சமீபத்திய பதிவுகள்

துபாயை மிஞ்சியது ஹாங்காங் 118 மாடி கட்டிடத்தில் வருகிறது உலகின் உயரமான ஹோட்டல்

>> Friday, October 30, 2009

 

ஹாங்காங் : ஹாங்காங் நகரில் உள்ள மிகவும் உயரமான கட்டிடத்தில் உலகத்திலேயே மிகவும் அதிக உயரத்தில் உள்ள 17 மாடி ஹோட்டல் உருவாகி வருகிறது. இதனை ரிட்ஜ் கார்ல்டன் குரூப் ஆப் ஹோட்டல்ஸ் உருவாக்கி வருகிறது. அந்த ஹோட்டல் 2010ல் இயங்கத் தொடங்கும். ஹாங்காங் துறைமுகத்தை நோக்கிய நிலையில் சர்வ தேச வர்த்தக மையக் கட்டிடம் உருவாகி வருகிறது. இக்கட்டிடத்தின் இறுதி உயரம் 484 மீட்டராக இருக்கும். மொத்தம் 118 மாடிகளுடன் ஹாங்காங் நகரில் உள்ள மிகவும் அதிக உயரமான கட்டிடமாக இது அமையும். இக்கட்டிடம் ஹாங்காங்கில் மிக உயரமான கட்டிடமாக இருந்தாலும் உலகில் உள்ள உயரமான கட்டிடங்களின் வரிசையில் 3வது இடத்தில் இருக்கும். 

இக்கட்டிடத்தின் மேலே உள்ள 17 மாடிகளில் ரிட்ஜ் கார்ல்டன் ஹோட்டல் குரூப்பின் 6 நட்சத்திர ஹோட்டல் அமையும். இந்த ஹோட்டலில் மொத்தம் 312 அறைகள் இருக்கும். தற்பொழுது உலகின் மிகவும் உயரமான ஹோட்டல் துபாயில் உள்ளது. அது 333 மீட்டர் உயரம் உடையது. 72 மாடிகளைக் கொண்டது. அடுத்து 330 மீட்டர் உயரம் கொண்ட ரியோகியாங் ஹோட்டல் வட கொரியத் தலைநகரான பியோன்கியாங் நகரில் உள்ளது. மூன்றாவது உயரம் உள்ள அல் அராப் ஹோட்டலும் துபாயில் உள்ளது. அதன் உயரம் 321 மீட்டர். எனவே ரிட்ஜ் கார்ல்டன் பணிகள் முடிந்ததும் அது உலகின் மிக உயரமான ஹோட்டலாக அமையும். அது ஹாங்காங் நகரின் புதிய சமூக மையமாக அமையும் என ரிட்ஜ் கார்ல்டன் குரூப் துணைத் தலைவர் மார்க் டிகாசினிஸ் கூறினார்.

source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பிரபாகரன் அடுத்த கட்ட போராட்டத்தை தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளில் தயாரகி வருகிரார்

'பிரபாகரன் அடுத்த கட்ட போராட்டத்தை தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளில் தயாரகி வருகிரார்' -நெடுமாறன்

30   October    2009Prabakaran Prepair For Next Stage Ezham War - Nedumaaran

ஈழத் தமிழர் பிரச்சினையை அணையாத தீபமாக கொண்டு செலுத்தும் தமிழகத் தலைவர் நெடுமாறன். அரசியல் ரீதியாக வெவ்வேறு முடிவுகள் எடுக்கும் தலைவர்களையும் ஒன்றாக இனச்சரடு வைத்து இணைத்துச் செல்வது இவர்தான். இதனால் முதல்வர் குருணாநிதிக்கு முதல் எதிரியானார். அவர் ஆனந்த விகடன் வார இதழுக்கு அளித்த பேட்டியின் திரு.பிரபாகரன் குறித்து கேட்ட கேள்விக்கான பதில் வருமாறு. 

கேள்வி: "பிரபாகரன் குறித்த மர்மம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. ஆனால் அவர் இருக்கிறார் என்று எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?"

பதில் :- "இந்தியாவும்,இலங்கையும் அந்த மர்மத்தை அறியத்தான் அலைந்து கொண்டிருக்கின்றது. பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். அடுத்தகட்ட போராட்டத்தைத் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளில் தயாராகி வருகிறார் என்பதை மட்டும்தான் இன்றைய நிலையில் என்னால் வெளியில் சொல்ல முடியும்.

மே 17ம் திகதி பிரபாகரன் இறந்ததாக அறிவித்தார்கள். 20ம் திகதி நாங்கள் சென்னையில் எழுச்சிப் பேரணி நடாத்தினோம். பல்லாயிரம் தமிழர்கள் உற்சாகத்துடன் வந்தார்கள். கடந்த 18ம் திகதி 50 ஆயிரம் தமிழர்கள் பேரணி நடாத்தியிருக்கிறார்கள். பிரபாகரன் இறந்து விட்டார் புலிகள் தோற்று விட்டார்கள் என்ற செய்தியை அவர்கள் துளியளவும் நம்பவில்லை. என்வேதான் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் தொடர்கின்றன!" 

Prabakaran Prepair For Next Stage Ezham War - Nedumaaran

கேள்வி : "புலிகள் அமைப்பு இன்னமும் இருப்பதாகச் சொல்கிறீர்களா?" 

பதில் :- "அதே வலிமையுடன் இருப்பதாகவே சொல்கிறேன். ஒன்றே கால் லட்சம் வீரர்களுடன் போன இந்திய அமைதிப்படையை இரண்டாயிரம் பேரை வைத்து எதிர் கொண்டார் பிரபாகரன். 650 புலிகள் வீரச்சாவை அடந்தார்கள். பலரும் சிதறடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்குத் தப்பினார்கள். ஆனால் மிச்சம் இருந்த சொற்பத் தொகையான புலிகளை மட்டும் வைத்து கெரில்லா தாக்குதல் மூலமாக அமைதிப்படையை திருப்பி அனுப்பினார் பிரபாகரன். 'புலிகளால் இனி தலையெடுக்க முடியாது. பிரபாகரன் கதை முடிந்துவிட்டது' என்று சென்னையில் வைத்து ராணுவத்தளபதி கல்கத் சொன்னார். அதன் பிறகுதான் தமிழீழத்தின் முக்கிய பகுதிகள் அத்தனையயும் பிடித்தார்கள். எனவே, இன்னலும் துன்பமும் புலிகளுக்கு வருவது இயற்கை. அதை அவர்கள் வெல்வதும் இயற்கை.

என்று உறுதியுடன் பதிலளித்துள்ளார் திரு.நெடுமாறன்.

Prabakaran Prepair For Next Stage Ezham War - Nedumaaran

Prabakaran Prepair For Next Stage Ezham War - Nedumaaran

source:thedipaar

StumbleUpon.com Read more...

திருப்பதியில் மகிந்த ராஜபக்ஷவிற்கு கிரக தோஷ பூஜை 

மகிந்தவுக்கு தற்போது கால நிலை சரியில்லையாம். அவருக்கு ஏற்பட்டுள்ள கிரக தோஷங்களின் பாதிப்பைக் குறைப்பதற்காக 30ம் திகதி இந்தியாவின் ஆந்திரா மாநிலத்திலுள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் விசேட பூஜையொன்றை நடத்தவுள்ளதாக அலரிமாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நாடாளுமன்ற உறுப்பினர் நிருபமா ராஜபக்ஷவின் கணவரான திரு நடேசனினால் இந்த விசேட பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதுடன், இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத்தும் இதற்கான இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள பாரிய கிரக தோஷங்களிலிருந்து மீள்வதற்காக நேற்று (29) முதல் நாட்டிற்கு வெளியே இருக்குமாறு ஜனாதிபதியின் சோதிடர்கள் ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன. சில தினங்கள் நாட்டிற்கு வெளியே நின்றுவிட்டு நாடு திரும்ப இருக்கிறார் ஜனாதிபதி. இவர் விதியை மதியால் வெல்லலாம் என நினைக்கிறார் போலும். நடப்பது நடந்தே தீரும்... !source:athirvu
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ராஜபக்சே..ஆயிரம் மடங்கு ஹிட்லர்!- நெடுமாறன்

 ராஜபக்சே..ஆயிரம் மடங்கு ஹிட்லர்!- நெடுமாறன்  

altஹிட்லரைவிட ஆயிரம் மடங்கு கொடுமையை இலங்கை தமிழர்களுக்கு ராஜபக்சே செய்து வருகிறார் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறினார். 

இலங்கையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்ககளை விடுவிக்கக் கோரி நெடுமாறன் தலைமையில் கோவையில் தொடங்கிய பிரச்சாரப் பயணம் ஈரோடு வந்தது.


அங்கு வீரப்பன்சத்திரத்தில் நடந்த வரவேற்பு பொதுக் கூட்டத்தில் நெடுமாறன் பேசுகையில்,


இலங்கையில் முள்வேலி முகாம்களில் 3.5 லட்சம் தமிழர்கள்  அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு சரியான உணவு, குடிநீர், மருத்துவ வசதி இல்லாமல் அவர்கள் அவதிப்படுகிறார்கள். தினமும் பலர் இறக்கிறார்கள்.


ஹிட்லரைவிட ஆயிரம் மடங்கு கொடுமையை இலங்கை தமிழர்களுக்கு ராஜபக்சே செய்து வருகிறார். ஆனால் இந்திய மற்றும் தமிழக அரசுகளுக்கு மனித நேய உணர்வுகூட இல்லை.


இலங்கையில் மனித உரிமை மீறல் நடப்பதாக கூறி ராஜபக்சே கேட்ட ரூ.5,000 கோடி கடனை வழங்க உலக வங்கி மறுத்து விட்டது. ஆனால் இந்திய அரசு ரூ.5,000 கோடி கடன் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.


இலங்கை அகதிகள் முகாமில் இருந்து 50,000 பேர் விடுவிக்கப்பட்டதாக முதல்வர் கருணாநிதி கூறுகிறார். அவர்கள் தங்கள் வீடுகளுக்கு பத்திரமாக சென்று சேர்ந்தார்களா என்று யாரும் உறுதி செய்யவில்லை.


தமிழர்களின் பிரச்சனையை வெளிபடுத்த மக்களின் ஆதரவு திரட்ட இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. தமிழர்களின் உரிமை பாதுகாக்கபடவும்இ இலங்கை தமிழ் மக்கள் விடுதலை பெற்று சொந்த இடம் செல்லும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றார்.

 
source:murasam.
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கின்னஸில் இடம் பிடித்தது உலகின் வயதான நாய் 20 வயது ஓட்டோ தேர்வு


 

லண்டன் : உலகின் மிகவும் வயதான நாயாக ஓட்டோ ஜோன்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இது இடம் பெற்றுள்ளது. பிரிட்டனில் காணப்படும் டாக்ஷந்த் டெரியர் இனத்தைச் சேர்ந்தது ஓட்டோ ஜோன்ஸ். இதன் வயது 20 ஆண்டுகள் 8 மாதங்கள். செக்ஸ் விஷயத்தில் பேச்சலர். உணவுக் கட்டுப்பாட்டு டன் வளர்க்கப்பட்ட ஓட்டோ, உலகிலேயே வயதான நாயாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதன் உரிமையாளர்களான பிரிட்டனில் வசிக்கும் லின் மற்றும் பீட்டர் ஜோன்ஸ் தம்பதி, ஓட்டோ பற்றி கூறுகையில்,

ÔÔஓட்டோ குட்டியாக இருந்தபோது, ஷ்ராப்ஷைரிலிருந்து கொண்டு வந்து வளர்த்தோம். அவனுக்கு கொழுப்பு அல்லாத நல்ல சத்தான உணவு வகைகளையே வழங்குவோம். சண்டே டின்னர் மற்றும் காய்கறிகள் மிகவும் விரும்பி சாப்பிடுவான். எங்களது தெருவில் விளையாடும் குழந்தைகள், ஓட்டோவுடன் விளையாடுவதை மிகவும் விரும்புவார்கள். இப்போதுகூட, முதிய வயதிலும் மிகவும் துடிப்பாக உள்ள இவன், குழந்தைகளு டன் ஓடியாடி விளையாடுகிறான். மிகவும் தைரியமான அவன் எதைக் கண்டும் பயப்படமாட்டான்ÕÕ என்றனர்

--

source:dinakaran
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப்


 

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் அதிக பயனுள்ள செயல்பாட்டினை லேப் டாப் கம்ப்யூட்டர் தருவதாகப் பலர் கருதுகின்றனர். இதற்குக் காரணம் எங்கும் எடுத்துச் சென்று இதனைப் பயன்படுத்த முடிவதே. இருப்பினும் மற்ற வழிகளில் லேப்டாப், டெஸ்க் டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் குறைவான செயல்பாட்டுக்கே வழி அமைக்கிறது. லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாட்டினை இன்னும் கூடுதலாக முழுமையாக்கும் வகையில், இரு மானிட்டர்கள் இ?79;ைந்த லேப் டாப் ஒன்று இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. ஸ்பேஸ்புக் என அழைக்கப்பட இருக்கும் இந்த லேப் டாப் வடிவத்தினை ஜிஸ்கிரீன் (gscreen) என்னும் அலாஸ்கா தொழில் நுட்ப நிறுவனம் தந்துள்ளது. இதில் 15.4 அங்குல அளவிலான இரு ஸ்கிரீன்கள் இருக்கும். இதனால் பல வேலைகளை ஒரே நேரத்தில், ஒரு கம்ப்யூட்டரை வைத்துக் கொண்டு மேற்கொள்ள முடியும். இதன் மூலம் கம்ப்யூட்டரின் திறனை முழுமையாகப் பயன்படுத்த முடியும். 13, 16 மற்றும் 17 அங்குல அகலத்தில் ஸ்கிரீன் கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டர்களையும், இந்நிறுவனம் வெளியிடத் திட்டமிடுகிறது. தேவைப்படும்போது இரண்டாவது ஸ்கிரீன் ஸ்லைடிங் போன் போல வெளியே இழுக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும். தேவையில்லாத போது மடக்கி வைக்கப்பட்டு ஒரு திரையுடன் இது பயன்படும்.  இந்த இரு திரை லேப் டாப் கம்ப்யூட்டர், இன்டெல் கோர் 2 டுயோ சிப், 4 ஜிபி ராம், 320 ஜிபி திறன் கொண்ட 7200 ஆர்.பி.எம். ஹார்ட் டிஸ்க், டிவிடி டிரைவ் மற்றும் பல வழக்கமானவற்றுடன் அமைக்கப்படுகிறது. வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் இது அமேசான் இணைய தளம் வழியாக வெளியிடப்படலாம். விலை இன்னும் முடிவாகவில்லை என்றாலும் ஜிஸ்கிரீன் நிறுவனம் இதனை 3,000 டாலருக்குள் இருக்கும்படி அமைக்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ளது.source:dinamalar--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஆப்கனில் பலியான வீரர்கள் சடலத்திற்கு ஒபாமா அஞ்சலி

Top global news updateவாஷிங்ணுவ வீரர்களின் உடலுக்கு, அதிபர் ஒபாமா  நேற்று மரியாதை செலுத்தினார். ஆப்கனில், இந்த வாரம் நடைபெற்ற சாலையோர குண்டு வெடிப்பில், அமெரிக்க ராணுவ வீரர்கள் எட்டு பேர், ஹெலிகாப்டர் விபத்தில் ஏழு ராணுவ வீரர்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு ஏஜன்ட்கள் மூன்று பேர் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரின் உடலும், சி-17 விமானத்தின் மூலம் அமெரிக்காவில் உள்ள டோவர் விமானப் படை தளத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அதன் பின், அங்கு வந்த அதிபர் ஒபாமா, இறந்த ராணுவ வீரர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.  அதிபர் ஒபாமாவுடன், அட்டர்னி ஜெனரல் எரிக் கோல்டர், போதைப் பொருள் தடுப்பு பிரிவின் தற்காலிக நிர்வாகி மைக்கேல் லியன்கார்ட் மற்றும் இரண்டு அதிகாரிகள் ஆகியோர் உடன் வந்தனர்.முன்னதாக அதிபர் ஒபாமா, உயிரிழந்த ராணுவ வீரர்களின் உறவினர்களைச் சந்தித்து பேசியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒபாமா அதிபராக பதவியேற்ற பின், இந்த விமானப்படைத் தளத்திற்கு தற்போது தான் முதல் முறையாக வருகை தந்துள்ளார். மரியாதை செலுத்திய பின், அவர் வாஷிங்டன் திரும்பினார். கடந்த எட்டு ஆண்டுகளாக ஆப்கனில் நடந்து வரும் போரில், இந்த மாதம் மட்டும், அமெரிக்காவைச் சேர்ந்த 53 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், ஆப்கனில் பயங்கரவாதிகளை ஒடுக்க நடந்து வரும் போருக்காக, அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்புவது குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளதுsource:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

idlyvadai

இட்லிவடை என்ற பிரபல பதிவரின் பக்கங்கள் மேய்ந்துகொண்டிருந்தேன்.அப்பொழுது அவர் கொடுத்திருந்த ஒரு சிகப்பு எழுது அறிவிப்பு என்னை கவனிக்க வைத்தது. பழைய அறிவிப்பாக இருந்தாலும் புதிய தாக்கம் இருப்பதாக தெரிகிறது. இது தான் அந்த அறிவிப்பு.  

இட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.


வேறு யாராவது இந்த பெயரை உபயோகித்து உள்ளார்களா? என்று எனக்கு தெரியவில்லை.ஆனால் நான் இந்த பதிவுலகம் வந்த புதிதில் தெரியாமல் ஒரு பெயரை சூட்டி கொப்பி செய்ய ஆரப்பித்தேன்.அவ்வளாவுதான் அந்த பெயரில் உள்ள பழைய பதிவர் வெகுண்டெழுந்து கேவலப்படுத்திவிட்டார்.ஆனால் அந்த வகையில் நாகரீகமாக அறிவிப்பு செய்த இட்லிவடை அவர்களை பாராட்ட தோன்றுகிறது.உன் பாராட்டு யாருங்கு வேனும்ன்னு கேக்காதிங்க.சும்ம ஒரு சந்தோசத்துக்குதான்
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP