சமீபத்திய பதிவுகள்

என் கற்பு விற்பனைக்கு:கல்லூரி மாணவி

>> Tuesday, March 24, 2009

ருமேனியா நாட்டை சேர்ந்த இளம்பெண் அலீனா பெர்சியா. 18 வயதான அவர் ஒரு மாணவி.


அவர் தன் பல்கலைக்கழக படிப்பை முடிப்பதற்கு போதுமான நிதி வசதி இல்லாமல் கஷ்டப்பட்டார். இதனால் அவர் படிப்புச் செலவுக்கான தொகையை சரிக்கட்டுவதற்காக அவர் தன் கற்பை ஏலம் விடுவது என்று முடிவு செய்தார். இதுதொடர்பாக அவர் ஒரு இணையதளத்தில் விளம்பரம் செய்து இருக்கிறார்.


"நான் 48 கிலோ எடை உள்ளவள். என் உயரம் 5 அடி 6 அங்குலம். ருமேனியாவை சேர்ந்தவள். நான் புகைபிடிக்க மாட்டேன்.


நான் கன்னிப்பெண் என்பதற்கான டாக்டர் `சர்டிபிகேட்' வைத்து இருக்கிறேன். நான் முதல் அனுபவத்தை மிக முக்கியமானதாகவும், சிறப்பானதாகவும் கருதுகிறேன்.


ஏலத்தில் வெற்றி பெறுபவர் வாரஇறுதி முழுவதையும் என்னுடன் செலவிடலாம். ஆனால் எல்லா செலவும் அவர் பொறுப்பு தான். என் பயணம், ஓட்டலில் தங்குவதற்கான கட்டணம் அனைத்தும் அவர் செலவு தான்.''


இவ்வாறு அவர் விளம்பரம் கொடுத்து இருக்கிறார்


மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...

இது... இது... எப்படிச் சாத்தியம்? லசந்தவா? லசந்த விக்ரமதுங்கவா? கொல்லப்பட்ட லசந்தவா?

இது... இது... எப்படிச் சாத்தியம்? லசந்தவா? லசந்த விக்ரமதுங்கவா? கொல்லப்பட்ட லசந்தவா?கொழும்பு நகரத்தில், மிகுந்த பாதுகாப்பு வளையங்களுக்கு இடையே அமைந்திருந்த அந்தப் பிரமாண்டமான மாளிகை அமைதியாகக் காணப்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால், ஒரு சில ஃபோகஸ் விளக்குகள் மட்டுமே எரிந்துகொண்டு இருந்தன.

அப்போது காற்றில் கலந்து ஒலித்த மெல்லிய ஓசை, சற்று தூரே இருந்த கடல் அலைகளின் ஓசையா அல்லது கோடை இரவின் தணியாத தணலின் ஓசையா என்பது தெரியவில்லை.

ஆனால், அந்தப் புதிரான சத்தம் மகிந்தாவை மிகவும் தொந்தரவுபடுத்தியது. அருகே, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தன் மனைவியைப் பார்த்தார். தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிற உணர்வு தோன்றியது.
படுக்கையிலிருந்து எழுந்து, கதவைத் திறந்து வெளியே வந்தார். வாசல் கதவுக்கு வெளியே ராணுவக் காவல்காரர்கள் தோளில் துப்பாக்கியுடன் பாரா நடந்த காட்சி 'சில்-அவுட்' ஆகத் தெரிந்தது. அந்த நள்ளிரவிலும் கொழும்பு நகர வீதிகளில் எங்கோ ஒரு வாகனம் சக்கரங்களைத் தரை யுடன் தேய்த்தபடி செல்லும் ஓசை. ராணுவ வண்டியாக இருக்கக்கூடும். மகிந்தா ஃபிரிஜ் ஜைத் திறந்தார். தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குளிர்ந்த நீரைக் கொஞ்சம் பருகினார்.

இப்போதெல்லாம் தூக்க தேவதை அவரிடம் கொஞ்சமும் கருணை காட்டுவதில்லை. அவர் நிம்மதியாகத் தூங்கிப் பல காலம் ஆகிவிட்டது. கண்ணை மூடினால், குண்டடி பட்டுக்கிடக்கும் பிணங்கள் முன்னே எழுந்து வந்து தொந்தரவுபடுத்தும். ராணுவ உடை அணிந்த, வரிசையான பிணங்களும் எழுந்து நின்று, 'நாங்கள் சாக வேண்டிய பருவமா இது?' என்று கேள்வி கேட்கும். அதற்காகவே, அவருடைய கண்கள் மூட மறுக்கும். விடியற்காலையில்தான் உடல் அசதியில் கண்கள் மெள்ளச் செருகும். இரவு சரியாகத் தூங்காததன் விளைவு, அடுத்த நாள் முழுக்க எதிரொலிக்கும். எரிச்சல் கலந்த கடுமையான சில முடிவுகளையும் எடுக்கவைக்கும்.

மகிந்தா மீண்டும் படுக்கையறையை நோக்கி நடந்தார். அப்போதுதான் அந்தக் குரல் கேட்டது. 'மகிந்தா, நாம் கொஞ்சம் கதைப்போமா?'

மகிந்தா திகைத்தார். உண்மையிலேயே அப்படி ஒரு குரல் கேட்டதா? அல்லது மனப்பிரமையா? பல பாதுகாப்பு வளையங்களையும் தாண்டி, அந்தக் குரல் எங்கிருந்து வந்திருக்கும் என்று யோசித்தபடி சுற்றிலும் பார்த்தார். எதுவும் விசேஷமாகத் தென்படவில்லை. அப்போது மீண்டும் அந்தக் குரல் ஒலித்தது.

'மகிந்தா, சோபாவில் பார், உனக்காக நான் அமர்ந்து காத்திருக்கிறேன்.'

மகிந்தா சோபாவைப் பார்த்தார். அவர் ரத்தம் உறைந்தது. வெள்ளி நிற மெல்லிய ஒளிப் பின்னணியில் தகதகக்கும் தோற்றத்தில் அந்த உருவம் அமர்ந்திருந்தது. அந்த உடல், முகம், தலைமுடி, எல்லாவற்றுக்கும் மேலாக, என்றுமே மறக்க முடியாத அந்தச் சிரிப்பு. இது... இது... எப்படிச் சாத்தியம்? லசந்தவா? லசந்த விக்ரமதுங்கவா? கொல்லப்பட்ட லசந்தவா?

மேலும் தொடர்ந்து வாசிக்க அழுத்தவும்.

StumbleUpon.com Read more...

ஈழம் எரிய வைக்கிறார்கள் அங்கே,வயிறு எரிய வைக்கிறார்கள் இங்கே

ஜெயலலிதாவை தலைவியாக கொண்டு இலங்கை மீது படையெடுங்கள்-ராஜபக்சேயை போரில் வெல்வார்:கலைஞர்


தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவ்வறிக்கையில்,


’’டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் இலங்கைப் பிரச்சினையிலே எங்களை விடத் தீவிரமானவர்கள் என்று காட்டிக்கொள்ள - காலையிலே ஒரு அறிக்கை, மாலையிலே ஒரு அறிக்கை என்று வெளியிட்டுக் கொண்டிருக் கிறார்கள்.


இலங்கைத் தமிழர் பிரச்சினையை கைகழுவி விட்டோம் என்று கதைக்கிறார்கள்.


அவர்கள் வாதப்படி நாம் கை கழுவி விட்டவர்கள் - அல்லது கையாலாகாதவர்கள் - இவர்கள்தான் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றும் அந்தக் கருமமே கண்ணாயினார் என்ற நிலையிலே உள்ளவர்கள் ஆயிற்றே; இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்புக் குழுவிலே இருக்கின்ற இந்த வீராதி வீரர்கள், சூராதி சூரர்கள், ரண ரங்க மார்த்தாண்டர்கள் - முழங்கட்டுமே முரசம் - கொட்டட்டுமே பேரிகை.

மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...

ஊடகவியாளர்களை இலங்கை ஒடுக்குகிறது-அமேரிக்க அமைப்பு கண்டணம்

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP