சமீபத்திய பதிவுகள்

இந்தோனேஷியாவில் பூகம்பம்

>> Sunday, November 30, 2008

lankasri.comஇந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவில் நேற்று காலை பூகம்பம் ஏற்பட்டது.இதன் வீரியம் ரிக்டார் அளவில் 6-ஆக இருந்தது.இது பெங்களுக்கு நகருக்கு தெற்கே 140-கி.மீ.தொலைவில் 35-கி.மீ.ஆழத்தில் இதன் மையம் இருந்தது.

பெங்களு,லம்பங் மாநிலங்களில் பூகம்பம் தாக்கியதும் வீடுகள் குலுங்கின.மக்கள் பீதியில் உறைந்தனர்.ஆனால் உயிர்சேதமோ,பொருட்சேதமோ எதுவும் இல்லை.சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.


http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1227950719&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

தீவிரவாதிகளுடன் ஐஎஸ்ஐக்கு தொடர்பு:"உலக நாடுகளின் எச்சரிக்கையை உதாசீனப்படுத்தும் பாகிஸ்தான்"

 

lankasri.comபாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே வலுவான உறவு உள்ளது என்ற உலக நாடுகளின் எச்சரிக்கையை பாகிஸ்தான் தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் நடத்தப்பட்ட பல்வேறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ்ஐ இருப்பதாக இந்தியா பலமுறை பாகிஸ்தானிடம் சுட்டிக்காட்டியுள்ளது. தனது குற்றச்சாட்டு குறித்த வலுவான ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் அளித்துள்ளது.

எனினும், இந்தியாவின் குற்றச்சாட்டையும்,எச்சரிக்கையையும் பாகிஸ்தான் கண்டுகொள்வதாய்த் தெரியவில்லை.

தற்போது மும்பை நட்சத்திர ஹோட்டல்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கும் ஐஎஸ்ஐக்கும் தொடர்பிருக்கலாம் என இந்தியா சந்தேகிக்கிறது.இதனை கருத்தில் கொண்டே அந்நாட்டு உளவு அமைப்பினரை இந்தியாவுக்கு வந்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டது.

முதலில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஐஎஸ்ஐ தலைவரை அனுப்பிவைப்பதாகத் தெரிவித்த பாகிஸ்தான்,பின்னர் பின்வாங்கிவிட்டது.ஐஎஸ்ஐ சார்பாக பிரநிதிநிதி ஒருவரை அனுப்பி வைப்பதாகத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையால் அந்நாட்டின் மீதான சந்தேகம் மேலும் வலுத்துள்ளதாகவும் அரசியல் நோக்கர் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.இந்தியாவைப்போலவே அமெரிக்காவும் ஐஎஸ்ஐ-க்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே இணக்கமான உறவு இருப்பதாகக் குற்றம்சாட்டி வருகிறது.

கடந்த ஜூலை மாதம் பாகிஸ்தான் வந்த அமெரிக்க புலனாய்வு அமைப்பின் துணை இயக்குநர் இதற்கான ஆதாரங்களையும் பாகிஸ்தான் உயர் அதிகாரிகளிடம் அளித்தார்.ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீதான தாக்குதல் சம்பவத்திலும் ஐஎஸ்ஐ அமைப்பினரின் தொடர்பு குறித்த ஆதாரங்களையும் அவர் பாகிஸ்தான் உயர் அதிகாரிகளிடம் அளித்தார்.

எனினும்,பாகிஸ்தான் அரசு அமெரிக்காவின் தொடர் குற்றச்சாட்டுக்கும் எச்சரிக்கைக்கும் செவி சாய்க்கவில்லை.பாகிஸ்தானின் இந்தப் போக்கை கவனிக்கும் உலக நாடுகள் ஐஎஸ்ஐ மீது துணிச்சலான நடவடிக்கை எடுக்கும் திறமை அந்நாட்டு அரசுக்கு இல்லை என்றே கருதுவதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1228035398&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானில் நிலநடுக்கம்
lankasri.comஜப்பான் நாட்டின் முக்கியத் தீவான ஹான்ஷுவில் சனிக்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவானது. இதனால் உயிரிழப்பு,பொருள்சேதம் ஏற்பட்டது குறித்த தகவல்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.

சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு எதுவும் விடுக்கப்படவில்லை. தலைநகர் டோக்கியோவிலிருந்து தென்கிழக்கில் 375 கி.மீ. தொலைவில் கடலுக்கு அடியில் 35 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டோங்கா,ஃபிஜி: பஸிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா,ஃபிஜி ஆகிய நாடுகளிலும் சனிக்கிழமை நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால்,ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.


http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1228036399&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

மும்பை மோதலின் போது இன்னுயிர் நீத்த தேசிய பாதுகாப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி (பட இணைப்பு)


 
 
lankasri.comமும்பை நாரிமன் ஹவுசில் தீவிரவாதிகளு‌டன் ஏற்பட்ட மோதலின் போது இன்னுயிர் நீத்த தேசிய பாதுகாப்பு படை வீரர் கஜேந்திரசிங்கின் உடல் டில்லிக்கு கொண்டு வரப்பட்டது.அங்கு அவரது உடலுக்கு ராணுவ அதிகாரிகள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.கஜேந்திர சிங்கின் உடல் அங்கிருந்து அவரது சொந்த ஊரான டேராடூனுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

மும்பையில் நடந்த தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த தாக்குதலில்,வீர மரணமடைந்த தேசிய பாதுகாப்பு படை வீரர் உன்னிகிருஷ்ணனுக்கு பெங்களூருவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.அவரது உடலுக்கு ராணுவ அதிகாரிகள்,போலீஸ் உயர் அதிகாரிகள்,பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஹேமந்த் கர்கரேவின் இறுதி சடங்கு முடிந்தது: மும்பை தீவிரவாத தடுப்பு பிரிவு தலைவர் ‌ஹேமந்த் கர்கரேவின் இறுதி சடங்கு மும்பையில் நடந்தது.போலீஸ் உயர் அதிகாரிகள் ஹசன் கபூர்,முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்,துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மும்பை தாதர் பகுதியில் உள்ள அவரது வீட்டிலிருந்து சிவாஜி பார்க்கில் உள்ள மையானத்துக்கு அவரது உடல் எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

lankasri.comlankasri.comlankasri.com


http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1227973030&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

இயேசு நேசன் கட்டுரை

இயேசு நேசன் அவர்களின் கட்டுரை இங்கு பதிவு செய்கிறேன்இஸ்லாமிய இயேசு
 

இஸ்லாமிய மதம் இயேசுவை மதிக்கிறதாகக் கூறுகிறது. இஸ்லாமியர் இயேசு ஒரு தீர்க்கதரிசி என்றும் அவர் அல்லாவை வழிபட்ட மற்றொரு நல்ல இஸ்லாமியர் என்றும் கருதுகின்றனர். அவர்களுடைய வேதமான குரான் கிறிஸ்தவர்கள் கூறுவது போல இயேசு சிலுவையில் மரிக்கவில்லை, அல்லா அவரது முகச்சாயலை மற்றொருவர் மேல் விழச்செய்து, உண்மையான இயேசுவை மோட்சத்திற்கு எடுத்துக் கொண்டார் என்று அறிவிக்கிறது. ஆக, சிலுவையில் அறையப் பட்டது இயேசுவின் முகச்சாயல் வீழ்ந்த மற்ற நபர்தானாம்!

ஆகையால் இங்கே இயேசு நமது பாவங்களுக்குப் பரிகாரமாகப் பலியானார், நித்திய ஜீவனை மீட்டுத்தந்தார் என்ற பேச்சுக்கெல்லாம் இடமே இல்லை! இருப்பினும், இயேசு மீண்டும் திரும்ப வந்து அந்திக்கிறிஸ்துவை (டஜ்ஜல்) முறியடிப்பார் என்றும், பின்னர் அவர் மணமுடித்து, குழந்தைகள் பெற்று தனது முதிர் வயதில் மரணமாவார் என்றும் குரான் அறிவிக்கிறது. பைபிள் கூறுவது போல இயேசு மகிமையோடே திரும்ப வந்து இவ்வுலகைச் சீர் செய்து, ஆயிரம் வருடம் அரசாளுவதும், பின்னர் அதைத் தொடரும் இறைவனின் வெண் சிங்காசன நியாயத்தீர்ப்பும் அங்கே இல்லை. இருப்பினும் அவர்கள், நியாயத்தீர்ப்பு நாளில் அல்லா இம்முழு உலகத்தாரையும் நியாயம் தீர்ப்பார் என நம்புகின்றனர்.


ஆதாமின் மூல பாவத்தினால் மனித இனமே பாவப்பட்டுவிட்டது என அறிவிக்கிறது சத்திய வேதம்.  "ஒரே மனுஷனாலே (ஆதாம்) பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது"  என்று ரோமர் 5:19 ஆம் வசனம் அறிவிக்கிறது. மேலும் எகோவா தெய்வம் மோசேயிடம் தன்னைக்குறித்து, "பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார்." (யாத்திராகமம் 34:7)  அதாவது ஒருவரின் பாவம் பல பரம்பரைகளைப் பாதிக்கிறது.

இதன் விளைவாக மனித ஆத்துமாக்கள் சுயமாகப் பாவம் செய்தாலும், செய்யா விட்டாலும் பாதாளத்தில் மரணம் எனும் சக்தியின் பிடியில் அனந்த காலமும் அடைபட்டுக்கிடக்கும். இவ்வாறு பாவப்பட்ட ஆத்துமாக்களைத்தான் இயேசு மரித்து உயிர்த்தெழுந்த போது பாதாளத்தில் இறங்கி விடுவித்தார். இதைத்தான், "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்." (ரோமர் 6:23) என்று வேதம் அறிவிக்கிறது. இவையெல்லாம் ஆழமான உண்மைகள். இஸ்லாமியர் இதனை புனைந்து எழுதப்பட்ட கதை என்கின்றனர். பாவபரிகாரம், நித்திய ஜீவன் என்ற வாக்குறுதியெல்லாம் இஸ்லாமியத்தில் இல்லை.

இஸ்லாமைப் பொறுத்த வரையில் மனிதன் இயற்கையிலேயே நல்லவன். அவனிடம் காணப்படும் பாவங்கள் மேலெழுந்தவாரியானவை. அவற்றைத் தவிர்த்து, அல்லாவிற்கு கீழ்ப்படிந்து நல்ல வாழ்க்கை வாழ வேண்டும், அவ்வளவுதான். அல்லாவிற்குக் கீழ்ப்படியாத நபர்களின் ஆத்துமாக்கள் நியாயத்தீர்ப்பு நாளில் நரகத்தில் தள்ளப்படும். நல்ல ஆத்துமாக்களும் கூட தங்கள் பாவங்களுக்கேற்றாற்போல் கொஞ்சமேனும் நரகத்தை ருசி பார்த்தபின் தான் மோட்சம் சென்றடையும் என்று இஸ்லாம் அறிவிக்கிறது.

இயேசு மக்களின் பாவத்திற்காக பலியாகி மனுக்குலம் இழந்து போயிருந்த நித்திய ஜீவனை நமக்கு மீட்டுத் தந்தது யாரோ ஜோடித்த ஒரு கட்டுக்கதை அல்ல. ஏதேன் தோட்டத்திலிருந்து ஆதாமையும் ஏவாளையும் வெளியேற்றிய அதே தருணத்தில் சாத்தான் புகுந்திருந்த சர்ப்பத்திடம், "உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்." (ஆதியாகமம் 3:15) என்று இறைவன் தீர்க்க தரிசனம் உரைத்திருந்தார்.

மேலும், வரலாற்றின் பல கட்டங்களில், பல பல தீர்க்கதரிசிகள் மூலம் இயேசு எங்கே பிறப்பார், அவரை அடையாளம் கண்டு கொள்வது எப்படி, மனித வரலாற்றில் அவரது முக்கியத்துவம் என்ன, அவர் மனுக்குலத்தின் பாவத்திற்காக எப்படி மரிப்பார், நித்திய ஜீவனை நமக்கு மீட்டுத்தருவார் என்று இஸ்ரவேலருக்கு அறியத்தந்தார். இந்த தீர்க்க தரிசனங்கள் இயேசுவின் வாழ்வில் நிறைவேறினதை வேதம் தெள்ளத் தெளிவாக அறிவிக்கிறது.

உண்மை இப்படி இருக்க, அறுநூறு ஆண்டுகள் கழித்து வந்த இஸ்லாமிய மதம் அவருடைய சிலுவைத்தியாகத்தை மறுப்பானேன்? இதற்கு நாம் ஒரு விடை காணுமுன், உலக வரலாற்றின் தொடக்கம் முதல், தேவனாகிய கர்த்தராகிய எகோவா தெய்வத்திற்கும் சாத்தானுக்கும் இடையே ஏட்டிக்குப் போட்டியாக நிகழ்ந்த பல சம்பவங்களை கண்ணோக்க வேண்டும். முதலில் ஏதேன் தோட்டத்திற்குச் செல்லுவோம்....         (தொடரும்...)

இஸ்லாமிற்கு முன்...

எகோவா தேவன் இவ்வுலகைப் புனர் நிர்மாணம் செய்தபோது, முதல் மனிதன் ஆதாமிடமும் அவனது துணைவி ஏவாளிடமும், "நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின் மேல் நடமாடுகிற சகல ஜீவ ஜந்துக்களையும் ஆண்டு கொள்ளுங்கள்" (ஆதியாகமம் 1:28) என்று கூறி இவ்வுலகின் ஆளும் தன்மையை அவர்களுக்குக் கொடுத்திருந்தார்.

சாத்தான் புகுந்த சர்ப்பத்தின் சொல் கேட்டு, சாத்தானுக்குக் கீழ்ப்படிந்து, இறைவனுக்கு எதிரான காரியத்தைச் செய்த போது அவர்கள் இந்தத் தகுதியை சாத்தானிடம் விற்றுப் போட்டனர். இவ்வாறாக பாவம் செய்த ஆதாமையும், ஏவாளையும், சர்ப்பத்தையும் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றும் முன்னர் இறைவன் சர்ப்பத்திடம் தீர்க்கதரிசனமாக "உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் (இயேசு) உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்." (ஆதியாகமம் 3:15)


ஆக, என்றேனும் ஓர் நாளின் ஸ்திரியானவளின் வித்து தனது தலையை நசுக்கும் என்று அறிந்து கொண்ட சாத்தான் ஸ்திரியானவளின் வித்தையே இனக்கலப்பு முறையில் அழிக்க முற்பட்டான். இதன் முதல் கட்டமாகத்தான் வீழ்ந்து போன தேவதூதர்கள் மனித இனத்துடன் கலந்து ராட்சதர்களைப் பெற்றெடுத்தனர். "அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர் பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்" (ஆதியாகமம் 6:4).


பின்னர், அந்தப் பலவான்களான இராட்சதர்கள், மீந்துள்ள மக்களுடன் கலந்து ஸ்திரியின் வித்தைக் கலைத்துப் போட எத்தனித்தது அதன் அடுத்த கட்டம் ஆகும். இதனைத் தடுக்கத்தான் அவர்கள் யாவரையும் நோவாவின் காலத்தில் ஏற்பட்ட ஜலப்பிரளயத்தில் இறைவன் அழித்துப் போட்டார்.


ஜலப்பிரளயத்திற்குப் பின் இருநூறு ஆண்டுகளுக்குள் மற்றுமொரு சம்பவம். இறைவனுக்கு முன் பிரபல வேட்டைக்காரனாக இருந்த மாமன்னன் நிம்ராத் (ஆதியாகமம் 10:8,9) தனது தீய செயல்கள் நிமித்தம் கொலை செய்யப்பட்டு மரித்தான். அவனது மனைவியான ராணி செமிராமிஸ் அவனது மறைவிற்குப்பின் தகாத முறையிலே கற்பவதியானாள். அவள் மக்களிடம் கடவுளின் சாபத்தைச் சுட்டிக்காட்டி நிம்ராத் விண்ணேறி சூரியக்கடவுளாகிவிட்டான் என்றும் அவனுடைய ஒளிக்கதிர்களால் தான் அதிசயிக்கத்தக்க விதத்தில் கற்பவதியானாள் என்றும் அவளுடைய வயிற்றில் வளரும் அந்தக்குழந்தைதான் இறைவன் கூறிய "ஸ்திரியானவளின் வித்து" என்றும் கூறி அவள் மக்களை ஏமாற்றினாள்.


இறைவனுக்கு எதிரான நோக்கம் கொண்ட இவள் ஸ்தாபித்த இந்தப் போலி மதம் பல பல பெயர்களுடன் எகிப்திய, பாபிலோனிய, கிரேக்க மற்றும் ரோமச் சாம்ராச்சிய மக்களை உண்மை இறைவனிடம் இருந்து பிரித்துச் சென்றது. இறைவன் தனக்கெனத் தெரிந்தெடுத்துக் கொண்ட பன்னிரெண்டு கோத்திரங்கள் கொண்ட இஸ்ரவேலரிலும் கூட வடதேசத்தை ஸ்தாபித்த பத்து கோத்திரத்தார் இந்தப்போலி மதங்களால் மோசம் போயினர். பின்னர் அசிரியர்களால் கி.மு.722ல் சிறைப் படுத்தப்பட்ட இவர்கள், பிற இனங்களோடு கலந்து இன்றும் கூட தடயம் இல்லாமல் மறைந்து போய் விட்டனர். இதுவும் சாத்தானின் செயல்தான்.

தீய ஆவிகள் மனித இனத்துடன் கலப்பது நோவாவின் காலத்தில் மட்டுமன்றி ஜலப்பிரளயத்திற்குப் பின்னும் நடைபெற்றது. உதாரணமாக நோவாவின் பேரனான கேனான் பெருவெள்ளத்திற்கு முன் உருவாக்கப்பட்டிருந்த கல்வெட்டு ஒன்றைப் படித்து விட்டு இரகசியமாக மீண்டும் அசுத்த ஆவிகளுடன் தொடர்பு கொண்டான். அவனுடைய சந்ததியினரான கானான் தேசத்தாரிலும் ராட்சதர்கள் காணப்பட்டனர். கி.மு.பதினொன்றாம் நூற்றாண்டில் ஆடு மேய்க்கும் இளைஞனான தாவீது ஒரு கவணையும் கூழாங்கல்லையும் கொண்டு கொன்று போட்ட பெலிஸ்தியன் கோலியாத்தும் ஒரு ராட்சதன் என்பதை வேதம் அறிவிக்கிறது.

இத்தகைய கலப்பு இனங்கள் இன்றும் இவ்வுலகத்தில் உண்டு. இவற்றோடு கலந்து விடக்கூடாது என்பதனால்தான் இறைவன் தனக்கென்று ஒரு இனத்தைத் தனியே பிரித்தெடுத்து (ஆபிரகாமின் சந்ததியான இஸ்ரவேலர்), அவர்களைப் பாதுகாத்து அவர்கள் மூலம் தான் கூறிய ஸ்திரியின் வித்தின் தூய்மையைப் பாதுகாக்க நேரிட்டது. ஆபிரகாம் முதல் இயேசு வரையிலான இருபத்தெட்டு தலைமுறையினரின் பட்டியலை மத்தேயு முதலாம் அதிகாரத்தில் காணலாம்.

எகோவா தேவன் தான் தெரிந்தெடுக்கொண்ட இஸ்ரவேலரிடம் காலா காலமாக தனது தீர்க்க தரிசிகளின் மூலம் மனித இனத்தைப் பாவத்தின் பிடியிலிருந்து மீட்க வரும் மேசியா (இயேசு) எப்படிப்பட்டவர். அவர் வருகையின் அடையாளங்கள் என்ன, அவருக்கு நடக்கப் போவது என்ன என்று பல பல காரியங்களை வெளிப்படுத்தி அவர்களை வழி நடத்தினார்.

இருப்பினும் தங்கள் கீழ்ப்படியாமையின் விளைவாக கி.மு.587ஆம் ஆண்டில் பாபிலோனியரால் சிறைபிடிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட யூதர்கள் (மீந்திருந்த இரண்டு கோத்திரத்தார்) மீண்டும் தங்கள் சொந்த தேசம் திரும்பிய போது, அவர்களுடைய வேத அறிவும், விசுவாசமும் முன்னைப்போல் இல்லாமல், மனித சட்ட திட்டங்களுக்கும், பாபிலோனிய மதத்தைச் சார்ந்த பழக்க வழக்கங்களுக்கும் கட்டுப்பட்டிருந்தன. இயேசு இவற்றை வன்மையாகக் கண்டித்தார். "நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டு வருகிறவர்களாய்..... அநேக சடங்குகளையும் அனுசரித்து வருகிறீர்கள்" என்றார். (மாற்கு7:8)

இதனால்தான், தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலாக இயேசு இவ்வுலகில் மனிதனாகப் பிறந்த போதும் யூத மக்கள் அவரை இனம் கண்டு கொள்ளத்தவறி, சிலுவையில் அறைந்தனர். இறைவன் தெரிந்தெடுத்துக் கொண்ட இனமே இறைமகன் இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்றது!

இங்கே சாத்தான் வென்றது போல் தோன்றுகிறதல்லவா? அதுதான் இல்லை. இயேசு சிலுவையில் நம் அனைவரின் பாவங்களுக்காகவும் பலியாகாவிட்டால் மனித இனத்திற்கு பாவ விமோசனம்தான் ஏது? இயேசு மரித்தார், பாதாளத்தில் இறங்கி, அங்கே ஆதாமின் பாவத்தின் நிமித்தம் மரணத்தின் பிடியில் அடைபட்டுக்கிடந்த மனித ஆத்துமாக்களை விடுவித்தார்.

இயேசு, சிலுவை மரத்தில் மகா சப்தமிட்டு தனது ஆவியை விட்ட போது, "கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. அவர் உயிர்த்தெழுந்த பின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள்." (மத்தேயு 27:52,53). அதனால்தான், கி.பி. 90 ஆம் ஆண்டு வாக்கில் புனித யோவானுக்கு காட்சி தந்த இயேசு, "நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுடைய திறவு கோல்களை உடையவனாக இருக்கிறேன்" (வெளிப்படுத்தின விசேஷம் 1:18) என்கிறார். புனித பவுல் அடிகளாரும், "மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே?" (1 கொரிந்தியர் 15:55) என்று எக்காளமிடுகிறார்!


ஆக, மரித்த ஆத்துமாக்களைச் சிறைப்படுத்திய பாதாளமும், மரணமும் அவைகளின் பிடியை நிரந்தரமாக இழந்து விட்டன. இயேசுவை ஆத்தும இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் நித்திய ஜீவன் இலவசம்! சாத்தான் தோற்கடிக்கப்பட்டு விட்டான்... இருப்பினும் ரோமப்பேரரசின் மூலம் அவன் கிறிஸ்தவர்களை வேட்டையாடிக் கொன்று குவித்த வண்ணம் இருந்தான்.

நான்காம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ரோமச் சாம்ராச்சியத்தில் பிளவுகள், பதவிப் போட்டிகள். தான் அரசனாவதென்றால் தளபதி கான்ஸ்டன்டைன் தன்னைக்காட்டிலும் பெரும் படை கொண்ட மாக்ஸென்ஷியஸை வெல்ல வேண்டிய நிர்ப்பந்தம். கி.பி.312 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், இருபத்தெட்டாம் ஆம் நாளில் இயேசு அவரிடம் தரிசனத்தில் தோன்றி. "எனது நாமத்தில் நீ போருக்குச் செல். நான் உன்னை வெல்லச் செய்வேன்" என்றார். மறு நாள், அவர் கூறியது போலவே கான்ஸ்டன்டைன் மாக்ஸென்ஷியஸைத் தோற்கடித்தார். இந்தச் சம்பவத்தால் மனம் மாறிய அவர் கிறித்துவத்தை ரோம அரசின் அதிகார பூர்வமான மதமாகப் பிரகடனம் செய்தார்.

உப்ஸ்.... கிறிஸ்தவர்களைக் கொன்று குவித்த செய்த ரோம அரசும் கிறிஸ்தவ மயமாகி விட்டதே! இனி என்ன செய்வது? இந்த நிலையில் உருவாகிய புது மதம்தான் இஸ்லாம்.          (தொடரும்...)


இஸ்லாம் ஏன்?

ரோம அரசே கிறிஸ்தவ மயமான இந்தக்கட்டத்தில் இயேசு என்று ஒருவர் இருக்கவே இல்லை என்று சொல்லி இயேசுவை முற்றிலும் மறுப்பது என்பது இயலாத காரியம். அதனால் தான் வாழைப்பழத்தில் ஊசி இறக்கியது போல அவரை மதிப்பது போலவும் நடித்து, மறு புறத்தில் அவரது சிறகுகளையும் கொஞ்சம் கத்தரிப்பதிலும் ஈடு பட்டிருக்கிறது இந்த இஸ்லாம். இதனை இஸ்லாமியர் அறிவார்களா என்றால் அதுவும் இல்லை. காரணம் அவர்களுக்கு முழுச்சரித்திரமும் கொடுக்கப்படவில்லை. யாராவது அதைக்கொடுத்தாலும் அவர்களை நம்பக்கூடாது என கட்டளையிடுகிறது இஸ்லாம். அதாவது பைபிளில் உண்மைகள் சிதைத்து எழுதப்பட்டிருக்கிறது என்கிறது அவர்களுடைய வேதம்! மோசேயையும், தாவீதையும், இயேசுவையும் மதிப்பதாகச்சொல்லும் இஸ்லாமியர் இவர்கள் எழுதிய வேதப்பகுதிகளை ஒரு முறையேனும் படித்திருக்கிறார்களா என்று கேட்டால் பதில் இல்லை என்று தான் வரும். இதையெல்லாம் மீறி ஒரு இஸ்லாமியர் உண்மையை அறிந்து இயேசுவைப் பின்பற்ற ஆரம்பித்தால் என்ன செய்வது? அது சுலபம்.... அவரைக் கொன்று போட வேண்டும் என்கிறது இஸ்லாம்! மேலும் கிறிஸ்தவர்களிடம் நட்பு கொள்ளக்கூடாது என்றும் குரான் இஸ்லாமியருக்கு குறிப்பாக போதனை செய்கிறது. இது இஸ்லாமின் பிரித்து ஆளும் தன்மையாகும். இதன் மூலம் அது உண்மையையும் கட்டுப்படுத்தப்படுகிறது.

கிறித்துவத்தைக் கட்டுப்படுத்துவது மட்டும் இஸ்லாமின் திட்டமல்ல. முழு உலகையும் மதத்தின் வாயிலாகக் கைப்பற்றுவதுதான் அதன் திட்டம். வாள் முனையில் இஸ்லாம் பரப்பப்பட்ட நாட்களை உலகம் அறியும். அது மட்டுமல்ல, எல்லா மதங்களும் ஒருவனுக்கு ஒருத்தி என்று கூறும் போது இஸ்லாம் மட்டும் மூன்றல்லது, நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறதே அதுவும் ஜனத்தொகைப் பெருக்கத்தின் மூலம் உலகைக்கைப்பற்றும் ஒரு உத்திதான். இன்று யாரும் அப்படி மூன்று நான்கு மனைவிகள் வைத்துக்கொள்வதில்லை என்று ஒருவேளை நீங்கள் சொல்லலாம். அது சரி, சராசரியாக இஸ்லாமியர் அதிகம் குழந்தைகள் பெறுகிறார்கள் என்பதையாவது நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா?

ஒரு கணக்குக்காக இன்று ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள் என்றும் மற்றொரு இஸ்லாமிய குடும்பத்தில் மூன்று குழந்தைகள் என்றும் வைத்துக் கொள்ளுவோம். ஆக, இன்று இந்த கிறிஸ்தவக் குடும்பத்தின் மொத்த நபர்கள் நான்கு. இஸ்லாமியக் குடும்பத்தின் மொத்த நபர்கள் ஐந்து. சுமார் 25 வருடங்கள் கழித்து இந்தக் கிறிஸ்தவ வாரிசுகள் தலா இரண்டு குழந்தைகளும், இஸ்லாமிய வாரிசுகள் தலா மூன்று குழந்தைகளும் பெற்றுக்கொண்டால் இப்போது கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2+2+4=8 ஆகவும், இஸ்லாமியரின் எண்ணிக்கை 2+3+9=14 ஆகவும் மாறும். அதாவது, இருபத்தைந்து வருடத்திற்குள் இஸ்லாமிய ஜனத்தொகை ஏரத்தாள இரு மடங்காகிவிட்டது. இந்த எண்ணிக்கை நூறாண்டுகள் செல்லும் போது கணக்கில்லாத மடங்குகள் அதிகரிக்கும். இப்படித்தான் கடந்த பதினான்கு நூற்றாண்டுகளில் இஸ்லாம் பரவி வந்திருக்கிறது. அமைதியை நாடும் மதமான இஸ்லாமைப் பலரும் விரும்பி மதமாற்றம் செய்து இஸ்லாமியராகிறார்கள் என்று கூறுகிறார்களே அதில் அதிகம் உண்மை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. மாறாக, இஸ்லாமிய சட்டதிட்டங்கள் தளர்த்தப்பட்டால் மறைமுகமாக இயேசுவை வணங்கும் பல இஸ்லாமியர் வீசா விதிகள் தளர்த்தப்பட்ட கம்யூனிச நாடுகளிலிருந்து மக்கள் எப்படி வெளியேறுவார்களோ அதுபோல வெளியேறுவர் என்பதுதான் உண்மை!

இஸ்லாம் வெல்லுமா?
 

கணித ரீதியில் பார்க்கும் போது இஸ்லாம் தனது ஜனத்தொகைப் பெருக்கத்தினால் என்றேனும் ஓர் நாளில் உலகை வெல்லத்தான் வேண்டும். இருப்பினும், நாளைய செய்தித்தாளைவிட செய்திகளை தீர்க்க தரிசனங்கள் வாயிலாக இன்றே பறைசாற்றும் சத்திய வேதம் மற்றொரு ஓவியம் தீட்டுகிறது. தீர்க்கதரிசனங்களின் பிரகாரம் இனி நடக்க இருப்பதெல்லாம் இவைதான். முதலில் உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஒன்று ஏற்பட்டு, உலக நாணயங்கள் தரை மட்டமாகும். இதன் தொடக்கத்தைத் தான் நாம், "யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே" என்றாற் போல இன்று நாம் பார்க்கிறோம். நிலைமை மோசமாகையில் அதனைச் சரிக்கட்டும் பாவனையில் அரங்கேரும் முழு உலக அரசு (One world order), தனது பிரஜைகளின் வலது கையிலும், நெற்றியிலும் பதிக்கும் முத்திரைகள் (electronic chips) மூலம் கொடுக்கல் வாங்கல்களைக் கட்டுப்படுத்தும். ஆனால், இந்த முத்திரைகளை ஏற்றுக்கொள்பவருக்கு நரகம் நிச்சயம் என்று சத்திய வேதம் எச்சரிக்கை விடுக்கிறது. இந்த அரசிற்கு ஒரு தலைவன், அவனை கிறிஸ்தவர்கள் "அந்திக்கிறிஸ்து" எனவும் இஸ்லாமியர் "டஜ்ஜல்" எனவும் அழைக்கின்றனர். இவன் எல்லா மதங்களுடனும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு பதவிக்கு வருகிறான் என தீர்க்கதரிசனங்கள் பைபிளில் உண்டு. அதாவது இஸ்லாம் உலகை வெல்லும் முன் டஜ்ஜல் (அந்திக்கிறிஸ்து) உலகைக் கைப்பற்றி விடுகிறான்.

மக்களின் அபிமானத்துடன் பதவியேறும் இந்த உலகத்தலைவனின் ஆட்சிக்காலம் ஏழு ஆண்டுகள் மட்டுமே என்றும் பைபிள் அறிவிக்கிறது. மேலும், இவனது ஆட்சியின் நடுக்கட்டத்தில் இவனுக்கு எதிர்ப்புகள் பல உருவாகின்றன. அப்போது அவன் தனது ஒப்பந்தத்தை முறித்து விட்டு எல்லா மதங்களையும் தடை செய்வது மட்டுமல்லாமல் எல்லா மத பக்தர்களையும் மிகவும் கொடுமையாக நிந்திக்கிறான். இது ஒரு மூன்றரை ஆண்டுக்காலம் தொடர்கிறது. பக்தர்கள் பலியாகின்றனர். இதன் முடிவில்தான் இயேசு மகிமையோடே இவ்வுலகிற்குத் திரும்ப வந்து அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிக்கு ஒரு முடிவு கட்டுகிறார். இந்த ஒரு விஷயத்தில் இஸ்லாமும் கிறித்துவத்துடன் ஒத்துப்போகிறது.

அதன் பின்.... உண்மை இஸ்லாமியரான இயேசுவைக் கண்டு கொண்ட கிறிஸ்தவர்கள் எல்லோரும் அவரைக் குறித்த தங்கள் "அத்துமீறல்களை" உணர்ந்து இஸ்லாமிய மதத்தைத் தழுவிக்கொள்வார்கள் என்கிறார்கள் இஸ்லாமியர். ஆனால், இயேசுவின் நியாயமான ஆயிரம் கால அரசாட்சி இவ்வுலகில் அரங்கேறும் என்கிறது சத்திய வேதம். ஆனால், ஒன்று மட்டும் உறுதி... இயேசு திரும்பவரும் நாளில் உண்மை வெல்லத்தான் போகிறது!

இயேசு நேசன் இணைய பக்கங்கள் செல்ல

1
http://www.geocities.com/mistertoronto/islamic_jesus.htm


http://ca.geocities.com/mistertoronto

StumbleUpon.com Read more...

மும்பை தாஜ் ஹோட்டல் அட்டாக் - படங்கள்

>> Saturday, November 29, 2008

 

StumbleUpon.com Read more...

ஈராக்கில் மசூதியில் மனிதகுண்டு தாக்குதல் தொழுகைக்கு வந்த 12-பேர் பலி

 
lankasri.comஈராக்கில் ஷியா பிரிவினருக்கும் சன்னி பிரிவினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தலைநகர் பாக்தாத்தில் இருந்து மேற்கே 50-மைல் தொலைவில் உள்ள முசாயிப் நகரில் உள்ள ஒரு மசூதியில் நேற்று தொழுகை நடந்து கொண்டிருந்தது.

வெள்ளிக்கிழமை தொழுகை என்பதால் ஏராளமானவர்கள் அங்கு கூடி இருந்தனர்.

அப்போது உடலில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் மசூதிக்கு வந்தான்.மசூதி வாசலில் அவன் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய் தான்.

இதில் பயங்கரமாக குண்டு வெடித்தது.இதில் 12-பேர் உடல் சிதறி பலியானார்கள்.15-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1227950633&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

ஈசா குரானின் புதிய வடிவம்

 

StumbleUpon.com Read more...

தமிழீழ தலைவர் பிரபாகரன் உரை-வீடியோவில்

>> Friday, November 28, 2008
StumbleUpon.com Read more...

“ஒரு கோடியே 5லட்சம் சதுர மைல்” வான மண்டலத்தில் விழுந்த பெரிய “ஓட்டை”;பூமிக்கு ஆபத்தா?

 

 

lankasri.comஅமெரிக்காவில் உள்ள "நாசா" விண்வெளி ஆய்வு மையம் வான மண்டலத்தில் ஏற்பட்டுள்ள "ஓட்டை" குறித்து ஆய்வு செய்து வருகிறது."நாசா"வை சேர்ந்த விஞ்ஞானி பால் நியூமன் தலைமையிலான குழுவினரின் ஆராய்ச்சியில்,கடந்த ஆண்டு 97லட்சம் சதுர மைல் அளவுக்கு வானவெளியில் ஓட்டை ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது. இது பரப்பளவில் வடக்கு அமெரிக்காவுக்கு இணையானது ஆகும்.

இந்த வான மண்டல ஓட்டை மென் மேலும் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும் விஞ்ஞானிகளின் ஆய்வு கூறுகிறது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த ஓட்டை ஒரு கோடியே 5லட்சம் சதுர மைல் அளவுக்கு பெரிதாகி உள்ளதாக ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வான மண்டல ஓட்டையின் பரப்பளவு அதிகரித்துக்கொண்டே செல்வதால் "அல்ட்ரா" கதிர்கள் பூமியை தாக்கும் அபாயம் இருக்கிறதா? என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

http://www.tamilmann.com/2008/11/11/220

StumbleUpon.com Read more...

பிரான்ஸ் மீது தாக்குதல்: அல்-கய்டா எச்சரிக்கை!

 

 

ஆப்கானிஸ்தானில் உள்ள பிரான்ஸ் படைகளை உடனடியாக அந்நாடு திரும்பப் பெறாவிட்டால் பாரீஸ் நகரில் தாக்குதல் நடத்துவோம் என அல்-கய்டா எச்சரித்துள்ளது.

துபாயில் இயங்கி வரும் அல்-அரேபியா தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பான வீடியோவில், ஆப்கனில் உள்ள படைகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்காவிட்டால் அதற்கான பலனை பிரான்ஸ் அனுபவிக்க வேண்டியிருக்கும். அது தலைநகர் பாரீஸின் மீது நடத்தப்படும் தாக்குதலாகக் கூட இருக்கலாம் என அல்-கய்டா அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஃபரூக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி காபூலில் இருந்து தெற்கே 60 கி.மீ தொலைவில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 10 பிரான்ஸ் வீரர்கள் கொல்லப்பட்டதற்கும் அல்-கய்டா பொறுப்பேற்றுக் கொள்வதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப் படைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நேட்டோ தலைமையிலான சர்வதேச பாதுகாப்பு படையில் 2,600 பிரான்ஸ் வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmann.com/2008/11/19/286

StumbleUpon.com Read more...

குஞ்சுப்பரந்தன் பகுதி மோதல் காட்சி நிழற்படங்கள்: விடுதலைப் புலிகள்

 

 

உருத்திரபுரம் - குஞ்சுப்பரந்தன் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 43 படையினர் கொல்லப்பட்டும் 70 படையினர் காயமடைந்தும் உள்ளனர். அத்துடன் படையினரது 8 உடலங்களையும் மீட்டிருந்தனர்.

மீட்கப்பட்ட 8 படையினரின் உடலங்களில் ஒருவரின் உடலம் 20 வயதுடைய கமேவெல அங்கட பொல்ஹகமுல்ல என்னும் முகவரியை உடைய இந்திக ருவான்குமார என அடையாளப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட நிழற்படங்கள்:-

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.comhttp://www.tamilmann.com/2008/11/25/308#more-308

StumbleUpon.com Read more...

நாம் எந்த நாட்டிற்கும் எதிரானவர்கள் அல்ல; உலக நாடுகள் எம்மீதான தடையை நீக்க வேண்டும்; நாம் இந்தியாவின் நண்பர்கள்: தேசியத் தலைவர்

 

 

நாம் உலகின் எந்த நாட்டினதும் தேசிய நலன்களுக்கும் எதிரானவர்கள் அல்ல என்றும் எம்மை தடை செய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டும் என்றும் இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம் என்றும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இன்று வியாழக்கிழமை ஆற்றிய மாவீரர் நாள் உரை:

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2008.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று மாவீரர் நாள்.

தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து கௌரவிக்கும் புனித நாள்.

ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள்.

எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மான வீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள்.

எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.

எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.

இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது.

சிங்களத்தின் கனவுகள் நிச்சயம் கலையும்

எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாள சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது.

மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது.

மண் ஆசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.

எனது அன்பான மக்களே!

என்றுமில்லாதவாறு இன்று தமிழீழத் தேசம் ஒரு பெரும் போரை எதிர்கொண்டு நிற்கிறது. இப்போர் வன்னி மாநிலமெங்கும் முனைப்புப்பெற்று உக்கிரமடைந்து வருகிறது.

சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கைகொண்டு நிற்பதால், இங்கு இப்போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டு வருகிறது. தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்கம்.

தனித்து நின்று போராடுகிறோம்

இந்த நோக்கத்தைச் செயற்படுத்தி விடும் எண்ணத்தில், தனது போர்த்திட்டத்தை முழுமுனைப்போடு முன்னெடுத்து வருகிறது. தனது முழுப் படை பலத்தையும் ஆயுத பலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து, சிங்கள தேசம் எமது மண் மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்தி வருகிறது.

சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத்தோடு போராடி வருகின்றனர்.

உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.

நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணம்

இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம்.

எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.

பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.

இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.

இந்த மண் எங்களின் சொந்த மண்

சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமை கொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண்; பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண்; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண்.

இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம்.

ஆங்கிலேய காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடி வருகிறோம்.

சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கிறது.

ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், ஜனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்க முனைந்தது.

அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது.

சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது.

சமாதானத்துக்கு எப்போதும் நாம் தயார்

தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர்.

அதேநேரம், நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பேச்சுக்களில் பங்குபற்றி வந்திருக்கிறோம்.

எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்ட போதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவ வழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.

அனைத்துலகத்தை ஏமாற்றவே பேச்சுவார்த்தை நாடகம்

பிரமிப்பூட்டும் போரியற் சாதனைகளைப் படைத்து, சிங்கள ஆயுதப் படைகளின் முதுகெலும்பை முறித்து, படைவலுச் சமநிலையை எமக்குச் சாதகமாகத் திருப்பியபோதும், நாம் நோர்வேயின் அனுசரணையிலான அமைதிப் பேச்சுக்களிற் கலந்துகொண்டோம்.

போருக்கு முடிவுகட்டி, ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்த அமைதிப் பேச்சுக்களில் நேர்மையுடனும் பற்றுறுதியுடனும் பங்குகொண்டோம். ஆயுதப் படைகளின் அத்துமீறிய செயல்களையும் ஆத்திரமூட்டும் சம்பவங்களையும் பொறுத்துக்கொண்டு, அமைதி பேணினோம்.

இத்தனையையும் நாம் செய்தது, சிங்கள இனவாத அரசு எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று நீதி செய்யும் என்ற நம்பிக்கையினால் அன்று. சிங்கள அரசின் சமாதான முகமூடியைத் தோலுரித்துக்காட்டி, சமாதானத்தில் எமக்குள்ள பற்றுறுதியை உலகத்திற்கு வெளிப்படுத்தவே நாம் பேச்சுக்களில் கலந்துகொண்டோம்.

உலக அரங்கில் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் அரங்கேற்றப்பட்ட இந்த அமைதிப் பேச்சுக்கள், தமிழ் மக்களின் அன்றாட அவசர வாழ்க்கைப் பிரச்சினைகளையோ இனப்பிரச்சினையின் மூலாதாரப் பிரச்சினைகளையோ தீர்ப்பவையாக அமையவில்லை.

புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, தமிழர் தேசத்தையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிறிலங்கா அரசு இப்பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தியது.

பேச்சு என்ற போர்வையில், சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும் படையெடுப்பிற்கான ஆயத்தங்களைச் செய்தது. போர் ஓய்வையும் சமாதானச் சூழலையும் பயன்படுத்தி, தனது நலிந்து போன பொருளாதாரத்தை மீளக்கட்டி, தனது சிதைந்துபோன இராணுவப் பூதத்தை மீளவும் தட்டியெழுப்பியது.

பெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து, படையணிகளைப் பலப்படுத்தி, போர் ஒத்திகைகளைச் செய்தது. தமிழர் தேசம் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்க, சிங்கள தேசம் போர்த் தயாரிப்பு வேலைகளிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்தது.

சமாதான முயற்சிகளுக்கு ஊறுவிளைவித்த உலக நாடுகளின் தடை

இதேநேரம், சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியமை, சமாதான முயற்சிகளுக்கே ஊறுவிளைவிப்பதாக அமைந்தது.

எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டி, புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்பு மீறிய வரையறைகளை விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன.

தாம் வாழும் நாடுகளின் அரசியல் சட்டவிதிகளுக்கு அமைவாக, நீதிநெறி வழுவாது எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தி சிங்கள அரசின் இன அழிப்புக்கு ஆளாகி, மனிதப் பேரவலத்திற்கு முகம் கொடுத்து நின்ற தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப் பணிகளைப் பெரும் குற்றவியற் செயல்களாக அடையாளப்படுத்தி, தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைது செய்து, சிறைகளிலே அடைத்து, அவமதித்தன.

இந்நாடுகளின் ஒரு பக்கச்சார்பான இந்த நடவடிக்கைகள்; பேச்சுக்களில் நாம் வகித்த சமநிலை உறவையும் சமபங்காளி என்ற தகைமையையும் வெகுவாகப் பாதித்தன. இது சிங்கள தேசத்தின் இனவாதப்போக்கை மேலும் தூண்டிவிட்டது. சிங்கள இனவாத சக்திகள் உசாரடைந்து, எமக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தின. இது சிங்கள தேசத்தை மேலும் இராணுவப் பாதையிலே தள்ளிவிட்டது.

அனைத்துலக நாடுகளின் பாராமுகம்

சிங்கள தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டுத் தமிழர் தேசத்தின் மீது போர் தொடுத்தது. அனைத்துலகத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது சமாதானம் பேசிய உலக நாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லை; கவலை கூடத் தெரிவிக்கவில்லை.

மாறாக, சில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை அள்ளிக்கொடுத்து, இராணுவப் பயிற்சிகளையும் இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இன அழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்து வருகிறது.

இன்று சிங்கள தேசம் என்றுமில்லாதவாறு இராணுவ பலத்திலும் இராணுவ அணுகுமுறையிலும் இராணுவ வழித் தீர்விலும் நம்பிக்கைகொண்டு செயற்படுகிறது.

தமிழினத்துக்கு எதிரான போர்

தமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி, ஆயுத அடக்குமுறையின் கீழ் தமிழர்களை ஆட்சிபுரிய வேண்டும் என்ற அதன் ஆசை அதிகரித்திருக்கிறது. இதனால் போர் தீவிரம் பெற்று, விரிவுபெற்று நிற்கிறது.

இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல, புலிகளுக்கு எதிரான போர் அன்று. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழ் இனத்திற்கு எதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இன அழிப்புப் போர்.

இந்தப் போர் எமது மக்களைத்தான் பெரிதும் பாதித்திருக்கிறது. போரின் கொடூரத்தை மக்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்கள் மீது தாங்கொணாத் துன்பப்பளுவைச் சுமத்தி, மக்களைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகத் திருப்பிவிடலாம் என்ற நப்பாசையிற் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது.

பாதைகளை மூடி, உணவையும் மருந்தையும் தடுத்து, எமது மக்களை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு, கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களையும் எறிகணை வீச்சுக்களையும் நடாத்தி வருகிறது.

சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் அவலம் எம்மக்களுக்குச் சம்பவித்திருக்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை சதா துன்பச்சிலுவையைச் சுமக்கின்ற மக்களாக எம்மக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். நோயும் பிணியும் உடல்நலிந்த முதுமையும் சாவுமாக எம்மக்களது வாழ்வு சோகத்தில் தோய்ந்து கிடக்கிறது.

வரலாறு காணாத கொடூர அடக்குமுறை

எமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்து வருகிறது. பெரும் அநீதிகளை இழைத்து வருகிறது.

உலகில் எங்குமே நிகழாத கொடூரமான அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. எமது தேசத்தின் மீது ஒரு பெரும் பொருண்மியப்போரை தொடுத்து, எம்மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்து அவர்களது நாளாந்த சீவியத்தைச் சீர்குலைக்கின்ற செயலிலே இறங்கியிருக்கிறது.

சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழீழ நிலப்பரப்பில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகின்றனர்; கொல்லப்படுகின்றனர். சிங்களப் பகுதிகளில் தமிழர் காணாமல் போவதும் கொல்லப்படுவதும் வழமையான நிகழ்ச்சியாகி விட்டது.

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலே ஒரு மறைமுகமான இன அழிப்புக் கொள்கை இன்று வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. சாவும் அழிவும் இராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது.

கைதுகளும் சிறை வைப்புக்களும் சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவுகளும் கொலைகளும் காணாமல் போதல்களும் புதைகுழிகளுக்குள் புதைக்கப்படுவதுமாக ஒரு நச்சு வட்டத்திற்குள் எமது மக்களது வாழ்வு சுழல்கிறது.

எமது மக்களின் விடுதலை வேட்கையை அழிக்க முடியாது

இருந்தபோதும், எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சி கொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிடமுடியாது. ஆகாயத்திலிருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிட முடியாது.

எம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள். அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது.

பெரும் போருக்கு முகம் கொடுத்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான, கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கே அன்றி வேறெதற்காகவும் அன்று.

எமது விடுதலைப் போராட்டம் எந்தவொரு நாட்டுக்கும் எதிரானதல்ல

உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை நடாத்தி வருகிறோம். அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை.

எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்த மக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்துகொண்டதுமில்லை.

உலக நாடுகளுடனும் இந்தியாவுடனும் நட்புறவு கொள்ள விரும்புகிறோம்

எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம்.

இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மை தடைசெய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமென அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

இந்தியாவுடனான உறவுகளை புதுப்பிக்க விரும்புகிறோம்

இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கி ஒலிக்கின்றன.

எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து வருகின்ற இந்தக் கால மாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்.

அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன.

இனவாத சிங்கள அரசு தனது கபட நாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்து விட்டது.

இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.

நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது.

எனினும், இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழக உறவுகளுக்கு நன்றி

காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேநேரம், எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாகக் குரலெழுப்புவதோடு, இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான நல்லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

எனது அன்பான மக்களே!

சிங்கள அரசியல் உலகத்தில் பெரும் மாற்றங்களோ திருப்பங்களோ நிகழ்ந்து விடவில்லை. அங்கு அரசியல், போராகப் பேய் வடிவம் எடுத்து நிற்கிறது.

போருக்கு குரல் கொடுக்கும் சிங்கள தேசம்

அன்பையும் அறத்தையும் போதித்த புத்த பகவானைப் போற்றி வழிபடும் அந்தத் தேசத்திலே இனக்குரோதமும் போர் வெறியும் தலைவிரித்தாடுகின்றன. அங்கு போர்ப் பேரிகைகளைத்தான் எம்மால் கேட்க முடிகிறது.

போரை கைவிட்டு, அமைதி வழியில் பிரச்சினையைத் தீர்க்குமாறு அங்கு எவரும் குரல் கொடுக்கவில்லை. சிங்களத்தின் அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மீகவாதிகள் வரை, பத்திரிகையாளர்களிருந்து பாமர மக்கள் வரை போருக்கே குரல் கொடுக்கிறார்கள்.

தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில் அமைதி வழியில் நீதி வேண்டி நின்ற எம் மக்களிடம் சிங்கள தேசம்தான் போரைத் திணித்திருக்கிறது.

எமது பிராந்தியத்தைச் சேர்ந்த சார்க் நாட்டுத் தலைவர்கள் கொழும்பிலே கூடியபோது, எமது தேசத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி நாம் அறிவித்த பகைமைத் தவிர்ப்பையும் ஏற்க மறுத்து, அதனை ஏளனம் செய்து போரைத் தொடர்ந்து நிற்பதும் சிங்கள தேசம்தான். ஏற்றுக்கொள்ளவே முடியாத அவமதிப்பூட்டும் நிபந்தனைகளை விதித்துப் போரைத் தொடர்வதும் சிங்கள தேசம்தான்.

சிங்கள தேசம் ஒரு பெரும் இன அழிப்புப் போரை எமது மண்ணிலே நிகழ்த்தி வருகிறது. இந்த உண்மையை மூடிமறைத்து, உலகத்தைக் கண்கட்டி ஏமாற்ற சிங்கள அரசுகள் காலங்காலமாகப் பல்வேறு அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன.

வட்டமேசை மாநாட்டில் தொடங்கி, இன்று அனைத்து கட்சிக் கூட்டம் என இந்த ஏமாற்று நாடகத்தின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

கடந்து சென்ற இந்த நீண்ட கால ஓட்டத்தில், சிங்கள அரசுகள் உலகத்தை ஏமாற்றியதைத் தவிர, தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு உருப்படியான எந்தவொரு தீர்வினையும் முன்வைக்கவில்லை.

மாறாக, சிங்கள தேசம் தனது படைக்கல சக்தியால் தமிழர் நிலங்களைப் பற்றியெரிய வைத்திருக்கிறது. தமிழரது அமைதியைக் கெடுத்து, அவர்களது நிலத்தில் அமைந்த வாழ்வை அழித்து, அவர்களை அகதிகளாக அலைய வைத்திருக்கிறது.

சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப் போகிறது?

தமிழரின் மூலாதாரக் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, தமிழர் தேசத்தை இரண்டாகப் பிளந்து, அங்கு தமிழர் விரோத ஆயுதக்குழுக்களை ஆட்சியில் அமர்த்தி, இராணுவப் பேயாட்சி நடாத்துகிறது.

புலிகளைத் தோற்கடித்த பின்னர்தான் தமது தீர்வுத்திட்டத்தை அறிவிப்போம் எனக்கூறிக்கொண்டு, போரை நடாத்துகிறது. தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்த பின்னர், சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் உண்மையான பிரதிநிதிகளை, அவர்களது பேரம் பேசும் சக்தியை அழித்துவிட்டு, எப்படிச் சிங்களம் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்க மறுக்கும் சிங்களம், எப்படி எமது மக்களுக்கு ஒரு நீதியான தீர்வை முன்வைக்கப்போகிறது?

தமிழரின் தேசியப் பிரச்சினை விடயத்தில், சிங்களம் அடக்குமுறை என்ற ஒரே பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு, சிங்களம் நீதி வழங்கும் என எமது மக்கள் வைத்திருந்த சிறிய நம்பிக்கையும் இன்று அடியோடு அழிந்துவிட்டது.

சிங்கள தேசத்திலே கடந்த அறுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப் போவதுமில்லை, அப்படி நம்பி ஏமாறுவதற்கு எமது மக்களும் தயாராக இல்லை.

ஆக்கிரமிப்புக்கு என்றுமே இடமளிக்கப்போவதில்லை

பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம்.

இப்படியான எமது அருமை பெருமைகளையெல்லாம் அழித்து, தமிழீழ தேசத்திலே தமிழரின் இறையாண்மையைத் தகர்த்துவிட்டு, இராணுவப் பலத்தாற் சிங்களம் தனது இறையாண்மையை திணித்துவிடத் துடிக்கிறது. தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப்போவதில்லை.

தொடர்ந்து போராடுவோம்

எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

புலம்பெயர் இளைய சமுதாயத்துக்கு பாராட்டு

இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.

அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

(வே. பிரபாகரன்)
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.


http://www.tamilmann.com/2008/11/27/312#more-312

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP