சமீபத்திய பதிவுகள்

நல்ல குடும்பம் நாசனமான கதை:

>> Tuesday, April 22, 2008

நல்ல குடும்பம் நாசனமான கதை:

நீங்கள் ஒரு சாதாரண முஸ்லீம், ஒரு கம்பனியில் வேலை செய்கிறீர்கள், உங்களுக்கு ஒரு நல்ல நண்பன் (இந்துவோ, கிறிஸ்தவனோ.. சீக்கியனோ, நாத்தீகனோ) உண்டு. அவன் தன் வயது சென்ற‌ பெற்றோர்களோடும், மனைவி பிள்ளைகளோடும் சந்தோஷமாக, வாழ்ந்துக்கொண்டு இருக்கிறான். இந்த நிகழ்ச்சி நடக்கும்பொது இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி உள்ளது என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் தினமும் ஐந்து வேளை அல்லாவை தொழுதுக்கொள்ளும் நல்ல மனிதர். கம்பனியில் வேலை செய்யும் போது, அடிக்கடி மதம் சம்மந்தப்பட்ட உரையாடலை நீங்களும் உங்கள் நண்பரும் விவாதித்து இருக்கிறீர்கள். உங்கள் ஊரில் ஒரு இஸ்லாமிய கேள்விபதில் நிகழ்ச்சி நடப்பதாக அறிவிப்பு வருகிறது, அக்கூட்டத்தில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களோ அல்லது பிஜே அவர்களோ பேசுகிறார்கள். நீங்கள் உங்கள் நண்பரை இக்கூட்டத்திற்கு அழைக்கிறீர்கள், உன் கேள்விகளுக்கு சரியான பதிலை இக்கூட்டத்தில் ஜாகிர் நாயக் அவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள் என்றுச் சொல்கிறீர்கள், அவரும் உங்களோடு கூட்டத்திற்குச் செல்கிறார்.

கேள்வி பதில் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளையும், அதற்கு ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த பதில்களையும் பார்த்து இந்த மாற்று மத நண்பர் ஆச்சரியப்பட்டு, இன்னும் இஸ்லாமைப் பற்றி அதிகம் அறிந்துக்கொள்ள விரும்புகிறேன் என்கிறார்.

அவருக்கு நீங்கள் சில இஸ்லாமிய புத்தகங்களை தருகிறீர்கள், அவரும் அதை படித்து, நான் முஸ்லீமாக விரும்புகிறேன். அல்லா தான் இறைவன் என்பதை நான் உணர்ந்தேன் என்றுச் சொல்ல, அவருக்கு இன்னும் அதிகமாக இஸ்லாம் பற்றிச் சொல்லி, ஒரு நாள் அவர் முஸ்லீமாக தன்னை ஒரு கூட்டத்தில் அங்கீகரித்து முஸ்லீமாக மாறிவிட்டார்.

நாட்கள் கடந்தன, மாதங்கள் விறைவாக மறைந்தன, சில வருடங்கள் ஓடிவிட்டன. தன் பெற்றோரோ அல்லது மனைவி பிள்ளைகளோ இன்னும் முஸ்லீமாக மாறவில்லை மட்டுமல்ல, இவரது பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் அல்லது இன்ன பிற காரணங்களால், இந்த முன்னால் மாற்று மத நண்பர், மறுபடியும் தன் பழைய மதத்திற்கே (இந்துவாகவோ, கிறிஸ்தவனாகவோ, சீக்கியனாகவோ, அல்லது நாத்தீகனாகவோ) மாறுகிறேன் என்றுச் சொல்கிறார், மாறியும் விட்டார். தன்னுடைய பழைய மதத்தில் இப்போது ஆர்வமாக சில மார்க்க வேலையையும் செய்கிறார்.

இந்தியா ஒரு இஸ்லாமிய நாடு என்பதால், இவனுக்கு முஸ்லீமாக அவகாசம் கொடுக்கப்பட்டது இவர் இல்லை என்று மறுக்க, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஏனென்றால், இவன் ஒரு தேசத்துரோகி, அதாவது, ஜாகிர் நாயக் அவர்கள் சொன்னது போல இவன் ஒரு தேசத்துரோகம் செய்த குற்றத்திற்கு சமமான குற்றம் செய்தவர் ஆவார்.
 

StumbleUpon.com Read more...

ஆதரவிற்கு ஏமாற்றுதல் ஒரு ஆயுதம்: டாக்டர் ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது


ஆதரவிற்கு ஏமாற்றுதல் ஒரு ஆயுதம்: டாக்டர் ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது

ஆசிரியர்: சார்லஸ் கோய்னிக்


தமிழாக்கம்: உமர்


[தமிழாக்க குறிப்பு: சரியாக புரிந்துக்கொள்வதற்காக சில ஆங்கில வார்த்தைகள் அப்படி அடைப்புக்குள் கொடுத்துள்ளேன். மேலும் விவரம் தேவைப்படுமானால், இக்கட்டுரையை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்.]

இணையத்தில் உள்ள ஜாகிர் நாயக்கின் சில வீடியோக்களைப் பார்த்தபிறகு, அவர் சொல்லும் விவரங்களில் எவ்வளவு உண்மையிருக்கும், மற்றும் எவ்வளவு மிகைப்படுத்தி சொல்லுதல் இருக்கும் என்று சிந்திக்கலானேன். டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் மத்தியிலும், மற்றும் உலக முஸ்லீம்களின் மத்தியிலும் அதிக மதிப்பு, ஆதரிப்பு (support) இருப்பதை நான் அறிவேன். இவர் தொடர்ந்து பல சொற்பொழிவுகளையும், மற்றும் இஸ்லாமியர்கள், இஸ்லாமை விமர்சிப்பவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார் என்பதையும் அறிவேன். நான் கீழ்கண்ட ஆய்வில், ஜாகிர் நாயக்கின் பொதுவான பதில்களுக்கு[9] ஒரு சவால் விடுகிறேன். மற்றும் அவர் முன்வைக்கும் ஒவ்வொரு ஆதாரத்தின், புள்ளிவிவரங்களின் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவருவேன். நான் முன்வைக்கும் ஆதாரங்கள், அரசாங்க ஆய்வுகளிலிருந்தும், உண்மையுள்ளதாக கருதப்படும் இணைய தளங்களிலிருந்தும் இருக்கும். அடுத்த முறை ஜாகிர் நாயக்கை நீங்கள் திரையில் பார்க்கும் போது, அவரால் முட்டாளாக்கப்பட வேண்டாம் என்று உங்களை எச்சரித்து, உட்சாகப்படுத்துகிறேன். அவர் ஒரு டாக்டர் என்பதால், அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஆதாரமாக எடுத்துக்கொள்ளவேண்டாம், அதற்கு பதிலாக, அவர் முன்வைக்கும் செய்திகளின் மிது கேள்வி எழுப்பி, உங்கள் சொந்த அறிவினால் ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். ஜாகிர் நாயக்கிடம் கேட்கப்படும் பல கேள்விகளில் ஒரு கேள்வியைப் பற்றி நாம் இந்த கட்டுரையில் சிந்திக்கப்போகிறோம். அந்தக் கேள்வி இஸ்லாமில் உள்ள பலதார திருமணத்தைப் பற்றியது, மற்றும் அவர் கொடுத்த பதிலை இக்கட்டுரையின் கடைசில் உள்ள 9வது எண்ணின் தொடுப்பிலும், மற்றும் இணைய தளத்தில் பல வீடியோக்களிலும் காணலாம்.

முதலில் இக்கட்டுரையில் வரும் சில முக்கியமான வார்த்தைகளின் பொருளை (அர்த்ததை) பார்க்கலாம்.

Merriam Webster dictionary என்ற அகராதியின் படி:

1. Polygamy- marriage in which a spouse of either sex may have more than one mate at the same time ( ஒருவர், ஆணோ அல்லது பெண்ணோ ஒரு சமயத்தில் ஒன்றிற்கும் அதிகமான துணையை பெற்றிருத்தல்)

2. Polygyny- the state or practice of having more than one wife or female mate at a time (ஒருவன் ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகளை உடையவனாக இருத்தல்.)

3. Polyandry- the state or practice of having more than one husband or male mate at one time (ஒரு பெண் ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட கணவன்களை உடையவளாக இருத்தல்.)

Why is Polygyny allowed in Islam?
ஏன் இஸ்லாமில் ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்ய (Polygyny) அனுமதிக்கப்பட்டுள்ளது?

ஆண்களின் பலதார மணத்தைப் பற்றிய இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் போது, டாக்டர் ஜாகிர் நாயக் முதலில் கீழ்கண்ட வாதத்தை முன்வைக்கிறார்.


"Qur'an is the only religious book, on the face of this earth, that contains the phrase 'marry only one'. There is no other religious book that instructs men to have only one wife. In none of the other religious scriptures, whether it be the Vedas, the Ramayana, the Mahabharata, the Geeta…."

"உலகத்திலேயே "ஒரே ஒரு திருமணம் செய்துக்கொள்" என்ற வார்த்தைகள் உள்ள ஒரே மதப் புத்தகம் "குர்ஆன்" தான். மனிதனைப் பார்த்து "நீ ஒரு மனைவியை மட்டும் உடையவனாக இரு" என்று எந்த மதப் புத்தகங்களிலும் இல்லை. அது எந்த மத வேதங்களாக இருந்தாலும் சரி, இராமாயணமாக, மஹாபாரதமாக மற்றும் பகவத் கீதையாக இருந்தாலும், அவைகளில் இப்படி சொல்லப்படவில்லை...."


இது ஒரு மிகப்பெரிய பொய். ஒன்று, அவர் மற்ற மதங்களின் வேதங்களை சரியாக முழுவதுமாக படிக்காமல் இருக்கவேண்டும், அல்லது வேண்டுமென்றே குர்ஆனை புகழ்வதற்காக தனக்கு தெரிந்த விவரத்தையும் மூடிமறைத்து இருக்கவேண்டும். வெளிப்படையாகச் சொல்கிறேன், டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு இவைகள் தெரியாது என்றுச் சொல்லி, இதற்கு நாம் அனுமதி கொடுக்கமுடியாது அல்லது ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏனென்றால், அவர் ஒரு மருத்துவ படிப்பை முடித்தவர், மற்றும் நிறைய மத சொற்பொழிவுகள் ஆற்றிய அனுபவம் உடையவர், அது மட்டுமல்ல அதிகமாக விவாதத்தில் ஈடுபட்டவரும் (Debate) அவர் ஒரு ஆசிரியரும் (Author) கூட. உலகமனைத்திலும் அவர் பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார், மற்றும் இஸ்லாமியர்களுக்கு வழிகாட்டியாகவும், மற்றும் ஒரு எடுத்துக்காட்டாகவும் (Role Model) இருக்கிறார். எனவே, கட்டாயமாக, இப்படிப்பட்ட சிறப்பை உடைய அவரிடம் ஒரு சிறு தவறையும் நாம் அனுமதிக்கமுடியாது.

"ஒரே மனைவியை உடையவனாக இரு" என்ற கட்டளை குர்-ஆனில் மட்டுமல்ல, மற்ற வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது என்பதை முதலாவது நான் முன்வைக்க விரும்புகிறேன்.

இராமாயணத்தில் ஒரு சம்பவம் வருகிறது (இந்துத்துவ இதிகாச காவியங்களில் இராமாயணமும் ஒன்று, மற்றொன்று மகாபாரதமாகும்)[1]. இந்த சம்பவத்தில், சுபர்னகா (சூர்பனகை அல்லது Suparnaakha ) என்னும் ஒரு "இராட்சஷி" Shri இராமனிடம் சென்று, தன்னை திருமணம் செய்துக்கொள்ளும் படி கேட்கிறாள். அதற்கு Shri இராமன், தான் ஒரு "ஏக பத்தினி விரதம்" (வாழ்நாளெல்லாம் ஒரே மனைவியை உடையவராக இருப்பதாக விரதம்) இருப்பதாகச் சொல்லி, மறுத்துவிடுகிறார். இந்த விரதம், ஒரு சிறந்த நற்பண்புள்ள விரதமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட விரதம் பூண்டு ஒரே மனைவியை உடையவராக இருக்கும் மனிதர்கள், அதிக மரியாதைக்குரியவராக அவர்கள் சமகாலத்தவர்களால் கருதப்படுகின்றனர். இந்துத்துவத்திலே இது ஒரு பழமைவாய்ந்த கோட்பாடாகும், இன்னும் இந்து காவியங்களை கூர்ந்து படிப்போமேயானால், இப்படிப்பட்ட அனேக எடுத்துக்காட்டுக்களை நாம் காணமுடியும்.

கிறிஸ்தவ மார்க்கத்திலும், நாம் "ஏக பத்தினி விரதம் அல்லது ஒரே மனைவியை உடையவனாக இருக்கவேண்டும்" என்பதைப் பற்றி அனேக வெளிப்படையான (Explicit) எடுத்துக்காட்டுகளை காணமுடியும். இயேசுக் கிறிஸ்துவின் சீடர்களாகிய அப்போஸ்தலர்கள் "ஒரே மனைவியை உடையவர்களாக இருக்கவேண்டும்" என்பதைப் பற்றி அதிகமாக புகழ்ந்து பேசியும், மற்றும் கட்டளையிட்டும் சென்றுள்ளனர். இதைப் பற்றி பல மறைமுக (Implicit) எடுத்துக்காட்டுகளையும் நாம் பைபிளில் காணமுடியும், அவைகள் புரிந்துக்கொள்வதற்கு சிறிது கடினம்(ambiguity) என்பதால் நான் அதை இங்கு முன்வைப்பதில்லை.

இதைப் பற்றி, பைபிளின் "ஏக பத்தினி விரதம்" பற்றிய சில வெளிப்படையான வசனங்கள்:


1 கொரிந்தியர்: 7:1-4

1. நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறதென்னவென்றால், ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது.2. ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவனவன் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்.3. புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள்.4. மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.[8]


*மேலே உள்ள வசனம் "ஒரே ஒரு மனைவியை மட்டும் உடையவர்களாக இருக்கவேண்டும்" என்பதை மிகத் தெளிவாகச் சொல்கிறது.


1 தீமோத்தேயு: 3:2

3:2 ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும். [8]

*கண்காணியானவன் (அல்லது பிஷப்) என்பவர் இறைவனின் வழியில் வாழ்வதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டாகும். அதாவது, ஒரு தலைவன் "தான் ஒரு மனைவியை உடையவனாக வாழ்வது", எல்லாருக்கும்(அவர் கீழ் உள்ளவர்களுக்கு) ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமையும்.


1 தீமோத்தேயு: 3:12

3:12 மேலும், உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும். [8]


*உதவிக்காரர் என்பவர் ஆலயத்தில் போதகரின் கீழ் வேலை செய்யும் அதிகாரியாவார், இருந்தாலும், அவரின் வாழ்க்கை எல்லாரும் பின்பற்றக்கூடிய அளவிற்கு ஒரு எடுத்துக்காட்டாக(Role Model) இருக்கவேண்டும்.


மத்தேயு: 19:4-6

19:4 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக, ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், 5. இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? 6. இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார். [8]


* மத்தேயு இங்கு திருமண உறவு முறையில் உருவாகும் இரு உள்ளங்கள் அல்லது உடல்களின் ஐக்கியத்தைப் பற்றி தெளிவாக எழுதுகிறார்.


மத்தேயு: 19:9

19:9 ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் விபசாரம் பண்ணுகிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். [8]


*இந்த வசனத்தை, நாம் மேலே பார்த்த மத்தேயு 19:4-6ம் வசனத்தோடு சேர்த்து பார்க்கும்போது , ஒருவன் ஒரே ஒரு மனைவியை மட்டும் திருமணம் செய்யவேண்டும் என்பதை புரிந்துக்கொள்ளலாம்.

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள், "ஆண்கள் பலதார மண கோட்பாட்டை" நியாயப்படுத்த தன் சொற்பொழிவை கேட்பவர்களை (Audience) தவறான வழியில்(Misguide) கொண்டுச்செல்கிறார். அவருடைய வாதத்தில் அவர் அதிகாரபூர்வமாகச் சொல்லும் செய்திகளில் உள்ள லாஜிக்(Logic) மற்றும் காரணங்களும்(Reasoning) மன்னிக்கமுடியாதவை. அவருடைய ஒரே நோக்கம், இஸ்லாம் கோட்பாடுகள், பழக்கங்கள் எவ்வளவு பின்தங்கி இருந்தாலும் சரி, அவைகளை நியாயப்படுத்துதல் ஆகும். இப்படி தன் மார்க்கத்தைப் பற்றி அதிகமாக சொற்பொழிவு செய்யும் இவர் வேண்டுமென்றே இப்படி பொய் சொல்கிறாரா (purposely lying)? அல்லது உண்மை தெரியாமல், அறியாமையினால் இப்படி பேசுகிறாரா என்பதை, நீங்களே முடிவு செய்யுங்கள்.

அடுத்ததாக, டாக்டர் ஜாகிர் நாயக் கிழ்கண்ட வாதத்தை முன்வைக்கிறார்:


"Average life span of females is more than that of males. By nature males and females are born in approximately the same ratio. A female child has more immunity than a male child. A female child can fight the germs and diseases better than the male child. For this reason, during the pediatric age itself there are more deaths among males as compared to the female…. India has more male population than female due to female feticide and infanticide. If this evil practice is stopped, then India too will have more females as compared to males."

" சாதாரணமாக பெண்கள் ஆண்களை விட அதிக நாட்கள் வாழ்கிறார்கள். ஆண்களின், மற்றும் பெண்களின் பிறப்பு விகிதம் பொதுவாக ஒரே அளவில் இருக்கும். பிறக்கும் குழந்தைகளில், பெண் குழந்தைகளுக்கு அதிக நோய் எதிர்ப்புச் சக்தி, ஆண் குழந்தைகளை விட அதிகமாக இருக்கும். ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண்குழந்தையை விட அதிகமாக போராடி கிருமிகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் தப்பித்துக்கொள்ளும். இதன் காரணமாக, குழந்தை பருவத்தில் மரிக்கும் குழந்தைகளில் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கிறது. … இந்தியாவில், பெண் "கருக்கலைப்பு" மற்றும் "சிசுக் கொலையின்" (female feticide and infanticide ) காரணத்தால், பெண் ஜனத்தொகையை விட ஆண் ஜனத்தொகை அதிகமாக உள்ளது. இந்த தீய பழக்கம் நிறுத்தப்படுமானால், இந்தியாவிலும் பெண்களின் எண்ணிக்கை, ஆண்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கும்."

மறுபடியும், டாக்டர் நாயக் தன் வாதத்திற்கு ஆதரவாக ஒரு தவறான காரணத்தைச் சொல்கிறார். அவர் வேண்டுமென்றே, மக்களை முட்டாள்களாக்க உண்மை விவரங்களைத் திருத்திச்சொல்கிறார். சாதாரணமாக, மக்கள் இவருடைய வாதங்களில் உள்ள உண்மையை சரிபார்த்து சோதித்தறிவதில்லை, எனவே, இவர் தன் பொய்களிலிருந்தும், திருத்திச் சொல்வதிலிருந்தும் தப்பிவிடுகிறார். இந்த தற்போதைய வாதத்தில் டாக்டர் நாயக் சொல்கிறார், குழந்தை பருவத்திலும், மற்றும் மற்ற வயதின் பிரிவிலும்(சிறுவன், இளைஞன், நடுவயது, முதிய வயது), ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருப்பார்கள். இவருடைய இந்த வாதத்தின் (லாஜிக்கின்) படி, எல்லா காலத்திலும் பெண்கள் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் இருப்பதால், ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு ஆண் திருமணம் செய்ய கிடைக்காமல் போகிறது. எனவே, இதன் அடிப்படையில் பார்த்தால், ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்வதே சரியான வழிமுறையாகும். நாம் இப்போது, சில நாடுகளில் உள்ள மக்கள் மற்றும் அவர்களின் வயது வாரியான புள்ளிவிவரங்களைக் காண்போம்.

Table1.1

Now let's look at the world sex ratio[3]:
Sex ratio:
at birth: 1.07 male(s)/female
under 15 years: 1.064 male(s)/female
15-64 years: 1.024 male(s)/female
65 years and over: 0.781 male(s)/female
total population in the world: 1.014 male(s)/female (2007 est.)

பட்டியல் 1.1
இப்போது உலக ஆண் பெண் விகிதாச்சாரத்தைக் காண்போம்.[3]

ஆண் பெண் விகிதாச்சாரம்
பிறப்பில்: 1.07 ஆண்(கள்)/பெண்
15 வயதிற்குட்பட்டவர்கள் : 1.064 ஆண்(கள்)/பெண்
வயது 15-64 வரை: 1.024 ஆண்(கள்)/பெண்
வயது 65 அதற்கு அதிகம் உள்ளவர்கள்: 0.781 ஆண்(கள்)/பெண்
மொத்த உலக ஜனத்தொகை: 1.014 ஆண்(கள்)/பெண் (2007 கணக்கெடுப்பு)

பெண்களை விட ஆண்கள் அதிகமாக இருப்பது, இந்தியாவில் மட்டுமல்ல என்பதை மேலே பார்த்த விவரங்கள் தெளிவாக நிருபிக்கின்றன. "பெண்கள் சிசுக்கொலை" நடக்காத(பழக்கமில்லாத) நாடுகளிலும் இதே நிலை தான் நிலவுகிறது. பெரும்பான்மையான நாடுகளில், ஆண்களை விட பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் பிரிவில் தான். டாக்டர் நாயக் அவர்களின் வாதம் என்னவென்றால், இஸ்லாம் நடைமுறைக்கு(Practical) ஏற்றதும், மற்றும் காரணகாரியங்கள் (Logic) இருப்பதினால் மக்கள் இஸ்லாமை பின்பற்றவேண்டும் என்பதே. ஆனால், இந்த நடைமுறையில் உள்ள இவ்வளவு பெரிய முரண்பாட்டை அவர் எடுத்துக்கொள்ளமாட்டார். நாம் கூர்ந்து கவனித்தால், துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் உள்ள, மொத்த ஆண்களின் எண்ணிக்கை, மொத்த பெண்களை விட அதிக அளவில் உள்ளது. இதனால், இவர் சொல்லும் இந்த "ஆண்கள் பல தார மணம்" என்ற திருமண முறைக்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. இந்த நாடுகள் என்ன செய்ய வேண்டும்? இந்த நாடுகளில் "ஆண்கள் பலதார மணத்தை - polygyny " முழுவதுமாக இரத்து செய்து, "பெண்கள் பல தார முறையை - polyandry " கொண்டுவந்தால் எப்படி இருக்கும்?

பெண்கள் திருமணம் ஆகாமல் அதிக நாட்கள் இருப்பதைப் பற்றி அல்லா அதிக கவலையுள்ளவராக இருந்தால், ஆண்கள் குழந்தை பருவத்திலேயே வியாதிகளால் மரிக்காத படிக்கு ஏன் அவர்களை அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களாக படைக்கவில்லை? டாக்டர் நாயக் மக்களை இஸ்லாமிற்கு மாற்றுவதற்கு அதிக சிரத்தை எடுத்துக்கொள்கிறார். அதனாலேயே அவர், இஸ்லாம் பழக்கங்கள் மூலமாக அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதை மக்களுக்கு புரியவைக்க, அவர் ஏமாற்றுக் கலையில் நிபுனத்துவம் பெற்றுள்ளார். ஆனால், உண்மை வேறுவிதமாக உள்ளது. டாக்டர் நாயக் சொல்கிறார், இந்தியாவில் ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது, காரணம் "பெண் குழந்தை கருக்கலைப்பு" மற்றும் "பெண் சிசுக்கொலை" என்றுச் சொல்கிறார். மற்றும் அவர் சொல்கிறார், பெண் சிசுக்கொலைகள் நிறுத்தப்படுமானால், இந்தியாவிலும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகமாக இருக்கும். இந்த பெண் சிசுக்கொலை தான் பெண்கள் குறைவாக இருப்பதற்கு காரணம் என்றால், இந்த பெண் சிசுக்கொலை பழக்கம் இல்லாத எல்லா நாடுகளிளும் பெண்களின் சதவிகிதம் ஆண்களை விட அதிகமாக இருக்கவேண்டும். ஆனால், உண்மையில் அப்படி எல்லா நாடுகளிலும் பெண்கள் ஆண்களை விட அதிக எண்ணிக்கையில் இருப்பதில்லை. டாக்டர் நாயக்கின் வாதங்கள் பொய்யானவை என்று இவைகள் நிருபிக்கின்றன. இஸ்லாமின் பழக்கங்களை (கோட்பாடுகளை) நியாயப்படுத்த இவர் தனக்கு தெரிந்த எல்லா திருப்புவேலையையும் (Tricks) செய்கிறார்.

அடுத்ததாக டாக்டர் நாயக் சொல்கிறார்:


"In the USA, women outnumber men by 7.8 million. New York alone has one million more females as compared to the number of males, and of the male population of New York one-third are gays i.e. sodomites. The U.S.A as a whole has more than twenty-five million gays. This means that these people do not wish to marry women."

" அமெரிக்காவில் மட்டும் பெண்கள் ஆண்களை விட 7.8 மில்லியன் கூடுதலாக உள்ளனர். நியு யார்க்கில் (New York) மட்டும் பெண்கள் ஆண்களை விட ஒரு மில்லியன் அதிகமாக உள்ளனர். மற்றும் நியு யார்க்கில் உள்ள ஆண்கள் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பாகம் ஆண்கள் "கேஸ் (Gays , i.e. sodomites) " ஆவார்கள். அமெரிக்க நாடு மொத்தத்தில் எடுத்துக்கொண்டால், 25 மில்லியனுக்கு அதிகமாக "கேஸ் (Gays)" இருக்கிறார்கள். இதன் பொருள் என்னவென்றால், இவர்கள் பெண்களை திருமணம் செய்துக்கொள்ளமாட்டார்கள். "

உண்மையைச் சொன்னால், டாக்டர் நாயக்கிற்கு "கேஸ் (Gays)" என்பதின் அர்த்தமே தெரியவில்லை. பெரும்பான்மையான உலக நாடுகளில் "Gays" என்றால், " homosexual " முறையில் ஈடுபடும் ஆண், பெண் இருபாலாரையும் குறிக்கும். அவருடைய சொற்பொழிவில் அவர், ஆண் கேஸ் (Men Gays) ஐ பற்றியே சொல்கிறார், ஆனால், ஆண்களை திருமணம் செய்ய விரும்பாத பெண் கேஸ் (Women Gays) ஐ பற்றி அவர் பேசுவதில்லை. அவருக்கு, லெஸ்பியன் (lesbians) என்னும் "ஆண்களை திருமணம் செய்யவிரும்பாத பெண்களைப் பற்றித்" தெரியாதா? அல்லது தன் மதத்திற்காக வேண்டுமென்றே இப்படிப்பட்டவர்கள் (lesbians) இல்லை என்றுச் சொல்கிறாரா?

டாக்டர் நாயக் கூற்றுப்படி அமெரிக்காவில் 25 மில்லியனுக்கு மேலாக Men Gay இருப்பதாகவும்,, இது ஒரு வெட்கப்படவேண்டிய விஷயம் என்றுச் சொல்கிறார். எப்போதும் போல, அவர் தன் வலிமையான இந்த வாதத்திற்கு, ஆதாரத்தை (source of information ) கொடுக்கவில்லை. உண்மையில் அமெரிக்காவில் gays, lesbians and bisexuals போன்றவர்கள் 8.8 மில்லியன் இருக்கிறார்கள்[4]. நாம் தோராயமாகச் சொல்லலாம், இதில் பாதி பேர் ஆண் Gays களாக இருப்பார்கள். நாம் கண்டிப்பாகச் சொல்லலாம், இவர்களில் சரி பாதிபேர் ஆண்களாக இருப்பார்கள், அப்படியானால் 4.4 மில்லியன் ஆண் கேஸ் (Men Gay) இருப்பதாகச் சொல்லலாம். டாக்டர் ஜாகிர் நாயக் சொன்ன அமெரிக்காவின் Men Gay களின் எண்ணிக்கை, உண்மையான Men Gayகளின் எண்ணிக்கையை விட 6 மடங்கு அதிகமாக உள்ளது. இந்த விவரங்கள் டாக்டர் நாயக் எப்படிப்பட்டவர் என்பதைக் காட்டுகிறது. அவர் எவ்வளவு துள்ளியமாக உண்மை விவரங்களை மற்றவர்கள் சந்தேகப்படாத அளவிற்கு திருத்திச் சொல்கிறார் என்பதைக் காட்டுகிறது.

சரி, இப்போது அவரின் மற்றோரு வாதமாகிய, அமெரிக்காவின் ஆண்களில் மூன்றில் ஒரு பாகம் நபர்கள் Gays என்பதைப் பற்றி அலசுவோம்.

நியு யார்க்கில், தோராயமாக 592,000 gays, lesbians and bisexuals இருக்கிறார்கள்[4]. இதில் பாதிபேர் ஆண் கேஸ் (around 300,000) இருப்பதாகக் கொள்வோம். டாக்டர் நாயக் சொல்லும் போது, அவர் குறிப்பிடுவது "நியு யார்க் மாநிலமா (New York State)" அல்லது "நியு யார்க் நகரமா (New York City)" என்பதை தெளிவாகச் சொல்லவில்லை. அவர் கொடுத்த விவரங்களின் எண்ணிக்கையில் நியு யார்க் மாநிலத்திற்கும், நகரத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. அவர் சொல்வதின் கருத்து என்னவாக இருக்கும் என்பதை சில எடுத்துக்காட்டுகளின் மூலமாக நான் காட்டுகிறேன்.

அவர் ஒரு வேளை நியு யார்க் மாநிலத்தைப் (New York State) பற்றிச் சொல்லியிருப்பாரானால், (ஜனத்தொகை: 19,254,630: ஆண்கள்: 9,146,748, பெண்கள் 9,829,709 [5]) ஆண்களின் சதவிகிதத்தில் 3.27% Gay ஆண்கள் ஆவார்கள், பெண்கள் ஆண்களை விட 682,961 எண்ணிக்கையில் அதிகமாக இருப்பார்கள், ஆனால், அவர் சொல்வது போல பெண்கள் ஆண்களை விட ஒரு மில்லியன் அதிகம் இல்லை. இந்த விவரங்களோடு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் கணக்கிட்டுச் சொன்ன 33% சதவிகிதம் நியு யார்க் ஆண்கள் Gay என்பதை ஒப்பிட்டுப்பாருங்கள் ( நியு யார்க் மாநிலம் என்றால் 3 மில்லியன் அதிகம், நியு யார்க் நகரம் என்றால் 1.2 மில்லியன் அதிகம்).

ஒரு வேளை, அவர் நியு யார்க் நகரம்(New York City) பற்றிச் சொல்லியிருப்பாரானால், (ஜனத்தொகை : 8,143,197: ஆண்கள்: 3,794,204, பெண்கள்: 4,214,074 [5]) மற்றும் நியு யார்க் மாநிலத்தில் உள்ள அனைத்து Gay ஆண்கள், இந்த நகரத்தில் வாழ்வதாகக் எடுத்துக்கொண்டாலும், அவர்கள் ஆண்களின் சதவிகிதத்தில் 7.9% சதவிகிதம் இருப்பார்கள், பெண்கள் ஆண்களை விட 419,870 அதிகமாக இருப்பார்கள்.

இந்த விவரங்கள், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் சொல்லும் புள்ளிவிவரங்களில் புள்ளிவிவரங்களில் இருக்கும் மிகப்பெரிய வெற்றிடத்தைக் காட்டுகிறது. அவரின் புள்ளிவிவரங்கள் ( Figures ) நியு யார்க்கில் உண்மையில் இருக்கும் Gay ஆண்களின் எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகமாக உள்ளது, மற்றும் அவர் Gay ஆண்களை விட, பெண்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்கு கிட்டத்தட்ட அதிகமாகச் சொல்லியுள்ளார். அவருடைய இந்த கற்பனை, அவரின் சொற்பொழியை சரியான பாதையில் கொண்டு செல்கிறதா? அவர் சொல்லும் விவரங்கள் (Facts) அவரின் வாதத்திற்கு ஏற்றார் போல் வளைந்துக்கொள்கிறது, மற்றும் உண்மை விவரங்களை விட்டு தூரமாகச் செல்கிறது, இது ஏற்றுக்கொள்வதற்கு சிறிது தர்மசங்கடமே.

டாக்டர் நாயக் வாதிக்கிறார், அமெரிக்காவில் உள்ள பெண்களின் எண்ணிக்கை, ஆண்களை விட 7.8 மில்லியன் அதிகமாக இருக்கிறார்கள். இந்த விவரத்தை நாம் மிகவும் கூர்மையாக ஆராய்வோம், இதோ கீழே வயது வாரியாக மற்றும் ஆண்பால் பெண்பால் வாரியாக அமெரிக்காவில் உள்ளவர்களின் பட்டியல்.[6]

வயது இடைவெளி: ஆண்கள், பெண்கள்

0-4: 9,810,733, 9,365,065
5-9: 10,523,277, 10,026,228
10-14: 10,520,197, 10,007,875
15-19: 10,391,004, 9,828,886
20-24: 9,687,814, 9,276,187
25-29: 9,798,760, 9,582,576
30-34: 10,321,769, 10,188,619
35-39: 11,318,696, 11,387,968
40-44: 11,129,102, 11,312,761
45-49: 9,889,506, 10,202,898
50-54: 8,607,724, 8,977,824

டாக்டர் நாயக் வேண்டுமென்றே, எந்த வயது இடைவெளியில் உள்ள பெண்கள் ஆண்களைவிட அதிகமாக இருக்கிறார்கள் என்று குறிப்பிடவில்லை. மேடை விவாதத்தில் இது ஒரு முக்கியமான ஏமாற்று (a wily and devious thing ) வேலையாகும், ஏனென்றால், இப்படிப்பட்ட வாய்வழி விவாதங்களில்(verbal debate) சரியான புள்ளிவிவரங்களை கேட்பவர்கள் சரி பார்க்கமாட்டார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் 0-34 வயது இடைவெளியில் உள்ள ஆண்களின் எண்ணிக்கை பெண்களை விட அதிகமாக இருக்கிறது. இதே நிலையை மற்ற நாடுகளிலும் நாம் காணலாம். உதாரணத்திற்கு, டென்மார்க்(DenMark) நாட்டில் ஆண்கள் பெண்களை விட 59 வயது வரை அதிகமாக உள்ளனர்[7]. மற்றும் இங்கிலாந்திலும் (United Kingdon), பிரான்ஸிலும் (France) ஆண்கள்[7] பெண்களை விட 49 வயது வரை அதிகமாக உள்ளனர்[7]. இன்னும் பெரும்பான்மையான இஸ்லாமிய நாடுகளிலும், மொத்த ஆண்களின் ஜனத்தொகை பெண்களின் ஜனத்தொகையை விட அதிகமாக உள்ளது, அப்படி இருந்தும், ஆண்கள் பல தார மணத்தை (polygyny) முஸ்லீம்களே ஆதரிக்கின்றனர் மற்றும் மற்ற நாடுகளையும் இந்த ஆண்கள் பலதாரமண (polygyny) பழக்கத்தில் சேரும் படி அழைக்கின்றனர்.

டாக்டர் நாயக் அவர்களின் வீடியோக்களையும், விவாதங்களையும் நீங்கள் கூர்ந்து கவனிப்பீர்களானால், அவைகளில் தந்திர உத்திகளையும் மற்றும் வார்த்தைகளின் விளையாட்டையும் பயன்படுத்தியுள்ளதை (magician tricks and elocution combined) பார்க்கமுடியும். அவர் எந்த முக்கியமான ஆதாரத்தையும், வலிமையான காரணங்களையும் தன் பேச்சுக்களில் கொடுப்பதில்லை. அதற்கு பதிலாக, மக்களை தன் கணக்கிலடங்கா பொய்களினால் தன் வாதங்களை ஒப்புக்கொள்ளும்படி அவர்கள் உணர்வுகளை தட்டி எழுப்புகிறார்.

அடுத்ததாக, அவர் கீழ்கண்ட வாதத்தை முன் வைக்கிறார்:


"Great Britain has four million more females as compared to males. Germany has five million more females as compared to males. Russia has nine million more females than males. God alone knows how many million more females there are in the whole world as compared to males."

"இங்கிலாந்து (Great Britain) தேசத்தில் பெண்கள் ஆண்களை விட 4 மில்லியன் அதிகமாக உள்ளனர். ஜெர்மனியில் பெண்கள் ஆண்களை விட 5 மில்லியன் அதிகமாக உள்ளனர், ரஷ்ஷியாவின் பெண்கள் ஆண்களை விட 9 மில்லியன் அதிகமாக உள்ளனர். இன்னும் உலகம் அனைத்திலும் எத்தனை மில்லியன் பெண்கள் ஆண்களை விட அதிகமாக இருக்கிறார்கள் என்று இறைவனுக்குத்தான் தெரியும்."

ஜாகிர் நாயக் சொல்கிறார், ஜெர்மனியிலும், இங்கிலாந்திலும் பெண்கள் ஆண்களை விட பல மில்லியன்கள் அதிகமாக இருக்கிறார்களாம். மக்களை தவறாக வழி நடத்துவதற்கு சொல்லப்பட்ட மிகப்பெரிய ஆதாரமில்லாத வாதமாகும். ஜாகிர் நாயக் இன்னும் சில காரணங்களுக்காக, உலகத்தில் உள்ள பெண்கள் ஆண்களை விட அதிகமாக இருக்கிறார்கள் என்று முடிவுசெய்கிறார். மறுபடியும் அவருடைய இந்த வாதம் ஆதாரமற்றது. உண்மையில், 0 - 64 வயது இடைவெளியில், ஆண்கள் பெண்களை விட அதிகமாக இருக்கிறார்கள். இந்த வயது இடைவெளியில் தான் எல்லா மனிதர்களும் திருமணம் செய்யவும், பிள்ளைகளை பெறவும் செய்கிறார்கள். முக்கியமாக ஆண்கள் பெண்கள் சரியான விகிதத்தில் இருக்கிறார்கள். இது மட்டுமல்ல, உலகத்தில் உள்ள மொத்த ஆண்களின் எண்ணிக்கை பெண்களை விட அதிகமாக உள்ளது. நாயக் சொல்கிறார், உலகத்தில் உள்ள பெண்கள் ஆண்களை விட எவ்வளவு அதிகமாக இருக்கிறார்கள் என்று இறைவனுக்குத் தான் தெரியும் என்று. இது ஒரு படித்தவர்கள் சொல்லும் வாதம் அல்ல (unscholarly ). ஒரு வேளை அவர் முயற்சி எடுத்து இருந்தால், உலகத்தில் ஆண்களின் எண்ணிக்கை பெண்களை விட அதிகமாக இருக்கிறார்கள் என்று அவர் கண்டுபிடித்து இருப்பார். இறைவனுக்குத் தெரியும் என்று அவர் சொல்வதிலிருந்து அவருடைய "அறிவு பற்றி கண்ணோட்டம்" புரிகிறது. அவருடைய எல்லா ஆராய்ச்சியும், அவருடைய எல்லா படிப்பும், இஸ்லாமில் பின்பற்றப்படும் நம்பிக்கைகளுக்கு, கோட்பாடுகளுக்குத் தேவையான ஏமாற்று (பொய்யான) வாதங்களை கண்டுபிடிக்கும் வட்டத்திற்குள்ளேயே இருக்கிறது. இஸ்லாமிற்கு விரோதமாக இருக்கும் ஆராய்ச்சியையும், உண்மைச் செய்தியையும், புள்ளிவிவரங்களையும் அவர் முழூவதுமாக விட்டுவிடுகிறார். இஸ்லாமின் குறுகிய வடிகட்டல்(narrow Filter) என்னும் வழியாகவே அவர் உலகத்தைப் பார்க்கிறார்.

சில இஸ்லாமிய நாடுகளில் உள்ள ஆண் பெண் விகிதாச்சாரத்தை கீழே காணலாம்[3]. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் அவருடைய வாதத்தின் அடிப்படையில், இந்த நாடுகளில் "ஆண் பலதார மணத்தை(polygyny)" இரத்து (தடை) செய்துவிட்டு, "பெண் பலதார மணத்தை(polyandry)" சட்டமாக்கவேண்டும்,

நாடுகள் ஆண்/பெண் விகிதாச்சாரம்

Afghanistan 1.049 male(s)/ female
Kuwait 1.526 male(s)/ female
Bangladesh 1.052 male(s)/ female
Malaysia 1.012 male(s)/ female
Egypt 1.017 male(s)/ female
Pakistan 1.045 male(s)/ female
Indonesia 1.001 male(s)/ female
Saudi Arabia 1.196 male(s)/ female
Iran 1.026 male(s)/ female
Syria 1.049 male(s)/ female
Iraq 1.024 male(s)/ female
Turkey 1.019 male(s)/ female
Jordan 1.102 male(s)/ female
UAE 2.19 male(s)/ female
Yemen 1.034 male(s)/ female

என்னை பொருத்தவரையில், ஒரு மனிதன் ஒரு மனைவியை உடையவனாகவோ, அல்லது நான்கு மனைவியை உடையவனாகவோ இருப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. இது அந்த மனிதனையும், அவனை திருமணம் செய்துக்கொள்ளும் பெண்ணின் அனுமதியையும் பொருத்தது. நான் இங்கு சொல்லவரும் விஷயம் என்னவென்றால், "ஆண்கள் பல தார மணத்திற்கு" டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் சொல்லும் காரணம் சரியானதல்ல. அவர் இந்த பழக்கத்தை ஆதரிப்பதற்கு காரணம், இஸ்லாம் இதை அங்கீகரிப்பதால் தான், ஆனால், இது சரியா தவறா என்று அவர் பார்ப்பதில்லை. ஒரு வேளை குர்-ஆன், "ஒரு பெண் நான்கு ஆண்களை திருமணம் செய்துக்கொள்ளலாம்" என்று அனுமதி கொடுத்து இருந்தால், அதையும் இவர் ஆதரித்து இருப்பார். முகமதுவோ அல்லது அல்லாவோ, ஆண்கள் பல தார மணத்தை ஆதரிப்பதற்கு எந்த ஆதாரத்தையும்(காரணத்தையும்) கொடுக்கவில்லை. அந்தக் கால சமுதாயத்தில் இது ஒரு சாதாரணமானதாக இருந்திருக்கிறது. "பெண்கள் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில்" இருக்கிறார்கள் என்ற ஒரு காரணத்திற்காகவே, ஆண்கள் பலதார மணத்தை பின்பற்றுங்கள் என்று அல்லா எப்போதும் சொல்லவில்லை. இது இஸ்லாமியர்களால் தங்களின் இந்த பழக்கம், இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும், புதிதாக இஸ்லாமுக்கு வரவிருக்கும் நபர்களுக்கும் ஒரு அறிவுப்பூர்வமான பழக்கம் என்றும், இஸ்லாம் கவர்ச்சியானது(Attractive) என்று காட்டுவதற்கும் சொல்லப்படுகிறது. உண்மையில் இந்த ஆண்கள் பலதார மணம் என்பது, இஸ்லாமுக்கு முன்பு "குலத்தலைவர்களுக்கு (patriarchal culture)" முக்கியத்தும் இருந்த காலத்தில் வழக்கத்தில் இருந்தது. அக்காலத்தில்,ஆண்கள் அனேக பெண்களோடு உறவு வைத்துக்கொள்வார்கள், ஆனால் பெண்களுக்கு அந்த சுதந்திரம் கொடுக்கப்படவில்லை. பெண்கள் ஆண்களைப் போல ஒன்றிற்கு மேற்பட்ட கணவன்களை(துணைகளை) உடையவர்களாக இருப்பது, ஆண்களுக்கு வெறுப்பை உண்டாக்கக்கூடியதாக இருந்தது. ஏன் இந்த அநீதி? முஸ்லீம்கள் சொல்கிறார்கள, இஸ்லாம் ஆணையும், பெண்ணையும் ஒரே விதமாக நடத்துகிறது என்று, பின் ஏன் இஸ்லாம் ஆண்களுக்கு கொடுத்துள்ள உறவுமுறை சுதந்திரத்தை(sexual freedom), பெண்களுக்கு மறுக்கிறது. ஏதோ தவறு உள்ளது என்பது தெளிவாக புரிகிறது. உண்மையை பார்க்கவேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு உண்மை தெரியும். இந்த மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள், தங்கள் மதத்தால் குருடாக்கப்பட்டுகிறார்கள், எனவே எப்போதும், இஸ்லாமின் சட்டத்திற்கு ஏற்றார்போலவே, காரணங்களை கண்டுபிடிக்கிறார்கள், மட்டுமல்ல, இஸ்லாமிலிருந்து வெளியேறுபவர்களுக்கு "மரணதண்டனை" தண்டனையையும் சரியானது என்று அங்கீகரிக்கிறார்கள்.


Sources:
[1]. Sacred Texts
[2]. New Advent Bible
[3]. The World Fact Book
[4]. Same Sex Couples
[5]. Info Please
[6]. CensusScope
[7]. U.S. Census Bureau
[8]. Tamil Christians Unicode Tamil Bible
[9]. Faq on Islam, by Dr. Zakir Naik


கட்டுரை முற்றிற்று
 

StumbleUpon.com Read more...

முஸ்லீமாக மாறிய முனியாண்டி (அல்லது) முஸ்லீமாக மாறிய மத்தேயு


Dr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி: யார் தேசத் துரோகி?

Dr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி:

யார் தேசத் துரோகி?

முன்னுரை: இந்திய இஸ்லாமிய அறிஞர்களில் மிகவும் புகழ் பெற்றவர் மருத்துவர் ஜாகிர் நாயக் ஆவார். இவரது சொற்பொழிவு அல்லது கேள்வி பதில் நிகழ்ச்சி என்றால் இஸ்லாமியர்களின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. இன்னும் இவர் மாற்று மதச்சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் தரும் நிகழ்ச்சியில் பேசினால், இஸ்லாமியர்களுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போலத்தான். ஆனால், இவர் சொல்லும் எடுத்துக்காட்டுக்கள், புள்ளிவிவரங்கள் உண்மையை திசை திருப்புவதாகவே பெரும்பான்மையாக அமையும்.இதை இஸ்லாமியர்கள் சோதித்து தெரிந்துக் கொள்ளமாட்டார்கள்.

இந்த கட்டுரையில் திரு ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு நேர்க்காணலில் சொன்ன கருத்துக்களைக் காண்போம். இவர் ஒருவரை தேசத்துரோகி என்கிறார்? அதாவது தேசத்துரோகம் செய்த குற்றத்திற்கு அந்த நபரை சமமாக்குகிறார்.இவர் யாரை தேசத்துரோகி என்கிறார்? இஸ்லாம் சட்டத்தை எப்படி இவர் மற்ற நாட்டு சட்டத்தோடு சம்மந்தப்படுத்துகிறார்? என்பதை இக்கட்டுரையில் காண்போம். இவ‌ர் அங்கீகரிக்கும் இதே சட்டம் மற்றவர்கள் தங்கள் மதத்திற்கு சட்டமாக்கி பின்பற்ற‌ இவரோ அல்லது இந்திய இஸ்லாமியர்களோ அனுமதி கொடுப்பார்களா? என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

1. இஸ்லாமைவிட்டு வெளியே சென்றால், உனக்கு மரண தண்டனை நிச்சயம்:

திரு ஜாகிர் நாயக் அவர்கள் பேசிய இந்த வார்த்தைகளை இந்த வீடியோவில் ( http://www.youtube.com/watch?v=ZMAZR8YIhxI ) காணலாம்.
 


அவரின் பேச்சை இந்த வீடியோவில் உருதுவில் கேட்கலாம், அதை சுருக்கமாக ஆங்கிலத்தில் வீடியோவின் கீழே கொடுத்துள்ளார்கள், அதை நான் தமிழில் கொடுக்கிறேன்.
நேர்க்காணலில் கேள்வி கேட்பவர்: ஒரு இஸ்லாமிய நாட்டில் வாழும் ஒரு முஸ்லீம், மற்ற மதத்தை தழுவும் போது, ஏன் அவனுக்கு "மரண தண்டனை" கொடுக்கப்படுகிறது?

ஒரு முஸ்லீம், இஸ்லாம் அல்லாத வேறு ஒரு மத‌ம் சரியானது என்று நினைக்கும்போது அல்லது ஒரு முஸ்லீம் அல்லாதவர் முதலில் இஸ்லாமை ஏற்றுக்கொண்டு, பிறகு தன் முந்தைய மதத்திற்கே சென்றுவிட்டால், ஏன் இஸ்லாம் இப்படிப்பட்ட நபர்களுக்கு "மரண தண்டனையை" விதிக்கிறது?

Dr. ஜாகிர் நாயக் அவர்கள்: ஒரு முஸ்லீம் வேறு ஒரு மதத்திற்கு மாறிவிட்டு, அந்த புதிய மதத்தை பிரச்சாரம் செய்தால், இது ஒரு "தேசத் துரோகம் (Treason)" என்ற குற்றத்திற்கு சமமாகும். இப்படிப்பட்ட நபருக்கு இஸ்லாமில் "மரண தண்டனை" கொடுக்கப்படும். பல நாடுகளில் "தேசத்துரோக" குற்றத்திற்கு மரண தண்டனை உண்டு. பல நாடுகளில் உள்ள சட்டத்தின்படி ஒரு இராணுவ தளபதி ( Army General) தன் நாட்டு இராணுவ இரகசியங்களை வேறு ஒரு நாட்டிற்கு விற்றுவிட்டால், அவருக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ கொடுக்கப்படும். இதே மாதிரி, ஒரு முஸ்லீம் இஸ்லாமை விட்டு வெளியேறி வேறு ஒரு மதத்திற்கு மாறிவிட்டு, அந்த மதத்தை பிரச்சாரம் செய்தால், அவனுக்கு இஸ்லாமில் "மரண தண்டனை" கொடுக்கப்படும்.

நேர்க்காணலில் கேள்வி கேட்பவர்: நீங்கள் ஒரு முக்கியமான விவரத்தைச் சொல்லியுள்ளீர்கள், அதாவது, ஒரு தேசத்துரோகம் குற்றத்திற்கு கொடுக்கப்படும் தண்டனைப் போல, தன் மதத்தை மாற்றிக்கொள்பவனுக்கும் இந்த தண்டனை கொடுக்கப்படுகிறது. பெரும்பான்மையான நாடுகளில் "தேசத்துரோகம்" குற்றத்திற்கு "மரண தண்டனை" விதிப்பது போல, இஸ்லாமும் தன் மதத்தை மாற்றிக்கொள்ளும் முஸ்லீமுக்கு மரண தண்டனையை நியாயமாக விதிக்கிறது


Interviewer: Why is there a "Capital Punishment" for a Muslim – living in an Islamic State – who chooses to adopt any other religion?

If a Muslim finds any other religion more appealing or If a Non-Muslim, after accepting Islam, decides to return to his/her previous religion then Why does Islam impose a "Death Penalty" for such a person?

Naik Response: If a Muslim becomes a Non-Muslim and propagates his/her new religion then it is as good as Treason. There is a "Death Penalty" in Islam for such a person. In many countries the punishment for Treason is also Death. If an army General discloses his army's secrets to another country then there is a "Death Penalty" or life imprisonment for such a person according to the laws of the most of the countries. Similarly If a Muslim becomes Non-Muslim and propagates his/her new religion then there is "Death Penalty" for such a person in Islam.

Interviewer: You have explained a very important point that the Death Penalty is more due to Treason than due to Changing the religion. Since in most of the countries the punishment for Treason is Death therefore Islam is also justified in declaring a "Death Penalty" for a Muslim converting to any other religion.

Source : http://www.youtube.com/watch?v=ZMAZR8YIhxI

2. இராணுவ தளபதியின் தேசத்துரோகத்திற்கும், இஸ்லாமை விட்டு வெளியே வருவதற்கும் என்ன சம்மந்தம்?

இஸ்லாமை விட்டு வேறு மதத்திற்குச் செல்லும் முஸ்லீமை இஸ்லாம் சட்டப்படி கொல்ல வேண்டும். ஜாகிர் நாயக் அவர்கள் இதை சிறிது மாற்றி , "இப்படி மாறுபவன் அந்த புதிய மதத்தை பிரச்சாரம் செய்தால்" கொல்லப்படுவான் என்றுச் சொல்கிறார். ஆனால், இஸ்லாமை விட்டு வெளியேறினாலே போதும், அவனுக்கு மரண தண்டனை உண்டு என்பதை நாம் அறிவோம். இப்போது பிரச்சனை இதுவல்ல.

ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த எடுத்துக்காட்டு சரியானதா? என்பது தான் கேள்வி

ஜாகிர் நாயக் அவர்கள் சொல்லும் எடுத்துக்காட்டுகளை கேட்டு,முஸ்லீம்கள் புல்லரித்துப்போவார்கள், ஆனால், இவர் கொடுக்கும் எடுத்துக்காட்டு சம்மந்தம் இல்லாமல் இருக்கும். எப்படி என்று தெரிந்துக்கொள்ளவேண்டுமா? மேலும் படியுங்கள்.

தேசத் துரோகத்திற்கு விகிபீடியா கீழ்கண்டவாறு பொருள் கூறுகிறது: (இதையே ஜாகிர் நாயக் அவர்கள் "இராணுவ தளபதி" என்று சுருக்கமாக சொல்லிவிட்டார்)

In law, treason is the crime that covers some of the more serious acts of disloyalty to one's sovereign or nation. Historically, treason also covered the murder of specific social superiors, such as the murder of a husband by his wife (treason against the king was known as high treason and treason against a lesser superior was petit treason). A person who commits treason is known as a traitor.

Oran's Dictionary of the Law (1983) defines treason as: "...[a]...citizen's actions to help a foreign government overthrow, make war against, or seriously injure the [parent nation]." In many nations, it is also often considered treason to attempt or conspire to overthrow the government, even if no foreign country is aided or involved by such an endeavour.

Source: http://en.wikipedia.org/wiki/Treason

அதாவது தன் சொந்த நாட்டிற்கு நம்பிக்கை துரோகம் புரிதல், அல்லது தன் நாட்டு அரசாங்கம் கவிழும்படி, தோற்கும் படி தன் நாட்டின் இரகசியங்களை மற்ற நாடுகளுக்கு விற்றுவிடுதல், போன்ற குற்றத்திற்கு Treason என்பார்கள். பொதுவாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு நாட்டிற்கு பெரும் இழப்பை தரும் செயல் ஆகும்(அரசனை கொல்லுதல், இராணுவ இரகசியங்களை விற்றுவிடுதல் போன்றவை).

3. எதை அடிப்படையாகக் கொண்டு ஜாகிர் நாயக் அவர்கள் இதை உதாரணமாகச் சொன்னார்கள்?

ஒரு முஸ்லீமோ அல்லது முஸ்லீமாக மாறி பிறகு தன் பழைய மதத்திற்கு மாறும் நபர் எந்த வகையில், ஒரு தேசத்துரோகம் புரிந்த அளவிற்கு மிகப்பெரிய குற்றவாளியாக மாறுகிறார்?

நான் ஜாகிர் நாயக் அவர்களிடமும், மற்ற முஸ்லீம்களிடமும் கேட்க விரும்பும் கேள்விகள்:

a) ஒரு இராணுவ தளபதி தனக்கு மட்டும் தெரிந்த நாட்டின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இரகசியங்களை, மற்ற நாட்டிற்கு விற்றால், தன் நாட்டின் பாதுகாப்பிற்கு பாதிப்பு வர காரணமாகிறார்.

b) ஒரு முஸ்லீம் வேறு மதத்திற்குச் சென்று தன் புதிய மதத்தையோ அல்லது தான் விட்டுவந்த பழைய மதத்தையோ பிரச்சாரம் செய்தால், இந்த செயல் எந்த வகையில் "இஸ்லாமின் பாதுகாப்பிற்கு" பாதிப்பை உண்டாக்குவதாக அமையும்? விவரியுங்கள்?

c) இராணுவ தளபதிக்கு தெரிந்த இரகசியங்கள் என்பது தன் நாட்டு குடிமகன்களுக்கே தெரியாமல் பாதுகாத்து வைக்கும் முக்கியமான தகவல்கள், இப்படி இஸ்லாமில் என்ன இரகசியம் இருக்கப்போகிறது?இப்படி மற்ற மதங்களுக்கு தெரியாமல் பாதுகாக்கும் இரகசியம் என்ன சொல்லுங்கள்?

d) இராணுவ தளபதி என்பவன் நாட்டின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வகிப்பவன் அதற்காகவே அவருக்கு சம்பளம், பதவி, அதிகாரம் அரசியல் சாசனத்தின்படி அளிக்கப்படுகிறது. ஒரு முஸ்லீமுக்கும் இப்படி ஒரு இராணுவ தளபதிக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா? சொல்லுங்கள்.

e) ஒரு இராணுவ தளபதி தன் நாட்டின் ஆயுத கிடங்கு இருக்கும் இடம், தகவல்கள், ஆவணங்கள், போன்ற விவரங்களை மற்ற நாட்டிற்கு விற்பது போல, இஸ்லாம் மதத்தில் அப்படி என்ன இரகசியங்கள் இருக்கின்றன?

f) புதிதாக மாற்று மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறுபவனுக்கு என்ன பரம‌ இரகசியங்களை நீங்கள் சொல்லிவிடுகின்றீர்கள்? அதை அவன் வேறு மதத்திற்கு மாறி மற்றவர்களுக்கு சொல்வதினால், இஸ்லாமுக்கு ஆபத்து வந்துவிடும் அளவிற்கு?

4. இஸ்லாமில் இரகசிய பிரமாணம் எடுக்கின்றீர்களா?

பொதுவாக, ஒரு அரசாங்க, அல்லது ஒரு இராணுவ ஊழியம் செய்ய ஒருவன் நியமிக்கும் போது, அவனுக்கு இரகசிய பிரமாணம் அல்லது பதவி பிரமாணம் கொடுப்பார்கள். இராணுவ தளபதி பிரமாணம் எடுக்கும் போது: "நாட்டின் இரகசியங்களை வெளியே சொல்லமாட்டேன், நம்பிக்கையுள்ளவனாக இருப்பேன், அதை மீறினால் சட்டத்தின் படி தண்டனை கொடுக்கலாம்" என்றுச் சொல்லி பிரமாணம் செய்வார்.

இப்படி ஏதாவது ஒரு பிரமாணத்தை இஸ்லாமுக்கு வருபவன் எடுக்கிறானா? அப்படி நான் இந்த மதத்தை விட்டு வேறு மதத்திற்கு செல்லும் போது என்னை கொல்ல நான் அனுமதி கொடுக்கிறேன் என்று சொல்லி தான் முஸ்லீமாக மாறுகிறானா? அவன் சில ஆவணங்களில் இதற்காக கையெழுத்து போடுகிறானா? சொல்லுங்கள்.

5. புகைபிடித்தல், மதுபானம் பற்றிய எச்சரிக்கை வாசகம், போல இஸ்லாமுக்கு உண்டா?

பொதுவாக, அரசாங்கத்திற்கு அதிக வருமானம் வரும் என்ற நோக்கில், சிகரேட், பீடி மற்றும் மதுபானத்திற்கு அரசாங்கம் அனுமதி அளித்து, அதே நேரத்தில், மக்களுக்கு இவைகளினால் உண்டாகும் தீமையை விளக்கும் வண்ணமாக, சில வாசகங்களை பதிக்கும்படி அரசாங்கம் கட்டளையிடுகிறது.

உதாரணத்திற்கு:

சட்ட எச்சரிக்கை: புகை பிடித்தல் உடல் நலத்திற்குகேடு


Statutory Warning : "Cigarette smoking is injurious to health"

மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு


போன்ற வரிகளை நாம் காணுவோம்.( இந்த எச்சரிக்கை வார்த்தைகளை படித்து மக்கள் இவைகளை விட்டுவிடுகிறார்கள் என்று நான் சொல்லவரவில்லை, ஆனால், ஒரு தீமை உண்டு என்று தெரிந்தும் அனுமதி அளிக்கும் போது, அதைப்பற்றி எச்சரிப்பு அவசியம் என்பதால் அரசாங்கம் இதை கட்டாயமாக்கியுள்ளது என்று சொல்லவருகிறேன்.)

"உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால், இந்த வாசகங்கள் கட்டாயம்" என்பதை எந்த நிபந்தனையின்றி நாம் ஏற்றுக்கொள்ளும் போது, இஸ்லாமை விட்டு ஒருவன் வெளியேறினால் அவனது உயிரே போகும் என்ற தீமை அல்லது ஆபத்து இருக்கும் போது, ஏன் இஸ்லாமியர்கள் இதை முன்பே இஸ்லாமுக்கு வருபவனுக்குச் சொல்லி எச்சரிப்பதில்லை என்றுக் கேட்கிறேன்.

யாருக்காவது குர்‍ஆனை கொடுக்கும்போது, அல்லது எங்கள் ஜாகிர் நாயக் அவர்கள் கூட்டத்திற்கு வந்து இஸ்லாமைப் பற்றி அதிகம் அறிந்துக்கொள் என்று சொல்லும் போது, நீங்கள் அந்த கிறிஸ்தவனுக்கோ, இந்துவிற்கோ, அல்லது நாத்தீகனுக்கோ "பாரு தம்பி, ஒரு வேளை இஸ்லாமை நீ ஏற்றுக்கொண்டு பிறகு எனக்கு வேண்டாம்" என்று இஸ்லாமை விட்டு வெளியேறினால், உனக்கு மரண தண்டனை நிச்சயம் உண்டு என்பதை தெரிந்துக்கொள், இதை அங்கீகரித்து ஸ்டாம்ப் காகிகத்தில் கையெழுத்து போட்ட பிறகு தான் நீ முஸ்லீமாக மாறனும் என்று சொல்கிறீர்களா?

Statutory Warning: After accepting Islam, becoming Non-Muslim is Injurious to Life.

முதலில் முஸ்லீமாகி பின்பு காபிரானால், மரணம் நிச்சயம்


என்ற வாசகத்தை உங்கள் நண்பர்களுக்கு இஸ்லாம் பற்றி விவரிக்கும் போது சொல்லமுடியுமா? நான் "புகைப்பிடித்தல் மற்றும் மதுபான" எடுத்துக்காட்டு சொன்னேன் என்று என் மீது கோபம் கொள்ளவேண்டாம், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த எடுத்துக்காட்டை விட ஓர் அளவிற்கு பொருத்தமான எடுத்துக்காட்டைத் தான் நான் கொடுத்துள்ளேன்.

6. நல்ல குடும்பம் நாசனமான கதை:

நீங்கள் ஒரு சாதாரண முஸ்லீம், ஒரு கம்பனியில் வேலை செய்கிறீர்கள், உங்களுக்கு ஒரு நல்ல நண்பன் (இந்துவோ, கிறிஸ்தவனோ.. சீக்கியனோ, நாத்தீகனோ) உண்டு. அவன் தன் வயது சென்ற‌ பெற்றோர்களோடும், மனைவி பிள்ளைகளோடும் சந்தோஷமாக, வாழ்ந்துக்கொண்டு இருக்கிறான். இந்த நிகழ்ச்சி நடக்கும்பொது இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி உள்ளது என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் தினமும் ஐந்து வேளை அல்லாவை தொழுதுக்கொள்ளும் நல்ல மனிதர். கம்பனியில் வேலை செய்யும் போது, அடிக்கடி மதம் சம்மந்தப்பட்ட உரையாடலை நீங்களும் உங்கள் நண்பரும் விவாதித்து இருக்கிறீர்கள். உங்கள் ஊரில் ஒரு இஸ்லாமிய கேள்விபதில் நிகழ்ச்சி நடப்பதாக அறிவிப்பு வருகிறது, அக்கூட்டத்தில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களோ அல்லது பிஜே அவர்களோ பேசுகிறார்கள். நீங்கள் உங்கள் நண்பரை இக்கூட்டத்திற்கு அழைக்கிறீர்கள், உன் கேள்விகளுக்கு சரியான பதிலை இக்கூட்டத்தில் ஜாகிர் நாயக் அவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள் என்றுச் சொல்கிறீர்கள், அவரும் உங்களோடு கூட்டத்திற்குச் செல்கிறார்.

கேள்வி பதில் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளையும், அதற்கு ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த பதில்களையும் பார்த்து இந்த மாற்று மத நண்பர் ஆச்சரியப்பட்டு, இன்னும் இஸ்லாமைப் பற்றி அதிகம் அறிந்துக்கொள்ள விரும்புகிறேன் என்கிறார்.

அவருக்கு நீங்கள் சில இஸ்லாமிய புத்தகங்களை தருகிறீர்கள், அவரும் அதை படித்து, நான் முஸ்லீமாக விரும்புகிறேன். அல்லா தான் இறைவன் என்பதை நான் உணர்ந்தேன் என்றுச் சொல்ல, அவருக்கு இன்னும் அதிகமாக இஸ்லாம் பற்றிச் சொல்லி, ஒரு நாள் அவர் முஸ்லீமாக தன்னை ஒரு கூட்டத்தில் அங்கீகரித்து முஸ்லீமாக மாறிவிட்டார்.

நாட்கள் கடந்தன, மாதங்கள் விறைவாக மறைந்தன, சில வருடங்கள் ஓடிவிட்டன. தன் பெற்றோரோ அல்லது மனைவி பிள்ளைகளோ இன்னும் முஸ்லீமாக மாறவில்லை மட்டுமல்ல, இவரது பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் அல்லது இன்ன பிற காரணங்களால், இந்த முன்னால் மாற்று மத நண்பர், மறுபடியும் தன் பழைய மதத்திற்கே (இந்துவாகவோ, கிறிஸ்தவனாகவோ, சீக்கியனாகவோ, அல்லது நாத்தீகனாகவோ) மாறுகிறேன் என்றுச் சொல்கிறார், மாறியும் விட்டார். தன்னுடைய பழைய மதத்தில் இப்போது ஆர்வமாக சில மார்க்க வேலையையும் செய்கிறார்.

இந்தியா ஒரு இஸ்லாமிய நாடு என்பதால், இவனுக்கு முஸ்லீமாக அவகாசம் கொடுக்கப்பட்டது இவர் இல்லை என்று மறுக்க, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஏனென்றால், இவன் ஒரு தேசத்துரோகி, அதாவது, ஜாகிர் நாயக் அவர்கள் சொன்னது போல இவன் ஒரு தேசத்துரோகம் செய்த குற்றத்திற்கு சமமான குற்றம் செய்தவர் ஆவார்.

7. யார் தேசத்துரோகி?

இப்போது சில கேள்விகள் நம் கண்முன் நிற்கின்றன.

இந்த நபர் மரித்ததால்:

இவர் மனைவி இப்போது "விதவை" கோலத்தில் கண்கலங்கி நிற்கிறாள்?

இவரது பிள்ளைகள் தந்தையில்லா அனாதைகளாய் தெருவில் நிற்கிறார்கள்?

இவரது பெற்றோருக்கு இனி வாழ எந்த வழியும் தெரியாத கஷ்டத்தில் இருக்கிறார்கள்?


இந்த நிலையில் "இதை படிக்கும் முஸ்லீம் சகோதரரே"! நீங்களே சொல்லுங்கள் தேசத்துரோகி யார்?


1. முதலில் முஸ்லீமாக மாறி பிறகு வேண்டாமென்று சொன்ன இந்த மாற்று மத நண்பன் தேசத்துரோகியா? அல்லது

2. இவனுக்கு இஸ்லாமைப்பற்றிச் சொன்ன நீங்கள் தேசத்துரோகியா? அல்லது

3. இஸ்லாமைப் பற்றி கூட்டங்கள் நடத்தி மக்களை இஸ்லாமுக்கு அழைப்பவர்கள் தேசத் துரோகியா?


இந்த கேள்விக்கான பதிலை உங்கள் கையிலேயே விட்டுவிடுகிறேன்.

மதம் என்றால் மனது சம்மந்தப்பட்டது இல்லையா? மனிதன் சில நேரங்களில் தான் எடுத்த முடிவு தவறு என்றுச் சொல்லி தன் முடிவை மாற்றிக்கொள்வதில்லையா? அதாவது, பல ஆண்டுகள்(30 அல்லது 40 வயதுடைய மனிதன்) தன் முன்னோர்களோடு சேர்ந்து பின்பற்றிய மதத்தை விட்டுத்தானே அவன் முஸ்லீமாக அல்லது கிறிஸ்தவனாக மாறுகிறான். பல ஆண்டுகள் தன் மனதில் சரி என்று பட்ட மார்க்கத்தை விட்டு, திடீரென்று வேறு முடிவு எடுத்துத் தானே அவன் வேறு மதத்திற்கு மாறுகிறான். அப்படி இருக்கும் போது, சில ஆண்டுகள் பின்பற்றும் மதத்தை பின்பற்றாமல் இருக்க அவனால் முடியாதா? இது தவறா?

யாருக்குத் தெரியும் ஒருவேளை இந்த மரித்த நபர் உயிரோடு இருந்திருப்பாரானால், மறுபடியும் முஸ்லீமாக மாறி, இஸ்லாமை பரப்பி ஒரு சிறந்த இஸ்லாமியனாக கூட மாறி எல்லாரும் ஆச்சரியம் அடையும் அளவிற்கு மாறி இஸ்லாமுக்கு ஒரு நல்ல தூணாகவும் மாற்றப்பட்டு இருக்கலாம்? இதற்கு வாய்ப்பு இல்லை என்று உங்களால் சொல்லமுடியுமா?

8. சரி, மாற்று மதத்திலிருந்து முஸ்லீமாக மாறுபவன் "தேசத்துரோகி" இல்லையா?

இஸ்லாம் சொல்லும் தண்டனை சரியானது தான், இதை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்களே! ஒரு வேளை இந்துவிலிருந்து முஸ்லீமாக மாறுபவனை "தேசத்துரோகி" என்றுச் சொல்லி, அவனுக்கு இஸ்லாமிய சட்டம் எப்படி சொல்கிறதோ அதே போல மரண தண்ட்னை அளித்தால்?

ஒரு கிறிஸ்தவன் முஸ்லீமாக மாறினால் இது தேசத்துரோகம் குற்றத்திற்கு சமம் என்றுச் சொல்லி, அவனை கொல்லும் சட்டத்தை அமுல் படுத்தினால் எப்படி இருக்கும்?

இஸ்லாமிய நாடுகளில், இஸ்லாமிய சட்டம் போலவே, யாரும் தங்கள் மத‌த்திலிருந்து இஸ்லாமுக்கு மாறக்கூடாது, அது தன் தாய் நாட்டிற்கு துரோகம் செய்த குற்றத்திற்கு சம‌ம் என்றுச் சொல்லி, முஸ்லீமாக மாறுபவனுக்கு மரண தண்டனை கொடுக்கும் சட்டத்தை அமுல் படுத்த உங்களுக்கு, ஜாகிர் நாயக் அவர்களுக்கு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு சம்மதமா? நீங்கள் உண்மையாளர்களாக நேர்மையாளர்களாக இருப்பீர்களானால், இதை ஏற்றுக்கொள்வீர்கள்.

இஸ்லாமுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி! இது சரியா?

9. இஸ்லாமை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நண்பா! இனி எப்படி அறிமுகப்படுத்தப்போகிறீர்கள்?

இனி இஸ்லாமியர்கள் இஸ்லாம் பற்றி மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும் போது, சிகரேட் பாக்கெட்டில் இருப்பது போலவும், மதுபான கடையின் பெயர் பலகையில் எழுதியிருப்பது போலவும், இஸ்லாமை விட்டு வெளியேறினால் ஏற்படும் தீமையையும் சொல்ல விருப்பமா? ஒரு கிறிஸ்தவனுக்கோ, இந்துவிற்கோ இஸ்லாமைப் பற்றி சொல்லும்பொது, அவன் மனைவியின் முகம் உங்களுக்கு முன்பாக வருவதாக, அவன் பிள்ளைகளின் பிஞ்சு முகங்கள் உங்கள் கண்களுக்கு முன்பாக வருதாக.

இந்தியாவில் இப்படிப்பட்ட தண்டனைகள் இல்லை, இஸ்லாம் இப்படி எல்லாம் செய்ய சொல்வதில்லை என்று சொல்லவேண்டாம், இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமை விட்டு வெளியேறும் மனிதர்களின் நிலை என்ன என்பதை மக்கள் மிகவும் நன்றாகவே தெரிந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

10. இரட்டை தண்டனை எதற்கு:

இஸ்லாமை விட்டு வெளியேறுபவனுக்கு இரட்டை தண்டனை எதற்கு?

முதல் தண்டனை: ஷரியா சட்டம் மூலமாக அவனுக்கு மரண தண்டனை

இரண்டாம் தண்டனை: இஸ்லாமை அவன் விட்டுச்சென்றதால், அல்லா அவனை நரக நெருப்பினால் தண்டிப்பார்

இஸ்லாமை விட்டு வெளியேறினவனுக்கு இந்த உலகத்தில் மரண தண்டனை கொடுத்துவிட்டால், பின் ஏன் அவனுக்கு நரக நெருப்பினாலும் அல்லா இரண்டாம் முறையும் தண்டிக்கவேண்டும். ஏன் இரட்டை தண்டனை?

அல்லது இந்த உலகத்தில் மரண தண்டனையை அவன் பெற்றுவிட்டதால், அல்லா அவனுக்கு சொர்க்கத்தில் அனுமதி அளித்துவிடுவாரோ?

இது உண்மையானால், இஸ்லாமை ஆரம்பத்திலிருந்தே ஏற்றுக்கொள்ளாதவனின் நிலையே மிகவும் நல்லது. ஏனென்றால், அவன் இந்துவாகவோ, கிறிஸ்தவனாகவோ இருப்பதினால், இந்த உலகத்திலாவது தன் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்ந்துவிட்டு மரிப்பான். இஸ்லாம் உண்மையான மார்க்கமாக இருந்தால் தானே இவன் அல்லாவினால் தண்டிக்கப்படப்போகிறான்.

11. காபிர்களின் (Non-Islam) சட்டத்தோடு, இஸ்லாம் சட்டம் சம்மந்தம் கலந்தது எப்படி?

பொதுவாக, இஸ்லாமியர்களின் ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை என்னவென்றால், உலகத்தில் உள்ள அனைத்து அரசியல் சாசன மற்றும் இதர சட்டங்களை விட இஸ்லாமிய சட்டமே மேலானது, இதில் மட்டுமே மனிதர்களை நல்வழிப்படுத்தும் சட்டங்கள் உண்டு.

ஆனால், எப்போதெல்லாம், இஸ்லாமின் ஒரு சில கொடுமையான சட்டத்தை நியாயப்படுத்த இஸ்லாமிய அறிஞர்கள் விரும்புவார்களோ, அப்போதெல்லாம், தயக்கமே இல்லாமல் "காபிர்களின்" சட்டத்தை மேற்கோள் காட்டவோ அதைப்பற்றி பேசவோ தயங்க மாட்டார்கள். அது மட்டுமல்ல, இஸ்லாமிய சட்டத்தோடு சம்மந்தம் இல்லாத காபிர் சட்டத்தை ஒப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு ஒப்பிடுதலைத் தான் ஜாகிர் நாயக் அவர்கள் செய்துள்ளார்கள்.

ஜாகிர் நாயக் அவர்களுக்கு சில கேள்விகள்:

1. இஸ்லாமின் மரண தண்டனை சட்டத்தோடு, மற்ற நாடுகளின் சட்டத்தை ஒப்பிட்டு உதாரணம் காட்டும் ஜாகிர் நாயக் அவர்களே, இதே போல மற்ற நாடுகளின் சட்டத்தை வேறு சில இஸ்லாமிய சட்டத்தோடு ஒப்பிட நீங்கள் தயாரா?

2. அதாவது, இதர காபிர் (இந்தியா போன்ற) நாடுகளில் "திருட்டிற்கோ, விவாகரத்திற்கோ, இன்னபிற குற்றங்களுக்கு உள்ள தண்டனைகளை, இஸ்லாமிய சட்டத்தில் திருட்டிற்கோ, விவாகரத்திற்கோ, சம்மந்தப்படுத்த" நீங்கள் தயாரா?

3. பெரும்பான்மையான நாடுகளில் திருட்டிற்கு என்ன தண்டனை கொடுக்கிறார்ளோ அதே தண்டனையை நீங்கள் இஸ்லாம் நாடுகளில் அமுல் படுத்த தயாரா?

4. ஒரு மதத்திலிருந்து வெளியேறுபவனின் செயலுக்கு, மிகவும் கொடிய குற்றமாக கருத்தப்படும், நாட்டிற்கே ஆபத்தை விளைவிக்கும் குற்றமாக கருத்தப்படும் தேசத்துரோக குற்றத்தோடு முடி போடுகிறீர்களே, உங்கள் எடுத்துக்காட்டை என்னவென்றுச் சொல்ல? ஒரு இராணுவ தளபதி நாட்டின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இரகசியத்தை வெளிநாட்டிற்கு விற்றுவிட்டால், தன் நாடு அழியும் அபாயம் உள்ளது. இந்த ஒரு மனிதனின் செயலால், நாடே அழிந்துவிடும். ஆனால், ஒரு மனிதன் இஸ்லாமை விட்டு வெளியேறிவிட்டால், இஸ்லாம் அழியுமா? சிந்தியுங்கள்.

5. அல்லாவின் சட்டத்தில் உள்ள மரண தண்டனையை நியாயப்படுத்த மற்ற நாடுகளின் (காபிர் நாடுகளின்) சட்டத்தில் என்ன குற்றத்திற்கு மரண தண்டனை உள்ளதோ அதை சம்மந்தப்படுத்தி சொல்லிவிடுகிறீர்கள்? இது போல, மற்ற நாடுகளின் எல்லா சட்டங்களோடு இஸ்லாமிய சட்டத்தை சம்மந்தப்படுத்தி நியாயப்படுத்த நீங்கள் தயாரா?

முடிவுரை: அருமையான மருத்துவர் ஜாகிர் நாயக் அவர்களே, மாற்று மதத்திலிருந்து இஸ்லாமியர்களாக மாறியவ‌ர்களுக்கு உங்கள் கண்களுக்கு முன்பாக மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை உங்களால் சகித்துக்கொள்ளமுடியுமா? ஏனென்றால், அவன் தன் மதத்திற்கு நம்பிக்கை துரோகம் செய்து தானே முஸ்லீமாக மாறினான்?

இனி யாராவது முஸ்லீமாக மாறினால், ஜாகிர் நாயக் அவர்களே! நீங்கள் ஒரு ஸ்டாம்ப் காகிதத்தில்(Stamp Paper):

"ஜான் ஜோசப் என்பவரின் மகனாகிய‌ மத்தேயு என்னும் பெயர் கொண்ட‌ நான் இன்று இஸ்லாமை ஏற்றுக்கொள்கிறேன், பின்பு ஒரு வேளை நான் இஸ்லாமை விட்டு வெளியேறினால், என் பழைய மதத்தை பரப்ப உதவி செய்தால், என் மனைவி விதவையாகும்படியாக‌, என் பிள்ளைகள் அனாதைகள் ஆகும் படியாக என் பெற்றோருக்கு உதவி செய்வார் யாரும் இல்லாமல் போகும் படியாக, எல்லாரையும் அம்போ என்று விட்டு விட்டு, என் இந்த நம்பிக்கைத்துரோக குற்றத்திற்காக முதல் தண்டனையாக‌ நான் மரண தண்டனையை இஸ்லாமிய சட்டம் படி ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன், அதே நேரத்தில் இதே குற்றத்திற்காக இரண்டாம் தண்டனையாக‌ அல்லா என்னை நரக நெருப்பில் வாதிக்கவும் எனக்கு சம்மதமே"

இப்படிக்கு,

முஸ்லீமாக மாறிய முனியாண்டி (அல்லது) முஸ்லீமாக மாறிய மத்தேயு

சாட்சி 1:

சாட்சி 2:


என்று எழுதி கையெழுத்து பெற்றுக்கொண்டு இஸ்லாமில் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்படி நீங்கள் செய்வீர்களானால், இனி யாராவது "ஏன் இஸ்லாம் அவரை கொன்றது?" என்று கேள்வி கேட்டால், அந்த நபர் கையெழுத்து போட்ட காகிகத்தை காட்டலாம், உங்களுக்கு இஸ்லாமின் சட்டத்தின் தண்டனையை நியாயப்படுத்த‌ காபிர்களின் சட்டத்தில் உள்ள தண்டனையை எடுத்துக்காட்டாக காட்டவேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது.

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈஸா குர்‍ஆனின் இதர பதில்கள்:

1. டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் யோவான் 1:1 (டாக்டர் ஜாகீர் நாயக் அவர்களும் கிரேக்க மொழியும்:)

2. ஆதரவிற்கு ஏமாற்றுதல் ஒரு ஆயுதம்: டாக்டர் ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது

StumbleUpon.com Read more...

சிதறுது சிடி

 
 
 
 

      தய்யுவான்: திருட்டு சிடி, டிவிடி தொல்லை இந்தியாவில் மட்டுமல்ல... பல நாடுகளிலும் இருக்கிறது. படத்தில் பார்ப்பது சீனாவின் ஷாங்ஷி மாநிலம் தய்யுவான் நகரில் பறிமுதல் செய்யப்பட்ட திருட்டு  சிடி, டிவிடிகள்.

இவற்றை ஒன்றாக சேர்த்து நொறுக்க அம்மாநில அரசு முடிவு செய்தது. மொத்தம் 66 ஆயிரம் சட்ட விரோத சிடிகள் அழிக்கப்பட்டன.  

 

StumbleUpon.com Read more...

காடு காக்க போராட்டம்

 

    லண்டன்: இந்தோனேசியாவின் அடர்ந்த காடுகள், தரிசு நிலங்களில் பாமாயில் தரும் எண்ணெய்ப் பனை மரங்கள் வளர்ப்பை விரிவுபடுத்த அந்த நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது.

உலக அளவில் உணவுக்காக பாமாயில் தேவை அதிகரிப்பால் இது அவசியமாகிறது. ஆனால், பனை மரங்களுக்காக அடர்ந்த காடுகளை அழித்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று சர்வதேச அமைப்பான கிரீன்பீஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

அந்த அமைப்பின் ஒரு உறுப்பினர், லண்டனில் முன்னணி உணவுப் பொருள் விற்பனை நிறுவனமான யுனிலீவர் அலுவலகம் முன் உராங் &உடான் வேடமிட்டு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

 

StumbleUpon.com Read more...

சைக்கிளுக்கு ஜே!

 
 
 

    புடாபெஸ்ட்: மாறி வரும் நவீன உலகில் சைக்கிள் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்நிலையில் சைக்கிள் பயன்பாட்டை வலியுறுத்தும் விதமாக உலகம் முழுவதும் சைக்கிள் பேரணி நடைபெற்று வருகிறது.

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற பிரம்மாண்டமான சைக்கிள் பேரணியில்தான் இந்தக் காட்சி.  இதில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். பேரணியின் இடையே தங்கள் சைக்கிளை தலைக்கு மேல் தூக்கிப் பிடித்து தங்களது ஆரவாரத்தை வெளிப்படுத்துகின்றனர்.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP