12 சிக்சர் அடித்து மார்ஷல் சாதனை
>> Sunday, August 31, 2008
|
கனடாவுக்கு எதிரான ஒரு தின ஆட்டத்தில் 12 சிக்சர்கள் விளாசி சாதனை புரிந்தார் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் சேவியர் மார்ஷல் கனடாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்தது. மேற்கிந்தியத் தீவுகளின் சேவியர் மார்ஷல் 118 பந்துகளில் 12 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 157 ரன்கள் குவித்தார். ஒரு தின ஆட்டங்களில் மார்ஷல் அரை சதத்தைக் கடந்தது இதுவே முதல்முறை. 1996-ல் இலங்கையின் சனத் ஜயசூர்யவும், பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிதியும் 11 சிக்சர்கள் அடித்ததே ஓர் ஆட்டத்தில் அதிக சிக்சருக்கான சாதனையாக இதுவரை இருந்தது. தொடர்ந்து ஆடிய கனடாவும் சிறப்பாக விளையாடியது. இருப்பினும் 47.2 ஓவர்களில் 254 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மேற்கிந்தியத் தீவுகள் 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. |
http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1219555745&archive=&start_from=&ucat=4&
Read more...