சமீபத்திய பதிவுகள்

கம்ப்யூட்டர் கேள்வி பதில்

>> Saturday, July 2, 2011


கேள்வி: விண்டோஸ் 7 மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துகிறேன். என் நிறுவனத் தள முகவரியை பிரவுசர் திறக்கும்போதே கிடைக்கும்படி அமைத்துள்ளேன். இன்னொரு என் தனிப்பட்ட விருப்ப தளத்தையும் அதே போல் மிக எளிதாக உடனே கிடைக்கும்படி அமைக்க முடியுமா?
-என். வெங்கடேஷ் குமார், சென்னை.
பதில்: விண்டோஸ் பதிப்பு எண் சொன்ன நீங்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எந்த பதிப்பு என்று சொல்லவில்லையே. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ல் இந்த வசதி தரப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டினை இயக்கி, நீங்கள் விரும்பும் உங்கள் தனிப்பட்ட தளம் செல்லவும். பின் அட்ரஸ் பாரில், அந்த தளத்தின் ஐகானை அப்படியே இழுத்து வந்து, விண்டோஸ் 7 டாஸ்க் பாரில் விட்டுவிடவும். அவ்வளவுதான்! உங்கள் விருப்பமான தளத்திற்கு ஒரு இன்ஸ்டண்ட் லிங்க் கிடைத்துவிட்டது. எவ்வளவு எளிது பார்த்தீர்களா!!

கேள்வி: இன்டர்நெட் பிரவுசிங் போது (என் சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்பி) முழுத் திரையும் (எப் 11 மூலம்) கிடைக்கிறது. இதனால், நம் பிரவுசிங் வேலைக்கு நிறைய இடம் உள்ளது. கீழாக உள்ள டாஸ்க் பாரையும் எடுத்தால், முழுத் திரையும் கிடைக்குமே? இதற்கு என்ன செய்திட வேண்டும்?
-சா. கல்யாண்குமார், தேனி.
பதில்: தாரளமாக இதனையும் மறைக்கலாம். டாஸ்க்பார் நடுவே காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். ப்ராப்பர்ட்டீஸ் என்பதில் கிளிக் செய்திடவும். டயலாக் பாக்ஸ் ஒன்று தரப்படும். இதில் ஐந்து ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இதில் Keep the taskbar on top of windows என்பது மூன்றாவ தாக இருக்கும். இதில் உள்ள டிக் அடையாளத்தின் மீது மவுஸ் கொண்டு கிளிக் செய்தால், இது நீக்கப் படும். இனி உங்களுக்கு மானிட்டரின் முழுத் திரையும், இணைய உலாவிற்குக் கிடைக்கும். டெஸ்க்டாப்பாக இருக்கும்போதுதான், டாஸ்க் பார் காட்டப்படும்.

கேள்வி: நான் தயாரிக்கும் டாகுமெண்ட்டில், வகைக்கேற்ப சில பொருள்களைக் குறிக்கும் சொற்களை, குறிப்பிட்ட வண்ணத்தில் ஹைலைட் செய்கிறேன். பின்னர் அதனை மாற்ற எண்ணுகிறேன். அப்போது டாகுமெண்ட் முழுவதும் ஒவ்வொன்றாக மாற்ற வேண்டிய துள்ளது. மொத்தமாக மாற்ற முடியுமா?
-க.மூர்த்தி, சிவகாசி.
பதில்: மொத்தமாக ஒரே ஸ்ட்ரோக்கில் மாற்றலாம். இதற்குக் குறிப்பிட்ட டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங் கள். எந்த வண்ணத்தில் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதனை ஹைலைட் டூலைக் கொண்டு தேர்ந்தெடுக் கவும். உடன் கண்ட்ரோல் + எச் அழுத்துங்கள். இப்போது Find and Replace டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் Replace டேப் தேர்ந்தெடுக்கப் பட்ட நிலையில் இருக்கும். இங்கே Replace With என்ற கட்டத்தில் கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். பின்னர், அதன் கீழாக உள்ள Format | Highlight என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கர்சரை Replace With என்ற கட்டத்தில் வைத்தபடி Replace All என்பதில் கிளிக் செய்திடுங்கள். இப்போது அனைத்து ஹைலைட் செய்த சொற்களின் வண்ணங்களும் நீங்கள் தேர்ந்தெடுத்த வண்ணத்திற்கு மாறி இருக்கும்.

கேள்வி: சில வேளைகளில் டாகுமெண்ட்களைப் பிரிண்ட் எடுக்க முயற்சிக்கையில் The margins of section ... are set outside the printable area of the page. Do you want to continue? in Word என்று எர்ரர் மெசேஜ் கிடைக்கிறது. இது எதனைக் குறிக்கிறது? இதற்கான தீர்வு என்ன?
-ந. இளங்கோவன், கோவை.
பதில்: பிரிண்டர்கள் பொதுவாக, தாள் ஒன்றின் முழு அளவில் ஒரு பக்கத்தினை அச்சடிக்காது. மார்ஜின் ஸ்பேஸ் என்று சொல்லப்படும் நான்கு பக்க இட வெளி கொடுத்து அச்சடிக்கும். மேற்காணும் செய்தி மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் கிடைத்தால், No என்பதில் கிளிக் செய்து பின் அந்த டாகுமெண்ட்டின் பேஜ் செட் அப் சென்று பார்த்து மார்ஜின் மற்றும் பேப்பர் அளவை மாற்ற வேண்டும். அச்செடுப்பதற்கு முன் பிரிண்ட் பிரிவியூ பார்த்தால் எந்த அளவில் பிரிண்ட் ஆகும் எனத் தெரியும். அதற்கேற்ற வகையில் அளவைச் சரி செய்து பின் பிரிண்ட் கட்டளை கொடுக்க வேண்டும். 

கேள்வி: எக்ஸெல் ஒர்க்புக் தயாரித்து சேவ் செய்கையில், ஒர்க்புக்கின் பிரிவியூ காட்சியுடன் அதனை எப்படி சேவ் செய்வது? அந்த வசதி உள்ளதா?
-கே.சதீஷ் தேவன், கோவை.
பதில்: நல்ல கேள்வி. ஒர்க்புக் பைல் ஒன்றை Open dialog box மூலம் திறக்கையில், அந்த ஒர்க்புக்கின் முன் காட்சித் தோற்றத்தினைப் பார்க்கும் வகையில், சேவ் செய்திடும் வழிமுறை குறித்து கேட்கிறீர்கள். இந்த வழியை எக்ஸெல் கொண்டுள்ளது. முதலில் Open dialog boxல் எப்படி பிரிவியூ காட்சி பெற செட்டிங்ஸ் அமைப்பது எனப் பார்க்கலாம். இந்த பாக்ஸைத் திறந்தவுடன் உள்ள வியூ டூல்ஸ் அருகே கீழ் விரி அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் பிரிவியூ என்பதனைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.
பிரிவியூ அமைக்க வேண்டிய ஒர்க்புக்கினைத் திறந்து கொள்ளவும். பின்னர், பைல் மெனுவில் பைலுக்கான ப்ராப்பர்ட்டீஸ் கிளிக் செய்து பெறவும். (எக்ஸெல் 2007 பயன்படுத்தினால், Office button, Prepare, Properties என்று செல்லவும். இதில் Document Properties மற்றும் Advanced Properties என்று தேர்ந்தெடுக்க வேண்டும்.) கிடைக்கும் விண்டோவில், Summary என்ற டேப் தேந்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும். டயலாக் பாக்ஸின் கீழாக Save Preview Picture என்று இருப்பதில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். பின்னர் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடவும். அடுத்து இந்த ஒர்க்புக்கினைத் திறக்கும் போது உங்களுக்கு அதன் முன் காட்சித் தோற்றம் கிடைக்கும்.

கேள்வி: சமீபத்தில் நான் ஆப்பரா பிரவுசரை பதிந்து இயக்கிக் கொண்டு வருகிறேன். பல நல்ல அம்சங்களுடனும் வசதிகளுடன் இது உள்ளது. ஆனால் என் பழைய பயர்பாக்ஸ் பிரவுசரில் உள்ள புக்மார்க்குகளை இதற்கு மாற்ற முடியவில்லை. இதற்கு என்ன வழி?
-க.திருச்செல்வன், திருப்பூர்.
பதில்: இந்த கேள்விக்கு முடியாது என்ற பதிலைச் சொல்ல வருந்துகிறேன். ஆப்பரா பிரவுசர் புக் மார்க்குகளுக்காகத் தேடுகையில் .html பார்மட்டில் உள்ள புக்மார்க்குகளையே எதிர்பார்க்கு. ஏனென்றால், அது அந்த வகை புக்மார்க்குகளையே கையாளும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. ஆனால், பயர்பாக்ஸ் பிரவுசர் .டீண்ணிண பார்மட்டில் புக்மார்க்குகளை உருவாக்கும். இந்த பிரச்னையைத் தீர்ப்பதற்கான வழியை இணையத்தில் தேடினேன்; கிடைக்கவில்லை. கிடைத் தவுடன் இந்த பக்கங்களில் தருகிறேன்.

கேள்வி: அபாண்டன்வேர் என்று ஒரு நூலில் படித்தேன். இந்த சொல் எதனைக் குறிக்கிறது? 
-சி.வெங்கட் மோகன், திருத்தணி.
பதில்: நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப் பட்டு, தற்போது மக்களுக்கு வழங்கப்படாமல் அல்லது விற்பனை செய்யப் படாமல் இருக்கும் சாப்ட்வேர் தொகுப்புகளை இவ்வாறு அழைப்பார்கள். அதனால் தரப்படும் பயன்கள் தற்போது இலவச மாகவோ, அல்லது மற்ற சாப்ட்வேர் தொகுப்புகளில் ஓர் அங்கமாகவோ இருக்கலாம். அதனால் அது ஒதுக்கப் பட்டிருக்கலாம்.

கேள்வி: எந்த பிரவுசரில் App Tab கிடைக்கிறது? இதன் பயன் என்ன? எப்படி பயன்படுத்தலாம்?
-எம்.கணேஷ், புதுச்சேரி.
பதில்: பயர்பாக்ஸ் பதிப்பு 4 பிரவுசரில் இந்த App Tab கிடைக்கிறது. நாம் அடிக்கடி பயன்படுத்தும் பல இணைய தளங்களை இதில் அடக்கி வைக்கலாம். இந்த டேப்பில் கிளிக் செய்தால், அவை அனைத்தும் திறக்கப்படும். இதனால் பிரவுசரில் இடம் மிச்சமாகிறது. இதனை செட் செய்திட ஏதேனும் ஒரு டேப்பில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Pin as App Tab என்பதைத் தேர்ந் தெடுக்கவும். நீங்கள் திறந்துள்ள அந்த தளம் இந்த டேப்பில் சேர்க்கப்படும். இப்படியே இந்த சிறிய டேப்பில் பல தளங்களைச் சேர்க்கலாம். சேர்த்த தள முகவரியை நீக்க, மீண்டும் ரைட் கிளிக் செய்து Unpin Tab என்பதில் கிளிக் செய்தால் போதும். அந்த தளம் நீக்கப்படும். 

கேள்வி: அறிவியல் சார்ந்த பல சந்தேகங்களுக்கு மொத்தமாக விளக்கம் தரும் வகையில் ஏதேனும் ஓர் இணைய தளம் உள்ளதா? அதன் முகவரியையும் சார்ந்த தகவல்களையும் தரவும்.
- டி. கிறிஸ்டோபல் சிந்தியா, காரைக்கால்.
பதில்: நல்ல கேள்வி. இந்த கேள்வியின் பின்னணியில் தளம் ஒன்றைத் தேடியபோது சிக்கியது www.sciencedaily.com என்ற முகவரியில் உள்ள தளம். இதில் எந்த அறிவியல் வினாக்களுக்கும் தெளிவான தகவல்கள் தரப்படுகின்றன. பழைய அறிவியல் கோட்பாடுகள் முதல் இன்றைய நானோ தொழில் நுட்பம் வரையில் அனைத்திற்கும் தகவல்கள் கிடைக்கின்றன. சென்று பார்த்துக் குறித்துக் கொண்டு அடிக்கடி இதனைப் படித்துப் பார்க்கவும்.
 

source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP