சமீபத்திய பதிவுகள்

உயிர் பிரியும் வேளையில் உரிமையுடன் சில வரிகள்!

>> Monday, February 2, 2009

 
இம்மடலினை சகல தமிழ் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். முக்கியமாக தமிழக மாணவ நண்பர்களிடம் சமர்பியுங்கள். செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் குண்டு சத்தங்களை காதில் வாங்கிக்கொண்டு பதுங்கு குழிக்குள் நுழையும் தமிழ் நண்பன்.

எமது அன்புக்கும் பெரு மதிப்புக்குமுரிய தமிழக மாணவர்களே

"தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்"

முத்துக்குமரனுக்கு முதல் வணக்கத்தினை கூறிக்கொண்டு,

உயிர் பிரியும் வேளையில் உரிமையுடன் சில வரிகள்!உங்கள் கரம் வந்து சேர்கையில் எம் உடல் சிதறி உயிர் விட்டு போய்விடலாம்!
மெல்லத் தமிழ் இனிச் சாகுமா இல்லை தமிழ் இனி வாழுமா எல்லாம் உங்கள் கைகளில்!

அடைக்கலம் தருவதாகக் கூறி அமைதி வலயம் வரச் சொல்லி ஆகாயத்தாலும் ஆட்லரியாலும் அடித்து நூற்ருயிர்கள் உடல் சிதறிப் போனதும் ஆயிரக்கணக்கில் குற்றுயிராய் கிடப்பதுவும் அறிந்திருப்பீர்கள். இன்னும் தொண்டு நிறுவனங்களுக்கு தடை, சுதந்திர ஊடகம் இல்லை, கொலைக்களத்தில் குரல் கொடுக்க யாருமற்ற ஏதிலிகளாய் நாம் உங்கள் முன்னே மண்டியிட்டு நிற்கிறோம்.

யார் வந்தார் எமை அணைக்க ?
யார் வந்தார் எமை பார்க்க?
யார் வந்தார் எமை தூக்க ?

நாம் சபிக்கப்பட்டவர்களா இல்லை சாவதற்கே பிறந்தவரா? நாமும் சக மனிதர்களாக தானே பூமியில் பிறந்தோம்?

சாவு மணி அடித்து அடித்து காதே செவிடாய் போய்விட்டது.
மரண படுக்கையில் என் இறுதி ஆசையை கேட்கிறேன் சகோதரா ! சாக முன் ஒரு முறை விடிவு மணியை கேட்க வேண்டும் நான்.

தொப்புள் கொடி உறவுகளே கூப்பிடு தூரத்தில் தானே உள்ளீர்கள். எங்கள் குரல் இன்னுமா கேட்கவில்லை.இல்லை இல்லை கேட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் முத்துகுமரன் ஒருவன் முளைவிட்டிருக்க மாட்டான்.

இந்திய படை வீரர்கள் முன்னணி களத்திலே ,
இந்திய போர் கப்பல் பருத்தித்துறைக் கடலிலே,
இந்திய உளவு விமானங்கள் முல்லைத்தீவு வான் பரப்பிலே.

சிறீலங்காவுடன் என்றால் விடுதலை புலிகள் என்றோ வெற்றி சூடி ஈழம் முடித்தே விடுவார்கள்.ஆனால் நாம் போராட வேண்டியதோ இந்திய வல்லரசின் துணையுடன் வரும் சிறீலங்கா இராணுவத்தோடல்லவா.

இது தாங்க முடியாத தம்பி தியாக சிகரம் முத்துக்குமரன் தன்மீது தீமூட்டி இதனை கொணர்ந்து இன்று இது காட்டுத்தீயாக பரவி தமிழகம் எங்கும் எழுச்சிக்கோலம் பூண வைத்துள்ளது.

மாணவ நண்பர்களே!

உங்கள் கைகள் தான் கறை படியாதவை
உங்கள் உணர்வுகள் தான் நேர்மையானவை
நீங்கள் தான் நாளைய தமிழகத்தின், தமிழீழத்தின் சிற்பிகள்.

உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
உங்கள் முடிவுகள் போரை நிறுத்தட்டும்
உங்கள் வியர்வைகள் ஈழத்தை நிறுவட்டும்

ஓயாது ஒலியுங்கள்
நீங்கள் ஓய்ந்தால்
நாங்கள் வீழ்வது மட்டுமல்ல
நாளை இருக்கவும் மாட்டோம்

இதனை எழுதும் போதும் குண்டுகள் கூவுகின்றன.

இப்போது உங்கள் கைகளில் மட்டும் தான் எங்கள் வாழ்வின் நொடித்துளிகள்.

கந்தக காற்றதனே சொந்தமென ஆகி
கண்ணீரில் எம் சொந்தம் கானகங்கள் ஏகி
வந்த பகை சாய்க்க வெஞ்சிரம் கொண்டுள்ளோம்
வாழ்வோ சாவோ இனிஎல்லாம் உம் கையில்.

உங்களை நம்பி இன்னும் வன்னியில் சாவுக்குள் வாழ்கின்றோம் எமக்கு ஓர் இனிய விடியல் பிறக்குமென்று.

ஒலிக்குமா உங்கள் குரல்
கிடைக்குமா உங்கள் கரம்

உங்களிடம் உரிமையுடன் உயிர் பிச்சை கேட்டு நிற்கும்,
சாவின் மடியில் உள்ள ஈழ தமிழர் சார்பில்
நான்

 

 

StumbleUpon.com Read more...

"உரிமைக்காக போராடும் போராளிகளை பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பது சிறுபிள்ளைத்தனமானது": விடுதலை இதழ் கண்

 
இரு தரப்பாரும் போரை நிறுத்தவேண்டும் என்று இதோபதேசம் செய்து வருகிறார்கள்.

போராளிகள் அங்கு போராடுவது அவர்களின் மக்களைக் காப்பாற்றுவதற்காக. அந்த மக்களும் தங்களின் வாழ்வுரிமைக்காக, மானவாழ்வுக்காக உயிரைத் துச்சமாகக் கருதி 24 மணிநேரமும் களத்தில் நிற்பவர்கள் போராளிகள்தான் என்ற உண்மையில் உண்மையாகவே இருக்கிறார்கள். உறுதியாகவும் உள்ளனர்.

ஈழத் தமிழர்கள் தங்களுக்காகப் போராடும் போராளிகளின் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாலும், நல்லெண்ணத்தாலும், உண்மையிலே போராளிகள் போராடி வருவதாலும், விடுதலைப்புலிகளையும், ஈழத்தமிழ் மக்களையும் பிரிக்கவே முடியாது என்ற உண்மையான கண்ணோட்டத்தைப் புரிந்து கொண்டால், விடுதலைப்புலிகள்மீது பழி சுமத்துவது அபாண்டமே என்பதைப் புரிந்துகொள்வர்.

(2) போரை நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தை என்றும், அரசியல் தீர்வு காணப்படும் என்றும் கதைக்கின்றனர்.

நோர்வேயின் முயற்சியால் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் நின்றிருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை முதலில் மீறியவர்கள் யார்? தன்னிச்சையாக இலங்கை அரசுதானே போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பின் வாங்கியது? இந்த நிலையில், விடுதலைப்புலிகளையும், சிங்கள அரசையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது குற்றமேயாகும்.



(3) விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தால்தான் பேச்சுவார்த்தை என்பதும் முன்வைக்கப்படுகிறது.

ஏதோ விடுதலைப்புலிகள் போர் வெறிகொண்டு சிங்கள இராணுவப் படையைத் தாக்குவதாக நினைத்துக்கொண்டு இதுபோன்ற நிபந்தனையை முன்வைக்கின்றன.
உண்மை என்னவென்றால்இ இலங்கையில் தமிழர்கள் எடுத்த எடுப்பிலேயே எந்த ஆயுதத்தையும் தூக்கிக்கொண்டு முன்வரவில்லை.

ஈழத் தந்தை என்று மதிக்கப்பட்ட செல்வநாயகம் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்ட அறவழிப் போராட்டத்தை அலட்சியப்படுத்தியோடு அல்லாமல், அந்த அகிம்சைவாதிகளை அரசின் அதிகாரபலம் கொண்டு அடித்துத் துவைத்தனர் என்ற அரிச்சுவடி தெரியாதவர்கள்தான் தன் மனம் போன போக்கில் விடுதலைப்புலிகளால் தான் பிரச்சினை என்று பொறுப்பற்ற முறையில் கருத்துகளைக் கூறிக்கொண்டு திரிகின்றனர்.

(4) தமிழுக்கு ஆட்சி மொழித் தகுதி பறிக்கப்பட்டதிலிருந்து தமிழ் மாணவ, மாணவிகளுக்குக் கல்வியில் பாரபட்சம் காட்டியதுவரை எடுத்துச் சொன்னால், அது ஒரு பெரிய தொகுதியாகவே நீட்சி அடையும்.

ஈழத் தமிழ்த் தலைவர்கள் சாத்வீகப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் உலகப் புகழ்பெற்ற தமிழ் நூலகம் சிங்கள வெறியர்களால் கொளுத்தப்பட்டு சாம்பலாக்கப்பட்டது என்கிற விபரம் எல்லாம் தெரியாமல், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற முறையில், வெறுப்பு நஞ்சைக் கக்கும் வகையில் வஞ்சகமாகப் பேசுகின்றனர். எழுதியும் வருகின்றனர்.


தமிழர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்ட நிலையிலும், சிறையில் இருக்கும் தமிழர்களுக்குக் கூடப் பாதுகாப்பு இல்லை என்ற கொடுமையான சந்தர்ப்பத்திலும், தமிழ்ப் பெண்கள்இ மானம்இ மரியாதையோடு வாழ முடியாது, சிங்கள வெறித்தனத்தின் உடல் பசிக்கு தமிழ்ப் பெண்களின் உடல் இரையாக்கப்படுகிறது என்ற கொடுமையான காலகட்டத்தில்தான் அங்கே போராளிகள் உருவாகவேண்டிய நிலையும், ஆயுதங்களைத் தூக்கவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது என்பதை மறந்துவிட்டுஇ நாட்டுரிமைக்காகப் போராடும் போராளிகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பது சிறுபிள்ளைத்தனமானதாகும்.

இந்தப் பிரச்சினையில் பார்ப்பனர்களும், ஜெயலலிதாக்களும்இ காங்கிரஸ்காரர்களும், குறிப்பிட்ட இடதுசாரிகளும் போராளிகள்மீது அபாண்டம் பேசுவது கண்டிக்கத் தக்கதாகும்.

 

http://www.swisstamilweb.com/cutenews/show_news.php?subaction=showfull&id=1233615659&archive=&start_from=&ucat=&

StumbleUpon.com Read more...

வெளிநாட்டு தூதுவர்களை அச்சுறுத்துவது அநாகரிக செயல்: ஜெர்மனி

 
 
தறவான புரிந்துணர்வுகள் ஏற்பட்டால் அது பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் அதனை விடுத்து அச்சுறுத்தல் விடுவது அநாகரிக செயல் என ஜேர்மன் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

 
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சண்டே ரைம்ஸ் பத்திரிகை ஒன்றின் மூலம் விடுத்துள்ள அச்சுறுத்தல் தமக்கு ஏதுவானதல்ல என ஜெர்மனி பெர்லின் நகரில் ஜெர்மனிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தவறான புரிதல் இருக்குமாயின் அதனை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர அச்சுறுத்தல்களினால் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஷ மேலதிக தகவல்கள் எதனையும் அறியாமலேயே கருத்து வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவிஸர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளின் தூதுவர்களையும் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களான அல்-அஜெசீரா, சீ .என்.என் மற்றும் பீ.பீ.சீ ஆகியவற்றையும் நாட்டில் இருந்து வெளியேற்ற போவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

அத்துடன் இந்த ஊடக நிறுவனங்கள் விடுதலைப்புலிகளின் வீடியோ படங்களை ஒளிபரப்புவதாகவும் ஜெர்மன் மற்றும் சுவிஸர்லாந்து தூதுவர்கள் புலிகளுக்கு உதவுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

 

http://www.tamilwin.com/view.php?2aaOE9PFb0bcDDpYY00eccC0jt20cc2ZZLuu24d226Wn544b33VVQ664d4eGUG7fdd0eeFh2ggde

StumbleUpon.com Read more...

வேகமெடுக்கும் தொடர் தாக்குதல்களால் பேரழிவுக்குள்ளாகும் மக்கள்

 

lorrymountedmbrl1வன்னி நிலைமை என்றுமில்லாதளவுக்கு மிக மோசமடைந்துள்ளது. யுத்தத்தில் சிக்குண்டு தினமும் நூற்றுக்கணக்கில் மக்கள் கொல்லப்படுகின்றனர். மிகப் பெருமளவானோர் படுகாயமடைந்து வரு கின்றனர்.

விடுதலைப் புலிகளை அழித்து அவர்கள் வசமிருக்கும் மிகுதிப் பகுதியையும் கைப்பற்றிவிட வேண்டுமென்பதற்காக இராணுவம் தனது நடவடிக்கைகளை மேலும் மேலும் தீவிரப்படுத்துகிறது. இதனால் பொதுமக்களுக்கான இழப்புக ளும் அதிகரித்து வருகிறது. புலிகளின் பகுதிக்குள்ளிருக்கும் மக்களை வெளியேற்று வதன் மூலம் புலிகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி அவர்களை முற்றாக அழித்துவிடலாமென அரசு கருதுகிறது. இந்தியாவின் பூரண ஆதரவு இலங்கை அரசுக்குக் கிடைத்திருப்பதால் இந்த யுத்தத்தை மிகவும் துணிவாக இலங்கை அரசு முன்னெடுத்துச் செல்கிறது.

 

முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு, விசுவமடு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலேயே யுத்தம் நடைபெறுகிறது. பரந்தன்முல்லைத்தீவு வீதியை (ஏ35) மையமாக வைத்து நடைபெறும் இந்த யுத்தம் முடிவுக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக படைத்தரப்பு கூறுகிறது. 15 கிலோ மீற்றர்து15 கிலோ மீற்றர் பரப்பளவினுள் நான்கு இலட்சத்து எழுபதாயிரம் மக்கள் சிக்குண்டுள்ளனர். இந்தப் பகுதிக்குள்தான் தற்போது புலிகளும் உள்ளனர். இந்தப் பகுதியை நோக்கிய பாரிய படைநகர்வு அப்பாவி மக்களுக்கு பேரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வன்னிக்குள் ஏவப்படும் ஒவ்வொரு ஷெல்களும் பலரைப் பலியெடுப்பதுடன் பலரையும் படுகாயப்படுத்துகிறது. தினமும் 24 மணிநேரமும் கண்மூடித்தனமாக ஷெல்களும் பல்குழல் ரொக்கட்டுகளும் மோட்டார் குண்டுகளும் ஏவப்படு கின்றன.

 

புலிகள் பதில் தாக்குதலை நடத்துகின்ற போதும் அது எதிர்பார்த்தளவுக்கு இல்லையெனப் படைத்தரப்பு கூறுகிறது. புலிகள் தற்போது மக்களை மனிதக் கேடயமாக்கி யுத்தம் புரிய முற்படுவதாகவும் அரசும் படைத்தரப்பும் கூறுகின்றன. இதனால் புலிகள் வசமுள்ள மிகுதிப் பகுதிக்குள் படையினர் நுழைவதில் தாமதமேற்படுவதாகவும் படைத்தரப்பு கூறுகிறது. ஆனால், அந்தப் பகுதியில் நடைபெறும் ஷெல் தாக்குதலும், பல்குழல் ரொக்கட் தாக்குதலும், மோட்டார் தாக்குதலும் படையினர் தங்கள் தாக்குதலின் வேகத்தைக் குறைத்திருப்பது போல் தெரியவில்லை.

 

மக்களுக்கு இழப்புகள் எதுவும் ஏற்படாதவாறே இந்த யுத்தத்தை தாங்கள் நடத்துவதாக அரசு வெளியுலகிற்கு கூறினாலும் அங்கு தினமும் கொல்லப்படுவோரின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. படுகாயமடைந்தோரால் அந்தப் பகுதியிலுள்ள ஒரேயொரு ஆஸ்பத்திரியும் (புதுக்குடியிருப்பு) நிரம்பிவழிகிறது. படுகாயமடைந்த பெருமளவானோர் பலத்த சிரமத்தின் மத்தியில் வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். மேலும் அவசர சிகிச்சைக்குட்படுத்தப்பட வேண்டிய நிலையில் 500இற்கும் மேற்பட்டோர் புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையிலிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறுகின்றது.

 

தற்போது புலிகள் வசம் எஞ்சியிருக்கும் முக்கிய நகரான புதுக்குடியிருப்பை பிடித்து விட படையினர் முயல்கின்றனர். இந்த நகரைக் கைப்பற்றிவிட்டால் ஏ35 வீதியையும் கைப்பற்றி புலிகளுக்கான கடைசி விநியோகப் பாதையையும் மூடிவிட முடியுமென படையினர் கருதுகின்றனர். அத்துடன் புலிகளின் பகுதியும் மிகவும் குறுகலாகி ஏ35 வீதிக்கு வடகிழக்கே செவ்வகம் போன்றதொரு பகுதிக்குள் முடங்கிவிடுமெனவும் கருதுவதால் எட்டு முனைகளிலிருந்தும் தங்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்துகின்றனர்.

 

அதேநேரம், விடுதலைப் புலிகள் கடல் மார்க்கமாகத் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காகவும் அவர்கள் முல்லைத்தீவு கடற்பரப்பில் தங்கள் நடவடிக்கையை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

அதிவேக டோரா பீரங்கிப் படகுகள், தாக்குதல் படகுகள், விரைந்து தாக்குதலை நடத்தும் படகு அணிகளென முல்லைத்தீவு முதல் வடமேற்கே சாலை வரையான கடற்பரப்பில் பலத்த பாதுகாப்பு வளையமொன்றை அமைத்துள்ளனர். தரையில் தற்போது படையினர் புலிகளின் பகுதியை "க்' வடிவில் சுற்றிவளைத்துள்ளனர்.

 

எஞ்சிய கடற்பகுதியில் கடற்படையினர் நிலைகொண்டுள்ளதால் மிகக் குறுகிய பகுதிக்குள் புலிகள் முடக்கப்பட்டுள்ளனர். சகல முனைகளிலிருந்தும் படையினர் தீவிர தாக்குதலை நடத்திவரும் அதேநேரம், புலிகளின் பகுதிக்குள் கடற்படையினர் தரையிறங்குவதையும் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதையும் தடுப்பதற்காக கடற்புலிகள் அடிக்கடி கடற்படையினர் மீது தாக்குதலை நடத்த முற்படுகின்றனர். கடற்புலிகளுக்கும் கடற்படையினருக்குமிடையே முல்லைத் தீவுக்கும் சாலைக் கடற்பரப்புக்குமிடையில் தற்போது அடிக்கடி மோதல்கள் நடைபெறுகிறது.

 

வெள்ளிக்கிழமை அதிகாலை கூட கடும் மோதல்கள் நடை பெற்றுள்ளன.

கடல் வழியால் தாக்குதல் நடை பெறுவதையும் கடல் வழித் தரையிறக்க முயற்சிகளைத் தடுப்பதற்காகவும் கடற்புலிகள் அடிக்கடி கடற்படையினருடன் மோதுவதால் கடற்படைப் படகுகள் எதுவும் கரையோரத்தை நெருங்குவதில்லை. கரையிலிருந்து மிக நீண்டதூரத்திலேயே அவை நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கடல்வழியால் வரும் ஆபத்தை புலிகள் தவிர்த்தவாறு சுண்டிக்குளம் முதல் விசுவமடு ஊடாக முல்லைத்தீவு வரையான பகுதிகளிலிருந்து எட்டு முனைகளூடாக, தேங்கா பாதியை கவிழ்த்தது போல் முன்நகர முயலும் படையினருடன் கடுமையாக மோதி வருகின்றனர்.

 

தற்போது நடைபெறும் மோதலில் ஏற்படும் இழப்புகள் குறித்து எந்தத் தரப்பும் எதுவும் கூறுவதில்லை. புலிகளின் பகுதிகளுக்குள் முன்நகர்ந்து செல்லும் போது தாங்கள் கைப்பற்றிய இடங்களை மட்டுமே படையினர் கூறுகின்றனர்.

 

அதேநேரம், இந்தச் சமர்களில் பொதுமக்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படுவதில்லையென்றே அரசும் படையினரும் கூறிவருகின்றனர். ஆனால், அங்கு தினமும் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வருகின்றனர். பொதுமக்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படுவதில்லையென்றால், வவுனியா ஆஸ்பத்திரிக்கு இதுவரை படுகாயமடைந்த நிலையில் கொண்டு வரப்பட்ட நானூறுக்கும் மேற்பட்ட மக்கள் எவ்வாறு காயமடைந்தனர் என்பதற்கு அரசு என்ன பதில் கூறப் போகிறது? இதனால் வன்னிக்குள் தினமும் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டு வருவது வெளியுலகிற்கு தெரியத்தொடங்கிவிட்டது. ஆனாலும் இலங்கை அரசுடன் சேர்ந்து இந்தியாவும் இதனை மூடி மறைத்து வருவதால் வன்னியில் அப்பாவி மக்களுக்கு ஏற்படும் இழப்புகள் குறித்த தகவல்கள் வெளி உலகை எட்ட தாமதமேற்படுகிறது.

 

இலங்கையைப் பொறுத்த வரை இந்த யுத்தத்தை முழுவீச்சில் முன்னெடுப்பதற்கு இந்தியா பூரண உதவிகளை வழங்கி வருகிறது. இலங்கையின் ஒவ்வொரு செயல்களையும் இந்தியா நியாயப்படுத்தி வருகிறது. இந்தியாவில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்கும்வரை ஈழத்தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வில்லையென்பதை இலங்கை அரசும் அறியும்.

 

அதேநேரம், ஈழ விடுதலைப் போரை நசுக்கி விடுதலைப் புலிகளை ஒழிக்க தற்போதைய மகிந்த ராஜபக்ஷ அரசைவிட்டால் இனியொரு போதும் வாப்புக் கிடைக்காதென்பதை இந்திய அரசும் நன்குண ரும். இதனால்தான் அடுத்த இரு மாதங்க ளுக்குள் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடப்பதற்கிடையில் முடிந்தவரை புலிகளை அழித்து அவர்கள் பிரதேசத்தை கைப்பற்றிவிட வேண்டுமென இலங்கை அரசு மிகத் தீவிரம் காட்டும் அதேநேரம், இலங்கை அரசுக்கு சகல வழிகளிலும் உதவி புலிகளை அழித்துவிட வேண்டுமென்பதில் இந்திய அரசு பெரும் முனைப்புக் காட்டுகிறது.

 

இதனாலேயே புலிகளது பதில் தாக்குதலும் தொடர்ந்தும் தாமதமடைந்து வருவதாகக் கருதப்படுகிறது. அமெரிக்கா வில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரெ னக் கூறி உலகம் முழுவதையும் தனது காலடியில் வீழ்த்த முனைந்த ஜோர்ஜ் டபிள்யு புஷ், உலகமெங்கும் பேரிழிவுகளை ஏற்படுத்திவிட்டு எதனையும் சாதிக்காமல் அவமானத்துடன் பதவி விலகியிருந்தார். அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுடன், பயங்கரவாதத்திற்கு எதிரான போரெனக் கூறி உலகெங்கும் பேரழிவுகளை ஏற்படுத்திய போர்களுக்கும் புதிய ஜனாதிபதி விடைகொடுக்க முனைந்துள்ளார்.

 

இந்தியாவிலும் ஏப்ரல் மாதத்தில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கும் ஆட்சி மாற்றம் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் தனது ஆட்சியின் கடைசிக் கட்டத்தில் காங்கிரஸ் உள்ள போதும் ஈழத்தமிழர் விடயத்தில் மிகக் கடுமையாக நடந்து கொள்கிறது. இலங்கைப் பிரச்சினைக்கு சமாதானத் தீர்வே , அவசிய மெனக் கூறிக் கொண்டு இங்கு இராணுவத் தீர்வுக்கு ஆதரவளிக்கிறது. ராஜீவ் காந்தி கைச்சாத்திட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் ஈழத்தமிழர்கள் மீது அரைகுறைத் தீர்வைத் திணிக்க காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி முற்படுகின்றார்.

 

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை இலங்கை அரசு எப்போதோ தூக்கிவீசிவிட்டது. ஆனால் காங்கிரஸ் அரசு, விடுதலைப் புலிகளை ஒடுக்கும் நிலைப்பாட்டுக்கு முழு அளவில் ஆரதவு வழங்குவதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் நன் குணர்ந்துள்ளார். இதனால் தான் எந்த இந்தியத் தலை வர்கள் இலங்கைக்கு வந்தாலும், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமெனக் கூறி அவர்களை வெற்றிகரமாகத் திருப்பி அனுப்பி விடுகிறார்கள். ஆனால் இனவாதிகள் மத்தியிலோ ஒற்றையாட்சி முறைக்குள் தான் எதுவுமென்கிறார்கள். சர்வதேச சமூகத்தின் முன்போ சர்வகட்சி பிரதிநிதிகள் குழு சமர்ப்பிக்கும் யோசனையே தீர்வென்கிறார்கள்.

 

விடுதலைப் புலிகளை அழிப்பதன் மூலமே இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்த முடியுமென இந்திய அரசு நம்புகிறது. புலிகளை அழித்து அவர்களது பகுதிகளைக் கைப்பற்றிவிட்டால், இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஈழத்தமிழர்கள் விரும்பும் தீர்வை அமுல்படுத்த முடியாதென்பது காங்கிரஸ் அரசுக்குத் தெரியும். அதனால்தான் அடுத்த இருமாதங்களுக்குள் தேர்தல் வருவதற்கிடையில் முடிந்த வரை இலங்கை அரசுக்கு உதவி விடுதலைப்புலிகளை அழிப்பதுடன், ராஜீவ் படுகொலை வழக்கிற்காக புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செவதற்காகவே இலங்கை அரசிற்கு இந்தியா உதவியது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தவும் காங்கிரஸ் அரசு முற்படுகிறது.

 

ஆனால், தமிழகத்தில் இன்று தோன்றியுள்ள நிலைமை எல்லை கடப்பதையே காட்டுகிறது. ஈழத்தமிழர் பிரச்சினைக்காக முத்துக்குமார் தனது உடலில் வைத்த தீ, முழுத் தமிழகத்திலும் பரவிவிட்டது. இதனை எவராலுமே அணைக்க முடியாதென்பது தெளிவாகியுள்ளது. இந்தத் தீக்குள் இம்முறை நடைபெறும் தேர்தல்களில் காங்கிரஸ் பொசுங்கப் போகிறது.

 

மதில்மேல் பூனை போலிருக்கும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி, காங்கிரஸுடன் தொடர்ந்தும் கூட்டு வைப்பாரானால், அது தனது ஆட்சிக்கு முற்றுப்புள்ளியை வைத்துவிடலாமென்றதொரு நிலையைத் தோற்றுவித்து விடுமென்ற அச்சமும் அவருக்கும் ஏற்பட்டுள்ளது.

 

இந்திய அரசியலில் ஏற்படும் மாற்றம் ஈழவிடுதலைப் போரிலும் மாற்றத்தை ஏற்படுத்துமெனக் கருதப்படுகிறது. தற்போதைய நிலையில் வன்னிப் போரில் திடீர் மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டால் அதற்கு இராணுவ ரீதியில் பூரண உதவிகளை வழங்க காங்கிரஸ் அரசு தயாராகவே உள்ளது.

 

 ராஜீவ் காந்தியை மையப்படுத்தியதாகவே சோனியா இந்த அரசை வழிநடத்தி வருவதால் புலிகளை அழிப்பதில் அவர் தீவிர அக்கறை காட்டுகின்றார். ஆனால் அங்கு ஆட்சிமாற்றம் ஏற்படும் போது அது இந்திய நலன் சார்ந்ததாகவே இருக்குமென்பதால், ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தற்போதைய காங்கிரஸ் அரசு இராணுவத் தீர்வுக்கு சாதகமாயிருப்பது போல் புதிய அரசு இராணுவத் தீர்வுக்கு ஆதரவு வழங்காது.

 

இதனால் இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வை காண முற்படும் இலங்கை அரசுக்கு அதன் ஆதரவு கிடைக்காது. இதனைப் புலிகளும் நன்குணர்ந்துள்ளதுடன் இலங்கை அரசுக்கும் இது நன்கு தெரியும். இதனால்தான் இந்திய ஆட்சியில் மாற்றமொன்றுக்காக விடுதலைப் புலிகள் காத்திருக்கையில் அந்த மாற்றத்திற்கு முன்னர் புலிகளை அழித்து அவர்கள் வசமிருக்கும் எஞ்சிய பகுதியையும் கைப்பற்றிவிட இலங்கை அரசு தீவிரம் காட்டுகிறது.

 

அதேநேரம், வன்னியிலிருக்கும் 4,70,000 மக்களையும் அங்கிருந்து வெளியேற்றுவதிலும் தீவிர அக்கறை காட்டுகிறது. கடும் ஷெல் தாக்குதல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களுக்கு பாரிய இழப்புகள் ஏற்படும் போது, புலிகள் அவர்களை வெளியேறிவிட்டால் இந்த இழப்புகள் ஏற்படாதெனக் கூறி உலகளாவிய ரீதியில் புலிகளுக்கு பெரும் அழுத்தத்தை கொடுக்கவும் அரசு முற்படுகிறது.

 

 இதனால் வன்னியிலுள்ள மக்களின் உயிர்களுடன் விளையாட அரசு தயாராகிவிட்டது. பின் விளைவுகள் குறித்து சிந்திக்காது புலிகளுக்கு அழுத்தங்களை ஏற்படுத்துவதற்காக மக்களை பணயம் வைக்க முடியுமென்ற தத்துவம் இலங்கை அரசை திருப்பித் தாக்கினால் எப்படியிருக்குமென்பதை எவரும் உணரத் தலைப்படவில்லை.

 

தற்போதைய நிலையில் வன்னியிலி ருந்து மக்கள் வெளியேறும் சாத்தியமில்லை யென்றே கருதப்படுகிறது. இதனால் அங்கு படைநடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் போது இழப்புகளும் பெரியளவில் ஏற்படலாம்.

 

இது விடுதலைப் புலிகளுக்கு கடும் அழுத்தங்களை ஏற்படுத்துவதுடன் மக்களை அவர்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்த முற்படுகிறார்களென்ற பிரசாரத்தை மேலும் வலுப்பெறச் செயலாம். இதுவரை காலமும் தற்காப்புச் சமரில் ஈடுபட்டு வந்த புலிகள் தொடர்ந்தும் அந்தச் சமரிலேயே ஈடுபடுவதால் தற்போது அவர்களது பகுதிகள் அனைத்திலும் ஷெல்கள் வீழ்கின்றன. மிகவும் குறுகிய பிரதேசத்திற்குள் நாலரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வதால் தினமும் அங்கு இழப்புகள் ஏற்படப் போகின்றன.விதுரன்

 

http://www.nerudal.com/nerudal.242.html

StumbleUpon.com Read more...

சர்வதேசமும் எங்களை கணக்கெடுக்கப்போவதில்லை… என்னதான் முடிவு

 

20080409130557breaking_news2031சுதந்திரபுரம் அகதி முகாம் மீது திங்கள் இரவு 10 மணியளவில் கோர தாக்குதல். பலர் பலி. தெருவெங்கும் கண்மூடித்தனமான ஷெல் தாக்குதல். இன்று மட்டும் ஆயிரகணக்கில் பாதுகாப்பு வலயம் மீது ஷெல் வீச்சு. அரக்கத்தனத்தின் உச்சக்கட்டம்…உயிரிழப்புகள் பற்றி கணக்கெடுக்க முடியவில்லையாம்..கொடும்பாவிகளின் கொலைவெறியாட்டம்… மருத்துவமனைகளும் தாக்குதலால் சேதம். இன்னமும் மக்கள் பங்கர்களை விட்டு வெளியே வராததால் சேத விபரம் தெரிய வில்லை. நூற்று கணக்கில் மக்கள் கொல்லபட்டிருக்கலம் என செய்தியாளர் தெரிவிக்கின்றார்,

 

http://www.nerudal.com/nerudal.223.html

StumbleUpon.com Read more...

இத்தாலிப் பெண்ணின் இன்னொரு முகம் ஈழத்தமிழனின் சோகத்துக்குக் காரணம் சோனியா

 

 soniya_20090201சொந்த நாட்டில் தமிழ் மக்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படும் அவலம் விஸ்வரூபம் எடுத்ததில், ஐந்து கண்டங்களில் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் தஞ்சம் புகுந்திருக்கும் சூழல். கால் நு}ற்றாண்டுகளுக்கு மேலாக ஆயுதமேந்திப் போராடி வரும் போராளிகள் ஒருபக்கம். சொந்த மக்கள் மீதே தரை, கப்பல் மற்றும் வான்வழி என சிங்களப் பேரினவாத இராணுவம் நடத்தும் தாக்குதலை உலக நாடுகள் வேடிக்கைப் பார்க்கும் அவலம் ஒரு பக்கம்.

1960 இல் சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தின் படி ஐந்து லட்சம் மலையகத் தமிழர்களை ஒட்டுமொத்தமாகத் தாயகத்துக்குத் திருப்பி அனுப்புவதில் இருந்து ஈழ அவலத்தில் இந்தியாவுக்கான பங்கு தொடங்குகிறது. உழைத்து, உழைத்து தேயிலைத் தோட்டங்களை உருவாக்கித் தந்த அந்த மலையகத் தமிழர்கள் வெறும் கையுடன் தமிழகம் வந்திறங்கி அவர்களில் பலர் அந்த வெறுங்கையை ஏந்தி, பிச்சையெடுக்கத் தள்ளப்பட்டனர் என்பதுதான் கொடுமையின் உச்சக் கட்டம்.

இலங்கையின் ஜனதா விமுக்தி பெரமுன என்கிற ஜே.வி.பி. கட்சியினர் ஆயுதமேந்தி கிளர்ச்சியில் ஈடுபட்டபோது அதை அடக்க இந்தியப் படையும், ஆயுதமும் அனுப்பப்பட்ட சரித்திரம் இலங்கைக்கு என்றைக்கும் இந்தியா பக்கபலமாக இருக்கும் என்பதை உலகிற்கும் ஈழத் தமிழனுக்கும் சொல்லாமல் சொல்லியது. பாகிஸ்தானை துண்டாடி வங்கதேசம் பிரிந்தபோது அதை வேடிக்கை பார்த்த இலங்கைக்கு, தமிழக மீனவர்களின் உரிமையான கச்சதீவை விட்டுக் கொடுத்தது இந்திரா காந்தியின் இந்திய அரசு. காஷ்மீரில் இருந்து ஒரு பிடி மண்ணைக்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என்கிற இந்தியக் குடியரசு தான் பாகிஸ்தானில் இருந்து வங்க தேசத்தைப் துண்டாடிவிட்டு, இந்தியாவின் கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தது.

ஈழத் தமிழனின் உரிமைகள் மறுக்கப்பட்டு, உயிர்கள் பறிக்கப்பட்ட அவலநிலையில் வேறு வழியில்லாமல் ஆயுதமேந்திய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்திரா காந்தி அரசு 1983 இல் அளித்த பயிற்சி அங்கு தமிழீழம் மலர வேண்டும் என்பதற்கல்ல. அது, இலங்கை அரசை அச்சுறுத்த போராளிகளைப் பயன்படுத்திக் கொண்ட இந்தி(ரா)ய அரசின் குள்ளநரித்தனம்.

இந்நிலையில் வந்த ராஜீவ் காந்தி தனது நீண்ட மூக்கை ஈழப் பிரச்னையில் நுழைத்தார். இதிலிருந்தே இலங்கை-இந்தியாவுக்கான கருப்புச் சரித்திரத்துக்குச் சிவப்புச் சாயம் பூசப்பட்டது.

ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தம் போடப்பட்டது. இந்திராவின் குள்ள நரித்தனத்தை மிஞ்சும் ஒரு காரியத்தை ஜெயவர்த்தன செய்து முடித்தார். அதாவது, ஒப்பந்தத்தை அமுலாக்கும் பொறுப்பு இந்திய அரசிடம், அதாவது ராஜீவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, தமிழ்ப் படையினரின் ஆயுதங்களைத் திரும்பப் பெற இந்தியப் படையினரின் உதவியை இலங்கை நாடியது. ஆக்கிரமிப்பு பேராசையில் இருந்த ராஜீவும் இதற்குப் பலிக்கடா ஆனார்.

'பிரபாகரனும் ஆயுதங்களை ஒப்படைத்து விடுவார். மூன்று நாட்களில் வேலை முடிந்து விடும்" என்றுகூறி யாழ்ப்பாணம் சென்ற இந்தியப் படை திரும்பி வர மூன்று ஆண்டுகள் ஆனது. பிரபாகரனும் ஆயுதத்தை ஒப்படைக்கவில்லை. சுதந்திர தமிழ் ஈழத்தை உருவாக்கும் முயற்சியையும் கைவிடவில்லை என்பதுதான் இந்திய-இலங்கை அரசுகளின் முகத்தில் அறைந்த உண்மை.

தமிழகத்தில் இருந்து ஒக்டோபர் 3, 1987 இல் திரும்பிக் கொண்டிருந்த புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 13 பேரை பருத்தித்துறை அருகே கடலில் கைது செய்தது, இலங்கை அரசு. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே அவர்களை உயிரோடு விடக்கூடாது என்று கங்கணம் கட்டியது இலங்கை அரசு. அந்தப் போராளிகள் சயனைட் குப்பிகளைக் கடித்து உயிரை விட்டனர். இந்தச் சம்பவத்துக்குப் பின் தான் 'எங்களுடைய இராணுவம் பெரியது எங்களால் இருபது ஆண்டுகள் போராட முடியும்" என்கிற திமிரோடு இலங்கையில் திரிந்த இந்தியப் படையினரின் 1,300 வீரர்களை கொன்று குவித்தனர், போராளிகள்.

ராஜீவின் நீண்ட மூக்குடைந்த அந்த ஆத்திரத்தில் ஈழப்பெண்களை சீரழித்தார்கள். அப்பாவித் தமிழர்களைப் பலி கொடுத்தார்கள். வி.பி.சிங் ஆட்சிக்கு வந்ததும் இலங்கையில் ஈழப் பெண்களை துகிலுரித்து பலாத்காரம் செய்த இந்திய அமைதிப் படையைத் (!) திரும்ப அழைத்துக் கொண்டார்.

தமிழர்களின் நலனைப் பாதுகாத்த ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தைப் போராளிகள் ஏற்க மறுத்து விட்டார்கள் என்று தமிழகக் காங்கிரஸார் இன்றும் வாய் கிழிகிறார்கள். ஆனால், அந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இலங்கையில் இந்திய ஓயில் கோரேஷனுக்குச் சொந்தமான நு}ற்றுக்கும் மேற்பட்ட கிளைகள் உருவானது. ஆக, இது யாருடைய நலனைக் கருத்தில் கொண்டு போடப்பட்ட ஒப்பந்தம்? அதில் எப்படி தமிழனுக்குத் தீர்வு கிடைக்கும்? ராஜீவ் து}க்கிப் பிடித்த இலங்கை ஒப்பந்தத்துக்கு நீண்டகால குறிக்கோள் எதுவும் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

ராஜீவ் கொலைக்குப் பின், இந்தியாவில் புலிகள் தடை செய்யப்பட்டனர். ஹிந்து ராம், சோ, சுப்பிரமணிய சுவாமி, ஜெயலலிதா, ஞானசேகரன், தங்கபாலு, இளங்கோவன் போன்றோர,; ராஜீவ் கொலையால் ஈழத் தமிழனின் பிரச்சினை திசைமாறிப் போனதாகப் பிரசாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

நாம் கேட்கிறோம். 60 இல் ஏற்பட்ட சாஸ்திரி-சிறிமாவோ ஒப்பந்தம் எந்தத் தமிழனின் நலனைக் காத்தது? இந்திரா கச்சதீவை தாரை வார்த்துக் கொடுத்தது ஈழத் தமிழனின் நலனுக்காகவா? ராஜீவ் காந்தி அமைதிப் படையை அனுப்பி, தமிழ்ப் பெண்களை சீரழித்து போராளிகளின் எண்ணிக்கையையும் ஆவேசத்தையும் அதிகரிக்கச் செய்தது தமிழ் மக்கள் மீதான அக்கறையிலா? ஏதோ ராஜீவ் காந்தி கொலையால் புலிகளை எதிர்ப்பது போல் காட்டிக் கொள்ளும் காங்கிரஸ் பண்ணையார்களுக்கு ராஜபக்சவுடன் அப்படியென்ன இணக்கம் வேண்டி கிடக்கிறது? காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் ஹசன் அலிக்கு ஒரு நாட்டின் அதிபரான ராஜபக்ச வாழ்த்துக் கடிதம் எழுத காரணம் என்ன? இதிலெல்லாம் தமிழனின் நலன் என்ன இருக்கிறது?

பாகிஸ்தானும், சீனாவும் இலங்கையோடு கொஞ்சிக் குலாவிடக் கூடாது என்கிற முன்னெச்சரிக்கை உணர்வுடன், ஓடோடிச் சென்று இலங்கைக்கு ஆயுத உதவியைச் செய்தது இந்திய அரசு.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினிக்குத் து}க்குத் தண்டனை இரத்துக்குப் பரிந்துரைத்த ராஜீவ் மனைவி சோனியாவை தியாகத்தின் மறு உருவம்! என்கிறார்கள் கதர் சட்டை கோடீஸ்வரர்கள். அதே நளினியை வேலு}ர் சிறையில் சந்தித்துச் சென்றார், ராஜீவ்-சோனியா தம்பதியின் மகள் பிரியங்கா. ராஜீவ் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பெங்களூரு ரங்கநாத்தை சந்தித்து சோனியா பேசிய விவகாரம் அண்மையில் தான் வெளியானது.

இதையெல்லாம் கவனித்த போது சாஸ்திரி, இந்திரா, ராஜீவ் காந்தி போன்றோர்கள் ஈழ மண்ணுக்குச் செய்த துரோகத்தை சோனியா தலைமையிலான காங்கிரஸ் மற்றும் இந்தியக் குடியரசு செய்யாது என்கிற ஒரு மாயை உருவானது என்னவோ உண்மைதான். 'சோனியா குடும்பத்தின் கருணையே கருணை என்று காங்கிரஸ் கi(ர)ற வேஷ்டிகள் ஃபிளக்ஸ் போர்டுகள் அச்சிட்டு மகிழ்ந்ததையும் மறக்க முடியாது. ஆனால், இந்த மாயை ஒரு ஏமாற்று வேலை. சோனியா தன்னிடம் என்ன பேசினார்? என்று பெங்களுர் ரங்கநாத், நளினி போன்றோரின் பத்திரிகை பேட்டிகளில் இருந்து நாம் அறிவது என்ன?

'ராஜீவ் காந்தியை ஏன் கொன்றீர்கள்?"

'ராஜீவ் காந்தியை கொல்ல வந்தவர்கள் என்னென்ன பேசிக் கொண்டார்கள்?"

'இதில் யாராருக்குத் தொடர்பு இருக்கிறது?"

'இந்தக் கொலைத் திட்டத்தில் மற்றவர்களின் பங்கு என்ன?"

'இந்தப் படுகொலை ராஜீவோடு நின்று விடுமா? அவரது வாரிசுகளான எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் ஏதாவது ஆபத்து ஏற்படுமா?"

இதுபோன்ற கேள்விகளையே சோனியாவும் பிரியங்காவும் கேட்டதாக நளினி மற்றும் ரங்கநாத் ஆகியோர் தெரிவித்திருக்கிறார்கள். இதில், அந்த இறுதிக் கேள்வி தான் முக்கியத்துவம் வாய்ந்தது. ராஜீவைக் கொன்ற நபர்களால் தமக்கும், தமது குடும்பத்துக்கும் ஏதாவது அச்சுறுத்தல் இருக்கிறதா? என்பதைத் தெரிந்து கொள்ளவே சோனியா முயல்கிறார். அப்படியென்றால் அவருக்குள் ஒரு நெருடல் இருக்கத்தான் செய்கிறது. அந்த நெருடல் என்ன? ராஜீவ் காந்தியின் அமைதிப்படை இலங்கையில் செய்த அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட வேதனைப்பட்ட எத்தனை, எத்தனையோ பேர் மாவீரர்களாக மாறிவிட்ட நிலையில் அவர்களால் நாமும் நமது குடும்பமும் பழி வாங்கப்படுவோமா? என்கிற பயமே சோனியா குடும்பத்தை அச்சுறுத்தி வருகிறது.

'புலி வாலைப் பிடித்தால் விட்டுவிடக் கூடாது. விட்டால் அது கடித்துவிடும்" என்கிற போக்கில், தன் கணவர் செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் தேடாமல் அடிபட்ட பாம்பை முற்றிலும் கொன்று விட்டால் வரும் காலத்தில் அது திரும்ப வந்து கடிக்கும் என்று அச்சப்பட வேண்டியதில்லை என்கிற நிலையிலேயே சோனியா அண்ட் குடும்பம் இருக்கிறது. இந்திரா, ராஜீவ் போன்றோர் கூட ஆக்கிரமிப்பு என்கிற பேராசையால் இலங்கைக்கு உதவினார்கள். ஆனால், சோனியாவே அடிப்படை ஆதாரமற்ற உயிர் பயத்தால் வேரோடும் வேரடி மண்ணோடும் தமிழ் மக்களைக் கொன்றொழிக்க முயன்று வருகிறார். சோனியாவின் ஆசையை நிறைவேற்றியே ஆகவேண்டிய பொறுப்பிலிருக்கும் மன்மோகன் சிங்கிற்கு வேறு வழி கிடையாது.

படையினரையும், இராணுவ அதிகாரிகளையும், ராடார்களையும், வட்டியில்லா கடன்களையும் வழங்கி, சோனியாவின் கனவில் வந்து பயமுறுத்தும் தமிழ் மக்களை கொன்றொழித்து வருகிறார் மன்மோகன் சிங். அதிலும் எம்.கே.நாராயணன், சிவசங்கரமேனன் போன்ற பாலக்காட்டு பார்ப்பன அதிகாரிகளும் சோனியா மனதில் கொளுந்து விட்டெரியும் பய நெருப்புக்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

சோனியாவைச் சந்தித்த பெங்களுர் ரங்கநாத், 'ராஜீவ் கொலையாளிகள் சந்திராசாமி, சுப்பிரமணிசுவாமி பற்றியும் பேசிக் கொண்டார்கள்" என்று சொன்னதை சோனியாஜி காதில் போட்டுக் கொள்ளாதது ஏன்? (ராஜீவ் படுகொலை விசாரணையின் போது இதைச் சொன்னதற்காக ரங்கநாத்தின் பல்லை உடைத்திருக்கிறார், ஆன்மீகக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் சாந்த சொரூபியான அப்போதைய சிபிஐ இயக்குநர் டி.ஆர். கார்த்திகேயன்.)

ஒவ்வொரு பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போதும் சுப்பிரமணிய சுவாமி, 'ராஜீவ் கொலையில் சோனியாவின் பங்கிருக்கிறது" என்று சொல்லி வரும் நிலையில் திருமாவளவனின் உருவப் பொம்மையை எரிக்கும் காங்கிரஸார், சுப்பிரமணிய சுவாமியின் உருவப் பொம்மையை எரிக்காதது ஏன்?

விடயத்துக்கு வருவோம். சோனியாவின் அர்த்தமற்ற, அடிப்படையற்ற அச்சத்தால் பயத்தால் ஈழ மக்கள் இன்றளவும் இன்னல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கணவர் ராஜீவ் செய்த தவறைத் திருத்திக்கொள்ள வழியிருக்கும் போது, அந்தத் தவறைத் திரும்பச் செய்வதன் மூலம் தன்னையும் தன் குடும்பத்தாரையும் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று சோனியா காந்தி நினைக்கிறார் போலும். இதற்கெல்லாம் காலம் தான் இனி பதில் சொல்லும்!.

தமிழகத்தில் இருந்து வெற்றி

 

http://www.nerudal.com/nerudal.228.html

StumbleUpon.com Read more...

கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு லண்டனில் கடும் பனி மழை போக்குவரத்துக்கள் முடங்கின

 

February 2, 2009

london-2.jpg 

கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தென் கிழக்கு இங்கிலாந்தில் இன்று பனி மழை பொழிந்தது. இதன் காரணமாக லண்டனில் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டன, ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டன. போக்குவரத்து பாதிப்புகள் காரணமாக லண்டனின் சில பகுதிகளில் குழப்பம் நிலவியது.

லண்டன் நகரில் இன்று அனைத்து பேருந்து போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டிருந்த போதிலும், நிலத்துக்கு கீழே செல்லும் சில ரயில் சேவைகள் முழுமையாக இயங்கின.

இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதியிலிருந்து புறப்படும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன அல்லது காலதாமதத்துக்கு உள்ளாயின.

பிரிட்டனின் மொத்த பணியாளர்களில் கால் சதவீதம் அதாவது, சுமார் ஆறுபது லட்சத்து ஐம்பதாயிரம் பேர் இன்று பணிக்கு வரவில்லை என்று வர்த்தக கூட்டமைப்பு ஒன்று கணித்துள்ளது.

இந்த மாதிரியான ஒரு கடுமையான கால நிலையை எதிர்கொள்ள லண்டன் நகரம் தயாரான நிலையில் இல்லை என்று நகரத்தின் மேயரான போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

நகரில் பனிப் பொழிவு தொடருகிறது. காலநிலை மேலும் மோசமடையக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 
 

StumbleUpon.com Read more...

கருணா எட்டப்பன்களுக்கு ராஜமரியாதை ஜேக்சன் துரை ராஜபக்சே அறிவிப்பு

புலிகள் சரணடைந்தால் ராஜமரியாதை: ராஜபக்சே

இலங்கையின் மத்திய மாகாணத்தில் வரும் 14-ந் தேதி அன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதற்காக ஹங்குரன்கேதா என்ற இடத்தில் ஆளும் கூட்டணி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ''தீவிரவாதத்துக்கு எதிராக ஒட்டு மொத்த இலங்கையும் ஒன்றுபட்டு நிற்கிறது. எனவே, இலங்கை ராணுவத்தின் போர் நடவடிக்கைகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

வடக்கு பகுதியில் இருக்கும் சிறிது இடத்தையும் பிடிக்கும் வரை போர் ஓயாது.'' என்று தெரிவித்தார்.

அவர் மேலும், 'ஆயுதங்களை கைவிட்டு விட்டு விடுதலைப்புலிகள் சரண் அடைந்தால் அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் அளிக்க தயாராக இருக்கிறோம்.

ராணுவத்திடம் சரண் அடையும் விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் மனிதாபிமான முறையில் நடத்தப்படுவர். கிழக்கு மாகாணத்தில் சரண் அடைந்த அவர்களுடைய சகாக்கள் (கருணா கோஷ்டியினர்) போலவே அவர்களுக்கும் அரச மரியாதை அளிக்கப்படும்.

இதற்கு மாறாக, போரில் ராணுவத்திடம் பிடிபட்டால் பேராபத்தை எதிர் நோக்க வேண்டி இருக்கும்'' என்று  தெரிவித்தார்.
 

StumbleUpon.com Read more...

Puthukkudigiruppu Sogangal -புதுக்குடியிருப்பு சோகங்கள் (Video clip)



StumbleUpon.com Read more...

இருப்பாய் தமிழா நெருப்பாய்

StumbleUpon.com Read more...

ஈழம் அன்றும் இன்றும்

Part 1




Part 2

StumbleUpon.com Read more...

DEEPAM TV NEWS 2 2 09

StumbleUpon.com Read more...

வன்னி பதுங்கு குழிகளைப் பார்த்து வரட்டும்

வன்னி பதுங்கு குழிகளைப் பார்த்து வரட்டும். அங்கே நடப்பது போர் அல்ல... தமிழின அழிப்பு என்னும் உண்மை புரியும்!

[ nts;spf;fpoik, 2 rdthp 2009 ] [ khtp]; ]

 

அங்கே அந்த இலங்கை அரசு தமிழீழ மக்கள் வாழும் குடியிருப்புகளின் மீது குண்டு மழை பொழிவது வழக்கம். வீடுகள்தான் என்றில்லை, வயல்வெளிகள் எரிகின்றன. வழிபாட்டுத் தலங்கள் சிதைகின்றன. பள்ளிக்கூடத்திலும், மருத்துவமனையிலும்கூட குண்டுகள் விழுந்துள்ளன. எனவே, காட்டுப் பகுதிதான் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கும் என்று கருதி, அந்தக் குடும்பங்கள் அங்கே கூடாரங்கள் அமைத்துள்ளன.
 
ஆனாலும், உணவுக்கு என்ன செய்வது?
 
கனிகளே உணவு. மழையே குடிநீர். பாதி வயிறு நிரம்பும். மீதி வயிற்றைப் பசி நிரப்பும்.
 
ஒரு நாள் தொலைதூரம் நடந்து நிவாரணமாகக் கிடைத்த கொஞ்சம் அரிசியை அந்தக் குடும்பங்கள் வாங்கி வருகின்றன. ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, 3 பிள்ளைகள். அந்தப் பிள்ளைகளின் பல நாள் பசியை அந்தத் தாய் அறிவாள். காட்டு விறகுகளைப் பொறுக்கி வந்து, நிவாரண அரிசியை உலையில் போட்டு அந்தக் குடும்பம் பொங்குகிறது. எத்தனை நாளாயிற்று... இன்று பசியாறலாம் என்று காத்திருக்கின்றனர் பிள்ளைகள்.
 
ஆயிற்று உணவு சமைத்து ஐவரும் வட்டமாக அமர்ந்து உண்ணத் தொடங்குகின்றனர். உணவு மட்டுமன்று, நெடு நாட்களுக்குப் பிறகு சிரிப்பும் அவர்கள் முகத்தில்!
 
வந்தோரை வாழவைத்த தமிழினம் இன்று சொந்த நாட்டில் சோறு கண்டு மகிழ்கிறது. ஓரிரு வாய் உணவுதான் உண்டிருப்பார்கள். அதற்குள் வானில் விமானங்கள் வட்டமிடும் சத்தம். 'இங்கடயும் வந்துட்டாங்களா பாவிகள்' என்று கலவரத்துடன் அப்பா வெளியில் வந்து பார்க்கிறார். சற்றுத் தொலைவில் குண்டுகள் விழத் தொடங்கிவிட்டன.
 
'ஓடுங்கோ... ஓடுங்கோ, பதுங்குகுழிக்கு ஓடுங்கோ பிள்ளையளே!' - தாய் அலறுகிறாள். 3 பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு தகப்பன் பதுங்கு குழி நோக்கி ஓடுகின்றார். 'அம்மா நீங்களும் வாங்களேன்' என்கின்றனர் பிள்ளைகள். 'நீங்க ஓடுங்கோ... நான் இதோ வாரேன்' என்கிறார் அம்மா.


 


 
உணவை அப்படியே வைத்துவிட்டுப் போனால், நாய்களோ, பறவைகளோ வந்து அதனைச் சேதப்படுத்திவிடும். எனவே உணவை எடுத்து ஒழுங்குபடுத்திவிட்டுப் பிறகு பதுங்கு குழி நோக்கி ஓடுகிறாள் தாய்.
 
கூடாரத்துக்கும் பதுங்கு குழிக்கும் இடையே அவள் வந்துகொண்டு இருக்கும்போது ஒரு குண்டின் சிதறல் அவளை விரைந்து வந்து தாக்குகிறது. தகப்பனும் பிள்ளைகளும் பார்த்துக்கொண்டே இருக்க... துடிதுடித்துச் சாகிறாள் அவள். நால்வரும் கதறித் துடிக்கின்றனர். ஒருவேளை உணவைத் தன் பிள்ளைகளுக்குப் பத்திரப்படுத்த முயன்று தன் உயிரையே மாய்த்துக்கொண்ட தாய் அவள்! அதைப் பார்த்த பிள்ளைகளில் கடைசிப் பிள்ளையான மகளுக்கு மனநலம் பாதிக்கப் பட்டுவிட்டது


 

இது கற்பனைக் காட்சியன்று. ஒவ்வொரு நாளும்  பதுங்கு குழியை நம்மில் பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. லி, ஜி ஆகிய வடிவங்களிலும் வட்ட வடிவிலும் அவை அமைக்கப்படுகின்றன. வான்வெளித் தாக்குதல்களிலிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ளவே இந்தக் குழிகள் உதவும். எனினும் தாழப் பறக்கும் விமானங்கள், பதுங்கு குழியைக் குறிவைத்தே குண்டுகள் வீசும். எனவே அவற்றின் பார்வையில் படாமல் தப்புவதற்காக மூடு பதுங்குகுழிகளை ஏற்படுத்துகின்றனர். குண்டுவீச்சினால் முறிந்துகிடக்கும் பனைமரங்களும், தென்னை மரங்களும் குழிகளின் மீது அடுக்கப்படுகின்றன. அவற்றின் மீது மணல் மூட்டைகள் வைக்கப்படுகின்றன. அப்போது பதுங்குகுழிகள் பார்வைக்குச் சட்டென்று தெரிவதில்லை. ஆனால், உட்பகுதி முழுவதும் இருட்டாகிவிடும். உள்ளே இருப்பவர்கள் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்க்க முடியாது.


 
ஆதலால், சின்னச் சின்னத் துவாரங்களை ஏற்படுத்திக்கொள்கின்றனர். சுவாசிப்பதற்கும் சின்ன வெளிச்சத்துக்கும் அவை உதவுகின்றன. சில மணி நேரத் தாக்குதல்களைத் தாங்கிக்கொள்ளலாம். சமயங்களில் வாரக்கணக்கில் தாக்குதல் தொடர்ந்தால் மக்கள் உள்ளேயேதான் இருக்க வேண்டும். கழிப்பறைகளுக்கு மட்டும் வெளியே ஓடி வந்து, மீண்டும் உள்ளே சென்றுவிட வேண்டும். அந்தக் கொடுமையான நாட்களில் குழந்தைகளும் பெரியவர்களும் எவ்வளவு துன்பத்துக்கு உள்ளாவார்கள் என்பதை அவர்கள் விளக்கும்போது நம் கண்கள் கலங்குகின்றன. உட்புறத்திலேயே குழந்தைகள் பிறந்த நிகழ்வுகளும் சிறுமிகள் சிலர் பூப்படைந்த நிகழ்வுகளும் உண்டு என்கின்றனர்.
 
மழைக் காலங்களில் பதுங்கு குழிகளுக்குள் தண்ணீர் நிரம்பிவிடும். சின்னச் சின்ன பூச்சிகளில் இருந்து பெரிய பாம்புகள் வரை உள்ளே போய் அடைந்துகொள்ளும் அபாயமும் உண்டு. திடீரென்று விமானம் வரும் நேரத்தில் அதை ஒழுங்கு செய்ய முடியாது. இப்படி பதுங்கு குழிகளைப் பராமரிப்பதற்கே ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை எடுத்துக்கொள்கிறது.
 
இப்போதெல்லாம் 500 கிலோ முதல் 800 கிலோ வரையிலான குண்டுகள் போடப்படுகின்றன. அவை நேரடியாகக் குழிகள் மீதோ, குழிகளுக்கு அருகிலோ விழுந்தால் அனைவருக்கும் அதுவே சவக்குழியாக ஆகிவிடும். கல்லறையாகவும் மாறியுள்ளன.
 
சிங்கள அரசு மக்களின் மீது தாக்குதல் நடத்தவில்லை. போராளிகள் மீது மட்டும்தான் போர் தொடுத்துள்ளது என்று பொய்யுரைப்போர், ஒரு முறை அங்கு சென்று அந்தப் பதுங்கு குழிகளைப் பார்த்து வரட்டும். அங்கே நடப்பது போர் அல்ல... தமிழின அழிப்பு என்னும் உண்மை புரியும்!
 

 http://www.nitharsanam.com/?art=26504

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP