சமீபத்திய பதிவுகள்

துரோகங்களும் உளவியற்போரும்.

>> Wednesday, January 27, 2010

 தேசியத்தலைவர்

எமது அன்பார்ந்த தமிழீழ மக்களே கடந்த காலத்தில் ஏற்பட்ட கடும் நெருக்கடிகளையும் இடர்களையும் கடந்து நாம் இன்று புதிய வடிவில் விடுதலைப்பயணத்தில் பயணிக்கும் வகையில் எமது மக்களை ஓர் நெறியில் அணிதிரட்டும் சவாலான இந்த நேரத்தில் எமது மவுனத்தின் பின் வெளிவந்துள்ளோம்.

இந்த நேரத்தில் எமது மக்கள் எம்முடன் இணைந்து அடுத்த கட்ட நகர்வினை முன்னெடுக்க விடாது பல தீய சக்திகள் எமது மக்களை எம்மிடம் இருந்து அந்நியப்படுத்தும் நோக்கில் விசமத்தனமான பிரச்சாரங்களையும் கருத்து என்ற பெயரில் பெரும் உளவியற் போரையும் நடத்தி வருகின்றன.

இவ் உளவியற் போரை பின்நின்று நடத்தும் இலங்கை அரசின் செயற்பாடுகளுக்கு துணைபோய் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை ஒடுக்கும் வகையில் செயற்படும் எமது இயக்க உறுப்பினர்கள் என்று கூறிக்கொண்டு இன்றும் செயற்படுவோர் எம்மால் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை அரசின் துணையோடு வெளிநாடுகள் சிலவற்றிக்கு அழைத்துச் செல்லப்பட்ட குமரன் பத்மநாதன் [kp]என்பவரை எமக்கு ஆதரவாக செயற்பட்ட சிலரும் சில இயக்க உறுப்பினர்களும் இரகசியமான சந்தித்துள்ளமை எம்மால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சர்வதேச நாடுகளில் கடந்த காலங்களில் எமது அமைப்பு சார்ந்து இயங்கி வந்த அணைத்துலக தொடர்பகத்தில் பணியாற்றிய சிலரும் இலங்கை அரசின் துரோகச் செயல்களுக்குள் அகப்பட்டு எமது விடுதலைப்போராட்டத்தை ஒடுக்குவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதும் எம்மால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த வடிவில் எமது இயக்கம் வெளிப்பட்டாலும் அதை இல்லாதொளிப்பாதற்கான அனைத்து பிரயத்தனங்களிலும் இவர்கள் ஈடுபடுவதும், தேசியத் தலைவர் சம்மந்தமான அவதூறுகளை பரப்புவதும், பிரதேச வேறுபாடுகளை தூண்டிவிடுவதும், எமது இயக்க சம்பந்தமான தகவல்களை வெளியிடுவதும் போன்ற துரோகச் செயல்களை இவர்கள் செய்வதும் எம்மால் கண்டறியப்பட்டுள்ளது.

அணைத்துலக தொடர்பகத்தில் பணியாற்றிய பலர் உண்மையாக இன்றும் தமிழீழ விடுதலைப்போருக்கு முண்டு கொடுத்துக் கொண்டு இருக்கும் வேளையில் இவ்வாறான இனத்துரோகம் புரிபவர்களை மண்ணின் மைந்தர்களான எமது மக்கள் முன் இனங்காட்டுவது அவசியம் என கருதி அவர்களின் விபரங்களை இன்று வெளியிடக் கூடிய ஆதாரங்கள் இருந்தும் அவ்வாறானவர்கள் தடம் மாறியுள்ள தங்கள் தடத்தை விட்டு மனம் திருந்தி வருவதோடு தமிழீழ தேசியத்தலைவர் பாதையில் விடுதலைப்பயணத்தில் எமது மாவீரர்களின் குருதியில் உருவான எமது ஒரே கொடியான தேசியக்கொடியின் கீழ் எம்மோடு அணிவகுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேம்.

ஒருவருக்கொருவர் கருத்துவேறுபாடுகளில் ஈடுபடுவதும் தனித்தனியே செயற்படுவதும் நம் பிரதான எதிரிக்கு வழியமைத்துக் கொடுத்துவிடும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

எமது தீராத இலட்சியம் தமிழீழ விடுதலையின் தமிழ்த்தேசியம் என்பதை மனதிற் கொண்டு செயற்படுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்ளும் இவ்வேளையில் அனைவரும் ஒன்றுபட்டு நாம் யாரென்பதை சிங்கள பேரினவாதத்திற்கு தெரியப்படுத்துவதோடு, தமிழீழம் என்ற ஒரே இலட்சியத்தை மனதில் நிறுத்தி தனிநபர் விமர்சனங்களை தவிர்த்து ஈழத்தமிழர் அனைவரையும் ஒரே அணியில் அணிதிரட்டுமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

தமிழீழ விடுதலைப்புலிகள்
தலைமைச் செயலகம்
தமிழீழம்
 .


source:lttepress


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP