சமீபத்திய பதிவுகள்

குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா? ஸுயூதியும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 1

>> Wednesday, October 26, 2011

இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவதுபோல, குர்‍ஆன் வசனத்திற்கு வசனம், எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டவில்லை. அனேக வசனங்கள் தொலைந்துவிட்டன. தொலைந்த வசனங்கள் எவ்வளவு இருக்கும்? ஒரு வசனமா? ஐந்து வசனங்களா? பத்து வசனங்களா? அல்லது நூற்றுக்கும் அதிகமான வசனங்களா? உமர், ஆயிஷா மற்றும் உபை போன்றவர்களின் சாட்சி என்ன என்பதை நீங்களே படியுங்களேன். இதனை அறிந்துக்கொள்ள இஸ்லாமிய நூல்களிலிருந்து சில குறிப்புக்களை காண்போம். 

இப்னு உமர் அல் கத்தாப்: 

குர்‍ஆன் முழுமையானதல்ல, குர்‍ஆனிலிருந்து அனேக வசனங்கள் தொலைந்துவிட்டன என்று இப்னு உமர் அல் கத்தாப் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்.

"என்னிடம் முழு குர்‍ஆனும் உள்ளது என்று உங்களில் யாரும் சொல்லக்கூடாது, தன்னுடமுள்ள குர்‍ஆன் முழுமையானது என்று அவனுக்கு எப்படித் தெரியும்?குர்‍ஆனின் பெரும் பகுதி தொலைந்துவிட்டது , ஆகையால் "குர்‍ஆனில் எவைகள் மீதமிருக்கிறதோ அவைகள் என்னிடமுள்ளன" என்று கூறுங்கள். (ஸுயூதி, இத்கான், பாகம் 3, பக்கம் 72) 

"Let no one of you say that he has acquired the entire Qur'an for how does he know that it is all? Much of the Qur'an has been lost , thus let him say, 'I have acquired of it what is available" (Suyuti: Itqan, part 3, page 72).

இப்னு உமர் கூறியதற்கு ஆதரவாக ஆயிஷா அவர்கள் (பக்கம் 72) கீழ்கண்ட விவரத்தை கூறுகிறார்கள்:

"இறைத்தூதர் வாழ்ந்த காலத்தில், " கூட்டங்கள் (Parties)" என்ற ஸூராவை ஓதும் போது இருநூறு வசனங்கள் இருந்தன . குர்‍ஆனின் பிரதிகளை உஸ்மான் உருவாக்கிய பிறகு, குர்‍ஆனில் இப்போதுள்ள வசனங்கள் மட்டுமே மீதமாக உள்ளது (73 வசனங்கள்)" 

"During the time of the prophet, the chapter of the Parties used to be two hundred verses when read. When Uthman edited the copies of the Qur'an, only the current (verses) were recorded" (73 verses).

முஹம்மதுவின் தோழர்களில் சிறந்தவரான உபை இப்னு கஅப் என்பவரும், ஆயிஷா அவர்கள் கூறியது போலவே கூறியுள்ளார்.

ஸுயூதி, இத்கான், பாகம் 3, பக்கம் 72:

"ஒரு முஸ்லிமிடம் இந்த சிறப்புமிக்க தோழர் இவ்விதமாக கேட்டார், ' கூட்டங்கள் (Parties) என்ற அத்தியாயத்தில் எத்தனை வசனங்கள் இருக்கின்றன‌?'. இதற்கு அந்த முஸ்லிம் '72 அல்லது 73 வசனங்கள்' என்று பதில் அளித்தார். உபை அவரிடம் இவ்விதமாக சொன்னார், 'அல் பகரா ஸூராவில் இருந்த வசனங்களுக்கு சமமான வசனங்கள் (கிட்டத்தட்ட 286 வசனங்கள்) இந்த 'கூட்டங்கள் (Parties)' அத்தியாயத்திலும் இருந்தன , அதில் கல்லெரிந்து கொல்லுதல் வசனமும் இருந்தது. அந்த மனிதர் உபையிடம் 'அந்த கல்லெரிந்து கொல்லுதல் வசனம் என்ன?' என்று கேட்டார். உபை அவரிடம், 'அதாவது வயது சென்ற ஒரு ஆணோ அல்லது பெண்ணோ விபச்சாரம் செய்தால், அவர்கள் மரிக்கும் வரை கல்லெரிந்து கொல்லவேண்டும்' என்பது தான் அந்த வசனம் என்று பதில் அளித்தார். 

"This famous companion asked one of the Muslims, 'How many verses in the chapter of the Parties?' He said, 'Seventy-two or seventy-three verses.' He (Ubay) told him, 'It used to be almost equal to the chapter of the Cow (about 286 verses) and included the verse of the stoning .' The man asked, 'What is the verse of the stoning?' He said, 'If an old man or woman committed adultery, stone them to death."'

நபித்தோழருக்கும், ஒரு முஸ்லிமுக்கும் இடையே நடந்த மேலே கூறிய உரையாடலை அப்படியே பதிவு செய்து, இப்னு ஹஜம் என்ற இஸ்லாமிய அறிஞர், கீழ்கண்டவாறு கூறுகிறார் (தொகுப்பு 8, பாக‌ம் 11, ப‌க்க‌ங்க‌ள் 234 ம‌ற்றும் 235):

"அலி இப்னு அபூ தாலிப்பின் கூற்றின் ப‌டி, இந்த‌ ஹ‌தீஸ் ச‌ரியான‌ ஹ‌தீஸாகும் (ந‌ம்பிக்கையான‌ ச‌ங்கிலித் தொட‌ர் உடைய‌ ஹ‌தீஸாகும்) (The Sweetest [Al Mohalla] Vol. 8.). 

"'Ali Ibn Abi Talib said this has a reliable chain of authority (The Sweetest [Al Mohalla] vol. 8.)."

இதனை "al-Kash-Shaf" என்ற தம்முடைய புத்தகத்தில் ஜமக் ஷாரி (Zamakh-Shari) என்பவரும் குறிப்பிட்டுள்ளார் (பாகம் 3, பக்கம் 518). 

முஹம்மதுவின் ஹதீஸ்களையும், சரிதையையும், குர்‍ஆனின் விரிவுரைகளையும் உலகிற்கு காட்டிய இந்த இஸ்லாமிய தூண்களாகிய அவரது தோழர்கள் மற்றும் நம்பிக்கைக்குரியவர்களின் மேற்கண்ட கூற்றுகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. இவர்களில் சிலர் "இப்னு உமர், ஆயிஷா, உபை இப்னு கஅப், மற்றும் அலி இப்னு அபூ தாலிப்" என்பவர்கள் ஆவார்கள்.

இப்னு உமரின் கூற்றுப்படி, குர்‍ஆனின் பெரும்பகுதி தொலைந்துவிட்டது.

ஆயிஷா மற்றும் உபை இப்னு கஅப் என்பவர்களின் கூற்றுப்படி, கு‍ர்‍ஆனின் "கூட்டங்கள் (Parties)" அத்தியாயத்திலிருந்து பெரும்பகுதியான தொலைந்துவிட்டது,

இதையே அலி கூட உறுதிப்படுத்துகிறார். இந்த நிகழ்ச்சிப் பற்றி ஸுயூதி தன் "இத்கான்" என்ற புத்தகத்தில் கீழ்கண்டவாறு பதிவு செய்கிறார் (பாகம் 1, பக்கம் 168):

குர்‍ஆன் தொகுக்கப்பட்டுக் கொண்டு இருந்த காலக் கட்டத்தில், மக்கள் ஸைத் இப்னு தாபித் என்பவரிடம் (தாங்கள் மனப்பாடம் செய்து வைத்திருந்த குர்‍ஆன் வசனங்களோடு)வருவார்கள். இரண்டு அத்தாட்சிகள் இருந்தால் மட்டுமே ஏற்பேன் இல்லையேல் அவைகளை குர்‍ஆனில் சேர்க்கமாட்டேன் என்றுச் சொல்லி அவர் மறுத்துவிடுவார். "அல் தவ்பா" என்ற அத்தியாயத்தின் கடைசி வசனம் "குஜைமா இப்னு தாபித்" என்பவரிடம் மட்டுமே இருந்தது. 'இந்த வசனம் இவரிடம் மட்டுமே இருந்தாலும், அதனை பதிவு செய்யுங்கள், ஏனென்றால், குஜைமாவின் சாட்சி இரண்டு சாட்சிகளுக்கு சமம் என்று இறைத்தூதர் கூறியிருக்கிறார்' என்று ஸைத் கூறினார். உமரும் "கல்லெரிதல்" வசனத்தை கொண்டு வந்தார், இருந்தாலும், அவர் கொண்டு வந்த‌ வசனம் குர்‍ஆனில் பதிவு செய்யப்படவில்லை, ஏனென்றால், இவ்வசனத்திற்கு உமர் மட்டுமே சாட்சியாக இருந்தார்". 

"During the collection of the Qur'an, people used to come to Zayd Ibn Thabit (with the verses they memorized). He shunned recording any verse unless two witnesses attested to it. The last verse of chapter of Repentance was found only with Khuzayma Ibn Thabit. Zayd said, 'Record it because the apostle of God made the testimony of Khuzayma equal to the testimony of two men.' 'Umar came with the verse of the stoning but it was not recorded because he was the only witness to it."

மேற்கண்டவைகளை ஒருவர் படித்தால் அவர் ஆச்சரியத்தோடு கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுவார்:

"உமருடைய சாட்சி உண்மையான சாட்சி தான் என்றுச் சொல்ல இன்னொரு சாட்சி அவசியமா?"

"அல்லாஹ்விற்கும், அவனது குர்‍ஆனுக்கும் எதிராக உமர் பொய்யை கூறுவாரா?".

அதன் பிறகு உமர் இவ்விதமாக கூறினார், 'உமர் அல்லாஹ்வின் புத்தகத்தில் சேர்த்துவிட்டார் என்று என் மீது குற்றம் சொல்லாமல் இருப்பார்களானால், நான் அந்த கல்லெரிதல் வ்சனத்தை குர்‍ஆனோடு சேர்த்து இருந்திருப்பேன்".(இத்கான், பாகம் 3, பக்கம் 75). மேலும் "Skiek Kishk" என்பவரின் புத்தகத்திலும் இதனை காணலாம். 

ஆயிஷா அவர்களின் இன்னொரு அறிக்கை:

"இறக்கப்பட்ட வசனங்களில் "பத்து முறை மார்பக பால் கொடுத்தல்" வசனத்தை "ஐந்து முறை மார்பக பால் கொடுத்தல்" வசனம் இரத்து செய்துவிட்டது.இறைத்தூதர் மரித்துவிட்ட பிறகும் இந்த வசனம் குர்‍ஆனின் வசனமாக வாசிக்கப்பட்டுக்கொண்டு இருந்தது. இதனை அபூ பக்கர் மற்றும் உமர் மூலமாக அறிவிக்கப்பட்டது (பார்க்க ஸுயூதி, இத்கான் பாகம் 3 பக்கங்கள் 62 மற்றும் 63) 

"Among the (verses) which were sent down, (the verse) of the ten breast feedings was abrogated by (a verse which calls for five breast feedings. The apostle of God died and this verse was still read as part of the Qur'an. This was related by Abu Bakr and 'Umar" (refer to Suyuti's qan, part 3, pages 62 and 63).

ஆங்கில மூலம்: Chapter Twelve - The Perversion of Qur'an and the Loss of Many Parts of It.


source:isakoran.blogspot


--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP