சமீபத்திய பதிவுகள்

ஊடக வெளியிட்டாளர்களை மிரட்டிய சிறிலங்காவின் அரச தலைவர்

>> Wednesday, January 14, 2009

ஊடக வெளியிட்டாளர்களை மிரட்டிய சிறிலங்காவின் அரச தலைவர்
 
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்திற்கும் படையினருக்கும் அபகீர்த்தி ஏற்படும் வகையில்  செய்திகளையும் விமர்சனங்களையும் வெளியிடுவதை முற்றாக நிறுத்துமாறு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஊடக நிறுவனங்களின் வெளியீட்டாளர்களுக்கு கட்டளை பிறப்பித்து எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
குறிப்பாக போர் நடவடிக்கைகளில் படைத்தரப்புக்கு ஏற்படுகின்ற இழப்புக்கள் சேதங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்ற தகவல்களை கூட வெளியிட வேண்டாம் எனவும் அவ்வாறான செய்திகள் வெளியிடப்படுமனால் குறித்த செய்தியை எழுதிய ஊடகவியலாளர் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் மகிந்த ராஜபக்ச முன்னறிவித்தல் கொடுத்துள்ளார்.
இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் தலைவர்களையும் வெளியீட்டாளர்களை அலரி மாளிகையில் நேற்று புதன்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடியபோதே இந்த எச்சரிக்கையையும் முன்னறிவிப்பையும் அவர் வழங்கியுள்ளார்.
அரசாங்கத்தின் அல்லது பாதுகாப்பு அமைச்சின் தகுதி வாய்ந்த அதிகாரி ஒருவரின் உறுதிப்படுத்தலின் அடிப்படையிலேயே போர் தொடர்பிலான செய்திகள் வெளியிடப்பட வேண்டும் எனவும் பணிப்புரை வழங்கிய மகிந்த ராஜபக்ச, படையினரின் வெற்றி குறித்த செய்திகளுக்கு மாத்திரமே ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனவும் அழுத்தம் கொடுத்தார்.
மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை குறித்தும் கருத்து கூறிய மகிந்த ராஜபக்ச, அரசாங்கத்திற்கும் படையினருக்கும் ஏற்படக்கூடிய சிக்கல் நிலைமைகளை தவிர்க்க வேண்டியது ஊடகவியலாளர்களின் எழுத்தில் தங்கியுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
சந்திப்பில் கலந்து கொண்ட இலத்திரனியல், அச்சு ஊடகங்களின் தலைவர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் ஆகியோரின் கேள்விகளுக்கும் கடுமையான எச்சரிக்கை தொனியில் பதிலளித்த மகிந்த ராஜபக்ச, தேச பக்தியை கட்டி எழுப்புவதுதான் ஊடகங்களின் தலையாய கடமை என்றும் நீண்ட விளக்கமளித்தார்.
தமிழீழ விடுதலை புலிகள் மிகவும் குறுகிய காலகட்டத்திற்குள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு விடுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்த மகிந்த ராஜபக்ச, தற்போது புலிகள் ஒரு காணித்துண்டுக்குள் ஒடுங்கிவிட்டார்கள் எனவும் கூறி பெருமைப்பட்டார்.
இக்கலந்துரையாடலின்போது அதிபர் மகிந்த ராஜபக்ச ஊடக செயற்பாடுகள் தொடர்பில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அச்சுறுத்தல் விடுத்ததார் என்று சந்திப்பில் கலந்து கொண்ட வெளியீட்டாளர்கள் கூறியதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.puthinam.com/full.php?2b1VoKe0decYA0ecAA4S3b4C6DN4d2f1e2cc2AmS3d434OO2a030Mt3e

StumbleUpon.com Read more...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆபாசமான குட்டை பாவாடைக்கு தடை

 
lankasri.comஇந்த ஆண்டின் முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல் போர் நகரில் வருகிற 19-ந் தேதி முதல் பிப்ரவரி 1-ந்தேதி வரை நடக்கிறது.

இந்தப் போட்டியின் போது வீராங்கனைகள் ஆபாசமாக குட்டை பாவாடை அணிந்து விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளாடை வெளியே தெரியாமல் இருக்குமாறு வீராங்கனைகள் பார்த்து அதற்கு ஏற்றவாறு ஆடை அணிய வேண்டும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஆபாசமான ஆடை அணிந்து விளையாடினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. டென்னிஸ் போட்டியில் வீரர், வீராங்கனைகளின் அபாரமான ஆட்டத்தை பார்ப்பதற்கு ஒரு கூட்டம் இருக்கும். இதே போல குட்டை பாவாடையை பார்ப்ப தற்காகவே மற்றொரு கூட்டம் வரும். அவர்களை யும் இந்த அறிவிப்பு பாதிப்பாக இருக்கும்.

http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1231841320&archive=&start_from=&ucat=4&

 

StumbleUpon.com Read more...

தண்ணீரில் சார்ஜ் செய்யப்படும் தொலைபேசிகள்

தண்ணீரில் சார்ஜ் செய்யப்படும் தொலைபேசிகள்
lankasri.com Samsung நிறுவனம் புதியவகைக் கைத்தொலைபேசிகளைத் தயாரித்துள்ளது.

இத் தொலைபேசிகள் சிறப்பு யாதெனில், இவற்றின் பற்றரிகளைத் தண்ணீரில் புதுப்பித்துக் கொள்ள முடியும். இத்தகைய தொலைபேசிகளை 2010ல் சந்தைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தண்ணீரில் சார்ஜ் செய்யப்படும் இத்தகைய தொலைபேசிகள் தொடர்ச்சியாகப் பத்துமணிநேரம் வரை பாவிக்க முடியுமென , இதன் தயாரிப்பபாளர்களான சம்சுங் நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். இத்தகைய தொலைபேசிகள் பாவனைக்கு வந்துவிட்டால், தவறித் தண்ணீரில் விழுத்த தொலைபேசியை பதறியடித்துத் தூக்க வேண்டியிராது.

 

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1231878341&archive=&start_from=&ucat=2&

StumbleUpon.com Read more...

இஸ்ரேல் தாக்குதலை என் அரசு முடிவுக்கு கொண்டு வரும் ஒபாமா அறிவிப்பு

இஸ்ரேல் தாக்குதலை என் அரசு முடிவுக்கு கொண்டு வரும் ஒபாமா அறிவிப்பு
 
lankasri.comபாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அப்பாவிகள் உயிர் இழந்தது அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன். இந்த தாக்குதலை என் அரசு முடிவுக்கு கொண்டு வரும். பாலஸ்தீனப் பிரச்சினைக்கு என் ஆட்சி காலத்தில் நான் தீர்வு காண்பேன் என்று ஒபாமா உறுதிபடக் கூறினார்.

அவர் ஒரு டி.வி.சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

"நான் ஜனாதிபதியாக பதவி ஏற்ற முதல் நாளில் தொடங்கி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்வேன். நான் இப்போது செய்து வருவது எல்லாம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான குழுவை உருவாக்குவதுதான். இந்த குழு இந்த பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பினரின் கனவுகளையும் நிறைவேற்றும் வகையிலான ஒரு நடைமுறையை உருவாக்கும்.

இவ்வாறு ஒபாமா கூறினார்.

 

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1231845040&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

பாஸ்வேர்டுக்கு புதிய வழி

பாஸ்வேர்டுக்கு புதிய வழி
lankasri.com தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் எளிய விதி இன்டெர் நெட்டுக்கு பொருந்துவதில்லை. அங்கே கேளுங்கள் சொல்லப்படும் என்பதே கோலோச்சுகிறது.

அதாவது, இணைய வாசிகள் தட்டும்போது திறக்காமல் முதலில் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள் என்று அநேக இணைய தளங்கள் நிபந்தனை விதிக்கின்றன.

பொதுவாக சந்தாதாரர் களுக்கு மட்டுமே என சொல்லும் தளங்களும், பல்வேறு காரணங்களுக் காக உங்க ளைப்பற்றிய விவரங்கள் தெரிந்த பிறகே உள்ளே அனுமதிப்போம் என்று கராராக இருக்கும் கரங்களும் தான் இப்படி கேள்வி கேட்டு பதில் சொல்ல கட்டாயப் படுத்துகின்றன.

இதுபோன்ற தளங் களை பயன் படுத்த அவர்கள் கேட்கும் விவரங் களையெல்லாம் கொடுத்து விட்டு கூடவே இ-மெயில் முகவரியையும் சமர்ப்பித்து நமக்கான பயன்பாட்டு பெயர் அதாவது யூசர் நேம் மற்றும் அதனை இயக்க கூடிய பாஸ்வேர்டு அதாவது கடவுச் சொல் ஆகியவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த தளத்தை எப்போது பயன் படுத்த வேண்டும் என்றாலும், பயன்பாட்டு பெயரை சமர்ப்பித்து கடவுச்சொல்லை தெரிவித்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும்.

ஒரே ஒரு தளம் என்றால், இந்த முறையை பின்பற்றுவதில் எந்த சங்கடமும் இல்லை. ஆனால் பிரச்சனை என்னவென்றால் பல்வேறு தளங்களில் அவற்றின் சேவையை பயன்படுத்த இப்படி பல விதமான பயன்பாட்டு பெயரையும், கடவுச் சொல்லையும் உருவாக்கிக்கொள்ள வேண்டி இருக்கிறது.

இ-காமர்ஸ் தளங்கள், இ-மெயில் சேவை தளங்கள், பிரத்யேக ஆன் லைன் இதழ்கள், அரசு தளங்கள் என்று பலவற்றில் இப்படி தனித்தனியே நமக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டி இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் அடையா ளத்தை உருவாக்க நேரத்தை செலவிட வேண்டியிருப்ப தோடு, பலவித அடையாளங்களை நிர்வகிப்பதும் சிக்கலாகி
விடுகிறது. கடவுச்சொல்லை மறந்து விடும் அபாயம் இருக்கிறது. இதன் காரணமாகவே இணையவாசிகளின் தகவல் தேடும் அனுபவம் சுமை மிக்கதாக மாறிவிடுகிறது.

இதற்கு தீர்வாக வந்திருக்கும் புதிய சேவைதான் 'ப்ரீ யுவர் ஐடி'.

'ஓபன் ஐடி டாட் நெட்' இந்த சேவையை வழங்கி வருகிறது. இந்த தளத்தில் உங்களைப்பற்றிய விவரங்களை சமர்ப்பித்து (ஒரே) ஒரு கடவுச்சொல்லை பெற்றுக் கொண்டீர்கள் என்றால் போதுமானது.

வேறு எந்த இணைய தளத்தை பயன்படுத்தும்போதும், உங்களைப் பற்றிய விவரங்கள் கேட்கப்பட்டது என்றால், ஓபன் ஐடி அடையாளத்தை சமர்ப்பித்தீர்கள் என்றால் போதுமானது.

உங்களைப் பற்றிய விவரங்களை ஓபன் ஐடி வழங்கி நீங்கள் தளத்தின் உள்ளே செல்ல கதவைத் திறந்து விடும். இதன் மூலம் கட்டண சேவை போன்ற தளங்கள் ஒவ்வொன்றுக் கும் தனித்தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டிருக்க வேண் டியதில்லை.

ஒரு கதவைத் திறந்தால், ஓராயிரம் கதவுகள் திறக்கும் என்பதுபோல, இந்த ஒரே ஒரு கடவுச் சொல்லை வைத்துக்கொண்டு இன்டெர்நெட் முழுவதும் உலா வரலாம். ஏற்கனவே மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கிய பாஸ்வேர்ட் சேவை போன்றதே இது. அதைவிட மேம்பட்டதாக இது இருக்கிறது என ஓபன் ஐடி மார்தட்டிக் கொள்கிறது.

 

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1231879168&archive=&start_from=&ucat=2&

StumbleUpon.com Read more...

இஸ்ரேல் ராணுவ தாக்குதல் தீவிரம் (பட இணைப்பு)

 
 
lankasri.comஇஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. வான்வழி தாக்குதலோடு பீரங்கித் தாக்குதலையும் ராணுவம் மேற்கொண்டுள்ளது. காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் ஊடுருவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 18-தினங்களாக நடைபெற்று வரும் சண்டையை முடிவுக்குக்குக் கொண்டு வரும் விதமாக தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் இயக்கத்தினர் மேற்கொள்ளும் ராக்கெட் தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வரவும் ராணுவம் திட்டமிட்டுள்ளது.தெற்கு காஸா நகரில் தல் அல்-ஹவா பகுதியை நோக்கி இஸ்ரேல் ராணுவம் முன்னேறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தரைப்படையினர் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி முன்னேறி வருகின்றனர்.இவர்களுக்குப் பாதுகாப்பாக வான்வழி தாக்குதலையும் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டுள்ளது.

இதனிடையே காஸா நகரில் இரண்டு பீரங்கிகளை தகர்த்துவிட்டதாக ஹமாஸ் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.இஸ்ரேல் ராணுவத்தின் பீரங்கித் தாக்குதலை முறியடித்து வருவதாகவும் தெரிவித்தனர்.இரவு நேரத்தில் இப்பகுதியில் நடைபெறும் சண்டையால் பெரும் தீப்பிழம்பு ஆங்காங்கே காணப்பட்டதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே பீரங்கித் தாக்குதலில் ஒரு பாலஸ்தீனர் உயிரிழந்ததாக தெரிகிறது.உயிரிழந்தவர் பற்றிய விவரம் தெரியவில்லை.

மேலும் விமான தாக்குதலில் 3-பேர் காயமடைந்ததாகவும்,காஸா நகரில் உள்ள ஷேக் ராட்வான் மாவட்டத்தில் ஒரு வீடு முற்றிலும் சேதமடைந்ததாகவும் தெரிகிறது.

 
lankasri.com


 
lankasri.com


 
lankasri.com


 
lankasri.com


 
lankasri.com


 
lankasri.com

 

 

StumbleUpon.com Read more...

ஒபாமாவிடம் மனுக்கொடுக்க ஒப்பமிடுங்கள்

 


இணையம் ஊடாக கையெழுத்துக்கள் சேகரிக்கப்படும் இக்கடிதம்

- தமிழர் தேசிய இனப் போராட்டத்தையும், ஈழத் தமிழர்கள் இன்று எதிர்நோக்கியிருக்கும் இனப் படுகொலை அபாயத்தையும் எடுத்து விளக்குவதுடன்

- இலங்கைப் பிரச்சினையில் தாமதமின்றி தலையிட்டு, தமிழினப் படுகொலையை நிறுத்தி

தமிழர்களுக்கு நீதி கிடைக்க உடனடியாக வழி செய்யுமாறும் அமெரிக்காவின் புதிய அரச தலைவரையும், வெளியுறவுச் செயலரையும் கேட்டுக்கொள்கின்றது.

"உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரையும் இதில் கையெழுத்து இடுமாறு நாம் வேண்டுகின்றோம். ஒரே குடும்பத்தில் இருந்தாலும் தனித்தனியான ஒவ்வொருவரது கையெழுத்தும் மிகவும் பெறுமதி வாய்ந்தது. அது அவர் அவரது கருத்தைப் பிரதிபலிப்பதாக அமையும். அதனால் ஒவ்வொரு தமிழரும் இதில் கையெழுத்திடல் வேண்டும்." என்று 'ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பின்' ஊடகத் தொடர்பாளர் புதினத்திடம் தெரிவித்தார்.

"தமிழர்கள் தாம் கையெழுத்திடுவதுடன் மட்டும் நின்றுவிடாமல், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், வேலைத் தளங்களில் உள்ள, தமிழர்கள் அல்லாத தமது நண்பர்களுக்கும் தமிழர் நிலைமையை எடுத்து விளக்கி, அவர்களையும் இதில் கையெழுத்திட வைக்க வேண்டும்" எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

"காலத்தின் மிக அவசரமான தேவை கருதி எல்லோரும் இதனை உடனடியாகச் செய்ய வேண்டும்" என்று அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

அந்தக் கடிதத்தின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது. இதில் கையெழுத்திட விரும்புவோர் கீழே உள்ள இணைப்பு (link) ஊடாக கையெழுத்திடும் பக்கத்திற்குச் சென்று கையெழுத்திடுமாறும் 'ஒபாமாவுக்கான தமிழர்கள்' கேட்டுக்கொள்கின்றனர்.

கையெழுத்திடும் இணைப்பு:

http://www.tamilsforobama.com/sign/usersign.html

கடிதத்தின் தமிழாக்கம்:

மாண்புமிகு அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா அவர்களுக்கும் மற்றும் மரியாதைக்குரிய அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஹில்லாறி கிளிண்டன் அவர்களுக்கும்!

இக்கடிதத்தில் கையொப்பம் இட்டிருக்கும் நாங்கள், இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர உடனடியாக தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிவாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

ஏனெனில் -

1. இந்தப் போரானது தமிழர்களின் பூர்வீக நிலமான இலங்கையின் வட-கிழக்கு பகுதி மீது சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படுகின்றது. பெரும் அழிப்வை ஏற்படுத்தி, தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தில் இருந்து அவர்களை அகற்றி இனச்சுத்திகரிப்பச் செய்வதே இந்தப் போரின் நோக்கமாகும். முதலாம் நூற்றாண்டு காலத்தில், றோமன் இராச்சியத்தில் பலஸ்தீனத்திலிருந்து யூதர்களைத் துரத்தியது போன்ற பெரும் மக்கள் இடப் பெயர்வு அங்கு இப்போது நிகழ்கின்றது.

2. ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரமடைந்த 1948 இலேயே இந்த தமிழின அழிப்பு ஆரம்பித்து விட்டது. தமிழர் நிலங்களைப் பறித்து, அவற்றுக்கு சிங்களப் பெயர்களைச் சூட்டி, அவற்றில் சிங்களக் குற்றவாளிகளைக் குடியேற்றி, அவற்றில் இராணுவ முகாம்களை நிறுவுதல் என இந்த இனச் சுத்திகரிப்பு ஆரம்பித்தது. தொடர்ந்து, தமிழர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு, வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு தமிழர்களது பொருளாதார வாழ்வு சீரழிக்கப்பட்டது. மேலும், கடந்த 25 வருட காலமாக தமிழர் படுகொலைகளும், கைதுகளும், காணாமல் போதலும், மட்டுமன்றி தமிழர் வாழ்விடங்கள் மீது வான், தரை, மற்றும் கடல் வழியான தொடர்ச்சியான குண்டு வீச்சுக்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

3. சிறிலங்கா அரசாங்கமானது புத்த மதத்தை நாட்டின் அரச மதமாக்கி, இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களை குண்டு வீசி அழித்து விட்டு, பின்னர் அந்த இடங்களில் புத்த விகாரைகளைக் கட்டுகின்றது.

4. அனைத்து சமாதான முயற்சிகளையும் நிராகரித்து, சமரச உடன்பாடுகளையும் கிழித்தெறிந்த சிறிலங்கா அரசாங்கங்கள், இப்படியான முயற்சிகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டைகளையும் போடுகின்றன.

5. தமிழ் மக்களுக்கு அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் வழங்கி வந்த அனைத்து உதவிகளையும் நிறுத்தியதோடு, சிறிலங்கா அரசாங்கமானது, அந்த நிறுவனங்களை நாட்டை விட்டும் துரத்தியது. சில சந்தர்ப்பங்களில், அவர்களைக் கொலைகளும் செய்துள்ளது.

இந்த இனப்படுகொலைப் போரை நிறுத்துவதற்கு, புதிய ஒபாமா அரசாங்கம் உடனடியாக காத்திரமான நடவடிக்கையை எடுக்குமென்றும், தமிழர்களுக்கு நல்ல வழி ஏற்படுத்தும் என்றும் நாங்கள் நம்புகின்றோம்.

எங்களது இந்த விண்ணப்பத்திற்கு மதிப்பளித்தமைக்கு எமது நன்றிகளும் உங்களுக்கு உரித்தாகட்டும்.

நன்றி.

http://www.tamilsforobama.com/sign/usersign.html

StumbleUpon.com Read more...

ஈழத்தில் மரண இலக்கியம் எழுதப்படுகிறது.

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP