சமீபத்திய பதிவுகள்

பாகிஸ்தானில் சீனாவின் இராணுவத்தளம்: சுட்டிக்காட்டும் தமிழ்நாட்டு நாளேடு

>> Wednesday, February 3, 2010


 

பாகிஸ்தானில் தொடங்கி, அப்படியே மியான்மர், இந்தப் பக்கம் இலங்கை, அந்தப் பக்கம் வட கொரியா, அப்புறம் நேபாளம் என செம்படைகளின் தளங்களை விரிவடையச் செய்வதுதான் சீனாவின் நோக்கம் என சுட்டிக்காட்டுகின்றது தமிழ்நாட்டு நாளேடான தினகரன்.
 
'சீனாவின் ஆசை' என்னும் தலைப்பில் தினகரன் எழுதியுள்ள தலையங்கமாவது:

அமெரிக்கா முதலாளித்துவ நாடு. சீனா கம்யூனிச நாடு. கொள்கை அடிப்படையில் இரண்டுமே இரு துருவங்கள்.

ஆனால் சர்வதேச அரசியலில் அதிகாரம், ராணுவ பலம், வலுவான பொருளாதாரம் போன்ற விஷயங்களில் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று போட்டிதான்.

இந்தப் போட்டி, அடுத்த நாடுகளில் ராணுவ தளங்களை அமைப்பதிலும் வந்துவிட்டது.

உலகிலேயே அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மட்டும்தான் தங்கள் நாடுகளில் மட்டுமல்லாது மற்ற நேச நாடுகளிலும் ராணுவ தளங்களை வைத்துள்ளன.

கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் வந்துவிட்ட பிறகு, அந்த ஏவுகணைகளை ஆரம்பத்திலேயே அழிப்பதற்கும் ராணுவ தளங்கள் இருக்கும் நாடுகளின் பாதுகாப்புக்கும் இது அவசியமாகிவிட்டது.

இந்த ஆசை இப்போது சீனாவுக்கும் வந்துவிட்டது. பாகிஸ்தானில் ராணுவ தளம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது சீனா.

சீனாவில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள உக்கூர் பிராந்தியத்தில் தீவிரவாதப் பிரச்னை இருக்கிறது.

தனி நாடு கேட்டுப் போராடி வரும் இந்தப் பகுதி தீவிரவாதிகளின் நடமாட்டத்தை அறிய, பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் உள்ள வடமேற்கு மாகாணத்துடன் சீனா ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது.

இப்போது அந்தப் பகுதியில் ஒரு ராணுவ தளத்தை அமைப்பதன் மூலம் தீவிரவாதிகளை அடக்குவது சீனாவுக்கு எளிதாகிவிடும்.
இது இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாகி விடும் என்பதுதான் பிரச்னை.

பாகிஸ்தான் தனக்குத் தேவையான ராணுவ தளவாடங்களில் 70 சதவீதத்தை சீனாவிடம்தான் வாங்கி வருகிறது. சப்ளையை நிறுத்திவிடுவேன் என மிரட்டியே காரியத்தை சாதிக்கலாம்.
இந்தியாவை மிரட்ட இதையும் ஒரு வாய்ப்பாக பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தனக்கும் பாதுகாப்பு, சீனாவுக்கும் உதவி செய்தது போல் ஆகும் என்பதால் பாகிஸ்தானும் ராணுவ தளம் அமைத்துக் கொள்ள அனுமதிக்கும்.

பாகிஸ்தானில் தொடங்கி, அப்படியே மியான்மர், இந்தப் பக்கம் இலங்கை, அந்தப் பக்கம் வட கொரியா, அப்புறம் நேபாளம் என செம்படைகளின் தளங்களை விரிவடையச் செய்வதுதான் சீனாவின் நோக்கம்.

உலகம் முழுக்க ராணுவ தளங்கள் வைத்திருக்கும் அமெரிக்காவை விமர்சனம் செய்துவந்த சீனா, இப்போது இதுபோன்ற ராணுவ தளங்கள் மூலம் பிராந்திய ஒற்றுமை அதிகரிக்கும் என புதிய விளக்கம் கூறி வருகிறது.source:.puthinappalakai
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சூறையாடும் சிங்களம்: துணைபோகும் இராணுவம்

 

மீள் குடியேற்றத்தின் பின் வன்னி மக்கள் சுதந்திரமாக வாழப் போகிறார்களா? என்றால் அங்கேதான் சிங்களம் தனது சாதுரியமான காய்நகர்த்தல்களை மேற்கொள்ள இருக்கிறது. அதாவது வன்னி மக்களை முடிந்தளவு படிப்படியாக மீள்குடியேற்றுவது, இதனை நிறைவேற்றி உலகநாடுகளின் கண்டனங்கள், அழுத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது. மக்கள் மீள்குடியமர்ந்தவுடன் களை எடுப்பது. அதாவது இப்போது முகாங்களில் உள்ளவர்கள் காணாமல் போனால் அல்லது அவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் வெளிநாடுகளின் ஊடகங்களின் கண்ணுக்கு பட்டுவிடும். எனவே புலிகள் ஆதரவாளர்களை குடியமர்த்திவிட்டு பின்னர் களை எடுக்க முயல்கிறது இலங்கை அரசு. 

மேலும் கடந்த மாதங்களில் மல்லாவி, கனகராயன்குளம், துணுக்காய் போன்ற கிராமங்களில் மீள்குடியமர்த்தப்பட்டவர்கள் அங்கே கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது. அவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டது மட்டுமல்லாமல் அவர்களின் வீட்டு கதவுகள் யன்னல்கள் அதைவிட கொடுமையாக கழிப்பறையில் உள்ள மாபிள்கள் கூட களவாடப்பட்டிருக்கிறதாம். மேலும் தங்கள் கண்ணெதிரிலேயே தங்களின் உறவினர், நண்பர்கள், வீடுகளை உடைத்து யன்னல், கதவு, ஓடுகள் போன்றவற்றை ஏற்றிச் செல்கிறார்களாம் சிங்களவர்கள். வன்னித் தெருக்களெங்கும் சிங்களவர்களின் வாகனங்கள் சாமான்களை ஏற்றி நெடுங்கேணியூடாக, டொலர்பாம் மற்றும் கென்பாம் போன்ற சிங்கள கிராமங்களுக்கு கொண்டு செல்கிறதாம்.

வன்னியில் சமாதான காலப்பகுதிகளில் இது ஒரு நிரந்தர சமாதானம் என்று நம்பி மக்கள் பல லட்சம் பெறுமதியான வீடுகளையும், கடைகளையும் கட்டியெழுப்பினார்கள். மேலும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் பெரும் தொகை பணத்தை வீடுகள் கட்டியெழுப்ப அனுப்பியிருந்தார்கள். பொருளாதார வீழ்ச்சிகளால் மக்கள் அதிகவிலை கொடுத்தே தங்களின் வீடுகளை கட்டியிருந்தார்கள். ஒன்றரை கோடி இரண்டு கோடிக்குமேல் செலவு செய்துகூட வீடுகளை பலர் கட்டினார்கள். ஏறக்குறைய சமாதானகாலத்தில் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான வீடுகள் கடைகள் கட்டப்பட்டன, சராசரியாக ஒரு வீட்டுக்கு ஏழு இலட்சம் ரூபா செலவு எனக் கணக்குப் போட்டாலும் சுமார் இருபத்தொரு பில்லியன் கோடிக்குமேல் வீட்டுக்குரிய சீமெந்து, கம்பி, ஓடு போன்ற மூலதனத்தை மக்கள் அரச கம்பனிகளுக்கு வழங்கினார்கள். இதனால் வெளிநாடுகளில் இருந்த தமிழ் மக்களின் பணம் அரச பொருளாதாரத்தை நிமிர்த்தியதோடு இராணுவ கட்டமைப்புக்கும் வன்னி மக்களின் அழிவிற்கும் பெரும் துணையாக அமைந்தது என்று கூடச் சொல்லலாம். எங்களின் விரலால் எங்கள் கண்ணை குத்திய கதையாக இது அமைந்ததோ என்ற அச்சமும் நிலவுகிறது.இரண்டாம் தடவையும் காக்கையை ஏமாற்றிய நரியார் போல புலம்பெயர் மக்களின் பணத்தை எப்படி மீண்டும் பிடுங்கலாம் என்றும், மீள்குடியேற்றத்துக்கென வெளிநாட்டில் உள்ளவர்கள் கொடுக்கும் பணத்தை வீடுகட்டுவதற்காக தங்களிடம் தானே மீண்டும் தருவார்கள் என்று கணக்கு போட்டும், மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு தாங்கள் எவ்வளவு கொடுக்கிறோம் என்று வெளிநாடுகளுக்கு காட்டும் ஒரு முகத்தை வைத்துக்கொண்டு, தமிழ் மக்களின் சொத்தை சிங்களவர்களை சூறையாட விடுவது மூலம் அவர்களிடத்தே ஒரு நல்லபெயரை பெற்று காலப்போக்கில் ஒரு இனகலவரத்தை வன்னி மக்களுக்கு எதிராக திருப்பிவிட ஒரு கொம்பு சீவும் நிலையையும் அரசு திட்டமிட்டு வருகிறது.

மேலும் புலிகளின் காலப்பகுதிகளில் அரச காரியாலயங்களிலோ தனியார் நிறுவனங்களிலோ சிங்களவர்கள் இருந்திருக்கவில்லை. நூறு வீதமும் தமிழர்கள்தான் கடைமையாற்றி வந்தார்கள். 1995 ம் ஆண்டு யாழ்ப்பாணம் இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் வந்ததில் இருந்து புலிகள் வன்னியை விட்டு செல்லும் வரை யாழில் கூட தமிழர்கள் தான் கடைமையாற்றி வந்தார்கள். ஆனால் இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக காணும் பெரும்பான்மை இனத்தவர்களின் ஆதிக்கம் வரும் 2010 மேமாத பாராளுமன்ற தேர்தல்களின் பின் படிப்படியாக கூட்டப்படும். அதாவது மகிந்தவின் ஆட்சி காலமான எதிர்வரும் ஐந்து வருடங்களில் வன்னி யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் இந்த மாற்றங்களை காணக்கூடியதாக இருக்கும்.

அதன் அடிப்படையில் மாவட்ட அரச அதிபர்களோ கச்சேரி உயர் அதிகாரிகளோ சிங்களவர்களாக வரும்போதும், பாடசாலைகளிலும் சிங்கள ஆசிரியர்கள் கடைமையாற்றுவார்கள். இப்படி இவர்களைக் கலக்க விட இரண்டு காரணங்கள் இருகின்றன ஒன்று சகல காரியாலயங்களிலும் சிங்களவர் இருந்தால் புலிகளின் வருங்கால நடமாட்டங்களையும், ஊடுருவல்களையும் தவிர்கலாம் என்பது ஒன்று, மறு புறம் அரச உயர் அதிகாரிகளுடன் கதைப்பதற்கும் அவர்களிடம் அலுவல்கள் பெறவரும் சிங்களவர்களிடம் உரையாடுவதற்கும் சிங்களம் கற்பது அவசியமாகி விடும், அதனால் பாடசாலைகளிலும் சிங்கள பாடத்திட்டங்களும் ஏன் சிங்களபாடம் ஒரு கட்டாய பாடமாக கூட வர வாய்ப்புள்ளது. முப்பது வருடமாக தமிழர்களுக்கு படை பலம் இருந்ததால் இந்த கனவு சிங்கள அரசுக்கு சிம்ம சொற்பனமாகவே இருந்தது.

மேலும் வன்னியில் கணிசமான பலர் வெளிநாடுகளில் தங்கிவிட்டார்கள், இடம் பெயர்ந்த மக்கள் பலர் இந்தியா சென்றும் பலர் குடும்பமாக கொல்லப்பட்டும் உள்ளனர். இவர்களின் வீடுகள் நிலங்களில் இனி சிங்களவர் குடியமர்த்தபடுவார்கள், வன்னியில் கடமை புரியும் இராணுவத்தினர் குடும்பங்களும் உறவினரும் கூட வருவார்கள். இவர்களின் வருகையை ஒட்டித்தான் கிளிநொச்சி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு போன்ற இடங்களில் புத்தவிகாரைகளும் இராணுவத்தினரின் நினைவுச்சின்னங்களும் நிறுவப்பட்டுள்ளன என்பதை நீங்கள் ஓரளவு அறிவீர்கள். இவை ஒரு வெள்ளோட்டம்தான். ஆனால் எங்களால் என்ன செய்யமுடிந்தது? இரண்டு எதிர்க்குரல் விட்டார்கள், அதோடு சரி. தமிழ்மக்கள் தான் குடியமர்த்தப்படவில்லை, ஆனால் சிங்கள மக்கள் வன்னியில் வாழத் தொடங்கிவிட்டார்கள் என்று எத்தனை பேர் அறிவார்கள்?

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை போன்ற கரையோட மாவட்டங்களில் வாழும் பல இலட்சம் தமிழ்க் குடும்பங்கள் மீன்பிடியைத்தான் தங்களின் பிரதான தொழிலாக கொண்டிருகிறார்கள். இவர்களுக்கு இதைவிட்டால் வேறெந்த தொழிலும் தெரியாது. ஆனால் இப்போது நடப்பது என்ன? தமிழரை தாயகத்தில் இருந்து துரத்திவிட்டு தமிழீழக்கடலில், முல்லைத்தீவு கிழக்கு கடல்வழியாக நாயாறு, அளம்பில் பகுதிகளால் வரும் சிங்களவர் முல்லைத்தீவு, அளம்பில், செம்மலை, வட்டுவாகல், முள்ளிவாய்க்கால், பொக்கணை, மாத்தளன், சாலை பகுதிகளில் இரவுபகலாக மீன் பிடித்து செல்கிறார்கள். போதாதற்கு, இந்திய மீனவர்கள் ஒருபுறம், தங்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள். ஆனால் இதன் சொந்தக்காரர்கள் வதைமுகாமிலும் முள்வேலி முகாமிலும் ஒரு நேர சோற்றுக்காக கையேந்தி நிற்கிறார்கள்.

மீள் குடியேற்றத்தின் பின் சாத்தியமா என்றால் அதுவும் எட்டாக் கனிதான். ஏனென்றால் இந்திய சினிமாவில் வரும் தாதாக்கள் போல் சிங்களவர் நடந்துகொள்வார்கள். அடிமைகளாக அவர்களின் சட்டத்துக்கும் அதிகாரத்துக்கும் உட்பட்டுத்தான் நாம் நடக்கவேண்டும், எதிர்த்துக் கேட்டால் அவர்களுக்கு துணையாக இராணுவத்தினர் வருவார்கள், அவர்களையும் எதிர்த்தால் எதிர்ப்பவர்கள் இரவில் காணாமல் போவார்கள். எனவே அழிந்துபோன குடும்பங்கள் இனியும் அழிந்துபோக பயப்படுவார்கள், ஏனென்றால் பலர் குடும்பங்களில் ஆண்களே இல்லை. இது ஒரு புறம் இருக்க மன்னாரில் எண்ணெய் கிணறு என்னும் பெயரில், மன்னார் கடல் அந்நியர்களுக்கு விலைபேசப்படுகிறது. இதனால் தமிழரின் காணிகளும் கடலும் விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

1983 - 1984 வரையான காலப்பகுதிகளில் திருகோணமலையை குறிவைத்து இனக் கலவரங்கள் மூலம் பல தமிழர்களைகொன்றும் துரத்திவிட்டும் அவர்களின் பாரம்பரிய நிலங்களையும், உடமைகளையும் சிங்களவர் பிடித்தது மல்லாமல் இராணுவத்தின் துணையுடன் திருகோணமலையில் இருந்து புல்மோட்டை வழியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்குளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு, மணலாற்றில் உள்ள தற்போது டொலர்பாம், கென்பாம் என்று அழைக்கப்படும் வவுனியாவின் வடகிழக்கு பகுதியையும் பிடித்தார்கள். இதனால் தமிழர் தாயகத்தின் இதயபூமி பறிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் முல்லைத்தீவின் பல இடங்களுக்கும் இடம்பெயர்ந்து அகதிகளாக வந்தார்கள். இதை குள்ள நரி ஜே ஆர் நடத்தி முடித்தார்.

இனி வரும் காலங்களில் பதவியா, டொலர்பாம், கென்பாம் பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட சிங்கள காடையர்கள் ஐந்து கிலோமீற்றர் தொலைவில் உள்ள நெடுங்கேணி, மதியமடு, மரதோடை, ஆனந்த புளியங்குளம், பழம்பாசி தண்டுவான் போன்ற முத்து முத்தாக நெல்விளையும் குளக்காணிகளை அதுவும் மூன்று போக காணிகளை தமிழர்களுக்கு விட்டு வைக்க மாட்டார்கள். இனக் கலவரங்களை தூண்டிவிட்டு மீண்டும் வன்னி மக்கள் மீது இன அழிப்பு படுகொலையை இந்த அரசோ அல்லது வரப்போகும் வேறு அரசோ செய்யத்தான் போகிறது என்பதில் சந்தேகமில்லை. எங்களின் இனம் மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டே இருக்கப்போகிறது. இவற்றிக்கு கடந்தகால வரலாறே சாட்சியுமாகும்.

தமது பிள்ளைகளையும் தங்களின் போராளிகளையும் பறிகொடுத்த மண்ணில் இன்று தமிழரைக் கொன்றழித்த இராணுவ சிப்பாய்களினது உருவச்சிலைகள் கட்டப்படுகின்றன. சந்திகள் மூலை முடுக்குகளெங்கும் இனி அவர்கள் தூபிகள் தான் இருக்கும். இதற்கு ஒருபடி மேலேபோய், தூபிகள் முன் நாம் சைக்கிளை விட்டு இறங்கி மரியாதை செய்துவிட்டுத்தான் போகவேணும் என்று சிங்களவன் சொன்னாலும் ஆச்சரியம் இல்லை. இதைவிட இனியென்ன அடிமை வாழ்க்கையை நாம் அனுபவிப்பது? புத்திஜீவிகளும் தமிழின துரோகிகளும் இந்த தமிழ் மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? பதவி, பணம் என்னும் எலும்பை விட்டெறிந்தால் சாப்பிட்டுவிட்டு படுப்பார்கள். இல்லாவிட்டால் இந்தியாவிடமும், நோர்வேயிடமும்தான் முறையிடுவார்கள்.

மேலும் படையினரிடம் சரணடைந்த பல நூற்றுகணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகளுக்கு சிங்கள பிக்குமார்கள் மறுவாழ்வு என்றபெயரில் பௌத்தத்தையும், சிங்களத்தையும் போதித்து வருகின்றனர். மாலைவேளையில் தடுப்பு முகாம்களுக்குச் செல்லும் இந்த புத்தபிக்குகள் பல போதனைகளில் ஈடுபட்டுவருவதாக அறியப்படுகிறது. இனி என்னதான் நடந்தாலும் தமிழனுக்காகத் தட்டிகேட்க நாதியில்லை என்ற நிலைக்கு எங்கள் சமூகம் தள்ளப்பட்டுள்ளது. இதில் இருந்து எப்படி மீள்வது என்பது போர் வடுக்களையும், போரின் கொடுமையையும் உணர்ந்த தமிழ் இளைஞர்களினதும், புலம் பெயர் தமிழர்களின் தாயக விடுதலைக்கான பங்களிப்பிலும்தான் உள்ளது. இன்னும் சில வருடங்களில் அழியப்போகும் எம் தமிழ் இனத்தை காப்பதும் எம் மொழியைக் காப்பதும் உணர்ச்சியுள்ள தமிழர்களின் கைகளில் தான் தங்கியுள்ளது.

புலத்தில் பங்களிப்பும், களத்தில் ஒரு புதிய போராட்டமும் அவசியம். வெறுமனே நாம் புலத்தில் அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதால் எமது விடுதலையை வென்றெடுக்கப் போவது இல்லை. வேற்றின மக்களுக்கு இலங்கையில் உள்ள நிலை தெரியவேண்டும். ஒரு புதுப் போராட்டம் வெடிக்கவேண்டும், அதனால் தமிழீழம் மலரவேண்டும்.

ஆக்கம்: தர்மி--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

நாம் ஒன்றிணையும் போது எம்மை எதிர்ப்பதற்கு இந்த உலகம் துணியப்போவதில்லை


வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நேற்று முன்தினமும் (30) நேற்றும் (31) பிரித்தானியாவில் மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளன.

சிறீலங்காவின் தென்னிலங்கை அரசியலில் தம்மால் முடிந்த காத்திரமான செய்தி ஒன்றை தாயகத்து மக்கள் கூறிச்செல்ல, இங்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத்து தமிழ் மக்கள் தமது ஜனநாயகப் பாதைக்கான அங்கீகாரத்தை பெற்று வருகின்றனர்.

நோர்வே, பிரான்ஸ், கனடா, ஜேர்மனி, நெதர்லாந்து, சுவிற்சலாந்து, பிரித்தானியா என வடஅமெரிக்கா கண்டத்தில் இருந்து ஐரோப்பாவின் இதயம் வரையிலும் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காக வழங்கிவரும் ஆணைகள் சிறீலங்காவை தற்போது மெல்ல மெல்ல உலுக்க ஆரம்பித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) கொழும்பில் இருந்து வெளிவந்த லக்பிம வாரஏடு சிறீலங்காவில் நடைபெற்ற அரச தலைவர் தேர்தல் தொடர்பான பரபரப்பான செய்திகளுக்கு மத்தியிலும் ஐரோப்பாவின் இதயத்தில் நடந்து முடிந்த வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான கருத்துக்கணிப்பு தொடர்பில் ஒரு கட்டுரையை வரைந்துள்ளது (AAAH! BUT YOU MISSED THE OTHER POLL).

சிறீலங்காவில் நடைபெற்ற அரச தலைவருக்கான தேர்தலில் இரு பெரும் தலைகள் மோதியதால் புலம்பெயர் தமிழ் மக்களின் இந்த வாக்களிப்புக்கள் சிங்கள மக்களுக்கு எட்டவில்லை என்றும், ஜேர்மனி, சுவிற்சலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தமிழீழ கோரிக்கைக்கு "ஆம்" என நம்பமுடியாத எண்ணிக்கையில் வாக்களித்துள்ளதாகவும் அந்த கட்டுரை நீண்டு செல்கின்றது.

இந்த வாக்கெடுப்பின் ஊடாக தமிழ் மக்கள் இரு வழிகளில் தம்மை வலுப்படுத்தி வருவதாக சிங்கள பெரும்பான்மையினம் தற்போது அச்சமடைந்துள்ளது. ஒன்று தமது அரசியல் உரிமைகளை அவர்கள் அனைத்துலகத்தின் முன் குறிப்பாக மேற்குலகத்திடம் ஜனநாயக வழிகளில் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கின்றனர்.

இரண்டாவது அரசியல் வழிகளில் மிகவும் முதிர்ச்சி மிக்க சமூகமாக அது மாற்றம் பெற்று வருகின்றது. சலுகைகளும், மிரட்டல்களும், அடக்குமுறைகளும் அந்த மக்களிடம் எந்தவிதமான பாதிப்புக்களையும் கொண்டுவராது என்பது அதன் பொருள். அதனை அண்மையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற சிறீலங்காவுக்கான அரச தலைவருக்கான தேர்தலிலும் நாம் கண்டுகொண்டோம்.

உத்தியோகபூர்வ கணிப்புக்களின் படி ஏறத்தாள ஒரு இலட்சம் மக்களை தொகையை கொண்ட பிரித்தானியாவில் 64,692 தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டதுடன், 99.33 வீதமாவர்கள் தனித்தமிழீழமே தமது அரசியல் உரிமைக்கான இறுதித் தீர்வு எனவும தெரிவித்துள்ளனர்.

இது ஒரு வரலாற்று திருப்பமாகும். இதுவரை நடைபெற்ற ஏழு வாக்களிப்புக்களில் அதிக எண்ணிக்கையான மக்களை உள்வாங்கி கொண்ட வாக்கெடுப்பாக இது அமைந்துள்ளது. காலாணித்துவ ஆட்சிமுறையின் இலகுத்தன்மைக்காக எமது இனத்தின் உரிமைகளை சிங்கள இனத்திடம் தரைவார்த்த பிரித்தானியர்களின் மண்ணில் இன்று ஈழத்தமிழ் மக்கள் எழுதியுள்ள சரித்திரம்.

வரலாற்றின் சுழற்சியின் ஒரு நகர்வாகும். பிரித்தானியா வாழ் ஈழத்தமிழ் மக்களின் இந்த அரசியல் நகர்வு என்பது அனைத்துலகிலும் பரந்து வாழும் எமது தேசத்து உறவுகளுக்கு மீண்டும் ஒரு செய்தியை உரத்து கூறியுள்ளது. ஒற்றுமையே எங்கள் பலம். அதன் மூலம் தான் நாம் எமது உரிமைகளுக்கான பாதையின் அடுத்த கட்ட நகர்வுக்குள் பிரவேசிக்க முடியும்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் ஒன்றுபட்டுள்ள பிரித்தானியாவாழ் தமிழ் மக்களை போல, புலம்பெயர் தமிழ் சமூகம் தமது வேற்றுமைகளை களைந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனபதே அனைவரினதும் ஆவலாகும். அதனை தடுப்பதற்கு சிறீலங்கா தற்போது தன்னால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

எனினும் அதனையும் மீறி நாம் ஒன்றிணையும் போது எம்மை எதிர்ப்பதற்கு இந்த உலகம் துணியப்போவதில்லை. இது தான் பிரித்தானியாவாழ் தமிழ் மக்கள் கூறிச்சென்ற செய்தி

source:athirvu

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பேஸ் புக் வாடிக்கையாளர்களை கண்காணிக்கும் இலங்கை அரசு


 

 

பேஸ் புக் இணையத்தள சமூக வலைப் பின்னலில் உள்ள இலங்கை வாடிக்கையாளர்களை இலங்கை அரசு கண்காணித்து வருவதாக சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நடந்த முறைகேடுகள் உட்பட இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் உள்ள பலர் பேஸ் புக்கை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள பேஸ் புக் பாவனையாளர்களை அரசு தீவிரமாக கண்காணித்து வருவதாக அதிர்வு இணையம் அறிகிறது. 

பேஸ் புக் என்பது இணையத்தளம் மூலம் இயங்கும் ஒரு சமூக வலைப் பின்னலாகும், இதனூடாகப் பலசெய்திப் பரிமாற்றங்களும், புகைப்படங்களும் பரிமாறப்படுவதுடன், பல உறவினர்கள் நண்பர்கள் இதில் பின்னி இணைந்திருப்பதால், ஒருவரிடம் இருந்து மற்றவருக்குச் செல்லும் செய்திகள் நம்பகத்தன்மை உடையவையாகக் கருதப்படுகின்றது.source:athirvu

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

நிலவரம்-காணொளி:Nilavaram Indonesia Asylam
StumbleUpon.com Read more...

ஈராக்கில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 41 பேர் பலி


 
 

Top global news update பாக்தாத்:ஈராக்கில் தற்கொலைப் படையைச் சேர்ந்த பெண், யாத்திரிகர்கள் கூட்டத்தில் புகுந்து தன் உடலில் அணிந்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில், 41 பேர் பலியாயினர்; 106 பேர் படுகாயமடைந்தனர்.ஈராக்கில் அதிபர் சதாம் உசேன் தலைமையிலான ஆட்சி அகற்றப்பட்டது முதல், 2003ம் ஆண்டிலிருந்து அமெரிக்க படைகள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றன. படிப்படியாக இந்த படைகள் வாபசாகி வருகின்றன.இதற்கிடையே அடுத்த மாதம் ஈராக்கில் பொதுத்தேர்தல் நடக்கிறது. மைனாரிட்டியான சன்னி பிரிவைச் சேர்ந்த சதாம் உசேன், ஈராக்கை பல ஆண்டு காலம் ஆட்சி செய்தார். அவரது ஆட்சி நீக்கப்பட்டு தற்போது இங்கு ஷியா பிரிவினர் தலைமையில் ஆட்சி நடக்கிறது. சதாம் ஆதரவு பயங்கரவாதிகள் அடிக்கடி இங்கு குண்டு வெடிப்புகளை நடத்தி வருகின்றனர்.அடுத்த மாதம் நடக்கும் பொதுத்தேர்தலை குலைக்கும் பொருட்டு சமீபகாலமாக குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.இந்நிலையில் நேற்று முன்தினம், யாத்திரிகர்கள் பலர் தலைநகர் பாக்தாத்திலிருந்து புனித தலமான கர்பாலாவை நோக்கி பயணம் மேற்கொண்டனர்.இந்த கூட்டத்துக்குள் புகுந்த பர்தா அணிந்த பெண் ஒருவர் தன் உடலில் அணிந்திருந்த பெல்ட் வெடிகுண்டை வெடிக்க செய்தார். சக்தி வாய்ந்த இந்த வெடிகுண்டு வெடித்ததில் 41 பேர் உடல் சிதறி பலியாயினர்; 106 பேர் படுகாயமடைந்தனர்.


source:dinamalar

StumbleUpon.com Read more...

11,000 புலிகளையும் விடுவிக்கவும்

11,000 புலிகளையும் விடுவிக்கவும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

 

யுத்தத்தின் போது சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட 11,000 க்கும் அதிகமான முன்னாள் புலிகளை புனர்வாழ்வு நிலையங்களில் பல மாதங்களாக தடுத்து வைத்திருப்பது அடிப்படை உரிமை மீறல் எனச் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் அவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. நியூயோர்க்கில் நேற்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே அரசை இவ்வாறு கேட்டுள்ளது. "சட்ட ஸ்தம்பிதம் - இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புலிச் சந்தேக நபர்களின் நிச்சயமற்ற நிலை" என்று 30 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கைக்கு தலையங்கம் இடப்பட்டிருக்கிறது. தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் உறவினர்கள், மனிதாபிமானப் பணியாளர்கள், மனித உரிமைகள் சட்டத்தரணிகள் மற்றும் ஏனையவர்களின் பேட்டிகளை அடிப்படையாகக்கொண்ட தகவல்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

பல மாதங்களாக 11,000 பேரை இலங்கை அரசு தடுத்து வைத்திருப்பது சட்டரீதியான தாமதிப்பு என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான பணிப்பாளர் பிராட் அடம்ஸ் கூறியுள்ளார். உண்மையில் பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளவர்களை இனங்கண்டுவிட்டு, பிறரை விடுவிக்க இது சிறந்த தருணம் என்றும் அவர் கூறியுள்ளார். தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்பாக தகவல்களைத் தெரிவிக்க மறுத்துள்ள அரசு, அவர்கள் ஏன் கைது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என காரணத்தைக் கூறவும் மறுக்கிறது. மேற்படி 11,000 பேரையும் சட்டத்தரணிகள், குடும்ப உறுப்பினர்கள் பார்வையிடுவதற்கும் மறுக்கப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 

பொதுமக்களின் பாதுகாப்பிற்கான பொறுப்பையும் உரிமையையும் அரசாங்கம் கொண்டிருக்ககின்ற வேளையில், அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிப்பது அவசியம் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. புனர்வாழ்வு நிலையங்களிற்கு நிதியுதவி வழங்குமாறு இலங்கை அரசாங்கம் சர்வதேச உதவி வழங்குபவரிடம் கேட்டுள்ளது. அங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் உரிமைகளுக்கு முழு அளவில் மதிப்பளிக்கப்படாத நிலையில் உதவி வழங்குவோர் நிதி ஆதரவை வழங்கக்கூடாதென்றும் அடம்ஸ் கேட்டுள்ளார்.source:athirvu

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

வந்துவிட்டது ஆப்பிளின் புதிய 'ஐபேட்'


 
 

சான்பிரான்சிஸ்கோ: பல மாதங்களாக எல்லோரும் எதிர்பார்த்திருந்த, மேம்படுத்தப்பட்ட புதிய "ஐபேட்' விற்பனைக்கு வந்துள்ளது.இப்போது மொபைல்போனிலேயே எல்லா வசதிகளும் வந்துவிட்டாலும், வேறு சில காரணங்களுக்காக கம்ப்யூட்டரையும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இப்போது ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள "ஐபேட்', மொபைல்போனாகவும், லேப்டாப்பாகவும் செயல்படும் என்பதுதான் அதன் விசேஷம்.இதற்கு "டேப்லெட்' என்று பெயரிட்டிருக்கின்றனர்.அரை அங்குல தடிமன், 680 கிராம் எடை , 9.7 அங்குல திரை என்று சிறப்பம்சங்களோடு சந்தையில் உலாவரப் போகிறது 'ஐபேட்'. இதன் பேட்டரி பத்து மணி நேரம் தாக்கு பிடிக்கும். எலக்ட்ரானிக் உலகில் இது ஒரு முக்கிமான சாதனையாகவும் கருதப்படுகிறது.ஆப்பிள் நிறுவன தயாரிப்பான ஐபோன் மற்றும் ஐபாட் டச் ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றில் இல்லாத புதிய பல வசதிகளுடன் "ஐபேட்' தயாரிக்கப்பட்டுள்ளது.இதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் செயல்வசதிகள் உள்ளன. 16 ஜி.பி., 32 ஜி.பி., 64 ஜி.பி., அளவுக்கு தகவல்களை வைத்துக் கொள்ளும் வகையில் பல மாடல்களில் கிடைக்கின்றன.இந்திய மதிப்பில் 24 ஆயிரம் ரூபாயிலிருந்து 41 ஆயிரம் ரூபாய் வரை விலையுள்ள "ஐபேட்' டில் லேப்டாப் மற்றும் மொபைல்போன்களில் உள்ள சில வசதிகள் குறிப்பாக கேமரா, வீடியோ மற்றும் அனிமேஷன் மென்பொருள் கொண்ட இணையங்களைப் பார்க்கும் வசதி போன்றவை இதில் இல்லை.ஆனால், இ-புத்தகங்களைப் படிப்பதற்கும், இணையதளங்களைப் பார்ப்பதற்கும், வீடியோ விளையாட்டுகளுக்கும் இக்கருவி பெரிதும் பயன்படும். இது பெரிய அளவிலான ஐபாட் ஆக இருந்தாலும், லேப்டாப் போன்று இடத்தை அடைக்காமல் கையடக்க அளவிலேயே இருப்பது இதன் மற்றொரு சிறப்பு.மற்ற நிறுவனங்கள் இதுபோன்ற டேப்லெட் கருவிகளை வெளியிட்டாலும் ஆப்பிளின் மார்க்கெட்டைப் பிடிப்பது என்பது சற்றுக் கடினம்தான் என்கின்றனர் இத்துறை நிபுணர்கள். வரும் மார்ச் மாதத்திலிருந்து இது மார்க்கெட்டில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கண்ணாடிக் குடுவைக்குள் தமிழீழம்‍ -காணோளி:Eelam Tamils: Imag(in)ing 'Home'

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP