சமீபத்திய பதிவுகள்

சிறிலங்கா அரச படைகளின் அழிவுமிகுந்த தாக்குதலை உடனே நிறுத்துங்கள்: மனித உரிமைகள் ஆணையாளரிடம் சுவிஸ் தமிழர் பேரவை வேண்டுகோள்

>> Saturday, January 17, 2009

 
 
சிறிலங்கா அரச படைகளின் ஆயுதத்தாக்குதலை நிறுத்தி, வன்னிக்குப் போதுமான அளவு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி, வன்னியில் உள்ள மருத்துவமனைகளுக்கு மருந்து மற்றும் உபகரணங்களை வழங்கி, வன்னியில் உள்ள மருத்துவமனைகளைப் பாதுகாப்புப் பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்தும்படி மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி நவநீதம்பிள்ளை அம்மையாரை சுவிஸ் தமிழர் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக  சுவிற்சர்லாந்து பேர்ணை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சுவிஸ் தமிழர் பேரவையின் தலைவர் சண். தவராஜா, செயலாளர் தம்பிப்பிள்ளை நமசிவாயம் ஆகியோர் இணைந்து கையொப்பமிட்டு மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி நவநீதம்பிள்ளை அம்மையாருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கலாநிதி. நவநீதம்பிள்ளை
மனித உரிமைகள் ஆணையாளர்
மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம்
தேசங்களின் மாளிகை
ஜெனீவா
அன்பான அம்மணி,

வன்னியில் நிகழும் அவலத்தை நிறுத்துங்கள்
இலங்கையில் வன்னிப் போர்க்களங்களில் சிக்கித் தவிக்கும் தமிழ்ச் சகோதரங்களின் பாதுகாப்பு தொடர்பாக சுவிசில் வாழும் தமிழ் அகதிகளாகிய நாம் பெரிதும் கவலையடைகிறோம்.
சிறிலங்கா அரசாங்கத்தின் ஆயுதப் படைகள் எடுத்து வரும் கண்மூடித்தனமான படை நடவடிக்கைகளால், வன்னிப் பகுதியில் வாழும் ஏறக்குறைய முழுச் சனத் தொகையுமான 4 லட்சம் பேர் தமது வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர் என்பதைப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இடங்களைப் பிடிப்பதில் மட்டுமே கருத்தாக உள்ள அவர்கள் மக்களின் பாதுகாப்பை உதாசீனம் செய்து மிக அதிக அளவிலான பலத்தைப் பயன்படுத்துகின்றனர்.
குடிமக்களின் வாழ்விடங்களின் மீது வகை தொகையற்ற வானூர்தி குண்டு வீச்சுக்கள், கண்மூடித்தனமான எறிகணை வீச்சுக்கள், பல்குழல் எறிகணைச் செலுத்திகளின் பாவனை, கிளைமோர்த் தாக்குதல்கள் என்பன நாளாந்த நிகழ்வுகளாக உள்ளன.
அண்மைக்காலமாக சிறிலங்கா வான் படையானது, அனைத்துலக அமைப்புக்களால் தடை செய்யப்படக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள கொத்துக்குண்டுகளை பாவித்து வருகிறது.
இதன் காரணமா பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காயப்பட்டும் உறுப்புகளை இழந்தும் உள்ளனர். அரசின் பொருளாதாரத் தடைகளால் பொதுமக்களுக்கான உணவு, மருந்து வாழ்விடம் மற்றும் அத்தியாவசிய தேவைகளின் தட்டுப்பாடுகள் நிலவுகின்றன.
உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளான மக்களுக்கான அவசர தேவைகளை அரசு தானும் செய்யாது இருப்பதோடு, அவற்றை உள்ளுர் மற்றும் அனைத்துலக அரசு சார்பற்ற உதவி நிறுவனங்களையும் செய்யவிடாது தடை செய்துள்ளது.
அரச படையும் உணவு மற்றும் பொருட்களையும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எடுத்துப் போக விடாது தடை செய்கிறது. 10 ஆயிரத்துக்கும் அதிகமான பிள்ளைகள் கல்வி வசதிகளை இழந்துள்ளனர்.
தற்பொழுது மக்கள் மிகக் குறுகிய பகுதியில் போதுமான வசதிகள் அற்று வாழ வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 40 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் 4 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நாளாந்தம் மக்களின் வாழ்விடம் சுருங்கி வருகின்றது. அரச நிர்வாகக் கட்டமைப்பு இவர்களுக்குப் போதுமான அளவு உணவு மற்றும் பொருட்களை வழங்க முடியாது சிரமப்படுகிறது.
சிறிலங்கா அரசு வன்னிக்குப் போதுமான அளவு உணவு ஊர்திகள் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறிக் கொண்டாலும், முடிவில் அவை போகும் வழித் தடங்களில் வேண்டும் என்றே தாக்குதல்களைச் செய்து சாக்குப் போக்குச் சொல்லி நிறுத்தி விடுகிறது.
மிக அதிக அளவில் துன்பத்துக்கு உள்ளான நிலையிலும் மக்கள் பழி வாங்கல்களுக்குப் பயந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் போக விரும்புகிறார்கள் இல்லை.
ஏற்கனவே மருந்து மற்றும் வசதிகள் இல்லாது தத்தளிக்கும் மருத்துவமனைகள் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகின்றன.
மருத்துவப் பணியாளர்கள் அதிகரித்து வரும் காயக்காரர்களின்  தொகையால் சிகிச்சை அளிக்க முடியாது மாபெரும் பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
சிறிலங்கா அரசு மருந்துகள் மற்றும் உபகரணங்களை தடை செய்ததன் மூலம் மக்களின் உயிருக்கு மிகப் பெரும் அச்சுறுத்தைலை ஏற்படுத்தியுள்ளது. சில மருத்துவமனைகள் தற்காலிக இடங்களுக்கு ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டன.
இத்தகைய தற்காலிக மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு  உள்ளாகி விடுகின்றன. இருக்கும் மருத்துவமனைகளில் ஆபத்தான நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியாத காரணத்தால், அவர்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு மேலதிக சிகிச்சைக்கு எடுத்துச் செல்ல வேண்டி இருக்கிறது.
எனினும் சிறிலங்கா இராணுவத்தின் தடைகள் காரணமாகப் பல ஆபத்தான நிலையில் இருந்த நோயாளிகள் கொண்டு செல்லப்பட முடியாது இறந்துள்ளனர்.
பொருளாதாரத் தடை காரணமாக ஏற்கனவே போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டுள்ள சிறு பிள்ளைகள் பட்டினிக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அந்தப் பகுதிக்கு உப உணவுகள் மீது தடை போடப்பட்டுள்ளது. இது குழந்தைகளுக்கும் கர்ப்பிணித் தாய்மாருக்கும் கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளன. 
சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் யாவருக்கும் அறிந்த விடயமாகும். சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல் காரணமாக கடந்த மனித உரிமை சபைத் தேர்தலில் அது தனது அங்கத்துவத்தை இழக்க நேர்ந்தது. கடத்தல்கள், சித்திரவதை, நீதிக்குப் புறம்பான கொலைகள், பாலியல் வல்லுறவுகள், காணாமற் போக்கடித்தல்கள், ஊடகச் சுதந்திர மறுப்பு, போன்றவை இலங்கைக்குப் புதியன அல்ல. 
சிறிலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான மேற்குறித்த செயற்பாடுகள் ஒரு இனச் சுத்திகரிப்பு அல்லாது வேறு எதுவும் அல்ல. உலகில் உள்ள ஜனநாயகச் சக்திகள் இவை போன்ற செயற்பாடுகள் கட்டுப்பாடின்றி தொடர்வதை அனுமதிக்க முடியாது.
வன்னியில் வாழும் மக்கள் ஏற்கனவே ஐ.நா. உட்பட அனைத்துலக சமூகத்திடம் பல தடவைகள் தம்மை இந்த இன அழிப்புப் போரிலிருந்து காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் இதுவரை இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த எந்தவித காத்திரமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
சுவிஸ் தமிழர் பேரவையும் தனது பங்குக்கு பல தடவைகள் அனைத்துலக சமூகத்திடம் விண்ணப்பங்களைச் செய்துள்ளது.
காசா நிலப் பரப்பில் வாழும் மக்களின் அவல நிலை பற்றிய அனைத்துலக சமூகத்தின் செயற்பாடும்  நல்லெண்ணமும் கண்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம். ஓவ்வொரு ஜனநாயக நாடும் மனிதாபிமான அமைப்பும் ஆயுத மோதலைத் தவிர்த்து காசா மக்களின் உணவுக்கும் உணர்வுக்கும் பரிந்துரை செய்கின்றன.
சிறிலங்கா அரசின் ஆயுதப் படைகளால் வன்னி மக்களும் அதேபோன்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் ஒரு மனித அவலத்தின் விளிம்பில் உள்ளனர்.
எனவே காசா மக்களின் நலனுக்காகப் பாடுபடும் அனைவரையும் தலையிட்டு இனப் படுகொலையில் இருந்து தமிழ் மக்களைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மனித உரிமைகள் ஆணையாளரை நாம் தயவாகக் கேட்டுக்கொள்வது:
சிறிலங்கா அரச படைகளின் அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதத் தாக்குதலை உடனே நிறுத்த அழுத்தம் கொடுக்க
வன்னிக்குப் போதுமான அளவு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அனுப்பு உறுதிப்படுத்த
வன்னியில் உள்ள மருத்துவ மனைகளுக்கு மருந்து மற்றும் உபகரணங்களை வழங்க
வன்னியில் உள்ள மருத்துவமனைகளைப் பாதுகாப்பு பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்த சிறிலங்கா அரசைத் தூண்ட
உள்ளுர் மற்றும் அனைத்துலக மனிதாபிமான அமைப்புகளை வன்னிக்குள் அனுமதிக்க சிறிலங்கா அரசை தூண்ட
தங்களின் மேலான பதவி மூலம் தாங்கள் இதுவிடயத்தில் மேலும் காலம் தாழ்த்தாது தலையிட்டு ஜனநாயக நாடுகளும், மனிதநேய அமைப்புகளும் தமிழ் மக்களை இன அழிப்பிலிருந்து காப்பாற்றுமாறு, தங்களைத் தயவாய்க் கேட்டுக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. தலைவர், ஐரோப்பிய ஒன்றியம்
2. தலைவர், சுவிஸ் ஒன்றியம்
3. அனைத்துலக அரச சார்பற்ற அமைப்புக்கள்
ஆகியோருக்கும் கடிதத்தின் பிரதிகள் அனுப்பப்பட்டுள்ளன.

 

 

StumbleUpon.com Read more...

தமிழர்களை கொன்று குவித்தால் ஏவுகணை வீசுவோம் என்று இந்தியா மிரட்டக்கூடாதா?: தா.பாண்டியன் கேள்வி

 
 
இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களை தொட‌ர்‌ந்து கொ‌‌ன்று ‌கு‌வி‌த்தா‌ல் ஏவுகணை ‌வீசுவோ‌ம் எ‌ன்று இ‌ந்‌தியா பூ‌ச்சா‌ண்டி கா‌ட்டினாலே போது‌ம், ‌அ‌ங்கு‌ள்ள ‌சி‌‌ங்களவ‌ன் இ‌ந்தளவு‌க்கு ஆ‌ட்ட‌ம் கா‌ட்டுவானா? என்று இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்ச‌ி‌‌யி‌ன் மா‌நில செயலாளர் தா.பா‌ண்டிய‌ன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்த இந்திய ம‌த்‌‌திய அரசை வ‌லியுறு‌த்த‌ி மூன்றாவது நாளாக உ‌ண்ணாநிலை இரு‌ந்து வரு‌ம் ‌விடுதலைச் ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் தொ‌ல். ‌திருமாவளவனை வா‌‌‌ழ்‌த்‌தி இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்ச‌ி‌‌யி‌ன் மா‌நில செயலாளர் தா.பா‌ண்டிய‌ன் உரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இல‌ங்கை‌யி‌ல் நட‌க்கு‌ம் போரை உடனடியாக தடு‌த்து ‌நிறு‌த்த‌த்தா‌ன் ம‌த்‌‌திய அரசை வ‌லியுறு‌த்த‌ினோ‌ம்.
‌சி‌ங்களவ‌ர்க‌ள் ‌மீது கு‌ண்டுபோட‌ச் சொ‌ல்ல‌வி‌ல்லை. ‌ச‌ந்‌திரனு‌க்கு இ‌ந்‌தியா ச‌ந்‌திராயனை அனு‌ப்‌பியது. அதனை‌ப் போன்று இல‌ங்கையை நோ‌க்‌கி ஏவுகணையை ‌இ‌ந்‌தியா ‌வீச‌த் தேவை‌யி‌ல்லை. இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களை தொட‌ர்‌ந்து கொ‌‌ன்று ‌கு‌வி‌த்தா‌ல் ஏவுகணை ‌வீசுவோ‌ம் எ‌ன்று இ‌ந்‌தியா பூ‌ச்சா‌ண்டி கா‌ட்டினால் போது‌ம், ‌அ‌ங்கு‌ள்ள ‌சி‌‌ங்களவ‌ன் இ‌ந்தளவு‌க்கு ஆ‌ட்ட‌ம் கா‌ட்டுவானா?
இ‌ப்போது இல‌ங்கை‌யி‌ல் த‌ர்மயுத்தம் ந‌ட‌ந்து கொ‌ண்டிரு‌‌க்‌கிறது. ‌திருமாவளவனை நா‌ன் கே‌ட்டு‌க் கொ‌ள்வதெ‌ல்லா‌ம் உ‌ங்க‌ள் உட‌ல் நல‌ம் கரு‌தி ‌நீ‌ங்க‌ள் இ‌ந்த உ‌ண்ணாநிலையினை உடனடியாக கை‌விட வே‌ண்டு‌ம். இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்துமாறு நா‌ம் இ‌ங்கே அற‌ப்போரா‌ட்ட‌த்தை நட‌த்‌தி‌க் கொ‌ண்டி‌‌க்‌கிறோ‌ம்.
ம‌த்‌‌திய அரசை ந‌ம்‌பி ‌திருமாவளவ‌ன் இ‌த்தகையை மாபெரு‌ம் போரா‌ட்ட‌‌த்‌‌தி‌ல் ஈடுபட வே‌ண்டா‌‌ம் எ‌ன்று‌ம் கே‌ட்டு‌க்கொ‌ள்‌கிறே‌ன். நா‌ம் சாக‌ப் ‌பிற‌ந்தவ‌ர்க‌ள் அ‌ல்ல, த‌மிழனை கொ‌ல்பவ‌ர்களை சாகடி‌‌க்க ‌பிற‌ந்தவ‌ர்க‌ள். நா‌ன் இதை மேடை அல‌ங்கார‌த்‌தி‌ற்காக சொ‌ல்ல‌வி‌ல்லை.
ஒ‌வ்வொரு த‌மிழனு‌ம் ‌வீரச்சாவு அடைவத‌ற்கு த‌ன்னை தயா‌ர்படு‌த்‌தி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ள்‌கிறே‌ன். அ‌ப்போதுதா‌ன் த‌மிழனை‌க் கா‌க்கு‌ம் போரா‌ட்ட‌த்‌திற‌்கு ஒரு ‌தீ‌ர்வாக இரு‌க்கு‌ம் எ‌ன்பதை சு‌ட்டி‌க் கா‌ட்ட ‌விரு‌ம்பு‌‌கிறே‌ன் எ‌ன்றார் அவர்.

 

 

StumbleUpon.com Read more...

பத்து வயதில் சிறுமிக்கு திருமணம்


source:திணமலர் 18.1.2009

StumbleUpon.com Read more...

நோக்கியா கைத்தொலைபேசி வாங்குகிறீர்களா...? எச்சரிக்கை...!

 

 

பலருடைய நோக்கியா கைத்தொலைபேசி புதிதாக வாங்கி சில மாதங்களிலேயே காலை வாரத்தொடங்கிவிடும்.ஆனால் சிலருடையது வாங்கி ஐந்து வருஷம் சென்றாலும் அப்படியே இருக்கும்.

நீங்கள் பயன்படுத்தும் Nokia கைத்தொலைபேசி அசலா ? போலியா ? ? என நீங்கள் சோதித்திருக்கிறீர்களா ? இல்லையெனில் இதோ அருமையான முறை * பின்வரும் இலக்கங்களை அழுத்துங்கள் *#06#
* 7வது 8வது இலக்கங்களில் உள்ளவற்றை கவனமாக பார்த்து கீழுள்ளவற்றோடு ஒப்பிடுங்கள்
.

Number---------Phone serial no
1 ----------------------x
2 ----------------------x
3 ----------------------x
4 ----------------------x
5 ----------------------x
6 ----------------------x
7th------ --------------?
8th------- -------------?
9 -------- ------ -------x
10----------------- ----x
11 ---------------------x
12 ---------------------x
13 ---------------------x
14------------- --------x

  • உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 02 அல்லது 20 ஆக இருந்ததால் உங்களுடைய போன் ஐக்கிய அரபு நாடுகளில் தயாரிக்கப்பட்டது மிகவும் கூடாதது. விரைவில் பழுதடையும்.
  • சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 08 அல்லது 80 ஆக இருந்ததால உங்களுடைய போன் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது. பரவாயில்லை .
  • சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 01 அல்லது 10 ஆக இருந்ததால உங்களுடைய போன் பின்லாந்தில் தயாரிக்கப்பட்டது. நல்லது சில வருடங்கள் பாவிக்கலாம்.
  • உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 00 ஆக இருந்தால் உங்கள் போன் ஒரிஜினல் கம்பனியில் தயாரிக்கப்பட்டது. பல வருடங்கள் பாவிக்கும்.
  • உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 13 ஆக இருந்தால் உங்கள் போன் Azerbaijan இல் தயாரிக்கப்பட்டது. மிகவும் மோசமானது. உங்களுடைய உடல் நலத்துக்கு ஆபத்தானது.
இனியாவது மொபைல் போன் வாங்கும்போது மேற்கூறிய விடயங்களை கவனத்தில் கொண்டு வாங்குங்கள்.
 
http://honey-tamil.blogspot.com/2009/01/blog-post_16.html

StumbleUpon.com Read more...

Messages on Indian vedas and other sacred texts -இந்திய வேதங்களில் இயேசு

Audio Messages
 
 
Messages on Indian vedas and other sacred texts 
 
Windows Media Real Media
Tamil - Bible Geethai - Part 1 Play Play
Tamil - Bible Geethai - Part 2 Play Play
Tamil - Karmavum Kirubaiyum Play Play
Tamil - Matham Avasiyama - Part 1 Play Play
Tamil - Matham Avasiyama - Part 2 Play Play
Tamil - Palaiya Yerpadum Indiya Vedamum - Part 1 Play Play
Tamil - Palaiya Yerpadum Indiya Vedamum - Part 2 Play Play
 
 
Download the required player to listen to the Audio Messages
Download RealPlayer
Get Windows Media Player Get Windows Media Player Get Windows Media Player
http://www.agniministries.org/Audios.aspx?AspxAutoDetectCookieSupport=1

StumbleUpon.com Read more...

சங்க இலக்கிய ஆய்வரங்கம்http://www.dinamalar.com/Pothunewsdetail.asp?News_id=10286&ncat=TN

StumbleUpon.com Read more...

சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் எதனையும் தெரிவிக்க மாட்டோம்: சிவ்சங்கர் மேனன்

 
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளும் இடையே தற்போது நடைபெற்று வரும் உக்கிரமான போரை நிறுத்துவதற்கு உடன்படிக்கை ஒன்றை செய்யுமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் எதனையும் இந்தியா வழங்காது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகமவை நேற்று வெள்ளிக்கிழமை காலை சந்தித்த பின்னர் கொழும்பில் இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே சிவ்சங்கர் மேனன் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விபரித்தார்.

புலிகளுடனான போரை நிறுத்துமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகமவிடம் கோரிக்கை எதனையும் முன்வைக்கவில்லை.

இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகள் நீண்டகால வரலாறு கொண்டவை.

அதன் அடிப்படையில்தான் பேச்சுக்கள் நடைபெறுகின்றன என அந்த நேர்காணலில் கூறினார் சிவ்சங்கர் மேனன்.

இதேவேளை, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சிவ்சங்கர் மேனன் இன்று சந்திக்கவுள்ளார்.

இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிமசிங்க மற்றும் சிறிலங்கா படைகளுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களையும் சிவ்சங்கர் மேனன் சந்திப்பார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.swisstamilweb.com/

StumbleUpon.com Read more...

எங்களுக்கு எல்லாமே தெரியும்: சிவ்சங்கர் மேனன்

  
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையே வன்னிப்பெரு நிலப்பரப்பில் நடைபெற்று வரும் கடுமையான போரில் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற இழப்புக்கள் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பாக இந்தியாவுக்கு முழு விபரமும் தெரியும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்றவாறு அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கும் இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் சிவ்சங்கர் மேனன் உறுதியளித்துள்ளார்.

கொழும்புக்கு சென்றுள்ள சிவ்சங்கர் மேனன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவை சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள இந்திய தூதுவரின் இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற சந்திப்பில் சிவ்சங்கர் மேனனுடன் கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் அலோக் பிரசாத் மற்றும் தூதரகத்தின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்ற குழு தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்றக் குழுவின் பிரதி தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ். மவாட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பில் சிவ்சங்கர் மேனன் தெரிவித்த விடயங்கள் குறித்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகவல் தருகையில்,

இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வருகின்றது. போர் நடவடிக்கையினால் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற அழிவுகளை இந்தியா தடுத்து நிறுத்தும்.

உயிரிழப்புகள், சேதங்கள், மக்கள் இடப்பெயர்வுகள் பற்றிய விபரங்கள் எல்லாவற்றையும் இந்தியா அறிந்து வைத்திருக்கின்றது என சிவ்சங்கர் மேனன் தெரிவித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு நேர்மையான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை கையாள வேண்டும் என்று சிவ்சங்கர் மேனனிடம் கோரிக்கை விடுத்ததாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

வடக்கு - கிழக்கில் பேரினாலும் துப்பாக்கிச் சூட்டினாலும் மற்றும் ஆட்கடத்தல், காணாமல் போதல் போன்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைகளினாலும் இன விருத்தி வயதுடைய இளைஞர்கள் அரசாங்கத்தினால் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றனர் என்று சிவ்சங்கர் மேனனுக்கு சுட்டிக்காட்டியதாகவும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் கூறினர்.

 

http://www.swisstamilweb.com/

StumbleUpon.com Read more...

எவ்வாறான உண்ணாவிரதம் இருந்தாலும் முல்லைத்தீவு இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட மாட்டாது: அரசாங்கம்

 
தமிழக அரசியல்வாதிகள் எவ்வாறான உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுத்தாலும், அரசாங்கம் முல்லைத்தீவில் முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தாதென திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
யுத்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு போராட்டத்திற்கும் அரசாங்கம் அடிபணியாதென சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனினால் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தப் போராட்டங்களுக்கு அஞ்சி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் யுத்தம் நிறுத்தப்படமாட்டாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

http://www.swisstamilweb.com/

StumbleUpon.com Read more...

கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-தினமலர் பத்திரிக்கை

2005 ஆம் ஆண்டு தினமலர் பத்திரிக்கையில் வெளியான செய்தியின் துண்டு பிரசுரம் நண்பர் ஒருவர் மெயிலில் அனுப்பினார்.அதை அனைவரும் அறிந்துகொள்ள இங்கு பதிவிடுகிறேன்.இது அரசாங்க கணக்கெடுப்பு.அதுவே கிறிஸ்தவர்களைன் எண்ணிக்கையை உயத்திக்காட்டியுள்ளது.உண்மையான கணக்கெடுப்பை அறிந்தால் இந்திய அரசியல்வதிகளே ஆடிப்போய்விடுவார்கள்.நமக்கு ஏதற்கு இந்தா வீண் வம்பு.


படம் பெரிதாக தெரிய கிளிக்கவும்


StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP