவுகளில் மவுஸ், சாதனங்கள் வடிவமைக்கப்பட்டு கிடைக் கின்றன. இது போன்ற வளைவான மவுஸ், பயன்பாட்டிற்குச் சரியானதல்ல. இரு புறமும் இணையாகச் சீரான அமைப்புள்ள மவுஸ்தான் சரியான ஒன்று. 
சில நிறுவனங்கள் இது குறித்து மருத்துவ ரீதியாக ஆய்வுகளை மேற்கொண்டு, சற்றுப் பெரிய அளவில் மவுஸ்களைத் தருகின்றன. இவை மணிக்கட்டிற்கு வேலையைக் குறைத்து கரங்கள் வழி மவுஸ் பயன்பாட்டிற்கு வழி வகுக்கின்றன.
11. மவுஸை இடது கரத்திலும் பயன்படுத்தும் வகையிலும் செட் செய்திட விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. எனவே ஏன் வலது கை, இடது கை என நம் வேலையை மாற்றி சில காலம் மவுஸைப் பயன்படுத்தக் கூடாது. இது ஒரு சிந்தனைதான்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

1 கருத்துரைகள்:

Anonymous December 8, 2009 at 12:34 PM  

niceee..

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP