சமீபத்திய பதிவுகள்

134 தமிழர்கள் படுகொலை; 208 பேர் காயம், படுபாதக செயல்

>> Sunday, February 15, 2009

 

மரண வலயமான புதிய "பாதுகாப்பு வலயம்": வன்னியில் நேற்றும் இன்றும் 134 தமிழர்கள் படுகொலை; 208 பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, புதுக்குடியிருப்பு , புதுமாத்தளன், ஆகிய பகுதிகளிலும் மற்றும் கோம்பாவில் பகுதியிலும் சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் 134 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 208 பேர் காயமடைந்துள்ளனர்.
கோம்பாவில்

கோம்பாவில் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு 10:15 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் கொத்துக் குண்டுத் தாக்குதலை நடத்தியதில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் மகேந்திரன் மற்றும் பத்மநாதன் ஆகியோரின் குடும்பங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

மகேந்திரன் சுபாஜினி (வயது 14)

மகேந்திரன் சஞ்சீவன் (வயது 20)

செல்லையா மகேந்திரன் (வயது 80)

மகேந்திரன் சுலோசனாதேவி (வயது 51)

மகேந்திரன் சோபிதா (வயது 26)

மகேந்திரன் தயாளினி (வயது 25)

செல்லையா இராசம்மா (வயது 69)

வி.பத்மநாதன் (வயது 38)

பத்மநாதன் தமிழனி (வயது 01

பத்மநாதன் ரேணுசா (வயது 03)

பத்மநாதன் கோகிலராணி (வயது 06)

பத்மநாதன் சோதிஜா (வயது 09)

பத்மநாதன் கேதீஸ்வரி (வயது 31)

ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 4 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் உடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
புதுமாத்தளன் - சனிக்கிழமை இரவு

சிறிலங்கா படையினரின் "பாதுகாப்பு வலயம்" என்ற அறிவிப்பை அடுத்து புதுமாத்தளன் பகுதியில் மக்கள் மிகச் செறிவாக அடைக்கலம் புகுந்துள்ள நிலையில் அவர்களை கொன்றொழிக்கும் நோக்குடன் தாக்குதகள் சிறிலங்கா படையினரால் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

புதுமாத்தளன் நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்தும் அப்பகுதி மக்கள் வாழ்விடங்களை இலக்கும் வைத்தும் சிறிலங்கா படையினர் செறிவான ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 12 சிறுவர்கள் உட்பட 78 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 132 பேர் காயமடைந்துள்ளனர்.
புதுமாத்தளன் - ஞாயிற்றுக்கிழமை காலை

புதுமாத்தளன் "மக்கள் பாதுகாப்பு வலயம்" மீது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதில் 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

புதுமாத்தளன் - ஞாயிற்றுக்கிழமை மாலை

இதே பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழைமை பிற்பகல் 3:00 மணியளவில் பொதுமக்களை நோக்கி சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 38 பேர் காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் -

யோ.ஜெகதீபன் (வயது 16)

செல்வராசா செல்வகுமார் (வயது 32)

சி.திருச்செல்வம் (வயது 33)

சு.குகாஜினி (வயது 35)

பு.இராசம்மா (வயது 55)

சோ.யோகானந்தராசா (வயது 47)

வ.நிசாந்தன் (வயது 26)

சி.காமினிதேவி (வயது 63)

சி.நாகவதனி

ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் - இரண்டு ஆண்கள் மற்றும் பெண் ஒருவரின உடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் மக்கள் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதியில் உள்ள மக்கள் வாழ்விடம் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதலை நடத்தியதில் 2 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அம்பலவன்பொக்கணை

அம்பலவன்பொக்கணை "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதி மீது இன்று ஞாயிறு இரவு 7:35 நிமிடத்துக்கு சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியதில் ஒரு சிறுவன் உட்பட 5 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு

புதுக்குடியிருப்பு பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து நேற்று சனிக்கிழமை இரவு 10:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத்தாக்குதலில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 5 சிறுவர்களும் 4 பெண்களும் அடங்குவர்.

பூநகரியைச் சேர்ந்த இவர்களின் 3 குடும்பத்தினரும் ஒன்றாக இடம்பெயர்ந்து பல இடங்களில் தங்கியிருந்து, கடைசியாக புதுக்குடியிருப்புக்கு வந்து தற்காலிக கொட்டகை கட்டி தரித்திருந்த வேளையில் சிறிலங்கா படையினர் இவர்கள் மீது கொத்துக்குண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

உடலங்கள் அந்த இடத்திலேயே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் அவர்கள் தற்காப்புக்காக வெட்டியிருந்த திறந்த காப்பகழிகளில் அடக்கம் செய்யப்பட்டன.http://www.tamilwin.com/view.php?2a46QVb4b3bP9ES34d3IWnT2b02V7GGe4d24YpDce0ddZLuIce0dg2hr2cc0lj0W3e

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP