சமீபத்திய பதிவுகள்

இந்துக்களே எழுமின் விழிமின்-11-எங்கும் எதிலும் பிராமணர்கள்

>> Monday, June 9, 2008

10)எங்கும் எதிலும் பிராமணர்கள்

குஷ்வந்த் சிங்

நான் எந்தக் கருத்தரங்கத்திற்கு சென்றாலும், எந்த மாநாட்டில் கலந்து கொண்hலும், அங்கே எந்தந்த வகுப்பார், எத்தனை பேர் வந்திருக்கின்றார்கள் எனப் பார்ப்பதுண்டு.

கருத்தரங்கங்கள், மாநாடுகள், ஏனைய சமுதாய நிகழ்ச்சிகள் இவற்றில் முக்கிய இடங்களைப் பிடித்துக் கொள்பவர்கள் யார், யாரென்றும் நான் கவனிப்பதுண்டு.

இது என்னுள் இயல்பாகவே அமைந்துவிட்ட ஓர் ஆர்வம்! அல்லாமல் வேறொன்றுமில்லை.

கலந்து கொள்கின்ற நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும்,

அது இலக்கிய வாதிகளின் குழுமமாக இருக்கட்டும்

அது விஞ்ஞான வித்தகர்களின் குழுமமாக இருக்கட்டும்

அது அதிகாரிகளின் அவையாக இருக்கட்டும்

பிராமணர்களே முக்கிய இடங்களைப் பிடித்துக் கொள்கின்றார்கள்.

இப்படியொரு முடிவுக்கே என்னால் வர முடிந்தது இதற்குக் காரணம்,

இந்த இனத்திற்கு சொந்தமான இயல்பு என்றோ,

அவர்களது கடின உழைப்பின் பலன் என்றோ அவர்கள் யாரையும் நுழையவிடாமல் தங்களுக்கென வைத்துக் கொள்ளும் கல்வியின் பயனால் வந்தது என்றோ நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் எல்லாவற்றிலும் அவர்கள் முதல் இடத்தையும் முக்கியமான இடத்தையம் பிடித்துக் கொள்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

இதைப் பற்றி இன்னும் அதிகமான விளக்கத்தைத் தருவதற்கு முன்னால், ஒன்றை உறுதியாகச் சொல்லிட விரும்புகிறேன்.

பிராமணர்கள் மொத்த மக்கள் தொகையில் 3.5 சதவிகிதம் தான்.

நான் இங்கே எடுத்து வைக்கும் புள்ளிவிபரங்கள், என்னுடைய நண்பர் ஒருவர் சில சிரமங்களுக்குப் பின் சேகரித்தவையாகும். அவரது பெயர் ஸ்டேன்னி.

இவர் அரசு பணிகளில் இருப்பவர்களில் வகுப்புவாரியான கணக்கொன்றைத் தொடுத்துள்ளார்.

ஆங்கிலேயர்களின் ஆட்சியில் கயஸ்தாஸ் என்ற இனத்தவர் தான் அதிகமான அரசு பணிகளில் வீற்றிருந்தார்கள்.

அதாவது அவர்கள் 1935 ஆம் ஆண்டில் 40 சதவிகிதம் அரசு பணிகளில் வீற்றிருந்தார்கள்.

இவர்களுக்கு அடுத்தாற்போல் அரசு பணிகளில் இடம் பெற்றவர்கள் முஸ்லிம்கள் தான். முஸ்லிம்களை அரசு பணிகளில் நியமிப்பதில் அதிகமான விருப்பமுடையவர்களாக இருந்தார்கள் ஆங்கிலேயர்கள். 1935இல் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் 35 சதவிகிதம் அரசு பணிகளில் முஸ்லிம்கள் இருந்தார்கள்.

சுதந்திர இந்தியாவில் இந்த கயஸ்தாஸ் என்ற இனத்தவர்கள் 7 சதவிகிதம் அரசு பணிகளில் தான் இருக்கின்றார்கள்.

அதே போல் இந்தியாவில் அரசு பணிகளில் முஸ்லிம்களின் பங்கு 3.5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டு விட்டது.

கிறிஸ்தவர்கள் இவர்கள் ஆங்கிலேயர்களால் அதிகமாக விரும்பப்பட்டவர்கள். இவர்கள் ஆங்கிலேயர்ளின் ஆட்சியில் 15 சதவிகிதம் அரசு பணிகளில் பதவி வகித்தார்கள்.

சுதந்திர இந்தியாவில் அவர்கள் அங்கம் வகிக்கும் அரசு பணிகள் 1 சதவிகிதம் எனக் குறைக்கப்பட்டுவிட்டது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அன்று அரசு பணிகளில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இன்று சுதந்திர இந்தியாவிலும் அவர்கள் ஒன்றும் பெரிதாக அரசு பணிகளில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இன்று அவர்களுக்கு 9 சதவிகிதம் அரசு பணிகளே தரப்பட்டுள்ளன.

இதில் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருப்பது அரசு பணிகளில் பிராமணர்களின் பங்கு தான்.

ஆங்கிலேயர்களின் ஆட்சியில் அவர்கள் 3 சதவிகிதத்திற்கும் குறைவாகவே அரசு பணிகளில் அமர்த்தப்பட்டிருந்தார்கள்.

இன்று, சுதந்திர இந்தியாவில் அவர்கள் - பிராமணர்கள் 70 சதவிகிதத்திற்கும அதிகமான அரசு பணிகளைப் பிடித்து வைத்திருக்கின்றார்கள்.

இதுவும் 'கெசடட்" என்றே மேனிலை அதிகாரிகள் சம்பந்தப்பட்டது என்றே எண்ணுகிறேன்.

அதற்கு மேலுள்ள அதிகாரமும் செல்வாக்கும் நிறைந்த பதவிகளில், 500 பேரில் 310 பேர் பிராமணர்களே! அதாவது 63 சதவிகிதத்தினர் பிராமணர்களே!

கவர்னர்கள், மற்றும் டெப+ட்டி கவர்னர்கள் போன்ற பதவிகளில் 27 பேர் இருக்கின்றார்கள். இவர்களில் 13 பேர் பிராமணர்கள். உச்சநீதி மன்றத்தில் இருக்கின்ற 16 நீதிபதிகளில் 9 பேர் பிராமணர்கள்.

உயர்நீதிமன்றங்களில் இருக்கும் 330 நீதிபதிகளில் 166 பேர் பிராமணர்கள்.

140 வெளிநாட்டுத் தூதுவர்களில் 58 பேர் பிராமணர்கள். பல்கலைக்கழகங்களில், துணைவேந்தர்களாக இருக்கும் 98 பேர்களில் 50 பேர் பிராமணர்கள்!

438 மாவட்ட நீதிபதிகளில் 250 பேர் பிராமணர்கள். ஐ ஏ எஸ் அதிகாரிகள் என்ற மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அளவிலுள்ள 3300 அதிகாரிகளில் 2376 பேர் பிராமணர்கள்.

மக்களால் தேர்தெடுத்து அனுப்பப்டும் பதவிகளிலும் பிராமணர்களே அதிகமான இடத்தைப் பிடித்துக் கொள்கின்றார்கள்.

நாடாளுமன்றத்தின் மக்களையில் 530 உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுத்து அனுப்பப்படுகின்றார்கள். இதில் 190 பேர் பிராமணர்கள்.

நாடாளுமன்றத்தில் மேல் சபையில் 244 உறுப்பினர்கள. இதில் 89 பேர் பிராமணர்கள்.

இந்தப் புள்ளி விபரம் ஓர் உண்மையை உலகுக்கு உணர்த்துகின்றது.

அதாவது இந்த நாட்டில் 3.5 சதவிகிதத்தினரான பிராமணர்கள் 36 முதல் 63 சதவிகிதம் அரசு பணிகளைப் பிடித்துக் கொண்டுள்ளார்கள். எப்படி முடிந்தது என்பது எனக்குத் தெரியாது.

ஆனால் இது முழுக்க, முழுக்க பிராமணர்களின் அறிவுக் கூர்மையால் கிடைத்தது என்பதை மட்டும் என்னால், எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ள இயலாது.

சண்டே, ஆங்கில வார இதழ் 236-29 டிசம்பர் 1990 இதழில் பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் அவர்கள் எழுதிய 'வுhந டீசயாஅin Pழறநச" என்ற கட்டுரையின் தமிழாக்கம்.


--------------------------------------------------------------------------------

இந்த புத்தகம் கிடைக்குமிடம்:
அறிவுலகம், 32, 3வது அவின்ய+, அசோக் நகர், சென்னை - 600 083
அச்சிட்டோர்: கலைவாணி அச்சகம், மதுரை 625 020

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP