சமீபத்திய பதிவுகள்

விண்டோஸ் டிப்ஸ்

>> Monday, March 29, 2010


 
 


இங்கு விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கான பொதுவான சில டிப்ஸ்கள் பட்டியலிடப்படுகின்றன.
1. ஒரு பைலின் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Send Toதேர்ந்தெடுத்து, அது எங்கே செல்ல வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கையில், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டால், தேர்ந்தெடுக்கப்படும் டிரைவில், அந்த பைலுக்கான ஷார்ட் கட் கீ அமைக்கப்படும்.
2. ரெஜிஸ்ட்ரி எடிட்டரைத் திறக்க regeditஎன்ற கட்டளை தருகிறோம். இந்த கட்டளையுடன் ஒரு முறை தான் ரெஜிஸ்ட்ரியைத் திறக்க முடியும். ரெஜிஸ்ட்ரியை நன்றாக ஒத்துப் பார்த்து, அதன் வரிகளைக் கையாள ரெஜிஸ்ட்ரியினை இரண்டு பதிப்புகளில் திறக்க வேண்டும் என்றால், regedit /m என்ற கட்டளையைக் கொடுக்கவும்.
3. ஒரு பைலின் ப்ராப்பர்ட்டீஸ் தெரிய, பைலைத் தேர்ந்தெடுத்த பின், ஆல்ட் + என்டர் அழுத்தவும். ப்ராப்பர்ட்டீஸ் உடனே கிடைக்கும்.
4. மை கம்ப்யூட்டர் திறக்க வேண்டுமா? விண்டோஸ் கீயுடன் E கீயும் சேர்த்து அழுத்தவும்.

விண்டோஸ் 7 புது போல்டர்
விண்டோஸ் 7 பெற்று அதில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்களா! புதிய போல்டர்களை உருவாக்கி அவற்றில் பைல்களை இட்டு நிரப்பிக் கொண்டிருக் கிறீர்களா? எப்படி புதிய போல்டர்களை உருவாக்கினீர்கள்? குறிப்பிட்ட டைரக்டரி சென்று அதில் ரைட் கிளிக் செய்து,கிடைக்கும் கீழ்விரி மெனுவில் நியூ (New) கிளிக் செய்து, பின் போல்டர் தேர்ந்தெடுத்து பெயர் சூட்டினீர்களா! இனிமேல் அதெல்லாம் வேண்டாம். எங்கு புதிய போல்டர் உருவாக்கப்பட வேண்டுமோ, அங்கு செல்லவும். பின் கண்ட்ரோல் + ஷிப்ட் + என் கீகளை அழுத்தவும். புதிய போல்டர் உருவாகும். அதற்குப் பெயர் ஒன்று சூட்ட வேண்டுவதுதான் உங்களின் வேலை. இந்த ஷார்ட் கட் கீயைப் பயன்படுத்தி, டெஸ்க்டாப் பிலும் போல்டரை உருவாக்கலாம்.

வேர்ட்: சில எடிட் வசதிகள்
வேர்ட் டாகுமெண்ட் தயாரிப்பில் சில நேரங்களில் நாம் முன்பு மேற்கொண்ட எடிட்டிங் வேலைகளை மாற்றி அமைக்க எண்ணுவோம். எடுத்துக் காட்டாக சில தலைப்புகளில், புதிய வகை எழுத்துரு ஒன்றில் அமைத்திருப்போம். அல்லது சில குறிப்பிட்ட சொற்களை போல்ட் செய்திருப்போம். பின்னர் அவற்றை அவ்வாறு மாற்றியிருக்க வேண்டாமே என்று எண்ணுவோம். எப்படி இவற்றைத் திருத்தலாம். முதலில் மாற்றிய இடங்களுக்கு எப்படி செல்வது? 
ஒன்றும் கவலைப்பட வேண்டாம். ஷிப்ட் பட்டனை அழுத்திக் கொண்டு எப்5 (Shft+F5) அழுத்துங்கள். நீங்கள் இறுதியாக மேற்கொண்ட எடிட் இடத்திற்குக் கர்சர் செல்லும். விரும்பும் மாற்றத்தை மேற்கொள்ளலாம். இன்னும் அதற்கு முன்னால் எடிட் செய்த இடத்திற்குச் செல்ல வேண்டுமா? தொடர்ந்து அப்படியே அழுத்த அழுத்த கர்சர் நீங்கள் எடிட் செய்த இடத்திற்குப் பின்னோக்கிச் சென்று கொண்டே இருக்கும். 
வேர்ட் டாகுமெண்ட்டில் Find & Replace வசதியை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். இதில் உள்ள ஒரு வசதியைப் பார்ப்போம். 
பைண்ட் (Find) கட்டம் மூலம் ஒரு சொல்லைத் தேடிக் கண்டுபிடிக்கிறீர்கள். அதனை எடிட் செய்கிறீர்கள். பின் சர்ச் கட்டத்தை மூடிவிட்டு வேறு செயல்களில் ஈடுபடுகிறீர்கள். பின் மீண்டும் அதே சொல்லை வேறு இடங்களில் இருக்கிறதா எனத் தேட விரும்புகிறீர்கள். மீண்டும் சர்ச் செயல்பாட்டிற்கான கீகளை அழுத்தி தேடுதல் கட்டம் வரவழைத்து சொல்லை டைப் செய்து என்டர் அழுத்தியெல்லாம் தேட வேண்டாம். ஷிப்ட் கீயை அழுத்தி எப்4(Shft+F4) அழுத்துங்கள். இறுதியாகத் தேடிய சொல்லை மீண்டும் டைப் செய்யாமலே வேர்ட் உங்களுக்குத் தேடிக் கொடுக்கும்.

எக்ஸெல் ஷார்ட் கட்ஸ்
எக்ஸெல் தொகுப்பில் செயல்படுகையில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய சில ஷார்ட் கட் வழிகள்.
CTRL+SPACEBAR – கர்சர் இருக்கும் நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.
SHIFT+SPACEBAR : கர்சர் இருக்கும் படுக்கை வரிசை தேர்ந்தெடுக்கப்படும். 
CTRL+HOME :  ஒர்க் ஷீட்டின் தொடக்கத்திற்கு செல்ல
CTRL+END:  ஒர்க்ஷீட்டின் இறுதிக்குச் செல்ல
SHIFT+F3 : பார்முலாவில் ஒரு பங்ஷனை ஒட்ட
CTRL+A: பார்முலா என்டர் செய்கையில் பங்ஷன் பெயர் டைப் செய்தவுடன் பார்முலா பேலட்டைக் காட்டும்
CTRL+A:  பார்முலா என்டர் அல்லது எடிட் செய்யாதபோது அனைத்தையும் தேர்ந்தெடுக்கும்.
CTRL+' : (சிங்கிள் லெப்ட் கொட்டேஷன் மார்க்) செல் வேல்யூ மற்றும் செல் பார்முலாவை அடுத்தடுத்துக் காணலாம். 
F11 or ALT+F1: அப்போது உள்ள ரேஞ்ச் சார்ந்து சார்ட் தயார் செய்யப்படும். 
CTRL+; –– (செமிகோலன்) தேதியை இடைச் செருக 
CTRL+: (கோலன்) நேரத்தை இடைச் செருக
CTRL+ENTER: தேர்ந்தெடுக்கப்பட்ட செல் ரேஞ்சில் அப்போதைய என்ட்ரி உருவாக்க 
F5: Go To  டயலாக் பாக்ஸ் காட்ட
CTRL+1: Format Cells  டயலாக் பாக்ஸ் காட்ட
CTRL+C: காப்பி செய்தல்
CTRL+V: ஒட்டுதல்
CTRL+Z: செயல்படுத்தியதை நீக்க
CTRL+S: சேவ் செய்திட
CTRL+P பிரிண்ட் செய்திட
CTRL+O : புதிய பைல் திறக்க போல்டரைக் காட்டும்

விண்டோஸ்-7 9 கோடி விற்பனை
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொகுப்பு வெளியாகி நான்கு மாதங்களும் சில நாட்களுமே ஆகியுள்ள நிலையில், 9 கோடி தொகுப்புகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இதுவரை வெளியான விண்டோஸ் தொகுப்புகளில் மக்களின் ஆதரவைப் பெற்ற சிறந்த தொகுப்பாக விண்டோஸ் 7 உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள வசதிகள் குறித்து இதனைப் பயன்படுத்து பவர்கள் அனைவரும் திருப்தி அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது


source:dinamalar

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP