சமீபத்திய பதிவுகள்

இந்துமதம் எங்கே போகிறது ?

>> Wednesday, April 16, 2008

இந்துமதம் எங்கே போகிறது ?

நக்கீரனில்  வெளிவந்த கட்டுரை

பகுதி - 1
இந்து மதம் எங்கிருந்து வந்தது?
நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகி றதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டைகளாலும் விரட்டுங்கள்.
வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத காலத்தின் பாதாளப் பகுதி அது. மலைகள், காடுகள் என மனிதர்களையே பய முறுத்தியது பூமி.
இமயமலைக் குளிர் காற்றில் நடுங்கியபடி ஓடிக் கொண்டிருக்கிறது சிந்து நதி. என்ன திமிர்? அத்தனை குளிரிலும் மானசரோவரில் பிறந்த சுமார் ஆயிரம் மைல்கள் மலையிலேயே நடை பயின்று பிறகுதான் கீழி றங்குகிறாள் சிந்து.
அது அந்தக்கால ஆப் கானிஸ்தான் நிர்வாண மனிதர்கள். சாப்பிடத் தெரியாது. எதுவும் தெரியாது. மாலை மயங்கி இருள் இழைய ஆரம்பித்தால் பயத்தில் சிகரத்தில் ஏறி குகைகளுக்குள் விழுந்து விடுவார்கள். சூரியன் மறுநாள் வந்து விளக்கேற்றிய பிறகுதான் பயம்போய் வெளியே வருவார்கள்.
பூமியே புதிராக தெரிந்தது. அவர்களுக்கு நதியை யார் துரத்துவது? பயந்தனர். மரத்தின் தலையைப் பிடித்து உலுக்குவது யார்? பயந்தனர் சுற்றிலும் இருள் பூசியது யார்? நடுங்கினர்.
இந்தப் பயத்தாங் கொள்ளிகளுக்கிடையே சிலபேர் பயப்படாமல் பார்த்தார்கள். மலை, நதி, மரம், வானம், உற்றுப் பார்த்தார்கள்.
அவர்களின் மூளைக் குள்ளும் சூரியன் உதித்தது. மனிதனுக்கே உரிய சிந்தனா சக்தி அந்த சிலருக்கு வயப்பட்டது. சிந்தனையை இரு கண்களிலும் ஏற்றி வைத்துக் கொண்டு பார்வையால் உலகத்தைக் குடைந்தனர்.
விளைவு...!
கண்டுபிடிக்கப்பட்டது தெய்வம். இதுவரைப் பார்த்து பயந்த மரம், செடி, கொடி, மலை நதி தான் தெய்வம். இருட்டை ஓடஓட விரட்டுகிறானே அந்த வெளிச்சம்தான் தெய்வம் என்றான் உற் றுப் பார்த்தவன். (இந்த தெய்வம் என்ற பதம்தான் அய்ரோப்பியர்களால் டிவைன் (Divine) என வழங் கப்படுகிறது. ஆரியர்களில் ஒரு பகுதிதான் அய்ரோப்பாவுக்கு நகர்ந் தது).இயற்கைதான் கடவுள். துரத்தும், உலுக்கும் சக்தி தான் கடவுள். உற்றுப் பார்த்தவன், பார்த்தான் பார்த்தான் பார்த்துக் கொண்டே இருந்தான்.
அவனுக்கு ரிஷி என பெயர். ரிஷி என்றால் பார்ப்பான், பார்ப்பான், பார்த்துக்கொண்டே இருப்பான்.
நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என கண்டுபிடித்தவர்கள் அடுத்ததாய் அதற்குநாம் கட்டுப்பட்டு வாழ்வதெப்படி என்பதையும் வகுத்தார்கள் உண்டாயிற்று வேதம்.
உற்றுப் பார்த்து சிந்தித்து சிந்தனையாளர்களால் நாகரிகம் மெல்ல மெல்ல அரும்பத் தொடங்கியது.
'இந்த உலகமே தெய்வம்தான். நாம் வாழ சந்தோஷமாக வாழத்தான் தெய்வத்தைப் பயன்படுத்த வேண்டும்" -வகுத்தது வேதம்.
"Civilisation never born, but, it is the heritage of humanity" என பிற்பாடு அமெரிக்க அறிஞர் ப்ரைஸ் சொன்னது போல் தொட்டுத் தொடர்ந்தது நாகரிகம்.
முதலில் இயற்கையைப் பார்த்துப் பயந்த மனிதர்களுக்கு சிந்தனை செய்து உற்றுப் பார்த்த மனிதனான ரிஷி அறிவுரை சொன்னான்.
பயப்படாதே.. நீயும் நானும் நன்றாக வாழ வேண்டும். அதற்கு இந்த மரத்தைப் பயன்படுத்துவோம்.
நதிகளைப் பயன்படுத்துவோம். இயற்கை நமக்காகத்தான் வேதம் ஒரு கட்டுப்பாடு மிக்க கலாச்சாரத்தைக் கொண்டு வந்தது.
ஆரிய இனத்தவர்கள் என வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும்...
இம் மனிதர்களிடையே இப்படித்தான் வேத மதம் பிறந்தது.
இந்த நல்லெண்ணச்சிந்தனை வளர்ந்து மெருகேற்றியதுதான் சமூக அமைப்பு. கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்ற. ஒரு கட்டுமானம் வேண்டும். அது ஆளப்பட வேண்டும். வேதம் சொன்ன நெறிமுறைகளை வைத்து வாழ கற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
அதற்கு என்ன செய்தார்கள்! பிரித்தார்கள். மூன்றாக பிரித்தார்கள். தங்களைத் தாங்களே நிருவாகம் செய்வதற்கு ஆள்வதற்கு ஒரு பிரிவு. அவர்கள் சொன்னபடி செய்து முடிப்பதற்கு ஒரு பிரிவு. இதோடு நிறுத்தவில்லை.
ஆள்பவனையும் ஆளப்படுபவனையும் வேதம் சொல்லும் நெறி முறைகளைச் சொல்லிக்கொடுத்து... அவர்கள் தடம் பிறழாமல் காப்பதற்காக ஒரு பிரிவு.
ஆள்பவன் க்ஷத்திரியன் ஆனான். ஆளப்படுபவன் அதாவது உழைப்பவன் வைசியன் ஆனான். இவர்கள் இரண்டு பேரையும் வேதத்தை வைத்துக் கொண்டு, வேதத்தைக் கற்று நீதி நெறிப்படுத்தியவன் பிராமணன் ஆனான்.
ஆட்சி செய்வதற்கே நேரம் போதவில்லை என அதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தனர் க்ஷத்திரியர்கள். உழைக்க வேண்டும். பிழைக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக வியர்வை சிந்த புறப்பட்டுவிட்டார்கள் சிந்தனாசக்தி குறைந்த அப்போதைய வைசியர்கள்.
பிராமணர்கள் பார்த்தார்கள். இவர்கள் இருவருமே வேதத்தை விட்டு விட்டுப் போய்விட்டார்களே....
அதிலுள்ள கருத்துகளை கட்டளைகளை கர்மாக்களை நாம்தானே சிரமேற்கொண்டு செயல் படுத்தவேண்டும். எனவே வேதம் பிராமணர்கள் கைக்குப் போனது.
இதெல்லாம் முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தானில் நடந்ததாகத்தான் வேத காலத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் அறிவிக்கின்றன.
ரிசா, குபா, க்ரமு என்கிற நதிகள் வேதத்தில் ஓடுகின்றன. இவை ஆப்கன் தேச நதிகள் என்பதால் வேதகாலம் பெரும்பாலும் ஆப்கன் பகுதியில்தான் நிகழ்ந்துள்ளதாகச் சொல்கின்றன. வேதத்தில் மூழ்கியிருந்தோரின் முடிவுகள்.
வேதம் பிராமணர்கள் கைக்கு போனதும் அறமும் தர்மமும் கர்மாக்களும் செவ்வனே நடந்தேறி வந்ததால்.. வேத மதம் பிராமண மதம் ஆயிற்று.
ஆரிய மதம் வேதமாகி வேத மதம் பிராமண மதமாகி, காலவெள்ளத்தில் அவர்கள் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்க, அப்போது இங்கே சுமார் 450 மதங்கள் இருந்தனவாம். இவைகளில் எது இந்து மதம்?
 

பகுதி - 2
இந்தியாவில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்? படிப்படியாகப் பார்ப்போம்.
ஒரு புருஷனும், அவன் பத்தினியும் மழை பெய்த சாலையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். வழியில் ஒரு பள்ளம். இடையில் மழை நீர் தெரு மண்ணோடு கூட்டணி வைத்து 'சகதி' அந் தஸ்தோடு கிடக்கிறது.
புருஷன் பார்த்தான். ஒரே தாண்டு. இந்தப்பக்கம் வந்துவிட்டான். திரும்பிப் பார்த்தால் அவன் பத்தினி பாவமாக நின்று கொண்டிருந்தாள். தாண்டினால் விழ வேண்டியதுதான் என பயந் தாள்.
'கொஞ்சம் கை குடுங்கோ... வந்துடறேன்' என்கிறாள் பத்தினி. இது உங்களுக்காக சொன்ன உதாரணம்தான்.
இதேபோலத்தான் அன்று... ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மூர் மழைச் சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?
நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றை யெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.
'வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்.'
ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது, கூட வந்த பெண்கள் கம்மி. வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான். ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள். ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.
மனு?
வேதங்களை எல்லாராலும் படிக்க முடியாது.
அஃதை விளங்கிக் கொள்ள அனைவருக்கும் அறிவு குறைவு. அதனால் வேதம் வகுத்த கர்மாக்களை, கட்டளைகளை விளக்கி, புரியும்படி சொல்கிறோம் என எளிமை என்ற பெயரில் செய்யப் பட்டதுதான் மனுதர்மம்.பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை 'மனு' பிளவாக்கியது. கூடவே, இவர்களைத் தாண்டி 'சூத்திரர்கள்' என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக்காரர்களாகவே ஆக்கியது மனு. பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு - சூத்திரனைப்பற்றி இப்படி எழு தியது.
"சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோ பதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை..." இப்படிப் போகிறது மனு.
வந்தேறிய இடத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கவேண்டும் என்றும் பிராமணர்கள் செய்த திட்டம் 'நன்றாகவே' வேலை செய்தது. ஏற்கெனவே பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த க்ஷத்திரியர்களும், வைசியர்களும் சூத்திரர்களை வேலைக்காரர் களாக எடுபிடிகளாக வைத்திருப்பது என்ற பிராமணர்களின் கோட்பாட்டுக்கு குழைந்தனர்.
'அடே... குழந்தாய் இந்தா பால். இதைக் குடித்து மகிழ்வாய் வாழு' என்ற வேதத்தை மனு திரித்து... "இந்த பாலை இவன் குடிக்க வேண்டும்... இவன் குடிக்கக் கூடாது. இவன் எச்சில் படாமல் குடிக்க வேண்டும். இவன் பால் கறக்கும் மாட்டை மேய்க்கவேண்டும்" என பிளவு செய்தது.
ஆரியர்கள் பெண்களை அழைத்து வரவில்லை என்று சொன் னேன் அல்லவா? இதற்குக் காரணம் என எடுத்துக்கொள்ள ஏதுவான மனு ஸ்லோகம் ஒன்றை பாருங்கள்.
"பால்யே பிதிர்வஸே விஷ்டேது
பாணிக்ரஹா யௌவ் வனே
புத்ரானாம் பர்த்தரீ ப்ரேது
நபஜேத் ஸ்த்ரீ ஸ்வ தந்த்ரதாம்"
"பெண்ணே... நீ குழந்தைப் பருவம் வரை அப்பன் சொன்னதை கேள்... வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதைக் கேள். உனக்கு குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்க வேண்டும். உனக்கு இது தான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியவற்றவள், ஆண் சொல்படி கேள்."
இப்படி 'பெண்ணுரிமை' பேசும் மனு இன்னொரு இடத்தில் சொல்கிறது. "பெண்கள் அசுத்தமானவர்கள். உனக்கு விதிக்கப்பட் டுள்ள மந்த்ரோப தேச சம்ஸ்காரங்கள் அவளுக்கு கிடையாது. அவளை மதிக்காதே..." பிராமண ஆணுக்கு சொல்லுவதாய் வந்த கருத்து இது.
மனுவின் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு 'பூம் பூம்' மாடுகள்போல தலையாட்டினார்கள் மற்ற வர்ணத்தவர்கள்.
வைதீக கட்டுப்பாடுகள் சர்வாதிகாரமாக விதிக்கப்பட்டன. "கட வுள் இப்படித்தான் செய்யச் சொல்லியிருக்கிறான். இதுபடி கேள். இல்லையேல் நீ பாபியாவாய்..." என மந்த்ரங்களால் மிரட் டப்பட்டனர் மக்கள்.
பல நூறு வருடங்கள். ஒரு கிரிமினல் லா போன்றே மனுநீதி சமூக கட்டமைப்பை தன் கட்டுக்குள் வைத்திருந்தது. வைதீக கர்மாக்களை பிறருக்கு எடுத்துச் சொல்லி நீதி பரிபாலனம் செய்ய வேண்டிய பிராமணன், க்ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எல்லோரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
இப்படிப்பட்ட ஒரு 'சாஸ்திர ஏகாதிபத்ய' சூழ்நிலையில்தான்... இன்றைய நேபாளத்திலிருந்து ஒரு குரல் புறப்பட்டது.
"கடவுள் பெயரை சொல்லியும்... கர்மாக்கள் பெயரைச் சொல்லியும் சிந்தனை வளராத அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்கிறீர்களே? உங்களுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது? கடவுளா? அவன் எங்கே இருக்கிறான்?
வேதத்தை சாதத்துக்கு (பிழைப்புக்கு) பயன்படுத்தாதீர்கள். பேதம் வளர்க்காதீர்கள். கொடுமைதான் உங்கள் கொள்கை என்றால் வேதம் வேண்டாம். மனு வேண்டாம். கடவுள் வேண்டாம். கர் மாக்கள் வேண்டாம். மனித தர்மம் மட்டும் தான் வேண்டும்..."
என அந்த சூழ்நிலையில் மிகமிக வித்தியாசமான குரல் தொனித்தது. அது புத்தர் குரல்.
இன்றைக்கு அணு குண்டு வெடி சோதனைக்கே 'புத்தர் சிரித் தார்' என பெயர் வைக்கிறோம். அன்றைக்கு புததரே வெடித்தார் என்றால் விளைவுகள் என்ன?

பகுதி - 2
இந்தியாவில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்? படிப்படியாகப் பார்ப்போம்.
ஒரு புருஷனும், அவன் பத்தினியும் மழை பெய்த சாலையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். வழியில் ஒரு பள்ளம். இடையில் மழை நீர் தெரு மண்ணோடு கூட்டணி வைத்து 'சகதி' அந் தஸ்தோடு கிடக்கிறது.
புருஷன் பார்த்தான். ஒரே தாண்டு. இந்தப்பக்கம் வந்துவிட்டான். திரும்பிப் பார்த்தால் அவன் பத்தினி பாவமாக நின்று கொண்டிருந்தாள். தாண்டினால் விழ வேண்டியதுதான் என பயந் தாள்.
'கொஞ்சம் கை குடுங்கோ... வந்துடறேன்' என்கிறாள் பத்தினி. இது உங்களுக்காக சொன்ன உதாரணம்தான்.
இதேபோலத்தான் அன்று... ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மூர் மழைச் சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?
நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றை யெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.
'வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்.'
ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது, கூட வந்த பெண்கள் கம்மி. வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான். ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள். ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.
மனு?
வேதங்களை எல்லாராலும் படிக்க முடியாது.
அஃதை விளங்கிக் கொள்ள அனைவருக்கும் அறிவு குறைவு. அதனால் வேதம் வகுத்த கர்மாக்களை, கட்டளைகளை விளக்கி, புரியும்படி சொல்கிறோம் என எளிமை என்ற பெயரில் செய்யப் பட்டதுதான் மனுதர்மம்.பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை 'மனு' பிளவாக்கியது. கூடவே, இவர்களைத் தாண்டி 'சூத்திரர்கள்' என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக்காரர்களாகவே ஆக்கியது மனு. பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு - சூத்திரனைப்பற்றி இப்படி எழு தியது.
"சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோ பதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை..." இப்படிப் போகிறது மனு.
வந்தேறிய இடத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கவேண்டும் என்றும் பிராமணர்கள் செய்த திட்டம் 'நன்றாகவே' வேலை செய்தது. ஏற்கெனவே பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த க்ஷத்திரியர்களும், வைசியர்களும் சூத்திரர்களை வேலைக்காரர் களாக எடுபிடிகளாக வைத்திருப்பது என்ற பிராமணர்களின் கோட்பாட்டுக்கு குழைந்தனர்.
'அடே... குழந்தாய் இந்தா பால். இதைக் குடித்து மகிழ்வாய் வாழு' என்ற வேதத்தை மனு திரித்து... "இந்த பாலை இவன் குடிக்க வேண்டும்... இவன் குடிக்கக் கூடாது. இவன் எச்சில் படாமல் குடிக்க வேண்டும். இவன் பால் கறக்கும் மாட்டை மேய்க்கவேண்டும்" என பிளவு செய்தது.
ஆரியர்கள் பெண்களை அழைத்து வரவில்லை என்று சொன் னேன் அல்லவா? இதற்குக் காரணம் என எடுத்துக்கொள்ள ஏதுவான மனு ஸ்லோகம் ஒன்றை பாருங்கள்.
"பால்யே பிதிர்வஸே விஷ்டேது
பாணிக்ரஹா யௌவ் வனே
புத்ரானாம் பர்த்தரீ ப்ரேது
நபஜேத் ஸ்த்ரீ ஸ்வ தந்த்ரதாம்"
"பெண்ணே... நீ குழந்தைப் பருவம் வரை அப்பன் சொன்னதை கேள்... வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதைக் கேள். உனக்கு குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்க வேண்டும். உனக்கு இது தான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியவற்றவள், ஆண் சொல்படி கேள்."
இப்படி 'பெண்ணுரிமை' பேசும் மனு இன்னொரு இடத்தில் சொல்கிறது. "பெண்கள் அசுத்தமானவர்கள். உனக்கு விதிக்கப்பட் டுள்ள மந்த்ரோப தேச சம்ஸ்காரங்கள் அவளுக்கு கிடையாது. அவளை மதிக்காதே..." பிராமண ஆணுக்கு சொல்லுவதாய் வந்த கருத்து இது.
மனுவின் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு 'பூம் பூம்' மாடுகள்போல தலையாட்டினார்கள் மற்ற வர்ணத்தவர்கள்.
வைதீக கட்டுப்பாடுகள் சர்வாதிகாரமாக விதிக்கப்பட்டன. "கட வுள் இப்படித்தான் செய்யச் சொல்லியிருக்கிறான். இதுபடி கேள். இல்லையேல் நீ பாபியாவாய்..." என மந்த்ரங்களால் மிரட் டப்பட்டனர் மக்கள்.
பல நூறு வருடங்கள். ஒரு கிரிமினல் லா போன்றே மனுநீதி சமூக கட்டமைப்பை தன் கட்டுக்குள் வைத்திருந்தது. வைதீக கர்மாக்களை பிறருக்கு எடுத்துச் சொல்லி நீதி பரிபாலனம் செய்ய வேண்டிய பிராமணன், க்ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எல்லோரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
இப்படிப்பட்ட ஒரு 'சாஸ்திர ஏகாதிபத்ய' சூழ்நிலையில்தான்... இன்றைய நேபாளத்திலிருந்து ஒரு குரல் புறப்பட்டது.
"கடவுள் பெயரை சொல்லியும்... கர்மாக்கள் பெயரைச் சொல்லியும் சிந்தனை வளராத அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்கிறீர்களே? உங்களுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது? கடவுளா? அவன் எங்கே இருக்கிறான்?
வேதத்தை சாதத்துக்கு (பிழைப்புக்கு) பயன்படுத்தாதீர்கள். பேதம் வளர்க்காதீர்கள். கொடுமைதான் உங்கள் கொள்கை என்றால் வேதம் வேண்டாம். மனு வேண்டாம். கடவுள் வேண்டாம். கர் மாக்கள் வேண்டாம். மனித தர்மம் மட்டும் தான் வேண்டும்..."
என அந்த சூழ்நிலையில் மிகமிக வித்தியாசமான குரல் தொனித்தது. அது புத்தர் குரல்.
இன்றைக்கு அணு குண்டு வெடி சோதனைக்கே 'புத்தர் சிரித் தார்' என பெயர் வைக்கிறோம். அன்றைக்கு புததரே வெடித்தார் என்றால் விளைவுகள் என்ன?

பகுதி - 3
வேதத்தின் பெயரைச் சொல்லி கர்மாக்கள் அரங்கேறிக் கொண்டி ருந்ததை எதிர்த்து புத்தர் எழுப்பிய குரலை போன அத்தியாயத்தில் கேட் டோம்.
குரல் கொடுத்த பின் னணி, அடுத்தபடியாக அவரது செயல்கள் எப்படி இருந்தன? விளை வுகள் என்ன சம்பவித் தன? என்பதுபற்றி இப் போது பார்க்கலாம்.
சகல சவுபாக்கியங் களையும் ருசித்துக் கொண்டு மனைவி யசோ தராவோடு இளமைப் பருவத்தில் இல்லறம் நடத்திக் கொண்டிருந்த புத்தருக்கு ஒரு வைராக் கியம் பளிச்சிட்டது. இனி பெண் சுகம் வேண்டாம். இல் சுகம் வேண்டாம். வெளியே போகலாம். அங்கே என்னென்ன நடக்கிறது பார்க்கலாம்.
- என மூளைக்குள் முடிவெடுத்தார். சட் டென இளம் மனைவி யசோதராவையும், பிஞ்சு மகன் ராகுலையும் விட்டு விட்டு வெளியே போய் விட்டார்.
வெளியே வந்த பிறகு அவர் கண்ட காட்சிகள் தான் புத்தரை போராட்ட களத்துக்கு கொண்டு சென்றன.
எங்கெங்கு காணினும் மூடப் பழக்க வழக்கங்கள். ஊரெல்லாம் ஒரே அக்னிப் புகை. அந்தப் புகையில் புறக் கண்களும் தெரியாமல், அக அறிவுக் கண்களும் தெரியாமல் துழாவிக் கொண்டிருந் தனர் மக்கள்.
ஏன் அக்னிப் புகை...?
பிராமணர்கள் சொன் னார்கள், "ஊரெல்லாம் நலமாக இருக்க, நாமெல் லாம் வளமாக இருக்க அக்னி வளர்த்து அதில் பசுக்களை பலியிட வேண் டும். வேதம் பயின்ற நாங் கள் யாகம் நடத்துகி றோம். பிராணிகளையும், தட்சணையையும் கொடுத்து நீங்கள் புண் ணியம் பெறுங்கள்" என அக்னிப் புகைக்கிடையே அழுத்தமாய் சொன் னார்கள்.(அந்த காலத்திலேயே பிராமணர்கள் பசுவை பலியிட்டிருக்கிறார்களா? என்ற சந்தேகம் உங்க ளுக்கு எழலாம். பசு என் றால் சமஸ்கிருதத்தில் நாலுகால் பிராணி என பொருள் பிற்காலங்களில் பசு என்றால் கறவை மாடு என வழங்குவது வழக்க மாகி விட்டது. தமாஷுக் காக இப்போது நாலு சக்கர பஸ்ஸைகூட பசு என கூறினாலும் கூற லாம்).
அந்த புகைக்கிடையே பிராமணர்கள் மந்திரங் களை சொல்லச் சொல்ல ஒன்றும் புரியாமல் கேட் டுக் கொண்டிருந்தனர். காரணம், அன்று மக்கள் பேசியது பிராக்ருத மொழி. அவர்களுக்கு சமஸ்கிருத மந்திரங்கள் புரியவில்லை. அதில் என்ன சொல்லப்பட்டி ருக்கிறது என்றும் தெரிய வில்லை.
புத்தர் இதை பார்த் தார். மக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தவேண் டுமானால், அவர்களின் மொழியான ப்ராக்ருதத் திலேயே கருத்துகளை பரப்பவேண்டும் என முடிவெடுத்தார்.
அப்போதுதான் அசு வமேத யாகத்தின் கொடூ ரங்களையும், ஆபாசங் களையும் கண்கூடாக கண்டார் புத்தர். அதென்ன அசுவமேத யாகம்?
ராஜாக்கள் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு... அடித்து விரட்டி விடுவார்கள். அக்குதிரை எங்கெங்கு சென்று விட்டு வருகிறதோ... அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்து விட்டு அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம்தான் அசுவமேத யாகம்.
ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப் போட்டுவிட்டு விடுவார் கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள். இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும். அப்போது ஓரிரவு முழுவதும் சம் பந்தப்பட்ட ராஜா வீட் டுப் பெண்கள் முக்கிய மாக ராணி... குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக் கொண் டிருக்கவேண்டும். இந்தக் கடமை முக்கியமாக ராணிக்குத்தான்.
இதைக் கூற சவுஜன்ய (கூச்சம்)மாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய, அசுவமேத யாக ஸ்லோ கமே அப்படித்தானே இருக்கிறது.
"அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்து
பத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே..."
என போகிறது ஸ்லோ கம். அஸ்வமாகிய குதி ரையை ராஜாவின் பத் தினி ராணி 'வழிபட வேண்டிய' முறையைத் தான் விளக்குகிறது இந்த ஸ்லோகம்.
இரவு இந்த கடமை முடிந்ததும்... மறுநாள் அந்த ஆண் குதிரையை அப்படியே அக்கினியில் போட்டு பஸ்பமாகும் வரை எரித்துவிடுவார் கள். இதுதான் அஸ்வ மேத யாகம்.
மக்களைபோலவே, ராஜ குடும்பத்தினரும் பிரமாணர்களின் மந்த்ர யாகத்துக்கு கட்டுப்பட் டிருந்தார்கள். யாகம் முடிந்ததும்... "ஏ... ராஜா, இந்த யாகத்தை நல்ல விதமாக பூர்த்தி செய் தாகி விட்டது. இதற்காக நீ பொன்னும், பொரு ளும் தட்சணை கொடுத் தாய். அஃதோடு யாகத் தில் பங்கு கொண்ட உன் ராணியையும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணை யாக்கி பிறகு அழைத்துச் செல்லவேண்டும்" என் றார்களாம்.
இதையெல்லாம் பார்த்து வெகுண்டார் புத்தர். "மனித தர்மம் மிருக காருண்யம் இரண் டையுமே பொசுக்கி யாகம் செய்கிறீர்களே...? ஏன் இப்படி...?"
என யாகம் நடந்த இடத்துக்கே போய் கேள் விகள் கேட்டார்.
பிராமணர்கள் பதில் சொன்னார்கள்: "குதி ரைக்கு மோட்சம் கிடைக் கும். லோகத்துக்கு க்ஷமம் கிடைக்கும்" என்று.
புத்தர் திரும்ப கேட் டார்.
"ஒன்றும் தெரியாமல் வளர்ந்து, வாழ்ந்து சாகப் போகும் குதிரைக்கு மோட்சம் தருகிறீர்களே. எல்லாம் அறிந்த பிராம ணனாகிய நீங்கள் மோட் சம் பெறவேண்டாமா? அந்த அக்னி குண்டத் தில், யாகம் நடத்தும் உங்களையும் தூக்கிப் போட்டால் உங்களுக் கும் மோட்சம் கிட்டும் அல்லவா...?"
ப்ராக்ருத மொழியில் மக்களிடம் இதே கேள் வியை புத்தர் பரப்ப... திடுக் கிட்டுப் போனார்கள் பிராமணர்கள்.
பிறகு...?

 

பகுதி - 4
முரட்டுத் தனமாக ஓடித்திரியும் குதிரை களுக்கே மோட்சம் கிடைக்கும்போது, மென் மையாய் வேதம் ஓதும் உங்களுக்கு அந்த அக்னி குண்ட மோட்சம் வேண் டாமா?...
-என புத்தர் வேள்விச் சாலைக்கே சென்று ஒரு கேள்விப் பொறியை போட யாகத்தைவிட பெருநெருப்பாய் கிளம்பி யது இந்த ஒரு நெருப்பு.
காகம் கொத்தி அல மரம் சாயுமா?...ஆலமரம் போல் வேர்களையும், விழுதுகளையும் மண் ணுக்குள்ளும், மக்களுக் குள்ளும் ஊன்றி வைத் திருந்த வேத கட்டுப்பாடு கள், மநு கட்டளைகள் ஆகியவற்றின் முன் புத் தரின் கொள்கை முழக்கம் முதலில் தடுமாறினாலும் கொஞ்சம் கொஞ்சமாய் வலுப்பெற தொடங்கியது.
முதலில், உடனடி அழிவிலிருந்து பிராணி களை காப்பாற்றுவது, பிறகு, மெல்ல மெல்ல கவ்வும் அழிவிலிருந்து மக்களை காப்பாற்றுவது என முடிவெடுத்த புத்தர்... தன் சிந்தனையோடு ஒத் துப்போகும் சில வாலி பர்களை தேர்ந்தெடுத் தார். புத்தருக்கு அப் போது முப்பது வயது இருக்கலாம். முறுக்கே றிய தேகம்... முன்னேறும் கண்கள். ஓயாத சிந்தனை தனக்கே உரிய குணங் களைப் பெற்றிருக்கும் அவர்களோடு சாலை சாலையாக நடந்தார்.
எங்கேனும் வேள்விச் சாலை அனல் அடித்தால் அங்கே விரைந்து சென் றது புத்தர் படை.
யார் நலனுக்காக யாகம் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறதோ அவர் களை அணுகியது.. பாரப்பா... இப்படி உயிர் களைப் பலிகொடுத்து உனக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது?... சென்ற முறை பக்கத்தில் ஒருத்தன் பல யாகங்கள் நடத்தினான் பொருள் செலவு தான் மிச்சம். அவன் கண்ட பலன் ஒன்றுமில்லை.
நீ பலி கொடுக்கும் நாலு கால் பிராணியை நீயே தீனியிட்டு வளரு. அது இறந்து கொடுக் காத பலனை இருந்து கொடுக்கும். இந்த வைதீக கர்மாக்களை நம்பாதே. ஒருவனுக்கு இழப்பும், ஒருவனுக்கு பிழைப்பும் கொடுக்கும் மோசடி வித்தை... ப்ராகிருத மொழியில் பிளந்து கட் டியது புத்தர் குழாம். இதைக்கேட்ட யாகம் நடத்துபவர்கள்... உடன டியாக நிறுத்தவில்லை என்றாலும்... இனிமேல் யாகம் நடத்தமாட்டோம் என புத்தரிடம் உறுதி தந்தனர்.
புத்தர் நடந்தார். வீடு வீடாய்ச் சென்றார். இப் போது தேர்தல் வந்தால் கட்சிக்காரர்கள் வீட்டு எண்களைப் பார்த்துப் பார்த்துக் கும்பிடுவார் களே... அதே போல ஆனால் பதவியை எதிர் பாராமல் ஒவ்வொரு வீடாய்ப் புகுந்தார் புத் தர். யாகங்கள் நடத்தா தீர்கள். நெருப்புக்குள் உயிர்களைப் போட்டு கொல்லாதீர்கள். உங்கள் அறிவைப் பயன்படுத்தி வாழுங்கள்.
இதுதான் புத்தோப தேசம்
இங்கே முக்கியமான ஒரு செய்தியை குறிப்பிட் டாக வேண்டும். புத்த ருக்கு நெடுங்காலம் கழித்து தோன்றிய கிறிஸ்தவ மதத்தின் புனிதநூல் பைபிளில் மைக்கேல் கூறுவதாக கீழ்க்கண்ட வாசகங்கள் அமைந் துள்ளன.
"Don't pour innocent matters into the fire. God wants your love only"
ஒன்றும் அறியாத அப் பாவி ஜீவன்களை நெருப் புக்குள் போட்டு எரிக்கா தீர்கள். கடவுள் இதை விரும்புவதில்லை. அவர் உங்கள் அன்பை மட் டுமே விரும்புகிறார் என கிறிஸ்தவ புனித நூலில் சொல்லப்பட்ட கருத்தை... மிக மிக மிக முன்கூட்டியே வீடுவீடாகக் சென்று சேர்த்தவர் புத்தர்.
"Anti Vedic" வேத எதிர்ப்புக் கொள்கையை இன்னும் முழுவீச்சில் மக் களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமானால் மக்கள் மனதில் பதியும் சில அடை யாளங்களை பெற்றிருக்க வேண்டும் என ஜனரஞ் சகமான முடிவுக்கு வந் தார் புத்தர்.
என்ன செய்யலாம்? மொட்டையடிக்கலாம் ஆடையைக் குறைக்க லாம். இவை வெளிப்புற அடையாளங்கள். தலையிலிருந்து ரோமங் களையும், உடலிலிருந்து உடையையும் களைந்தது போல், மனசிலிருந்து ஆசையைக் களைய வேண் டும். பெண்ணாசை, பொரு ளாசை துறந்து விட்டு வீட்டை திறந்து வெளியே வந்துவிட வேண்டும்.
தனி குழாமுக்கு இப் படி அழைப்பு விடுத்தார். குவிந்தனர். வீட்டை விட்டு வெளியே வந்தாகி விட்டது. இனி மக்களி டம் நம் கொள்கையைப் பரப்புவதுதான் முழு முதல் வேலை. வேறொ ருவர் வீட்டிலும் தங்கக் கூடாது. எங்கே போவது?...
உருவாகின புத்த விஹா ரங்கள். சிறு சிறு எளிய குடில்கள். புத்த சன்யாசி கள் என (Buddhist monks)பிட்சுகள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட கோயில் போன்ற ஸ்தலங்கள் தான் விஹாரங்கள் என அழைக்கப்பட்டன. மக் கள் பேசும் மொழியான ப்ராக்ருதத்திலேயே புத்த பிட்சுகளின் பிரச்சாரங் களும் போதனைகளும் பரவத் தொடங்கின. விஹார்களின் எண் ணிக்கை சரசரவென அதி கரிக்க ஆரம்பித்தது. இன் றைய பிஹார் மாநிலத் துக்கு இப்பெயர் வர கார ணமே. அங்கே புத்த விஹார் கள் எக்கச்சக்கமாய் இருந் ததுதான் காரணம் என்ன ஒரு வரலாற்றுக் குறிப்பும் உள்ளது.
புத்தர் காலத்துக்குப் பிற கும் அவருடைய ஞான மார்க்கம் பரவி பெருகிய நிலையில்தான் பிராம ணர்கள் தங்கள் கர்ம மார்க்கத்தை மறுபரிசீ லனை செய்ய ஆரம்பித் தனர். உயிர்ப்பலிகளை குறைக்க முடிவெடுத்த னர்.
பிராமணர்களின் மிகப் பெரிய பலமே... யாரிடம் எது நல்லதாக இருக்கி றதோ அதை தங்களுக்கு ஸ்வீகாரம் செய்து கொள் வது தான். ஆங்கிலத்தில் 'Adoption' என சொல் வோமே...
புத்த இயக்கத்திடமி ருந்து... ஜீவகாருண்யத்தை மட்டுமா ஸ்வீஹரித்தார் கள்.
இப்போது மடம் மடம் என சர்ச்சைகளுக்கி டையே பேசப்படுகின் றதே... இதுபோன்ற மடங் களுக்கான மூலத்தையும் புத்த விஹார்களிடமிருந் துதான் பெற்றார்கள் பிராமணர்கள்.
மெல்ல மெல்ல புத்த இயக்கத்தினர் வட இந்தி யாவிலிருந்து தென்னிந்தி யாவுக்கு வந்தனர் பிராம ணர்களும் பின் தொடர்ந் தனர் பிறகு?...

பகுதி - 5
புத்தம் சரணம் கச்சாமி...தர்மம் சரணம் கச்சாமி... சங்கம் சரணம் கச்சாமி... என்ற மெல்லிய கோஷங்கள் தென்னிந்தியாவின் தொண்டை மண்டலக் காற்றில் கலக்க ஆரம்பித்த காலம்.
இங்கே தமிழ் பண்பாடு... நாகரிகத்தின் உச்சியில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. சங்க இலக்கியங்கள் இயற்கை, இறைமை, காதல், பக்தி என சகல விசேஷங்களையும் தொட்டு தமிழாட்சி நடத்திக் கொண்டிருந்தது.
பொதுவாகவே உலக அளவில் வழிபாட்டு முறையில் ஓர் ஒற்றுமை இருந்து வந்துள்ளது.
(i) கல்லை வழிபடுதல்-Fetish worship
(ii) விலங்குகளை வழிபடுதல்-Totemism worship
(iii) மனித- உரு செய்து வழிபடல்-Shamnaism worship
(iஎ) விக்ரம், சிலை செய்து வழிபடுதல்-Idol worship
நாகரிக பண்பாட்டு வளர்ச்சியின் அடிப்படையில் இந்த வழிபாட்டு முறைகளும் வளர்ச்சி கண்டு வந்தன. தமிழ் நாகரிகமோ சிற்பக்கலையில் தேர்ந்து விளங்கியது.
பழங்கால மன்னர்கள் தங்கள் ஆட்சியின் பெருமைகளை வரலாறுதாண்டி உரத்துச் சொல்லும் அளவுக்கு சிற்பங்கள் நிறைந்த கோயில்களை கட்டி அங்கே தெய்வச் சிலைகளை எழுப்பி வழிபாடு நடத்திவந்தனர்.
வழிபாடு என்றால்?
தமிழன் கல்லை சிலையாக்கும் நுண்மையான வன்மை கொண்டவன் என்றாலும்... அதே அளவுக்கு மென்மை தன்மையும் அவனிடத்தில் மேவிக் கிடந்தது.
பூக்களை பறித்து அவற்றால் வழிபாடு நடத்த ஆரம்பித்தான். அருகில் அணையாமல் நந்தா விளக்கு எரிந்து கொண்டே இருக்கும் தீப வெளிச்சத்தில் பூக்களால் நடத்தப்பட்டதுதான் தமிழனின் முதல் வழிபாடு.
பூசெய்= பூவால் செய் இது இணைந்ததுதான் பூசெய் பூசை என இப்போதைய வார்த்தையின் வடிவம் தோன்றியது.
இதனை திராவிட மொழியியல் ஆராய்ச்சியாளர் எஸ்.கே. சாட்டர்ஜி தனது ஆராய்ச்சி நூலில் எடுத்துக் காட்டுகிறார்.
வழிபாடு மட்டுமல்ல பக்தியிலும் தமிழினம்தான் முன்னோடியாக இருந்திருக்கிறது.
நீ உன் மனைவியிடம் காட்டும் அன்பை கடவுளிடம் காட்டு... என பக்திக்கு இலக்கணம் வகுத்தது பரிபாடல்.
'நாயக' நாயகி பாவம்' என்ற பக்தி வடிவத்தை உலகுக்கு கொடுத்ததே தமிழ் இனம்தான்.
இவ்வாறு கடவுளை காதலியாகவும், காதலனாகவும் உருவகிக்கும், வர்ணிக்கும் அளவுக்கு வளர்ந்திருப்பது தமிழ்ப் பண்பாடு.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான்... புத்தம் மற்றும் சமண கொள்கைகள் தமிழ்நாட்டில் பரவின. பரவின என்றால் சும்மா அல்ல... தெற்கே திருநெல்வேலிவரை சமணம் பரவிவிட்டது.
நாகப்பட்டினம்வரை புத்தம் புகுந்து விட்டது.
வடஇந்தியாவில் புத்திஸத்தால் எதிர்க்கப்பட்ட வேத பிராமணர்கள் நகர்ந்து நகர்ந்து தென்னிந்தியாவைத் தொடுகின்றனர்.
அவர்களில் ஒருவர்தான் மகேந்திர பல்லவ ராஜா என்றும் கருத இடமுள்ளது. புத்தர் இனத்தவர்கள் தமிழினத்தவரோடு 'சம்மந்தி' உறவு முறை வரை நெருங்கிவிட்ட நிலையில்...
பல்லவ ராஜாக்கள் வேதத்தை வேத நெறிமுறைகளை இங்கே விதைத்து வைத்தனர். புத்த போதனைகளால் எதிர்க்கப்பட்ட வேத போதனைகள் இங்கே பிராமணர்களால் மறுபடியும் தலை தூக்கின.
பிராமணர்கள் இங்கே வந்தபோது அவர்கள் அணிந்திருந்த நூல்... அதாவது பூண்டிருந்த நூல்.. அதாவது பூணூல் (இப்போது பெயர்க்காரணம் புரிகிறதா)... பார்த்து ஆச்சரியப்பட்டார்கள் இங்கிருந்தவர்கள்.
என்ன இது? என கேட்க... அதற்கு பிராமணர்கள் பதில் சொன்னார்கள். 'சமூகத்தில் நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்பதற்காக அணிவிக்கப் பட்டிருக்கும் அந்தஸ்து'...
ஆனால்... உண்மையில் இந்த பூணூல் வந்த கதை வேடிக்கையானது.
வேத கர்மாக்களை நிறைவேற்றுவதற்கான சடங்குகளில் ஈ டுபட்டிருக்கும்போது.. வஸ்திரத்தை தோள்பட்டை வழியாக மார்புக்கு குறுக்காக அணியவேண்டும் என்பது வேதம் வகுத்த விதி.
அதேபோல் அணிந்து பார்த்தார்கள். கைகளை உயர்த்தி வேள்விச் செயல்களில் ஈ டுபடும்போது அடிக்கடி அமர்ந்து எழுகின்றபோதும்.. வஸ்திரம் அவிழ்ந்து நிலை மாறிவிடுவதால்.. இது நிலையாகவே இருக்க என்ன வழி என்று பார்த்தார்கள்.
இதே போல மெல்லியதாய் அணிந்தால் பணி செய்யும்போது உபத்திரவம் செய்யாமல் இருக்குமே என யோசித்தனர். வஸ்திரம் நூலானது அதுவே பூணூலானது.
இதை 'அந்தஸ்து' என வழங்கிக் கொண்ட பிராமணர்களுக்கு வசதி செய்து கொடுக்கும் வகையில்... புத்த, சமண கொள்கைகளை பின்பற்றுவதில் கஷ்டங்கள் இருந்தன.
சமண கொள்கைப்படி... உயிர்களை அதாவது எறும்பைக்கூட கொல்லக்கூடாது. நடக்கும்போதுகூட பூமிக்கு நோகக்கூடாது! மேலும் இரு கொள்கைகளுமே கடவுளை முக்கியப்படுத்தவில்லை என்பதால்.. கொஞ்சம் கொஞ்சமாய் மங்க ஆரம்பித்தன. இந்த மகா கொள்கைகள் இந்த மாற்றங்கள் நடந்த பிறகு...
தமிழ்நாட்டில் வேதம் வழிந்தோடியது கிடைத்தது. இங்கேயுள்ள மிகச் சிறந்த சிலைகளை பார்த்த பிராமணர்கள்.. "இவை வெறும் கல்லாகவே இருக்கின்றன. நான் என் மந்த்ரத்தன்மை மூலம் இவைகளை தெய்வமாக்குகிறேன்" என்றனர்.
பூசெய்... என்பதை மாற்றி பூஜை ஆக்கினார்கள். பூ, நந்தாவிளக்கு என இருந்த தமிழர் வழிபாட்டில் மட்டுமா?... கலாச்சாரத்திலும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தனர் பிராமணர்கள் என்னென்ன?

பகுதி - 6
தமிழ் பூக்களால் தமி ழர்கள் செய்த பூஜை (பூ செய்) எப்படி பூஜையானது என பார்த்தோம்.
இதுமட்டுமல்ல இன்னும் பல வகைகளில் தமிழர்களின் வழிபடுமுறை மாறிப்போனது.
சிற்பக் கலைகளில் ஓங்கி உயர்ந்திருந்த தமிழர்கள் பல பெண் உருவச் சிலைகளை வடித்தனர். சிறு சிறு குழுக்களுக்கு ஊர்களுக்கு அவற்றை காவல் தெய்வமாக வைத்தனர் அச்சிலைகளின் முன் நின்று உரத்த குரலில்...
'ஏ... காவல் காக்கும் அம்மா... என் வீட்டில் மாடுகள் நிறைய கொடு... எங்கள் ஊருக்கு மழையைக் கொடு... என அச்சிலை முன் நின்று சத்தம் போடுவார்கள்.
ஏன் என்று கேட்டால்... சிலைக்கு கல் காதல்லவா? அதனால் நாம் உரக்கச் சத்தம் போட்டால்தான் நமது வேண்டுகோள் அச்சிலையின் காதில் விழும். அப்போதுதான் நமது கோரிக்கை நிறைவேற்றப் படும்... என்பது நம்பிக்கை.
இப்படியே கொஞ்ச காலம் போக... ஒருவன் சொன்னான் நாம் நமக்குள் பேசுவதுபோல பேசிக் கொண்டிருந்தால் சிலையின் காதில் கேட்குமா? க்ரீம் த்ரீம் ப்ரீம்... என அடி வயிற்றிலிருந்து அதிரும் படியான சொற்களை உச்சரித்தால் அந்த அதிர்வில் சிலையின் காது திறக்கும் என்றான்.
இந்த உரத்த வழிபாடு ஒருபக்கம் நடந்துகொண் டிருக்க தமிழர்களுக்கு கைகூப்ப கற்றுக்கொடுத்தார்கள் பிராமணர்கள். எப்படி?
தொடக்க கால ஆரியர்களோடு தாஸே எனும் பழங்குடியின மக்கள் பல வகைகளில் மோதினர். சிந்தனை சக்தியில்லாத முரட்டுக் கூட்டத்தை உயர உயரமாய் இருந்த ஆரியர்கள் பதிலுக்குச் சண்டையிட்டு வெல்ல... அப்போது தாஸே இனத்தவர்கள் ஆரியர்கள் முன் குனிந்து இரு உள்ளங் கைகளையும் பிணைத்து... 'இனி உங்களை தாக்கமாட்டோம் என அடிபணிந்தனர்.
அதுபோல வைத்துப் பாருங்கள் கும்பிடுவது போல் தோன்றும். அந்த 'தாஸே' இனப் பெயரிலி ருந்துதான் தாஸன் என்ற சொல் முளைத்தது. தாஸன் என்ற சொல்லுக்கு அடிமை என்ற அர்த்தமும் அதன் வழியேதான் முளைத்தது.
தங்களை அன்று கும் பிட்ட 'தாஸே' இன மக்கள் மாதிரியே... பிற்காலத்தில் தெய்வங்களை வழிபடக் கற்றுக் கொடுத்தனர் பிராமணர்கள் கடவுளுக்காக கை கூப்ப வைத்த பிராமணர்கள் படிப்படியாக... தமிழர்களின் உரத்த வழிபாட்டிற்குள்ளும் ஊடுருவினார்கள்.
"நாம் பேசுவதையே தெய்வத்திடம் பேசினால் அதற்குக் கேட்குமா? நாங்கள் சில மந்திரங்கள் சொல்கிறோம். அதை உச்சரித்தால்தான் உன் சிலைக்கு தெய்வ சக்தி வரும். தவிர மனிதர்களுக் குள் பேசும் மொழியை நீங்கள் தெய்வத்திடம் எப் படி பேசுவீர்கள்?
... என வேத சமஸ்கிருத மந்த்ரங்களை அச்சிலை முன்னர் கூறத் தொடங்கினார்கள். புதிதாக இருக்கிறதே என கேட்க ஆரம்பித்த தமிழர்கள்தான் இன்றுவரை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தனைக்கும் வேதத்தில் சொல்லப்பட்டிருப் பது என்னவென்றால்... கடவுளுக்கு உருவம் கிடையாது. உபநிஷத்துகள் உப தேசிப்பது என்னவென்றால்... "கடவுளுக்கு உருவம் எதுவும் கிடையாது. உருவம் இல்லாததுதான் உண்மையான உருவம்."
வேதம், உபநிஷத்து இவற்றையெல்லாம் தாண்டிக் குதித்து தமிழகத்தில் சிலைகளுக்கு முன்னாள் மந்திரம் சொல்ல ஆரம்பித்தான்.
தமிழன் வழிபாட்டு முறையான பூவோடு... தெய்வம் சாப்பிட ஏதாவது கொடுக்க வேண்டாமா? பழம் கொண்டு வா, அன்னம் கொண்டு வா' தொடங்கியது படையல் பண்பாடு.
நந்தா விளக்கு தீபம், பூ இவற்றோடு வழிபாட்டு பொருள்களுக்கான பட்டி யலில் பழம் சேர்ந்தது. உணவுப் பொருள்கள் சேர்ந்தன. தமிழ் மட்டும் தள்ளி வைக்கப்பட்டது.
வழிபாட்டு முறையில் மாற்றம். அடுத்தது சமூக ரீதியாக மாற்றங்கள் உண்டாக வேண்டியதுதானே நியதி?... உண்டானது.
கலாச்சாரத்தின் முதல் மாற்றம் கல்யாணத்தில் தொடங்கியது. தமிழர்களின் கல்யாணமுறை எப்படி இருந்தது என தெரிந்து கொண்டால்தானே அது எவ்வாறு மாறியது என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும்.
இலக்கியங்களை சித்தரிப்பது போல களவியல் என்பதுதான் பழந்தமிழர்களின் திருமணமுறை அதென்ன களவியல்?
பெண்ணொருத்தி பூப்பெய்துகிறாள் உறவுப் பெண்கள் சுற்றிலும் மகிழ்ச்சி பொங்க முற்றுகை யிட்டிருக்கிறார்கள். பெண்மை, தாய்மை என்னும் பெருமைக்கெல்லாம் அடிப்படையே இந்த திருநாள்தானே. அதனால்தான் சுற்றத்தின் முகத்தில் மகிழ்ச்சி. அந்த யுவதியின் முகத்தில் வெட்கம்.
இதை பக்கத்து வீட்டுக் காளை பார்த்து பூரிக்கிறான். அவளது அழகு அவனை அழைப்பதாய் அவனுக்குத் தோன்றுகிறது. பெண்மையின் முதல் வெட்கத்தின் முகவரி அவள் முகத்தில் தெரிகிறது. அதை படிக்க அந்த காளை ஆசைப்படுகிறான்.
சுற்றிலும் உறவினர்கள். பெண்களின் பாதுகாப்பு... அன்ன நடை போட்டா அவளை அடைய முடியும்?
பொறுத்திருக்கிறது காளை. பொழுது சாயத் தொடங்கிய உடன் பாயத் தயாராகிறது. ராத்திரியின் மெல்லிய ஒளியில் தன் ராணியை நெருங்கியவன் நேரம் காலம் பார்ப்பதில்லை.
ஒரே தூக்கு. அந்த ஆளான அழகை தன் இளங்கரங்களில் ஏந்தி சிற்சில நொடிகளில் சீறிப்பாய்ந்து மறைகிறான்.
ருதுவான மங்கை மாய மாய்ப்போன பின்னே... தேடுகிறார்கள். சுற்றுவட்டாரத்தையே அப்பெண்ணின் ஆண் உறவினர் கூட்டம் அணு அணுவாய் அலசுகிறது.
கடைசியில் அந்த ஜோடி ஜொலித்துக் கொண்டிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விடுகிறது கூட்டம்.
பக்கத்து வீட்டு காளை அவளை பருகி நெடுநேரம் ஆகியிருந்தது.
கையும் களவுமாக பிடித்தபின் என்ன தண்டனை தெரியுமா?

பகுதி - 7
கன்னியை தூக்கிக்கொண்டு ஓடிய அந்தப் பக்கத்து வீட்டு காளைக்கு தமிழ்க்கூட்டம் என்ன தண்டனை கொடுத்தது தெரியுமா?
`இதோ பாரடா... நீ அவளை தொட்ட முதல் ஆண்மகன். அதனால் அவள் உனக்குரியவள்தான். உன்னுடன்தான் வாழ வேண்டும் அவள்' என இரண்டு பேரையும் சேர்த்து வைத்தது தீர்ப்பு.
இஃது களவியல் என்றால்... தமிழர்களின் இன்னொரு சிறப்பு, சங்கப்பாடல் ஒன்று சொல்கிறது பாருங்கள். காதலை அஃதாவது கற்பியலை.
``யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே...''
நானும் நீயும் யார் யாராகவோ இருந்தோம். என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் சொந்தக்காரர்கள் என்றும் தெரியாது. நானும், நீயும் எங்கிருந்து வந்தோம் எனவும் இப்போது தெரியவில்லை.
ஆனாலும்... இந்த அறிமுகங்கள் எல்லாம் தேவையே இல்லாமல் அன்பு கொண்டோம்... எப்படி தெரியுமா... செம்மண்ணிலே பெய்யும் மழைநீரும் செந்நிறம் அடைந்துவிடுகிறதே. அதுபோல அன்பு கொண்ட நம் நெஞ்சங்கள் இரண்டும் பிரிக்க முடியாதபடி கலந்துவிட்டது.
இப்படி காதல் வாழ்க்கையிலும் நாகரிகத்தின் சிகரத்தில் இருந்தனர் தமிழர்கள்.
இவ்வாறு களவியல், கற்பியல் இரண்டு விஷயங்களிலுமே முன்னணியில் இருந்த தமிழர்களின் கல்யாணங்களில் `தாலி' வந்த கதை சுவாரஸ்யமானது.
திருநெல்வேலி போன்ற பனைமரங்கள் அதிகம் இருந்த பகுதிகளில், ஒரு ஆண் பெண்ணை திருமணம் செய்துகொண்டான் என்றால்... பனையோலை ஒன்றை சிறிய அளவில் நறுக்கி அதில் `இந்தப் பெண் இந்த ஆணுக்கு உரியவள்' என எழுதி ஒரு நூலில் கோர்த்து கழுத்தில் கட்டி விடுவார்கள்.
பனைமரத்துக்கு `தால்' என்றும் பெயர் உண்டு. பனையோலையில் எழுதிக் கட்டுவதால் அந்த சிறு ஓலைக்கு தாலி என்று பெயர் வந்தது. பிறகு இந்தத் தாலியில் பெயருக்கேற்றவாறு பனையோலை இல்லாமல்... பவுன் கட்டித் தொங்கவிட்டதெல்லாம் மாற்றத்தின் அடையாளங்கள்.
``இவ்வளவு கஷ்டப்பட்டு களவியல் செய்கிறீர்களே... இவ்வளவு மகிழ்ச்சியுடன் காதல் மணம் புரிகிறீர்களே? இவற்றையெல்லாம் முறைப்படி சடங்குகள் செய்து விழாக்களாக கொண்டாடினால்தானே மகிழ்ச்சி என்றும் கூடும்?''
கல்யாண கலாச்சாரத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தனர் பிராமணர்கள்.
ஒன்றா, இரண்டா? எக்கச்சக்க சடங்குகள். என்னென்ன.... ஒவ்வொன்றாய் சொல்கிறேன்.
1. திருமணத்துக்கு முன்பே இந்த பெண்ணுக்கு இவன்தான் கணவன் என்பதை நிர்ணயிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பெண் தரப்பில் பொருள்களை மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்கவேண்டும். இதற்கு பெயர் நிச்சயதாம்பூலம்.
2. கல்யாணச் சடங்குகள் ஆரம்பிக்கின்றன.
முதலில் காசி யாத்திரை.
சந்நியாசம் வாங்கவேண்டுமென்றால்... மகனே கல்யாணத்துக்கு முன்னரே நீ சந்நியாசம் வாங்கிவிட வேண்டும். அதைவிட்டு கல்யாணத்துக்குப் பிறகு துறவறம் போகிறேன் என சொல்லி பெண்ணின் வாழ்வை படுத்தாதே.. என சூத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
அதனால் கல்யாணத்துக்கு முன் `காசியாத்திரை' என்றொரு சடங்கு.
அதாவது மாப்பிள்ளை குடைக்கம்பை பிடித்துக்கொண்டு காசிக்கு புறப்படுவதுபோல `பாவ்லா' (Drama) செய்யவேண்டும். மாப்பிள்ளையை சமாதானப்படுத்தி மறுபடி திருமணத்துக்கு அழைத்துப் போவார்கள்.
3. ஊஞ்சலாட்டுதல்
குழந்தாய்... நீ பெண்ணோடு சந்தோஷமாக இருக்கும்போது அவருடன் ஊஞ்சல் பலகையில் அமர்ந்து ஆனந்தமாய் ஆடுவாயாக என்பது வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது கல்யாணம் என்றால் மஹஸ். அதாவது (Festival) கொண்டாட்டம் இதற்காகத்தான் ஊஞ்சல்.
4. மாலை மாற்றுவது:
இது க்ஷத்திரியர்களின் கலாச்சாரம். மணமகனும், மணமகளும் சுக துக்கங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளவேண்டும் என்பதன் அடையாளமாகத்தான் மாலை மாற்றிக் கொள்வார்கள்.
5. திருஷ்டி சுத்தி போடுவது. மணமக்களுக்கு யார் கண்ணும் பட்டுவிடக் கூடாது என்பதற்காக உறவினர்கள் எல்லாம் மணமக்களுக்கு திருஷ்டி கழிப்பார்கள்.
6. நீராஜனம் எனப்படும் ஆரத்தி எடுப்பது.
7. இது முக்கியமானது. பெண்ணும், பையனும் இப்போதுதான் நேருக்கு நேராக பார்த்துக் கொள்ளவேண்டும். மந்த்ரங்கள் ஒலிக்க... பெண்ணை உட்கார வைத்து அவள் தலையில் தண்ணீரை மெல்ல மெல்ல ஊற்றி குளிப்பாட்ட வேண்டும்.
8. பிறகு... முழுக்க நனைந்த அவளை... உள்ளே அழைத்துச் சென்று மணமகனே அவளுக்கு புடைவை உடுத்திவிட வேண்டும்.
அவளது நனைந்த புடைவையை களைந்துவிட்டு... புதுப் புடைவையை மணமகன் உடுத்திவிடும்போது... இந்த சேலை வளர்வதுபோல் நம்முடைய மகிழ்ச்சி. சந்ததியெல்லாம் வளரவேண்டும் என்பதற்காகத்தான் இப்புடைவைச் சடங்கு.
இன்னும் இருக்கும் கல்யாணச் சடங்குகளையும்... அவை மறுபடியும் எப்படி மாறின என்பதையும் அடுத்து பார்ப்போம்.
 

பகுதி - 8
கல்யாண கலாச்சாரத்தில் பிராமணர்கள் கொண்டு வந்த சடங்கு சம்பிரதாயங்களில் இதுவரை ஏழு பார்த்தோம். எட்டாவது சடங்கு பாணிக்ரஹனம்.
பாணிக்ரஹனம். இதுதான் முக்கியமான சடங்கு. `கைத்தலம் பற்ற கனாக்கண்டேன் தோழி' என ஆண்டாள் பாசுரம் போலவும், மேற்கத்திய கலாச்சாரத்தில் `கை'ப்பற்றுவதுபோலவும் அமைந்தது இச்சடங்கு.
மணமகள் - மணமகனை கைப்பிடிப்பது! இனி வாழ்விற்கு நீதான் இணை, துணை, எல்லாம் நீயே என்ற அர்த்தத்தில் இருவரும் கைப்பிடித்துக் கொள்வதுதான் கல்யாணத்தின் முக்கிய அம்சம்.
9. கைத்தலம் பற்றிய பின், மணமகள் 7 அடி எடுத்து வைக்கவேண்டும். எதற்காக தெரியுமா?
முதல் அடி அன்னம் பெருகவேண்டும் என்பதற்காக. இரண்டாவது அடி அந்த அன்னம் உண்டபின் செரிக்க வேண்டும், மூன்றாவது அடி கணவனுக்காக விரதங்கள் அனுஷ்டிக்க வேண்டும் என்பதற்காக... நான்காவது, குடும்பம் சந்தோசமாக விருத்தியாக வேண்டும் என்பதற்காக... 5-ஆவது அடி வீட்டில் மாடுகள் பெருகவேண்டும் என்ற வேண்டுதலுக்காக... 6-ஆவது அடி வைப்பது குடும்பத்தில் அய்ஸ்வர்யம் (செல்வம்) கொழிப்பதற்கு... 7-ஆவது அடி இந்த சகல சவுபாக்கியங்களும் சேர்ந்து கிடைக்க... தாலிக்கு அதாவது, `நம் குடும்பம் இனிமேல் ஒன்று. உன் அப்பா யாரோ. என் அப்பா யாரோ... ஆனால், இன்று முதல் நாம் ஒன்று' என சங்கப் பாடல் படித்தோமே அதே பொருளுக்காக... யாகத்தை நெருங்குவதுதான் 7-ஆவது அடி.
இந்த சடங்குகளோடு தமிழ்த் தாலியையும் சேர்த்தனர். இப்படியாகத் தூக்கிப் போவது, காதலிப்பது என சம்பிரதாயங்களில் சிக்காமல் இருந்த தமிழ் திருமண முறையும், பிராமண திருமண முறையும் திருமணம் செய்துகொண்டன.
இதன் விளைவாக தமிழனின் களவியல், கற்பியலில் மந்த்ர இயல் புகுந்தது. சடங்குகள் பிறந்தன. கல்யாணம் என்பது வேதக் கட்டளைப்படி நடக்கும் விழா ஆனது.
``மேலோர்க்கு யாத்த கரணம்
கீழோர்க்கு ஆன காலமும் உண்டே...'' என்கிறது தொல்காப்பியம்.
கரணம் என்றால் கல்யாணம். அதாவது... மேலோர்களான பிராமணர்கள் வகுத்த கல்யாண கர்மாக்கள்... மற்றவர்களுக்கும் வழக்கத்தில் இருந்தது. விளக்கம் என்னவென்றால்... தொடர்ந்து 10 நாள்கள் வரை நடக்கும் கல்யாணச் சடங்குகளை பிராமணர்கள், தங்களால் சூத்திரர்கள் என அழைக்கப்பட்ட தமிழர்களுக்கும் பண்ணி வைத்தனர்.
மந்த்ர பூர்வமான கல்யாணத்தில் இடமில்லை. ஆனால், தமிழர்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கும்போது... அவர்களின் வழக்கத்துக்கு விரோதமாக செயல்பட இயலாதென்பதால் தாலியை... பனை ஓலை கயிறை - மெல்ல மந்த்ர மஞ்சளில் இழைத்து மாங்கல்யமாக்கி விட்டார்கள், தங்களுக்கும் சேர்த்து.
மேற்கூறிய... தொல்காப்பிய வாசகத்தில் கவனிக்கவேண்டிய பதம் ஒன்று உண்டு. ``மேலோர்க்கு யாத்த கரணம் கீழோர்க்கு ஆன காலம் உண்டே.''
என்பதில் கீழோர்க்கு ஆன காலம் உண்டே என்பதை மட்டும் உற்றுப் பாருங்கள். `பிற்பாடு - இந்த கல்யாண முறையில் மாற்றம் வந்துவிட்டது ஒன்றாக இருந்த காலம் உண்டு' என்று தெரிய வரும்.
ஏன் மாறிப் போனது? முதல் காரணம் தனக்கும் கீழானவர்கள் அதாவது சூத்திரர்களின் கல்யாணச் சடங்குகளும் ஒன்றாக இருக்கலாமா? அவர்களுக்கும் நாமே கல்யாணம் செய்து வைப்போம். அதனால் சடங்குகளில் சிற்சில மாற்றங்களைக் கொண்டு வருவோம் என நினைத்தார்கள் பிராமணர்கள்.
இரண்டாவது காரணம்... இவ்வளவு நீண்ட சடங்குகளை நடத்தி திருமண விழாவை பத்து நாள்கள் நகர்த்திச் செல்ல தமிழர்களுக்கு பொறுமையோ அல்லது விருப்பமோ இல்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் கன்னியை தூக்கிக் கொண்டோடி சுகித்து திடீர் திருமணங்களை நடத்திக்கொண்ட `களவியல்' மரபுக்காரர்களாயிற்றே.
அவனது கண்களும், அவளது கண்களும் சந்தித்துக்கொண்ட சிற்சில நொடிகளில்... மவுனப் புன்னகையே மந்திரமாக... கற்பியல் முறையில் காதல் மணம் கண்டவர்களாயிற்றே.
அதனால் தமிழர்களுக்கு அந்த நீண்ட நெடிய சடங்குகளில் பிடிப்பு வரவில்லை. கல்யாண கலாச்சாரங்களுக் கிடையில் `விவாகரத்து' ஏற்பட்டுவிட்டது.
இத்தகைய காரணங்களால்... சூத்திரர்களை தனியாகப் பிரித்து வைத்த பிராமணர்கள் கல்யாண முறை மட்டுமல்லாது அனைத்து வகையிலும் சூத்திரர்களை கீழ்ப்படுத்தினார்கள். இப்படி செய்வதற்கு... அவர்கள் கையில் கசங்காமல் இருந்த `மனு ஸ்மிருதி' தான் ரொம்ப உதவியாக இருந்தது.
மனுமூலம் சூத்திரர்களை கெடுபிடி செய்த பிராமணர்கள்... இந்தக் கொடுமைக்கும் அதிகமான கொடுமைகளை இன்னொரு பிரிவினருக்குச் செய்தார்கள்.
யாருக்கு க்ஷத்திரியர்களுக்கா...? வைஸியர்களுக்கா...? இல்லை, இல்லை சண்டாளர்களுக்கு.
சண்டாளர்களா? யாரவர்கள்?
மனு கூற்றுப்படி `சண்டாளர்கள்' யார் என்பதை என் எழுத்தில் என்னால் கூற முடியவில்லை. என்னிடம் மகாத்மா காந்தி கூறியதை அப்படியே உங்களுக்குத் தருகிறேன்.
 

பகுதி - 9
யார் அந்த சண்டாளர்கள்
துரோகம் செய்தவனை கொலை பாதகனை, பத்தினிகளை வேட்டையாடுபவனைதான் பொதுவாக சண்டாளன் என்று சாடுவோம்.
ஆனால், மநு யாரைச் சொல்கிறது தெரியுமா? சூத்திரர்களுக்கு கீழ்பட்டவர்கள். எல்லா விதத்திலும் ஒடுக்கப்பட வேண்டியவர்கள். வர்ணாஸ்ரம பேதத்தின் கடைசி கூட்டத்தினர் இப்படியாக அருவருப்புடன் வர்ணிக்கப்படும் தலித்துகளைத்தான் மநு தனது அகராதியில் பஞ்சமர்கள் என்று சண்டாளர்கள் என்றும் குறிப்பிட்டார்.
ஏன் அவர்களைச் சண்டாளர்கள் என குறிப்பிடவேண்டும்? அவர்கள் அப்படி என்ன பாவம் செய்தார்கள்?
இதற்கான பதிலைத்தான் தானே எழுதிட முன் வரவில்லை. அண்ணல் காந்தியடிகள் எனக்கு உரைத்த பதிலை அப்படியே உங்களுக்குத் தருகிறேன் என குறிப்பிட்டேன்.
முதலில் காந்தியாரை நான் சந்தித்த சந்தர்ப்பம் பற்றி விரிவாகச் சொல்லுகிறேன்.
இந்திய நேரத்தின் விடுதலைக்கு முந்தைய காலம். சுதந்திர போராட்டத்தை விடவும் காந்தியடிகள் சமூக சீர்திருத்த போராட்டத்தில்தான் அதிகம் ஈ டுபட்டிருந்தார். அந்த வகையில் எங்கள் ஊரான கும்பகோணத்திற்கு தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்துக்காக காந்தி பலதடவை வந்தார்.
அப்படி ஒரு தடவை வந்தபோது ஊரிலுள்ள நான் உட்பட சில பிராமண இளைஞர்கள் ஒன்று கூடினோம். காந்தி சனாதன தர்மத்தை சாய்க்க வருகிறார். அவரை நாம் எதிர்க்கவேண்டும். அவரது பிரச்சாரத்தை முறியடிக்கவேண்டும் என திட்டம் தீட்டப்பட்டது.
உடனடியாக அந்த கூட்டத்தின் தீர்மானங்கள் செயலாக்க வடிவம் பெறத் தொடங்கின. அதில் முதல் திட்டம்தான் முதன்மையான . காந்தியடிகளுக்கு கருப்புக் கொடி காட்டுவது தான்.
திட்டப்படி காந்தியடிகள் கும்பகோணம் நகருக்கு வந்தபோது, நானும் சில சனாதன இளைஞர்களும் ஒன்று சேர்ந்து கருப்புக்கொடிகளைப் பிடித்துக்கொண்டோம்.
தீண்டாமை ஒழிப்பில் ஈ டுபடும் காந்தியாரே திரும்பிப் போங்கள். சனாதன வர்ணாஸ்ரமத்தை எதிர்க்காதீர்கள் என்று நாங்கள் பல முழக்கங்களை போட்டோம்.
காந்தி மேடைக்கு வந்துவிட்டார். அவரது பேச்சைக் கேட்க நிறைய பேர் கூடியிருக்கிறார்கள். நாங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக முழக்கங்களை எழுப்பி கருப்புக் கொடிகளை உயர்த்திக் காட்டினோம்.
அப்போதைய கும்பகோணம் காங்கிரஸ் தலைவர் பந்தலு அய்யர்என நினைக்கின்றேன். காந்தி பந்துலு அய்யரை தன் அருகே அழைத்தார். என்ன விவகாரம்? என கேட்டார். அய்யரும் எங்களின் எதிர்ப்புணர்வை சுட்டிக்காட்டி, 'உங்களை தீண்டாமைக்கு எதிராக பேச வேண்டாம் என்கிறார்கள். கொஞ்ச நேரம் போராடிவிட்டு போய்விடுவார்கள். நீங்கள் பேசுங்கள் என காந்தியடிகளிடம் தெரிவித்தார். ஆனால், காந்தி அவ்வாறு எங்களை அலட்சியப் படுத்தவில்லை.
எங்களை நோக்கி கையசைத்து கூப்பிட்டார். போனோம். முன்வரிசையில் நான்தான் இருந்தேன் Why are you demonitpte young men? என கேட்டார்
நாங்கள் போராட்டம் பற்றி சொன்னோம். அதற்குப் பிறகு காந்தி முதலில் எங்களிடம் பதிலளிக்க ஆரம்பித்தார்.
நான் தீண்டாமை முற்றாகவேண்டாம் என்கிறேன். பஞ்சமர்கள் என பட்டம் கட்டி அவர்களை கொடுமைபடுத்துவதை விட்டுவிடுங்கள். அவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் இவ்வுலகில் வாழ உரிமை உண்டு. அவர்களை தீண்டத் தகாதவர்கள் என ஒதுக்கிவைக்காதீர்கள். அவர்களையும் பொது இடங்களில் அனுமதியுங்கள். கோயில்களில் நுழைய விடுங்கள் என பிரச்சாரம் செய்யவந்தேன்.
இதையெல்லாம் வர்ணாஸ்ரமம் பேசும் நீங்கள் எதிர்க்கிறீர்கள். நீங்கள் மநு ஸ்மிருதி படித்துள்ளீர்களா? மநுவில் பஞ்சமர்களை சண்டாளர்கள் என அபாண்ட வார்த்தையால் குறிப்பிட்டுள்ளார்கள். ஏன் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்கள்.
அந்த காலத்தில் பிராமணர்கள் சூத்திரர்களை தங்களது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அதாவது, தாங்கள் இட்ட கட்டளைகளை சிரமேற்கொண்டு செய்து முடிக்கக்கூடிய அளவுக்கு சூத்திரர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். இத்தகைய காலகட்டத்தில் பிராமண சமூகத்துப் பெண்கள் சிலருக்கு சூத்திரர்கள் மீது பரிதாபம் , அனுதாபம் ஏன் ப்ரியம் ஏற்பட்டது.
தனது வீட்டிலுள்ள பிராணர்களுக்கு தெரியாமல் அப்பெண்கள் சூத்திரர்களுடன் நட்பு பாராட்டினார்கள். உறவு கொண்டாடினார்கள். ஏன்? கல்யாணம் கூட பண்ணிக் கொண்டார்கள். சூத்திரர்களை கடுமையாக நடத்திவந்த பிராமணர்கள் தங்கள் வீட்டு பெண்களில் சிலரே அவர்களுடன் வாழ்க்கை அமைத்துக்கொண்டதை பெரும் அவமானமாக கருதினார்கள். பிராமண ஸ்திரீகளுக்கும் சூத்திர ஆண்களுக்கும் பிறந்த சந்ததியை அதனால்தான் சண்டாளர்கள் என பெயரிட்டு ஒதுக்கிவைத்தனர்.
நாளடைவில் பிராமண ஆண்கள் சூத்திர பெண்களை கள்ளத்தனமாக உறவு கொண்டனர். இவர்களுக்கு பிறந்த சந்ததியினருக்கும் அதே சண்டாளர்கள் என்றுதான் பெயர். அதனால்தான் சண்டாளர்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து நீ என் கண்ணில்பட்டாலே தீட்டு, அபச்சாரம் என புறந்தள்ளி வைத்தார்கள் பிராமணர்கள். நான் சொல்வது வெகு காலம் முன்பு.
இப்படி வளர்ந்த சந்ததியைத்தான் இப்போது நீங்கள் தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைக்கிறீர்கள் அவர்களின் தாயார் தகப்பனார் யார் என எண்ணிப் பாருங்கள். இதெல்லாம் புஸ்தகத்தில்தான் இருக்கிறது. நானாக சொல்லவில்லை என எங்களிடம் ஆங்கிலத்தில் சரசரவென பேசிமுடித்தார் காந்தியடிகள்.
முன்வரிசையில் இருந்த நான் திரும்பிக்கொண்டேன்.

 

பகுதி - 10
என்ன?... அண்ணல் காந்தியடிகள் பல வருடங்களுக்கு முன் சண்டாளர்கள் என்றால் யார் என சொன்னதை போன அத்தியாயத்தில் கேட்டீர்களா?
நீங்கள் இப்போது கேட்டதை நான் பற்பல வருடங்களுக்கு முன்னால் காந்தி வாயால் கேட்டு லேசாக அதிர்ந்தேன்.
பிறகு... நான் மநுவுக்குள் மூழ்க ஆரம்பித்தேன். 'சண்டாளர்கள்' என குறிப்பிட்ட மநு அவர்களைப் பற்றி மேலும் என்ன சொல்லியிருக்கிறது என்பதுதான் தேடல்.
பிராமண வீட்டுப் பெண்கள் சூத்திரர்களோடு ப்பிரியப்பட்டார்கள் அல்லவா?... அதே காரணத்துக்காக அவர்கள் சமூகத்திலிருந்து தனியே பிரிக்கப்பட்டார்கள்.
சமூகம்?...
ஆமாம்... தொழில் முறையில் பிரிவு பிரிவுகளாக வாழ்ந்த மக்களை பிராமணர்கள் பார்த்தார்கள். 'நாளைய சந்ததியில் இவர்கள் தொழில் மாறிவிட்டால் என்ன சொல்லி அழைப்பது'-சிந்தித்தார்கள். a stable society அதாவது நிலையான சமூகக் கட்டுமான அமைப்பு வேண்டுமென்றால் அது சாதியாக பிரிக்கப்பட்டால்தான் உறுதியுடன் இருக்கும் என்பது பிராமணர்களின் கணிப்பு. அதற்காக?
பிறப்பின் அடிப்படையில் ஜாதியை வளர்த்தார்கள். சூத்திரனுக்கு பிறந்தவன் நாளை தொழில் மாறினாலும் சூத்திரன்தான். வைசியனுக்கு பிறந்தவன் பிறகு வணிகத்தை மறந்தாலும் அவன் வைசியன்தான். க்ஷத்திரியனுக்கு பிறந்தவன் பின்னாளில் ராஜ்யமின்றி நடுத்தெருவில் நின்றாலும் அவன் க்ஷத்திரியன்தான்.
இதுதான் அவர்கள் வகுத்த stable society. மறுபடியும் மநுவுக்குள் செல்வோம்.
சாதிவிட்டு சாதி மாறிய காதல்கள் பிராமணஸ்திரிகளுக்கும், சூத்ர புத்ரர்களுக்கும் மட்டுமல்ல
க்ஷத்திரிய ஸ்த்ரிகள்-சூத்ர புத்ரர்கள்
வைசிய ஸ்திரிகள்-சூத்ர புத்ரர்கள்
மேலும்...
சூத்ர ஸ்திரிகள்-பிராமண, க்ஷத்திரிய, வைஸிய புத்ரர்கள்.
இப்படி காதல்தேவன் கட்டுகளை உடைத்து கல்யாணங்களை கள்ளத்தனமாக பண்ணிக் கொண்டிருந்தான்.
காதல் தேவனும், காமதேனும் கூட்டணி வைத்துஇஷ்டத்துக்கு திருவிளையாடல் நடத்திக் கொண்டிருந்தால் மநு நினைத்த stable society அமையுமா? அமையாதே.
இதுவும் தெரிந்திருந்தது மநுவுக்கு. அதனால்தான் இந்த பிரச்சினைக்காக மாற்றுச் சட்டமும் இயற்றியிருக்கிறார்.
என்ன மாற்றுச் சட்டம்?
முறைகேடான சாஸ்திரங்களை சாகடிக்கக்கூடிய வகையில் இதுபோல கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு இரண்டு அளவுகோல் வைத்துப் பார்த்தார். மநு ஒன்று.. அனுலோம சங்கரம்... இரண்டு... ப்ரதிலோம சங்கரம் அனுலோம... பிரதிலோம என்றால் என்ன என தெரிந்து கொள்வதற்கு முன் 'சங்கரம்' என்பதற்கு இந்த இடத்தில் என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.
முறைகேடான.. சபிக்கப் படக்கூடிய உறவுகள் உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் 'சங்கரம்' என்பதற்கு இந்த இடத்தில் என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.
முறைகேடான... சபிக்கப்படக்கூடிய உறவுகள் உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் 'சங்கரம்'.
சரி அனுலோம சங்கரம் என்றால்? இந்த உறவில்.. ஆண் மேல்ஜாதிக்காரனாக இருந்தால், இதற்கு பெயர் அனுலோம சங்கரம்.
ஆனால், இவர்களை மநு சண்டாளர்களாக பார்ப்பதில்லை. ஏனென்றால் மேல் ஜாதி ஆண் அல்லவா? கீழ் ஜாதிப்பெண்ணை எடுத்துக் கொண்டிருக்கிறான்.
நம் இனத்து ஆண்... பிற இன பெண்களை பார்ப்பது, பறிப்பது, நுகர்வது, உறவுகள், உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் பொதுவாய் 'சங்கரம்'.
இக்கட்டுரையின் முற்பகுதியிலேயே சொன்னது போல எல்லா ஜாதிக் காரர்களுக்கும் அந்த ப்ரியம் பொதுவானதாக இருந்தது.
இந்த சம்மந்தத்தில் ஆண் மேல்ஜாதிக் காரனாகவும் பெண் கீழ்ஜாதிக்காரியாகவும் இருந்தால் இதற்கு பெயர் அனுலோம 'சங்கரம்'.
உலகத்துக்கே அமைதியைத் தருவது பெண்களின் அழகுதான்... என்றது வேதம். மநுவோ... கீழ்ஜாதிப் பெண்கள் மேல் ஜாதி ஆண்களைக் கவர்ந்தபோது மட்டும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. என்ன செய்தாலும் அது பாபம் அல்ல என்கிறது மநு.
இவர்களை அடித்துத் துரத்தி கொடுமைகள் செய்யாமல் தங்கள் உடனேயே தங்க வைத்துக் கொள்கிறது மநு சாஸ்திரம்.
அடுத்து சொல்லப்போகும் 'ப்ரதிலோம சங்கரம்' பற்றி நீங்கள் யூகித்திருக்கலாம். அதாவது....
மேல்ஜாதிப் பெண்களை கீழ்ஜாதி ஆண்கள் கவர்ந்தது, பறித்து நுகர்ந்து சென்றால் மநுவின் பார்வையில் இது பிரதிலோம சங்கரம்.
அடேய்.. அதெப்படி நம் இனத்து பெண்ணை ஒரு கீழ்சாதிப் பயல் கவர்ந்து செல்லலாம்?... இவளுக்கு எங்கே போயிற்று புத்தி? ஊரைவிட்டே பகிஷ்காரம் பண்ணுங்கள் நாம் வாழும் தெருவில் அவர்களின் பாபத்தடங்கள் படக்கூடாது அவர்களின் சுவாசக்காற்று நமது தெருக்காற்றை உரசக்கூடாது.
அவர்களும், அவர்களைத் தொடர்ந்துவரும் சந்ததிகள் அத்தனைபேரும் சண்டாளர்கள்தான் சட்டம் இயற்றி தண்டனை விதித்தது மநு.
இதன் காரணமாக பிரதிலோம சங்கர கூட்டம் ஊரைவிட்டு விரட்டப்பட்டது. இன்று வரை அவர்கள் ஊரோரம் குடியிருக்கும் காரணம் புரிகிறதா?
ஆனால்... 'அனுலோம சங்கர' கூட்டத்துக்கு ஊரிலேயே இடம் கொடுத்து தேர் ஓட்டுங்கள் என ஆணையிட்டது மநு மநுவின் 'சண்டாளன்' என்ற பதத்துக்கு... சமஸ்கிருத மொழியியல் பேரறிஞரான பாணினி கூட அர்த்தம் தேடுகிறேன் எனச் சொல்லியிருக்கிறார்.
நாம் மேலும் வரலாற்றைத் தேடுவோம்
 

StumbleUpon.com Read more...

பிராமணர்கள் தமிழர்களா?-பிண்ணூடடம்-2

படிக்கிறதுக்கான வேலையை பார்ப்பனர்கள் பார்த்துக்கொண்டே, நாங்கள் படித்துவிடாமலிருப்பதற்கான வேலையையும் செய்துவந்திருக்கிறார்கள். அதன் பொருட்டே 'மநுஸ்மிருதி' நாலாஞ்சாதியான என் மூதாதையர்களின் மீது ஏவப்பட்டது. இதில் மநு பாப்பானா இல்லையா என்பதல்ல கேள்வி. அது பார்ப்பனர்களால் உயர்த்திப்பிடிக்கப்பட்டதா இல்லையா என்பதுதான் கேள்வி.

ஆம் என்றால் குற்றத்தை ஒப்புக்கொள். இல்லையென்றால் மநுஸ்மிருதியை கொளுத்த என்னுடன் நீவரத்தயாரா என்பதையும் தெரிவிக்கவேண்டும்.

கஞ்சிக்கு வழியில்லாவிடாலும் பாப்பான் வேதம் தான் படிக்கவேண்டும், என்னோடு வந்து உடலுழைப்பு செலுத்தமட்டும் முடியாது. காகாசு பெறாத வேதத்த படிச்சி அத வித்து தின்னுகிட்டு கொழுத்துக்கெடந்தான். ஆனால், கஞ்சிக்கில்லாத பாப்பானுக்கு மட்டுமில்லாமல் அவன் குடும்பத்துக்கே சோறுபோட்டவன் யாரு? தன் குடும்பத்தோட அடிமைப்படுத்தப்பட்டுக் கிடந்தாலும் உழைப்பை விற்கத்தெரியாத, எம்பாட்டந்தானே?

எங்கள் கல்விக்கு வேட்டுவைத்துவிட்டு தான் மட்டும் ஏதோ பயின்று விட்டதாக சொல்லிக்கொண்ட பாப்பான், அந்த 'உயர் பதவி'யிலிருந்து கொண்டு என்னத்த பெருசா கிழிச்சான், அவனவன், அவனவன் தொழில செய்யிறானா, அவனவன் வர்ணக்கட்டுக்குள் இருக்கிறானான்னு வேவுபாத்து, மீறுபவனை மன்னனுக்கு போட்டுக்குடுக்குற வேலையத்தான் செஞ்சான். இதுக்குத்தான் அவன் படித்தானா?

நான் உழைத்துக் கொட்டுவதை கைகூசாமல் வாங்கிக்கொண்டு வாய்கூசாமல் ஏப்பம்விட்டு அடுத்தநாள் அதை எந்தலையிலேயே ஏத்திவுடுவ. அது என் தலையிலிருந்து ஓட்டைவழியே முகத்தில் வழிந்தாலும் துடைத்துவிட்டுக்கொண்டு, அதே கையால (எனக்கு தண்ணியும் தான் நீ தரமாட்ட) நீயாபாத்து போடுறத சாப்பிடவேண்டும். இங்கே வெறும் வார்த்தையில் கூட உன்னால் உச்சரிக்கமுடியாமல் இருக்கிற '***' (அதான் *என்று நான் மேலே எழுதியிருந்ததை நீ மொழிபெயர்த்திருந்தியே, அது) அத நான் சத்தம் போடாம அனுபவிக்கனுமா?.

"அதெல்லாம் அந்தக்காலன்டா அம்பி, இப்பயாரு சாதிபாக்குறா?"ன்ற அம்பிக்கு ஒரு தகவல் சொல்லிக்கிறேன். இந்த குஜராத்ன்னு ஒரு மாநிலம் இருக்குது. அங்கே மோடியின்னு ஒருத்தன் முதல்வரா இருக்குறான். அவன் என்னா சொல்றான்னா, ****என்பது பகவானை சந்தோஷப்படுதுற காரியம், காலங்காலமா நீங்கல்லாம் பாகவானை சந்தோஷப்படுத்துறீங்க. அதன் மூலம் நாங்கள் உள்பட மத்த எல்லாரையும் சந்தோஷப்படுதுறீங்க தெரியுமோ'ன்னு அங்குள்ள எம்மக்களப்பாத்து உருகியிருக்குறான். இதுக்கு என்ன சொல்றீங்க.

அதென்ன, குஜராத்துக்கெல்லம் நான் என்ன சொல்லமுடியும்?ன்னு நீ சொல்லமுடியாதே. அதத்தானே இந்தியாவுல இருக்குற ஒரேயொரு 'இந்துராச்சியம்'முன்னு சொல்றானுங்கோ.நீயும் ஒரு இந்துன்னா இந்துராச்சியத்துலயிருக்குற இந்த கேவலத்துக்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

பிகு: நான் பிற‌ப்பால் ஒரு இந்துதான். நான் என்ன‌ செய்யற‌து, அது எந்தப்பில்லை, இத‌ற்காக‌ இன்னொரு முறையெல்லாம் நான் பிற‌ந்து பார்க்க‌முடியாது, அதுக்காக ஒம்மூடத்தனங்களையும் வேதங்களையும் ஏத்துக்கவும் முடியாது. நாங்க‌ ச‌த்திய‌மா பொற‌க்கும்போது இந்துதான். ஆனா இப்ப‌த்தான் தெரிய‌ல‌. நீயே சொல்லு நாங்க‌ல்லாம் இந்துவா இல்ல‌யான்னு. ஒனக்குத் தெரியலன்னா, இதுக்குன்னே ஒருத்தன் முட்டகண்ண உருட்டிகிட்டு வெட்டியா கெடக்குறான். அவனுக்கு ஒரு குவாட்டர வாங்கி ஊத்திவுடு சொல்லுவான். அட‌ நாங்க‌ல்லாம் ம‌னுச‌ந்தான்னே உம்பார்ப்ப‌னிய‌ம் ஒத்துக்க‌ல்ல‌, இதுல இந்துவாவ‌து வெங்காய‌மாவ‌து.

ஏக‌லைவ‌ன்.
 

StumbleUpon.com Read more...

பார்பணர்கள் தமிழர்களா-பிண்ணூட்டம்-1

பார்ப்பனீயம் என்றாலே திரிபுவாதம்தான். பார்ப்பனீயம் என்ற‌ பெயர் சொன்னாலே தமிழ்மக்கள் காறி உமிழ்ந்த காலமும் இங்கே இருந்தது. வேண்டுமானால் உமது முன்னோர்கள் யாராவது இருந்தால் கேட்டுப்பாருங்கள்.

சாதாரன மக்களுக்குள் வர்ண/சாதீய துவேஷத்தை விதைத்ததுதான் பாப்பனீயத்தின் முழுநேரவேலை. வேதம், மநு, கோயில் என்பதெல்லாம் அதனுடைய அடுத்தடுத்த யுக்திகளாக இந்த சாதிய படிநிலைகளை அப்படியே தக்கவைத்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டவைதான். இப்படியிருக்க பாப்பானை அமெரிக்கன் வந்துதான் சூழ்ச்சி செய்து பிரித்துவைத்ததாக சரடுவிடுவது எல்லாம் உங்களை இங்கே மேலும் சந்திசிரிக்க வைத்துவிடும்.

வெள்ளையன் இங்கு வருவதற்கு முன் இருந்த மன்னராட்சிக்காலத்தில், ஒவ்வொரு மன்னனுக்கும் வலதுகரமாக இருந்த அம்பிகள் (அதான் உனது முப்பாட்டன்), வெள்ளையன் கைக்கு சிறிது சிறிதாக நாடு கைமாறிய போது வெள்ளையனுக்கும் 'மாமாவேலை' பார்த்து, வெள்ளையனையும் கைக்குள் போட்டுவைத்துக் கொண்டு தொடர்ந்து சாதிய துவேஷத்தை காப்பாற்றிவந்தது தான் பார்ப்பனியம்.

அதைவிடுத்து வெள்ளையன் பார்ப்பனியத்துக்கு எதிராக செயல்பட்டது போல நீங்கள் சொல்வது திரிபுதான். வெள்ளையன் உங்களுக்கு எதிராக செயபட்டிருந்தால் சாதிய படிநிலையில் உயர்ந்த இடத்தில் உங்களை பாதுகாப்போடு தக்கவைத்துக்கொண்டதற்கு பதிலாக‌ உங்களை *** வேலையில் அல்லவா அவன் நிறுத்தியிருப்பான்.

வெள்ளையனைப் பயன்படுத்திக் கொண்டு தமது நிலையை மேலும் இறுக்கமாக கட்டமைத்துக் கொண்டு இப்போது நைசாக வெள்ளையன் மீது பழிபோடுவதை உமது அக்கிரகாரத்து அம்பிகளை வேண்டுமானால் ஏமாற்றலாம், எங்களிடம் உமது சரக்கு விலைபோகாது.

அம்பேத்கரும், பெரியாரும், ஜோதிபாபூலேவும் கொடுத்த மரண அடியிலே அரண்டு, போக்கெடம் இல்லாமல் பார்ப்பனியம் தஞ்சம் புகுந்த இடம் தான் இந்து மதம். "நாமெல்லாம் இந்து மதத்தவர்கள் இல்லை ஓய், பார்ப்பன மதம் தான் நமது மதம்" என்று சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் இதே சென்னையில் நடைபெற்ற பார்ப்பன மாநாட்டில் தீர்மானமே போட்டு பேசினான் 'பாஷ்யம் அய்யங்கார்' என்பவன்.

சும்மா எப்ப‌ப்பாத்தாலும் முசுலீமைக் கேப்பியா?, கிறித்துவ‌னைக் கேப்பியா?ன்னு வெத்து ச‌வ‌டால் அடிப்பது இன்று பார்ப்ப‌ன‌ர்களைத் தவிர வேறுயாரும் அல்ல‌. முசுலீமைப் போய் நாங்க‌ ஏன்டா கேக்க‌னும் அந்த‌ மத‌த்திலிருப்ப‌வ‌ன் தானே கேட்க‌னும். நாங்க‌ள் இந்துவாக பிற‌ந்து தொலைத்த‌‌தால்தான் இதையெல்லாம் கேட்க‌வேண்டியிருக்கிற‌து.

இனிமேலும் இந்த‌ ப‌ஜ‌னையெல்லாம் த‌விர்த்து விவாதத்தை ந‌ட‌த்துவ‌து உம‌க்கு ந‌ல்ல‌து.

ஏக‌லைவ‌ன்.
 

StumbleUpon.com Read more...

டெலிபோன் ஒட்டு கேட்பு பிரச்சினை

டெலிபோன் ஒட்டு கேட்பு பிரச்சினை; அ.தி.மு.க. வெளிநடப்புசட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் அ.தி.மு.க. கொறடா செங் கோட்டையன் எழுந்து நேற்று ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். அதற்கு அனுமதி வழங்கவில்லை.

இன்றும் ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்து இருக்கிறோம். அதுபற்றி பேச அனு மதிக்க வேண்டும் என்றார்.

அதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன் இந்த பிரச்சினைக்கு முதல்-அமைச்சர் நேற்று பதில் அளித்து விட்டார். விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

அப்போது அ.தி.மு.க.வினர் ஆதாரம் இருக்கிறது என்று குரல் கொடுத்தனர்.

உடனே சபாநாயகர் ஆதாரம் இருந்தால் விசா ரணை கமிஷனிடம் கொடுங்கள் என்றார்.

இதையடுத்து வெளிநடப்பு செய்வதாக செங்கோட்டையன் கூறினார். உடனே அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையை விட்டு வெளியே வந்த பிறகு செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவது பற்றி நேற்று ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந் தோம். ஆனால் அதற்கு அனு மதி மறுத்து வெளியேற்றி விட்டார்கள்.

இன்று முதல்-அமைச்சரின் உதவியாளர் ஒரு அதி காரியுடன் பேசிய டெல்லி போன் பேச்சு தொடர்பாக ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வர கேட்டோம்.

இந்த செய்தி தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் வெளிவந்து இருக்கிறது. சி.டி. ஆதாரம் எங்களிடம் உள்ளது. ஆனால் எங்களை பேச அனுமதிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து இருக்கி றோம் என்றார்.
 

StumbleUpon.com Read more...

பெரியார் முகமூடிடியில் பேய்கள்

தந்தை பெரியார் அவர்களின் படத்தைப் போட்டுக் கொண்டு முஸ்லீம் தீவிராவாத கும்பல் இப்பொழுது களத்தில் இறங்கியுள்ளது.

ஏகத்துவம் என்ற பெயரில் ஜிகாதிகள் நடத்திவரும் கீழ்தரமான வேலைகளுக்கு பெரியாரின் பெயரையும் களங்கம் கற்பிக்கிறார்கள்.

பெரியார் தன் பிரச்சாரங்களில் முஸ்லீமாக மாறுங்கள் என்று சொன்னதற்கு ஒரே காரணம் அவர்கள் தங்கள் குரான் ஹதீஷ்படி நடக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில் தான்.

ஆனால் இன்றைய நிலை அப்படி இல்லை.குரானையும்,சுன்னாவையும் பின்பற்றாத ஒருவனும் முஸ்லீம் இல்லை என்று இந்த ஏகத்துவவாதிகள் என்ற பெயரை வைத்துள்ள நவீன தீவிரவாதிகள் இறங்கி உள்ளனர்.

சரி அது என்ன குரான்,மற்றும் சுன்னா என்று கேட்டால், அதில் உள்ளவை வன்முறைகளும்,கற்பழிப்புகளும் தான்.எப்படி இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாதவர்களை கொல்லுவது.அடிமைப்பெண்களிடம் உறவு கொள்ளும் விதம்,நான்கு மனைவிகள் வரை வைத்துக்கொள்ளுவது எப்படி,பெண்கள் எப்படி தங்களை முழுமையாக மூடி விருப்ப அடிமைகளாக வேண்டும்,தங்கள் மனைவிகளை அடிப்பது எப்படி,தங்கள் மதத்தை விட்டு வெளியே போனவர்களை எப்படி கொல்ல வேண்டும் இதுவே உள்ளது.வேறு நல்ல விஷயங்களே இல்லையா? என்று கேட்டால் அவைகள் ஒன்றும் அவர்களுடையது இல்லை.பைபிளில் இருந்து காப்பி அடித்தவை மட்டிமே அந்த நல்ல விஷயங்களாக இருக்க முடியும்.

 

 

பெரியார் பேசுகிறார் இஸ்லாமைப் பற்றி


//முஸ்லிமை எடுத்துக்கொண்டால், பெண்களை உலகத்தைக் கூடப் பார்க்க விட மாட்டேன் என்கிறானே! முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதை விடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா?//

 

இப்படி பெரியாரே எழுதியுள்ள போது எந்த முகத்தை வைத்து அவர்கள் கட்டுரைகளை பெரியாரின் போட்டோவை போட்டு கடைவிரிக்கிறீர்கள்.கொஞ்சமாவதும் வெட்கம் இல்லையா.பெரியாரின்  பெயருக்கு களங்கள் விளைவிக்காதீர்கள் .

இயேசு விபச்சாரர்களின் சந்ததியா? ஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள். பைபிளின் குளறுபடி.

இயேசுவின் வம்சாவழியும்(?) பைபிளின் குளறுபடியும்! (பாகம் - 2)
படிக்க அழுத்தவும்
http://egathuvam.blogspot.com//


 

StumbleUpon.com Read more...

மேல் சாதி இந்துக்களால் மின்வேலியில் மிருகங்களை போல் அடைக்கப்பட்டுள்ள தலித்கள்(போட்டோவுடன்)

— Photo: K. Ganesan

GREAT DIVIDE: A 600-metre-long wall separates Dalits from caste Hindus at Uthapuram village in Madurai district.

MADURAI: At Uthapuram village near Ezhumalai in Madurai district, caste continues to guide social relations.

There are about 2,000 families of Dalits, who outnumber every other caste, but they still face discrimination.

With a long history of caste animosity against Dalits behind them, caste Hindus of the village have electrified a 600-metre-long wall, which passes through pockets that were meant to be for common use by people of all castes.

The wall is intended to block common entry points, thereby preventing the castes from mingling. It has been there since 1990, but electricity is being passed in the night using iron rods for the last 10 days.

The electrification is meant to prevent the Dalits from breaking into the caste Hindu areas during the night.

The caste Hindus have also thwarted efforts by the Dalits to build a bus shelter. They recently raised the height of a parapet near the bus stop to prevent Dalits from sitting in front of them.

Dalits in Uthapuram village do not visit the teashops owned by caste Hindus. They are not allowed to enter streets dominated by a particular upper caste.

They are denied space in village squares and community halls and access to burial grounds.

Asked about the erection of the wall, a former panchayat president, Sena Vana Oyyanan, said: "We (kudiyanavargal) do not go in for anything. It is the Dalits, their militancy and aggressiveness, which has further widened the gap between castes and increased the frustration."

Uthapuram village panchayat president Marimuthu (alias) Thonthi, a Dalit, claims even economic advancement has not accorded them social status. During events like temple car festival, Dalits are not allowed to hold the ceremonial ropes. Access to common property resources is also being denied.
 
 

StumbleUpon.com Read more...

சுருட்டு சாமியார், காதலி பெண் டாக்டர் தற்கொலை!

சுருட்டு சாமியார், காதலி பெண் டாக்டர் தற்கொலை!

Palanisamy
சென்னை: சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவரும், சுருட்டு சாமியார் என்றழைக்கப்பட்டவருமான பழனிச்சாமியும், அவர் 3வது கல்யாணம் செய்து கொண்ட பெண் டாக்டர் திவ்யாவும் இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டனர்.

சென்னை மடிப்பாக்கம் ராம் நகர் பகுதியில் ஆசிரமம் வைத்திருந்தவர் பழனிச்சாமி. இவர் சுருட்டு பிடித்தும், மது அருந்தியும் குறி சொல்லியதால் சுருட்டு சாமியார் என்று அழைக்கப்பட்டார்.

இவருக்கு ஏற்கனவே இரு மனைவிகள் உள்ளனர். இந் நிலையில் தன்னிடம் குறி கேட்க வந்த பெண் ஹோமியோபதி டாக்டர் திவ்யாவுடன், பழனிச்சாமிக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் திடீரென கல்யாணம் செய்து கொண்டனர். இந்தக் கல்யாணத்திற்கு 2வது மனைவி மணிமேகலை ஆதரவாக இருந்தார்.

மேலும் கல்யாணத்திற்குப் பிறகு திவ்யா, பழனிச்சாமியின் ஆசிரமத்திற்கு வந்து தங்கினார். திவ்யாவின் குடும்பத்தினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து முகப்பேர் காவல் நிலையத்தில் திவ்யாவின் தந்தை புகார் கொடுத்தார். அதில் பழனிச்சாமி தனது மகளை மயக்கி கடத்திச் சென்று விட்டதாக கூறியிருந்தார்.

இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந் நிலையில் பழனிச்சாமியும், திவ்யாவும் தலைமறைவாகி விட்டனர். போலீஸார் அவர்களைத் தேடி வந்தனர். ஆனால் டெல்லி சென்று விட்ட இருவரும் பின்னர் மீண்டும் சென்னை திரும்பினர். திவ்யா மட்டும் சென்னைக்கு திரும்ப, சென்னைக்குள் வராமல் வெளியூருக்குப் போய் விட்டார் சாமியார் பழனிச்சாமி.

இதையடுத்து அவரை வலை வீசித் தேடிய போலீஸார் காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிரப்பாக்கத்தில் வைத்து கைது செய்து சென்னை கொண்டு வந்தனர். பிறகு புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

ஆனால் சாமியார் வரும் வரை எங்கும் போக மாட்டேன் என்று கூறிய திவ்யா, ஆசிரமத்தில் தங்கியிருந்து பூஜைகள் செய்து வந்தார்.

இந் நிலையில் திவ்யாவுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரமத்திலிருந்து வெளியேறி விடுதியில் தங்கிக் கொள்வதாக திவ்யா தெரிவித்தார். அதன்படி திவ்யா ஆசிரமத்திலிருந்து வெளியேறினர்.

இந் நிலையில் கடந்த மாதம் பழனிச்சாமி ஜாமீனில் விடுதலையானார். கோர்ட் நிபந்தனையின்படி வெளி மாநிலம் ஒன்றில் தங்கியிருந்தார். இதையடுத்து அவருடன் மீண்டும் திவ்யா இணைந்தார்.

சில நாட்களுக்கு முன்பு இருவரும் ஜோடியாக மடிப்பாக்கம் வந்தனர். அங்கு நள்ளிரவில் பூஜைகள் செய்தனர். இதை அப்பகுதி மக்கள் வீடியோவில் படம் எடுத்தனர்.

இந் நிலையில் சிட்லப்பாக்கத்தில் உள்ள மணிமேகலையின் வீட்டுக்கு பழனிச்சாமியும், திவ்யாவும் சென்று தங்கினர்.

இன்று காலை இருவரும் வீட்டில் பிணமாக கிடந்தனர்.பள்ளிக்கரணை போலீஸார் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருவரும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மணிமேகலையிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனிச்சாமி மற்றும் திவ்யாவின் திடீர் தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5656.html

StumbleUpon.com Read more...

உடல் முழுவதும் தேனீ-இப்படியும் சாதிக்கிறார்கள்http://epaper.dinamalar.com

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP