சமீபத்திய பதிவுகள்

நகைச்சுவை விளம்பரங்கள்

>> Sunday, July 26, 2009

 

நகைச்சுவை விளம்பரங்கள்

நீங்கள் உம்மன்னா மூஞ்சியா? பதிவை விட்டு விலகுங்கள்
இது நகைச்சுவை ரசிகர்களுக்கான பதிவு.

விளம்பரங்களில்தான் எத்தனை வகை
?
சில நகைச்சுவை விளம்பரங்களை இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறேன்
.
சிரித்து மகிழுங்கள்


1
மருத்துவமனை விளம்பரம்:
புகை பிடிப்பதால் உங்களின் எடை குறையும். முதலில் நுரையீரலின் ஒரு பகுதி


2
ஒரு நிறுவனத்தின் விளம்பரப் பலகை:
வெற்றி என்பது உறவு

அதிக வெற்றி; அதிக உறவு!
-------------------------------------
3
மதுவிற்கான விளம்பரம்
:
குடியின் தீமைகளைப் பற்றிப் படித்தவுடன்

நிறுத்திவிட்டேன் - படிப்பதை!

4
எங்கள் தாத்தாவிற்குக் கண்ணாடி (Glass) தேவையில்லை

பாட்டிலைக் கையில் எடுத்தால் அப்படியே குடிப்பார்.

5
அழகு சாதன விளம்பரம்
:
உங்கள் மகள் எப்போது பெரியவள் ஆகிறாள்
?
ஒரு தடவைக்கு இரண்டு தடவை லிப்ஸ்டிக் பூசிக் கொள்ளும்போது
!
உங்கள் மகன் எப்பொது பெரியவன் ஆகிறான்
?
அம்மா பூசிவிட்ட லிப்ஸ்டிக்கைத் துடைத்துக் கொள்ளும்போது
!

6
பாரில் இருந்த விளம்பரம்
:
கவலையை மறப்பதற்காகக் குடிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
:
நுழையும்போதே பணத்தைச் செலுத்திவிடுங்கள்
!

7
ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியின் முன் உள்ள விளம்பரப் பலகை
:
உங்கள் மனைவி கார் ஓட்ட விரும்பினால் குறுக்கே நிற்காதீர்கள்
!

8
பார்பர் சலூன் விளம்பரம்
:
எங்கள் வியாபாரம் செழிக்க எங்களுக்கு உங்கள் 'தலை' யீடு வேண்டும்
!

9
போக்குவரத்து விளம்பரம்
:
வாகனங்களை செலுத்துவதற்கு உங்கள் குழந்தைகளை அனுமதிக்காதீர்கள்

- 
அவர்கள் பெரியவர்கள் ஆகும்வரை.
ஆனுமதித்தால் அவர்கள் பெரியவர்கள் ஆகாமல் போய்விடும் அபாயம் உண்டு
!

10
பியூட்டி பார்லர் கதவில் இருந்த விளம்பரம்
:
இங்கிருந்து செல்லும் பெண்ணை நக்கலடிக்காதீர்கள். அவர் உங்களுடைய

பாட்டியாக இருக்கலாம்.She May Be Your Grandmother !

11
கொசுறு

ஆண்கள் ஏன் பொய் சொல்கிறார்கள்?
பெண்களின் கச்சா முச்சா கேள்விகளால்தான்
!

இறக்குமதி சரக்கு; மொழி மாற்றம் மட்டும் அடியேனுடையது
!

எது நன்றாக உள்ளது? சொல்லிவிட்டுப் போங்கள்
!

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP