சமீபத்திய பதிவுகள்

இந்துக்களே எழுமின் விழிமின் -1

>> Monday, June 9, 2008





கண்ணியமிக்க வாசகர்கள் கவனத்திற்கு!

இந்நூலில் இடம்பெற்றுள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை.

ஆதாரங்கள் பட்டியல்கள, நூல்கள், நூல்களின் விபரங்கள் அனைத்து முகவரியுடன் பின்னால் தரப்பட்டுள்ளன.

இந்நூலுக்கு பதிப்புரிமை இல்லை. இதை மொழி பெயர்த்துக் கொள்ளலாம். அச்சிட்டுக் கொள்ளலாம். முன் அனுமதியின்றி விற்பதை செய்து கொள்ளலாம்.

நீங்கள் ஓர் உண்மையான ஹிந்துவாக இருந்தால் .....

இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால் .....

ஏனைய ஹிந்து சகோதரர்களையும் இந்த நூலைப் படிக்கத் தூண்டி - உண்மையை ஊரறியச் செய்யுங்கள்.

இந்த இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.

நீங்கள் இந்தக் கடமையில் தவறுவீர்கள் என்றால் உங்கள குழந்தைகள், உங்கள் குழந்தைகளின் குழந்தைகள், அவர்களின் சந்ததிகள் அத்தனை பேரும் தொடர்ந்து கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

இதை ஆங்கில அறிஞன் எட்மண்ட்பர்க் இப்படிச் சொன்னான்:

'அநீதியைக் கண்ணெதிரே கண்டும் (போராடாமல்) அமைதியாக அமந்ந்திருப்பவர்கள் ஆபத்தானவர்கள்"

தாயகத்தை தற்காக்க வாருங்கள்
நாம், நமது தாய் நாட்டை நேசிக்கின்றோம்! நாம் யாரையும் வெறுப்பதில்லை!

இந்தியர்கள் என்ற அளவில் நாம் நமது தாய் நாட்டை, அதைத் தொற்றிக் கொண்டிருக்கும் - தொடர்ந்து கொண்டிருக்கும் தொல்லைகளிலிருந்து காப்பாற்றுவோம்!

அதன் குடிமக்களுக்கிடையே ஒற்றுமையைப் போற்றி வளர்ப்போம். இவற்றை மனதிற் கொண்டே இந்நூல் எழுதப்பட்டது.

மதம் என்பது என்ன?

மதம் என்பது ஒரு வாழ்க்கைநெறி - நடைமுறை வழக்கம். அதன் நோக்கம்: இந்த உலகிலும் - அடுத்த உலகிலும் வெற்றி!

மதம் என்பது நீதி, அன்பு, மனிதம் - சமஉரிமைகள் என்பவற்றின் அடிப்படையில் அமைந்ததாய் இருந்திடல் வேண்டும். மதம் மனிதனின் இயல்புகளோடு பொருந்திப் போக வேண்டும். மனிதர்கள் அனைவரும் இறைவனால் படைக்கப்பட்டவர்களே! இறைவன், தான் படைத்த மனிதர்களுக்கிடையே, வேற்றுமை பாராட்டுவதில்லை. இறைவன், வலியவன், மெலியவனை ஆக்கிரமிப்பதை - அடிமைப்படுத்தி அநியாயம் செய்வதை அனுமதிப்பதில்லை, ஆதரிப்பதில்லை. காரணமின்றி தண்டிக்கப்படுபவர்கள் மீது இறைவன் அனுதாபம் கொள்கிறான். அடுதத்தவர்களை மதத்தின் பெயரால் அடிமைப்படுத்துவது - அடிமுட்டாள் ஆக்குவது, ஏய்ப்பது - கொலை பாதகங்களைச் செய்வது - இவற்றின் மூலம் எந்த மனிதனும் இறைவனை அடைந்திட இயலாது.

இந்தியாவில் எராளமான மதங்கள் இருக்கின்றன. ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்கள் ஏனைய மதங்களைப் பின்பற்றுபவர்களையும் - மதங்களையும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

வருந்தத்தக்க அளவில், உயர்ஜாதி பிராமணர்கள், பாமர ஹிந்துக்களின் உள்ளங்களில், ஏனைய மதங்களின் பால் வெறுப்பையும் துவேஷத்தையும் வளர்த்து வருகின்றார்கள்.

இதனால் சுமுகமான வாழ்க்கைக்குப் பெருமளவில் பங்கம் ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் - கிருஸ்துவர்கள் - கீழ்ஜாதி ஹிந்துக்கள் - இவர்களின் இரத்தங்கள் ஆறாக ஓட்டப்படுகின்றன.

கீழ்ஜாதி ஹிந்துக்களின் இரத்தத்தை ஆறாக ஓட்டுபவர்கள் - அவர்களின் பெண்களைக் கற்பழித்து - அவமானப்படுத்தி - அல்லல்களுக்கு உள்ளாக்குபவர்கள் - இந்த உயர்ஜாதி ஆணவ பிராமணர்களே!

இந்தப் பிராமணர்கள் இந்த இனக் கலவரங்களை என்றென்றும் நிரந்தரமாக ஆக்கிக் கொள்ள - அதில் ஆதாயம் தேடிக் கண்டெடுத்த யுக்திதான்:

6000 கிறிஸ்துவ ஆலயங்கள் - (இதில் மண்டைக்காடு - நீலக்கால் ஆகிய இடங்களிலுள்ள கிறிஸ்துவ ஆலயங்களும் அடங்கும்)

3000 பள்ளிவாயில்கள். இவையெல்லாம் ஒரு காலத்தில் கோயில்களாக இருந்தன என்ற பொய்ப்பிரச்சாரம்.

இவர்கள் திட்டமிட்டு அதிவேகமாகப் பரப்பி வரும் இந்தப் பொய்ப் பிரச்சாரங்களுக்கு எந்த விதமான வரலாற்று ஆதாரங்களோ - விஞ்ஞான ஆதாரங்களோ இல்லை.

பத்திரிக்கைகளின் எந்தப் பக்கம் பார்த்தாலும் - ஹிந்துக்கள் முஸ்லிம்களைக் கொன்றார்கள் - ஹிந்துக்கள் கீழ் ஜாதியினரைக் கொன்றார்கள் - என்றே செய்திகள். இவைகள் யாரால் - எப்படி நடக்கின்றன என்பதை நீங்கள் எப்போதாவது ஆழ்ந்து கவனித்தது உண்டா?

இவற்றை தூண்டுபவர்களும் - திட்டம் போட்டுத் தருபவர்களும் உயர்ஜாதி பிராமணர்கள் தாம்.

பிரமாணர்கள் இந்த நாட்டின் குடிமக்களது மதங்களை குறை கூறியும் கிண்டல் செய்தும் வருகின்றார்கள். ஆனால் அவர்கள் தங்களின் சொந்த மதத்தை - அதன் விதிமுறைகளை - அதே விமர்சன கண்களோடு பார்க்க மறுக்கின்றார்கள். ஆகவே தான் நாம் இந்த நூலை எழுதிட வேணடிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

விருப்பு வெறுப்பின்றி நாம் ஓர் அறிவுப்ப+ர்வமான ஆராய்ச்சியை மேற்கொள்வோம்.

இந்த ஆராய்ச்சியில் பிராமணர்கள் வேதம் என்று சொல்லுபவற்றில் என்னென்ன இருக்கின்றன என்பதைக் கண்டறிவோம். அவற்றை உலக மக்களின் பார்வைக்குக் கொண்டு வருவோம்.

அன்புடன் தாயகப் பணியில்

DR. சாட்டர்ஜி M.A., Ph.d,. (USA. )




தொடரும் இந்த பயணம்.........................

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP