சமீபத்திய பதிவுகள்

உஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று உலகில் உண்டா?

>> Wednesday, October 26, 2011

பழமைவாய்ந்த "குர்‍ஆனின் முழு கையெழுத்து" பிரதி ஹிஜ்ரி 200 அல்லது கி.பி. 800 க்கு சம்மந்தப்பட்டது 

Koran: Earliest complete manuscript 200 AH or 800AD!

பீஜே அவர்கள் தம்முடைய குர்‍ஆன் தமிழாக்கத்தில் "பிரதிகள் எடுத்தல்" என்ற தலைப்பின் கீழ், பக்கம் 48ல் இரண்டு மூல குர்‍ஆன் பற்றிய விவரங்களைத் தருகிறார்.

பீஜே குர்‍ஆன் தமிழாக்கம், பக்கம் 48 :

உஸ்மான் (ரலி) அவர்களின் இந்த மூலப் பிரதியின் அடிப்படையில் தான் உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக குர்‍ஆன் அச்சடிக்கப்பட்டும், எழுதப்பட்டும், பரப்பப்பட்டும், வினியோகிக்கப்பட்டும் வருகின்றது. 

உஸ்மான் (ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பிய மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒன்று துருக்கி நாட்டின் "இஸ்தான்புல்" நகரத்தில் உள்ள அருங்காட்சி யகத்திலும், இன்னொன்று ரஷியாவின் "தாஷ்கண்ட் " நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

அவர்கள் பரப்பிய அந்தப் பிரதிகள் தான் இன்று உலகத்தில் உள்ள குர்‍ஆன் பிரதிகள் அனைத்திற்கும் மூலம் எனலாம். (பீஜே குர்‍ஆன் தமிழாக்கம், பக்கம் 48)

பீஜே அவர்கள் கூறியது உண்மையா?

அன்று உஸ்மான் அவர்கள் எடுத்த பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் நம்மிடம் உள்ளதா?

அல்லது ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிரதிகள் நம்மிடம் உள்ளதா?

முஹம்மது மரித்த 18 அல்லது 19 ஆண்டுகளில் உஸ்மான் மூலமாக தொகுக்கப்பட்ட பிரதிகள் தான் நம்மிடமுள்ளதா?

அல்லது முஹம்மது மரித்துவிட்ட பிறகு நூறு ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட பிரதிகள் நம்மிடமுள்ளதா?

இவைகளை அறிய இந்த கட்டுரையை படியுங்கள்,  மற்றும் பீஜே போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் புனையும் பொய்களை அறிந்துக்கொள்ளுங்கள்.


இஸ்லாமியர்களுக்கு சவால்

முஹம்மது மரித்த ஆண்டில் இருந்த "குர்‍ஆன் கையெழுத்துப்பிரதி" முழுவதுமாக இன்னும் தங்களிடம் உள்ளது என்ற மாயையை முஸ்லிம்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஆனால், விஞ்ஞான உண்மைகள் இஸ்லாமியர்களின் இந்த நம்பிக்கைக்கு எதிராக சாட்சி சொல்கிறது. 

கி.பி. 750க்கு முந்தைய காலத்திற்கு சம்மந்தப்பட்ட பழங்கால குர்‍ஆன் பிரதிகள் உலகின் எந்த ஒரு அருங்காட்சியத்திலும் இல்லை. நாங்கள் உங்களுக்கு சவால் விடுகிறோம், நாங்கள் சொன்ன இந்த விவரம் தவறு என்பதை நிருபியுங்கள்! எங்களுக்கு அந்த கையெழுத்துப் பிரதியின் பெயர், அது எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது, அது எந்த காலகட்டத்தில் எழுதப்பட்டது என்பதை எங்களுக்கு தெரிவியுங்கள். சகோதரர் ஆன்ரு அவர்களுக்கு மெயில் அனுப்பி தெரிவியுங்கள். (There are no ancient copies of the Koran dating before 750 AD in museums. We challenge you to prove us wrong! Send us the name, locate and date of the Koran written earlier! Email Brother Andrew. )

இன்று அருங்காட்சியங்களில் இருக்கும் பழங்கால முழு குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகள் முஹம்மது மரித்து 100 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளாகும்: 

முஸ்லிம்களின் பொய்யான/தவறான வாதம்:

"வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால்: காலிஃபா உஸ்மான் அவர்களின் ஆட்சி காலத்தில் எழுதப்பட்ட இரண்டு குர்‍ஆன் பிரதிகள் இன்னும் நம்மிடம் உள்ளது. இந்த குர்‍ஆன் பிரதிகளின் வசனங்களையும், அத்தியாயங்கள் அமைக்கப்பட்ட அமைப்பையும் விருப்பம் உள்ளவர்கள் ஒப்பிட்டு சரி பார்த்துக்கொள்ளலாம். அதாவது உலகின் எந்த நாட்டிலும் எந்த கால கட்டத்திலும் அச்சடிக்கப்பட்ட அல்லது கைகளால் எழுதப்பட்ட குர்‍ஆனோடு உஸ்மான் கால குர்‍ஆனை ஒப்பிட்டு சரி பார்த்துக் கொள்ளட்டும். இப்படி ஒப்பிடும் போது, உஸ்மான் கால குர்‍ஆனும் தற்கால குர்‍ஆனும் ஒன்று போலவே இருக்கும், வித்தியாசம் இருக்காது. (Von Denffer, Ulum al-Qur'an, p 64)

உண்மை என்ன? 

முஹம்மதுவின் காலத்துக்கு சம்மந்தப்பட்ட குர்‍ஆன் தங்களிடம் உள்ளது என்று இஸ்லாமியர்கள் கூறிக்கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டாலும், உண்மை வேறு விதமாக உள்ளது. 

இரண்டு பழங்கால குர்‍ஆன் பிரதிகளின் ஒரு பகுதி இரண்டு இடங்களில் உள்ளது. தாஸ்கண்ட் என்ற இடத்தில் சமர்கண்ட் (Samarqand MSS) என்ற குர்‍ஆன் கையெழுத்துப் பிரதி உள்ளது. இன்னொரு குர்‍ஆன் கையெழுத்துப் பிரதி இஸ்தான்புல் என்ற இடத்தில் உள்ள தாப்காபி (Topkapi) அருங்காட்சியகத்தில் உள்ளது. பெரும்பான்மையான‌ முஸ்லிம்க‌ளுக்கு தெரியாத‌ விஷ‌ய‌ம் என்ன‌வென்றால், இந்த‌ இர‌ண்டு கையெழுத்துப் பிர‌திக‌ளும் "க்யூபிக் (Kufic)" என்ற‌ எழுத்தில் எழுத‌ப்ப‌ட்ட‌வைக‌ளாகும். இந்த கையெழுத்து பிரதிகள் முஹம்மது மரித்த பிறகு 200 ஆண்டுகளுக்கு பின்பாக எழுதப்பட்டவைகள் என்று இஸ்லாமிய பண்டிதர்கள் கணக்கிட்டுள்ளனர். ஒரு வேளை இந்த இரு பிரதிகளும் அக்காலத்திற்கு முன்பு எழுதப்பட்டு இருந்தால், அவை இரண்டும் "மைல் (Ma'il)" அல்லது "மஸ்க் (Mashq)" என்ற எழுத்துக்களில் எழுதப்பட்டு இருந்திருக்கும். ஜான் கிள்கிறைஸ்ட் தம்முடைய "ஜம் அல் குர்‍ஆன்" என்ற புத்தகத்தில் இதே முடிவுரையை கூறியுள்ளார் (John Gilchrist, Jam' Al-Qur'an, Jesus to the Muslims, 1989) 

தாஷ்கண்ட் என்ற இடத்தில் இருக்கும் சமர்கண்ட் குர்‍ஆன் கையெழுத்துப் பிரதி, முழு குர்‍ஆனில் மூன்றில் ஒரு பாகம் மட்டுமே உள்ளது . மான் தோலில் பெரிய அரபி எழுத்துக்களில் எழுதப்பட்ட 250 பக்கங்கள் உள்ளன. இந்த அரபி எழுத்துக்கள் "ஹெஜாஜ்" என்ற சௌதி அரேபியா எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது (கியூபிக் – Kufic Script). 

நம்மிடம் "மைல் (Ma'il style of script)" என்ற அரபி எழுத்துக்களில் எழுதப்பட்ட குர்‍ஆன் கையெழுத்துப் பிரதியும் உள்ளது. இந்தப் பிரதி லண்டன் மாநகரில் உள்ள பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது (Lings & Safadi 1976:17,20; Gilchrist 1989:16,144). மார்டின் லிங்க்ஸ் (Martin Lings) என்பவர் ஒரு இஸ்லாமியர் மட்டுமல்ல, அவர் பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் கையெழுத்து பிரதிகளை பாதுகாக்கும் பதவியில் (Curator) இருந்தவர் ஆவார். அவர் இந்த மைல் கையெழுத்துப் பிரதியை கி.பி. 790 காலத்துக்கு சம்மந்தப்பட்டது என்று கணக்கிட்டுள்ளார். யாசீர் க்ஹாதி என்பவர் "வேறு ஒரு இஸ்லாமிய அறிஞர் (Islamic Masters/PhD scholar)" என்பவர் கூறியதாக அறிவித்ததாவது என்னவென்றால், "மூல குர்‍ஆனுக்கு ஒத்து இருப்பது சமர்கண்ட் கையெழுத்து பிரதியாக இருக்க வாய்ப்பு உள்ளது".

இஸ்தான்புல் நகரில் உள்ள பழங்கால தாப்காபி குர்‍ஆன் கையெழுத்துப் பிரதி இருக்கும் அருங்காட்சியகத்தில் உள்ள அதிகாரிகள், அந்த குர்‍ஆனின் (அனைத்து பக்கங்களின்) புகைப்படங்களை வெளியிடவில்லை என்ற விஷய‌ம் இஸ்லாமியர்களுக்கும் தெரியாது. ஆகையால், அந்த கையெழுத்துபிரதி மீது எந்த ஒரு முழுமையான ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. இதனால் தான் விவாதம் புரியும் இஸ்லாமிய அறிஞர் எம். ஸைபுல்லாஹ் கீழ்கண்ட விதமாக குறிப்பிடுகிறார்: "தாப்காபி கையெழுத்துப் பிர‌தி ப‌ற்றி கேட்டால், இந்த‌ பிர‌தியில் எந்த‌ ஒரு ஆராய்ச்சியும் ந‌ட‌ந்த‌தாக‌ தெரிய‌வில்லை "(Who's Afraid Of Textual Criticism?, M. S. M. Saifullah, 'Abd ar-Rahman Squires & Muhammad Ghoniem). இந்த‌ தாப்காபி கையெழுத்து பிர‌தியில் இருக்கும் விவ‌ர‌ங்க‌ளை வெளியிட‌, உலக மக்கள் அவைகளை பார்வையிட‌ இஸ்லாமிய‌ர்க‌ள் ப‌ய‌ப்ப‌டுவ‌த‌ற்கு கார‌ண‌ம் என்ன‌? குர்‍ஆன் 2:111ல் "…நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள் என்று கேட்பீராக! " என்று கூறுகிற‌த‌ல்ல‌வா? இதை இஸ்லாமிய‌ர்களே ஏன் செய்ய‌க்கூடாது? 

மிகவும் பழமையான குர்‍ஆன் கையெழுத்துப் பிரதி கூட (fragmentary - ஒரு சிறிய துண்டு கையெழுத்துப் பிரதி) முஹம்மது மரித்த 100 ஆண்டுகளுக்கு பின்பு எழுதப்பட்டது தான். 

இதோடு மட்டுமல்லாமல், முஹம்மதுவின் காலத்து கல்வெட்டுக்கள், தொல்லியல் சான்றுகள், கையெழுத்து பிரதிகள் என்று எவைகளை பார்த்தாலும், அவைகளில் "முஹம்மது ஒரு நபி" என்ற சான்று இவைகளில் எதிலும் காணமுடியாது. 

நான் சொல்வதை நீங்கள் நம்பமாட்டீர்கள் என்றுச் சொன்னால், மிகவும் இறைநம்பிக்கைக்கொண்ட இஸ்லாமியர் அஹ்மத் வொன் டென்பர் (Ahmad Von Denffer) என்பவர் கூறுவதையாவது கேளுங்கள். இவர் தம்முடைய "உலும் அல் குர்‍ஆன்" என்ற புத்தகத்தின், "குர்‍ஆனின் பழங்கால கையெழுத்துப் பிரதிகள் " என்ற அத்தியாயத்தில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:

"நம்மிடம் இப்போது இருக்கும் பழமை வாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகள், அவைகள் முழுமையானவைகளாக இருந்தாலும், குர்‍ஆனின் ஒரு பகுதியாக இருந்தாலும், அவைகள் அனைத்தும் ஹிஜ்ராவின் இரண்டாம் நூற்றாண்டுக்கு பிறகு எழுதப்பட்ட பிரதிகளேயாகும் (அல்லது கி.பி. 800க்கு பிறகு). உலக இஸ்லாமிய பெருவிழாவில் பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் காட்டப்பட்ட குர்‍ஆன் பிரதியானது ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் கடைசி காலத்திற்கு சம்மந்தப்பட்டதாகும். இருந்தபோதிலும், சில பழமைவாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துபிரதி துண்டுகள் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிற்கு சம்மந்தப்பட்டவைகளாகும்."(Grohmann, A.: Die Entstehung des Koran und die altesten Koran- Handschriften', in: Bustan, 1961, pp. 33-8)

இஸ்லாமியர்களுக்கு சவால்

கி.பி. 750க்கு முந்தைய காலத்திற்கு சம்மந்தப்பட்ட பழங்கால குர்‍ஆன் பிரதிகள் உலகின் எந்த ஒரு அருங்காட்சியத்திலும் இல்லை. நாங்கள் உங்களுக்கு சவால் விடுகிறோம், நாங்கள் சொன்ன இந்த விவரம் தவறு என்பதை நிருபியுங்கள்! எங்களுக்கு அந்த கையெழுத்துப் பிரதியின் பெயர், அது எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது, அது எந்த காலகட்டத்தில் எழுதப்பட்டது என்பதை எங்களுக்கு தெரிவியுங்கள். சகோதரர் ஆன்ரு அவர்களுக்கு மெயில் அனுப்பி தெரிவியுங்கள். (There are no ancient copies of the Koran dating before 750 AD in museums. We challenge you to prove us wrong! Send us the name, locate and date of the Koran written earlier! Email Brother Andrew. )

ஆசிரியர்: சகோதரர் ஆன்ட்ரூ 

ஆங்கில மூலம்: Koran: Earliest complete manuscript 200 AH or 800AD!


source:isakoran.blogspot


--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP