சமீபத்திய பதிவுகள்

விடுதலைப்புலிகளின் சர்வதேச நெட்வொர்க்‍-புலிகள் அறிவிப்பு

>> Saturday, March 21, 2009

உலகு எங்கும் வியாபித்து தமிழ் மக்களின் உள்ளத்து உணர்வாக இருப்பதே எமது விடுதலை அமைப்பு என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி தெரிவித்துள்ளார்.
மக்கள் மத்தியில் நிகழ்கால நிலைமைகள் தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய கலந்துரையாடலின் போது சி.இளம்பருதி மேலும் தெரிவித்துள்ளதாவது:

எதிரியின் பொருண்மியத் தடை, மருந்துத் தடை, எறிகணைத் தாக்குதல், வான் தாக்குதல் மத்தியிலும் சளைக்காது முகம் கொடுத்து நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கி நகர்கின்றோம்.

எல்லாவற்றையும் இழந்த நிலையிலும் உறுதியை இழக்காமல் நம்பிக்கையுடன் மக்கள் இருக்கின்றனர். நிலங்களை நாம் இழந்தது நெருக்கடியை ஏற்படுத்துகின்றதுதான். இதனை எதிரி தனது பெருவெற்றியாக பரப்புரை செய்கின்றான்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவும் அண்மைய நாட்களிலும் சிங்களப் படைகளின் முன்னணிப் படைகள் பாரிய சிதைவுகளை சந்தித்திருக்கின்றன. பாரிய உயிரழிவுகளை சந்தித்திருக்கின்றன.

அவர்களின் முன்னணிப் படைகள் சிதைவடைந்து கொண்டிருக்கின்றன. இதனைச் சிங்களப் படைத்தரப்பு எதிர்பார்க்கவில்லை. அவர்களின் நிகழ்ச்சி நிரலில் எதுவும் நடந்தேறவும் இல்லை. இனி நடக்கப்போவதும் இல்லை.

0மேலதிக செய்திகளுக்கு கிளிக் செய்யுங்கள்

StumbleUpon.com Read more...

Breaking News:களமுனையில் நேற்றைய மோதல்களில் 100-க்கும் அதிகமான படையினர் பலி!

வன்னியில் சிறீலங்காப் படையினரின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கில் படையினர் காயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் மேற்கோள்காட்டி பதிவு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை புதுக்குடியிருப்பு நகரைச் சுற்றிய பகுதிகளிலும், இரணைப்பாலை முன்னணி நிலைகளிலும், கடற்கரைப் பகுதி ஒன்றிலும் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த மோதல்களில் 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மோதல்களின் பின்னர் விடுதலைப் புலிகள் நடதிய தேடுதல் நடவடிக்கையின் போது படையினரது உடலங்களும் படைக்கருவிகளும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.


மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...

ப்லீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதை ஒரு முறை படியுங்களேன்.

 இணையதளத்தில் உலாவி வரும்பொழுது இந்த கட்டுரை காண நேர்ந்தது.என்னை மிகவும் கவந்தபடியினால் உங்களுக்காகவும் இதை இங்கு பதிவு செய்துள்ளேன்.இதை எழுதிய நண்பர் இரண்டு இணைய மலர்களை நடத்திவருகிறார்.
 
 

வானாந்திர‌ வ‌ழியாய் ச‌மாதான‌த்தைத் தேடி

பிரியமானவர்களே..,

கடவுளின் பெயரால் உங்களை வாழ்த்துகிறேன், இங்கே என்னைப் பற்றிய ஒரு சிறு அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

நான் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவன். சிறு வயதில் ஜெபிப்பதிலும் வேதம் வாசிப்பதிலும் பெற்றோரின் வழிகாட்டுதல் படி நடந்தவன், நான் பிறந்து 16 ஆம் நாள் முதற்கொண்டு 5 வயது வரை மிகவும் பெலவீணம்(5ஆவது வயதில் என் மருத்துவப் பதிவில் உள்ள என் எடை 8 கிலோ மட்டுமே) உள்ளவனாய் இருந்தேன், மேலும் எனக்கு இல்லாத நோயின் அறிகுறியே இல்லை என்று இப்போதும் என் உறவினர்கள் சொல்லக் கேட்பதுண்டு காசநோய் தொடங்கி காமாலை, ஆஸ்துமா, மாதம் ஒரு முறை கடும் காய்ச்சல் என மிகவும் அவதிப்பட்டேனாம், என்னுடைய 5ஆவது வயது வரை நான் மருத்துவமனை செல்லாத மாதமோ, மருந்து எடுத்துக் கொள்ளாத நாளோ இல்லை என்றே சொல்லி விடலாம், என் தகப்பனும் தாயும் என் படுக்கையில் வந்து மணிக்கனக்காய் ஜெபித்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது,

அப்போது ஒருமுறை எங்கள் நகருக்கு சகோதரர் DGS தினகரன் அவர்கள் வந்திருந்தார், கூட்டம் நடந்த இடத்திற்கு என் தகப்பனார் என்னை அழைத்துச் சென்றார், அங்கே அவர் விபத்திலிருந்து மீண்டு கையில் கட்டோடு தம்மிடம் வருபவர்களுக்காய் ஜெபித்துக்கொண்டிருந்தார், அப்போது எனக்காகவும் அவர் ஜெபித்தார், அப்போது ஆண்டவராகிய கிறிஸ்துவின் மூலமாக அற்புத சுகம் பெற்றுக் கொண்டேன். அன்றிலிருந்து என் உடலில் அதிசய மாற்றங்கள் நிகழ்ந்தது பல நாட்கள் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என சொன்ன மருத்துவர்கள் மருந்து தேவையில்லை என நிறுத்திவிட்டார்கள், காச நோய் அறிகுறிகள் முற்றிலும் மாறின, ஆஸ்துமா அறவே இல்லை, ஆரோக்கியமான மற்ற குழந்தைகளைப்போல் கிறிஸ்துவே என்னை அதிசயமாய் மாற்றினார்,

இப்படி கிறிஸ்துவின் மூலம் அற்புதம் பெற்றுக்கொண்ட நான் அவருக்கு உண்மையாய் வாழ்தேனா? இல்லை என்றுதான் சொல்ல‌வேண்டும், என் 15ஆவ‌து வ‌ய‌தில் பெரியார் அவ‌ர்க‌ளில் க‌ருத்துக்க‌ளால் ஈர்க்க‌ப்ப‌ட்டேன், க‌ட‌வுள் ம‌றுப்பை என் கொள்கையாக‌ ஏற்றுக்கொண்டேன். அன்றிலிருத்து ஜெப‌த்தையும் கிறிஸ்துவ‌ ந‌ம்பிக்கையையும் கேலிசெய்வேன், கிறிஸ்து சிலுவையில் மாண்டிருந்தால் தானே உயிர்த்தெழுவதற்கு? அவ‌ர் ம‌ய‌க்க‌திலிருந்திருப்பார் என‌ வாதிடுவேன்.


இப்ப‌டியாக‌ என் வ‌ழிவில‌க‌ல் ஆர‌ம்ப‌மான‌து. ஒரு வ‌ருட‌ம் க‌ழித்து க‌ண்ண‌தாச‌னின் "அர்த்த‌முள்ள‌ இந்து ம‌தம்" (இந்த புத்தகம் கீழே கண்டெடுத்தேன் இரகசியமாக ப‌ள்ளியில் படிப்பேன்) என்ற‌ புத்த‌க‌த்தைப் ப‌டிக்க‌ நேர்ந்த‌து அவைக‌ளில் சொல்ல‌ப்ப‌ட்ட‌ த‌க‌வ‌ல்க‌ள் நான் அனுதின‌ வாழ்க்கையில் சாதார‌ன‌மான‌ வ‌ழ‌க்கத்தில் இருந்த‌ ப‌ழ‌க்க‌ங்க‌ளாய் இருந்த‌ப‌டியால் அவைக‌ளின் ஆழ‌மான‌ உண்மைக‌ளை அறிந்து? ந‌ம் ப‌ண்பாட்டிற்கு க‌லாச்சார‌த்திற்கு இந்து ம‌த‌மே ச‌ரியான‌து என‌ நினைத்தேன், அந்த நினைவுகள் இந்து மத‌த்தின் மீது பற்றாக வளர்ந்தது, மற்ற மதங்கள் அது தோன்றிய பகுதிகளுக்கு வேண்டுமானால் சரியானதாக இருக்கலாம் ஆனால் நம் நாட்டிற்கு இந்து மதமே சரியானது என முடிவுக்கு வந்தேன்.


என்னுடைய நண்பர்கள் சிலர் இந்துக்கள் என்பதால் அவர்களோடு கோவில்களுக்குச் செல்லும் பழக்கம் உருவானது, அது மெல்ல மெல்ல என்னை அதன் ஆழங்களான சகுனம்பார்த்தல், ஜோதிடம், வாஸ்து ஜாககம் எனப் பரினாமம் அடைந்தது, நாளிடையில் நான் ஒரு பூரண இந்துவாக மாறிவிட்டேன், படங்களை இரகசியமாக வைத்து வழிபடுவது, சிறிய விநாயகர் சிலையை வீட்டில் மறைத்து வைத்து வழிபடுவது ந‌ண்ப‌ர்க‌ள் வீட்டில் புண்ணிய ஸ்த‌ல‌ங்க‌ளுக்குச் சென்றால் என‌க்காக‌ அர்ச்ச‌னை செய்யச் சொல்வ‌து அவ‌ர்க‌ள் த‌ரும் பிர‌சாத‌த்தை(குங்குமம், எலுமிச்சம்பழம் படங்கள்) வாங்கி வைத்துக்கொள்வ‌து, நாள் பார்ப்பது (அஸ்ட‌மி, ந‌வ‌மி, ச‌ந்திராஸ்ட‌ம‌ம், ஆகிய‌ நாட்க‌ளில் புதிய காரிய‌ம் செய்வ‌தில்லை)

க‌ல்லூரி நாட்க‌ளில் வீட்டிற்குத் தெரியாம‌ல் ஒரு ஜோதிடரிடம் சென்று என்னுடைய ஜாத‌கத்தை எழுதிக்கொண்டேன், மேலும் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, மேற்படிப்பு, அல்லது மற்ற ஏதாவது குழப்பங்கள் ஆகியவை நேரிடும் போது ஜோதிட‌ரிட‌ம் சென்று என்னுடைய‌ நேர‌ம் எப்ப‌டி என‌க் கேட்டுத் தெரிந்து அதன் அடிப்படையிலேயே முடிவுகளை எடுப்பேன்,

நான் UG இரண்டாம் ஆண்டு படிக்கும் போது எங்கள் வீட்டின் முன் பகுதியில் அரசின் வீட்டு வசதி வாரியத் திட்டம் ஒன்று செயல் படுத்தப்பட்டது, அப்போது வீட்டிற்கு முன்னால் ஒரு சாலை அமைக்கப்பட்டது வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டிற்கு முன்னால் சாலையிருந்தால் அது "முச்சந்தி" "நேர்குத்து" ஆகும். இந்துக்கள் முறைப்படி தங்கள் தீட்டான பொருட்கள், மற்றும் திருஸ்டி கழித்த பொருட்களாகிய அசுத்தங்களை முச்சந்தியிலேயே கொட்டுவார்கள், இதனால் அதற்கு நேராக வாசல் இருக்கும் நாலாவது சந்தியான வீட்டிற்குள் அந்த அசுத்தங்கள் குடியேரும் என்பதும், இதனால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு ஆகாது என்பதும், அவர்களது நம்பிக்கை இந்த (மூட‌)நம்பிக்கையை நானும் நம்பினேன்.

இதனால் நான் என்னுடைய மூத்த நண்பர் ஒருவர் வாஸ்துவில் கைதேர்ந்தவர் அவரது உதவியோடு வாஸ்துவைக் கற்றுக்கொண்டேன் அவர் ஒரு இஸ்லாமியர். நாங்கள் இருக்கும் வீட்டை வாஸ்து முறைப்படி மிக மிக கவனமாக மாற்றி அமைக்க‌த் திட்டமிட்டேன். அயலாரின் தொடர்ச்சியான பயப்படுத்தலாலும், என்னுடைய விடாத நச்சரிப்பாலும், என் தகப்பனார் நான் வடிவமைத்திருந்த திட்டப்படி வீட்டை மாற்றியமைக்க அரை மனதாக ஒப்புக்கொண்டார், தொழில் முறை வாஸ்து பார்ப்பவரின் சரிபார்புக்குப் பிறகு வீடு மாற்றியமைக்கப்பட்டு விட்டது, எனக்கு ஏதோ உலக சாதனை செய்தது போல மன நிறைவு, இனி தான் எந்த தீங்கும் எங்கள் வீட்டை அனுகாதே? ஆனால் நடந்தது என்ன? வீடு மற்றியமைக்கப்பட்ட ஆறே மாதத்தில் என் தாயார் ஆரோக்கியமாக இருக்கும் போதே நினையாத நேரத்தில் மரணம் அடைந்தார். அவர் மரணம் அவருக்கே ஒரு நிமிடத்திற்கு முன்பு வரை தெரியாது. நான் இதை நம்பவே எனக்கு ஒரு மணி நேரம் பிடித்தது. என்னுடைய் மீருதல்களுக்கு எங்கள் குடும்பம் என் தாயாரின் உயிரை விலைக் கிரையம் செலுத்த வேண்டியதாயிற்று. அப்போதாவது மனம் மாறினேனா? அதுதான் இல்லை, என் பயனம் தீவிரமானதே தவிர பாதை மாறிவிடவில்லை, ஜோதிடத்தை நாடினேன் அவர்கள் உன் ஜாதகப்படி உன் தந்தையின் உயிருக்கு வேண்டுமானால் பாதிப்பு வரலாம், உன் தாய் நீடிய ஆயுள் பெற்றவர்கள் என்றே சாதித்தனர், (சமீப காலங்களில் ஜோதிடத்தை நம்பும் என் புற மத நண்பர்களிடம் என் ஜாதகத்தை கொடுத்து ஜோதிடத்தின் முகத்திரையை கிழித்த சம்பவங்களும் அர‌ங்கேற‌யிருக்கின்றன.)

நான் PG படிக்கும் போது ஒரு முறை என் நண்பன் ஒருவரின் வழிகாட்டுதலில் ஒரு வயதான ஜோதிடரை சந்திக்க நேர்ந்தது அவர் என் ஜாதகத்தை ஆராய்ந்த போது எனக்கு கால சர்பதோஸ‌ம் (இராகு தோசம்) இருப்பதாகவும், அது ஒரு பரம்பரைச் சாபம் எனவும், அதற்கு ஒரு யாகம் செய்தால் அதை நிவர்த்தி செய்யலாம், என்று கூறினார். நானும் அதை ஏற்றுக் கொண்டு யாகம் செய்தேன். அதிகாலை வேளையில் ஒரு புகழ்பெற்ற மலை மீது யாக குண்டம் முழங்க இரண்டு புரோகிதர்கள் ஒரு ஜோதிடர் உட்பட நான்குபேர் கலந்து கொண்டோம். சுமார் மூன்று மணி நேரம் யாகம் நடந்தது, மந்திரம் சொல்லச் சொல்ல புரோகிதர் கொடுக்கும் பொருட்களை நான் தீயிலிட்டேன் பிறகு முடிவாக ஒரு பாம்பு உருவத்தை மாவினால் செய்து அதனோடு சில பொருட்களை வைத்து அதை ஒரு நீர் நிலையில் கொண்டுபோய் விட்டு விட்டு திரும்பிப் பார்க்காமல் வரச்சொன்னார்கள். நான் அப்படியே செய்தேன். பிறகு என் தலையில் தண்ணீரை ஊற்றி புதிதாக வாங்கி வைத்திருந்த உடையை உடுத்திக் கொண்டேன்.


அன்று எனக்கு நடந்தது என்னவென்றால் ஒரு பாம்பின் ஆவியை அவர்கள் என்மீது ஏவி விட்டிருகிறார்கள், ஆனால் எனக்கு இது தெரியாது. காரனம் (அது எனக்கு கிறிஸ்துவால் இரட்சிக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகே எனக்கு தெரியவந்தது, இது பற்றி பின்பு விளக்கம் தருகிறேன்.) பொதுவாக நான் இந்து மதத்தின் கோட்பாடுகளை நம்பினாலும், அவர்கள் சொல்லும் மந்திரம், செய்வினை, ஏவல், ஆகியவற்றின் மீது எனக்கு சிறிதும் நம்பிக்கையில்லை.

நாட்கள் கடந்தன ஒரு இந்துவாகவே வாழந்தேன். ஆனாலும் என்னையும் அறியாமல் ஓர் வெறுமை, சமாதானமின்மை காரணம் நான் இயல்பிலேயே மனதிடம் குறைவானவனாய் இருந்ததாலும் என்னுடைய தகப்பனாரும் சகோதரியும் என்னோடு ஒரே வீட்டில் இருந்தாலும் அவர்களின் அன்பைப் பெற முடியாமல் போனேன், காரனம் என் வழி அவர்களின் வழியிலிருந்து முற்றிலும் வேறாய் இருந்தது. மேலும் நான் இந்துவாக இருந்தாலும் என் நெருங்கிய நட்பு வட்டம் கிறிஸ்தவ வட்டமாய் இருந்தது, அவர்களோடு நேரம் செலவிடுவதை தவிர்த்தேன். காரனம் அவர்களோடு தர்க்கம் செய்வதே. அதனால் நண்ப‌ர்களின் ஆதரவையும் இழந்தேன். அலுவலக கசப்புகள் ஒரு புறம் என்னை வாட்ட இவ்வுலகில் எனக்கு அடைக்கலம் இல்லாததைப் போல உண்ர்ந்தேன். சிறு பிர‌ச்ச‌னைக‌ளையும் எதிர்கொள்ள‌ முடியாத‌ கோழையாக‌ மாறினேன்.

திருச்சந்தூர், இராமேஸ்வரம், பழநி, மதுரை, சென்னிமலை, திருச்செங்கோடு, பொள்ளாச்சி, பண்ணாரி, பாரியூர், திருநள்ளாரு, என எல்லாக் கோவில்களுக்கும் சென்று வந்தேன், ஆனாலும் என் வெறுமை மாறவில்லை, வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்பின் தரிசனம் சிறப்பானது எனக் கேள்விப்பட்டு, அதிகாலை ஒரு மனிக்கு எழுந்து அதையும் பார்த்தேன. ஆனாலும் வெறுமையும் சமாதானமின்மையும் மாறவில்லை. கார‌ன‌ம் நான் அங்கே சென்று பார்த்த‌வைக‌ள் வெறும் ம‌னித‌னின் க‌ற்ப‌னைக்கு உட்ப‌ட்ட‌ க‌ற்சிலைக‌ளாக‌வே இருந்த‌ன‌. அவைக‌ள் அழ‌காய்த்தோன்றுவ‌தாக‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ள் சொன்ன‌ போது நானும் அதை ஆமோதித்தேன் அரை ம‌ன‌தோடு, ஆனாலும் அவைக‌ளின் அழ‌கு எனக்கு ச‌மாதான‌த்தைத் த‌ர‌வில்லை.


நான் மிக‌வும் ந‌ம்பிய சகுணம் பார்ப்பது, வாஸ்து, ஜோதிட‌ம், ஜாத‌க‌ம், புண்ணிய ஸ்த‌ல‌ வ‌ழிபாடு, ஆகிய‌வைக‌ளில் உண்மையில்லை என்ப‌தை கசப்பான அனுப‌வங்கள் மூலமாக அறிந்து கொண்டேன்.


ச‌ரி யோகா க‌ற்றுக்கொள்ள‌லாம் என யோகாவும் தியான‌மும் க‌ற்றுக் கொள்ள‌ ஆர‌ம்பித்தேன். அதுவும் என் வெறுமைக்குத் தீணி போட‌முடிய‌வில்லை. தியானமும் யோகாவும் இன்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரு மருந்தாக பரவலாக அறியப்பட்டாலும் என்னைப் போன்ற சாமானியனுக்கு அதன் பயன் என்ன எனபதே அறியமுடியாமல் போனது. இதைப் படிக்கும் ம‌ருத்துவர்கள் தங்களிடம் வரும் "மன இருக்கமுள்ள நோயாளிகள் மிகவும் புத்தியுள்ள ஞானிகளா என அறிந்து யோகாவை அவர்களுக்குப் பரிந்துரையுங்கள் என்பது எனது தாழ்மையான வேண்டுகோளாக இருக்கும், காரணம் அவர்கள் என்னைப் போன்ற பேதையாக இருக்கும் பட்சத்தில் அவைகளால் பலன் ஒன்றும் ஏற்படாது என்பதற்கு நானே ஒரு சான்று.

என் தேட‌ல் என்ன‌ என்ப‌தே என‌க்கு அறிய‌முடியாத‌ ப‌ரிதாப‌ நிலைக்குத் த‌ள்ள‌ப்ப‌ட்டேன். சரி க‌டைசியாக‌ ம‌ன ந‌ல‌ ம‌ருத்துவ‌ரை பார்க்க‌லாம் என‌ முடிவு செய்தேன், ஆனால் மருந்து வெறுமையையும் சமாதானமின்மையையும் எப்ப‌டிப் போக்கும் என எண்ணி, அம்முய‌ற்சியை கைவிட்டேன், க‌டைசியாக‌ த‌ற்கொலை ம‌ட்டுமே தீர்வு என‌த் தீர்மானித்த‌ நான், நாளும் குறித்துவிட்டேன். ஏற்கென‌வே எங்கள் தாயாரை இழ‌ந்து வாடும் என் குடும்ப‌த்திற்கு மீண்டும் ஓர் இழ‌ப்பை தெரிய‌ப்ப‌டுத்த‌ வேண்டாம் என‌ எண்ணி வீட்டில் நேர்முக‌த்தேவுக்குச் செல்வ‌தாக‌க் கூறிக் கொண்டு வேறொரு திசையில் ப‌ய‌னிக்க‌லானேன், நான் தற்கொலை செய்யத் தேர்வு செய்த‌ மாநில‌ம், இது வ‌ரை ப‌ழ‌க்க‌மில்லாத வேறு ஒரு வ‌ட‌ மாநில‌ம், காரண‌ம் என் த‌க‌ப்ப‌னாருக்கும் என் ச‌கோத‌ரிக்கும் என் ம‌ரண‌ம் தெரிய‌க்கூடாது என‌ நான் நினைத்த‌துதான்,

நான் ம‌னதில் ம‌ர‌ண‌ம‌டைய‌ப் போகிறோம் என்ற‌ க‌ல‌க்க‌ம் சிறிதும் இன்றி உற‌ங்க‌லானேன், இர‌வில் ஓர் க‌ன‌வு; "வீட்டிலுள்ள வேத‌த்தின் மீது என்னை என் தாயார் மிக‌ ஆக்ரோச‌மாக‌த் த‌ள்ளி விடுவது போல்"
உடலெல்லாம் ஒரே வலி, ஊர் பெயர் தெரியாத இடத்தில் இரங்கி மனம் மாறி வீட்டிற்கு வந்து விட்டேன்,

ஒரு சில நாட்கள் சென்றன, மீண்டும் வெறுமை....

இம்முறை மன நல மருத்துவரை சந்திப்பது என முடிவு செய்தேன். கிறிஸ்துவின் சித்தத்தால் நான் சந்தித்த மன நல மருத்துவர் ஓர் கிறிஸ்தவர், அவர் நான் சொல்வதை எல்லாம் பொறுமையாகக் கேட்டு முடித்து "உனக்குத் தேவையான மருந்து இயேசுகிறிஸ்துவே நீ இன்றே அவரிடம் சரனடைந்து விடு" எனச் சொன்னார். இதைக் கேட்டதும் தாங்க முடியாத கோபத்திற்குள்ளானேன். என் பெற்றோர் உறவினர், நண்பர்கள், எல்லார் சொல்லியும் கேட்காத நான் நீங்கள் சொல்வதைக் காசுகொடுத்துக் கேட்கவேண்டுமா? என்று காட்டமாகப் பேசிவிட்டு வெளியே வந்துவிட்டேன்.

சில நாட்கள் முடிவு ஏதுமின்றி சென்றது மீண்டும் வெறுமை......


பசியில்லை, தூக்கமில்லை, எதிலும் ஈடுபாடில்லை, சமாதானமில்லாத எதையோ இழந்துவிட்டது போல ஒரு மாயை ஒரு நாள் நள்ளிரவு திடீரென ஒரு யோசனை "இயேசுவை முயற்சி செய்து பார்த்தால் என்ன?" என்று , ஆனால் யாரிடம் போய் அவரைப் பற்றித் தெரிந்து கொள்வது? தகப்பனார்....? உறவினர்கள்....? நண்பர்கள்...?


முடியாது முடியவே முடியாது..


காரணம் நான் அவர்களிடம் கேட்பதற்கு வெட்கப்பட்டேன், ஏனென்றால் நான் அவர்களிடம் கிறிஸ்துவைப் பற்றி மிகக் கேவலமாக வாதிட்டிருக்கிறேன். சரி என்ன தான் வழி? அந்த மருத்துவரிடமே கேட்டுவிடலாம், என்ற முடிவுக்கு வந்துவிட்டேன், நான் திரும்பி வந்ததை பார்த்து சிரித்த அவர் பின்பு புன்முறுவலோடு கிறிஸ்துவை எனக்கு அறிமுகப் படுத்தினார், ஆனாலும் நான் தேடுவது கிறிஸ்துவிடம் தான் இருக்கின்றது என்ப‌தை உடனடியாக அறிந்து கொள்ள முடியவில்லை, வீட்டில் எப்போதும் போல இரகசியமாய் வேதத்தையும் கிறிஸ்தவ அறிஞர்களின் புத்தகத்தையும் படிக்கலானேன், இவைகளில் பெரும்பாலவைகளை நான் ஏற்கெனவே படித்ததுண்டு நான் முன்பு படித்தது விவாதத்திற்கும் குற்றம் கண்டுபிடிப்பதற்குமே தவிர வேறு எதற்கும் இல்லை. ஆனால் இப்போது நான் படிப்பது ஒரு தேடல் அடிப்படையில்.. ஆம் நான் இழ‌ந்து போன‌ ச‌மாதான‌த்தைத் தேடி


மெல்ல மெல்ல நான் தேடியது கிடப்பதாகத் தோன்றியது, ஆனாலும் இவைகள் உண்மையா? என்ற எண்ணம் என்னைக் குழப்பியது, குழப்பம் தொடர்ந்து கொண்டிருக்க ஒரு நாள் இயேசு அழைகிறார் புத்தகத்தில் கோவை காருண்யாவில் சகோ. தினகரன் அவர்களின் கூட்டம் பற்றிய அறிவிப்பு கண்ணில் பட்டது அங்கே செல்ல முடிவு செய்தேன். அங்கே சொல்லப்பட்ட சில வார்த்தைகள் எனக்காகவே கிறிஸ்துவால் சொல்லப்பட்டதாக உணர்ந்தேன், ஆனாலும் அடுத்தநாள் தான் அது எனக்காகச் சொல்லப்பட்டது என்பதை மிகவும் ச‌ங்கடப்பட்டு எனக்குள்ளேயே ஒத்துக் கொண்டேன். சில நாட்களிலேயே பழைய, புதிய ஏற்பாடுகளின் ஒற்றுமைகளை நண்பரொருவர் மூலமாய் அறிந்து கொண்டேன்.


சரியாக நான் தற்கொலை முடிவைக் கைவிட்ட மூன்றாம் மாதத்தில் இந்த உலகத்தில் நான் தேடிய நிம்மதியை கிறிஸ்துவே தரமுடியும் என முழு மனதோடு ஒத்துக்கொண்டேன், அன்றே என் பாவங்களை அறிக்கையிட்டு என் வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்புக்கொடுத்தேன். என்னிடம் இருந்த செப்புத்தகடுகள், எந்திரங்கள், தாயத்துகள் படங்கள், சிலைகள், ஆகியவற்றை தேடியெடுத்து தூக்கி எறிந்துவிட்டேன். ஆனாலும் என்னால் சரியாக ஜெபிக்க முடியவில்லை,

கிறிஸ்தவம் தொடர்பான என் சந்தேகங்களை நான் எப்போதும் கேட்டுத் தெளிவு பெறும் நண்பரிடம் நான் ஜெபம் செய்ய முடியாததை முறையிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அவர் முகம் பயம் கலந்த கலவரமாக மாறத்தொடங்கியது, எனக்கு எதுவும் தெரியவில்லை, பின்பு அவர் சுதாரித்துக் கொண்டு உனக்கும் பாம்புக்கும் என்ன தொடர்பு என்றார்? எனக்கு அவர் கேட்பது சிறிதும் சம்பந்தம் இல்லாமல் இருந்ததால் நானும் குழம்பிவிட்டேன். பிறகு அவர் திரும்பத்திரும்பக் கேட்டதால் என் ஜாதகத்தில் கால சர்ப தோசம் என்ற ஒன்று இருப்பதாக சொன்னேன். அவர் அதையும் மீறி நீ பாம்போடு எதாவது ஒப்பந்தம் செய்திருக்கிறாயா? என்றார். நான் நான் பாம்பிடம் ஒப்பந்தம் செய்து கொள்ள நான் என்ன பாம்பா? நான் அந்த தோசம் நீங்க சில ஆண்டுகளுக்கு முன்னால் யாகம் வேண்டுமானால் செய்தேன் வேறொன்றுமில்லை என்றேன், அப்போது தான் அவர் ஒரு உண்மையைச் சொன்னார் நான் பேசிக்கொண்டிருக்கும் போது அவருக்கு நான் தெரியவில்லை பாம்புதான் தெரிந்தது, என்றார் மேலும் அந்த பாம்பின் ஆவியை உடனே விரட்ட வேண்டும் என்றார்.


நான் ந‌ம்ப‌வில்லை ஆனாலும் அவ‌ர் வ‌ற்புறுத்த‌லினால் அரைமனதோடு ஜெப‌த்தில் அம‌ர்ந்தேன், அப்போது திடீரென என் உட‌லை என்னாலேயே க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியாத‌ துடிப்பு என்னில் தோன்றி நேர‌மாக ஆக‌ அதிகமான‌து என் நாக்கு வெளியே வந்து விட்ட‌து ஆனாலும் என் ம‌ன‌ம் இது வேறொருவரின் இட‌ம் நான் இப்ப‌டி ந‌ட‌ந்து கொள்ள‌க்கூடாது என‌ என் உட‌லைக் க‌ட்டுப்ப‌டுத்த‌ துடியாய் துடித்தது ஆனால் உட‌லை என்னால் சிறிதும் க‌ட்டுக்குள் கொண்டுவ‌ர முடிய‌வில்லை பிற‌கு சிறிது நேர‌த்தில் என் உட‌ல் என் க‌ட்டுக்குள் வந்த‌து. நான் PG படிக்கும் போது அந்த பிசாசோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தை என் ஆண்டவராகிய கிறிஸ்துவே முறித்துப் போட்டார், அன்றிலிருந்து நான் கிறிஸ்துவை என் முழு முதல் பரம தகப்பனாக ஏற்றுக்கொண்டேன்.


அன்றிலிருந்து நான் இழ‌ந்து போயிருந்த‌ ச‌மாதான‌ம் என்னில் நிலைபெற்று வ‌ள‌ர‌ ஆர‌ம்பித்த‌து, இதை வாசித்த சிலருக்கு இப்போது உனக்கு பிரச்சனைகள் இல்லையா? என ஒரு ஐயம் தோன்றும், ஒரு உண்மையைச் சொல்கிறேன் நான் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாத நாட்களைவிட கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பிறகு தான் எனக்குப் பல பிரச்சனைகள் ஏற்பட்டன, பிரச்சனைகளைச் ச‌ந்திக்கும் தெம்பு எப்போதும் எனக்கு இருந்ததில்லை ஆனால் நான் கிறிஸ்தவனான பின்பு எனக்கு பிரச்சனைகள் வரும்போது நான் எந்த இடத்தில் எந்த நிலையில் இருக்கிறேனோ அதே நிலையில் என் இயேசப்பாவிடம் என் பிரச்சனைக்ளை அவரிடம் ஒப்புக் கொடுத்து விடுவேன்(1 பேதுரு 5:7). மேலும் அவர் எப்போது என்னோடு இருக்கிறார் என்ற அவரது உறுதிமொழியும், அவர் என்னைக்கை விடுவதில்லை என்ற வாக்குறுதியும்(ஆதி 28:15), தானாக எனக்கு தன்னம்பிக்கையைத் தருகின்றன இப்போது எனக்கு தேவையில்லா பயமும், நம்பிக்கையில்லாதால் உருவாகும் சமாதானமின்மையும், அரவே இல்லை, காரணம்: நான் இந்த உலகத்தை உருவாக்கிய சர்வ வல்லவரின் பிள்ளை, அவரிடத்திலிருந்து எனக்கு உதவி வரும்(சங் 121:2),


முடிவாக‌ "என் ஆத்மா தேடி அலைந்த‌து கிறிஸ்துவ‌த்தான், அவர் எனக்கு வைத்துவிட்டுப் போன சமாதானத்தைத்தான், என‌ இப்போதும் உண‌ர்கிறேன். மேலும் என் வாழ்க்கையில் இப்போது வெறுமையில்லை. நான் கிறிஸ்துவுக்குள்ளாக‌வே ம‌ரிக்க‌ விரும்புகிறேன், கார‌ண‌ம் நான் கிறிஸ்துவிட‌ம் தேடிய‌த்தை விட‌வும் கேட்ட‌தை விட‌வும் அதிக‌மாக‌வே பெற்றுகொண்டேன். பெற்றுக் கொள்கிறேன். பெற்றுக் கொள்வேன் என்றும் விசுவாசிக்கிறேன்.


இதைப் ப‌டிக்கும் ச‌கோத‌ர‌னே ச‌கோத‌ரியே ஒருவேளை நீங்க‌ளும் இதே போன்ற‌ ச‌மாதான‌மில்லாத‌ ஒரு வெறுமையான‌ வாழ்க்கையை வாழ்ந்து கொன்டிருக்க‌லாம், உங்களுக்கு நிரந்தரமான‌ ச‌மாதான‌த்தையும் நிம்ம‌தியையும் கிறிஸ்துவே த‌ர‌முடியும். என்னை நேசிக்கும் இயேசு கிறிஸ்து உங்க‌ளையும் நேசிக்க‌ ஆய‌த்த‌மாய் இருக்கிறார்(யோவான் 6:37). ஒரு முறை.... ஒரே ஒரு முறை.... கிறிஸ்துவுக்குள் உங்க‌ள் முழு ம‌ன‌தோடு வந்து உங்க‌ள் குறைவுக‌ளை ஒப்புகொடுங்க‌ள், க‌ட்டாய‌ம் ஒரு மாற்ற‌த்தைக் காண்பீர்க‌ள். அவ‌ர் உங்க‌ள் குறைவுக‌ளையெள்ளாம் நிறைவாக்குவார்(பிலிப்பியர் 4:19). அவ‌ர் என்றென்றும் மாறாத‌வராக இருக்கிறார்(எபிரெயர் 13:8), அவ‌ர் பொய் சொல்லாதவர், மனிதனைப்போல மனம் மாறுகிறவர் அல்ல‌ (எண்ணாகமம் 23:19). என‌வே நீங்க‌ள் ஒருமுறை அவ‌ரை முழு ம‌ன‌தோடு தேடிப்பாருங்க‌ள், நீங்க‌ள் நினைப்ப‌த‌ற்கும் வேண்டிக்கொள்வ‌த‌ற்கும் அதிக‌மான‌தைச் த‌ருவார், செய்வார். ஆமேன்.

StumbleUpon.com Read more...

33 வருடத்திற்கு பிறகு வரலாற்று சாதனை-இதில் சச்சின் பங்கு என்ன?

ஹாமில்டனில் நடைபெற்ற நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.


சுமார் 33 ஆண்டுகளுக்கு பின்னர் நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி, இந்திய கிரிக்கெட் அணி புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.


முதல் இன்னிங்ஸ்: நியூசிலாந்து-279; இந்தியா-520. 2 வது இன்னிங்ஸ்: நியூசிலாந்து-279; இந்தியா-39(விக்கெட் இழப்பின்றி). இந்திய தரப்பில் ஹர்பஜன் சிங் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.


இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெஸ்ட் அரங்கில் தனது 42 வது சதத்தை பூர்த்தி செய்தார்.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP